துப்பாக்கிகளில் பல வகைகள் உள்ளன. பிஸ்டல் ரிவோல்வர் ஆகியன முக்கிய கைத்துப்பாக்கி வகைகளாகும். பிஸ்டலில் துப்பாக்கிக் குண்டுகள் துப்பாக்கியினுள் இருக்கும். ரிவோல்வரின் சுழலும் சிலிண்டரின் துளைகளுள் குண்டுகள் இடப்படும்.
ஆரம்பத்தில் ஒரே ஒரு தடவை சுடக்கூடிய கைத்துப்பாக்கிகளே உருவாக்கப்பட்டன. அடுத்தடுத்துச் சுடுவதனை சாத்தியப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தன. ஆரம்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சுடுகுழல்கள் பயபடுத்தப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரிவோல்வர் கண்டுபிடிக்கப்பட்டமை ஒரே சுடுகுழலுடன் அடுத்தடுத்துச் சுடுவதைச் சாத்தியமாக்கியது.
துப்பாக்கிகள் சுழல் குளாய்களைக் கொண்டுள்ளன. இது தோட்டா அல்லது எறிபொருளில் சுழற்சியை ஊட்டுவதால், எறிபொருள் (பறந்து) செல்லும் பொழுது மேம்பட்ட நிலைப்பாட்டோடு பறந்து செல்கின்றது. கைத்துப்பாக்கிகள் பொதுவாக தற்பாதுகாப்பு ஆயுதங்களாகவே கருதப்படுகின்றன. தேர்ந்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை மிக நெருங்கிச் சென்று தாக்கவும் பயன்படுகின்றன.
இயந்திரத் துப்பாக்கி சர். ஹிராம் மக்சிம் என்பவரால் 1884 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
(Ak-47, 1947 இன் கலாசுனிக்கோவ் தானியங்கி துப்பாக்கி) 7.62 மிமீ தாக்குதல் துப்பாக்கி சோவியத் ஒன்றியத்தில் மிக்கைல் கலாசுனிக்கோவ் என்பவரால் இரு வகையாக உருவாக்கப்பட்டது.
| Tweet | |||||












- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact