Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts
Monday, July 14 1 comments

நீ வாசிக்க..!





உனக்காகப் படைக்கப் பட்ட 

கவிதைகளெல்லாம் 
நீ வாசித்த பின்னே 
பிறவிப் பலனை 
பெறுகிறது..!

*****

ஒற்றை துளியில் 

ஓர் கவிதை 



உந்தன் பொட்டு..!

*****


உன்னோடு நான் 

ரசித்த காட்சி திரையில் 
உன் நினைவோடு 
அசைபோட்டு கொண்டிருகிறேன் 



உந்தன் நினைவுகள் 
என் திரையில்..!!!

*****

நீ பயணிக்கையில்


உன்னோடு நானும் 

பயணிக்கிறேன்..
காற்றோடு உன் 
கூந்தலை உரசிய படி..!!

*****

உன் வாசிப்பு எல்லாம் 

நானாகி போகின்றேன்..!

என் சுவாசிப்பு எல்லாம் 
நீயாகி போனாய்..!

*****


கவிதை எழுத தொடங்கினால் 

உந்தன் பெயரையே 
உமிழ்கிறது எந்தன் 
எழுதுகோல்..!



பொறாமை கொண்டு 
வீசி எறிய எண்ணுகிறேன் 
உந்தன் பெயரை முத்தமிட்டதால் 
உயிர் பிச்சையிடுகிறேன்..!

*****


ஒரு ஊடலில் 

மற்றொரு ஊடலின் 
நினைவு..! 
புன்னைகையுடன் 
ரசிக்கிறேன்.! 



உன் வருகைக்காக 
ஒற்றைகால் 
கொக்கைப் போல் 
காத்திருக்கிறேன்..! 



என் தேடலும் சுகமானது..!

*****


நீ பேசாத போது 

உன் வார்த்தைகளோடு 
பேசிக் கொண்டிருப்பேன்..!



உன் மௌனம் கலையும் வரை..!

*****


நித்தம் நித்தம் உன் நினைவுகளால் 

கண் இமைக்க மறக்கிறேன்...
விழிகளில் நீ இருப்பதால்...!! 



ஆனந்தமாய் சுற்றித்திரிந்த 
என்னை ஆர்ப்பாட்டமாய்
கைது செய்கிறாய்
விழியால் ..!!

*****


பேசிகொண்டிருக்கையில் கவிதை 

சொல் என்கிறாய்..! 



நான் கேட்டுகொண்டிருக்கிறேன் 
நீ பேசு..!






Monday, June 9 0 comments

அவளோடு ஒரு பயணம் (சிறுகதை)




பத்து மணிக்கெல்லாம் ஆபிஸ்ல இருக்கனும்.  இந்த பஸ் இன்னும் வர காணோம். கடிகாரத்தையும் சாலையையும்  பார்த்து கொண்டிருந்தான் சந்தோஷ். 

பஸ் வருவதை பார்த்து  வேகமாக ஓட , பெண் மீது மோதி இருவரும் தடுமாறி கீழே விழ,கூடியிருந்த அனைவரும் வேடிக்கை பார்க்க,  பெண்ணுக்கு கோவம் வர திட்டித் தீர்த்தாள். 

இந்த கலவரத்தில்  பேருந்தை  தவறவிட்டனர்.

ஏற்கனவே லேட் இதுல இவளுக வேறென புலம்பிக் கொண்டே நகர்ந்தான் சந்தோஷ். 

அவனை பார்த்து திட்டி கொண்டே இருந்தாள்.

"ஏய் பவித்ரா விடு டி வாடி போகலாம்" அழைத்து சென்றாள் தோழி. 

மறுநாள் சந்தோஷ் பேருந்திற்காக காத்திருந்தான், இன்றும் தாமதமாகவே வந்தது.

பவித்ராவை கண்டதும் ஒதுங்கி கொண்டு கடைசியாக  பேருந்தில் ஏறினான்.  

சந்தோஷ் அவளையே பார்த்து கொண்டிருக்க, அவள் பார்கையில் குனிந்து கொண்டான். மீண்டும் அவள் திட்டி தீர்தாள்.

தோழியோ காதில் ஏதோ சொல்ல அவளுக்கும் விழுந்தது திட்டு. 

இறங்கும் இடம் வந்ததும்  கட கட வென ஓடி இறங்கி கொண்டான்.  

ஏய் மிஸ்டர், ஏய் மிஸ்டர்  குரல் கேட்டு திரும்பினான் பின்னால்  அவள்.

"என்னங்க வேணும் நான் தெரியாம தான் மோதினேன் சாரிங்க"

"என்ன தெரியாம மோதினே உனக்கு என்ன அவ்வளவு திமிர்"

அதெல்லாம் இல்லைங்க சொல்லி கொண்டிருக்கையில் டிக்கெட்டை மேலே எறிந்து விட்டுச்  சென்றாள்.

அடுத்த நாள் பேருந்தில் அவனை தேடி கொண்டிருந்தாள். அவனை எங்கும் காணவில்லை.  ஒரு இருக்கையில் குனிந்த தலையுடன் புத்தகத்தை  புரட்டி கொண்டிருந்தான்.

இன்றும் அதே மிஸ்டர் தொடங்கியது.

 "அட என்னங்க இன்னைக்கு நான் உங்களை பார்க்கவே இல்லையே எனக்கு சைட் அடிக்கிற அளவிற்கு தைரியம் இல்லைங்க" 

"அப்போ தைரியம் இருந்தா என்ன சைட் அடிப்ப அப்படித் தானே" 

"அட என்ன உங்களோட வம்பா போச்சு" 

மீண்டும் திட்டி டிக்கெட்டை எறிந்தாள்.

அடுத்தநாள்...

அவனை பார்த்தவுடன் அவள் சிரித்தாள். அவன் முறைத்து கொண்டே நகர்ந்து விட்டான்.  

இன்றும் அவள் பின்னால் செல்ல, அவள் வருவதை கண்டதும் நின்று.

"உனக்கு என்ன பெரிய அழகி நினைப்பா உன் முஞ்சை எல்லாம் எவனாவது பார்பானா ஒருதடவை சொன்னா உனக்கு புரியாதா"

சந்தோஷ் கோவத்தோடு  திட்டி தீர்க. அவள் கண்ணீரோடு நின்றாள். 
டிக்கெட்டை முகத்தில் வீசி எறிந்து விட்டு ஒன்றும் பேசாமல் சென்றாள்.

உணவு இடைவேளையின் போது, அவளை திட்டியது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர, அவசரப்பட்டு திட்டிட்டோமோ, நினைத்து கொண்டே பாக்கெட்டில் கை வைத்தான். அவள் வீசியெறிந்த டிக்கெட் சுருண்டு கிடந்தது . 

பிரித்து  பார்தால் " ஐ லவ் யூ" என எழுதி இருந்தது.

அப்போது தான் உணர்ந்தான். அவள் டிக்கெட்டை எறியவில்லை ,  தன் காதலை எறிந்திருக்கிறாள். 

 மிகவும் மகிழ்ச்சியோடு அடுத்தநாள் காலை சென்றான். 

அவள் முகத்தை திரும்பி கொண்டாள். 

அவள் கையை பிடித்து, "உனக்கு நான் டிக்கெட் எடுக்கிறேன்" 

இன்னைக்கு மட்டுமா..? என்றாள்.

இல்ல வாழ்கை முழுவதும் எடுக்கிறேன் என்றான்.

அவன் கைகளை இருக்க பற்றி கொண்டாள் பவித்ரா.  
Friday, June 6 1 comments

மெல்லிய மலரொன்று..!




ஜன்னல் வழியே 
புன்னகை மொட்டு உதிர்த்து
எட்டி எட்டி பார்கிறாய்..!

எட்டாத இடத்தில் நீ இருந்தும் 
உன் வாசம் கண்டு 
மயங்கி போகிறேன்..! 

நீ சாய்ந்தாடுகையில் 
நானும் சாய்ந்தாடுகிறேன்..! 

நீ உதிரும் போது 
தாங்க ஓடோடி வருகிறேன்..! 

யாரேனும் பறிக்க எண்ணினால் 
கலங்கித்தான் போகிறேன்..!

இன்னோரு முறை 
என் வீட்டில் பூத்து விடு 
வேண்டாம் 
ஜன்னல் வழியே...!
Wednesday, June 4 2 comments

நீயாகிய நான்..!




என் சுவாசமே நீ யென்பதால் 
உள்வாங்கி வெளியிடுகிறேன் 
நீ இல்லையனில் மரணித்து 
உன்னை தேடி 
காற்றில் அலைந்து கொண்டிருப்பேன்

சுவாசமே காதாலாக..!



என்னை விட்டு விலகுவது உமக்கு 
சந்தோசமெனில் என்றென்றும்
நிலைத்திருக்கும்..!

இறுதி சுவாசம் உள்ளவரை


***********************

என்னை விட என் எழுதுகோலுக்கு
காதல் அதிகமாகிவிட்டது..
உன்னை பற்றி எழுத 
முண்டியடித்து செல்கிறது..!


********************************

மலர் கண்காட்சி என்றார்கள் 
தேடிகொண்டிருகிறேன்
உன்னை..!


**********************

உன் விரல் பட்ட மகிழ்ச்சியில்
துள்ளி குதித்து 
தற்கொலை செய்து 
கொள்கிறது 

நீ உண்டு எறியும்
சாக்லேட் பேப்பர்..!


********************************

நான் இங்கு உன்னுடன் 
மெளனமாக பேசிகொண்டிருக்கிறேன்..!
நீ அங்கு மெளனமாக 

சண்டையிட்டு கொண்டிருக்கிறாய்..!


Thursday, May 22 0 comments

நித்தம் நித்தம் நினைகையில்



இமையெனும் வில்கொண்டு
பார்வையில் அஸ்திரம் ஏந்துகிறாயே ..!

கர்ணன் கவசம் தோற்கும் 
உன் நேசதிற்கு முன் நான் எம்மாத்திரம்..!

*****

பிரம்மன் தீட்டிய காகிதமல்ல நீ..!
பிரம்மனுக்காக தீட்டப்பட்ட தூரிகை நீ..!

*****

வீதியில் விலாசம்
தேடிய அவளின் 
விலாசம் நானென்று யார் சொல்வது ..!

*****

நித்தம் நித்தம் 
நினைகையில் விக்குதடி
உனக்கு..!

முத்தம் கூட பத்தலடி
விக்குதடி உனக்கு..!

போதுமென விட்டு விட்டு
போகாதே விக்குமடி உனக்கு.! 

எட்டி வந்து தீர்த்தாலும் 
விக்குமடி உனக்கு..!

****

எங்கிருந்தோ பறந்து 
என்னை உரசுகையில் 
நானும் பறக்கவே நினைக்கிறேன்
அழைத்து செல்வாயா..?

Wednesday, June 15 26 comments

காதல் தேவைதானா..???





இப்பொழுது அனைவரும் முனு முணுத்துக் கொண்டுயிருக்கும் வார்த்தை காதல் திருமணம் செய்ததால் இப்படி அநியாயமா கொலை பண்ணிட்டாங்களே. அந்த பையனை கொலை செய்து விட்டு ஒரு ஆறு மாதமோ ஒரு வருடதிலோ வேறு ஒரு திருமணம் செய்து வைத்து விடலாம் என்ற நினைப்பு, என்ன ஒரு வில்லத்தனம்...!! இவனுங்க எல்லாம் மனுசனா இவ்வாறு சாமானிய மக்கள் பேசி கொள்கிறார்கள்.

காதல் திருமணம் செய்தால் இப்படியா கொலை செய்வது..??? இதே போல்  வட மாநிலத்தில் இப்படி ஒரு முறை நடந்து இருக்கிறது. கிராமங்களில் இப்படி நடைப் பெற்றுள்ளது என கேள்வி பட்டிருப்போம், அவையெல்லாம் கோவத்தில் நடந்திருக்கலாம்.  ஆனால் இப்படி திட்ட மிட்டு கொலை செய்வது இதுவே முதல் முறையென எனக்கு தோன்றுகிறது.

நாம் வாழும் தேசத்தில் காதல் என்றால் ஏதோ தகாத வார்த்தை போல் பார்கின்றார்கள்காதல் என்ற வார்த்தைக்கு இங்கு பல நல்ல  அர்த்தங்கள் இருந்தாலும் அவையெல்லாம் கண்ணுக்கு  தெரியாது, ஒரே ஒரு அர்த்தம் மட்டுமே தெரியும்.

நம் வீட்டில் உள்ளவர்களுக்கு, சினிமாவிலும் நாடகத்தில் வரும் காதல் பிடிக்கும். அதே காதல்  நம் வீட்டினுள் வந்தால் பிடிக்காது. எதற்கெடுத்தாலும் வெளிநாட்டினரை பின்பற்றும்  நம்  மக்கள் ஏன் இந்த காதல் விஷயத்தில்  மட்டும் வெளிநாட்டினரை பின்பற்ற மறுக்கிறார்கள்..??.  

திருமணம் செய்து விட்டார்கள் என்றால் அந்தநேரம் அமைதியாக இருப்பதே சிறந்தது. நம் வீட்டில் ஒருவர் காதல் திருமணம் செய்தால் கோபம் வரலாம், ஆனால் கொலை செய்யும் அளவுக்கு வர கூடாது,

ஏன்னென்றால் பிள்ளைகள் நம்முடன் 25 வருடம், தான் வாழ போகிறார்கள். மீதி இருக்கும் 60 வருடங்கள் அவர்கள் சேர்ந்து வாழ போகிறார்கள், அவர்கள் சேர்ந்து வாழ போகும் வாழ்க்கை அவர்கள் தீர்மானிப்பதில் என்ன தவறு இருக்க போகிறது. நம் பிள்ளைகள் காதல் செய்கிறார்கள் என்றால், அவர்கள் விரும்பும் நபருக்கே திருமணம் செய்து வைத்து விடலாம்.


காதலர்களும் தவறு செய்கிறார்கள், அவர்கள் வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்வது தவறு, முதலில் வீட்டில் தங்கள் விருப்பத்தை சொல்ல வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்லியும் கேட்கவில்லை என்றால் தான், வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ய வேண்டும்.


காதல் திருமணத்தை பணக்காரர்கள் தான் அதிகம் எதிர்கிறார்கள், அடி தட்டுமக்கள் எல்லாம் அவ்வளவாக  எதிர்ப்பதில்லை. நடுத்தர மக்கள் சிலர் ஏற்றுகொண்டும், சிலர் ஏற்றுகொள்ளமலும் இருக்கிறார்கள். அன்று முதல் இன்று வரை காதல் திருமணங்கள் ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது. இவையெல்லாம் மாறுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம்.   

ஒரு காதல் கொலையில் வந்து முடியுமென்றால் அந்த காதல் தேவைதானா..??? என்ற கேள்வியும் மனதில் எழுகிறது

 
;