Monday, August 2 33 comments

அட மெய்யாலுமே 944 பேர் வந்தாங்களா?


                                                            
                  அட மெய்யாலுமே 944 பேர் வந்தாங்க நல்ல பாருங்கள்....                                                           
ஒழுங்கா நல்ல கதை எழுதி வைத்து அம்மா வாங்க அய்யா வாங்க என கூவி கூவி அழைத்தாலும் யாரும் வரமாட்டார்கள் ஒருவரை கிண்டல் செய்தால் போதும், நம்ம எல்லோறோம் சென்று முதலில் நிற்போம்... 



தினமும் என் பதிவை எத்தனை பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்று பார்ப்பது வழக்கம், அதை போல் சனி கிழமை பார்த்தேன் இன்ப அதிர்ச்சி, ஆமாம் என் பதிவை 944 பார்வையாளர்கள் ஒரே நாளில் பார்த்து உள்ளார்கள், 
                                               
         அட இது உங்களுக்கு தாங்க சண்டை போடாமல் எடுத்து கொள்ளுங்கள்                    


விஜய்யை  பற்றி கிண்டல் செய்து பதிவு போட்டால் இப்படி கூட்டம் குவியுது.. விஜய் படத்திற்கே  இத்தனை பேர் வருவார்களா... எனக்கு ஓரு சந்தேகம்... அதை விஜயிடம் போய் தீர்ப்போம் .... 




சரி இதை பற்றி விஜய்யிடம் சொல்லாம் என்று அவர் வீட்டுக்கு சென்றேன் .
அப்போது நானும் விஜயும் பேசிய விவரம் 


விஜய் பார்த்தேன்; என்னை பார்த்ததும் என்ன சாப்டிங்களா கேட்டார் நான் இல்லை என்று சொன்னேன். 

விஜய்; போகும் போது ஓட்டலில் சாப்பிட்டு போங்க என்று சொன்னார்..(அது எங்களுக்கு தெரியாதா)




உங்களை பற்றி பதிவு போட்டேன் 944 பேர் பார்த்து உள்ளனர். விஜய்க்கு  ஆச்சரியம், மறுபடி கேட்டார் உண்மைய தான் சொல்றிங்களா, ஆமா உண்மை தான்.(விஜய் மைன்ட் வாய்ஸ்.... உடனே கட்சி தொடங்கணும்) 




விஜய்: என் படத்தை கூட இத்தனை பேர் பார்க்க மாட்டார்கள் எப்படி நடந்தது 
ஒரே குழப்பமா இருகிறதே, அது சரி தலைப்பு என்ன வைத்தீர்கள் 



நான்: டாக்டர் விஜயின் சாகசகாட்சி! இது தான் தலைப்பு 



விஜய்;இல்லை இல்லை இது எனக்காக பார்த்தவர்கள் கிடையாது, அதானே பார்த்தேன் நமக்கு இவளவு கூட்டம் வராதே ...என்று மனதிற்குள் விஜய் நினைக்க.... சௌந்தர் நீங்க இளைய தளபதி டாக்கடர் விஜய் என்று வைத்து இருக்க வேண்டும் ஓரு பையனும் வந்து இருக்க மாட்டான்,




சௌந்தர்.....என்னைய பேட்டி எடுத்து கழகுகில் ஓரு பதிவு போடலாம் இல்லையா என்று கேட்க்க ....கழுகு வலை பக்கம் நல்ல இருப்பது உங்களக்கு புடிக்க வில்லையா... 


விஜய்.....டிவி போட்டு உங்களை காட்டினால் தான் குழந்தைகள் எல்லாம் சாப்பிடுகிறார்கள்... இது உங்களக்கு தெரியுமா..

 விஜய்:  எனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம் அதானால் இருக்கலாம் ....




நான்: அட இது அப்படி இல்லையாம் டிவிய போட்டு அங்க பூச்சாண்டி வாறான் என்று சொல்லி சாப்பிட வைக்கிறார்கள்.....இது தெரியமா எனக்கு குழந்தைகள் ரசிகர்கள் அதிகம் என்று சொல்லி காமெடி பண்ணாதீங்க விஜய்... 




உங்கள் அடுத்த படம் எப்படி இருக்கும் சொல்லுங்க விஜய்.....

விஜய்: எல்லாம் ஒரே மாதரி தான் இருக்கும்.....

உங்கள் நெஞ்சில் குடி இருக்கும் உங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்ல போறிங்க.... 

விஜய்: ஒழுங்கா வாடகை தர சொல்லுங்க..... (அதான்பா நெஞ்சில் குடி இருக்கிறார்கள் இல்லையா)      



                            அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா.....





 
;