Wednesday, January 5 64 comments

ஒரு கடிதம் எழுதினேன்....




காதல்கடிதம் தொடர் எழுத சொல்லி இந்திரா அழைத்தார்கள் என்ன எழுதுவது எப்படி என்ன எழுதுவது தெரியவில்லை இதற்க்கு முன்பு காதல் கடிதம் கொடுத்து இருந்தாலும் ஏதாவது ஐடியா இருக்கும். அந்த அனுபவமும் எனக்கு இல்லை...சரி எப்படியாவது எழுதி வைத்து கொண்டால் பின்பு உதவும் இல்லையா அதனால் எழுதுறேன்


போனை எடுத்து திவ்யாவுக்கு போன் செய்து அழைத்தேன் என்ன என்றாள் "உன்னிடம் முக்கியமான விஷயம் உடனே உன்னிடம் பேசணும் வர முடியுமா" கேட்டேன். அதற்கு சரி வருகிறேன். என்றாள் சரி திவ்யா "நீ பீச் ஸ்டேஷன் வந்து விடு நான் அங்கு காத்திருக்கேன்" "சரி டா நான் வருகிறேன் bye" என்று போனை துண்டித்தாள்.

"வா திவ்யா எவ்வளவு நேரம் வெயிட் பண்றேன்".. 

"இல்லடா சௌந்தர் சீரியல் பார்த்துவிட்டு வருவதற்கு நேரம் ஆகிவிட்டது சரி என்ன விஷயம் சொல்" என்றாள்

"ஒன்றும் இல்லை ஒரு லவ் லட்டர் எழுதணும் அதான் உன்னை எழுத சொல்லாம் என்று வர சொன்னேன்"

"அட பாவி யாருக்கு டா"

"நான் சொல்றேன் நீ முதலில் எழுது" 



கண்மணி அன்போடு காதலன் நான் நான்
எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

என்றதும் திவ்யா முறைத்து பார்த்தாள்...நான் அந்த பக்கம் திரும்பி கொண்டேன் 
பாட்டாவே படிச்சிட்டியா? என்றேன் என்னை அடிக்கை துரத்தி கொண்டு வந்தாள்.
 என்னிடம் கோபித்து கொண்டு கிளம்பினாள். 

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
Hello! can you give me lift? aah.. Thank You!

கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
Shut up. Don’t talk to me! Hey Taxi Taxi Taxi.

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
எவளாவது ஏமாந்தவ காதுல பூ வச்சுக்கிட்டு இருப்பா அவகிட்ட போயி சொல்லு

சிந்துதடி சிந்துதடி முத்து மழைப்பூவு
அடடா என் கவியரசர் கம்பா


உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்துவிடும் நோவு
ஆஹா ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதான்

நான் இப்படி சொல்லவும் அவளுக்கு கோபம் மேலும் அதிகரித்தது "ஏண்டா ஏதோ love letter எழுதணும் சொல்லி என்னை வரசொல்லிட்டு விளையாடிட்டு இருக்கே" நான் "இந்நேரம் வீட்டில் இருந்து இருந்தா இந்நேரம் தென்றல் சீரியல் பார்த்து கொண்டு இருந்து இருப்பேன்" "விளையாடாமல் யாரை லவ் பண்றே சொல்..? 

உன்னை தான் என்றேன். வெண்டைக்காய்  மாதரி பேசாதே ஏதாவது உருப்படியா சொல் என்றாள் அதன் உன்னை லவ் பண்றேன் என்றேன். சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். சரி என் பாக்கெட்டில் எழுதி வைத்து இருந்த காதல் கடிதத்தை எடுத்து கொடுத்தேன். அதை படித்து விட்டு மீண்டும் எனக்கு அடி......என்ன எழுதி இருந்தேன் பாக்குறீங்களா "படித்தவுடன் கிழித்து விடவும்" போட்டு இருந்தேன் என்னை கிழித்து விட்டாள் ...

உலகத்தில் இருக்கும்
காகிதங்கள் போதாது
உன்மீதான 
என் காதலை சொல்ல !!!!.

டிஸ்கி : சென்ற பதிவில் நான் மங்குனியை பற்றி எழுதியதாக எல்லாம் நினைத்து கொண்டார்கள் அது வெறும் கற்பனையே 



 
;