Thursday, June 12 1 comments

உன் வருகையில் கவி..






அதிகாலை 
தேனீர் கோப்பையுடன்
உன் அருகில்
நான் ..!
சுவை குறைந்ததென 
பருகச்சொல்லி 
மீண்டும் சுவைக்கிறாய் ..!

காதலோடு துவங்கியது நம் விடியல்..!


*****
நீ பொய் உரைப்பது
அழகென்று தெரிந்து
கொண்டேன் ..!
என்னை அழகென்ற போது..!

******

விக்குதடா நினைக்காதே
என்றாய்..!
நினைக்காவிடில் 
உன் சுவாசம் நின்றுவிடும்..! 
சுவாசம் நின்றுவிட்டால் 
நேசம் நின்றுவிடும்..!
நேசம் நின்றுவிட்டால் 


நம் வாசம் மறைந்து விடும்..!



*****
விழியில் விழுந்த தூசியை 

போல் ஒட்டி கொண்டேன்..
கண்ணீரை தவிர வேறேதும் தந்ததில்லை 
இதுவரை..!


******
பேசிக்கொண்டிருக்கையில் 

இமைகளை மட்டும் மூடாதே 
எத்தனை முறை தான் 
சிறை படுவது..!


*******
உன் நேசத்தை 

சிறிது சிறிதாக சேகரிக்கிறேன் 
எறும்பை போல..! 
ஊடலின் போது தேவைப்படும் 
கொறித்துகொள்கிறேன்..!

என்னை விட இந்த 
எறும்பிற்கு உன்மேல் 
அப்படியென்ன காதல் 
கடித்துவிட்டு செல்கிறதே.!


*****
நீ பேசாத நேரத்திலும் 
உன்னோடுபேசி கொண்டிருக்கிறேன் 


நீ பேசிய வார்தைகளோடு..!

*****
ஊடலில் தொடங்கி 

கெஞ்சலில் நெருங்கி 
கொஞ்சலில் முடிகிறது
உன் பார்வை..!


*****

நீயில்லாத பொழுது 


யாரும் செல்லாத வெறிச்சோடிய 
பாதை போல் கவி வர மறுக்கிறது..!

நீ வருகையில் 
கவி தேனீக்களை
போல் சுற்றுகிறது..!


*****
தனிமையில் 

நடைபோட 
பாதச்சுவடும் 
வர மறுத்து 
அடம் பிடிக்கையில் 
நீ மட்டும் 
வருகிறாய்..!
ஏனோ..?!




Monday, June 9 0 comments

அவளோடு ஒரு பயணம் (சிறுகதை)




பத்து மணிக்கெல்லாம் ஆபிஸ்ல இருக்கனும்.  இந்த பஸ் இன்னும் வர காணோம். கடிகாரத்தையும் சாலையையும்  பார்த்து கொண்டிருந்தான் சந்தோஷ். 

பஸ் வருவதை பார்த்து  வேகமாக ஓட , பெண் மீது மோதி இருவரும் தடுமாறி கீழே விழ,கூடியிருந்த அனைவரும் வேடிக்கை பார்க்க,  பெண்ணுக்கு கோவம் வர திட்டித் தீர்த்தாள். 

இந்த கலவரத்தில்  பேருந்தை  தவறவிட்டனர்.

ஏற்கனவே லேட் இதுல இவளுக வேறென புலம்பிக் கொண்டே நகர்ந்தான் சந்தோஷ். 

அவனை பார்த்து திட்டி கொண்டே இருந்தாள்.

"ஏய் பவித்ரா விடு டி வாடி போகலாம்" அழைத்து சென்றாள் தோழி. 

மறுநாள் சந்தோஷ் பேருந்திற்காக காத்திருந்தான், இன்றும் தாமதமாகவே வந்தது.

பவித்ராவை கண்டதும் ஒதுங்கி கொண்டு கடைசியாக  பேருந்தில் ஏறினான்.  

சந்தோஷ் அவளையே பார்த்து கொண்டிருக்க, அவள் பார்கையில் குனிந்து கொண்டான். மீண்டும் அவள் திட்டி தீர்தாள்.

தோழியோ காதில் ஏதோ சொல்ல அவளுக்கும் விழுந்தது திட்டு. 

இறங்கும் இடம் வந்ததும்  கட கட வென ஓடி இறங்கி கொண்டான்.  

ஏய் மிஸ்டர், ஏய் மிஸ்டர்  குரல் கேட்டு திரும்பினான் பின்னால்  அவள்.

"என்னங்க வேணும் நான் தெரியாம தான் மோதினேன் சாரிங்க"

"என்ன தெரியாம மோதினே உனக்கு என்ன அவ்வளவு திமிர்"

அதெல்லாம் இல்லைங்க சொல்லி கொண்டிருக்கையில் டிக்கெட்டை மேலே எறிந்து விட்டுச்  சென்றாள்.

அடுத்த நாள் பேருந்தில் அவனை தேடி கொண்டிருந்தாள். அவனை எங்கும் காணவில்லை.  ஒரு இருக்கையில் குனிந்த தலையுடன் புத்தகத்தை  புரட்டி கொண்டிருந்தான்.

இன்றும் அதே மிஸ்டர் தொடங்கியது.

 "அட என்னங்க இன்னைக்கு நான் உங்களை பார்க்கவே இல்லையே எனக்கு சைட் அடிக்கிற அளவிற்கு தைரியம் இல்லைங்க" 

"அப்போ தைரியம் இருந்தா என்ன சைட் அடிப்ப அப்படித் தானே" 

"அட என்ன உங்களோட வம்பா போச்சு" 

மீண்டும் திட்டி டிக்கெட்டை எறிந்தாள்.

அடுத்தநாள்...

அவனை பார்த்தவுடன் அவள் சிரித்தாள். அவன் முறைத்து கொண்டே நகர்ந்து விட்டான்.  

இன்றும் அவள் பின்னால் செல்ல, அவள் வருவதை கண்டதும் நின்று.

"உனக்கு என்ன பெரிய அழகி நினைப்பா உன் முஞ்சை எல்லாம் எவனாவது பார்பானா ஒருதடவை சொன்னா உனக்கு புரியாதா"

சந்தோஷ் கோவத்தோடு  திட்டி தீர்க. அவள் கண்ணீரோடு நின்றாள். 
டிக்கெட்டை முகத்தில் வீசி எறிந்து விட்டு ஒன்றும் பேசாமல் சென்றாள்.

உணவு இடைவேளையின் போது, அவளை திட்டியது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர, அவசரப்பட்டு திட்டிட்டோமோ, நினைத்து கொண்டே பாக்கெட்டில் கை வைத்தான். அவள் வீசியெறிந்த டிக்கெட் சுருண்டு கிடந்தது . 

பிரித்து  பார்தால் " ஐ லவ் யூ" என எழுதி இருந்தது.

அப்போது தான் உணர்ந்தான். அவள் டிக்கெட்டை எறியவில்லை ,  தன் காதலை எறிந்திருக்கிறாள். 

 மிகவும் மகிழ்ச்சியோடு அடுத்தநாள் காலை சென்றான். 

அவள் முகத்தை திரும்பி கொண்டாள். 

அவள் கையை பிடித்து, "உனக்கு நான் டிக்கெட் எடுக்கிறேன்" 

இன்னைக்கு மட்டுமா..? என்றாள்.

இல்ல வாழ்கை முழுவதும் எடுக்கிறேன் என்றான்.

அவன் கைகளை இருக்க பற்றி கொண்டாள் பவித்ரா.  
Friday, June 6 1 comments

மெல்லிய மலரொன்று..!




ஜன்னல் வழியே 
புன்னகை மொட்டு உதிர்த்து
எட்டி எட்டி பார்கிறாய்..!

எட்டாத இடத்தில் நீ இருந்தும் 
உன் வாசம் கண்டு 
மயங்கி போகிறேன்..! 

நீ சாய்ந்தாடுகையில் 
நானும் சாய்ந்தாடுகிறேன்..! 

நீ உதிரும் போது 
தாங்க ஓடோடி வருகிறேன்..! 

யாரேனும் பறிக்க எண்ணினால் 
கலங்கித்தான் போகிறேன்..!

இன்னோரு முறை 
என் வீட்டில் பூத்து விடு 
வேண்டாம் 
ஜன்னல் வழியே...!
Wednesday, June 4 2 comments

நீயாகிய நான்..!




என் சுவாசமே நீ யென்பதால் 
உள்வாங்கி வெளியிடுகிறேன் 
நீ இல்லையனில் மரணித்து 
உன்னை தேடி 
காற்றில் அலைந்து கொண்டிருப்பேன்

சுவாசமே காதாலாக..!



என்னை விட்டு விலகுவது உமக்கு 
சந்தோசமெனில் என்றென்றும்
நிலைத்திருக்கும்..!

இறுதி சுவாசம் உள்ளவரை


***********************

என்னை விட என் எழுதுகோலுக்கு
காதல் அதிகமாகிவிட்டது..
உன்னை பற்றி எழுத 
முண்டியடித்து செல்கிறது..!


********************************

மலர் கண்காட்சி என்றார்கள் 
தேடிகொண்டிருகிறேன்
உன்னை..!


**********************

உன் விரல் பட்ட மகிழ்ச்சியில்
துள்ளி குதித்து 
தற்கொலை செய்து 
கொள்கிறது 

நீ உண்டு எறியும்
சாக்லேட் பேப்பர்..!


********************************

நான் இங்கு உன்னுடன் 
மெளனமாக பேசிகொண்டிருக்கிறேன்..!
நீ அங்கு மெளனமாக 

சண்டையிட்டு கொண்டிருக்கிறாய்..!


Monday, June 2 2 comments

காசு பார்க்கும் கோச்சடையான்..!



ஒரு பொருள் அசைவில் இருந்து மற்றொரு எந்த ஒரு பொருளுக்கும், அல்லது உருவத்திற்கும், மாற்ற பயன்படுத்தப்படும் ஒரு தொழில் நுட்பம் மோசன் கேப்சர்.

மோசன்  கேப்சர் தொழில்நுட்பங்கள் கொண்ட  திரைப்படங்களில் கண் விழி, விரல் நகம், முடி, ரேகைகள், எல்லாம் உண்மை தோற்றம் போல் காட்சியளிக்கும். ஆனால் கொச்சடையான் படத்தில் அவ்வாறு காட்சிகள் இல்லை. ரஜினியின்  கண்களை பார்க்க முடியவில்லை.

ரஜினியின் அறிமுக காட்சியை பார்த்து மிகவும் வெறுப்படைந்தேன். சாதாரண ரசிகன் கூட ரஜினியை அழகாக வரைந்து விடுவார். ஆனால் இந்த சௌந்தரியா ஏன் இப்படி கடித்து குதறி வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

ஏற்கனவே நாங்கள் படத்தை வரும் மனிதர்களை பார்த்து  போய் உள்ளோம். இதில் 3D காட்சியில்  ஓநாய் கூட்டம் வேறு அது ஓநாயா, அல்ல நரியா, என்பது சௌந்தரியாவுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.

ரஜினியும் தீபிகா படுகோனும் சண்டையிடும் போது. கும்கி பட யானையின் கிளைமேக்ஸ்   சண்டை காட்சிகள் கண்முன் வருவதை தவிர்க்க முடியவில்லை.

கதை, திரைக்கதை.  என்று பார்த்தால் அதில் கே எஸ் ரவிகுமாரின் பங்களிப்பு நன்றாக தெரிகிறது. படத்தில் வசனத்தை தவிர வேற ஒன்றுமில்லை. ஆனால் இனியும் அவர் பின்னால் நாடு இருக்கிறதென்று வசனம்  வைப்பது படு காமெடியாக  உள்ளது.

 50 ரூபாய் தியேட்டர் கட்டணத்தை 120 ரூபாயென  அதிகரித்து வாங்குவது கொடுமையிலும் கொடுமை.  நான் கண்களை மூடி கொண்டு தான் படத்தை பார்த்தேன். அதனால் எனக்கு பாதி காசை திருப்பி கொடுங்கள், என சண்டையிட்டேன்.அவர் என்னை பார்த்து என்னப்பா படம் பார்த்து இப்படி ஆக்கிட்டே பார்த்து வீட்டுக்கு  போ என்றார்.

கோச்சடையான் என்னும் இந்த மோசன் கேப்சர்  சோதனை தோல்வியை சந்தித்துள்ளது. அந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட எலிகள் தான் நாம். அதுவும் பணம் கொடுத்து நான் சோதனைக்கு வருகிறேன், நான் சோதனைக்கு வருகிறேன், என்று அடித்துபிடித்து  சென்றோம்.  

இந்த (................) படத்தை வைத்து கொண்டு காசு பார்க்கும் ரஜினி கூட்டம். என்ன சொல்வது வேண்டாம்  அந்த கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பி கொள்ளுங்கள்.

சௌந்தரியா அவர்களே இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் எங்க வேண்டுமானால்  வந்து பொய் சத்தியம் செய்கிறோம். ஆனால் இரண்டாம்பாகம் எடுத்துவிடாதீர்கள்.
 
;