Wednesday, August 4 33 comments

குழந்தை வளர்ப்பு முறை மாற்றம் வரவேண்டும். ..

                                                                        
                                                                          

எங்க வீட்டுக்கு ஓரு பொண்ணு வந்து வாசலில் நின்று பசி எடுக்கிறது என்று குரல் கொடுத்தது... பாவம் புள்ளதாச்சி பொண்ணு என்று சாப்பாடு போட்டு வைத்தோம் சாப்பிட்டு விட்டு அந்த பொண்ணு சென்று விட்டது, அதே போல் மறு நாள் வந்து சாப்பாடு வேண்டும் என்று குரல் கொடுக்க அட என்ன இது ஓரு நாள் சாப்பாடு போட்டால் மறுபடி வந்து நிற்கிறது இந்த பொண்ணு....என்ன செய்வது... நாங்க ரொம்ப நல்லவர்கள் என்று அந்த பொண்ணுக்கு தெரிந்து விட்டது போல....

இந்த தடவை சாப்பிட்ட உடன் செல்லவில்லை ஓரு குட்டி தூக்கம் போட்டு விட்டு சென்றது.....மறு படி வந்தது சாப்பாடு போட்டு வைத்தால் அதை பார்க்காமல் எங்க வீட்டு பரனை மீது ஏறி  T.V பாக்ஸ் உள்ளே எதையோ  தேடியது... புள்ள தாச்சி பொண்ணு இப்படி மேல ஏறி போகிறதே என்று பயந்தோம்..சிறிது நேரம் பார்த்து விட்டு நாங்களும் அப்படியே விட்டு விட்டோம் அந்த பொண்ணுக்கு T.V பாக்ஸ்குள் மூன்று குழந்தை பிறந்து விட்டது..

மறு நாள் நாங்க அந்த T.V.பாக்ஸ்சை கிழ எடுத்து திறந்து பார்த்தோம், அழகான மூன்று பூனை குட்டி இருந்தது என்ன பூனை குட்டியா என்று கேட்பது எனக்கு புரிகிறது.. நான் இவளவு நேரம் பூனை பற்றி தான் சொல்லிகொண்டு இருந்தேன்..ஆமாங்க எங்க வீட்டில்நடந்த கதை.....

நாங்க அந்த பூனை குட்டியை எடுத்து பார்த்தோம் குட்டி பூனை கிச் கிச் சப்தம் போட அம்மா பூனை எங்கு இருந்தோ வந்து அதுவும் குரல் கொடுத்தது அம்மா இங்கு தான் இருக்கிறேன் அழுவாதிங்க.. என்பது போல... அம்மா பூனை வந்தவுடன் எங்களை கடித்து விடுமோ என்ற பயம். ஆனால் அது எங்களை ஒன்றும் செய்யவில்லை..

பூனை குட்டிக்கு என்று கிழ தரையில் ஓரு தனி இடம் ஒதுக்கி அதற்கு என்று துணியை விரித்து வைத்து மூன்று குட்டிகளை படுக்க வைத்தோம்...அம்மா பூனை எங்கயாவது வெளியே போய்விட்டு வரும் போது குரல் கொடுத்து கொண்டே வரும்... உடனே தூங்கி கொண்டு இருக்கும் பூனை குட்டிகள் எழுந்து குரல் கொடுக்கும்...


எப்போது பார்த்தாலும் அதன் அம்மாவிடம் பால் குடித்து கொண்டே இருக்கும்... நாங்களும் அதற்கு பால் வைத்தோம் பூனை குட்டிக்கு குடிக்க தெரியவில்லை நாங்கள் கற்று கொடுத்தோம்...நடக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது...அம்மா பூனை வந்து வாசலில் நின்று கொண்டு குரல் கொடுத்து கூப்பிடும்.. பூனை குட்டிகள் பால் குடிப்பதற்கு ஓடும் 

அப்படியே குட்டிகளை கொஞ்ச கொஞ்சமா வெளியே அழைத்து போகும்.... வீட்டில் மூன்று பூனை குட்டிகளும் எங்களுடன் விளையாட்டும்...ஓரு நாள் அம்மா பூனை வந்து மூன்று குட்டிகளை கூப்பிட்டு சென்றது... அதில் ஓரு குட்டி பூனையை நாய் கடித்து இறந்து விட்டது. மற்ற இரண்டு பூனைகள் பயந்து வீட்டிற்கு ஓடி வந்து விட்டது.. எங்க ஓரு பூனை காணவில்லை என்று தேடி பார்த்தோம் அப்போது தான் எங்களுக்கு நாய் கடித்து இறந்தது என்று தெரியும் 

அம்மா பூனை எங்கு இருந்தோ ஓரு மீனை திருடி கொண்டு வந்து அதன் குட்டிகளுக்கு சாப்பிட கொடுத்து அதை வேடிக்கை பார்த்தது கொண்டு இருக்கும் 

தன் குட்டிகளுக்கு என்ன என்ன கற்று தர வேண்டுமோ அதை எல்லாம் தன் குட்டிகளுக்கு கற்று கொடுத்து விட்டு குறிப்பிட்ட வயது (சில மாதங்கள்) வந்தவுடன் அதை தன் பாதுகாபில் இருந்து தள்ளி வைக்கும் அந்த பூனை குட்டிகள் பக்கத்தில் சென்றால் முதலில் எச்சரிக்கை தரும் மீண்டும் மீண்டும் பக்கத்தில் சென்றால் அதை அடித்து விரட்டும் இனி எல்லா விஷயங்களும் நீயே தெரிந்து கொள்ள வேண்டும் என்று அது விரட்டுகிறது....


மனிதர்களும் நமது குழந்தைகளை ஓரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் இனி எல்லாம் நீயே பார்த்து கொள்ள வேண்டும், என்று சொல்லவேண்டும் குழந்தை வளர்ப்பு முறை மாற வேண்டும், படித்தால் தான் வாழமுடியும் என்ற எண்ணத்தில் குழந்தைகளை வளர்க்க கூடாது, மற்ற விசயத்தையும் கற்று தர வேண்டும், வெளி நாட்டில் நீச்சல் முதல் அனைத்து விளையாட்டுகளை கற்று தருகிறார்கள், நமது நாட்டில் விளையாட்டில் இருந்தால் கல்லூரியில் இடம் கிடைக்கும் சுலபமாக வேலை கிடைக்கும் என்று தான் நாம் விளையாட்டில் சேர்கிறோம், இது போன்ற எண்ணத்தில் தாம் நாம் இருக்கிறோம்...மாற்றம் வரவேண்டும்..... 



          
 
;