மயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவுக்கு மயில் அழகு. மயில் தோகை விரித்தால் பேரழகு. ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆண்கள் எல்லாம் அழகு என்று சொல்லாமல் சொல்கிறது, சரி சரி பெண்களே கோபப்படாதீர்கள், அடர்ந்த காட்டுக்குள் மற்றும் கிராமத்தில் மட்டுமே காணப்படும், நம் நாட்டு தேசிய பறவை மயில்.
மயில் தோகையை விரித்து நடனம் ஆடினால் மழை வரும் என்று சொல்வார்கள், மழை வருமா வரதா தெரியாது, ஆனால் அது நடனமாடும் அழகே தனி. அந்த நடனத்தை பார்த்து பெண் மயில்கள் ஏமாந்து போகும். அதே நேரத்தில் எதிரிகளை முழு வல்லமையோடு எதிர்க்க கூடியது.. அதனால்தான் பாம்புகளுக்கு மயிலைக் கண்டாலே பயம்.
அழகு இருக்கும் இடத்தில் கர்வம் இருக்கும் ஆனால் மயில்கள் மிக சாந்தமானவை... தன்னுடைய அழகில் மமதை இல்லாதவை.....!
குறிப்பு:கம்ப்யூட்டர் ஆணா பெண்ணா உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் விடை அடுத்த பதிவில்