Tuesday, August 30 13 comments

குட்டிக்கு ஒரு வாழ்த்து..





அன்பில் விளைந்த 
செல்ல மகனுக்கு
ஆயிரம் ஆயிரம்...
அன்பு முத்தங்கள்...

எத்தனை நிமிடங்கள்
உன்னுடன் இன்பமாய்
கழித்து இருக்கிறேன்..
என்னுடனே எப்போதும்
இருந்து கொண்டு..
எத்தனை சேட்டைகள் 
அத்தனையும் எனக்கு
உன் அன்பின் அர்த்தங்கள்!

முத்தங்கள் ஆயிரம் கொடுக்க 
உன் செல்ல கடிகளே..
ஆயிர ஆயிர ஆண்டுக்கு 
அன்பை சொல்லும்...!

மலர்கள் பூத்து குலுங்கும்
உன் புன்னகையை பார்த்தது !
உன் குறும்பை பார்க்க 
நேரத்திற்கே நேரம் 
போதவில்லையாம்!!!!

கத்திக் கொண்டே 
ஓடி வந்து என் கழுத்தைக்
கட்டிப்பிடித்து ஊஞ்சாலடும்
என் உற்சாக ஊற்றே...
என் சுவாசத்தின் காற்றே!

முன்னிரண்டு பற்களையும்
காட்டி நீ சிரிக்கையில்
எழுதிய என் எல்லா கவிதைகளும்
காகிதங்களை விட்டு
உன்னிடம் ஓடோடி வரும்
விளையாடிக் களிக்க...!

என் இரண்டு வயது குறும்பே
ஆயுள் முழுதும் எனக்கு
இனிக்கப் போகும் கரும்பே...
(சித்)அப்பா என்று நீ 
சொல்லும் போதெல்லாம்
நான் மீண்டும் மீண்டும் 
பிறக்கிறேனடா.

வண்ணத்துப் பூச்சியின் 
சிறகடிப்பினை யாரேனும் 
வாழ்த்த முடியுமா என்ன?
உன் துறு துறு அன்பில்
திளைத்துக் கிடக்கிறேன்...
வாழ்த்துக்களை எப்போதும்
என்னுள் இறைத்தபடி...!






 
;