வெயில் என் மீது படுவது பொறுக்க முடியாமல்
ஆதவனையே மறைக்க துணிந்த பாசக்காரி நீ..!!!
நிலவின் அழகை ரசித்துவிட கூடாதென்பதற்காக..
நிலவையே மறைத்த பொறாமைக்காரி நீ...!!
என்னை காண வேண்டும் என்பதற்காக
மழையாய் வரும் நேசக்காரி நீ..!!
-------
நித்தம் நித்தம் உன் நினைவுகளால்
கண் இமைக்க மறக்கிறேன்...
விழிகளில் நீ இருப்பதால்...!!
ஆனந்தமாய் சுற்றித்திரிந்த
என்னை ஆர்ப்பாட்டமாய்
கைது செய்கிறாய்...
விழியால் ..!!
-----
உன் பாத சுவடுகளே சொல்கிறது
எனக்காக பாதையை..!!!
உன் கால் கொலுசு முத்துக்கள்
என் மீது பொறாமை கொண்டு
மடிந்து விழுகிறது..
உன் காலடியில்..!!
---
பேசி பேசி கரைந்த
வார்த்தைகளெல்லாம்..
மீண்டும் உயிர் பெறுகிறது
அவள் மௌனம்
சூடிக்கொள்ளும் போது..!!!
விழி மொழி பேசும் பொழுது
வார்த்தை எதற்கு..??
மௌனமே போதும்
என்கிறது உன் விழி..!!
நீ நாணப்பட்டு சொல்லாத
காதலையெல்லாம்,
வெளிக்காட்டி விடுகிறது,
உன் காந்த விழி...!!!
காதலையெல்லாம்,
வெளிக்காட்டி விடுகிறது,
உன் காந்த விழி...!!!
விழியால் மயக்கும் ஜாலத்தை
இத்துடன் நிறுத்தி கொள்...
ஒரு உயிராவது பிழைத்து கொள்ளும்...!!
| Tweet | |||||




- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact