Wednesday, October 27 39 comments

"வ" மைனா பார்க்கலாம்...!



இந்த தீபாவளிக்கு எந்த படத்திற்கு போகலாம் என்று இருப்பவர்களுக்காக இந்த பதிவு. ஏதோ என்னால் முடிந்த சமூகசேவை... 


எந்திரன் படத்திற்கு எவ்வளவு எதிர் பார்ப்பு இருந்ததோ அதே அளவுக்கு எதிர் பார்ப்பு மக்களிடம் இருக்கிறது (யாருப்பா அது சிரிக்கிறது)...உண்மை தான் சிவா நடித்து வெளி வர இருக்கும் படம் "வ குவாட்டர் கட்டிங்" 


"என்னது எனக்கு கட்டிங் தரிங்களா என்று எல்லாம் கேட்க்க கூடாது"..படத்தின் பெயர் "வ" என்றால் தமிழில் ஒன்றின் கீழ் நான்கு அதாவது "குவாட்டர்" என்ற பொருள்...எப்படியெல்லாம் அர்த்தம் சொல்றாங்க பாருங்க...!


ஒய் நாட் புரொட‌க்சன், கிளவுட் நைன் இணைந்து படத்தை தயாரித்து உள்ளார்கள். தமிழ்படத்தை அடுத்து சிவா நடித்து வெளிவர இருக்கும் படம் இது. ஆரியா நடித்த ஓரம்போ படத்தை தொடர்ந்து புஸ்கர்-காயத்ரி இயக்கும் 2-வது படம்...சிவாவிற்கு தமிழ்படம் வெற்றிக்கு பிறகு வருகிற படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கிறது... எஸ்.பி.பி சரண், லேகா வாஷிங்டன் நடித்து இருக்கிறார்கள் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துவுள்ளார்..

கதை என்ன என்றால் நம்ம சிவா வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று சென்னை வருகிறார்..மறு நாள் வெளிநாட்டிற்கு போகிறார் போகும் முன் விருப்பப்பட்டதை எல்லாம் அனுபவிக்க அவர் ஆசைப்படுகிறார். அவரது ஆசையை தீர்த்து வைப்பவர் எஸ்.பி.‌பி.சரண்...சிவாவின் அக்காவை திருமணம் செய்துகொள்ள போகிறவர் தான் சரண்..சிவாவின் அனைத்து ஆசையும் தீர்த்து வைக்கிறார் சரண். இரவு 12 மணிக்கு மேல் குவாட்டர் குடிக்க வேண்டும் என்று ஆசை படுகிறார் சிவா எப்படி குவாட்டர் குடித்தாரா இல்லையா என்பது தான் மீதி கதை...சென்னையில் இரவில் என்னவெல்லாம் நடக்கும் அதையெல்லாம் படத்தில் இடம் பெரும் என்று புஸ்கர்&காயத்ரி கூறுகிறார்கள்...



மக்கள் : இந்த படத்தில் என்ன தான் மெசேஜ் இருக்கு 
இயக்குநர்: என்னடா எல்லாத்துக்கும் மெசேஜ் கேட்டு அலையுறீங்க...







இந்த படத்தின் பாடல்களே என்ன படம் என்று கேட்க்க வைத்தது "மைனா" எதார்த்தமான படங்களை தந்துகொண்டிருக்கும்  பிரபுசாலமன் தான் (கொக்கி,லீ படங்களின்) இயக்குநர். சலோம் ஸ்டுடியோ தயா‌ரிப்பில் கல்பாத்தி அகோரம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து வெளியிட இருக்கிறார்கள் இமான் இசை மிகவும் புது விதமாக இருக்கிறது அனைத்து பாடல்களும் ஹிட் ஆகிவிட்டது.. மைனா படத்தின் நாயகனாக கூத்துப்பட்டறையில் பயிற்சிபெற்ற விதார்த்தும், நாயகியாக சிந்து சமவெளி படத்தில் நடித்த அமலா பாலும் நடித்துள்ளனர்.

இதுவும் ஒரு காதல் கதை தான் மைனா என்ற மலைசாதி பெண்ணுக்கும், சுருளி என்ற டிரைவருக்கும் ஏற்படும் காதலும், காதலுக்காக எதையும் செய்யும் அவர்களின் துணிச்சலும்தான் படத்தின் மையம். பருத்தி வீரன் போல தான் இருக்கும் என்று தெரிகிறது...

இந்த படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் தனக்கு இரண்டு நாளாக தூக்கமே வரவில்லை என்று சொல்கிறார் மைனா படம் என்ன பேய் படமா..? தெரியலை... 

எதார்த்தமான படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மைனா படம் பார்க்கலாம். நகைசுவையாக படம் பார்க்கணும் என்றால் வா குவாட்டர் கட்டிங் படம் பார்க்கலாம்... 


Monday, October 25 51 comments

கேள்வியும் நானே பதிலும் நானே...!



கேள்வியும் நானே பதிலும் நானே... ஒரு அரசியல் பிரமுகரை நினைத்து கொண்டு சில கேள்விகள் கேட்டு நானே பதிலும் சொல்ல போகிறேன்.... 

நான் : தமிழ் நாட்டு மக்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?

பிரமுகர் : இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல் என்பதை தமிழ் நாட்டு மக்கள் பின்பற்று கிறார்கள்...

நான் :  உங்களுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் விடுறாங்களே ஆனா ஒரு தடவை கூட யாரும் முயற்சி செய்ய மாட்றாங்களே அது ஏன்? 

பிரமுகர் : உண்மையில் யாராவது எனக்கு மிரட்டல் விடுத்தால் தானே...? நான் யாரையும் மிரட்டாமல் இருந்தால் சரி...!

நான் :  உங்கள் கூட்டணியில் ஒரு கட்சி தலைவர் மட்டும் உங்கள் கூடவே இருக்கிறாரே? நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு அமைச்சர் பதவி எதுவும் தருவிங்களா?

பிரமுகர் :அவருக்கு எப்போதும் எதிர்கட்சியாக இருந்து மக்களுக்கு சேவை செய்வது தான் பிடிக்கும், அவருக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது...! 


நான் : நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு என்ன செய்வீர்கள்?

பிரமுகர் : நான் கொடநாட்டில் இருந்து கொண்டு கூட்டணி கட்சி தலைவர்களை பார்க்க வேண்டும் என்று போயஸ் தோட்டத்திற்கு வர சொல்வேன்... இவர்கள் வந்த காத்திருப்பார்கள் நான் வர மாட்டேன் என்று தெரிந்த உடன் போய் விடுவார்கள்... பிறகு கூட்டணிகட்சி தலைவர்கள் போய் விட்டார்கள்... என்று எனக்கு போன் வந்தவுடன் நான் வருவேன்... கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டணியை விட்டு சென்று விட்டார்கள்.. என்று அறிக்கை விடுவேன்....!   


நான் : மேடம் நம்ம நாட்டில் காமென்வெல்த் போட்டியில் ஊழல் நடந்து இருக்கு என்று சொல்றாங்க, அதை பற்றி நீங்க என்ன சொல்றீங்க?

பிரமுகர் : ஆமா ஆமா நமது நாட்டில் அந்த போட்டி நடந்தால் கண்டிப்பாக ஊழல் செய்வார்கள்..! 

நான் : மேடம் இந்த தடவை நமது நாட்டில் தான் காமென்வெல்த் போட்டி நடைபெற்றது உங்களுக்கு தெரியாதா...?

பிரமுகர் : அப்படியா என்னை கேட்காமல் காமென்வெல்த் போட்டி நடத்திட்டாங்களா..?அதை கண்டித்து நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்  


நான் : மேடம்...மணல் கொள்ளை, மணல் கொள்ளைனு சொல்றாங்களே அப்படி என்றால் என்ன?

பிரமுகர்: எங்களுக்கும் பங்கு கொடுத்தால் அதற்கு வேறு பெயர். பங்கு கொடுக்காமல் அவர்கள் மட்டும் செய்தால் அதற்கு பெயர் தான் கொள்ளை...


நான் : உங்கள் ஆட்சியில் விட விலைவாசி இப்போது உயர்ந்து விட்டதே...?

பிரமுகர் : ஆமாம் ஆமாம் நான் ஆட்சியில் இருக்கும் போது வருசம் 2006  இப்போது வருசம் 2010 இவர்கள் ஆட்சியில் வருசம் கூட ஏறி கொண்டே போகிறது...! 



நான் : மேடம் உங்க அடுத்த யூஸ் அண்ட் த்ரோ யாரு "சாரி.. சாரி" உங்க அடுத்த கூட்டணி யாரு ?

மேடம் : விலை பேசுறோம்... சீக்கிரம் முடிந்து விடும்..! 

நான் : நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன நல்லது செய்வீர்கள்?

மேடம் : என்னை பற்றி என்ன நினைத்தீர்கள்... நான் ஆட்சிக்கு வந்தாலே நல்லது (யாருக்கு) தான்... போங்க மேடம் காமெடி பண்றிங்க...! 



Tuesday, October 19 44 comments

தீபாவளி...





நண்பர்கள் பேசிகொள்வது கூட தன் காதில் விழாதவாறு ஜன்னலில் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான் மகேஷ். ... "டேய் உன்னை தான் டா" என்று அதட்டினான் ராஜா.  என்ன என்று கேட்டான் மகேஷ். "உங்க வீட்டில் தீபாவளிக்கு புது டிரஸ் எடுத்துவிட்டார்களா"? சிறிது நேர மெளனத்திற்கு பிறகு எடுத்துவிட்டார்கள் என்று பொய் சொன்னான்,  "உனக்கு எடுத்து விட்டீர்களா" என்று கேட்டான் மகேஷ். எடுத்து விட்டோம் என்று ராஜா சொல்ல "என்ன டிரஸ் எப்படி இருக்கும்" என்று மகேஷ் ஆவலாய் கேட்டான்.... ராஜாவோ சட்டை இந்த கலர் இப்படி இருக்கும் பேன்டில் மூன்று பாக்கெட் இருக்கும் என்று அவன் நண்பன் சொல்ல சொல்ல அவனும் அதே போல டிரஸ் வாங்க வேண்டும் என்று மனதிற்குள் சொல்லி கொண்டான்.. பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் கூட தீபாவளியை பற்றியே பேசிக்கொண்டு சென்றனர்...

மகேஷின் வீடு வந்தது உள்ளே நுழையும் போதே "அம்மா"... என்று குரல் எழுப்பி கொண்டே சென்றான் "என்ன ஆச்சி" என்று மகேஷ் அம்மா கேட்டார்கள்...என் வகுப்பில் எல்லாரும் புது டிரஸ் வாங்கிவிட்டார்கள், "நாம் எப்போது வாங்க போகிறோம் அம்மா...? "தெரியலையேப்பா அப்பா வரட்டும் அவரை கேட்டு சொல்றேன் சரி போய் முகம் கழுவி விட்டு வா" அம்மா சாப்பாடு போடுறேன் ...சாப்பிட்டு கொண்டே அம்மா ராஜா எல்லாம் புது டிரஸ் வாங்கிடான் ஜீன்ஸ் பேன்ட் ஷர்ட்எல்லாம் வாங்கி இருக்கான் அம்மா அவன் டிரஸ் வாங்கி இருக்கும் கடை பெயர் கூட எனக்கு தெரியும் அங்கேயே போய் நாமும் துணி வாங்கலாம் அம்மா சரி சரி வாங்குவோம் நான் அப்பாவிடம் சொல்கிறேன் 

புத்தகத்தை எடுத்து படித்தாலும் படிப்பில் அவன் கவனம் போகவில்லை அப்பா எப்போது வருவார் என்று வாசலையே பார்த்து கொண்டு இருந்தான் அப்பாவின் வருகைக்காக காத்திருந்து காத்திருந்து தூங்கியே விட்டான் காலையில் எழுந்தவுடன் அப்பாவிடம் சென்று மீண்டும் தன் அம்மாவிடம் கேட்டதையே கேட்டான் அதற்கு அவரும் சரிப்பா அப்பாவுக்கு போனஸ் வரட்டும் உனக்கும் ராஜாவுக்கு எடுத்த மாதிரியே எடுத்து தரேன் என்ன சரியா அப்பா கண்டிப்பா எடுத்து தரேன் "போங்கப்பா போன வருசம் கூட இப்படி தான் சொன்னீங்க" ஆனா எடுத்து தரலை "போன வருசம் அப்பாவுக்கு வேலை இல்லைப்பா அதான் என்னால் முடியலை இந்த வருஷம் கண்டிப்பா எடுத்து தரேன்" என்று சொன்னவுடன் அரைமனதுடன் பள்ளிக்கு சென்றான் 

பள்ளி அறையில்: சென்ற வருட தீபாவளியின் போது நடந்தது நினைவுக்கு வந்தது மகேஷ் எண்ணெய் தேய்த்து குளித்து ரெடியா ஆகுப்பா "போங்கம்மா புது டிரஸ் இல்லை எண்ணெய், தான் இப்போ ரொம்ப முக்கியம்" முனங்கி கொண்டே குளிக்க சென்றான். வெளியே செல்லாமல் வீட்டிலே இருந்தான் மகேஷ் அம்மா "ஏம்ப்பா வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்குரே அப்படியே வெளியே போயிட்டுவாப்பா" "போம்மா நான் போகலை எல்லாம் புது டிரஸ் போட்டு இருக்காங்க நான் மட்டும் பழைய டிரஸ் போட்டு கொண்டு வெளியே போக எனக்கு ஏதோ மாதிரி இருக்கு" அப்பாவிடம் சென்று அப்பா எனக்கு கம்பி மத்தாப்பு மட்டும் வாங்கி கொடுங்க என்றான் "நைட் வாங்கி தரேன்" மகேஷ் ஏம்பா இப்போ வாங்கி தர முடியாதா...? இல்லை மகேஷ் இப்போ வாங்கினா ஒரு பாக்கெட் தான் வாங்க இரவு வாங்கினா அதே பணத்தில் ரெண்டு பாக்கெட் மத்தாப்பு வாங்கலாம், இரவு நேரத்தில் வெடித்தால் தான் அழகா இருக்கும்....

நேரா ஒரு சாக்பீஸ் பறந்து வந்து மகேஷ் தலையில் பட்டது "என்ன மகேஷ் நினைவு எங்க இருக்கு..? "மேம்... தீபாவளி மேல" என்றதும் வகுப்பறையில் ஒரே சிரிப்பலை... மணி அடித்தது எல்லாம் பட்டாசு பார்த்து வெடிக்கணும் ஆசிரியை ஆலோசனை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்...

மறு நாள் தீபாவளி இன்னும் புதுதுணி எடுக்கவில்லை என்ற கோபத்துடன் சாப்பிடாமல் அப்பாவின் வருகைக்காக காத்திருந்தான். அப்பா வந்தவுடன் ஆவலாய் பார்த்தான் அவர் வெறும் கையை பார்த்தவுடன் என்னப்பா இன்னும் எனக்கு டிரஸ் எடுத்து தரலையே? "நாளைக்கு தான் எனக்கு போனஸ் தருவாங்க வேலை முடிந்து வரும் போது கண்டிப்பா வாங்கிகொண்டு வரேன்" மகேஷின் அம்மா ஏங்க எங்கயாவது கடன் வாங்கியாவது அவனுக்கு புது டிரஸ் வாங்கி வந்து இருக்கலாம் என்ன நீயும் புரியாமா பேசுறே ஒரு நாளுக்கு யாராவது கடன் வாங்க சொல்றியா ஒரு தடவை கடன் வாங்கினா அதில் இருந்து மீள முடியாது 

மறுநாள் மகேஷ் அப்பா துணி பட்டாசு எல்லாம் வாங்கி வர இரவு 10 ஆகி விட்டது மகேஷ் அப்பா வருவார் வருவார் என்று எதிர் பார்த்து தூங்கி விட்டான். மகேஷை எழுப்பி இங்கே பாருடா அப்பா உனக்கு என்னவெல்லாம் வாங்கி வந்து இருக்கேன் பாரு... ஜீன்ஸ் பேன்ட் எல்லாம் வாங்கி வந்து இருக்கேன் அதையெல்லாம் பார்த்தும் கூட அவன் முகத்தில் சந்தோசம் இல்லை "போங்கப்பா தீபாவளி எல்லாம் முடிந்து போச்சி இந்த தெருவே பட்டாசு வெடிப்பதை நான் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன். நாளைக்கு நான் மட்டும் தனியா பட்டாசு வெடித்தா யார் பார்ப்பார்கள்" மகேஷ் அடுத்தவர் பார்க்க வேண்டும் என்பதற்க்காக நாம் எதையும் செய்ய கூடாது, நம்ம சந்தோசம் தான் முக்கியம், நாளைக்கும் தீபாவளி கொண்டலாம், நாளைக்கு நீ பட்டாசு வெடி, இந்த தெருவே உன்னை பார்க்கும்....! எப்படியோ தன் மகனை சமாதானம் செய்தார் மறுநாள் மத்தாப்பை எடுத்து பற்ற வைத்து "அப்பா நீங்களும் வாங்க என்று சரவெடியை எடுத்து பற்ற வைத்தான் சந்தோசமாக தீபாவளி கொண்டாடினான் மகேஷ்... 



Thursday, October 14 37 comments

உங்களுக்காக....



                                             முதலில் பிரஷ் பண்ணுங்க



டீ குடிங்க 


பழம் சாப்பிடுங்க 



                                       காலிஃபிளவர்+மட்டன் 


                                            யாருக்கு தலை வேண்டும்?



        சைவம் அசைவம் ரெண்டு பேரும் சாப்பிடலாம்











                                           சரி சரி தண்ணி குடிங்க 



                                                ஜப்பான் டிஷ் 






Monday, October 11 92 comments

சிரிப்போ... சிரிப்பு...





சிஷ்யன்: என்ன குருவே asp.net புத்தகத்தை கையில் வைத்து இருக்கிங்க 

சாமியார் : என்ன பண்றது வர வர நிறைய ஐ.டி. ஆளுங்க நம்ம ஆசிரமத்துக்கு வர ஆரம்பிச்சுடாங்க அவங்க லாங்குவேஜ்லயே பேசினாத்தானே காரியம் ஆகும் 

சிஷ்யன் : ஆனந்தப் பரவச நிலையைப் பற்றி விளக்கிட்டு இருந்த குரு ஏன் அரை மணி நேரமா அண்ணாந்து இருக்காரே? நேத்து நைட் அடிச்ச சரக்கோட ஹேங் ஓவர் இன்னும் தீரலையோ..

சாமியார் : அந்த பெப்பர் போட்டு வைத்து இருக்கும் தீர்த்தம் எடுத்து கொண்டு வா...

சாமியார் : சிஷ்யா... ஆசிரமத்துக்கு வர்ற பக்தர்கள் கிட்ட அவங்க பர்ஸையெல்லாம் என் கண்ணுக்கு மறைவா உள்ளே வைக்க சொல்லு பழைய தொழில் ஞாபகத்துல கை தன்னாலே போகுது.


 சாமியார் : சிஷ்யா...என்ன காலை இரவும் பக்தர்கள் வருவதே இல்லை..ஏன்  

சிஷ்யன் : குருவே மக்கள் எல்லாம் டிவி சீரியல் பார்க்கிறார்கள்...எதாவது செய்தால் தான் நாம் ஆசிரமத்துக்கு கூட்டம் வரும்...

சாமியார் : நமது   ஆசிரமத்திற்கு உடனே நான்கு டிவி வாங்குங்கள் இலவசமாக கொடுத்தாலும் கேமரா வாங்கி விடாதீர்கள்...

சிஷ்யன் : குருவே நடிகர் விஜய் உங்களை பார்க்க வந்து இருக்கிறார்...

சாமியார் : சிஷ்யா அவரிடம் போய் சொல் நான் சாமியாரே இல்லை என்று..

சிஷ்யன் : குருவே அவர் நடிகரே இல்லை என்று சொல்கிறார்
சாமியார் எங்கு போனார் என்று சிஷ்யர்கள் தேடி கொண்டு இருக்கின்றனர்கள்   
   
................................................................................................................

நான் சொல்ற ஜோக் எல்லாம் நான் எழுதினேன் என்று தப்பா நினைக்காதீங்க நான் படித்த ஜோக்.சிலவற்றை சொல்லி இருக்கேன் நானும் எழுதி இருக்கேன் நம்புங்க... சாமியார் ஜோக் படித்தும் சிரிப்பு வர வில்லை என்றால் இதோ சில கடி ஜோக் சொல்றேன் அதுல சிரிப்பு வருதான் பாருங்க கடி ஜோக்கில் சிரிப்பு வரவில்லை என்றால் இவன் இப்படி பதிவு போட்டு கொல்றானே என்று சுவற்றில் போய் முட்டி கொள்ளுங்கள்...

அப்பா அடிச்சா வலிக்கும்...
போலீஸ் அடிச்சா வலிக்கும்...
ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்
ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?
.............................................................


நண்பர் 1 : என்னடா இன்னைக்கு ஒரே சந்தோசமா இருக்கே 

நண்பர் 2 : நேத்து எங்க வீட்டில் திருட்டு போய் விட்டது 

நண்பர் 1 : என்னடா சொல்றே இதுக்கு நீ கவலையா தானே இருக்கணும் 

நண்பர் 2 : அந்த திருடன் போகும் போது என் மனைவியை ரெண்டு அடி அடிச்சான் அதான் சந்தோசம்

..........................................................................................................................................................

நோயாளி : டாக்டர் பல் ஆடுது 
டாக்டர் : வாங்க வாங்க மானாட மயிலாட ஆடுறதுக்கு சேர்த்து விடுகிறேன் 

...........................................................................................................................

மக்கள் :என்ன விஜய் ஜோக் சொல்லனுமா அமைதியா இருங்க சொல்றேன்

விஜய் : நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட...
மக்கள் : டேய், நீ அடிச்சா கூட தாங்கிடுவோம் கொய்யால, நீ நடிச்சா தாண்டா தாங்க முடியல...



Thursday, October 7 45 comments

வாழ்த்தலாம் வாங்க.....



நான் சில வலைபக்களை பார்த்து கொண்டு இருந்த போது திடீர் என்று இவர் வலைபக்கத்தில் இருந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது இவர் பெரிய பில்டப் பார்டி என்று நினைத்தேன், அவரின் "இரண்டு இட்லி கொடுப்பா" என்ற பதிவை படித்தவுடன் அட டா ரொம்ப நல்லவர்.என்று நினைத்தேன். அந்த கதை உண்மை என்று ஏமார்ந்து போனேன், இன்னும் எத்தனை பேர் ஏமாந்து  போனார்களோ...! அவர் எழுதும் கதை எல்லாம் உண்மை என்று நினைத்து இருந்தேன், ஆனால் எல்லாம் கற்பனை என்று பிறகு தெரிந்து கொண்டேன், தேவா திருவொற்றியூர் பற்றி எழுதி இருந்தார், நானும் இருப்பது திருவொற்றியூர் என்பதால் அப்போது தான் நாங்கள் நண்பர்கள் ஆனோம் 



அவரின் பதிவுகள் சிலருக்கு புரியாமல் இருக்கும் (அவருக்கு புரியுமா என்று கேட்காதீங்க) சாரி அதுக்காக அவர் டிக்ஷனரியா தர முடியும் என்று கேட்பார் எப்போதும் எதையாவது தேடி கொண்டே தான் இருப்பார் நேற்று நான் அவர் வீட்டிற்கு சென்றேன் அப்போதும் எதையோ தேடி கொண்டு இருந்தார் என்ன என்று கேட்டதற்கு கார் சாவியை தேடி கொண்டு இருக்கிறேன் என்றார் 


*  இவருக்கு கடவுளை பற்றி தெரிந்ததை விட காதலை பற்றி நிறைய தெரியும் ஆனா தீவிர சிவ பக்தர் என்று சொல்லுவார் 

*  கண்களைபார்த்தால் காதல் திருடன் என்று கண்டு பிடித்து விடுவார்கள் என்று இவர் கண்ணாடி போட்டு இருக்கிறார்.அட இது நான் சொல்ல வில்லை அவரே சொல்லியிருக்கிறார் 

*  வியாழகிழமை அன்று கண்டிப்பாக காதல் கவிதை எழுதுவார்... எல்லாம் வீட்டில் பார்க்க மாட்டார்கள் என்று தைரியம் தான்

*  இவர் பதிவின் தலைப்பை எல்லாம் பாருங்கள் அதில் ஆச்சரிய குறி ! இருக்கும் நான் ஏன் அப்படி இருக்கு என்று அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் அனைவரும் ஆச்சரியமாக பார்க்க வேண்டும் என்று வைத்து இருக்காராம் 


ஆமா இப்போ நான் ஏன் தேவா பற்றி உங்களுக்கு சொல்கிறேன் தெரியுமா? அவருக்கு இன்று பிறந்தநாள் சுமார்........ 1976ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அன்று பிறந்தார்... வயது எத்தனை சொல்ல மாட்டேன் நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள். அட அவர் என்னிடம் 30 வயசுனு சொல்ல சொல்றார்...   


முக்கிய செய்தி: ப மு க சார்பில் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் பொருளாளர்: தேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விட்டு நிதியை என்னிடம் கொடுத்து விட்டு போங்கள்...





Tuesday, October 5 60 comments

நாட்டை திருத்துங்கள்...


எப்படியாவது ஒரு பதிவு எழுதி இந்த நாட்டை திருத்தி விடலாம் என்று யோசித்து, யோசித்து, எனக்கும் ஒன்றும் தோன்ற வில்லை அட நம்ம நடிகர்கள் தான் படத்தில் நாட்டை திருத்துறாங்க அவர்களிடம் போய் எதாவது ஐடியா கேட்கலாம் என்று செல்கிறேன் நீங்களும் வாங்க.... 


நான் முதலில் போன இடம் சத்தியராஜ் வீடு

சத்தியராஜ் : வாங்க தம்பி, என்ன வேண்டும்? நான் நன்கொடை எல்லாம் கொடுப்பது இல்லை, வாங்குவது மட்டும் தான்.   

நான் : இல்லை சார் நான் அதுக்கு வரலை,  

சத்தியராஜ் : அப்போ "என் பையனை வைத்து படம் எடுக்கப் போறிங்களா?  

நான் : அட உங்க பையன் நடிகரா சொல்லவே இல்லை, 

சத்தியராஜ் : சரி அப்போ நீங்க எதுக்கு தான் வந்தீங்க 

நான் : அதான் சார் இந்த நாட்டை திருத்தனும் அதுக்கு ஒரு ஐடியா வேண்டும் அதுக்கு தான் உங்களிடம் வந்தேன். 

சத்தியராஜ் : என்ன இந்த நாட்டை திருத்த போறியா அப்போ என் படத்தை யார் பார்ப்பார்கள்? இப்போ நீ இந்த நாட்டை திருத்தி என்ன பண்ண போறே, அப்படியே நீ சொன்னா திருந்தி விடுவாங்களா போய் வேலையை பாருடா 

நான் : சார்... சார்... ஏதாவது ஐடியா கொடுங்க சார் நான் போயிடுறேன், 

சத்தியராஜ் : இவனுங்க எல்லாம் திருந்தி விட்டால் என் படத்தை எவன் பார்ப்பான் ஐடியா எல்லாம் தர முடியாது   




அடுத்து ரஜினியிடம் சென்றேன். நான் சென்றவுடன் வாங்க வாங்க என்ன சன் பிக்சர் 40 கோடி கொடுத்து விட்டார்களா 

நான் : என்ன சார் இன்னும்மா உங்களுக்கு சம்பளம் தரமாட்டுறாங்க, 

ரஜினி : நான் சென்னையில் இருக்கும் போதே தெரியலையா இன்னும் எனக்கு சம்பளம் தரலை, 

நான் : (ஆமா ஆமா தந்து இருந்தா இவர் இந்நேரம் இமயமலை போய் இருப்பார்)

ரஜினி : சரி சரி உங்களுக்கு என்ன வேண்டும் என்று கோபத்துடன் கேட்டார்... ரஜினி நாட்டை திருத்தி என்ன செய்ய போறே நானே இன்னும் சம்பளம் வரல கடுப்புல இருக்கேன் நீ வேற வந்து நாட்டை திருத்துறேன், வீட்டை திருத்துறேன் சொல்லிக்கிட்டு போடா அந்த பக்கம். 

நான் : சார்....அவனுங்க உங்களுக்கு சம்பளம் தருவாங்கனு இன்னுமா நம்புறீங்க 

ரஜினி : அடபாவி என்னடா சொல்றே? 

நான் : ஹா ஹா ஹா உண்மையை சொல்றேன்!

யாரும் இதுவரை எந்த ஐடியாவிம் தரலை சரி டாக்டர் விஜயிடம் போனால் எதாவது ஐடியா தருவார் அவர் தான் மூன்று படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் அதனால் நேரா A.V.M.ஸ்டுடியோவில் போய் பார்க்கலாம் என்று போனேன் நான் சென்று கொண்டு இருக்கும் பொழுது ஒரு குரல் கேட்டது யாரு அது என்று திரும்பி பார்த்தேன் அங்கே விஜய் இருந்தார், என்னை பார்த்து  

விஜய் : எப்படி இருக்கு என் புது கெட்டப் என்று கேட்டார். 

நான் : ஒன்றும் தெரியவில்லை அவரிடமே கேட்டேன் என்ன கெட்டப் என்று கேட்டேன் 


விஜய் : தன் தலை முடியை காண்பித்து hair coloring செய்து இருக்கேன் பாருங்கள், எப்படி இருக்கு என் கெட்டப் படம் ஓடுமா? 

நான் : என்ன விஜய் திடீர் என்று இப்படி கஷ்டமான கேள்வியை கேட்டு விட்டிர்கள், 

விஜய் : சரி சௌந்தர் நீங்க எதுக்கு வந்தீங்க? 

நான் : அதான் விஜய், இந்த நாட்டை திருத்த ஒரு ஐடியா வேண்டும் அதான் வந்தேன் நான் சொல்லி முடிப்பதற்குள் 

விஜய் : நான் வேண்டும் என்றால் நடிப்பதை நிறுத்தி விடவா என்று கேட்டார் 

நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். சார் நீங்க எவ்வளவு நல்லவர் உங்களை போய் எல்லோரும் கலாய்கிறாங்க...நீங்க ரொம்ப நல்லவர்னு சொன்னேன் 

விஜய் : சரி சௌந்தர் இதுக்கு ஐடியா தரலாம வேண்டாமா என்று அப்பாவிடம் கேட்டு சொல்றேன்


அடுத்து நான் போன இடம் உள்ளே போகும் போதே அந்த பாடல் எனக்கு கேட்டது அட பொன்னான மனசே பூவான மனசே வெக்காத பொண்ணு மேல ஆசை.... உள்ளே போனேன் T.R. இருப்பார் என்று உள்ளே நுழைந்தேன் அந்த பாடலை பாடி கொண்டு இருந்தவர் சிம்பு .. நான் கூப்பிட்டு பார்த்தேன் அவர் என்னை பார்க்க வில்லை சிறிது நேரம் கழித்து பக்கத்து அறையில் இருந்து T.R வந்தார் 

T.R : வாங்க தம்பி நம்ம கட்சில சேர வந்திங்களா? 

நான் : சார் நானே நாட்டை திருத்தலாம் ஒரு ஐடியா கேக்கலாம் என்று வந்து இருக்கேன். 

T.R: ஓஹ அப்படியா இனி என் பையனை ஒழுங்கா இருக்க சொல்றேன் 

நான் : சார் அவர் எந்த தப்பு இப்போ பண்றது இல்லையே   

T.R : அப்படியா தம்பி சரி இப்போ நான் என்ன செய்யணும் நான் வேண்டும் என்றால் ஒரு படம் எடுத்து தரவா? 

நான்: ஆதெல்லாம் வேண்டாம். கெட்டு போகும் நாடு அப்படியே கெட்டு போகட்டும். நாங்கள் பேசி முடிக்கும் வரை சிம்பு அந்த பாடலை இன்னும் பாடி கொண்டு இருந்தார். T.Rரிடம் கேட்டேன் என்ன இவர் இன்னும் அதே பாடலை பாடி கொண்டு இருக்கிறார் அவன் அப்படிதான் ரெண்டு வருசமா ஒரே பாட்டை பாடி கொண்டு இருக்கிறான்


எனக்கு எங்கும் நாட்டை திருத்த ஐடியா கிடைக்க வில்லை என்ன செய்வது...??

ஒன்றும் புரியாமல் ஒருவித சோகத்துடன் நடந்து வந்து கொண்டு இருந்தேன்....

அப்போது ஏதோ ஒரு குரல் எனக்கு கேட்டது யார் குரல், "முதலில் நீ திருந்து....பிறகு நாட்டை திருத்தலாம்.......உன்னை நீ சரியாக வைத்துகொள், நாடு தன்னால் திருந்தி விடும்

 ஆமாம் சரிதான் இது எனக்கு இப்பதான் புரிகிறது.

"ஒவ்வொரு மனிதனும் தன்னை திருத்தி கொண்டால் நாடு தன்னால் திருந்தி விடும்"



Friday, October 1 37 comments

அலட்சியங்களால் அவதி படும் இந்தியா....




இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் தான் இந்த காமன்வெல்த் கூட்டமைப்பு,  இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்ததை நினைவு படுத்தும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறுகிறது என்று நினைக்கிறேன்,  இங்கிலாந்து ராணி தான் எப்போதும் காமன்வெல்த் போட்டிகளை தொடங்கி வைப்பார், இந்த முறை நீங்கள் இந்தியாவிற்கு சென்றால் அது தான் கடைசி பயணம் என்று ஏதோ ஒரு ஜோசியகாரன் கூறியதால் அவர் வர வில்லை, அவருக்கு பதில் அவரது மகன் சார்லஸ் வருகிறார்


70,000 ஆயிரம் கோடி ரூபாயில் செலவில் உருவாகப்பட்டு இருக்கிறது காமன்வெல்த் போட்டிகள், 72 நாடுகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த வாய்ப்பை பெற்றது இந்தியா, அரசே லஞ்சம் கொடுக்கும் பொழுது மக்களை குறைசொல்லி என்ன பயன். மூன்று வருடமாக இவர்கள் மைதானம் அமைக்கும் பணியை செய்துவருகிறார்கள் எப்போது தான் மைதானத்தை தயார் செய்வார்களோ, இது வரை முழுமையாக தயார் ஆகவில்லை என்பது தான் உண்மை. நமது நாட்டு அரசியல்வாதிகள் எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்று தான் கணக்கு போடுவார்கள், தவிர அந்த பணியை எத்தனை நாளில் முடிக்கலாம் என்று எப்போதும் கணக்கு போடமாட்டார்கள்


வரும் அக்டோபர் மூன்றாம் தேதி காமன்வெல்த் போட்டிகள் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. சென்ற வாரம் வரை எதையும் உறுதியாக கூறமுடியவில்லை, ஆனால் இப்போது எப்படியோ போட்டி நடைபெற போகிறது என்ன இருந்தாலும் இந்தியாவால் இந்த போட்டியை நல்ல முறையில் செய்ய முடியவில்லை என்ற பெயர் தான் இருக்கும். எப்படியோ தட்டுதடுமாறி போட்டியை முடித்தது என்ற பெயர் வரும். யாருக்கு தெரியும் போட்டி நடைபெறும் போது யார் தலையில் என்ன விழ போகிறதோ என்ற பயத்துடன் தான் வீரர்கள் விளையாட வேண்டும் 

அமெரிக்கா நாட்டு உளவு அமைப்புகளும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது அல்கொய்தா, லஷ்கர் -இ- தொய்பா இயக்கம் வெளிநாட்டு வீரர்களை தாக்கபோகிறார்கள் என்று இவர்கள் வேறு எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுகிறார்கள் அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் தாக்கினர் அப்போ இவர்கள் உளவுதுறை என்ன செய்து கொண்டு இருந்தது, அமெரிக்காவிற்கு வேறு வேலை, இல்லை நான் சொல்வது தான் இந்த உலகத்தில் நடக்கிறது என்று எண்ணம்


சீனா ஒலிம்பிக் போட்டியை சர்வசாதாரணமாய் நடத்தி விட்டது உலக நாடுகள் பாராட்டையும் பெற்றது ,  இந்தியாவில் ஒரு காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாட்டை ஒழுங்காக செய்ய முடியவில்லை, போட்டி தொடங்கும் நாளை எண்ணி இப்பவே மக்களுக்கு கண்ணை கட்டுது. அரசியல்வாதிகளின் சுயநலம் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவிற்கே கெட்டபெயர்.


 
;