Sunday, February 27 66 comments

ஜோக்ஸ் + கும்மி குருப்ஸ்...லேடிஸ் பர்ஸ்ட்.
காதலி : ஏங்க.. எவ்வளவு நேரமா பீச்-லே உங்களுக்காக காத்துக் கிட்டிருக்கிறது? 


காதலன் : மன்னிச்சுக்க டார்லிங், நான் எப்பவும் பெண்களுக்கு மரியாதை குடுக்கறவன். அது உனக்கே தெரியும். லேடிஸ் பர்ஸ்ட். இதுதான் என் கொள்கை. நீ முன்னாடி வர்றதுக்கு நான்தான் காரணமாக இருந்திருக்கேன்* 

காதலி: பேச்சுல மட்டும் குறைச்சலில்லை..* 

காதலன் : நீ இப்படி கோபப்பட்டா கூட அதுவும் அழகாத்தான் இருக்கு* 

காதலி: கோபத்துல என்ன அழகு இருக்கு? 

காதலன் : கண்ணு படபடன்னு துடிக்குது பாரு. அதுவே ஓர்அழகுதான். 

சரி.. இந்தா சுண்டல்* 

காதலி: நீங்க சாப்பிடுங்க* 

காதலன் : நீதான் முதல்லே* லேடீஸ் பர்ஸ்ட்.* 

கண் சிமிட்டறதை வச்சே ஒருத்தருடைய உடல், மனநிலையையும் கண்டு பிடிக்கலாமாம். 

காதலி: அப்படியா? 

காதலன் : ஆமாம்* நரம்பியல் விஞ்ஞானிகள் சொல்றாங்க. கண் சிமிட்டறது குறைச்சலா இருந்தா மனது சந்தோஷமாக இருக்குன்னும், அதிகமாக இருந்தா உடம்பு, மனசுல வலி இருக்குன்னு அர்த்தம். அமெரிக்க ஜனாதிபதி புஷ் தேர்தல் பிரச்சார கூட்டத்துல பேசறப்போ எப்படியெல்லாம் அவர் கண்ணு துடிச்சதுங்கறதை ஒருத்தர் ஆய்வு பண்ணியிருக்கார். 

காதலி: பரவாயில்லையே* 

காதலன் : கண் சிமிட்டலை வச்சே நோயாளியின் வலியை புரிஞ்சக்கலாம். மூளைக் கோளாறுகளை கண்டுபிடிக்கலாம்.மனசுல என்ன விதமான கவலைங்கறதைக்கூட கண்டுபிடிக்கலாமாம். 

காதலி: சரி, அதெல்லாம் இப்ப எதுக்கு? 


காதலன் : காதலர்கள் அர்த்தமில்லாமே எதையாவது பேசிக்கிட்டிருப்பாங்கன்னு சொல்றது வழக்கம். நாம கொஞ்சம் அர்த்தத்தோடு பேசுலாம்னு பார்த்தேன். 

காதலி: நானும் அர்த்தத்தோடு ஒரு கேள்வி கேட்கிறேன். நம்ம கல்யாணம் எப்போ? 

காதலன் : இது என்ன கேள்வி. என்னோட கொள்கைதான் உனக்கு நல்லா தெரியுமே.. லேடிஸ்பர்ஸ்ட். முதல்லே உனக்கு *அதுக்கப்புறம் எனக்கு*

                             
                                                  ******************************** 

ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.

‘‘எங்கே இருந்து வருகிறாய்?’’ என்று கேட்டார்கள்.

‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன்’’ என்றான்.

கேட்டவர்கள் சிரித்தார்கள்.

‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?’’

‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.’’

கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.
இப்போது அவன் சிரித்தான்.

‘‘ஏன் சிரிக்கிறாய்?’’
‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!’’

‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?’’

‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?’’

மக்கள் யோசித்தார்கள்.

‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’’

‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.’’

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?’’

‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!’’

‘‘எது பொய் என்கிறாய்?’’

‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!’’

‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?’’

‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!’’

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.’’

நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?                                                    *****************************
ஏதாவது கல்யாணத்துக்கு போனா என் பாட்டிங்க, அத்தைங் யெல்லாம் கிண்டல் பண்ணுவாங்க “அடுத்து உனக்குதான்” அப்படின்னு. பயங்கரமா கேலி பண்ணுவாங்க. ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல.


                                                     *******************************


டெலிஃபோன் பில் அந்த மாசம் அதிகமாயிடுச்சுன்னு குடும்பத் தலைவர் மீட்டீங் போட்டார் ஒருநாள்....

அப்பா: இதை ஏத்துக்கவே முடியாது, நீங்க எல்லோரும் ஃபோனை அளவா பயன்படுத்தனும். நான் வீட்டில போனை யூஸ் பண்ணுறதே இல்லை. எல்லாம் ஆபீஸ் போன் மட்டும்தான்.

அம்மா: நானும் அப்படித்தான். நம்ம வீட்டு ஃபோனை அவ்வளவா யூஸ் பண்ணுறதே இல்லை. வேலைக்கான ஃபோனைதான் பயன்படுத்துவேன்.

பையன்: நானும்தான் நான் வீட்டு ஃபோனை யூஸ் பண்ணுறதே இல்லை. கம்பெனியில் கொடுத்த மொபைல் மட்டும்தான் எப்பவுமே யூஸ் பண்ணுவேன்.

வேலைக்காரி: அப்புறம் என்ன பிரச்சினை? நாம எல்லோருமே அவங்கவங்க வேலையில் இருக்கிற போனைத்தானே பயன்படுத்தறோம்!!!!.


                                                ***********************************

நன்றி : ஜோக்ஸ் கும்மி குருப் 


 என்னாடா திடீர் ஜோக் சொல்றேன் பாக்குறீங்களா சும்மா விழிப்புணர்வு செய்றேன் சொல்லி உங்களை தொல்லை செய்யவிரும்பவில்லை, இப்படி தான் ஜோக்குகளை போட்டு கொண்டு  கும்மி குழுவில் நாங்கள் கும்மி அடித்து கொண்டு இருப்போம். அதே சமயம் நல்ல விசயங்களையும் பேசுவோம். ஒருவருக்கொருவர் ஆலோசனை சொல்லி உதவிக் கொள்வோம்.அங்கே கும்மி அடிப்பது மனதை லேசாக்கி விடுகின்றது. கும்மி குழுவில்  இருப்பவர்கள் எல்லாம் எப்போதும் ஜாலியாக இருப்போம், எல்லோரும் ஒரே வயதினர் போல செயல்படுவோம், இந்த கும்மி குருப்ஸ் மொத்தம் 35 இருக்கிறோம் டெரர் தான் ஒனர். ஆனா இவருக்கு ஒனர் சொன்னால் பிடிக்காது. 24 மணிநேரம் இந்த குழு செயல்படும்... செல்வா போடும் மொக்கையை அங்கும் தாங்கி தான் ஆகவேண்டும், வெளியில் மொக்கை போடாதவர்கள் கூட அங்கே மொக்கை போடுவோம். எனது நட்சத்திர வாரம் சிறப்பானதாக அமைந்தது...என் கும்மி குருப்ஸ் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன், தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்                                          இது ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி 
ஒரு முக்கிய குறிப்பு பனங்காட்டு நரி என்னிடம் வந்து உன் ஜிமெயில் பாஸ்வேர்ட் சொல் என்றார் நான் எதுக்கு கேக்குறே...? என்றேன். இல்லை சௌந்தர் நான் என்னுடைய பாஸ்வேர்டை மறந்துடேன், உன் பாஸ்வேர்டை போட்டு பார்த்தா ஒரு வேலை என் ஜிமெயில் ஓபன் ஆகும் தான் கொஞ்சம் தா என்றார்... எனக்கு என்ன சொல்வது தெரியவில்லை, நல்ல உருட்டு கட்டையை எடுத்து அவர் தலையில் போட்டேன் ஓபன் ஆச்சு அவர் தல.  அப்படி இருந்தும் அவர் விடுவதாக தெரியவில்லை பாஸ்வேர்ட் கேட்டு தினமும் என்னை தொல்லை செய்கிறார். உங்களிடமும் பாஸ்வேர்ட் கேட்டு இப்படி ஒரு விளம்பரம் செய்ய சொன்னார் யாரவது உங்க பாஸ் வேர்ட் தறீங்களா...? Saturday, February 26 20 comments

நகரத்தை நோக்கி...


இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்பது உண்மையா??? பச்சை பசும் வயல்களும் அழகான இயற்கையையும் நாம் திரைப்படங்களில் ரசிக்கிறோம். ஆனால் அங்கேயே வாழும் வாழ்க்கையை நாம் அனைவரும் விரும்புகின்றோமா? 

என் நண்பர் ஒருவர் சொன்னது. அவரின் தம்பி சிறுவனாக இருந்தபோது குடும்பத்துடன் அவரின் சொந்த கிராமத்துக்குச் சென்றபோது அந்த வீட்டினுள் நுழைய மறுத்து விட்டானாம். அவருக்கும் அவரின் சகோதரர்களுக்கு அங்கே இருக்க பிடிக்கவில்லை. மீண்டும் நகரத்திற்கே செல்ல விரும்பினார்களாம். கிராமத்திலிருந்து நகரத்திற்கு தொழிலுக்காக இடம்பெயர்ந்த குடும்பங்கள் எத்தனையோ! ஆனால் அவர்கள் தத்தம் ஊர்களையே விரும்பாமல் நகரத்தை நோக்கி விரும்பக் காரணம் என்ன?.

கிராமங்களில் இருந்து நகரத்திற்கு நகரும் ஆசைகளில் பொருள் ஈட்டவேண்டும் என்ற ஆசையிருந்தது என்னவோ உண்மைதான்...ஆனால் மனிதர்கள் கொண்டு தொழில் நடத்தி, மனிதர்களுக்காக உற்பத்தி செய்யும்  எல்லாமே ஏன் நகரங்களிலேயே இருக்கவேண்டும் என்ற ஆதங்கம் எழுந்ததிற்கு பதிலை யார்தான் சொல்லுவார்கள்...?
6 1/2 கோடியை கடந்து நிற்கும் எம் தமிழ் மக்களின் ஜனத்தொகையில், 3 கோடி பேருக்கு மேல் கிராமப்புறங்களில் வசிக்கும் போது அவர்களின் வாழ்வாதரத் தேவைகளை ஏன் அந்த அந்த பகுதிகளில் உற்பத்தி செய்ய முடியாது..?அரிசியும், பருப்பும், சக்கரையும், காய்கறிகளும் விளைவிக்குமிடம் கிராமங்களாய் இருக்கும் பொழுது, உற்பத்தியை ஊக்குவிக்கும் செயல்கள் நடக்கின்றனவா..?

மனிதர்கள் வாழும் நில அமைப்பிற்கு ஏற்றபடி தேவைகளுக்கு ஏற்றப்படி உற்பத்தியை பெருக்கும் உக்தியை அரசு மனிதர்களுக்கு ஏன் ஒரு விழிப்புணர்வூட்டும் செயலாக செய்யவில்லை. வெங்காயத்தின் விலை உயர்ந்து போனதற்கு பெட்ரோல் டீசலின் விலை உயர்வை காரணம் காட்டினாலும், அதை உற்பத்தி செய்யும் வேகம் தேவைக்கு ஏற்ப இருந்ததா?

வெறுமனே மழையில்லை என்று சொல்லிக் கொண்டு, ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்று சொல்லிக் கொண்டும் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம் பெயரும் மக்களுக்கு வேளாண்மை தொழில் நுட்பங்கள் சொல்லிக் கொடுக்கப்படாமல் இருப்பதும், சிறு தொழில்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் மக்களின் கைகளுக்குச் சென்று சேராமல் இருப்பதும் தானே காரணம்.3000 பேர் வசிக்கும் ஒரு கிராமத்தின் தேவைகளை ஏன் அங்கேயே இருக்கு சிறு தொழில் செய்யும் வியாபாரிகளிடம் மக்கள் வாங்குவது இல்லை? எது வாங்க வேண்டுமானாலும் தூரமாய் இருந்தாலும் போய் அதை நகரத்தில் வாங்கும் மோகத்தை விதைத்தது யார் ? உள்ளூர் வியாபாரிகளிடம் தேவைகளைச் சொல்லி பொருட்களை அவரிடமே வாங்கத்தொடங்கினால் பணப்புழக்கம் உள்ளூரிலேயே கூடும்தானே.....

உதாரணமாக :நாங்கள் வசிக்கும் ஊரின் இருக்கும் சுற்றுப்புற கிராமங்களும் சரி மற்ற எந்தப் பகுதியின் கிரமமாய் இருந்தாலும் உள்ளூர் வியாபரிகளை மதிப்பதே இல்லை. கைலி எடுக்கவேண்டுமெனில் திருச்சிக்கு போவோம்... பட்டுப்புடவை வேண்டுமெனில் சென்னைக்கு போவோம்.. என்று படையெடுத்து செல்லும் ஒரு போக்கு இருக்கும் போது உள்ளூரில் நமக்காக ஒரு வியாபாரி கடை விரித்து அமர்ந்திருப்பாரே அவர் பூட்டிவிட்டுதானே செல்லவேண்டுமா? ஒரு மனோதத்துவ ரீதியான ஒரு மூளைச் சலவையை நமக்கு நாமே செய்துகொண்டு உள்ளோம் ....உள்ளூரில் வாங்கினால் நமக்கு திருப்திகிடைப்பதில்லை....திருப்தி என்று எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறோம்...

ஒரு பட்டு புடவை வாங்க செல்கிறோம் என்றால் எதற்கு காஞ்சிபுரதிற்கோ, சென்னைக்கோ செல்லவேண்டும், தங்கள் ஊரிலோ அல்லது அருகிலோ நெசவாளி இருப்பாரே அவரிடம் ஆர்டர் கொடுத்து புடவையை நெய்து தர சொல்லலாம் அப்படி செய்தால் ஒரு நெசவாளிக்கு நீங்கள் உதவி செய்தது போல் இருக்கும் பொருளும் நல்ல தரமானதாகவும் இருக்கும். ஆனால் உள்ளூர்காரன் தான் ஏமாற்றுவான் என்ற மனோநிலை இன்னும் நீடிக்கிறது, 


கவர்ச்சி ஒளி கிராமப்புற வாழ்க்கையை சிதைத்து சின்னாபின்னமாக்கி மனிதர்களை நகரங்களை நோக்கி இழுத்துச் செல்கிறன? தொழிலின் பொருட்டுதானே நகரம் நோக்கி நகர்கிறோம்... ? கிராமங்களில் செய்யும் தீப்பட்டியும்  சவுக்காரமும், டொரினோ காளிமார்க் கலர்களும் இழுத்து மூடவேண்டிய கட்டாயத்துக்கு வந்ததற்கு காரணம்....ஏதோ ஒரு கிரிக்கெட் பிளேயரும், சினிமா நடிகனும் போட்டுக் குளிக்கும் சோப்பும், உறிஞ்சு குடிக்கும் குளிர்பானமும் நம்மை மயக்கி வைத்திருப்பதுதானே காரணம்? இது எல்லாம் நாகரீக வளர்ச்சி...என்றும் இதை தவிர்க்க முடியாது என்றும் வாதிடுபர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

பல கிராமப் பொருட்கள், கைத்தொழில்கள் அழியக்காரணம் அவற்றை ஊக்குவிக்காததாலேயே. அதற்கு முக்கிய காரணம் நகர/நாகரீக மோகம் என்பதை மறுக்க இயலாது. நாகரீக அறிவியல் வளர்ச்சிகள் தேவைதான். ஆனால் அதேசமயம் பழமையையும் புராதானமான விசயங்களையும் பாதுகாப்பதும் நம் கடமையாகும். 

நாகரீக வளர்ச்சி என்ற பேரில் கிராமப்புற மேம்பாடுகளும் வேளாண்மை தொழிநுட்பங்களும், உள்ளூர் தொழில்களை ஊக்குவித்தாலும் இன்னும் அதிகமாய் அரசு மட்டும் கவனம் செலுத்தினால் போதாது...மனிதர்களாகிய நாமும் மனதளவில் மாற வேண்டியுள்ளது...

Friday, February 25 43 comments

உங்கள் கேள்விக்கு என் பதில்...
சென்ற பதிவில் உங்களை கேள்வி கேட்க சொல்லியிருந்தேன் நிறைய கேள்விகள் வந்திருந்தது சில கேள்விகளை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கு பதில் கூறியிருக்கிறேன்.. பதில் எழுதுவது மிகவும் கடினமாக இருந்தது எனக்கு தெரிந்த பதிலை தெரிவித்து இருக்கிறேன் தவறு இருந்தால் மன்னித்து கொள்ளவும்.மாணவன் 

பதிவுலகம் மூலம் கற்றுகொண்டது என்ன?
சுமாராக எழுத, நிறைய படிக்க, நிறைய (வீண் )அரட்டை அடிக்க கற்று கொண்டேன்.இங்கு இன்னும் கற்றுகொள்ள நிறைய இருக்கிறது.  


பதிவுலகம் மூலம் அடைந்த நன்மைகள்?

நல்ல நண்பர்கள்,  அதிகம் படிப்பது பலவகையான மனிதர்களின் எழுத்துக்களை தெரிந்து கொண்டது, நானும் ஏதோ நன்றாக எழுதுவதற்கு உதவுகிறது 


பதிவுலக நண்பர்களைபற்றி?

இங்கு கிடைக்கும் ஒரே நன்மை என்னவென்றால் அது நண்பர்கள் தான். அவர்கள் என் மீது அன்பு வைப்பதும், நான் அவர்கள் மீது அன்பு வைப்பதும் , எனக்கு ஒரு நிகழ்வு வரும் பொழுது போன் செய்து பாராட்டுவதும், நண்பர்கள் தான். என் பிறந்தநாள் அன்று சித்ரா அக்கா எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார், என் பிறந்தநாள் என்று எப்படி தெரியும்...? அவரை நான் கேட்டேன், நான் பேஸ்புக்கில் பார்க்கும் போதே குறித்து வைத்து கொண்டேன் என்றார், ஒரு நண்பரின் பிறந்தநாளை கூடதெரிந்து வைத்திருக்க வில்லையென்றால் எப்படி என்றார் அப்போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நல்ல நட்பு கிடைத்து இருக்கிறது என்று பிறகு தேவாஅண்ணன் அவங்க மனைவி (அண்ணி) அவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் காலையில் வந்தவுடன் பாபு அண்ணன் போன் செய்து எனக்கு வாழ்த்து தெரிவித்தார், ரமேஷ் எனக்கு போன் செய்து வாழ்த்து சொன்னார் , கார்த்திக் எனக்காக பதிவு எழுதி வாழ்த்து சொன்னார், பலர் எனக்கு மின்னஞ்சல் செய்து வாழ்த்து கூறினார்கள். இவர்கள் எல்லாம் என்னை பார்த்ததும் கிடையாது நானும் அவர்களை பார்த்தது இல்லை, இந்த பதிவுலகம் தான் எங்களை சேர்த்து வைத்திருக்கிறது, இந்த விஷயத்தை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் எனக்கு ஒரு நிகழ்வு வரும் பொழுது மனதார பாராட்டும் பொழுது...அது தனி ஒரு சந்தோசமாகவும் ஊக்கமும் அளிக்கிறது. எனக்கு தமிழ்மணம் விருது கிடைத்தது, என்றால் அதற்கும் காரணம் நண்பர்கள், இங்கு எனக்கு என்னவெல்லாம் நன்மை கிடைக்கிறதோ அவை எல்லாம் என் நண்பர்களுக்கு சொந்தமானது....நான் எப்போதும் தொடர்பில் இருக்கும் ஒரே நண்பர் எஸ்.கே தான் அவரிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்று வருகிறேன், எனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் இவரிடம் தான் கேட்பேன். எனக்கு மட்டும் இவர் உதவவில்லை அனைவருக்கும் உதவி செய்கிறார், நண்பர்கள் பற்றி எழுதினால் எழுதி கொண்டே போகலாம்.


வளர்ந்துவரும் பதிவுலகம் பற்றி உங்கள் பார்வையில்??

நாளுக்கு நாள் பதிவர்கள் தான், அதிகரித்து வருகிறார்கள். புதிய பதிவர்கள் நன்றாக விழிப்புணர்வுடன் எழுத வேண்டும் என ஆர்வமாக இருக்கிறார்கள், பதிவுலகில் அனைத்து விஷயங்களையும் படித்து தெரிந்து கொள்ளலாம், பல பதிவர்கள் புத்தகம் வெளியிடுகிறார்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது, நன்மைகள் பல இருந்தாலும் போட்டி பொறாமை இருப்பது வேதனைக்குரியது.


பிரபல பதிவர் - விளக்குக?? 

உங்களை பற்றி என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்...!!!மச்சி உனக்கு பதில் தெரியாத கேள்வி எது? 

எனக்கு மட்டும் அல்ல அனைவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி என்றால் அது மரணம் , எப்போது மரணம் என்று யாராலும் சொல்லமுடியாது.  
                                                                           
                                                                             
வேடந்தாங்கல் - கருன்
பிரபல பதிவர்கள் என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு ஏன் கருத்துரை இடுவதில்லை??

நீங்கள் பிரபலம் என்று யாரை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. பிரபல பதிவர்களும் பின்னூட்டம் போடுகிறார்கள்,  சித்ரா பின்னூட்டம் போடுகிறார், கே,ஆர்,பி செந்தில் பின்னூட்டம் போடுகிறாரே, நான் பதிவு எழுத வந்த புதியதில் இவர்கள் வந்து பின்னூட்டம் போட்டு ஊக்கம் அளித்தார்கள். உண்மை தமிழன் பின்னூட்டம் போடுகிறார். அவர் அவருக்கு நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பின்னூட்டம் போடுகிறார்கள், சிலருக்கு நேரம் கிடைக்காமல் இருப்பதால் பின்னூட்டம் போடமால் இருப்பார்கள். சிலர் தாங்கள் பிரபல பதிவர் என்று நினைத்து கொண்டு பின்னூட்டம் போடாமல் இருக்கிறார்கள், ஒரு சிலர் பின்னூட்டம் போடாமல் இருப்பதற்கு காரணம் இருக்கிறது. அவர்களுக்கும் வந்த புதியதில் அனைவருக்கும் பின்னூட்டம் போட்டு இருப்பார்கள், அப்போது விவாதம், சர்ச்சை என்று வந்ததால் சிலர் பின்னூட்டம் போடுவதையே நிறுத்தி விடுகிறார்கள். என்னை பொறுத்த வரை நான் யார் பின்னூட்டதையும் எதிர்பார்த்து பதிவு எழுதுவதில்லை, எனக்கு தெரிந்த சில விஷயங்களை நான் மற்றவர்களுக்கு சொல்கிறேன், பின்னூட்டம் போடாதவர்களை பற்றி நான் என்றுமே சிந்திப்பதில்லை. எனது வேலை நல்ல கருத்தை சொல்வது அவ்வளவு தான், யாரும் பின்னூட்டம் போடவில்லையென்றாலும், நான் பதிவு எழுதி கொண்டு தான் இருப்பேன். நமது பதிவை யாரும் படிக்கவில்லையென்றால் வருத்தப்படலாம் ஆனால் நமது பதிவை அனைவரும் படிக்கிறார்கள் நீங்கள் சொல்லும் பிரபல பதிவர்களுக்கும்...அது போதுமே நமக்கு.Chitra 
பதிவுகள் எழுதுவதால், இப்பொழுது இந்த அளவுக்கு maturity - அறிவு முதிர்ச்சி வந்ததா? இல்லை, அந்த முதிர்ச்சி வந்தததால், பதிவு எழுத வந்தீர்களா?

விளையாட்டாக தான் எழுத தொடங்கினேன் உங்களை போன்ற பதிவரின் எழுத்துக்களை படித்து தான் முதிர்ச்சி வந்தது. பதிவு எழுத எழுத அந்த முதிர்ச்சி மெருகேறியது .எஸ்.கே 
ரசிகன் என்ற பெயரை வலைப்பூவுக்கு வைக்க காரணம்? 

வலையுலகம் பற்றி எனக்கு முன்பே தெரியாது, அதனால் இந்த பெயர் தான் வைக்க வேண்டும் என்று முன்பே தீர்மானிக்க வில்லை. நான் அஜித் ரசிகன் என்பதால், ரசிகன் வைத்தேன். ஆனால் இப்பொழுது உங்கள் அனைவரின் ரசிகன்.


வலைப்பூவுக்கு முன் பின் உங்கள் வாழ்க்கை பற்றி???

வலைப்பூவுக்கு முன் தனிமை, பேப்பர் படிப்பது ..வலைப்பூவுக்கு பின் நிறைய படிப்பது நிறைய நண்பர்கள்


Sriakila 
பதிவுலகம் மூலம் நீ அடைந்த நன்மைகள் என்ன? இதனால் ஏற்பட்ட சங்கடங்கள் என்ன?

நன்மை என்றால் நண்பர்கள் ஒரே குடும்பம் போல் இருப்பது,  பல விஷயங்கள் பற்றி படிப்பது. சங்கடம் என்றால், நான் மற்றும் எனது இரு நண்பர்கள், அந்த இரண்டு நண்பர்களுக்குள் சண்டை வந்தால் நடுவில் நான் தான் மாட்டிகொள்வேன் இந்த நண்பரிடம் பேசினால் அந்த நண்பர் கோபித்து கொள்வார்,அவரிடம் பேசினால் இவர் கோபித்து கொள்வார். இது போல் சங்கடங்கள் தான் வரும் 

karthikkumar 
பதிவுலகம் வந்த பிறகு இணையத்திற்கு அடிமை ஆகிவிட்டேன் என்று உணர்ந்தது உண்டா?.

நான் இன்னும் இணையத்திற்கு அடிமையாகவில்லை எப்போது அடிமையாகமாட்டேன். இணையம் இல்லையென்றால் இரண்டு நாட்களுக்கு சிரமமாக இருக்கும் பின்பு சரியாகிவிடும் 

ஆனந்தி 
அந்த பட்டாம்பூச்சி ,ரோஜாபூ னு கவிதையா ஊடு கட்டினியே...சொல்லு...யாருப்பா தம்பி அந்த பொண்ணு..??

நான் இப்படி கவிதை எழுதுவதற்கு காரணம் நண்பர்கள் சிலர் என்னை கவிதை எழுத தெரியாதா..?என்றார்கள் நான் முயற்சி செய்ததில்லை என்றேன்.முயற்சிசெய்யென்றார்கள் அதனால் தான் எழுதுகிறேன். பெண் என்று யாருமில்லை....நான் எழுதும் கவிதை எல்லாம் கற்பனை தான். (எப்படி கேட்டாலும் உண்மையை சொல்ல மாட்டேனே) 


பன்னிக்குட்டி ராம்சாமி 

இதுவரை யாருக்குமே தெரியாமல் நீங்கள் காத்து வரும் ஒர் ரகசியம், (எங்களிடம் வெளியிட முடிந்தால்).. என்னவென்று சொல்ல முடியுமா...?

ராம சாமி உங்களை பற்றி ஒரு ரகசியம் இருக்கிறது அதை சொல்லவா..?எனக்கு அப்போது 13 வயது எங்கள் வீட்டு பக்கத்தில் நிறைய கல்யாணமண்டபம் இருக்கும் ஒரு நாள் யாரோ ஒருவர் கல்யாண வீட்டிற்கு சென்று...அங்கே நன்றாக சாப்பிட்டு விட்டு அங்கே வைத்த ஐஸ்கிரீம்மை எங்க அம்மாவிற்கு எடுத்து வந்து கொடுத்தேன் ஏது இந்த ஐஸ்கிரீம் என்றார், கடையில் வாங்கி வந்தேன் என்றேன் இது தான் என் ரகசியம். 

உங்கள் பதிவில் பிடிக்காத விஷயங்கள், பிடிக்காத பதிவுகள், &காரணம்?

என் பிடிக்காத விஷயம் எழுத்து பிழை தான். நான் முன்பு எழுதிய பதிவில் இன்னும் எழுத்து பிழைகள் இருக்கும், இப்பொழுதும் எனக்கு எழுத்து பிழைகள் நிறைய வருகிறது, பிடிக்காத பதிவுகள் என்றால் நான் தொடக்கத்தில் பதிவு செய்த ஐந்து பதிவுகள் பிடிக்காது காரணம் அது காபி பேஸ்ட் செய்தது....

எனக்கு ஒரு அறிவுரை சொல்ல வேண்டும் என்றால், உங்கள் அறிவுரை என்ன?

முதலில் உங்கள் பெயரை மாற்ற சொல்வேன், ஏனென்றால் உங்களை பற்றி எனக்கு தெரியும் நீங்கள் செய்யும் வேலை...முதல் ஆனால் நீங்கள் இப்படி பெயர் வைத்திருப்பது ஆச்சரியாமாக இருக்கிறது, நீங்கள் கழுகிற்காக ஸ்பெக்ட்ரம் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தீர்கள். அதே போல உங்கள் பதிவில் ராமர்பிள்ளை பற்றி எழுதியது. இதை போல நல்ல விழிப்புணர்வு கட்டுரைகளை நீங்கள் பதிவிட வேண்டும் 


ப்ரியமுடன் வசந்த் 
ஒரு இளம்பெண் உங்களை பார்த்த முதல் நாளிலே காதல் கொண்டு உங்களிடம் காதலை சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? இல்லையென்றால் அதற்கு விளக்கம் ஆமாம் என்றால் அதற்கும் விளக்கம் தேவை...??

(ஒரு முடிவோட தான் இருக்கீங்க.) நிச்சயமாக மாட்டேன் கடைசிவரை கூட வருபவர் என்பதால் நன்கு அவரை பற்றி தெரியவேண்டும், ஒருவரை பற்றி தெரியாமல் எப்படி காதலை ஏற்றுகொள்வது...அவரிடம் நன்கு பழகி அவர் குணங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொண்ட பிறகு தான் முடிவு எடுப்பேன்.
உங்களை ஏண்டா கேள்வி கேட்க சொன்னோம் என்று இந்த கேள்விகளை பார்த்தவுடன் முழித்து கொண்டிருந்தேன், ஏன் என்றால் கேள்விகள் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை..கேள்விகள் அனைத்து நன்றாக இருந்தது சிலர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது அதனால் மன்னித்து கொள்ளவும்....கேள்வி கேட்ட அனைத்து நண்பர்களும் நன்றி


Thursday, February 24 29 comments

இதய அடைப்பு...

இதயம் உடலின் எல்லா பாகங்களுக்கு இரத்தத்தை பம்ப் செய்யும் மிக முக்கியமான உறுப்பு. ஆனால் அந்த இதயம் செயல்படவும் ஆக்ஸிஜன் தேவை. இதற்காக ஒரு சிறு இரத்தக் குழாய் (கரோனரி தமனி) இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்கிறது. அந்த ரத்தக் குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்படும்போது இதயத்திற்கு ரத்தம் செல்வது தடைபடுவதே இதய அடைப்பு எனப்படுகிறது.

இங்கே இதயத் தசை பற்றி ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும். நம் உடலின் பெரும்பாலான எல்லா தசைகளும் அடிபட்டால் மீண்டும் வளரும் தன்மையுடையவை. ஆனால் இதய தசைக்கு அப்பண்பு இல்லை. அதனால்தான் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்போது, அப்பகுதியில் உள்ள இதய தசை செல்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறக்க ஆரம்பிக்கின்றபோது, இந்த சேதம் குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன் இதயம் முழுவதுமாக செயல்பாட்டை நிறுத்தி விடுகின்றது.

கீழ்காணும் வீடியோக்கள் இதய அடைப்பை நன்றாக விளக்கும்.பெரும்பாலும் இதய அடைப்பு ஏற்பட coronary artery disease (CAD) எனும் பிரச்சினையே காரணமாகின்றது. கரோனரி தமனியில் படிப்படியாக அடைப்பு உருவாகும் பிரச்சினையே CAD எனப்படுகின்றது. இன்னொரு பிரச்சினை கரோனரி தமனியில் ஏற்படும் இறுக்கம். இதுவும் இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. (இந்த இறுக்கம் CAD இல்லாத இரத்த குழாயில்தான் ஏற்படும்). இந்த CAD மற்றும் இறுக்கம் தோன்ற காரணமாக அமைபவை கொழுப்பு, இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்படுதல், புகையிலை, சிகரெட், சுருட்டு போன்றவையாகும்.

படங்களில்/நாடங்கங்களில் காண்பிப்பது எல்லா இதய அடைப்புகளும் ஒரு உடனடியான, கடுமையான வலியை ஏற்படுத்தாது. மேலும் இதய அடைப்புக்கான அறிகுறிகள் எல்லோருக்கும் ஒரேபோலவும் இருக்காது. பல இதய அடைப்பும் மெதுவாக லேசான வலி அல்லது அசௌகரியத்துடன் மட்டுமே கூட ஏற்படலாம். சிலருக்கு அறிகுறிகளே கூட இருக்காது (இதை சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்கிறார்கள்).

இந்த வலி அல்லது அசௌகரியம் சில நிமிடங்களுக்கு மேலாகவும் நீடிக்கலாம் அல்லது விட்டு விட்டு வரலாம். அசௌகரியம் என்பது, நெஞ்சை அழுத்துவது போன்ற உணர்வு, நெஞ்சடைப்பு, நெஞ்சை பிசைதல், வலி போன்று இருக்கலாம. அது லேசாகவும் இருக்கலாம் அல்லது கடுமையாகவும் இருக்கலாம். இதய வலி சில சமயங்களில் நெஞ்செரிச்சல்(அஜீரணத்தின் போது ஏற்படுவது போல) போலவும் இருக்கலாம்.

இதய நோய்(angina) எனப்படும் பிரச்சினை CAD நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும். இந்நோய் உள்ளவர்கள் இயக்கத்தில் உள்ளபோது ஏற்படும் அறிகுறிகளும் இதய அடைப்பு போன்றே இருக்கும். ஆனால் அது ஓய்வெடுத்து, சில நிமிடங்களில் சரியாகிவிடும். ஓய்வெடுத்தும் சரியாகவில்லை என்றாலோ, அதன் வழக்கமான அறிகுறிகள் மாறியிருந்தாலோ (அடிக்கடி ஏற்பட்டாலோ அல்லது ஓய்விலிருக்கும்போது ஏற்பட்டாலோ) அது இதய அடைப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

இது மட்டுமின்றி இதய அடைப்பின்போது வேறு அறிகுறிகளும் ஏற்படலாம்.


*  மேல்பகுதி முதுகு, ஒரு அல்லது இரு தோள் பட்டை, கழுத்து, தாடை அல்லது வயிறு போன்ற இடங்களில் அசௌகரியம்


*  அசௌகரியத்துடனோ அல்லது முன்னாடியோ மூச்சு வாங்குதல் அடிக்கடி ஏற்படுதல்


*  வாந்தி வருவது போன்ற உணர்வு, தலை சுற்றுதல், அளவுக்கு அதிகமாக வியர்த்தல்


*  சில சமயங்களில் இந்த அறிகுறிகள் உடனடியாக ஏற்படாமலும் இருக்கலாம், 


*  அவை மெதுவாக மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ, அல்லது வாரக்கணக்கிலோ கூட உருவாகலாம்.

45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் (அல்லது மாதவிடாய் நின்ற பிறகு) இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். [பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ரோஜன் ஹார்மோன் அவர்களுக்கு இதய நோய் வருவதை தடுக்கின்றது. ஆனால் மாதவிடாய் நின்றபின் இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்து விடும்.] மேலும் குடும்பத்தில்/பரம்பரையாக ஏதாவது இதய நோய் இருந்தால் அவர்கள் கவனமாக இருப்பது நல்லது. மேலும் புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப் பழக்கம், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, உடல் இயக்கம் குறைவாக இருத்தல், நீரிழிவு நோய் போன்றவையும் இதயநோய்க்கான அபாயக் காரணிகளாகும்.

   
தவிர்க்கும் முறைகள்:
இதய நோய் வரும் அபாயம் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது இந்நோயின் தாக்கத்தை பெரிதும் தடுக்கும்.

உணவில் குறைந்த கொழுப்பு சத்துடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் கொழுப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டும். உப்பையும் குறைத்து கொள்ள வேண்டும். இவை உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பை குறைக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரையை குறைக்கும் விதத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

*  அதிக உடல் எடையுடன் இருந்தால் எடையை குறைக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது நல்லது.

*  புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப் பழக்கம் போன்றவற்றை அறவே நிறுத்த வேண்டும்.

*  அதிக அளவு உணர்ச்சி வசப்படாமல் இருப்பது.

*  எந்நேரமும் ஓய்வில் இல்லாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி உடல் செயல்பாடுகளை செய்வது நல்லது.


இதய அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என ஒரு அவசரநிலை செயல்திட்டத்தை தயார் செய்து வைத்திருங்கள். ஏற்கனவே ஒருமுறை இதய அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு இது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் 30% இதய அடைப்புகள் மரணத்தை ஏற்படுத்துகின்றன. இதய அடைப்பு ஏற்பட்ட வரும் ஒரு மணி நேரத்தை ‘கோல்டன் அவர்(Golden Hour)’ என்பார்கள். இந்த நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் அவர்களை காப்பாற்றி விடலாம்.

இதய நோய் உலகின் பயங்கரமான நோய்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலகின் இதய நோய் உள்ளவர்களில் 60% பேர் இந்தியர்களாம். மாறி வரும் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் இப்படிப்பட்ட உடல் பிரச்சினைகளை இன்னும் அதிகப்படுத்துவதாகவே உள்ளன. எனவே நம் உடலை பேண தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. முடிந்தவரை வருமுன் காப்பதே சிறந்தது. உடலை காப்போம்! உயிர் காப்போம்!Wednesday, February 23 46 comments

விளம்பரமையா விளம்பரம்... உஷாருங்கோ.. உஷாரு...
நாம் கண்ணில் தினமும் படுகிற விஷயம் டிவி நிகழ்ச்சிகளும் விளம்பரமும் ...நாடகம் பார்ப்பதில் தான், பிரச்சினை என்று பார்த்தால்....நமக்கு பரிசு தருவதாக வரும் நிகழ்ச்சிகள் (ரியாலிட்டி ஷோ) அதை விட மோசம், அவர்களே ஜுனியர் ஆர்டிஸ்ட்களை கூப்பிட்டு வந்து நடிக்க வைத்து 20 லட்சம் 50 லட்சம் தருவதாக ஏமாற்றுவார்கள்.அந்நிகழ்ச்சியை நம் மக்கள் பார்த்து கொண்டுதான் இருப்பார்கள். வீடு தருகிறேன் பணம் தருகிறேன் என்று ஏமாற்றுவார்கள்.


இப்படி தான் ராஜ்டீவியிலும் ss  மியூசிக்கிலும் நடிகர்கள் புகைப்படத்தை போட்டு அந்த நடிகர் யார் கண்டுபிடியுங்கள், என்று சொல்வார்கள்...போன் செய்து விடையை சொல்ல வேண்டும்....போன் செய்தால் ஒரு நிமிடத்திற்கு 10 ரூபாய் நம் பணம் கண்ணை மூடி திறப்பதற்குள் காலி ஆகிவிடும்...அந்த நிகழ்ச்சி வந்த புதியதில் எங்க வீட்டில் "போன் செய்" என்று சொன்னார்கள். நான் சொல்லிவிட்டேன் இது எல்லாம் பொய் இவர்கள் ஏமாற்றுகிறார்கள்...ஏதாவது புதிய நிகழ்ச்சி வந்தால் எங்கள் வீட்டில், எழுதி போடு என்பார்கள் நான் இது வரை அதையெல்லாம் நம்பியதே இல்லை...யாருக்கும் பரிசு கிடைக்கப் போவதும் இல்லை அதை ஏன் செய்ய வேண்டும்...இப்படி தான் சன் டீவியில் வரும் டீலா நோடீலா என்ற நிகழ்ச்சிக்கு லெட்டர்அனுப்பு என்றார்கள். அது நமக்கு எல்லாம் வராது என்றேன்..அவ்வளவு தான் லெட்டர் அனுப்பும் தேதி முடியும் வரை அனுப்பவே இல்லை...அந்த நிகழ்ச்சி டீவியில் வரும் போதெலாம் எனக்கு திட்டு விழும்! இவனை லெட்டர் போடு போடு என்றேன், போடவில்லை என....இந்த டீவியால் எப்படி எல்லாம் திட்டு வாங்குகிறேன். பாருங்க .அந்த நிகழ்ச்சியில் அந்த பெட்டிகளை திறக்கும் பொழுது "பத்து லட்சம் போச்சு 5 லட்சம் போச்சு என்பார்கள், நான் அவர்களை அப்படியே திரும்பி பார்ப்பேன்.. இப்படி தான் எல்லோர் வீட்டில் நடக்கும். கவர்ச்சி விளம்பரத்தை நம்பி நாம் அந்த நிகழ்ச்சிகளை பார்க்கிறோம், ஆனால் அது எல்லாம் பொய் என்று யாருக்கும் தெரியாது....இது வரை அந்த மாதிரி எத்தனையோ நிகழ்ச்சி நடந்திருக்கிறது ,எனக்கு தெரிந்தவர்கள் யாரும் பரிசு வென்றதாக என்னிடம் சொல்லவில்லை உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது பரிசு வாங்கி இருக்கிறார்களா..?அல்லது நீங்களாவது வாங்கி இருக்கிறீர்களா..?டிவியில் எந்த விளம்பரம் போட்டாலும் எங்க வீட்டில் இருந்து குரல் வரும்...இப்போது அப்படி தான் விஜய் டீவியில் ஒரு விளம்பரம் வருகிறது வீடு இல்லாதவர்களுக்கு வீடு ...நான் எப்போதும் விளம்பரம் பார்க்க மாட்டேன் உடனே சேனலை மாற்றி விடுவேன்...நான் விளம்பரம் பார்த்து கொண்டுயிருந்தேன் உடனே மாற்றிட்டான் என திட்டு "வீடு தராங்களே உண்மையா வா நம்ம எழுதி போடுவோம் கிடைத்தால் கிடைக்கட்டும்" என்பார்கள். அதுவும் பொய் தான் அதையெல்லாம் நம்பாதீங்க சொன்னா கேட்க மாட்டீங்களா..? என்பேன்....விளம்பரம் என்றால் அகராதியில் பொய் என்று மாற்ற வேண்டும்....உண்மையை தவிர எதையும் சொல்லமாட்டார்கள் விளம்பரத்தில் கூறுவது பொய்கள் என்று நமக்கு தெரியும் இருந்தாலும் அந்த பொருட்களை வாங்குவோம். ஒரு கம்பெனி மீது இன்னொரு கம்பெனி குறை சொல்லும். இந்த பொருட்களை வாங்காதீர்கள் என்று ஒரு கம்பெனி சொல்லும் அந்த பொருட்களை வாங்காதீங்க சொல்வாங்க....நாங்க எந்த பொருட்களை தான் வாங்குவது. ஆண்கள் பயன் படுத்தும் பாடி ஸ்ப்ரேக்கு ஏன் பெண்கள் வருகிறார்கள், அதுவும் அந்த வாசனையை முகர்ந்தவுடன் அவர்கள் ஆடைகளை கழட்டிவிடுவார்களாம் இது என்ன விளம்பரம்? ஒரு பொருட்களின் தரத்தை கூறி விளம்பரம் செய்தால் பரவயில்லை..இந்த axe spray விளம்பரம் அத்துமீறி வந்துகொண்டுயிருந்த பொழுது ஜனாதிபதி...கண்டித்தார் விளம்பரத்தில் நடிக்கும் பெண்கள் கண்ணியமாக நடிக்க வேண்டும் என..ஆனால் பெண்கள் அமைப்பு எந்த போராட்டமும் நடத்தியதாக தெரியவில்லை.  சினிமாவில் ஆபாச காட்சிகள் வந்தால் மட்டும் எதிர்ப்பு! பெண்கள் அமைப்பு டிவியில் வருவதை மட்டும் கண்டுகொள்வதில்லையே..ஏன்..??அடுத்ததாக...துணிக்கடை விளம்பரத்தை பார்த்து ஏமாறுவார்கள்....தள்ளுபடி என்றால் போதும் உடனே கணவனிடம் சண்டை போட்டாவது வாங்கி விட வேண்டும்..நான் துணிகடையில் வேலை பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். எப்போதும் வரும் லாபத்தை விட தள்ளுபடி போட்டால் தான் அதிக லாபம் வரும். நான் விலைநிர்ணயம் செய்யும் இடத்தில் இருந்ததால் எனக்கு எத்தனை சதவிகித விலை வைக்க வேண்டும் என்பது தெரியும்..சாதாரண நாட்களில் ஒரு பொருளுக்கு 7சதவிகித அளவுக்கு விலை வைப்போம்..தள்ளுபடி நேரத்தில்....தள்ளுபடி 10 சதவிகிதம் தருகிறோம் என்றால் ஒரு பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய நாங்கள் 17 சதவிகித உயர்வு வைப்போம். இதனால் கடைகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது, முன்பை விட லாபம் அதிகம் தான் கிடைக்கும்..தள்ளுபடியில்லாத நேரத்தில் ஒரு சிலருக்கு 200 ரூபாய் வரை குறைப்பது உண்டு...தள்ளுபடி போட்டால் அந்த 200 ரூபாயும் குறைக்க மாட்டோம். தள்ளுபடி நேரத்தில் தான் பழைய விற்பனை ஆகாத பொருட்களை எல்லாம் எடுத்து புதியதாக விற்பனை செய்து விடுவோம்,  அப்படியே ஏதாவது திரைப்படத்தின் பெயர்களை வைத்து விடுவோம், நான் தான் என்ன திரைப்படம் பெயர் வைக்கலாம் என்று பரிசீலினை செய்வேன்...மக்களும் படத்தின் பெயரை பார்த்து வாங்குவார்கள்...அந்த படத்திற்கும் அந்த பொருளுக்கும் சம்பந்தமே இருக்காது ஆனால் எல்லாம் விளம்பரம் செய்யும் வேலை..விளம்பரம் என்பது கண்ணை மறைக்கிறது தள்ளுபடி நேரத்தில் பொருட்களை வாங்காமல்...சாதாரண நாட்களிலே வாங்கலாம்...விளம்பரம் என்பது தங்கள் பொருட்களை பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகதான்.. ஒரு வியாபரத்திற்கு மிக முக்கியமானதுதான் அது. ஆனால் அதை நேர்மையாக செய்ய வேண்டும். அதில் கவர்ச்சி, ஆபாசம், ஏமாற்று வித்தை போன்றவற்றை சேர்க்க கூடாது. நுகர்வோர்களை ஏமாற்றாமல் நேர்மையாக காண்பிக்கப்படும் விளம்பரமே அந்த பொருட்களை உண்மையாக சந்தையில் நிலைக்கச் செய்யும், நியாமான வியாபாரத்தை நடக்கச் செய்யும். Tuesday, February 22 39 comments

உறவுகளின் நிலை....
ஒவ்வொரு உறவுகளும் அழிந்து விட்டன யாரும் உறவுகளை மதிப்பதில்லை என்று கூறுகிறார்கள். ஆம் உறவுகள் பணத்திற்காக அழிந்து கொண்டு தான் இருக்கின்றன, ஒருவன் எதன் மீது அதிகமாக நேசம் வைக்கின்றானோ அதுவே அவனுக்கு கிடைக்கும் என்பது நியதி, .ஆம் மனிதன் பணத்தின் மீது மோகம் கொள்கிறான் அதனால் அதுவே அவனுக்கு கிடைக்கிறது முன்பு எல்லாம் உறவுகள் வேண்டும் என்று, அவர்கள் மீது பற்றுதலும் , பாசமும் இருந்தன, ஆனால் இப்பொழுது பற்றுதல் என்பது பொருளின் மீது வந்து வந்துவிட்டது. கார் வேண்டும்,A/c  வேண்டும் ,fridge வேண்டும் என்ற காரணங்களால், அவன் பணம் தேடுகிறான்.இதன் காரணமாக வீட்டை மறக்கிறான் உறவுகளை மறக்கிறான். இதனால் உறவுகள் என்பது தானாகவே அழிந்து வருகிறது. பொருள் தேடுவதற்காக மனிதன் ஓடிகொண்டே இருக்கிறான்.வாழ்க்கைக்கு தேவை பணம் ஆனால் இப்பொழுது பணமேவாழ்க்கை ஆகிவிட்டது..!!


கணவன் மனைவி வேலைக்கு செல்லும் ஒவ்வொரு வீட்டிலும், குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லாமல் தவிக்கிறார்கள் குழந்தைகள் பாசத்திற்காக ஏங்கி நிற்கும் கட்சிகளையும் நாம் காண முடிகிறது (இருவர் வேலைக்கு செல்வது தவறு என்கிறீர்களா என்று கேட்காதீங்க ).பணம் தேடுவதற்காக  குழந்தைகளை இளம் வயதிலேயே விடுதிகளில் கொண்டு போய் விட்டு படிக்க  வைக்கிறார்கள்.அவர்கள் படிப்பிற்காக தான் நாங்கள் பணம் தேடுகிறோம் என்று கூறுகிறார்கள் அதுவும் உண்மை தான். நான் மறுக்கவில்லை .ஆனால் குழந்தைகள் உங்கள் மீது பாசம் வைக்கிறதா இல்லையா ? யாருக்காக நீங்கள் பணம் சம்பாதிக்க இவ்வளவு கஷ்டப்பட்டீர்களோ  அவர்கள் பின்நாளில் உங்களை தூக்கி எறிவார்கள் இது கண் கூடாக பார்த்த உண்மை.


இதற்கு என்ன தான் முடிவு ?வேலைக்கு போக வேண்டுமா வேண்டாமா..? என்பது கேள்வியல்ல.ஆண் வேலைக்கு போகவேண்டுமா?பெண் வேலைக்கு போகவேண்டுமா?என்பதும் கேள்வி அல்ல.உறவுகளுக்காக யார் விட்டு கொடுக்கிறார்கள் என்பதே என் கேள்வி?. குழந்தைகளின் சந்தோசத்திற்காக சிறிது நேரம் செலவு செய்தால் தான் என்ன..?

நம் வாழ்வில்  கூட்டு குடும்பமே இல்லாமல் போய் விட்டது...முன்பு கூட்டு குடும்பம் என்பது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, என பல பேர் இருந்தார்கள், இன்று அப்படியில்லை தாத்தா, பாட்டி இருந்தாலே அது கூட்டு குடும்பம் என்று ஆகி விட்டது ...அந்த தாத்தா, பாட்டி கூட தேவையில்லை என்று சொல்கிறார்கள், அதற்கும் காரணம் என்னவென்று பார்த்தால் பணமாக தான் இருக்கிறது, தாய் தந்தையால் பென்சன் வந்தால் அவர்களை மதிக்கிறார்கள் இல்லையென்றால் அவர்களை கண்டுகொள்வதே இல்லை, வீட்டில் பெரியவர்கள் இருந்தால் நமக்கு என்று பொறுப்பு வரும் அவர்கள் மீதுமரியாதை கலந்த பயம் வரும். தாத்தா பாட்டி இருந்தால் குழந்தைகளுக்கு அவர்கள் பாசம் தெரியும். பின்னாளில் தன் தாய் தந்தையை எப்படி பார்த்து கொள்ளவேண்டும் என அவர்கள் தெரிந்து கொள்வார்கள், அம்மா அப்பா வேலைக்கு சென்று விட்டால் தாத்தா, பாட்டி பார்த்து கொள்வார்கள், நமது சின்ன வயதில் என்ன விஷயங்கள் நடக்கிறதோ அது அப்படியே மனதில் பதிந்து விடும்....நான் படித்த கதை ஒரு நினைவுக்கு வருகிறது....

ஒரு குடும்பத்தில் தன் அப்பா, அம்மா...அவர்களுக்கு வயதாகி விட்டது...அவர்களுக்கு என்று தனி பாய், சாப்பிடுவதற்கு தனி தட்டு, என வைத்து பார்த்து கொண்டார்கள். இதை தினமும் அந்த வீட்டு குழந்தைகள் கவனித்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் தாத்தா, பாட்டி இறந்து போய் விட்டார்கள். அவர்கள் பயன் படுத்திய பொருட்களை எல்லாம் தூக்கி எரிந்து விட்டார்கள் அதை பார்த்த குழந்தைகள், அந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு வந்து வைத்தார்கள், அதை ஏன் எடுத்து கொண்டு வருகிறாய் என்று குழந்தைகளின் அம்மா கேட்டதற்கு உங்களுக்கும் வயதாகும் அப்பொழுது  நான் இதில் தான் உங்களுக்கு சாப்பாடு போடுவேன் என்று அந்த குழந்தை கூறும்...

உங்கள் குழந்தையிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அவ்வாறு தான் குழந்தகைளும் நம்மிடம் நடந்து கொள்வார்கள், சிறிய வயதிலே பணம், பிரிவினை பாகுபாடு என்று நீங்கள் நடந்து கொண்டாள் அதையே குழந்தை கற்று கொள்ளும். நாம் எப்போதும் முன் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் சின்ன சின்ன விஷயங்களை கூட அவர்கள் நம்மிடம்  அறியாமலே கற்று கொள்கிறார்கள் 

குழந்தைகளை தனியாக விடுவதால் வரும் விளைவு 

*  நண்பர்களுடன் இருக்கும்போது அவர்களின் கெட்ட பழக்க தொற்றிக் கொள்ளுதல்

 *  பெற்றோர் மீது அன்பு குறைகிறது அவர்கள் அன்பைத் தேடி தவறான வழிக்கு கூட செல்லலாம்...

*  சின்ன வயதில் தடம் மாறி போவார்கள். உதாரனமாக சிறு வயது குற்றவாளிகள் பலர் உருவாக காரணம் பெற்றோர்கள் அவர்களை சரியாக கவனிப்பதில்லை..
*  இதுவே ஒரு சின்ன பெண் அப்படி இருந்தால் அவள் மீது அன்பு செலுத்துவதாக இருக்கும் ஒருவர் மீது காதல் கொள்ளலாம்


*  மேலும் எது சரி எது தவறு என வழிகாட்டவும் கண்டிக்கவும் ள் இல்லாததால் வாழ்க்கை தடம் மாறுகிறது.


எனவே குழந்தைகளுடன் தினமும் நேரம் செலவிடுங்கள். அவர்களிடம் பள்ளியில் இருந்து  வந்தவுடன் என்ன நடந்தது என மனம் விட்டு பேசுங்கள், பிரச்சினைகளை கேளுங்கள். மாலை நேரத்தில் ஏதாவது பூங்காவிற்கு அழைத்து செளுங்கள். இது நல்ல உறவு வளரவும் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமையவும் உதவும்...
                                 

                                           **********************************************'
                                                 
                                                      கேள்வி கேளுங்கள்

பதில் சொல்வதை விட கேள்வி கேட்பது சுலபம். அந்த சுலபமான வேலையை தான் உங்களுக்கு நான் தருகிறேன். நேற்று என்னை பார்த்து ஒருவன் கேட்டான். உன்னை கேள்வி கேட்க ஆள் இல்லை அதான் இப்படி இருக்கிறாய் என்று..!! அதனால் உங்களை என்னை கேள்வி கேட்க சொல்கிறேன், என்னை பற்றியும் பதிவுலகை பற்றியும் கேள்விகளை கேளுங்கள் மக்களே...அதற்காக நீ எப்போது பதிவு எழுதுவதை நிறுத்துவாய் என்று கேட்க்காதீர்கள்.... அது இப்போதைக்கு முடியாத காரியம்.....என்னை கேள்வி கேட்க உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் ....இதை விட்டால் உங்களால் என்னை பழி தீர்க்க முடியாது. உங்கள் கேள்விகளை பின்னூட்டத்தில் கேளுங்கள் நான் பதிலை பதிவாக வெளியிடுகிறேன். 
;