Wednesday, February 2 44 comments

நீ வந்த நொடி முதல்..!





உன் இமைகளுக்குள்
நான் இருப்பதாலேயே..
தினம் நீ இமை மூடிய பின்பே
என்னிமைகள் மூடும்...
நீ கண்விழிக்கும் காரணம்
உன்னிமைக்குள் நான் செய்யும்
குறும்புகள் தானோ...!!



கூட்ஸ் வண்டியாய்
நடை பயின்ற நம் நட்பு
இன்று
எக்ஸ்பிரஸ் ரயிலாய்
வேகம் பிடிக்க
அஞ்சுகிறேன்...!
தடம் புரளாமல்
இருக்க வேண்டுமே !!




உன் முகஅழகை பார்த்து...
பிரமித்து விலகிசென்றேன் ..!
கரம்பிடிக்க வந்தவனின்
கரத்தை நீ பற்ற
உன் கர அழகை பார்த்து...
உயிரற்று போனேன்
உன் உள்ளங்கையில்..!


எல்லா உயிர்களிடத்தில்
நிபந்தனை அற்ற
அன்பை காட்டும் நான்...
உன்னிடம் மட்டும்
நிபந்தனையுடன் ஏன்...?!



என்னுள் நான் இல்லை...
நீ வந்த நொடி முதல்..!



 
;