Tuesday, November 29

சரிந்து கிடந்தேன்...





விதை போட்டவன்
சென்றுவிட
சிலரால் மிதி பட 
சிலர் மேய்ந்து விட 

அவளின் கண்ணீர் பட 
எதோ துளிர்த்து விட்டேன்..!!!

என் நிழலில் பலரிருந்தும்
நான் வெயிலில் நிற்பதை 
காணமல் சென்றனர்..!!!

இளைப்பாறும் பறவைகளும் 
எச்சமிட்டே செல்கின்றன...!!

நேசம் கொண்டு 
பலர் கல்லெறிய..
கண்ணீருடன் கனி 
அமுதை கொடுக்க...

கனியை உண்டு 
என் மீதே தூக்கி
எறிகிறான் விதையை..!

தாக்குபிடிக்க முடியா
காற்று தாக்கி 
சரிந்து கிடந்த என்னை 
தூக்கி சென்று...  

சிலர் மிதித்து கொண்டிருக்க 
சிலரோ தீ மூட்டிய 
பசியாறினர்..!!

15 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

கவிதை எல்லாம் கலக்கலா இருக்கு.. ஆனா ஏன் இவ்ளோ சோகம்ஸ்??? :)

TERROR-PANDIYAN(VAS) said...

கவிதை கவிதை.. :) யார் எழுதி இருந்தாலும் நல்லா இருக்கு.

சௌந்தர் said...

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…
கவிதை எல்லாம் கலக்கலா இருக்கு.. ஆனா ஏன் இவ்ளோ சோகம்ஸ்??? :)///

நான் சோகமா இல்ல கவிதை தான் அப்படி :)))

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...
கவிதை கவிதை.. :) யார் எழுதி இருந்தாலும் நல்லா இருக்கு.//

நான் தான் எழுதினேன் :)) ரொம்ப தேங்க்ஸ் :))

ஷர்புதீன் said...

என்னவோ போ மாதவா.... அசத்துரே

Jeyamaran said...

Nanba enna aachu yen intha sogam...........

பாலா said...

மரங்களும் மனிதர்களும் ஒரே மாதிரிதான்.

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தல் கவிதை....!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். அருமையான கவிதை. நன்றாக இருந்தது. தங்களின் பல பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"

Suresh Subramanian said...

nice kavithai... please read my kavithaigal in www.rishvan.com

யுவராணி தமிழரசன் said...

அருமையான பதிவு!
இதயத்தின் வலியை அழுத்தமாய் பதித்திருக்கிறீர்கள்!
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

விச்சு said...

வலைச்சரம் மூலம் வந்து இப்போதுதான் படித்தேன். வலி நிறைந்த கவிதை.

அனைவருக்கும் அன்பு  said...

/என் நிழலில் பலரிருந்தும்
நான் வெயிலில் நிற்பதை
காணமல் சென்றனர்..!!!//

இந்த வரிகளில் உண்மை என்னை திடுக்கிட வைத்தது ..............அருமையான வார்த்தையாடல்

வலைச்சரம் மூலம் வந்தேன்

வெற்றிவேல் said...

ஒரு மரத்தின் கதையை கவிதையாய் அழகாக கூறியுள்ளீர்கள்...

 
;