Tuesday, August 9

அடைமழை காதல்.. நித்தியா (சிறுகதை)

 
பதிவுலகில் தொடர்பதிவு என்பது பரிட்சயம். இங்கு நாங்கள் நண்பர்களாகிய கூர்மதியன் ,ரேவா, நான் ஆகிய மூவரும் ஒரு முயற்சி செய்திருக்கிறோம். ஒரே தலைப்பை எடுத்து யார் என்ன எழுதபோகிறோம் என்று சொல்லிக்கொள்ளாமல் தங்கள் மனதுக்கு படும் கதை,கவிதை,கட்டூரை என்று எதுவாக வேண்டுமானாலும் வடிவமைக்கலாம் என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தோம். இதன் படி ''அடைமழை காதல்'' என்னும் தலைப்பில் எங்கள் கண்ணோட்டத்தில் பதிவு எழுத ஆரம்பித்தோம். அதன்படி கீழே தொடர்வது என்பதிவு..!


"மணி எட்டு ஆச்சு இந்த பையன் இன்னும் எழுந்திருக்காம இன்னும் தூங்கிட்டு இருக்கான், டேய் ஆதி .. எழுந்திரிடா" ஆதித்தியா அம்மாவின்...குரல் சமையல் அறையில் இருந்து படுக்கை அறை வரை ஒலித்தது ..அம்மாவின் குரல் கேட்டும் இன்னும் படுக்கையை விட்டு எழவில்லை, டேய் எழுந்திரி வேலைக்கு போக டைம் ஆச்சு.. என தட்டி எழுப்பியவுடன் தான் அவனுக்கு விடிந்தது, இது தினமும் அவனின் வாடிக்கை தான். .

குளிச்சு முழிச்சி  பரபரவென வந்தவன், நேரமாச்சி இன்னுமா சாப்பாடு கட்டுறே என அம்மாவை கடிந்து கொண்டான். "எழுந்தது லேட்டு...... என்ன கேள்வி கேக்குறீயா..??  உனக்கெல்லாம் ஒருத்தி வருவா அப்போ கஞ்சிதண்ணி கூட இல்லாம போவே அப்போ தெரியும் டா என்ன பத்தி" "என்னம்மா காலையியே உன் புலம்பல ஆரம்பிச்சிட்டியா..?? சரிம்மா நான் போயிட்டு வருகிறேன்" என்று பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றான்,  நேரம் சரியாக 8.45 அவன் செல்லும் பஸ் வந்து நின்றது. ஒரு மணி நேர பயணம், எப்போதும் பயணத்தின் போது புத்தகம் படிப்பதும், கவிதைகள் எழுதுவதும் அவன் வேலை, வழியில் நடப்பதையெல்லாம் பார்த்து கவி எழுதுவதே அவன் பொழுது போக்கு. 
வழக்கம் போல ஜன்னல் ஓரங்களில் பார்த்து கொண்டு வந்த அவன் திடீரென்று  இறங்க முற்பட்டான் பூக்களை கோர்க்கும் கைகளை பார்த்து, அவன் வழக்கம்போல் இறங்கும் ஒரு ஸ்டாப் முன்பாகவே, பேருந்து ஓடிக்கொண்டு இருக்கும் பொழுதே இறங்கி கிழே விழுந்தான். வண்டியில் சிக்கியிருக்கவேண்டியது எதோ தப்பித்து கொண்டான், அச்சமயம் கூட அவனை கவிதைகளே ஆக்கிரமித்தது..

தேவதையை பார்க்கையில் மரணத்தை 
தழுவி இருப்பேன்..!!
பாவம் எமன் இவளை பார்த்திருப்பான் 
போல வந்தவேலையை விட்டு 
வேறுவேலையில் இருக்கிறான்..!!

  

கீழே விழுந்து சட்டேன எழுந்தான், அவள் பூ கடை நோக்கி நடந்து ஓரமாக நின்றான், அடி ரொம்ப பட்டுடுச்சா கொஞ்சம் தண்ணி குடிக்குறீங்களா..??மெல்லிய குரல் கேட்க சட்டென திரும்பி பார்த்தான். அவள் முகம் பார்த்து ஒன்றும் பேசாமல் நின்று கொண்டு இருந்தான், ஏங்க உங்களை தான், அவனுக்கு அவள் விசாரித்தது பிடித்து இருந்தது, அவள் கரிசனக்காரி என புரிந்து கொண்டான். 
அதெல்லாம் ஒன்னுமில்லைங்க எனக்கு வேலைக்கு டைம் ஆச்சுங்க நான் போயிட்டு வரேன் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் கிளம்பிம்பினான். வேலையில் அவன் கவனம் இல்லாமல் அவள் நினைவாகவே இருந்தான், ஒரு ஐந்து நிமிடம் பார்த்ததற்கே வா இப்படி..? என தனக்குள்ளேயே கேள்வி கேட்டு கொண்டான், மீண்டும் அவளை பார்க்கவேண்டுமென எண்ணினான், இப்போதே போய் பார்க்கலாமா அல்லது வேலை முடித்து போகலாமா என யோசித்தான், வேலை முடித்தே போகலாம் என முடிவெடுத்து அரைமனதுடன் வேலையை தொடர்ந்தான். பர பரவென வேலையை முடித்து அவளை பார்ப்பதற்காக சென்றான்..

அவள் வருவதற்கு முன்பே காத்திருந்தான், 5 நிமிடத்திற்கு பின் வந்தாள், பூக்களின் நந்தவனமே வந்து கொண்டு இருப்பதாக, அவன் மனம் சொல்லியது, தூரமாக தெரிந்த அவள் உருவம், பக்கம் வந்து கொண்டே இருந்தது, அவள் பக்கம் வரவர இவன் பார்வை விரிவானது. அவள் இவனை பார்க்க வில்லை அவளின் வேலையில் மும்முரமாக இருந்தாள், அவளின் அழகை ரசித்துக்கொண்டு, மனதிலே வர்ணித்து கொண்டுயிருந்தான், 

அவளின் நெற்றியில் குங்குமம், திருநீர், மஞ்சள் என ஒன்றன் கீழ் ஒன்றாக அவளின் நெற்றியை அலங்கரித்து இருந்தது, படிந்து வாரிய அவள் கூந்தல், அதில் ஒற்றை சாமந்தி பூ, பூவிற்கே பூவைக்கும் அதிசயம் இங்கு தான் நடந்து இருக்கிறது என அவன் மனதிற்குள் வரித்து கொண்டே சென்றான், 

பெண்ணே நீ சூட்டும் 
பூக்கள் தவிர 
மற்ற அனைத்தும் வாடி 
விடுகிறது நீ சூடா ஏக்கத்தில்..!!!

என கவிதையை நினைத்துக் கொண்டே வீட்டிற்கு கிளம்ப நினைத்தான், கிளம்பும் முன் அவளிடம் ஏதாவது பேச வேண்டும் என நினைத்தான், அவளின் திருத்தப்படாத புருவங்களை பார்த்து மடிந்து வீடு நோக்கி சென்றான். 


மறுநாள் வழக்கம் போல வேலைக்கு சென்றான், அவளின் பேருந்து நிலையம் வந்தது... பேருந்தும் நின்றது... அவளை இவன் பார்ப்பதற்கு முன், அவள் இவனை பார்த்து கொண்டு இருந்தாள், இவன் பார்வை பட்டவுடன் அவள் இதழ் புன்னகையால் மலர்ந்தது, ஆதித்தியாவிற்கு சொல்ல முடியாத ஆனந்தம் அவள் இன்னும் நம்மை நினைவில் வைத்திருக்கிறாளே, அவள் கண்கள் ஏதோ கேள்விகளை கேட்க இவனுக்கு அது புரிவதற்குள் பேருந்து அங்கிருந்து கிளம்பியது, இறங்கிவிடலாம் என எண்ணினான் வேண்டாம் மீண்டும் அவள் முன் விழுந்து விட போகிறோம் என அத்திட்டத்தை கை விட்டான்.      


இன்றைய தினம் அவனுக்கு வேகமா நகர்ந்து விட்டது அவளின் புன்னகையால். மீண்டும் மறு நாள் அதே போல் பேருந்து நிலையத்தில் அவள் காத்திருக்க தொடங்கினாள், பேருந்தை பார்த்தவுடன் சட்டென ஒரு சாமந்தி பூவை எடுத்து தலையில் வைத்து கொண்டாள், அவளின் முகம் இன்று மேலும் பிரகாசமாய் இருந்ததை கவனித்து விட்டான், பேருந்தில் இருந்தே சைகையில் ஏதோ கேள்வியை ஆதித்தியா கேட்க... அவள் என்ன வென்று கேட்டாள், அவளுக்கு இவன் சைகை ஒன்றும் புரியவில்லை, இருவரின் மனதோடு பேருந்தும் நகர்ந்தது.

மறுநாள் ஆதித்தியா அவளிடம் பேசவேண்டும் என முடிவெடுத்தான், பேருந்து நிற்பதற்குள் இறங்குவதற்கு தயாராகிவிட்டான், அவளின் கண்கள் பேருந்து ஜன்னலை ஆக்கிரமித்து இருந்தது, இவள் முன் வந்து நிற்கவும் வெட்கப்பட்டு கீழே குனிந்து கொண்டாள். இவன் பேசுவதற்கு வார்த்தைகளை தேடிக்கொண்டுயிருக்க, சட்டென அவளிடமிருந்து கேள்வி வந்து விழுந்தது..!!!

நேத்து நீங்க என்னமோ சைகை காட்டி கேட்டீங்க என்ன கேட்டீங்க...??? 

சில நிமிடம் மௌனமாய் நின்றான்... 

நீங்க அன்னைக்கு என்ன பார்த்து ஏன் சிரிச்சீங்க..?? அத பத்தி கேட்டேன்.. சரி சொல்லுங்க ஏன் சிரிச்சீங்க..?? 

நான் எதுக்கோ சிரிச்சேன் ஏன் உங்க கிட்ட சொல்லனுமா என்ன..அதெல்லாம் சொல்ல முடியாது என மீண்டும் சிரிக்க.. 

இப்போ சொல்ல போறீங்களா இல்லையா உங்க பேர் என்ன..?? என சிறு கோபத்துடன் கேட்க..

என் பேரு நித்தியா... நீங்க நினைக்குறது எதுவும் நடக்காது...!!!

என் பேரு ஆதித்தியா, நான் என்ன நினைச்சேன் உனக்கு எப்படித் தெரியுமென ஆதித்தியாஅடுத்த கேள்வியை கேட்க..


 போங்க போங்க அப்பறம் வாங்க பதற்றத்துடன் சொல்ல அவள் பதற்றத்தை கண்டு ஆதி சற்று நகர்ந்து சென்றான்... 

அவளிடம் யாரோ ஒருவன் வந்து வாக்குவாதம் செய்து பணம் கேட்டு கொண்டுயிருக்க இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. அவள் கண்கலங்குவதை பார்த்து வந்தவனிடம் என்னவென்று கேட்டுவிடலாம் என்ன நினைத்தான்,  சண்டை போட்டால் ஏதாவது நினைத்து விடுவாளோ என அமைதியாக இருந்து விட்டான்.

வந்தவன் அவளிடம் இருந்த பணத்தை எல்லாம் வாங்கி பிடுங்கி சென்று விட்டான்...

சிறிது நேரம் மௌனமாகவே கழிந்தது...

அவளின் கண்ணீர் தொடர்ந்து கொண்டுயிருந்தது... 

யார் அவர் ஏன் உன் பணத்தை பிடுங்கி சென்றார்..???

அவர் என்னுடைய அண்ணன்.... இது எப்போதும் நடப்பது தான் குடிப்பதற்கு என்னிடம் பணம் வாங்கி செல்கிறார், அவருக்கு தெரியாமல் பணத்தை மிச்சப்படுத்தி தான் நானே பூ விற்று வருகிறேன், இன்னும் ஆறு மாதம் தான் இங்கு இருப்பேன் மீண்டும் வேலைக்கு ஊருக்கு எங்க அண்ணன் என்னை அனுப்பி விடுவார் என்றாள். 

என்ன இன்னும் ஆறு மாதம் தான் இருப்பியா..?? ஏன் இங்க செய்ற வேலை என்ன ஆச்சு..??  

நித்தியா தொடர்ந்தாள்..

நான் ஏற்கனவே பத்து வருடமாக ஊரில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தேன், முன்பே எங்க அண்ணன் இரண்டு லட்சம் வாங்கி என்னை வேலைக்கு அனுப்பி விட்டார், இப்போது மீண்டும் அங்கேயே அனுப்பி விடுவார், அதனால் தான் சொன்னேன், நீங்க நினைப்பது நடக்காதென்று, உங்களை பார்க்கும் பொழுது நெடுநாள் பழகியது போல் ஒரு உணர்வு இருந்தது அதான் உங்களை பார்த்தவுடன் சிரித்தேன். என்றாள் எனக்கும் எல்லாரையும் போல் இருக்க வேண்டுமென்று ஆசை தான் ஆனால், என்னால் முடியாது என் வறுமை தான் காரணம், இங்கு இத்தனை ரோஜா இருந்தும் என்னால் எடுத்து வைத்து கொள்ளமுடியாது.. இது தான் என் நிலைமை. 


அவளின் நிலைமைகளை சொல்ல சொல்ல அவன் மனதில் உறுதியானது அவனின் காதல், இவளையே மணக்க வேண்டுமென எண்ணி கொண்டான், இன்று முதல் உன் நிலைமை மாறப் போகிறது கவலை படாதே உனக்கு நான் இருக்கிறேன். எனக்கு வேலைக்கு நேரமாகிறது நான் நாளைக்கு உனக்கு ஒரு நல்ல செய்தியோட வருகிறேன் என கிளம்பி சென்றான்.  அவனின் பேச்சுக்கள் நித்தியாவிற்கு ஆறுதலாக இருந்தது கண்ணீரை துடைத்து கொண்டே அவன் செல்வதை பார்த்து கொண்டு இருந்தாள்..


வேலை முடிந்து ஆதித்யாவின் வீட்டில்...

அம்மா நான்  திடீரென்று கல்யாணம் பண்ணிகிட்டா என்னமா சொல்வீங்க..???

என்னடா இப்படி குண்ட தூக்கி போடுறே..?? அப்படி ஏதும் கல்யாணம் செய்திட்டியா என்ன..?? 

அப்படியெல்லாம் இல்லமா கேக்குறேன் நீங்க சொல்லுங்க நான் ஒரு பெண்ணை காதலிக்குறேன் நீங்க என்ன செய்வீங்க..??? 

என்ன என்னடா செய்ய சொல்றே, எனக்கு இருக்குறது ஒரே பையன், அதனால உன் ஆசை தான் எனக்கு முக்கியம் அதுவுமில்லாம அது உன் வாழ்க்கை நானா கடைசி வரைக்கும் வர போறேன் உனக்கு பிடிச்சு இருந்தா அவங்க வீட்டுல பேசி உனக்கு கல்யாணம் செய்து வைப்பேன்... ஏண்டா ஏதாவது பெண்ணை காதலிக்குறீயா..??

ஆமா அம்மா, ஆனா நான் இன்னும் அந்த பொண்ணு கிட்ட சொல்லல.. அந்த பொண்ணு ரொம்ப கஷ்டப் படுறாமா.. நீ என்னைய வளர்க பூ கடையெல்லாம் போட்டியே அதே மாதரி அந்த பொண்ணும் பூ விக்குறாமா, அவங்க அண்ணன் ஒரு குடிகாரன் என அவளை பற்றியே.. பேசிக்கொண்டு இருந்தான் ஆதித்யா. 

நீ தாம்மா அவங்க வீட்டுல பேசி கல்யாணம் செய்து வைக்கணும்

சரி டா நான் நாளைக்கு அந்த பொண்ண பாக்குறேன்.. எப்படி இருக்கானு அப்பறம் அவங்க வீட்டுல பேசுறேன் 

அம்மானா அம்மா தான் என கொஞ்சி விட்டு சென்றான். 

மறுநாள் அவளிடம் அம்மாவிடம் பேசியதையெல்லாம் சொல்லி தன் காதலை சொல்லி விடலாம் என முடிவெடுத்தான். 

காலை வழக்கம் போல் வேலைக்கு கிளம்பினான், படு வேகமாக அம்மா நான் கிளம்புறேன் என சொல்லி முடிக்கையில் நான் நைட் வரேன் எனக்கு அந்த பொண்ணை காட்டு என அவன் அம்மா சொல்ல சிரித்த முகத்துடன் சரியென கூறிவிட்டு பேருந்து நிலையம் நோக்கி சென்றான். 


ஏதோ நற்செய்தி சொல்வேன் என்றேவுடன் அவளிற்கு அதை அறிய ஆவலாய் காத்திருந்தாள், பேருந்தில் சென்று கொண்டுயிருக்கும் பொழுதே என்ன பேசவேண்டுமென தீர்மானித்து கொண்டான், பேருந்து நிலையம் வந்தது அவன் இறங்கினான், இருவரின் முகமும் ஒன்று போல் மலர்ந்தது, அவள் முன் சென்று நின்றான், 

என்ன நல்ல விஷயம் சொல்ல போறீங்க..?? சீக்கிரம் சொல்லுங்க என,, அவள் கேட்க இவன் கொஞ்சம் குறும்பு செய்ய நினைத்தான்.

சரி சரி எனக்கு ஒரு ரோஜா பூ கொடு ஒரு ரோஜா எவ்வளவு..??? 

சட்டென் அவன் முகம் பார்த்து யாருக்கு பூ..?? என்றாள்..

நீ முதலில் ரோஜா கொடு..

அவள் ரோஜா வை எடுக்க சென்றாள் 

என் காதலிக்கு கொடுக்குற பூ நல்லா பூ வா கொடு என்றதும்.. அவளது கண்ணீர் ரோஜா மீது பட..

ரோஜாவை அவள் எடுத்து கொடுக்க...!!! 

அவன் மீண்டும் அவளுக்கே கொடுத்தான்... உனக்கு தான் இந்த ரோஜா .. 

அவளின் கண்ணீர் அதிகமானது,,,  அவளின் கண்ணீர் அவன் மீது காதலை உறுதி படுத்தியது..

நீ என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா..?? ..

இதற்கும் அவள் கண்ணீரே பதில் கூறியது.. கண்ணீரை துடைத்து கொண்டே கேள்வியை கேட்டால் இதுவெல்லாம் நடக்குமா..?? 

நீ ஏன் கவலைபடுறே நான் எங்க அம்மாவிடம் சம்மதம் வாங்கி விட்டு தான் வந்திருக்கிறேன். உங்க அண்ணனிடம் சொல்லி பேச சொல்கிறேன் என்றான், அவள் வார்த்தைகள் வராமல் நின்றுகொண்டு இருந்தாள். 

வேலைக்கு சென்று விட்டு உன்னை பார்க்க வருகிறேன் அம்மா உன்னை பார்க்க வேண்டுமென்றார்கள், நீ ரெடியா இரு என்றதும் "என்ன அத்தை வாரங்களா" என முகம் மலர்ந்து அவளுக்கு. சரி ரோஜாவை தலையில் வைத்து கொள்,  சரிங்க நீங்க போயிட்டு வாங்க என்றாள், அவள் வாழ்க்கையில் இன்று தான் மிகவும் சந்தோசமான நாள் அவளுக்கும் வாழ்க்கை, குடும்பம், பாசம் எல்லாம் கிடைக்க போகிறதென்று கனவு கண்டு கொண்டு இருந்தாள். 


ஆதி அம்மாவின் வருகைக்கு எதிர்பார்த்து காத்திருந்தாள்.. வருகையை பார்த்து பார்த்து கழுத்து வலியே வரும் அளவிற்கு திரும்பி திரும்பி பார்த்து கொண்டு இருந்தாள். 


அம்மாவும் மகனும் ஒன்றாக வருவதை பார்த்து... எழுந்து நின்றாள். ஆதி இவளை நித்தியா என அறிமுகம் செய்து வைக்க... ஆதித்யாவின் அம்மா .

எவ்வளவு அழகா இருக்கா டா பொண்ணு நல்லா தான் டா இருக்கா, ஆதித்யாவிற்கு மிகவும் சந்தோசமாய் இருந்தது .. 

உன் பேர் என்னமா ...??

நித்தியா என அவள் கூற..?? 

அம்மா நான் ஒன்னு உங்களை கேட்கலாம என நித்தியா கேட்க..

என்னம்மா கேளு 

நான் உங்களை அம்மான்னு கூப்பிடலாமா என்றாள்.. எனக்கு நினைவு தெரிந்து நான் யாரையும் அம்மான்னு கூப்பிட்டதே கிடையாது.. உங்களை அப்படி கூப்பிடலாமா.??


இந்த வார்த்தையை கேட்டதும் ஆதித்யாவின் அம்மாவிற்கு சொல்ல முடியாத சந்தோசத்திற்கே சென்று விட்டார், தனக்கு நல்ல மருமகள் கிடைக்க போறா என்ற ஆனந்தம் அவர் முகத்தில் தெரிந்தது...

நீ தாராளமா அப்படியே கூப்பிடுமா எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்குமென பேசி கொண்டு இருக்கும் போதே நித்யாவின் அண்ணன் வந்து நின்றான்   ஏண்டி பூ விக்காம அரட்டை அடிச்சிட்டு இருக்கியா..?? என கடிந்து கொண்டான், 

ஆதித்யாவின்அம்மா யாரென கேட்டு தெரிந்து கொண்டு பேச்சை தொடங்கினார்... 

உங்க தங்கச்சியும் என் பையனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க நாம பேசி அவங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் நீங்க என்ன சொல்றீங்க என்ன கேள்வி கேட்க 


நித்தியாவின் கன்னத்தில் பளாரென அறைந்து "ஏண்டி உன்னை பூ விக்க சொன்னா ஒருத்தனை பிடிச்சுட்டு வறீயா"..?? மீண்டும் அடிக்க முயலும் போது ஆதித்யாவின் அம்மா தடுத்து ஏங்க அடிக்குறீங்க .....இப்போ என்ன நடந்து போச்சு... நான் தானே பேசுறேன்.. உங்களுக்கு சம்மதமான்னு சொல்லுங்க... 

என்னால கல்யாணம் பண்ணி தரமுடியாதுங்க... 

ஏன் காரணம் சொல்லுங்க ஏன் முடியாது ...?

"இவள நான் வீட்டு வேலைக்கு அனுப்ப போறேன் அங்க அனுப்பினா எனக்கு மூணு லட்சம் தருவாங்க அதை விட்டுட்டு இவளுக்கு நான் செலவு பண்ணி கல்யாணம் செய்து வைக்கணுமா..?? அதெல்லாம் முடியாது உங்களுக்கு இந்த மாக ராணி தான் வேணும்னா எனக்கு மூணு லட்சம் கொடுத்து கூப்பிட்டு போங்க"

நித்தியா ஒன்றும் செய்யமுடியாமல்  நின்று கொண்டிருந்தாள்...

எவ்வளவு பணம் வைச்சு இருக்க தா டீனு மீண்டும் அடிக்க.. 

ஆதித்யாவின் அம்மாவிற்கு கோவம் வர இனி மேல் அவ மேல கை வைச்ச நடக்குறதே வேற உனக்கு தேவை பணம் தானே பணத்த கொடுத்திட்டு என் மருமகள கூப்பிட்டு போறேன் என சொல்லி நித்தியாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றனர்..

வீட்டிற்கு சென்றதும் ஆதித்யா என்னமா அப்படி சொல்லிடீங்க நம்ம கிட்டஅவ்வளவு பணம் இல்லையே என்ன செய்வோம்... என கேள்வி கேட்டான்,  பின்னா என்னப்பா நம்ம வீட்டு மருமக, அவள நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வந்து சந்தோசம வைப்போம். என் கிட்ட இருக்க நகையை வைச்சா ஐம்பதாயிரம் கிடைக்கும் ஊர்ல இருக்க இடத்தை அடகுவச்சா 2 லட்சம் மேல கிடைக்கும், நீ ஊருக்கு போய் அந்த வேலைய பார்த்து காசு வாங்கிட்டு வா, நாம நித்யாவை கூப்பிட்டு வருவோம், 

மறுநாள் ஊருக்கு கிளம்பும் முன் நித்தியாவை பார்த்து விட்டு போகலாம் என நினைத்து அவளை பார்க்க சென்றான் அவள் முகம் முழுவதும் காயமாக இருந்தது, என்ன நடந்திருக்குமென்று புரிந்து கொண்டான், நீ கவலை படாதே இன்னும் ரெண்டு நாள் தான்.. உன்னை எங்க வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என சொல்லி விட்டு சென்றான்.. பத்திரமா போயிட்டு வாங்க என்றாள்..

இரண்டு நாளில் அவளை கை பிடிக்க போகிறோம் மென்று ஆனந்தமாய் ஊருக்கு கிளம்பினான், பணம் வசூலித்து பத்திரமாக வீடு வந்து சேர்ந்தான், சந்தோசமாக அம்மாவும் மகனும் பணம் எடுத்து கொண்டு அவளை பார்க்க அவள் வீட்டுக்கு சென்றனர்.. அவளின் வீட்டு முன் ஒரே கூட்டமாக இருந்தது என்னவென்று பதறி போய் ஆதித்யாவின் அம்மா பார்க்க, அவள் சடலமாக கிடந்தாள் ஆதித்தியா ஓடி வந்து கதறி அழுதான். இவையெல்லாம் அவன் அண்ணனின் செயல் தான், என கோவத்துடன் ஆதித்யா அவன் மீது பாய... அனைவரும் தடுக்க, அவளை பார்க்க சென்றான், முகமெல்லாம் காயமாக இருந்தது, அவளின் நிலையை கண்டு கதறி அழுதான்,  உனக்கு தேவை பணம் தானே ஏன் இப்படி செய்தாய் என அவனை கேட்டு கதறினான்..

அவன் அம்மாவிடம் சென்று.. 

"அம்மா நான் அவளை திருமணம் செய்துகொள்கிறேன் வாக்கு கொடுத்து இருக்கேன்ம்மா.. இப்போ நான் அவளுக்கு தாலி கட்டுறேன்ம்மா நீங்க சம்மதம் தாங்கம்மா" சொல்ல.. "சரிப்பா நான் உனக்கு சம்மதம் தரேன்" ஒரு மஞ்சள் கயிறை வாங்கி வந்து தாலி கட்ட சொல்லி சொன்னார் ஆதித்யாவின் அம்மா.. தாலி கட்டும் போது அவளின் அண்ணன் வழி மறைத்து நான் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு நீ தாலியை கட்டிக்கோ என சொல்ல..
பணத்தை அவன் முகத்தில் தூக்கி எறிந்தார் ஆதித்யாவின் அம்மா.. அவன் தாலி கட்ட தலையை தூக்க தலையெல்லாம் ரத்தமாக இருந்தது.. உன் ரத்தத்தை கொடுத்து நீ என்னுடன் சேர வேண்டுமா இதற்கு நீ என்னுடன் சேராமலே இருந்திருக்கலாம்.. உன் ஆசை இப்பொழுது நிறைவேறி விட்டது..... உன்னுடன் சேர்ந்து வாழவேண்டுமென்ற என் ஆசையை யார் நிறைவேற்றுவார்கள்..?? என கதறினான்.தம்பி கூர்மதியன் பதிவை பார்க்க 


ரேவா வின் பதிவை பார்க்க 23 comments:

எவனோ ஒருவன் said...

கதை நல்லா இருந்துச்சு. அவங்க ரெண்டு பேரும் சேரணும்னு ஆசைப் பட்டேன், பாவம் இப்படி நித்தியாவை சாகடிச்சுட்டீங்களே :-(

இந்த வரிகள் மிக மிக அருமை :-)

தேவதையை பார்க்கையில் மரணத்தை
தழுவி இருப்பேன்..!!
பாவம் எமன் இவளை பார்த்திருப்பான்
போல வந்தவேலையை விட்டு
வேறுவேலையில் இருக்கிறான்..!!

ஆதி என்ன வேலை பார்க்கிறார் என்றும் சொல்லி இருக்கலாம்!

ஆமினா said...

காதல் அம்மா செண்டிமெண்ட் அழுகை சோகம் எல்லாம் கலந்த கலவை

அருமையாக இருந்துச்சு

இராஜராஜேஸ்வரி said...

பெண்ணே நீ சூட்டும்
பூக்கள் தவிர
மற்ற அனைத்தும் வாடி
விடுகிறது நீ சூடா ஏக்கத்தில்..!!!//

ஏக்கமாய் முடிவும்...

இந்திரா said...

மனதை கனக்கச் செய்த காதல்..
(கொஞ்சம் பெருசாயிட்ட) சிறுகதை நல்லாயிருக்கு.

மாலதி said...

அருமை

மாலதி said...

அருமை

உணவு உலகம் said...

கதையும் நடையும் அழகா இருக்கு. முடிவு சோகத்தில் ஆழ்த்திவிட்டது.

ரேவா said...

தேவதையை பார்க்கையில் மரணத்தை
தழுவி இருப்பேன்..!!
பாவம் எமன் இவளை பார்த்திருப்பான்
போல வந்தவேலையை விட்டு
வேறுவேலையில் இருக்கிறான்..!!


கவிதை சூப்பர் சௌந்தர்

ரேவா said...

பெண்ணே நீ சூட்டும்
பூக்கள் தவிர
மற்ற அனைத்தும் வாடி
விடுகிறது நீ சூடா ஏக்கத்தில்..!!!

சௌந்தர் என்ன கவிதையில பயங்கரமா கலக்குற

ரேவா said...

சகோ கதையும் கதைக்கான திருப்பமும் அழகு, இடையிடையே கதையோடு கலந்த கவிதை ரசிக்கும் படியாய் இருந்தது...ஆனாலும் ஏன் சோகமான எண்டிங்..

Unknown said...

நல்ல கதை. முடிவு தான் சோகம். எழுத்து நடை அருமை..
எல்லாத்தையும் விட
கவிதை அருமைங்க...
வாழ்த்துக்கள்.

கொக்கரக்கோ..!!! said...

கதை அறுமையாக வந்திருக்கிறது சௌந்தர். வாழ்த்துக்கள்.

ஷர்புதீன் said...

சத்தியமா முழுவதையும் படிச்சேன்! கமேண்ட போனுல சொல்லுறேன்!

vidivelli said...

பெண்ணே நீ சூட்டும்
பூக்கள் தவிர
மற்ற அனைத்தும் வாடி
விடுகிறது நீ சூடா ஏக்கத்தில்..!!!

அழகான கவிதை..

நல்ல கதை..
பதிவுக்கு வாழ்த்துக்கள்...

http://sempakam.blogspot.com/

Jeyamaran said...

இடையில் கவிதைகள் அருமை..........
சோகமான முடிவு என்ன செய்வது காதல் என்றால் சோகமான முடிவுதான்.
மனதை உருக்கிய கதை வாழ்த்துகள் தோழா
நிலாரசிகன்

ஆனந்தி.. said...

அழுகாச்சி..அழுகாச்சியா வருது...:-(( கவிதையும் சோகமா எழுதுற..கதையுமா...;-(( அடி பிச்சு...பிச்சு....:-))

Unknown said...

எமன் கவிதை மிக ரசித்தேன். முடிவு எனக்குப் பிடிக்கவில்லை.

Chitra said...

சாரி..... இன்னைக்கு ஆஜர் போட லேட் ஆயிடுச்சு. ஹி,ஹி,ஹி,ஹி ....

Harini Resh said...

ம் தேவதைகள் வாழப் பிறந்தவர்கள் அல்ல போல :'(
கதையும் இடை இடையே கவிதையும் கலக்கல் சகோ
வாழ்த்துக்கள் :)

'பரிவை' சே.குமார் said...

சிறுகதை நல்லாயிருக்கு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல கதை... கவிதைகள் அதை விட நல்லா இருக்கு..:)

விவேகானந்தன் said...

அருமை தோழரே.. கவிதையாய் ஒரு கதை

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

வாழ்த்துக்கள்

 
;