Wednesday, February 23

விளம்பரமையா விளம்பரம்... உஷாருங்கோ.. உஷாரு...




நாம் கண்ணில் தினமும் படுகிற விஷயம் டிவி நிகழ்ச்சிகளும் விளம்பரமும் ...நாடகம் பார்ப்பதில் தான், பிரச்சினை என்று பார்த்தால்....நமக்கு பரிசு தருவதாக வரும் நிகழ்ச்சிகள் (ரியாலிட்டி ஷோ) அதை விட மோசம், அவர்களே ஜுனியர் ஆர்டிஸ்ட்களை கூப்பிட்டு வந்து நடிக்க வைத்து 20 லட்சம் 50 லட்சம் தருவதாக ஏமாற்றுவார்கள்.அந்நிகழ்ச்சியை நம் மக்கள் பார்த்து கொண்டுதான் இருப்பார்கள். வீடு தருகிறேன் பணம் தருகிறேன் என்று ஏமாற்றுவார்கள்.


இப்படி தான் ராஜ்டீவியிலும் ss  மியூசிக்கிலும் நடிகர்கள் புகைப்படத்தை போட்டு அந்த நடிகர் யார் கண்டுபிடியுங்கள், என்று சொல்வார்கள்...போன் செய்து விடையை சொல்ல வேண்டும்....போன் செய்தால் ஒரு நிமிடத்திற்கு 10 ரூபாய் நம் பணம் கண்ணை மூடி திறப்பதற்குள் காலி ஆகிவிடும்...அந்த நிகழ்ச்சி வந்த புதியதில் எங்க வீட்டில் "போன் செய்" என்று சொன்னார்கள். நான் சொல்லிவிட்டேன் இது எல்லாம் பொய் இவர்கள் ஏமாற்றுகிறார்கள்...ஏதாவது புதிய நிகழ்ச்சி வந்தால் எங்கள் வீட்டில், எழுதி போடு என்பார்கள் நான் இது வரை அதையெல்லாம் நம்பியதே இல்லை...யாருக்கும் பரிசு கிடைக்கப் போவதும் இல்லை அதை ஏன் செய்ய வேண்டும்...இப்படி தான் சன் டீவியில் வரும் டீலா நோடீலா என்ற நிகழ்ச்சிக்கு லெட்டர்அனுப்பு என்றார்கள். அது நமக்கு எல்லாம் வராது என்றேன்..அவ்வளவு தான் லெட்டர் அனுப்பும் தேதி முடியும் வரை அனுப்பவே இல்லை...அந்த நிகழ்ச்சி டீவியில் வரும் போதெலாம் எனக்கு திட்டு விழும்! இவனை லெட்டர் போடு போடு என்றேன், போடவில்லை என....இந்த டீவியால் எப்படி எல்லாம் திட்டு வாங்குகிறேன். பாருங்க .



அந்த நிகழ்ச்சியில் அந்த பெட்டிகளை திறக்கும் பொழுது "பத்து லட்சம் போச்சு 5 லட்சம் போச்சு என்பார்கள், நான் அவர்களை அப்படியே திரும்பி பார்ப்பேன்.. இப்படி தான் எல்லோர் வீட்டில் நடக்கும். கவர்ச்சி விளம்பரத்தை நம்பி நாம் அந்த நிகழ்ச்சிகளை பார்க்கிறோம், ஆனால் அது எல்லாம் பொய் என்று யாருக்கும் தெரியாது....இது வரை அந்த மாதிரி எத்தனையோ நிகழ்ச்சி நடந்திருக்கிறது ,எனக்கு தெரிந்தவர்கள் யாரும் பரிசு வென்றதாக என்னிடம் சொல்லவில்லை உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது பரிசு வாங்கி இருக்கிறார்களா..?அல்லது நீங்களாவது வாங்கி இருக்கிறீர்களா..?



டிவியில் எந்த விளம்பரம் போட்டாலும் எங்க வீட்டில் இருந்து குரல் வரும்...இப்போது அப்படி தான் விஜய் டீவியில் ஒரு விளம்பரம் வருகிறது வீடு இல்லாதவர்களுக்கு வீடு ...நான் எப்போதும் விளம்பரம் பார்க்க மாட்டேன் உடனே சேனலை மாற்றி விடுவேன்...நான் விளம்பரம் பார்த்து கொண்டுயிருந்தேன் உடனே மாற்றிட்டான் என திட்டு "வீடு தராங்களே உண்மையா வா நம்ம எழுதி போடுவோம் கிடைத்தால் கிடைக்கட்டும்" என்பார்கள். அதுவும் பொய் தான் அதையெல்லாம் நம்பாதீங்க சொன்னா கேட்க மாட்டீங்களா..? என்பேன்....



விளம்பரம் என்றால் அகராதியில் பொய் என்று மாற்ற வேண்டும்....உண்மையை தவிர எதையும் சொல்லமாட்டார்கள் விளம்பரத்தில் கூறுவது பொய்கள் என்று நமக்கு தெரியும் இருந்தாலும் அந்த பொருட்களை வாங்குவோம். ஒரு கம்பெனி மீது இன்னொரு கம்பெனி குறை சொல்லும். இந்த பொருட்களை வாங்காதீர்கள் என்று ஒரு கம்பெனி சொல்லும் அந்த பொருட்களை வாங்காதீங்க சொல்வாங்க....நாங்க எந்த பொருட்களை தான் வாங்குவது. ஆண்கள் பயன் படுத்தும் பாடி ஸ்ப்ரேக்கு ஏன் பெண்கள் வருகிறார்கள், அதுவும் அந்த வாசனையை முகர்ந்தவுடன் அவர்கள் ஆடைகளை கழட்டிவிடுவார்களாம் இது என்ன விளம்பரம்? ஒரு பொருட்களின் தரத்தை கூறி விளம்பரம் செய்தால் பரவயில்லை..இந்த axe spray விளம்பரம் அத்துமீறி வந்துகொண்டுயிருந்த பொழுது ஜனாதிபதி...கண்டித்தார் விளம்பரத்தில் நடிக்கும் பெண்கள் கண்ணியமாக நடிக்க வேண்டும் என..ஆனால் பெண்கள் அமைப்பு எந்த போராட்டமும் நடத்தியதாக தெரியவில்லை.  சினிமாவில் ஆபாச காட்சிகள் வந்தால் மட்டும் எதிர்ப்பு! பெண்கள் அமைப்பு டிவியில் வருவதை மட்டும் கண்டுகொள்வதில்லையே..ஏன்..??



அடுத்ததாக...துணிக்கடை விளம்பரத்தை பார்த்து ஏமாறுவார்கள்....தள்ளுபடி என்றால் போதும் உடனே கணவனிடம் சண்டை போட்டாவது வாங்கி விட வேண்டும்..நான் துணிகடையில் வேலை பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். எப்போதும் வரும் லாபத்தை விட தள்ளுபடி போட்டால் தான் அதிக லாபம் வரும். நான் விலைநிர்ணயம் செய்யும் இடத்தில் இருந்ததால் எனக்கு எத்தனை சதவிகித விலை வைக்க வேண்டும் என்பது தெரியும்..சாதாரண நாட்களில் ஒரு பொருளுக்கு 7சதவிகித அளவுக்கு விலை வைப்போம்..தள்ளுபடி நேரத்தில்....தள்ளுபடி 10 சதவிகிதம் தருகிறோம் என்றால் ஒரு பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய நாங்கள் 17 சதவிகித உயர்வு வைப்போம். இதனால் கடைகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது, முன்பை விட லாபம் அதிகம் தான் கிடைக்கும்..தள்ளுபடியில்லாத நேரத்தில் ஒரு சிலருக்கு 200 ரூபாய் வரை குறைப்பது உண்டு...தள்ளுபடி போட்டால் அந்த 200 ரூபாயும் குறைக்க மாட்டோம். தள்ளுபடி நேரத்தில் தான் பழைய விற்பனை ஆகாத பொருட்களை எல்லாம் எடுத்து புதியதாக விற்பனை செய்து விடுவோம்,  அப்படியே ஏதாவது திரைப்படத்தின் பெயர்களை வைத்து விடுவோம், நான் தான் என்ன திரைப்படம் பெயர் வைக்கலாம் என்று பரிசீலினை செய்வேன்...மக்களும் படத்தின் பெயரை பார்த்து வாங்குவார்கள்...அந்த படத்திற்கும் அந்த பொருளுக்கும் சம்பந்தமே இருக்காது ஆனால் எல்லாம் விளம்பரம் செய்யும் வேலை..விளம்பரம் என்பது கண்ணை மறைக்கிறது தள்ளுபடி நேரத்தில் பொருட்களை வாங்காமல்...சாதாரண நாட்களிலே வாங்கலாம்...



விளம்பரம் என்பது தங்கள் பொருட்களை பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகதான்.. ஒரு வியாபரத்திற்கு மிக முக்கியமானதுதான் அது. ஆனால் அதை நேர்மையாக செய்ய வேண்டும். அதில் கவர்ச்சி, ஆபாசம், ஏமாற்று வித்தை போன்றவற்றை சேர்க்க கூடாது. நுகர்வோர்களை ஏமாற்றாமல் நேர்மையாக காண்பிக்கப்படும் விளம்பரமே அந்த பொருட்களை உண்மையாக சந்தையில் நிலைக்கச் செய்யும், நியாமான வியாபாரத்தை நடக்கச் செய்யும். 



44 comments:

மாணவன் said...

வணக்கம் மச்சி, படிச்சுட்டு வரேன் :)

மாணவன் said...

இந்த விளம்பரத்துல இவ்வளவு மேட்டர் இருக்கா?? மிகவும் தெளிவா சொல்லியிருக்க மச்சி!!
வாழ்த்துக்களும் நன்றிகளும் பல... :))

சி.பி.செந்தில்குமார் said...

டி வி ல யாரும் பரிசே வாங்கலைன்னு சொல்ல முடியாது. தஞ்சை ஆதி, ரிஷிவந்தியா இவங்க எல்லாம் இதையே பார்ட் டைம் ஜாப்பா பண்ணி கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் 4 வருஷத்துல சேர்த்துட்டாங்க...

சி.பி.செந்தில்குமார் said...

ஆனா கட்டுரையோட நோக்கம் நேர்மையானது, மக்களை மாக்கள் ஆக்குவது உண்மைதான்

மாணவன் said...

//விளம்பரம் முக்கியம் அமைச்சரே//

உண்மைதான்... ஆனால் அந்த விளம்பரங்கள் நீ சொல்வதுபோல நேர்மையான் முறையில் செய்தால் அனைவருக்குமே நல்லது

என்ன செய்வது சம்பந்தபட்டவர்கள் திருந்துவார்களா??

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கு என்ன ஆச்சரியம்னா உங்க வயசுக்கு இந்த மெச்சூரிட்டி எப்படி வந்ததுன்னு தான்.பொதுவா இந்த வயசுல காதல் கவிதை எழுதுவாங்க,ஊர் சுத்துவாங்க, ஆனா உங்க எழுத்துக்கள்ல சமூக விழிப்புணர்வு கூடிக்கொண்டு வருவது ஆச்சரியம். வரவேற்கறேன். அதே நேரத்தில் உங்களை முன் மாதிரியாகக்கொண்டு நிறைய பேர் எழுத வாழ்த்தறேன்

S Maharajan said...

//@மாணவன் உண்மைதான்... ஆனால் அந்த விளம்பரங்கள் நீ சொல்வதுபோல நேர்மையான் முறையில் செய்தால் அனைவருக்குமே நல்லது//

Repeatu..........

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்ல பகிர்வு.. வாழ்த்துக்கள்..!! :)


// நான் சொல்லிவிட்டேன் இது எல்லாம் பொய் இவர்கள் ஏமாற்றுகிறார்கள்..//

...நீங்க அம்புட்டு விவரமா... சொல்லவே இல்ல??? :)


//அந்த பெட்டிகளை திறக்கும் பொழுது "பத்து லட்சம் போச்சு 5 லட்சம் போச்சு என்பார்கள், நான் அவர்களை அப்படியே திரும்பி பார்ப்பேன்.//

...ஹா ஹா ஹா.. சரி சரி.. விடுங்க.. அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்கோ.. :)

ரேவா said...

ஆண்கள் பயன் படுத்தும் பாடி ஸ்ப்ரேக்கு ஏன் பெண்கள் வருகிறார்கள், அதுவும் அந்த வாசனையை முகர்ந்தவுடன் அவர்கள் ஆடைகளை கழட்டிவிடுவார்களாம் இது என்ன விளம்பரம்......

உஷாருங்கோ.. உஷாரு... தெளிவான பதிவு... வாழ்த்துக்கள்

Chitra said...

.விளம்பரம் என்பது கண்ணை மறைக்கிறது தள்ளுபடி நேரத்தில் பொருட்களை வாங்காமல்...சாதாரண நாட்களிலே வாங்கலாம்...


.....உண்மையிலேயே மிகச் சிறந்த அறிவுரை இது.... புது தகவலும் கூட... மிக்க நன்றிங்க...

Anonymous said...

ஓட்டு போட்டாச்சு

karthikkumar said...

உண்மைதான் மச்சி இந்த விளம்பரங்கள் எல்லாம் நம்மை முட்டாள் ஆக்கும் வேலையைத்தான் செய்து வருகின்றன.........

Madhavan Srinivasagopalan said...

டி.வி விளம்பரம் (முக்கியமாக பாடி ஸ்ப்ரே) பற்றி நானும் உங்களைப் போலவே நினைத்ததுண்டு.

நீங்கள் இந்தப் பதிவில் சொன்ன அனைத்தும் நூறு சதவிகிதம் சரியே.

முக்கியமாக கடைசி பாரா -- செம..

ரஹீம் கஸ்ஸாலி said...

இப்படிப்பட்ட கவர்ச்சி விளம்பரங்களை நம்பி காசை இழந்தவர்கள்தான் அதிகம். உங்களுடைய பதிவு ஒரு விழிப்புணர்வாக இருக்கட்டும்

sathishsangkavi.blogspot.com said...

அருமையான அலசல் பதிவு...

ஆனால் இன்று எந்த தொழில் செய்தாலும் நிச்சயம் விளம்பரம் தேவை... இல்லினா போனி ஆகாது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எவ்வளவு தெளிவா இருக்காங்கப்ப...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான் ஓட்டு போட்டுட்டேன்..

எல்லாம் ஒரு விளம்பரத்துக்காகதான்..

பொன் மாலை பொழுது said...

// இதனால் கடைகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது, முன்பை விட லாபம் அதிகம் தான் கிடைக்கும்.//

இந்த தள்ளுபடி முறை பற்றி இன்னமும் விரிவாக எழுதவேண்டுகிறேன். கொஞ்சமும் நேர்மையற்ற முறையில் மக்களை சுரண்டி கொள்ளை லாபம் அடிக்கும் இந்த வியாபாரிகள் நம் ஊழல் அரசியல் வாதிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல. தொடர்ந்து இதை பற்றி எழுதுங்கள்.

பாலா said...

விளம்பரங்களுக்கென்று சில தர்மங்கள் இருக்கின்றன. அது மீறப்பட்டு பல காலம் ஆகி விட்டது. disclaimarஐ மிகவும் பெரிய எழுத்தில் காட்ட வேண்டும் என்பது விதி. ஆனால் கண்ணுக்கே தெரியாத அளவுக்கு திரையில் ஒரு ஓரத்தில் போட்டு இருப்பார்கள். என் கல்லூரி பேராசிரியர் சொன்னது, "ஒரு பிரபலம் அதிக பட்சம் மூன்று விளம்பரங்களில் நடிக்கலாம். அதுதான் விளம்பர தர்மம்" என்று. இப்போது அப்படியா நடக்கிறது. தோனி மட்டுமே முப்பதுக்கும் மேற்பட்ட விளம்பரங்களில் வருகிறார்.

சக்தி கல்வி மையம் said...

சரியான சாட்டையடி பதிவு...

எஸ்.கே said...

விளம்பரம் வியாபரத்தின் முக்கிய பகுதிதான். ஆனால் அதை முறையாக கையாள வேண்டும். நல்ல பதிவு சௌந்தர்!

வினோ said...

நீங்கள் சொல்லும் விசயம் உண்மை தான்.. ஆனால், காசு மட்டுமே பார்க்கும் இங்கே, நேர்மை எங்கே கிடைக்கும் சௌந்தர்...

இம்சைஅரசன் பாபு.. said...

ஜூப்பர் ...சூப்பர் ..ஜூப்பர் ...சூப்பர் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

90% விளம்பரங்கள் உண்மைக்குப் புறம்பான விஷயங்களைக் கூறியே பொருட்களை விற்கின்றன. சமூகத்தில் எல்லா அடுக்குகளிலும் காணப்படும் சுயநலம், நேர்மையற்ற தன்மையே விளம்பரங்களிலும் வெளிப்படுகிறது. சமூக மாற்றமே இதற்குத் தேவை....!

Unknown said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தம்பி.. இன்னைக்குதான் ஊரில் இருந்து வந்தேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கிளியரன்ஸ் சேல் என்று போடப்படும் தள்ளுபடி விற்பனையில் உண்மையிலேயே சலுகை இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

எம் அப்துல் காதர் said...

//அதுவும் அந்த வாசனையை முகர்ந்தவுடன் அவர்கள் ஆடைகளை கழட்டிவிடுவார்களாம் இது என்ன விளம்பரம்? ஒரு பொருட்களின் தரத்தை கூறி விளம்பரம் செய்தால் பரவயில்லை..ஆனால் பெண்கள் அமைப்பு எந்த போராட்டமும் நடத்தியதாக தெரியவில்லை. சினிமாவில் ஆபாச காட்சிகள் வந்தால் மட்டும் எதிர்ப்பு! பெண்கள் அமைப்பு டிவியில் வருவதை மட்டும் கண்டுகொள்வதில்லையே..ஏன்..??//

முற்றிலும் உண்மையான பகிர்வு. நான் கூட பல சமயங்களில் இதை பற்றி யோசித்திருக்கிறேன். ஆனா கவர்ச்சியை மட்டுமே நம்பி காசாக்கும் இந்த யுக்தி நீண்ட நாள் நிலைக்காது.

Anonymous said...

நான் யோசித்து வைத்திருந்த பதிவு..
நீங்க முந்திகிட்டீங்க..

ஆனாலும் சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் வேதனையான உண்மை தான்.
நல்லதொரு பதிவு.

Unknown said...

நல்ல சமூக சிந்தனையுடன் கூடிய பதிவு. வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

பேசாம டிவி'யை வித்துருங்கப்பூ....
இல்லாட்டி உல்டா'வா திருப்பி வச்சிருங்க...

சுசி said...

சரியா சொன்னிங்க.

மாணவன் said...

//இந்திரா சொன்னது…
நான் யோசித்து வைத்திருந்த பதிவு..
நீங்க முந்திகிட்டீங்க..

ஆனாலும் சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் வேதனையான உண்மை தான்.
நல்லதொரு பதிவு.//

மச்சி எழுதுனா பரவாயில்லை நீங்களும் எழுதுங்க மேடம்... :))

வைகை said...

உண்மைதான் சில விளம்பரங்களை பார்க்கும்போது இதுக்கும் தணிக்கை அவசியம் என்று தோன்றுகிறது

aavee said...

oru post padichcha yedhaavadhu discount undaa??

Jaleela Kamal said...

சரியா சொன்னீங்க,
அப்ப கடைய மூடுராஙக், ஸ்டாக் கிளியரன்ஸ் எல்லாமே உடான்ஸாஅ

சீமான்கனி said...

சௌந்தர் ஜி...நீங்களுமா பாதிக்கப்பட்டு இருக்கீங்க நல்லவேளை நாங்க தப்பிச்சோம்...

வசந்தா நடேசன் said...

நம் இந்திய ‘நிர்மா‘ ‘பவர்‘ களின் கதை எத்தனை பேருக்கு தெரியும்?? ஆனால் மார்கெட் லீடர் ஹின்டுஸ்டான் லீவர்??? தரம் நம் மக்களுக்கு முக்கியமல்ல, விளம்பரம் தான், காலம் மாறும் என்று நம்புவோம். நல்ல பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி.

நிரூபன் said...

வணக்கம் சகோதரா, இன்று தான் உங்களின் வலைப் பதிவை தமிழ்மணம் வாயிலாக தரிசித்தேன். அருமையாக உள்ளது. நட்சத்திரமாக றவுண்டு கட்டுவதற்கு வாழ்த்துக்கள். விளம்பரங்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும்- ஏமாற்றுவோர் இருக்கும் வரை ஏமாளிகள் இருப்பார்கள் என்பதற்கான நல்ல சான்று.

ஒரு சின்ன உதாரணம்: புதிதாக வந்த முக அழகுக் கிறீமிற்கு விளம்பரம் செய்யும் நடிகை கூறுவார்: பாவித்து இரண்டே வாரங்களில் சிகப்பழகை பெறலாம் என்று. ஆனால் அந்த நடிகை சின்ன வயசிலை இருந்து அந்த கிரீமையா யூஸ் பண்ணினாரு? என்னமா பிட்டு வைக்கிறாங்க. ஐ ஆம் எஸ்கேப்.

ஆனந்தி.. said...

சூப்பர் சௌந்தர்..நல்ல பதிவு...அந்த ராஜ் டிவி, ss மியூசிக் போட்டி உலக பிராடு..என் தோழி வீட்டில் ட்ரை பண்ணிருக்காங்க..லைன் போயிட்டே இருந்திருக்கு...1 நிமிஷத்துக்கு 10 ரூபா..பாவம் தோழி கணவர் 160 ரூபா தெண்டம் பண்ணிருக்கார்..அவனுங்க கடைசி வரை எடுக்கவே இல்லையாம் ரிங் சத்தம் கேட்டதாம்...ரொம்ப ஈஸி ஆன புகைப்படமாய் தான் இருக்கும் கவனிச்சிருக்கியா...ஆனால் அதையே யாரோ அவனுங்க ஸ்டுடியோவில் இருந்தே தப்பு தப்பா பதில் சொல்ல வைக்கிறமாதிரி எனக்கு தோணிருக்கு...

மங்குனி அமைச்சர் said...

எல்லா இடத்திலும் சலுகை , இலவசம் இவைகள் தான் முன்னிறுத்தப் படுகின்றன ........... ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை அவர்களும் இருப்பார்கள்

செல்வா said...

மச்சி நீ விளம்பரம் பாக்க மாட்டியா ?
நான் டிவி ல பாக்குறதே ஏன் டிவி பாக்குறதே விளம்பரத்துக்காகத்தான்.
அதிலும் வோடபோன் ஜூ ஜூ விளம்பரம் ரொம்ப பிடிக்கும் ..
அதிகப்படியான காமெடி விளம்பரங்களில்தான் இருக்கு ..

அன்புடன் நான் said...

மிக சரியான நெத்தியடி பகிர்வுங்க....
நீங்க சொவதுதான் உண்மை... எவன் மக்களுக்கு இலவசமாகவோ .... விலைகுறைத்தோ தருவான்.... அப்படின்னா அவன் குறுக்கன் என்று அர்த்தம்...
எல்லாம் வணிக தில்லாலங்கடி....

பகிர்வு அசத்தல்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice post Soundar...:)

சாந்தி மாரியப்பன் said...

இந்த எஸ்.எம்.எஸ், கால் பண்றது, கடைகளில் தள்ளுபடி தர்றது இதுக்கு பின்னால நிச்சயமா அவங்களோட லாபம் மட்டுமே இருக்கும். நல்ல விழிப்புணர்வுள்ள பகிர்வு

 
;