2010 நடந்த முக்கியமான விஷயத்தை பற்றி திரும்பி பார்க்கிறேன் என்ற தலைப்பில் ஒரு தொடர் பதிவாக எழுத சொல்லி கௌசல்யா அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார். திரும்பி பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள் நானும் திரும்பி பார்த்தேன் ....அவங்க இல்லை!
2010 பெரிய விஷயம் ஏதும் நடக்கவில்லை...இணையம் பற்றி தெரியும் ஆனால் வெப்சைட்கள் தான் இருக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தேன். ஒரு நாள் தமிழில் எதையோ தேடி கொண்டு இருக்கும் பொழுது தமிழிஷ் என் கண்ணில் பட்டது அதில் இருந்து சில சில ப்ளாக்குகளை பார்த்தேன். நான் எந்த ப்ளாக் சென்றாலும் ஒரு வலைப்பூவை உருவாக்கவும் என்று சொல்லியது, என்ன இது என்று தெரியாமல் வலைப்பக்கம் தொடங்கினேன். ஆனால் எப்படி தமிழிஷில் இணைக்க வேண்டும் என்று தெரியவில்லை. பிறகு நானே தெரிந்து கொண்டேன்.
நான் எழுத ஆரம்பித்து 30 பதிவுகளுக்கு அதிகம் பின்னூட்டம் கிடைக்கவில்லை எனக்கு சில பதிவுகளை மட்டும் மிகவும் பிடிக்கும் அதில் போலி சாமியார்கள் என்ற பதிவில் சில சாமியார்களை பற்றி சொல்லி இருந்தேன். அடுத்ததாக விவாசாயிகள் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். இப்பொழுது அந்த பதிவு தமிழ்மணத்திற்கு இறுதி சுற்றுக்கு சென்று இருக்கிறது... பொறுமை கடலினும் பெரிது ஒரு பதிவு போட்டு இருந்தேன் அந்த புகைப்படங்களை பார்க்கவே முடியவில்லை என்று நண்பர்கள் சொன்னார்கள். பிறகு கதைகள் எழுத ஆரம்பித்தேன் சில உண்மை கதைகளையும் எழுதி இருக்கிறேன் அதில் மண்டை ஓடு தான் மிச்சம்என்ற பதிவு தமிழ்மணம் இறுதி சுற்றுக்கு சென்று இருக்கிறது.
சில சர்ச்சைக்குரிய பதிவுகளையும் நான் எழுதி இருக்கிறேன் கடவுளும் நானும். என்ற ஒரு பதிவை எழுதினேன் அதில் சில கேள்விகள் கேட்டேன் அதில் விவாதம் எல்லாம் வந்தது. அந்த பதிவுக்கு எதிர்பதிவு போட்டாங்க இந்த தொடர அழைத்தவங்க. அடுத்த பதிவு பெண்களின் புதிய கலாச்சாரம்என்ற பதிவு சில பெண்கள் குடிக்கிறார்கள் புகை பிடிக்குறாங்க என்று போட்டேன் அவ்வளவு தான் சில ஹீரோக்கள் வந்து ஏன் இப்படி புகைப்படம் எல்லாம் போட்டு இருக்கிறாய் என்று கேட்டார்கள் அந்த புகைப்படத்தை எல்லாம் எடுக்க சொன்னார்கள் என்னால் எடுக்க முடியாது என்று கூறிவிட்டேன் ...
நண்பர்கள்
தினம் ஒரு பதிவு போட்டு கொண்டு இருந்தேன் .முதன் முதலில் எனக்கு நண்பர் ஆனவர் கே.ஆர்.பி செந்தில் தான். நான் முதலில் பார்த்தும் அவரை தான் .ஏன் தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைக்க வில்லை என்று கேட்டார்..எனக்கு எப்படி வைக்கவேண்டும் என தெரியாது என்றேன் உடனே வாயிஸ் சாட்ல வந்து எப்படி வைக்க வேண்டும் என்று சொன்னார். பிறகு எங்கு இருக்கின்றீர்கள் என்ன செய்யறீங்க...அப்படியே பேசினோம். நான் நாளை அடையாறு வருகிறேன் என்று சொன்னேன் எங்க வருகிறிர்கள் சொல்லுங்க நான் உங்களை பார்கிறேன் என்றார். மறுநாள் இருவரும் சந்தித்தோம், 30 நிமிடம் பேசிகொண்டோம் பதிவுலகை பற்றி எனக்கு சொன்னார். மீண்டும் சந்திப்போம் என்று சொன்னார் இன்னும் அந்த சந்தர்ப்பம் அமையவில்லை.இப்போதும் பேசினார் நான் வீட்டுக்கு அழைப்பேன் வருகிறேன் என்று சொல்வார். இன்னும் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை.
அதன் பிறகு தேவா நண்பர் ஆனார் முதலில் சாட்ல பேசி கொண்டு இருந்தோம் பின்பு போன் வாயிஸ் சாட் என்று பேசிக்கொண்டு இருக்கிறோம். ஒரு குடும்ப நபர் போல இதுவரை இருந்து வருகிறோம்.
அடுத்தாக அன்புடன் ஆனந்தி, இவங்க கூட தான் முகப்பு புத்தகத்தின் எங்க பார்த்தாலும் கும்மி அடிப்பேன், ரொம்ப அன்பானவங்க...
அடுத்தாக கௌசல்யா இவங்க பதிவை பார்த்தால் இவர் ரொம்ப சீரியஸ் ஆன ஆள் என்று தெரியும் ஆனால் மிகவும் நல்லவர் உண்மைய தான் சொல்றேன் நம்புங்க இப்போது குடும்ப நண்பராக ஆகிவிட்டார்..எங்க அம்மாவிடம் என்னை மாட்டி விடுபவரும் இவர் தான் அதான் சொன்னேன் இவங்க ரொம்ப நல்லவங்கன்னு. எங்க அம்மாவிடம் பேசும் ஒரே பதிவர் இவர் தான்.
இன்னும் பல நண்பர்கள் இருக்கிறார்கள் இம்சை அரசன் பாபு..இப்போது எல்லாம் இவரிடம் தான் அதிகம் பேசுகிறேன் ரொம்ப நல்லவர்...இவர் போடும் பின்னூட்டம் மட்டும் தான் அப்படி இருக்கும் மிகவும் அன்பானவர்...அப்பறம் டெரர் ,LK,ரமேஷ், விஜய் பிரசாத்,வெறும் பையன், அருண் பிரசாத், பாலாஜி,ராம்சாமி, பிரியமுடன் ரமேஷ், ஜீவன்,கணேஷ் மங்குனி அமைசர்,கார்த்திக் குமார், ஆனந்தி, சித்ரா,இந்திரா, வினோ,சி.பி.செந்தில்குமார், ஆர்.கே.சதீஷ்குமார், இவர்கள் எல்லாம் நல்ல நண்பர்கள்...
அடுத்ததாக என் வயது உடைய நண்பர்கள் மரியாதையை எல்லாம் கொடுத்துகொள்ளமாட்டோம். எஸ்கே செல்வா, கல்பனா, சுபத்ரா, இதில் செல்வா அனுப்பும் மொக்கை sms நான் தினம் படித்து தொலைக்கிறேன்..வரும் மெசேஜ் எல்லாம் டெலிட் பண்ணாலும் கண்ணுக்கு தெரியுது..இவங்க நான்கு பேரிடமும் அடிக்கடி போன்லே பேசுவேன்... ரொம்ப நல்ல best friends...
ரொம்ப நேரம் நண்பர்களை பற்றி சொல்லிவிட்டேன் இன்னும் நண்பர்கள் இருக்கிறார்கள் பதிவு அளவு அதிகமானதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் பதிவுலகில் இருக்கும் ஒவ்வொருவரும் என் நண்பர்கள் தான்
2011 இல் என்ன எதிர்பார்ப்பு
நான் எப்போதும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை ஏனென்றால் என் பல எதிர்பார்ப்புகள் தோல்வியை தழுவி இருக்கிறது. அதனால் எனக்கு எதிர்பார்ப்பு என்பது பெரிதாக இல்லை. பதிவுலக எதிர்பார்ப்பு என்றால் தொடர்ந்து பதிவு எழுத வேண்டும் என்பது தான். எல்லோரும் பதிவு எழுத வந்த புதியதில் தினம் ஒரு பதிவு போடுவார்கள். அப்படியே சிறிது மாதம் தொடரும் பிறகு அந்த பதிவர் காணமல் போய் விடுவார் தொடர்ந்து மூன்று வருடங்கள் பதிவு எழுதுபவரை விரல் விட்டு எண்ணி விடலாம்...பதிவு எழுதுவதை தொடர வேண்டும் அவ்வளவு தான்.
திரும்பிப் பார்கிறேன் இந்த பதிவில் நண்பர்களை அதிகம் சொன்னதற்கு காரணம் ஏன் என்றால் திரும்பி பார்த்தால் நண்பர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்..எந்த தடங்கலும் இல்லாமல் நட்பு மேலும் வளரணும்...என்பதே பெரிய எதிர்பார்ப்பு.
இந்த பதிவை தொடர அழைப்பது
Tweet | |||||
58 comments:
vadai
//திரும்பிப் பார்கிறேன் இந்த பதிவில் நண்பர்களை அதிகம் சொன்னதற்கு காரணம் ஏன் என்றால் திரும்பி பார்த்தால் நண்பர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்..எந்த தடங்களும் இல்லாமல் நட்பு மேலும் வளரணும்...என்பதே பெரிய எதிர்பார்ப்பு.
//
நெகிழ்ச்சியான உணர்வுகள் நண்பா!
உங்கள் 2011 எதிர்பார்ப்புகள் நிறைவடைய வாழ்த்துக்கள்
அடுத்த முறை நீங்கள் திரும்பிப் பார்க்கையில், நானும் தெரிய முயற்சி செய்கிறேன்..
சூப்பர் சவுந்தர் ............ பதிவுலகில் அனைவர்களுக்கும் நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர்
பெரிய நண்பர்கள் பட்டாளம்தான் போல... இப்போ தெரியுது எப்படி நீ 50 ஓட்டு எல்லா மொக்கை பதிவுலயும் வாங்குறேனு :)
இனி வரும் ஆண்டுகளும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் தம்பி
அருண் பிரசாத் சொன்னது… 6
பெரிய நண்பர்கள் பட்டாளம்தான் போல... இப்போ தெரியுது எப்படி நீ 50 ஓட்டு எல்லா மொக்கை பதிவுலயும் வாங்குறேனு :)
இனி வரும் ஆண்டுகளும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் தம்பி///
உங்க அன்புக்கு நன்றி இவங்க எல்லாம் உங்களுக்கும் தெரியும் தானே :P அவ்வவ் நான் இன்னும் பல பெயரை சொல்லவில்லை
இந்தமுறை பொங்கல் கழித்து கண்டிப்பாக வீட்டுக்கு வருகிறேன் தம்பி...
பதிவுலகம் பற்றி கொஞ்சம் தெரியவைத்த பதிவு
கடந்தகால நிகழ்வுகளை சிறப்பாகவே பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்
இந்த வருடத்தில் எதிர்பார்ப்புகளும் நிகழ்வுகளும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களும்...
உங்கள் 2011 எதிர்பார்ப்புகள் நிறைவடைய வாழ்த்துக்கள்
நல்லா இருந்தது சவுந்தர்...நீ அருமையான தம்பி..உனக்கு இத்தனை நட்புக்கள் இருப்பதில் பெரிய ஆச்சர்யம் இல்லை...
நல்லா தொகுத்து இருக்கீங்க....
HAPPY PONGAL!
சௌந்தர், நல்ல நண்பர்கள்.... வாழ்த்துக்கள்! அதில் நானும் இருப்பது மகிழ்ச்சி, நிறைவாக உணர்கிறேன்.......
திரும்பிப் பார்க்கும் போது வழி நெடுக நண்பர்கள்...........
ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை தம்பி........! நிறைவா இருந்துச்சு படிச்சு முடிக்கிறவரைக்கும்...
தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.ரொம்ப சந்தோஷமாக இருக்கு.உங்கள் நட்பு வட்டம் என்றும் தொடர்ந்து அன்புடன் இருக்க வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வு.
// இம்சை அரசன் பாபு..இப்போது எல்லாம் இவரிடம் தான் அதிகம் பேசுகிறேன் ரொம்ப நல்லவர்...இவர் போடும் பின்னூட்டம் மட்டும் தான் அப்படி இருக்கும் மிகவும் அன்பானவர்..//
நீ யாரு ?? உன்னை யாரென்றே எனக்கு தெரியாது .......பொய் சொல்லுறான் யாரும் நம்பாதீங்க .........(என்னை அன்பானவர்ன்னு சொன்னேல்ல ...நான் ரொம்ப டெர்ரர் ஆனவன் சொல்லி இருக்கணும் நீங்க ......appa thane ellorum payapaduvaanga )
நல்ல விவரிப்பு.. 2011 ம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
தமிழ் மணத்தில் நீங்க போட்டிக்கு அனுபிச்சதில் இறுதியில் மிச்சமாக இருக்கும் அந்த மண்டையோடு ஜெயிக்க வாழ்த்துக்கள்.
//
திரும்பி பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள் நானும் திரும்பி பார்த்தேன் ....அவங்க இல்லை! ///
அப்படியா மச்சி ?
//ஆனால் எப்படி தமிழிஷில் இணைக்க வேண்டும் என்று தெரியவில்லை. பிறகு நானே தெரிந்து கொண்டேன்.//
பாருயா ? பயலுக்கு எவ்ளோ பெரிய அறிவுனு !
//அவ்வளவு தான் சில ஹீரோக்கள் வந்து ஏன் இப்படி புகைப்படம் எல்லாம் போட்டு இருக்கிறாய் என்று கேட்டார்கள் அந்த புகைப்படத்தை எல்லாம் எடுக்க சொன்னார்கள் என்னால் எடுக்க முடியாது என்று கூறிவிட்டேன் ...
//
நீ தகிறியசாலி அப்படின்னு உலகம் உணர்ந்தது மச்சி !
//இப்போதும் பேசினார் நான் வீட்டுக்கு அழைப்பேன் வருகிறேன் என்று சொல்வார். இன்னும் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை.//
சரி சரி அழாத , அவர் வந்து பார்ப்பார் !
//இம்சை அரசன் பாபு..இப்போது எல்லாம் இவரிடம் தான் அதிகம் பேசுகிறேன் ரொம்ப நல்லவர்.///
அப்படின்னா போலீஸ் காரர் ரொம்ப நல்லவர் இல்லையா ?
// இதில் செல்வா அனுப்பும் மொக்கை sms நான் தினம் படித்து தொலைக்கிறேன்..வரும் மெசேஜ் எல்லாம் டெலிட் பண்ணாலும் கண்ணுக்கு தெரியுது..இவங்க நான்கு பேரிடமும் அடிக்கடி போன்லே பேசுவேன்... ரொம்ப நல்ல best friends...
///
ஹி ஹி ஹி ,, விடு விடு , நான் வேணா உனக்கு தினமும் இரண்டு மொக்கை அனுப்பட்டுமா ?
மச்சி வலையுலகில் நிறைய நண்பர்கள் உனக்கு.. இந்த ஆண்டும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள் :)
அருமையாய் திரும்பி பார்த்து இருக்கீங்க..
நல்லாவே திரும்பி பார்த்துருக்கீங்க, நல்ல இருக்கு
பெரிய நண்பர்கள் பட்டாளம்தான் போல... இப்போ தெரியுது எப்படி நீ 50 ஓட்டு எல்லா மொக்கை பதிவுலயும் வாங்குறேனு :)
இனி வரும் ஆண்டுகளும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் தம்பி
# கமெண்ட் போட சோம்பேறி படுவோர் சங்கம்
திரும்பிப் பார்கிறேன் இந்த பதிவில் நண்பர்களை அதிகம் சொன்னதற்கு காரணம் ஏன் என்றால் திரும்பி பார்த்தால் நண்பர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்..எந்த தடங்களும் இல்லாமல் நட்பு மேலும் வளரணும்...என்பதே பெரிய எதிர்பார்ப்பு. //
சௌந்தர் கலக்கிட .. ரொம்ப சந்தோஷமா இருக்கு ...
இந்த வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ( நான் மற்றும் செல்வா மொக்கயொடு )
Arun Prasath கூறியது...
vadai///
சரி இல்லையே ..
இரு இரு வடை யா திருட ஆள் செட் பண்றேன்
நல்லாயிருக்குங்க .
அருமையான பதிவு நண்பா... உன்னுடைய நண்பர்கள் வரிசையில் நானும் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி...
//சி.பி.செந்தில்குமார்
ஆர்.கே.சதீஷ்குமார்
//
ஐ!! அப்போ நீங்க எல்லாம் பிரண்ட்ஸா? இனி ஹிட்ஸ் பத்தி பேசி அடிச்சிக்க மாட்டிங்களா? :) எனக்கு போர் அடிக்குமே.. :)
வாழ்த்துக்கள், அருமையான பகிர்வு.
//திரும்பி பார்த்தால் நண்பர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்..எந்த தடங்களும் இல்லாமல் நட்பு மேலும் வளரணும்...என்பதே பெரிய எதிர்பார்ப்பு. //
:))))
>>>>TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 35
//சி.பி.செந்தில்குமார்
ஆர்.கே.சதீஷ்குமார்
//
ஐ!! அப்போ நீங்க எல்லாம் பிரண்ட்ஸா? இனி ஹிட்ஸ் பத்தி பேசி அடிச்சிக்க மாட்டிங்களா? :) எனக்கு போர் அடிக்குமே.. :)
HA HA HA .. THE ARGUMENTS WAR IS NOT AFFECT THE FRINDSHIP MR PANDIAN,
SOWNDHAR THANX FOR CALLING FOR POST AND MENTION AS A FRIEND..
>>>>நான் எப்போதும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை ஏனென்றால் என் பல எதிர்பார்ப்புகள் தோல்வியை தழுவி இருக்கிறது
CATCHING LINE
திரும்பி பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள் நானும் திரும்பி பார்த்தேன் ....அவங்க இல்லை! கடந்த வருடத்தை தான திரும்பி பார்க்க சொன்னேன்...! கிண்டல் ஜாஸ்தியா போச்சு...!! :))
பழைய பதிவுகளை மறுபடியும் நினைவு படுத்தியதுக்கு மகிழ்கிறேன்.
//சில ஹீரோக்கள் வந்து ஏன் இப்படி புகைப்படம் எல்லாம் போட்டு இருக்கிறாய் என்று கேட்டார்கள் // அந்த ஹீரோக்கள் யாருன்னு இங்கே சொல்லி இருக்கலாமே...நாங்களும் தெரிஞ்சிபோமே...எந்த சச்சரவும் இல்லாமல் பதிவுலகம் கொஞ்சம் டல் அடிக்கிறது சௌந்தர் !!
இந்த நண்பர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகணும் என்று வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள் நண்பரே முதலில் தங்களுக்கு . திரும்பிப் பார்கிறேன் என்ற தலைப்பில் வலையுலகத்தில் தாங்கள் அறிமுகம் தோன்றியது முதல் இன்றுவரை கைகோர்த்த நட்பின் உறவுகள் வரை அனைத்தையும் அழகிய நடையில் சொல்லி இருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது . உங்களின் என்னம்போலவே இந்த புதிய வருடத்தில் தினமும் பதிவுகள் தந்து உயர வாழ்த்துக்கள் .
TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 35
//சி.பி.செந்தில்குமார்
ஆர்.கே.சதீஷ்குமார்
//
ஐ!! அப்போ நீங்க எல்லாம் பிரண்ட்ஸா? இனி ஹிட்ஸ் பத்தி பேசி அடிச்சிக்க மாட்டிங்களா? :) எனக்கு போர் அடிக்குமே.. :)
///
உன் நல்ல மனசுக்கு நீ ரொம்ப நல்லா இருப்ப மச்சி
சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>>>நான் எப்போதும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை ஏனென்றால் என் பல எதிர்பார்ப்புகள் தோல்வியை தழுவி இருக்கிறது
CATCHING LINE//
கரெக்டா கேட்ச் பிடிசீங்களா?
ஆர்.கே.சதீஷ்குமார், இவர்கள் எல்லாம் நல்ல நண்பர்கள்...
//
அட...சந்தோசமா இருக்கு
திரும்பி பார்க்கிறேன் தொடருக்கு அழைத்தமைக்கு நன்றி..உடனே எழுதுகிறேன்
நான் எப்போதும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை ஏனென்றால் என் பல எதிர்பார்ப்புகள் தோல்வியை தழுவி இருக்கிறது
CATCHING LINE//
எனக்கும் பிடிச்ச வரிகள்
ஐ!! அப்போ நீங்க எல்லாம் பிரண்ட்ஸா? இனி ஹிட்ஸ் பத்தி பேசி அடிச்சிக்க மாட்டிங்களா? :) எனக்கு போர் அடிக்குமே//
ஹஹா
இனி வரும் ஆண்டுகளும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் தம்பி
தமிழ்மணத்தில் டாப் 10 ஆக இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்
//அடுத்தாக அன்புடன் ஆனந்தி, இவங்க கூட தான் முகப்பு புத்தகத்தின் எங்க பார்த்தாலும் கும்மி அடிப்பேன், ரொம்ப அன்பானவங்க...//
ஹை.. யாருங்க அது? கும்மி அடிப்பீங்களா... சொல்லவே இல்ல... :-))
உங்க நட்பிற்கு நன்றி சௌந்தர்..
// திரும்பி பார்த்தால் நண்பர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்..எந்த தடங்கலும் இல்லாமல் நட்பு மேலும் வளரணும்...என்பதே பெரிய எதிர்பார்ப்பு//
உங்க நட்பெல்லாம்.. மேலும் வளர வாழ்த்துக்கள்.. :-))
பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கு..!
ஆரம்பகாலத்தைவிட இப்போவெல்லாம் உங்கள் பதிவுகள் அருமை.இன்னும் எழுத்துங்கள் சௌந்தர்.வாழ்த்துகள் !
உங்கள் 2011 எதிர்பார்ப்புகள் நிறைவடைய வாழ்த்துக்கள்... சகோ
திரும்பி பார்க்கிறேன்..... மிக அழகா உண்மையை சொல்லியிருக்கிங்க .... அடுத்த திரும்பி பார்க்கும் போது இதைவிட அதிகம் சாதித்திருப்பீர்கள் வாழ்த்துக்கள்.
//மீண்டும் சந்திப்போம் என்று சொன்னார் இன்னும் அந்த சந்தர்ப்பம் அமையவில்லை//
தெரியாம ஒரு வாட்டி தப்பு பண்ணிட்டாரு...மறுபடி தெரிஞ்சே செய்வாரா... ஹா ஹா ஹா.. ஜஸ்ட் கிட்டிங்... நோ டென்ஷன்...
//அடுத்தாக கௌசல்யா இவங்க பதிவை பார்த்தால் இவர் ரொம்ப சீரியஸ் ஆன ஆள் என்று தெரியும் ஆனால் மிகவும் நல்லவர்//
அப்ப சீரியசா இருக்கரவங்கெல்லாம் கெட்டவங்கன்னு ஒரு அபிப்ராயம் இருக்கோ...என்ன கொடும சௌந்தர் இது? ஹா ஹா ஹா...
//இவர்கள் எல்லாம் நல்ல நண்பர்கள்...//
இந்த லிஸ்ட்ல என் பேரு சின்ன எழுத்துல கூட இல்ல... இதுக்கே நல்லா வாரி கமெண்ட் போடணும்... பொழச்சு போங்க...
//பதிவுலகில் இருக்கும் ஒவ்வொருவரும் என் நண்பர்கள் தான்//
இப்படி ஒரு disclaimer சமாளிபிகேசன் வேற...ஒகே ஒகே... ஹா ஹா
நல்லப் பதிவு செளந்தர்!
நண்பர்கள் பேரை எல்லாம் போட்டாச்சு. ஓட்டு நிச்சயம் தானே!
மேலும் நண்பர்கள் எண்ணிக்கை கூட வாழ்த்துக்கள்!
திரும்பி பார்க்கிறேன், பகிர்வு அருமை
//நான் எப்போதும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை ஏனென்றால் என் பல எதிர்பார்ப்புகள் தோல்வியை தழுவி இருக்கிறது/
??
Post a Comment