Wednesday, June 15 26 comments

காதல் தேவைதானா..???





இப்பொழுது அனைவரும் முனு முணுத்துக் கொண்டுயிருக்கும் வார்த்தை காதல் திருமணம் செய்ததால் இப்படி அநியாயமா கொலை பண்ணிட்டாங்களே. அந்த பையனை கொலை செய்து விட்டு ஒரு ஆறு மாதமோ ஒரு வருடதிலோ வேறு ஒரு திருமணம் செய்து வைத்து விடலாம் என்ற நினைப்பு, என்ன ஒரு வில்லத்தனம்...!! இவனுங்க எல்லாம் மனுசனா இவ்வாறு சாமானிய மக்கள் பேசி கொள்கிறார்கள்.

காதல் திருமணம் செய்தால் இப்படியா கொலை செய்வது..??? இதே போல்  வட மாநிலத்தில் இப்படி ஒரு முறை நடந்து இருக்கிறது. கிராமங்களில் இப்படி நடைப் பெற்றுள்ளது என கேள்வி பட்டிருப்போம், அவையெல்லாம் கோவத்தில் நடந்திருக்கலாம்.  ஆனால் இப்படி திட்ட மிட்டு கொலை செய்வது இதுவே முதல் முறையென எனக்கு தோன்றுகிறது.

நாம் வாழும் தேசத்தில் காதல் என்றால் ஏதோ தகாத வார்த்தை போல் பார்கின்றார்கள்காதல் என்ற வார்த்தைக்கு இங்கு பல நல்ல  அர்த்தங்கள் இருந்தாலும் அவையெல்லாம் கண்ணுக்கு  தெரியாது, ஒரே ஒரு அர்த்தம் மட்டுமே தெரியும்.

நம் வீட்டில் உள்ளவர்களுக்கு, சினிமாவிலும் நாடகத்தில் வரும் காதல் பிடிக்கும். அதே காதல்  நம் வீட்டினுள் வந்தால் பிடிக்காது. எதற்கெடுத்தாலும் வெளிநாட்டினரை பின்பற்றும்  நம்  மக்கள் ஏன் இந்த காதல் விஷயத்தில்  மட்டும் வெளிநாட்டினரை பின்பற்ற மறுக்கிறார்கள்..??.  

திருமணம் செய்து விட்டார்கள் என்றால் அந்தநேரம் அமைதியாக இருப்பதே சிறந்தது. நம் வீட்டில் ஒருவர் காதல் திருமணம் செய்தால் கோபம் வரலாம், ஆனால் கொலை செய்யும் அளவுக்கு வர கூடாது,

ஏன்னென்றால் பிள்ளைகள் நம்முடன் 25 வருடம், தான் வாழ போகிறார்கள். மீதி இருக்கும் 60 வருடங்கள் அவர்கள் சேர்ந்து வாழ போகிறார்கள், அவர்கள் சேர்ந்து வாழ போகும் வாழ்க்கை அவர்கள் தீர்மானிப்பதில் என்ன தவறு இருக்க போகிறது. நம் பிள்ளைகள் காதல் செய்கிறார்கள் என்றால், அவர்கள் விரும்பும் நபருக்கே திருமணம் செய்து வைத்து விடலாம்.


காதலர்களும் தவறு செய்கிறார்கள், அவர்கள் வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்வது தவறு, முதலில் வீட்டில் தங்கள் விருப்பத்தை சொல்ல வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்லியும் கேட்கவில்லை என்றால் தான், வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ய வேண்டும்.


காதல் திருமணத்தை பணக்காரர்கள் தான் அதிகம் எதிர்கிறார்கள், அடி தட்டுமக்கள் எல்லாம் அவ்வளவாக  எதிர்ப்பதில்லை. நடுத்தர மக்கள் சிலர் ஏற்றுகொண்டும், சிலர் ஏற்றுகொள்ளமலும் இருக்கிறார்கள். அன்று முதல் இன்று வரை காதல் திருமணங்கள் ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது. இவையெல்லாம் மாறுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம்.   

ஒரு காதல் கொலையில் வந்து முடியுமென்றால் அந்த காதல் தேவைதானா..??? என்ற கேள்வியும் மனதில் எழுகிறது

 
;