Wednesday, July 7

மண்டை ஓடு தான் மிச்சம்....


                                                                       
சுதா அவள் கணவர் சதீஷ்க்கு போன் செய்கிறாள், சதீஷ் ஆட்டோ ஓட்டி கொண்டு இருப்பதால் போனை எடுக்க வில்லை. அவன் வேலை முடிந்தவுடன் எதற்கு போன் செய்தாய், என்று கேட்கிறான் சதீஷ். காலையிருந்து ராஜேஷ் வாந்தி எடுத்து கொண்டு இருக்கிறான், பக்கத்தில் உள்ள டாக்டரிடம் அவனை கூப்பிட்டு சென்று காட்டினேன், டாகடர் ஊசி போட்டார், அப்போதும் வாந்தி நிற்கவில்லை, எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை , நீங்க உடனே வாருங்கள் என சொல்ல, சதீஷ் சரி நான் உடனே வருகிறேன் என்று சொல்லி போனை கட் செய்தான்.


அன்று மீண்டும் வேறு ஒரு டாக்டரிடம் போய் காண்பித்தனர். டாக்டர்   காலையிருந்து வாந்தி எடுத்து கொண்டு இருக்கிறான் என்ன என்று தெரியவில்லை, பையன் பெயர் என்ன? வயசு என்ன? டாக்டர் கேட்க ராஜேஷ் சொல்கிறான், என் பெயர் ராஜேஷ், வயசு 3 என்று சொல்ல. டாக்டர் வெரி குட் என்கிறார். உனக்கு என்ன செய்து? டாக்டர் கேட்க ஒரே தூக்கமா வருது என்றான் , (மயக்கத்தை தான் அப்படி சொல்கிறான் ) வாய திற, என்கிறார் டாக்டர்.

இன்னைக்கு என்ன சாப்பாடு கொடுதிங்க? காலை கொஞ்சம் இட்லி சாப்பிட்டான், அதையும் வாந்தி எடுத்து விட்டான், மதியம் கொஞ்சம் ரசம் சாப்பாட்டு சாப்பிட்டான் அதையும் வாந்தி எடுத்து விட்டான், இன்னைக்கு நான் ஒரு மருந்து எழுதி தரேன் சாப்பிடும் முன் அந்த மருந்தை கொடுங்கள், நாளை மறுபடி கூப்பிட்டு வாருங்கள் என்றார் டாக்டர். அவர்கள் மறு நாள் டாக்டரிடம் போகவில்லை. அவர்களிடம் அதற்கு பணம் இல்லை. 


சதீஷ் தினமும் ஆட்டோ ஓடினால் தான் பணம். இரண்டு நாள் நல்லா இருந்தான். ராஜேஷ் மீண்டும் அதே பிரச்சனை, டாக்டரிடம் கூப்பிட்டு சென்றார்கள், இப்போ கொஞ்சம் சீரியஸ் பையன் மயக்கம் போட்டு விழுந்து விட்டான், டாக்டர் ஊசி எல்லாம் போட்டார், மயக்கம் தெளிந்தது. டாக்டர் தொடர்ந்தார் : தலையில் ஒரு MRI ஸ்கேன் எடுத்து பாப்போம் என்றார் டாக்டர், அதுக்கு சதீஷ் அந்த ஸ்கேன்னுக்கு எவ்வளவு ஆகும் சார்.. டாக்டர், கம்மி தான் 9000 ரூபாய் ஆகும். சரிங்க சார் நான் நாளைக்கு எடுத்து கொண்டு வருகிறேன் என்று சொல்லி வீட்டுக்கு கிளம்பினார்கள்.


ஸ்கேன் எடுத்து கொண்டு டாக்டரிடம் போனார் சதீஷ், டாக்டர் ஸ்கேன்னை பார்த்து வீட்டு தலையில் கட்டி இருக்கிறது, அதை எடுக்க ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கிறார். சதீஷ் கலங்கிய கண்களோடு என் பையனுக்கு மூன்று வயசு தான் நடக்குது, ஆபரேஷன் செய்யலாமா அவன் உடம்பு தாங்குமா டாக்டர்.... இந்த கட்டியை மருந்து மூலம் கரைக்க முடியாதா என்று கேட்டார் சதீஷ். டாக்டர் முடியாதுங்க இந்த கட்டி ரொம்ப பெருசா வளர்ந்து விட்டது, அந்த கட்டியை ஆபரேஷன் செய்து தான் எடுக்க முடியும், அப்படியே அந்த கட்டியை எடுக்கமால் விட்டால் அவன் கோமாவுக்கு போய்விடுவான், என்று டாகடர் சொன்னார்...சதீஷ் இப்போ எங்க சார் ஆபரேஷன் செய்வது, எவ்வளவு செலவு ஆகும்?


என்று கேட்டார் சதீஷ். டாக்டர் மொத்தம் ஐந்து லட்சம் வரை செலவு ஆகும். சதீஷ், சார் எனக்கு அவ்ளவு வசதி கிடையாது நான் என்ன செய்வேன் டாக்டர்.நான் ஸ்டான்லி எழுதி தரேன் அங்கே போய் ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள்.


ஸ்டான்லி மருத்துவ மனைக்கு சென்றார்கள், ராஜேஷ் எதோ வேடிக்கை பார்த்து கொண்டே சென்றான் அங்கு நரம்பியல் மருத்துவரிடம் சென்று காண்பித்து அனுமதி வாங்கி கொண்டு வார்டுக்கு சென்றார்கள், மறுநாள் ஒரு டாக்டர் வந்து நீங்கள் போய் மயக்க மருந்து கொடுக்கும் டாக்டரிடம் சென்று உடல் தகுதி சோதனை செய்து வாருங்கள் என்று சொல்ல அங்கு சென்று உடல் தகுதி சான்றிதழ் வாங்கி வந்து டாக்டரிடம் காண்பித்தனர்,அதை சரி பார்த்த டாக்டர் நாளைக்கு உங்க பையனுக்கு ஆபரேஷன் செய்யலாம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.


காலை ஆபரேஷன் செயும் அறைக்கு சென்றான் ராஜேஷ். ஐந்து மணி நேரம் ஆபரேஷன் நடந்து முடிந்தது. கொண்டு வந்து வார்டில் போட்டார்கள். ராஜேஷ் தலையில் ஓரு பெரிய கட்டு போட்டிருந்தார்கள். பெரியத் தலைபாகையைப் போல் இருந்தது.  கூடவே ஒரு டாக்டர் வந்தார் ஒரு பாக்ஸ்சை கொடுத்தார்.


அவர்களும் அதில் அகற்றப்பட்ட கட்டி தான் இருக்கும் என்று ஆனந்தமாக கை நீட்டி பெற்றுக்கொண்டனர். அதை பார்த்த சுதாவிற்கு மயக்கமே வந்து விட்டது. டாக்டர் தொடர்ந்தார், இதில் உங்க பையன் மண்டை ஓட்டின் சிறிய பகுதி இதில் இருக்கிறது இதை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். மயக்கம் தெளிந்து விட்டது நேரம் இல்லாத காரணத்தால் இந்த மண்டை ஓட்டின் சிறிய பாகத்தை மீண்டும் வைக்க முடிய வில்லை,
அடுத்த ஆபரேஷனில் வைத்து கொள்ளலாம் என்று அந்த பாக்ஸ்சை கொடுத்தார். சதீஷ்கு கவலை. ஏற்கனவே ஒரு ஆபரேஷன் செய்தாச்சு இதில் இன்னும் ஒரு ஆபரேஷன் என்று புலம்பி கொண்டு இருந்தார்.



மாலை ராஜேஷ் கண் விழித்தான் அவன் எதுவும் பேச வில்லை, ஒரு கை கால் களை அசைக்க முடிய வில்லை, சுதா விற்கும் சதீஷ் க்கும் ஆபரேஷனில் தவறு செய்து விட்டார்கள் என்று தெரியவில்லை,மறு நாள் டாக்டர் குழு வந்தது அவர்களுக்குள் பேசி கொண்டு போய்விட்டனர். நன்றாக ஒடியாடி விளையாடிய குழந்தை இப்போது பேச முடியாமல் ஓட முடியாமல் இருக்கிறது. மீண்டும் ஓரு ஆபரேஷன் நடந்தது அதிலும் சரியாக வில்லை கோமா நிலைக்கு சென்று விட்டான்.




இரண்டு மாதம் ஓடி விட்டது . அவர்கள் மருத்துவமனையிலேயே தங்கினார்கள். வழக்கம் போல் சதீஷ் மருத்துவமனையில் இருந்து வேலைக்கு சென்றான். சுதா ராஜேஷ்கு இட்லி வாங்க சென்றாள் வாங்கி வந்தவளுக்கு, தன் மகனை சுற்றி பெரும் கூட்டம் இருந்ததை கண்டு பயந்தாள். டாக்டர் வந்து சொன்னார், இந்த கேஸ் நேற்று இரவே இறந்துவிட்டது என்றார் அலட்சியமாக


எனக்கு இருந்தது ஒரே மகன் அவனையும் தவறான ஆபரேஷன் செய்து கொன்று விட்டார்களே என்று கண்ணிருடன் கதறினார்கள். அவர்கள் கையில் மண்டை ஓடு மட்டுமே மிஞ்சி இருந்தது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள், அவர்கள் சாதாரண ஏழை மக்கள்.

இது ஒன்றும் நீங்கள் அன்றாடம் படிக்கும் சிறுகதைகளில் ஒன்றல்ல. நான் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த பொழுது நடந்த ஓரு சிறு சம்பவம். இன்றும் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பலர் உயிர் விடுகின்றனர்....


26 comments:

Anonymous said...

ramana paduthula sethu poona ourutaruku vaithiyam partha doctor taane ivunuga.

ஜீவன்பென்னி said...

பெருமூச்சும் கோவமும் அதிகமா வருது. வீனாப்போனவனுங்க நல்ல நாலு வார்த்தையச்சொல்லி ஆபரேசன் செஞ்சவங்க பாராட்டறத தவிற வேற என்னை செய்யுறது. அலட்சியம் தான் காரணமா இருக்கு இதுக்கெல்லாம். அரசாங்க மருத்துவமனைல மட்டும் இல்ல தனியார் மருத்துவமனைகளும் விதி விலக்கு இல்ல. இந்த விசய்ம் வெளிய தெரிஞ்சுதுன்னா யாராவது ஒருத்தர பலி கடாவாக்கி அவங்கவங்க அவங்க வேலைய பாக்க போய்டுவாங்க.

Anonymous said...

Sir we need 1 crore person like Indian thatha to correct our country

Unknown said...

இந்திய தேசத்தில் இதைபோல் எண்ணற்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது..
தனக்கு வராதவரை யாருக்கும் எதைபற்றியும் அக்கறை இல்லை, அதனால்தான் அவர்கள் துணிச்சலாக வாழ்கிறார்கள் ..

அந்த பெற்றோரை நினைத்து கவலையாக இருக்கிறது..

செல்வா said...

படிக்கும் போது சிறுகதை போல தோன்றினாலும் உண்மை என்பதை அறிந்தவுடன் மனது வலிக்கிறது . இப்படிப்பட்ட மருத்துவர்கள் திருந்துவார்களா ..?? இவங்களுக்கு மனசு அப்படின்னு எதுவுமே கிடையாதா ..?

//எனக்கு இருந்தது ஒரே மகன் அவனையும் தவறான ஆபரேஷன் செய்து கொன்று விட்டார்களே என்று கண்ணிருடன் கதறினார்கள். அவர்கள் கையில் மண்டை ஓடு மட்டுமே மிஞ்சி இருந்தது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள், அவர்கள் சாதாரண ஏழை மக்கள்.///

ஒரு அரசியல்வாதியின் மகனாக இருப்பின் இவ்வளவு அலட்சியமாக இருப்பார்களா ..? உயிர் அனைவருக்கும் ஒன்றுதான் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ..

Kousalya Raj said...

அய்யோ நான் கதை என்றுதானே படித்து கொண்டே வந்தேன்....! உண்மையா...? கொடுமை.... மனம் பதைக்கிறது..... சௌந்தர். என்னவொரு அலட்சியம்....??!!

ஹேமா said...

ஐயோ....என்ன கொடுமை இது !

virutcham said...

உண்மையாவா? இது எப்போ நடந்தது ? ஏன் வெளி உலகுக்கு தெரியலை ? இப்போ தான் மீடியா எல்லாவற்றையும் பெரிது படுத்துகிறதே. யாரும் இந்த விஷயத்தில் உதவலையா ?

தமிழ் மதுரம் said...

யோ மனதிற்கு கஸ்டமாக இருக்கப்பா! அருமையான சிறுகதை. நிஜங்களை அழகாகச் செதுக்கியுள்ளீர்கள். மயிர்க் கூச்செறிவது போன்ற அனுபவம் கதையைப் படிக்கும் போது.

மருத்துவர்கள் விடும் தவறுகளால் இவ்வாறு எத்தனை எத்தனை உயிரிழப்புக்கள்.

எல் கே said...

enna soundar ippadi adirchi thareengaa .(((

soundr said...

:(

க ரா said...

கேக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு (-:

SShathiesh-சதீஷ். said...

படிக்கும் போது ஆத்திரமும் கவலையும் வருகின்றது.அதென்ன என் பெயர் அங்கெ அவ்

Jeyamaran said...

*/இரண்டு மாதம் ஓடி விட்டது . அவர்கள் மருத்துவமனையிலேயே தங்கினார்கள். வழக்கம் போல் சதீஷ் மருத்துவமனையில் இருந்து வேலைக்கு சென்றான். சுதா ராஜேஷ்கு இட்லி வாங்க சென்றாள் வாங்கி வந்தவளுக்கு, தன் மகனை சுற்றி பெரும் கூட்டம் இருந்ததை கண்டு பயந்தாள். டாக்டர் வந்து சொன்னார், இந்த கேஸ் நேற்று இரவே இறந்துவிட்டது என்றார் அலட்சியமாக

எனக்கு இருந்தது ஒரே மகன் அவனையும் தவறான ஆபரேஷன் செய்து கொன்று விட்டார்களே என்று கண்ணிருடன் கதறினார்கள். அவர்கள் கையில் மண்டை ஓடு மட்டுமே மிஞ்சி இருந்தது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள், அவர்கள் சாதாரண ஏழை மக்கள்./*

காசு குடுத்து பாசான பரதேசிகள் இப்படிதான் செய்யும் */பரதேசிகள் இந்த வார்த்தையை பயன்படுடியதர்க்கு மன்னிக்கவும் /*

அன்புடன் நான் said...

இதுபோல பொறுப்பில்லாத ஜென்மங்களை நினைத்தால் கோவம் தான் வருது செளந்தர்.
மனதை நொறுக்கும் பதிவு.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நானும், ஏதோ கதை எழுதி இருக்கீங்க என்று தான் படித்தேன்..
முடிவு செய்தி..மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...சௌந்தர். :-((

ஜெயந்தி said...

படிக்கவே முடியல. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏழைகள் சாக வேண்டியவர்கள்தானா?

Sundar said...

மன்னிக்க முடியாத தவறு. அந்த கவனமில்லா மருத்துவர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். இன்னும் எத்தனை பேர் இப்படி காத்துக்கொண்டு இருக்கிறார்களோ... இவர்களிடம் உயிரை விட....

விஜய் said...

அருமையான பதிவு சௌந்தர்,
பார்த்து படிச்சுட்டு போகிற மாதிரி இல்லாம
,விழிப்புணர்வை ஏற்படுத்துகிற பதிவு சௌந்தர்,
அவசியம் தேவை இன்னொரு சுபாஷ் சந்திர போஸ் மாதிரி ஒரு தலைவர், நம்மள போன்ற இளமை ரத்தம் சுட்டும் இளைஞர்கள், நம் தேசத்தில் இருக்கும் நச்சு மனித பாம்புகளை அழிக்க ..
அருமையானா பதிவு தோழா

lcnathan said...

manathip pisaintha seithi. indhiyan thaththaakkalum anniyan ambikalum varaveendum, intha maapaathakaththai ozhikka..

dheva said...

பொறுப்பற்ற மருத்துவர்களின் இது போன்ற செயல்களால் பாதிக்கப்படுவது...என்னவோ ஏழைகள்தானே தம்பி...! மக்களௌக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு இது போன்ற சம்பவங்களை தட்டிக் கேட்கவும் சம்பந்தப்பட்ட மருத்துவைருர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் புகார்களை கொடுக்க வேண்டும்....


என்ன செய்து என்ன....போன உயிர் திரும்ப கிடைக்குமா? நெஞ்சு கனக்கிறது தம்பி...!

எஸ்.கே said...

உண்மை நண்பா உங்களுக்கும் எனக்கும் நிகழ்ந்ததும் இப்படித்தானே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கேக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு

எண்ணங்கள் 13189034291840215795 said...

சொல்ல வார்த்தையில்லை..

ஏழைகளுக்கு ஏன் இப்படி அடிமேல் அடி...

:((((

எண்ணங்கள் 13189034291840215795 said...

தமிழ்மண விருதில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ் மனம் சும்மாவா விருது தந்தார்கள்.....!!!
சூப்பரா இருக்கு மக்கா....மனதில் ஒரு பாரம்....

 
;