Monday, August 8 25 comments

நினைவுகளில் நீ...









நினைவுகளை மறந்து விடு
என்றாய்..!!!
உன் நினைவுகளை மறக்க
நினைக்கும் பொழுது
நீ கூறிய சொற்கள் 
நினைவுக்கு வருகிறதே..!!!



நீ வரும் பொழுது நான் இல்லை 
நான் வரும் பொழுது நீ இல்லை 
இருவரும் வரும் பொழுது 
நேசம் இல்லை..!!




உன் மெளனம் பல 
வார்த்தைகளை தருகிறது 
கவி எழுத...இருந்தும் 
ஏனோ மெளமாய் இருந்துவிடுகிறேன்..!!!


தேன் போல வார்த்தைகள் 
 வேப்பங்காயாய் இன்று..
சிரித்து மகிழ்ந்த காட்சி 
கானல் நீராய் இன்று.. 
நொடிக்கொருமுறை கேட்ட குரல் 
மௌனமாய் போனது இன்று..
 காயப்பட்ட மனதிற்கு 
உன் நினைவுகள் மருந்தாய் 
போனது இன்று..!!!



மறக்காமல் மறக்க நினைக்கிறேன் உன்னை

மறந்தும் நினைத்து விடுகிறேன் உன்னை..
மனதால் மறக்காமல் மறக்க முடியவில்லை உன்னை.
மறந்தும் நினைத்து விடாதே என்னை..!!


 
;