"நந்தலாலா" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட நான் பார்த்து இருக்க மாட்டேன், நந்தலாலா படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று காத்திருந்தேன். நந்தலாலா படத்தை பார்க்கும் பொழுது இருந்த உணர்வுகள், ஜப்பானிய மொழியில் எடுக்கப்பட்ட படத்தில் பார்த்தால், அந்த உணர்வுகள் இருக்குமா என தெரியவில்லை.
தன்னை விட்டு பிரிந்து சென்ற தாயை ஒரு முறை பார்த்து, கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என அம்மாவை பார்க்க துடிக்கும் சிறுவன் அகி, பள்ளி சுற்றுலாவுக்கு செல்லாமல், தன் தாயை சந்திக்க செல்கிறான் சிறுவன் அகி. மறுபக்கம் மனநல மருத்துவ மனையில் தன்னை விட்டு சென்று, மீண்டும் ஒரு தடவை கூட பார்க்க வராமல், இருந்த தன் தாயை சந்தித்து கன்னத்தில் ஓங்கி அறையை வேண்டும் என்று மனநல மருத்துவ மனையில் இருந்து தப்பிக்கும் பாஸ்கர்.(மிஷ்கின்) இருவரும் தன் தாயை சந்தித்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை...
இருவரும் தாயை சந்திக்க செல்லும் போது ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கிறார்கள், சிறுவன் அகியிடம் பணத்தை பறிக்கும் போது மிஷ்கின் வந்து காப்பாற்றுகிறார், அந்த காட்சி முதல் இருவரும் ஒன்று சேர்கிறார்கள், ஒருவரை ஒருவர் பிரிந்து செல்ல வேண்டும் என நினைத்தாலும், சூழ்நிலையால் முடியாமல் போகிறது, சிறுவன் அகி மேம்பட்ட நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார்...அடுத்தவருடம் சிறுவர்களுக்கான தேசிய விருதை தட்டிசெல்வார் என்பது உறுதி. இவர் மட்டும் அல்ல இந்த படம் பல விருதுகளை வாங்கி குவிக்க போகிறது என்பது உறுதி.
படத்தின் பக்கபலமாய் இருப்பவர் இளையராஜா...பின்னணி இசை, பாடல்கள் எல்லாம் படத்தின் உயிர்... 'ஒண்ணுக்கொன்னு துணையிருக்கு உலகத்திலே... அன்பு மட்டும்தான் அனாதையா' என்ற பாடல் "மீண்டும் மீண்டும்" கேட்க்க தோன்றுகிறது.
படத்தின் பக்கபலமாய் இருப்பவர் இளையராஜா...பின்னணி இசை, பாடல்கள் எல்லாம் படத்தின் உயிர்... 'ஒண்ணுக்கொன்னு துணையிருக்கு உலகத்திலே... அன்பு மட்டும்தான் அனாதையா' என்ற பாடல் "மீண்டும் மீண்டும்" கேட்க்க தோன்றுகிறது.
இவர்கள் பயணத்தில் ஒவ்வொரு மனிதர்களாய் சந்திக்கிறார்கள்..இவர்கள் இளநீர் திருடியதற்காக துரத்தும் முதியவர் அவருக்கே இவர்கள் இளநீர் வெட்டி கொடுப்பது, இவர்கள் செல்லும் வழியெல்லாம் பல தரபட்ட மனிதர்களை சந்திப்பது, காரில் பீர்பாட்டிளுடன் அலையும் இளைஞர்கள், ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளும் புதுமணத்தம்பதிகள், ஜாதி கலவரத்தில் ஒரு பெண்ணை கற்பழிக்க முயலும் மூவர், இவர்களுக்கு வழிகாட்டும் நடக்க முடியாதவர், (அவர் கட்டையை வைத்து தான் நடப்பார்) அந்த பெண்ணை காப்பாற்றும் பொழுது, சண்டையில் அவர் கட்டை உடைந்து விடும் அப்போது அவர் "என் கால் போச்சே" என்று அலறுவார். அப்போது மிஷ்கின் அவர் கால்களை பார்ப்பார் ஒன்றும் ஆகி இருக்காது தன் கட்டையை தான் கால் என்று சொல்வார்.
அகியின் தாயை மிஷ்கின் கண்டுபிடித்து விடுவார் நீங்கள் தானே அகியின் அம்மா..? அவர் உள்ளே கூப்பிட்டு சென்று பேசுவர் வசனமே இருக்காது, ஆனால் என்ன சொல்கிறாள் என்பது படம் பார்க்கும் நம் அனைவருக்கும் தெரியும்...அந்த காட்சிகள் வசனமே இல்லாமல் வைத்து இருப்பது சிறப்பு அந்த காட்சியில் அகியின் அம்மாவை ஓங்கி அறை விடு என்று நம் மனம் சொல்லும், அதே போல காட்சியமைப்பும் இருக்கிறது.
அடுத்ததாக படத்தில் பேசபடுவது ஒளிப்பதிவு தான். சிறு சிறு காட்சிகள் எல்லாம் நன்றாக படமெடுத்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துச்சாமி..பல காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் எடுக்காத காட்சிகள் டாப் ஆங்கிள் ஷாட், வைட் ஆங்கிள் ஷாட்கள், அதிலும் புதுமையை கையாண்டு இருக்கிறார் ஒளிபதிவளர்.
அஞ்சாதேவில் நடித்த ஸ்னிக்தா....அஞ்சாதேவிற்கு சில படங்களில் நடித்தார்..இதில் சிறு வேடம் ஏற்று நடித்திருக்கிறார். அவர் தெரு விபச்சாரி... ஸ்னிக்தா கற்பழிக்க தான் போகிறார்கள் என்று காப்பாற்றுவார் மிஷ்கின், ஸ்னிக்தா : "காலையில் ஒருத்தன் கூட வரல வந்த ஒருத்தனையும் விரட்டிவிட்டுடே உன்னையாரு எம்.ஜி.ஆர் வேலை பார்க்கசொன்னது என திட்டி கொண்டே இருப்பார் ஸ்னிக்தா.
தனது கதையை சொல்லி நான் அழுக்கானவள் என சொல்கிற பொழுது, பெய்யும் மழையில் அவளை நனையச்சொல்லி நீ குளி சுத்தம் ஆகிடுவே" என மிஷ்கின் சொல்வதும் ,அப்போது அவருக்கு சிறு காதல் முளைக்கும் (கவலைப்படாதீங்க டுயட் எல்லாம் இல்லை) தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார் ஸ்னிக்தா
மிஷ்கின் அம்மாவை சந்திக்கும் காட்சியில் கண்கள் கலங்குவது உறுதி, மிஷ்கின் அம்மாவாக நடித்து இருப்பது ரோகிணி...இயக்குனராக வெற்றி பெற்ற மிஷ்கின் கதாநாயகனாகவும் வெற்றி பெற்று இருக்கிறார். பாஸ்கர் மணியாகவே வாழ்ந்து காட்டி இருக்கிறார், ஒரு கையில் பேண்டை பிடித்தபடி படம் முழுவம் வருகிறார் இந்தமாதிரி கதாபாத்திரத்தில் வேறு எந்த கதாநாயகனும் நடிக்க தயங்குவார்கள் தன் நடிப்பை திறன்பட செய்து இருக்கிறார். இந்த படத்தை இரண்டு வருடமாக வெளியிடாமல், வைத்து இருந்த ஐங்கரன் நிறுவனம் வெட்கப்பட வேண்டும். நிச்சயம் பல தேசிய விருதுகளை குவிப்பது உறுதி, நந்தலாலா உருவங்காட்டி!
Tweet | |||||
49 comments:
I am first
எல்லோரும் படம் நல்லா இருக்குன்னு சொல்லுறாங்க .பார்க்கணும் .......விமர்சனம் நல்லா இருக்கு மக்கா .......
ஜோதியில கலந்துட்டீரு...ம்ம்ம்!
நல்ல விமர்சனம் நண்பா.. நான் இரண்டு நாட்களுக்கு முன்னரே படம் பார்த்துவிட்டேன்.. படத்தை முழுமையாக்கியது இசையும், ஒளிப்பதிவும் தான்..
மிஸ்கினின் தாயாக வருவது ரோகினி தான் என்று பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.. நிஜமாக மொட்டையடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்... ஒரு முறையாவது அவரது முகத்தை குளோசப்பில் காட்டியிருக்கலாம்..
present sir..
நான் இன்னும் படத்த பாக்கல..
nice review
நந்தலாலா.. விமர்சனம் நல்லா இருக்கு சௌந்தர்..
பார்க்கிறேன்.. தேங்க்ஸ்.. :-)))
கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்
Very Nice review!
படம் நல்லாயிருக்கோ இல்லையோ?!!! ஆனால் எல்லோரோட விமர்சனமும் நல்லாயிருக்கு! இதுவே டைரக்ட்டரோட வெற்றிதான்!!.
@சௌந்தர்
// நந்தலாலா உருவங்காட்டி!//
சார் சார் விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு சார். நல்லா எழுதி இருக்கிங்க சார். ஆனா கடைசில என்னா சார் இது “ நந்தலாலா உருவங்காட்டி! “ அப்படினா?? எதோ சன் டிவி டாப் 10 மூவிஸ் மாதிரி. அது மொக்க ஸ்டைல் சார்... :)))
TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 11
@சௌந்தர்
// நந்தலாலா உருவங்காட்டி!//
சார் சார் விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு சார். நல்லா எழுதி இருக்கிங்க சார். ஆனா கடைசில என்னா சார் இது “ நந்தலாலா உருவங்காட்டி! “ அப்படினா?? எதோ சன் டிவி டாப் 10 மூவிஸ் மாதிரி. அது மொக்க ஸ்டைல் சார்... :)))////
@@@TERROR-PANDIYAN
அது ஒன்னும் இல்லை சார் நம்ம எல்லாம் மொக்கை பதிவர் இல்லையா அதான் அப்படி
நந்தலாலாப் பற்றி நிறையப் பேர் சொன்னார்கள். என்னக் கதை என்றுத் தெரியாமல் தான் இருந்தேன். உங்கள் பதிவில் உள்ள நந்தலாலா விமர்சனம் படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.
விமர்சனம் அருமை! இது போன்ற யதார்த்தமானப் படங்களை மக்கள் விரும்ப ஆரம்பித்துவிட்டார்கள். அதுவே நல்ல விஷயம் தானே.
@@@TERROR-PANDIYAN
உருவங்காட்டி!///என்றால் கண்ணாடி....
விமர்சனம் ரொம்ப நல்லாயிருக்குங்க.. சீக்கிரம் பார்க்கனும்..
உங்களுடைய விமர்சனம் interesting ஆக உள்ளது. இன்னமும் பார்க்க வில்லை.. திருட்டு CD க்காக பார்த்து கொண்டு இருக்கிறேன். ;)))))
நல்ல விமர்சனம்.
நல்லதொரு விமர்சனம். பார்க்கத்தான் முடியுமா தெரியவில்லை. தில்லியில் திரையிட்டால் பார்க்கவேண்டும்.
நல்ல விமர்சனம் நண்பா!
நந்தலால பற்றி வந்த ஒரு உருப்படியான விமர்சனம்...
விமர்சனம் நல்லா இருக்கு தல
..
கண்டிப்பா பார்க்கிறேன்
அப்போ படம் கண்டிப்பா பாக்கனும் டிவிடி வரட்டும்
//விந்தைமனிதன் சொன்னது…3
ஜோதியில கலந்துட்டீரு...ம்ம்ம்! //
அதே தான் :)
நல்லா இருக்குன்னு இத்தன பேரு சொன்னதுக்கப்புறம் படம் பாக்கமல... பாத்துடுவோம்.....! இங்க எப்போ வருதுன்னு விசாரிக்கிறேன்...!
நல்லா இருக்கு சௌந்தர் சார்
நான் இன்னும் படத்த பாக்கல..
@ P Ramsaamy// அப்போ படம் கண்டிப்பா பாக்கனும் டிவிடி வரட்டும் //
டி.வி.டி. -- கம்பனி வெளியீடா இல்லை
திருட்டு டி.வி.டி யா ?
நானும் பார்க்க முயசிக்கிறேன் .,
நீ எழுதிருக்கரதப் பார்த்த காமெடி இல்லாத மாதிரி இல்லாத மாதிரி தெரியுது .! எனக்கு காமெடிதான் முக்கியம் ..
அது சரி ., அது என்ன தலைப்பு ., உருவன்காட்டி ..?>
யாரு உருவத்தைக் காட்டுது ..?
அருமையான விமர்சனத்தை தந்திருக்கிறீர்கள் தம்பி ...
ஜப்பானிய ரீமேக் நு நிறைய விமர்சனம் பார்த்து பார்க்க வெறுத்த படத்தை பார்த்தே தீரவேண்டும் என எனக்கு ஆசை காட்டும் விமர்சனம் விமர்சனம் நன்றி
நல்ல விமர்சனம் சௌந்தர்.
//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது
அப்போ படம் கண்டிப்பா பாக்கனும் டிவிடி வரட்டும்
//
நானும் அதற்கே காத்திருக்கிறேன்!
நந்தலாலா படத்தை பார்க்கும் பொழுது இருந்த உணர்வுகள், ஜப்பானிய மொழியில் எடுக்கப்பட்ட படத்தில் பார்த்தால், அந்த உணர்வுகள் இருக்குமா என தெரியவில்லை//
ஆமா..நந்தலாலாவை விட சூப்பரா இருக்குமோ என்னமோ..;-))
அருமையான பார்வை..அலசல்..
அந்த மிஸ்கின் ஏன் பேண்டை பிடிச்சிகிட்டே இருக்காரு.அதுதான் குழந்தைத்தனமா...
I agree
பாக்கனும்.
:))))
விமர்சனம் ரொம்ப நல்லாயிருக்கு...
நல்ல இருகும்முன்னு தோணுது சான்ஸ் கெடச்சா பாக்றேன்.
நல்லா விமர்சனம் பன்னிருகேள்
வாழ்த்துக்கள்
//இந்த படத்தை இரண்டு வருடமாக வெளியிடாமல், வைத்து இருந்த ஐங்கரன் நிறுவனம் வெட்கப்பட வேண்டும்//
பர்பஸ் ஆ தான் வெளியிடலையா??...லாபம் கிடைக்காதுங்கிரதுக்காகவா சவுந்தர்??ஊர்ந்து...ஊர்ந்து சாங் இருக்கா? கம்மேர்சியல் ஆ சென்னையில் எப்படி இருக்கு ? மதுரையில் சரியா தெரில...!!
ஆனந்தி @@@ஊர்ந்து... ஊர்ந்து ...அந்த பாடல் இருக்கிறது...ஆமா படம் ஓடாது என்பதற்காக வெளியிடவில்லை, சென்னையில் நன்றாக ஓடுகிறது....
சகோ.அட என்னமா எழுதிருக்கீங்க.நிச்சயம் ப்டம் பார்க்கவேண்டும்.பாராட்டுக்கள்.
நண்பா... விமர்சனம் எங்கே... முழு கதையையும் போட்டுட்டீங்களே...
முழுப்படத்தையும் பார்த்த திருப்தி வந்துவிட்டது, உங்களுக்குள் இருக்கும் எழுத்தருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,
தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க...!
http://erodethangadurai.blogspot.com/
ஓக்கே.. ஓசி டீவீடிக்கு சொல்லியாச்சி ..எந்திரனை விட இது நல்லா இருக்கும் போல அப்ப பாத்துட வேண்டியதுதான் :-))
விமர்சனம் ஓக்கே...ஆனா ஸ்நிக்தா பத்தி போட்டதுதான் எம்ஜி ஆர் டைப்பா இருக்கே..!!ஹி..ஹி..
விமர்சனம் நல்லாயிருக்கு சௌந்தர்!!
ada 5 nimishathula mulu padathaiyum partha mathiri irukku nanbaa arumai
innum parkala..review padichathu parkanum pola iruku ..
Post a Comment