பிள்ளையாரப்பா...இந்த வெயில்ல ஜனங்க எல்லாம் என் கடையில வந்து தாகம் தீர்த்துக்கணும்..கடை கல்லாவும் நிறையணும்..சொல்லிக்கொண்டே பூவை சாமிக்கு போட்டார் குமாரசாமி. ஏம்ப்பா செந்தில் மணி ஒன்பது ஆச்சு... வியாபாரம் நடகிற நேரம் இந்த சேகரை எங்க காணோம்...?
அரை மணி நேரத்துல வந்துடறேன்னு சொன்னார் அண்ணாச்சி.. சரி சரி வர்ற ஆளுங்களை சுறு சுறுப்பா கவனி...அண்ணாச்சி கடை உபசரிப்புலதான் இந்த பழமுதிர்ச்சோலை இருபது வருஷமா நல்லா ஓடிட்டிருக்கு ஆமா...ஓடி.. ஓடி..வேலை செஞ்சாலும் பேட்டாவை ஏத்திப்புட போறியாக்கும்... எவனாவது டிப்ஸ் வைச்சான்னாக்கவே கண்ணு வைப்ப என்று மனதிற்குள் முனகிய செந்தில், பழங்களை அடுக்கி வைத்தான்.
நைந்த வேட்டியும், ஒட்டுச் சட்டையும் போட்ட கிராமத்து ஆசாமி கடைக்குள் நுழைந்து நாற்காலி நுனியில் உட்கார்ந்தவாறு செந்திலை பார்த்தான். ம் காலையில் வந்துடுச்சி பாரு சப்ப ...கிராக்கி... என்று நினைத்த செந்தில், அவன் டேபிள் அருகே வர...அதற்குள் திபு திபு வென்று காரை விட்டு இறங்கிய டிப் டாப் ஆசாமிகள் கூட்டம் மூன்று டேபிளை அடைந்தார்கள்.
ஆஹா இன்னைக்கு டிப்பு-டாப்புதான் என குஷியான செந்தில் கிராமத்தானை விட்டு விட்டு அவர்களிடம் சென்று சார் என்ன வேணும்? செயற்கை புன்னகைத்தான் எல்லாம் அவங்கவங்க மெனுவை சொல்லுங்க..ஸபாரி சொல்ல..கஸாட்டா, ப்ருட் சாலட்,பைனாப்பிள் என ஐஸ்கிரீம்களும், ஜூஸும் பறந்தன. 'செந்தில்..அங்க பாரு அவரு ரொம்ப நேரமா உட்கர்ந்துதிருக்கார்... என்ன வேணும்னு விசாரி..? உரிமையாளர் குமாரசாமி சொல்ல..."ம் என்ன வேணும்? கிராமத்தானிடம் சலித்துக் கொண்டான் அந்த ஐஸ்கிரீம் எவ்வளவுப்பா...? இருபது ரூபா..
கிராமத்தான் பாக்கெட்டை துழாவிசில்லறை கொட்டி எண்ணிப் பார்த்தான்...சரியாக இருபது ரூபாய் இருந்தது அதுவே சின்ன கப் எவ்வளவுப்பா...? கடுப்பான செந்திலு...பதினாறு ரூபா..என்றான் அதையே குடுப்பா... என்றவன் ஐஸ்கிரீமை பொறுமையாக சுவைத்தான். டிப் டாப் கும்பல் சாப்பிட்டு முடித்திருக்க, பில்முன்னுத்தி அறுபதை நீட்டினான். ஜானு..வெயிட்டருக்கு இரண்டு ரூபா சில்லறை இருக்கா...? என்கிட்ட நோட்டதான் இருக்கு ஸ்பாரி கிசு கிசுக்க...கழுத்து நிறைய நகைகளுடன் இருந்த அவள் பதிலுக்கு, சில்லறை இல்லாட்டி விடுங்க...அதுக்காக பத்து ரூபாய் தூக்கி வெச்சிடாதீங்க...கிசு கிசுத்தாள்.
கும்பல் காலியானதும் ஏமாற்றத்துடன் பிளேட்டுக்களை எடுக்க செந்தில் கிராமத்தான் டேபிளுக்கு திரும்பியதும்..அறைந்தார் போல் நின்றான்....கிராமத்தான் பிளேட்டில் டிப்சாக நான்கு ரூபாய் சில்லறைகளை விட்டுச்சென்றிருந்தான்.இருப் பதை கொடுத்து மற்றவர்களை சந்தோஷப்படுத்த நினைத்த அவன் இப்போது நாகரீகமானவனாய் தெரிந்தான்...!
இது நான் படித்த கதை எனக்கு மிகவும் புடித்து இருந்ததால் உங்களிடம் பகிர்கிறேன்
| Tweet | |||||


- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact