Wednesday, June 30 25 comments

இவங்களுக்கு எல்லாம் சும்மா...


                                                                              
ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. அதை திரும்பப் பெறவும் முடியாது. இன்னும் கூட விலை உயரும் வாய்ப்புள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி விட்டார். இவர் மக்களுக்கு சலுகை தரமால் வேறு யாருக்கு சலுகை தர போகிறார்? அரசு இருப்பதே மக்களுக்கு சலுகை தருவதற்கு தான், முதலாளிக்கு சலுகைதர அல்ல. 

ஆமாம்டா உங்களுக்கு எல்லாம் சும்மா வருகிறது, சும்மா கார் அதுக்கு போடும் டீசல் சும்மா, விமானத்தில் பறப்பதற்கு சும்மா, ரயில் பயணம் சும்மா, இது எல்லாம் யார் பணம் எங்கள் வரி பணம் எங்கள் வரி பணத்திலே கும்மிஅடித்து விட்டு கடைசில எங்களுக்கே ஆப்பா......? 


பிரதமர் பேட்டி: நாங்கள் கோடி கோடியா வாங்க வேண்டியதை வாங்கி விட்டோம், இனி மக்கள் இருந்தால் என்ன செத்தால் எங்களுக்கு என்ன 110 கோடி மக்களில் 50 கோடி பேர் செத்தாலும் கவலையில்லை, காசு வாங்கி கொண்டு வோட்டு போட இன்னும் 60 கோடி பேர் இருக்கிறார்கள்.


காசு வாங்கி கொண்டு ஒட்டு போட்டால் இப்படி தான் நடக்கும். போன ஆட்சியிலே இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான். அப்போதே ஒரு அமைச்சர் சொன்னார் , அவர் பெயர் மணிசங்கர் அய்யர். புடவை, சினிமாவுக்கு, எல்லாம் பணம் செலவு செய்யும் நீங்கள், இதற்கும் செலவு செய்யுங்கள் என்று சொன்னார். அப்போது அவர் தான் பெட்ரோலியத் துறை அமைச்சர். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, காங்கிரஸ்கு வோட்டு போட்டவர்களும், ஒரு காரணம் ஏன் என்றால் நீங்கள் தானே வோட்டு போட்டு ஆட்சி அமையுங்கள் என்று அனுப்பி வைத்தது நீங்கள் தானே. காங்கிரஸ்க்கு ஒட்டு போட்டா இதுதான் கதி, இவனுங்க ஆட்சியில்தான் போபர்ஸ், போபால்-விஷவாயு என பல லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது, இனிமேலும் மக்கள் காங்கிரஸ்க்கு ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தால்,இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.


இதனால் விலை வாசி உயர்வு. விவசாயிகள் தான் முதலில் ஏற்றுவார்கள் ஆவர்கள் என்ன செய்வார்கள் மின்சாரமும் கிடையாது (டீசல் பயன்படுத்துகிறார்கள்) பிறகு லாரிகாரன் விலை ஏற்றுவார்கள், அந்த பொருளை வாங்கும் புரோக்கர்கள் விலையை ஏற்றுவார்கள், அந்த பொருளை வாங்கும் சில்லறை வியாபாரிகள் விலையை ஏற்றுவார்கள், இப்படி இது ஏறி கொண்டு போகும்.....

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த மறு நாளே, ஓட்டல்களில் விலை உயர்ந்து விட்டது, இந்த விலைவாசி உயர்வால் கவலை படாதவர்கள் இரண்டுபேர், ஒருவர் பிச்சகாரன், இன்னொருவர், கோடிஸ்வரன், இவர்களுக்கு என்ன நடந்தாலும் கவலை இல்லை எங்களை போல் நடுத்தர மக்கள் தான் மிகவும் பாதிக்க படுகிறோம். வாடகை கொடுத்தே எங்கள் ஆயுள்முடிந்து விடுகிறது. 


அன்றாடங்காய்ச்சிகளும், மாத வருவாயை நம்பி வாழும் மக்களும், தாங்க முடியாத அல்லலுக்கு ஆட்பட்டு உள்ளனர். சமையல் எரி வாயு விலையைக் கூட்டியதால், குடும்பச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் மக்கள் துன்பப்படுகிறோம்.
Tuesday, June 29 23 comments

பேய் கதை.....

                                                 நன்றி யூத்ஃபுல் விகடன்

இரண்டவது முறையாக என் ஐம்பதாவது பதிவு யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக் தெர்ந்தெடுத்து உள்ளார்கள். என் ஐம்பதாவது பதிவிற்கு உங்கள் ஆதரவுக்கும் உங்கள் வாழ்த்துக்கும் நன்றி நன்றி..   

                                                                          
எங்க அம்மா அடிக்கடி இந்த கதையை சொல்லுவாங்க. கோடம்பாக்கம் அங்கு ஒரு வீட்டில்  நாங்க இருந்தோம். அப்ப நான்பிறக்கவில்லை, எங்க பெரிய அண்ணன் பிறந்து 3 மாசம் இருக்கும், எங்க அம்மா இங்கு ராயபுரம். அதனால் அந்த இடம் பழக்கம் இல்லை. இரவு நேரம் பாத்ரூம் போக வெளியே தான் செல்ல வேண்டிய கட்டாயம். 

அப்போது அங்குள்ள கிணற்றில் உன் குழந்தைய போடு என்று ஒரு குரல். குழந்தைய போடாதே.... என்று இனொரு குரல். இதேபோல் இரண்டு மூன்று நாள் நடந்து உள்ளது, பக்கத்து விட்டில் உள்ளவர்கள் போல குரல் இருக்குமாம், காலை எழுந்து கேட்டால் நாங்க யாரும் கூப்பிடலை என்று சொல்ல, எங்க அம்மா நடந்ததை சொல்ல, பக்கத்தில் இருபவர்கள் அந்த கிணற்றில் இரண்டு முனி இருப்பதாகவும் ஒன்று நல்ல முனி. இன்னொரு முனி கெட்டமுனி என்று சொல்லி மேலும் . கிணற்றில் போடு என்று சொன்னது கெட்டமுனி, உன்னை அந்த நல்ல முனி தான் காப்பாற்றி இருக்கு என்று கூறினார்களாம். இந்த கதையை கேட்காத நாளில்லை. ஆனால் இதை நாங்க நம்ப மாட்டோம் கிண்டல் செய்வோம், ஆனால் அந்த இடத்தில் நாம இருந்தா தான் அந்த பயம் நமக்கு தெரியும்.


என் அனுபவம் நானும் பேய் பார்த்து பயந்து இருக்கிறேன், பேய் என்று சொல்ல முடியாது நான் ஐந்தாவது படிக்கும்போது, நானும் இன்னும் ரெண்டு பேரும் கண்ணாமூச்சு விளையாடிட்டு இருந்தோம் நான் போய் ஓடி ஒளிந்தேன், ஜன்னல் வெளியே யாரோ பார்த்து கொண்டுயிருந்தார்கள் பார்பதற்கு பயங்கரமா இருந்தது, நான் அலறி அடித்து கொண்டு வெளிய ஒடி வந்தேன் அவ்வளவு தான் மறுநாள் எனக்கு ஜுரம் என்னை கூப்பிட்டு போய் மந்திரிச்சுட்டு வந்தாங்க

மீண்டும் எனக்கு ஒரு அனுபவம் நான் தூங்கி கொண்டிருந்த போது பேய் வந்து அமுக்கியது போல், அப்போது என்னால் கை கால்களை அசைக்க முடியவில்லை பேச முடியவில்லை பேசினாலும் சத்தம் வரவில்லை, எனக்கு இதுவரை இது கனவா அல்லது உண்மையா நடந்ததா என்று தெரியவில்லை.


Monday, June 28 40 comments

ஐம்பதாவது பதிவு....                                                                               
மற்றவர்களின் வலைபதிவை படித்து கொண்டுயிருந்த, நான் ஒரு வலைபதிவு தொடங்கலாம் என்று தோன்றியது மே 3 தேதி வலைபதிவை தொடங்கினேன், என் முதல்பதிவில் தமிழிஷ் நான் வாங்கிய வோட்டு 6 மட்டுமே. எனக்கு ஒன்றுமே எழுத தெரியாது ஒவ்வொரு பதிவு போடும் போடும் போது, அடுத்த என்ன பதிவு போடுவது என்று தெரியாமல் குழம்பி போய் இருப்பேன். எப்படியோ தட்டு தடு மாறி, தினேஷ் கார்த்திக் போல ஐம்பதை தொட்டு விட்டேன் 100 தொடுவேனா என்பது சந்தேகமா இருக்கிறது. 

என் முதல் பிரபல  பதிவு குறும்பு குழந்தைஇந்த பதிவின் மூலம் நிறைய பார்வையாளர்கள் என் வலை பதிவை பார்த்தார்கள். 
வலை பதிவு தொடங்கியதால் நிறையை நண்பர்கள் கிடைத்து உள்ளனர்.என் கூட அரட்டை ( chat)அடிக்கும் அளவுக்கு நண்பர்கள் ஆகி விட்டோம், என்ன அரட்டை என்று கேட்ககூடாது அட மொக்க தான் போடுவோம் என் நண்பர்களை அறிமுகம் செய்கிறேன்பதிவுலகஹீரோதேவாஅண்ணன்,புரட்சிபுயல்krpசெந்தில்
அண்ணன், கலக்கல்விஜய் விஜய்யின் ஒவ்வொரு பதிவும் அருமையா இருக்கும்.


ஜெயமாறன், இவர் ஐந்து, ஆறு ப்ளாக் வைத்து இருக்கிறார்.  RDX  என்று பெயர் வைத்து கொண்டு பனித்துளி போல எழுத்து கிறார், பனி துளி சங்கர். சதீஷ் இவர் இலங்கை இருக்கிறார் SSHATHIESH in பார்வை.  அனைவர் மீதும் இவர் பார்வை உண்டு.
நண்பர் FEROS :: பெரோஸ் மனிதம் மிளிர்கிறது என்ற பதிவு மிகவும் அருமையா இருந்தது.  கவிதை எழுதும் கமல்.  புதிய நண்பர் ஜீவன் பதிவுகள்  புதிய பதிவர் உங்கள் ஆதரவு தேவை.
இவர் தான் செல்வா வலைபதிவு பெயர் கோமாளி.!    என்று பெயர் வைத்து கொண்டு இவர் செய்யும் அட்டகாசம் தாங்க முடியலை,
த்தமில்லாம பட்டாசு வெடிக்கணுமா...?


பட்டாசு வெடிக்கும் போது பட்டாச அதோட வாய்மேல கைய வச்சிட்டு வெடிக்க சொல்லுங்க. சத்தம் வராது..!


என் பதிவை இதுவரை பார்த்த 9248 பார்வையாளர்களுக்கு நன்றி. நான் எப்போது நல்ல பதிவு போடுவேன் என்று காத்து இருக்கும் என் 57 வலை பதிவு உறுபினர்களுக்கு நன்றி

                                                                            
உங்கள் பின்னுட்டம் எனக்கு அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்று ஒரு ஆர்வம் தருகிறது. தொடர்ந்து என் பதிவை படித்து பின்னூடம் போடும் என் நண்பர்கள்  அனைவருக்கும் ஐம்பது ஆயிரம் தடவை நன்றி நன்றி நன்றி.................
Friday, June 25 26 comments

பங்கு சந்தை என் அனுபவம்

                                                                                
                                                                              
பங்குசந்தை ஒரு கடல் போல, பலர் பயந்து இந்த பக்கமே வருவது கிடையாது, எப்போது சுனாமி வரும், எப்போது புயல் வரும் என்று யாராலும் சொல்லமுடியாது. நான் ஒரு சிறு முதலீட்டாளர் தான் .பத்து ஆயிரம் இருந்தால் ஒரு லட்சம் வரை பங்குகள் வாங்கி கொள்ள முடியும் . 
பங்கு சந்தையில், இது தான் என் முதல் அனுபவம். நான் முதலில் 100 ரூபாய் வைத்து intraday செய்தேன்  (intraday என்றால் அன்றே ஒரு பங்கை  வாங்கி அந்த பங்கை அன்றே விற்பது தான் intraday) நான் முதலில்  வாங்கிய பங்கு  ispat  இதன் விலை அப்போது  20 ரூபாய்.14 ரூபாய் லபாம் எடுத்தேன்  பலர் கோடி கணக்கில் intraday செய்வார்கள் நானும்  ஒரு நாள் செய்வேன்  என்று நினைத்து கொண்டேன்.


ஒரு  நாள் intraday செய்து 100 ரூபாய் லாபம் எடுத்து விட்டால், மறு நாள் 300 ரூபாய் நஷ்டம் வந்து விடும். விட்டதை புடிக்கலாம் என்றால் மறுபடி அடிதான் கிடைக்கும். பிறகு அந்த பங்கை குறை சொல்லுவோம், சீசீ  இந்த பழம் புளிக்கும் கதை மாதரி இனி intraday செய்ய கூடாது என்று  முடிவுக்கு வருவேன். ஆனால் மறுபடி intraday செய்து லாபம் எடுப்போம், மறுபடி நஷ்டம், மறுபடி லாபம் மாறி மாறி வரும். வந்த லாபத்தை பங்குகளாக வைத்து கொண்டால் நல்லது அது பணமாக வைத்து இருந்தால் வந்த லாபம் போய்விடும் இப்படி சேர்த்து தான் நான் இப்போது 2000 ரூபாய்க்கு பங்கு சேர்த்து வைத்து இருக்கிறேன்.


Short Term; (என்றால் ஒரு பங்கை வாங்கி மூன்று மாதம் அல்லது நான்கு மாதம் நல்ல லாபம் வரும் போது விற்கலாம்) பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி வைத்து கொண்டு அந்த பங்கு விலை உயர்ந்த உடன்  அந்த பங்கை விற்கலாம் என்று நினைத்தேன்  அப்படி வாங்கி வைத்தால் அந்த பங்கு விலை மட்டும் குறையும். மற்ற பங்கு விலை எல்லாம் ஏறும் அட என்னடா இது நம்ம வாங்கிய பங்கு மட்டும் விலை குறையுதே. என்ன தப்பு செய்தோம் என்று யோசிப்பேன்  எதனால் இந்த பங்கு விலை மட்டும் குறையுது என்று தெரியாது.  நான் ஒரு பங்கை வாங்கினால் போதும் நல்லா இருக்கும் பங்கின் விலை கூட குறைந்து விடும். என்ன இது சோதனை என்று  நான் நினைப்பேன் நமக்கு மட்டும் தான் இப்படி நடக்குதா என்று  புலம்புவேன்.ஹிண்டல்கோ பங்கை குறைந்த விலையில் வாங்கினேன் 1000 ரூபாய் லாபம் வரும் போது அதை விற்கவில்லை பிறகு பங்குசந்தை குறைந்தது உடனே என் பங்கு விலையும்  குறைந்தது எங்கே நஷ்டம் வந்து விடுமோ என்று பயந்து  450 லாபத்திற்கு விற்று விட்டேன். இப்படி பல பேர் லாபம் வரும் போது விற்க மாட்டோம். குறைந்த லாபத்திற்கு அல்லது நஷ்டத்திற்கு விற்று விடுவோம்.

லாங் டைம் (என்றால் ஒரு பங்கை ஒரு வருடத்திற்கு மேல் வைத்து இருந்தால் அது லாங் டைம்) ஒரு வருடத்திற்குமேல் ஒரு பங்கு வைத்து இருந்தால் அந்த பங்கு மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி கிடையாது. என்ன இருந்தாலும் நான் பங்குசந்தையில் லாங் டைம் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று நான் இப்பொழுது தெரிந்து கொண்டேன்.
எனக்கும் நல்ல லாபம் கிடைத்து உள்ளது.

பங்கு சந்தையில் நான் செய்த ஒரே சாதனை ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கு மேல்  intraday செய்தது உள்ளேன் இது தான் சாதனை. இப்போது நிறைய கற்று கொண்டு எதோ லாபம் பார்த்து கொண்டு இருக்கிறேன்.

முக்கிய குறிப்பு: இதை யாரும் வருமானவரிதுறையிடம் சொல்ல கூடாது ஹா ஹா ஹா 

 
 


Thursday, June 24 19 comments

முதியோர் இல்லத்தில் அம்மா. முடிவு...

                                                                         
                                                                              
சற்றுநேரம் மவுனமாகப் பார்த்த நிர்வாகி உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லே.. உடனே வாங்கன்னு போன் பண்ணியும் நீங்க  வரவே இல்லையே..ஏன்இதுவரைஉடம்பு சரியில்லாத சமயத்திலே கூடவே இருந்து கவனிக்காமே ஒரு மூணாவது மனுஷன் போல வந்து பாத்துட்டு எப்படி போறதுன்னுதான்... என்னைப்  பார்த்து எங்க அம்மா அழுவாங்க. எனக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையா இருக்கும். அதான்... அதுக்காக வராம இருந்துடறதா? இப்போ எதுக்கு வந்தீங்க?

பணம் கட்டத்தான் இனிமே உங்களுக்கு அந்த கஷ்டமுமில்லே" என்ன ஸார் சொல்லுறிங்க பதறினார் அவங்களுக்கு உடம்பு சரியில்லாமே போன ரெண்டு நாள்லேயே இறந்துட்டாங்க அவரின் பதில் முகத்தில் ஓங்கிப் பளீரென்று அடித்தது போல் இருந்தது. இறந்துட்டாங்களா அதிர்ந்தார். ஏன் எனக்கு சொல்லே? கோபமும், வேதனையும் கலந்த குரலில் கேட்டார். உடம்பு சரியில்லாமே இருக்காங்கன்னு சொல்லியும் நீங்க வந்து பார்க்காததாலே உங்க அம்மா ரொம்ப மனவேதனைப்பட்டு நான் இறந்தா சொல்லவேண்டாம். நீங்களே என்னோட கடைசி காரியத்தைப் பார்த்துடுங்க' ன்னு சொல்லி அழுதாங்க அவங்களோட கடைசி ஆசையை நிறைவேத்த வேண்டியது எங்களோட கடமை.

என்ன ஸார் இப்படி பண்ணிட்டிங்க? உறவவுகாரங்களுக்கு எல்லாம் தெரிவிக்காமே இப்படி ஆயிடுச்சே. அவுங்கல்லாம் என்ன சொல்லுவாங்க? வயசான அம்மாவை நீங்க முதியோர் இல்லத்திலே சேர்த்ததுக்கே எதுவும் சொல்லாத அவுங்க இதுக்கு மட்டும் என்ன சொல்ல போறாங்க? மகன் நான் இருந்தும் கடைசி காரியங்களைச் செய்ய முடியாமே போயிடுச்சே...அழ ஆரம்பித்தார்.

அவங்களோட கடைசி காலத்துலே நல்லபடியா கவனிக்காமே விட்டுவிட்டு கடைசி காரியத்தை செய்ய முடியலேன்னு வருத்தபடுறீங்களே? என்மேல வருத்தத்தோட இறந்திருப்பாங்க? அம்மா இறந்த தேதி நேரத்தையும் கொஞ்சம் சொல்லுங்க ஸார் வருஷா வருஷம் திதி அன்னைக்கு தெவசம் கொடுக்கணுமே தெவசம் ஏன் கொடுக்கணும்? என்னங்க ஸார்...தெரியாத மாதரி கேட்குறீங்களே? ஒருத்தர் எந்த திதியிலே இறக்கிறாங்களோ...வருஷம் அந்தத் திதியிலே அவுங்க ஆன்மா பூமிக்கு வரும். அப்போ நாம அவுங்களுக்குப் பிண்டம் செஞ்சு வெச்சு...காய் கறி, அரசி, எல்லாம் வெச்சு தெவசம் பண்ணி தானம் கொடுத்தா அந்த ஆத்மா அதை பார்த்து சந்தோசப்பட்டு... ஆசீர்வாதம் பண்ணிட்டு திரும்பிப் போய்டும்.

உயிரோட இருக்கும் போது வெச்சு பார்த்து...சாப்பாடு போடாமே விட்டுட்ட உங்களை அந்த ஆத்மா, திதி அன்னைக்கு வந்து நீங்க படைக்கிறதைப் பார்த்துட்டு திருப்தியாகி சந்தோசப்பட்டு உங்களை வாழ்த்தும்னு நினைகிறீங்களா? பதில் சொல்லாமல் தேம்பித்தேம்பி அழுதார் ராஜன்.
இப்போ அழுது என்ன பண்றது ராஜன்? விட்லே வெச்சுக் கொண்டாட வேண்டிய குலதெய்வத்தைக் குப்பை தொட்டியிலே வீசி எறிஞ்சிட்டு கோவில் கோவிலா போனாலோ இல்லே தெவசம் கொடுத்தாலோ புண்ணியம் கிடைக்குமா சொல்லுங்க? இங்கே கொண்டுவந்து விட்டோமேன்னு நான் நினைச்சு நினைச்சு வறுத்தப்படாத நாளே இல்லே. அம்மாவுக்கும் என் மனைவிக்கும் ஒத்துப் போகாத சூழ்நிலையிலே அங்கே அவமானப்பட்டு மனக் கஷ்டத்தோட இருக்கிறதுக்குப் பதிலா இங்கே நிம்மதியா இருக்கட்டுமேன்னு தான் கொண்டு வந்து சேர்த்தேன். இந்த பாவத்துக்கு கடவுள் எனக்கு என்ன தண்டனை தரப்போறரோ?

ஆம்பளைப்பிள்ளை நான் இருந்தும் நான் கொள்ளி போடத் தேவையிலேன்னு மனசு வெறுத்து அவுங்க எனக்கு சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எவ்வளவு தூரம் மனம் வெதும்பிப் போயிருந்தா இப்படி சொல்லியிருப்பாங்க பெத்த மனசை நோகடிச்ச நான் எப்படி நல்ல இருக்க முடியும்? எனக்கு இதே தண்டனையை ஆண்டவன் கொடுத்தாலும் கொடுக்கலாம் முகத்தில் அறைந்து கொண்டு அழுதார் ராஜன்.  உங்க தப்பை நீங்க இப்போ நல்லா உணருறீங்கல்லே இப்போ உணர்ந்து என்னப் பண்றதுங்க ஸார்? பாவ மூட்டையைச் சுமந்துட்டேனே.

உங்க அம்மா இறக்கலே உயிரோடதான் இருக்காங்க. உங்களை உணரவைக்கிறதுக்காக பொய் சொன்னேன். உடம்பு சரியில்லேன்னா உடனே ஒடி வந்து பார்த்து ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுங்க ஸார் அந்த ஆத்மா குளிர்ந்துவிடும். வாரம் ஒரு தடவையாவது வந்து பார்த்து பேசிட்டுப் போங்க அம்மா உயிரோடதான் இருக்காங்களா? அப்பாடா! இப்போது தான் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு அம்மா இறந்துட்டாங்கன்னு நீங்க சொன்ன உடனே எனக்குத் தெரியமே இறந்துட்டாங்களே கடைசியா அவுங்க முகத்தைக்கூடப் பார்க்க முடியாமே போச்சேன்னு நினச்சு ரொம்ப துடிச்சுப் போயிட்டேன். என்னோட தவறை உணர்ந்துட்டேன் எங்க அம்மாவை நான் வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயிடுறேன். இப்போ நான் ரிட்டயர்டாகி வீட்லேதான் இருக்கேன். அம்மாவை நல்லபடியா கவனிச்சுக்குவேன். அவுங்க நிம்மதியாவும் சந்தோசமாவும் இருக்கட்டும். நான் அழைச்சுக்கிட்டுப் போயிடறேன் ஸார். நிம்மதி பெருமூச்சு அவரிடமிருந்து வந்தது. ரொம்ப சந்தோசம் நான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இப்படியொரு நல்ல முடிவைக் கொடுத்ததை நினைச்சு ரொம்ப சந்தோசப்படுகிறேன் என்றார் நிர்வாகி. அம்மாவை அழைத்துக்கொண்டு நிம்மதியாக ஆட்டோவில் ஏறினார் ராஜன்.  
                          
.          
Wednesday, June 23 11 comments

முதியோர் இல்லத்தில் அம்மா


இது சமீபத்தில் நான் படித்து ரசித்த கதை இதை உங்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்

கதை:பட்டுக்கோட்டை :ராஜேஷ்  


காலண்டர் தேதி ஐந்தைக் காட்டியது இன்றைக்கு அம்மாவின் ஆபரேஷன் செலவிற்காக அல்ல. அம்மா தங்குவதற்கு இடமளித்து மூன்று வேளையும் உணவுளித்து, மருத்துவக் கவனிப்பையும் பார்த்து கொள்ளும் முதியோர் இல்லத்திற்கு 1500 ரூபாய் கட்ட வேண்டும்


நினைத்துப் பார்க்கும் போது சங்கடமாகத்தான் இருந்தது.ராஜனுக்கு அவருக்கும் ஐம்பத்தெட்டு வயதாகிவிட்டது. அவரது ஒரே மகன் பெங்களுரில் என்ஜினியராக இருக்கிறான். அவனுக்கும் திருமணமாகி மனைவியுடன் அங்கு இருக்கிறான் மனைவிக்கும் அவரது அம்மாவிற்கும் ஒத்துபோகாத சூழ்நிலையில், அடிகடி மோதல். இதனால் அம்மாவிற்கு சரியான கவனிப்பு தன் மனைவியிடம் கிடைக்காததால் வேறு வழியின்றி சூழ்நிலையின் கைதியாகி அந்த முடிவுக்கு வந்தார் ராஜன்.

பணத்தைக் கட்டிவிட்டால், வேளை தவறாமல் உணவளித்து நன்றாகக் கவனித்து கொள்வார்கள். அங்கு அம்மா சண்டை சச்சரவு இல்லாமல் நிம்மதியாக கவுரவமாக இருக்க முடியும். வருடம் மூன்று ஓடிவிட்டது. அம்மாவிற்கு இப்போது எழுப்பத்தெட்டு வயதாகிவிட்டது இந்த மாதிரியான காலகட்டத்தில், கூட வைத்திருந்து கவனித்து பாக்க வேண்டும்.ஆனால் முடியாத சூழ்நிலை.

பத்து தினங்களுக்கு முன்பு அந்த முதியோர் இல்லத்திலிருந்து ராஜனுக்கு போன் வந்தது வயிற்றுப் போக்கு அதிகமாகி அம்மா மிகவும் மோசமாக இருக்கிறார்கள். உடனே வந்து பாருங்கள் என்று. ஆனால் அவர் போகவில்லை. அதற்குபின் அந்த இல்லதிலிருந்து போன் ஏதும் வரவில்லை. இவரும் பேசவில்லை இன்று பணம் கட்டக் கிளபினார் ராஜன் இறங்கி உள்ளே சென்றார்.அமைதியான சூழ்நிலையில் அமைந்திருந்தது அந்த இல்லம்.உள்ளே சிறிய கோவில் ஒன்று இருந்தது பூங்கா அமைக்கப்பட்டு ஆங்காங்கே சிமென்ட் பெஞ்சுகள் இருந்தன.

நிர்வாகியின் அறைக்குள் சென்றார் ராஜன் வணக்கம் ஸார் என்றார் ராஜன் குனிந்து எழுதிக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்து ஸார்....உட்காருங்க என்றார் நிர்வாகி சேரில் அமர்ந்தபடியே. அம்மா எப்படியிருக்காங்க ஸார்? கேட்டார். ராஜனையே சற்றுநேரம் மவுனமாகப் பார்த்த நிர்வாகி உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லே.. உடனே வாங்கன்னு போன் பண்ணியும் நீங்க  வரவே இல்லையே... 

முதியோர் இல்லத்தில் அம்மா. அடுத்த பதிவில் தொடரும்......

Monday, June 21 19 comments

என்னத்த சொல்ல

நேத்து நைட்டு ஒரு 12 மணிக்கு போன் வந்தது, யாரு இந்த நேரத்தில் போன் பண்றதுனு பார்த்தா நம்ம T.R.
என்ன சார் இந்த நேரத்தில் போன்? என்று கேட்டேன். அது வந்து தம்பி, என்னைய இப்போ யாருமே கண்டுக்கவே இல்லை. என் பையன் கூட என்ன மதிக்கறது இல்லை, ரோட்டுல நடந்து போனா கரடி பொம்மை வருது வாங்கி தாங்கனு குழந்தைகள் சொல்லுராங்க,  இந்த சின்ன பையன் விஜய் பத்தி நீங்க பதிவு போடுறிங்க என்ன பத்தி ஒரு பதிவு போடனும் என் பெயரும் விஜய T ராஜேந்தர். என்னோட பேரிலும் விஜய் இருக்குன்னு சொன்னாரு. நானும் சரி நான் உங்களை பத்தி ஒரு பதிவு போடுறேன் நீங்க அழுவாதிங்க. சொல்லி போனை கட் பண்ணேன்.
                                 மீண்டும் ஒரு போன் வந்தது அட இது யார்ன்னு பார்த்தா நம்ம விஜயகாந்த். சொல்லுங்க சார் எப்படி இருக்கு சோனியா கொடுத்த 40 கோடி இருக்கா இல்லை காலி ஆயிடுச்சானு கேட்டேன். இல்ல தம்பி அதுல இன்னும் 10 கோடி இருக்கு தம்பினு சொன்னரு, எதுக்கு போன் பண்ணிங்கனு கேட்டேன். என்ன பத்தி ஒரு பதிவு போடனும் தம்பி, அதுவும் வருங்கால முதல்வரே அப்படின்னு போடனும் அப்படின்னு சொன்னாரு. 

                                   
அட நீங்க வேற சார் இப்படி போட்ட காமிடியா இருக்கும் அது எனக்கும் தெரியும் தம்பி அப்பத்தான் வர தேர்தல்ல இன்னும் ஒரு நாப்பது கோடி தருவாங்க சோனியா. ஒன்னு மறந்துட்டேன் தம்பி என் பெயரும் விஜய் தான் அப்ப கண்டிப்பா என்னை  பத்தி பதிவு போடுவிங்கள் அப்படித்தானே என்றார். சரி பதிவு போட எனக்கு எதாவது தாங்கனு கேட்டேன் அவரு உடனே ராயபுரம் பகுதி செயலாளர் பதவி தரேன்னு சொன்னாரு ஐயோ எனக்கு ஏதும் வேண்டாம் சார் சொன்னேன் உடனே அவரு சொன்னாரு அப்போ போனை வைக்கட்டுமா, அங்ங்ங்ங்ங்ங்...
                               
நான் பதிவு போட்டு கொண்டு இருக்கும் போது ஒரு போன் வந்தது அட இது யாரு கேட்டேன் நான் தான் சரத்குமார் சொன்னாரு நான் யாரு சரத்குமார் ஓஹ..... அந்த ராதிகா வோட மூனவது புருஷன் தானே தெரியும் தெரியும் என்ன சொல்லுங்க சார் இல்லை  தம்பி நீங்க எங்களை பற்றி பதிவு போட்டா சோனியா 40 கோடி தாருவாங்கலாமே ?அப்படியா அட பாவி பசங்களா இப்படி ஒரு புரளிய யார் கிளப்புனது அப்படியல்லாம் கிடையாது, இது யாரு செய்த சதினு கேட்டேன்.  சரத்குமார் சொன்னாரு நீங்க என்ன பத்தி பதிவு போட்டா கலைஞர் கிட்ட பேசி நான் 10 கோடி வாங்குவேன் பாருங்க என்னை பற்றி சௌந்தர் ஒரு பதிவு போட்டு இருக்காருனு சொல்லுவேன்.சரி சரி நான் பதிவு போடுறேன் சொல்லி வைத்தேன் 
                               மறுபடி T.R. போன் பண்ணாரு மக்களுக்கு நல்ல செய்தி சொல்ல மறந்துட்டேன் நான் வீரசாமி பார்ட் 2 எடுக்கலாம் இருக்கேன் இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்லிவிடுங்கள் என்றார். சொல்லிவிட்டேன் மக்களே... இனி உங்கள் பாடு TR பாடு......  


                                    
                                
Saturday, June 19 8 comments

ரீமிக்ஸ் ராமாயணம்

ராமாயண கதாபாத்திரங்களை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து எடுத்து இருக்கிறார் மணிரத்னம், விக்ரம் தங்கை பிரியாமணியை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று போலீஸ் கெடுத்து விடுகிறார்கள் அதற்க்கு பலிவாங்க பிருத்வி ராஜ் மனைவி ஐஸ்வர்யாராய்யை இராவணன் (விக்ரம்) கடத்தி காட்டுக்குள் கொண்டு போய் சிறை வைக்கிறார்.
சீதாவை மீட்க ராமர் குரங்கு படையுடன் சாரி..... போலீஸ் படையுடன் பாலம் கட்டாமலேயே காட்டுக்குள் செல்கிறார். அவருக்கும் விக்ரம்க்கும் இடையே நடைபெறும் யுத்ததில் வெற்றி யாருக்கு? என்ற கேள்வி வேறயா அதுதான் தெரியும் யாருக்கு வெற்றி. 

ஐஸ்வர்யாராய்யை அவர் படகில் கடத்துவதும் காட்டுக்குள் கொண்டு வந்து சிறை வைப்பதும் அவரிடம் இருந்து ஐஸ்வர்யாராய் தப்ப முயற்சிப்பதுமாக படம் ரொம்ப மெதுவா நகர்கிறது, ஐஸ்வர்யாராயின் அழகு காதலை தூண்டியதும், படத்தில் வேகம் வருகிறது இடைவேளை பின் ஐஸ்வர்யாராய்யை கடத்தி வந்தது ஏன்?@@@@@@@ பிரியாமணியின் காதல் கல்யாணம், அந்த கல்யாணத்தில் போலீஸ் பிருத்வி ராஜ் புகுந்து விக்ரமை சுடுவது, பிரியாமணியை கற்பழிப்பது என காட்சிகள் உட்கார வைக்கிறது.

விக்ரமுக்கு அடுத்தபடியாக படம் முழுக்க கடினமாக உழைத்து இருக்கிறார் ஐஸ்வர்யாராய் மனிதநேயமில்லாத இளம் போலீஸ் அதிகாரியாக பிருத்வி ராஜ் விக்ரமின் அண்ணனாக பிரபு தம்பியாக சிலந்திபடம் ஹீரோ  முன்னா, தங்கையாக பிரியாமணி காட்டிலாகா ஊழியராக கார்த்திக் ராசாத்தி என்ற அரவாணியாக வையாபுரி படம் முழுக்க நட்சத்திர கூட்டம் நித்யானந்தா புகழ் ரஞ்சிதா மூன்று தலை காட்டுகிறார் சந்தோஷ் சிவன், வி மணிகண்டன் ஆகியோரின் ஒளிபதிவும் A,R ரகுமான் இசையில் கவிஞர் வைரமுத்துவின் பாடல்கள் சிறப்பு அம்சம்.

ராமாயாணத்தை கருவாக கொண்டு கதை என்பதால் படத்தின் முடிவு இப்படி தான் இருக்கும் என்பதை எளிதாக யூகித்து விட முடிகிறது.

மொக்க க்ளைமாக்ஸ்
ரயிலில் கணவனோடு போகிறாள் மனைவி... கணவனுக்கு அவள் நடத்தை மீது சந்தேகம். உடனே ரயில் சங்கிலியைப் பிடித்து நிறுத்துகிறாள். இறங்கி நேராக தன்னைக் கடத்தியவனிடம் போய், 'என்னைப் பற்றி என் புருஷன்கிட்ட என்ன சொன்னாய்?' என்று கேட்பதாகக் காட்சி...... 
விக்ரம் சுடப்பட்டதும் ஐஸ்வர்யாராய் வீரா....... என்று கதறுகிறார் 

இராவணன்:விக்ரம் 
ராமர் : பிருத்வி ராஜ் 
சீதா: ஐஸ்வர்யாராய் 
சூர்ப்பனகை :பிரியாமணி 
ஆஞ்சநேயார்:கார்த்திக்   
Thursday, June 17 20 comments

விஜய், ஒபாமா கலக்கல் புகை படம்

                               இவர் ஒபாமா இல்லை ஒசாமா?                                                                          
                   ஒபாமா பாதி ஹில்லரி  கிளிண்டன் பாதி கலந்து செய்த கலவை                                   ஏதோ தப்பு நடந்து விட்டது                                               புஷ்.......
                                 அடுத்த ஒபாமா நான் தான்

                                                                  

                                         யார் இவர்? நம்ம விஜய்!


Wednesday, June 16 12 comments

பாம்பென்றால் படையும் நடுங்கும்

பாம்பென்றால் படையும் நடுங்கும்” அப்படின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதே பாம்பைப் பத்தி நமக்கு தெரியாத நெறைய விஷயங்கள் இருக்குங்க! உதாரணத்துக்கு,
“பாம்புக்கு காதே இல்ல, ஆனா நம்ம எல்லாரையும் விட அதிகமா  சப்தங்கள உணர்ற சக்தி அதுக்கு இருக்கு!”
“பாம்புகளுக்கு மூக்கே கிடையாது, ஆனா வாசனை நாற்றங்கள மிகச்சரியா உணர்ற திறன் இருக்கு!”
“உலகத்துலேயே மிகக் கொடிய “பயோவெப்பன்” என்ன தெரியுமா உங்களுக்கு, பாம்புகளோட 
விஷப்பற்கள்தானாம்.பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.

இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. ஒருவகையான நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. இவ்வகையில் சேர்ந்ததே நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன. வேறு சில நச்சுப்பாம்புகள் இரத்தக் குழாய்களைத்தாக்கி அழிக்க வல்லன. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்தது. இவற்றின் தோல் செதில்களைக் கொண்டுள்ளது. நாகப்பாம்பு, கட்டுவிரியன் போன்ற சில பாம்புகள் நச்சுத்தன்மை கொண்டவை. இலங்கையில் சுமாராக 216 வகைப் பாம்பு இனங்கள் உள்ளன. நச்சுத் தன்மையுடைய பாம்பின் தலையில் <> வடிவம் காணப்படும்.

நன்றி:wikipedia

                                                                          

                                                                                                                                                                                                                                                                                                                                                                                
5 comments

நான் ரசித்த குறும்பு வீடியோ


ஒரு பெரிய நடிகரை பார்த்து இப்படி பயப்படுகிறார்

            அஜித் ரஜினி விஜய் வடிவேல்                    விஜய் - T.R

விஜய் அவர் பாட்டை ரீமிக்ஸ் பண்ணி இருக்கார்


குறிப்பு: நீங்கள் பார்த்த வீடியோவாக  இருந்தலும் மீண்டும் பாருங்கள்


Tuesday, June 15 9 comments

அஜித், சிம்பு ,அஞ்சலி ,முன்னணியில்திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 வாக்களிப்புகள் அனல் பறக்க நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ் சினிமாவுக்கும் பதிவுலகுக்குமான ஒரு பாலமாக இரண்டாவது வருடமாக நடைபெறும் இந்த வாக்களிப்புக்கு பல பதிவர்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. பல நல்லுள்ளம் கொண்ட பதிவர்கள் தங்கள் வலைப்பூக்களில் வாக்களிப்பு நடைபெறும் வலைப்பூவின் லிங்க் கொடுத்து வாக்களிப்பை ஊக்குவித்துள்ளனர்.

எங்கள் இந்த அறிய முயற்சியின் இன்னொரு வெற்றியாக தமிலிஷ்,யாழ்தேவி, தலைவன் போன்ற பிரபல திரட்டிகள் கூட இந்த வாக்களிப்புக்காக விளம்பர லிங்க் கொடுத்து எம்மை தட்டி விடுகின்றனர். எனவே இம்முறை வாக்களிப்பு பிரமாண்டமானது என்று சொன்னால் மிகை இல்லை. வாக்காளர்களை பற்றி சொல்லவே தேவை இல்லை. அபிமானம் பெற்றவர்களுக்கு வாக்களிக்கும் அதேநேரம் திறமையானவர்களையும் முன்னணியில் திகழ வைக்க தவறவில்லை
வரும் வெள்ளி (18.06.2010) இரவுடன் வாக்களிப்புகள் நிறைவடைந்து ஞாயிறு மிக பிரமானமான முறையில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. முடிவுகளை அறிய தயாராகுங்கள். முடிவுகள் எந்த கணமும் எப்படியும் மாறலாம் ஆனால் அது உங்கள் கைகளிலேயே. இதுவரைக்கும் கமலை பின்தள்ளி சிம்பு முன்னுக்கு ஓடுகின்றார். மறுபுறம் திரிஷாவை வீழ்த்தி அஞ்சலி முன்னணியில். மறுபுறம் பிரகாஷ்ராஜ் முன்னணியில் திகழ வடிவேலுவை பின்தள்ளிவிட்டு சந்தானம் முன்னேறி வருகின்றார். இசை அமைப்பாளரில் எந்த ஒரு சவாலும் இன்றி ரஹ்மான் முன்னணியில் திகழ்கின்றார்.

பாடலாசிரியர் வகையில் கடுமையான ஒரு போட்டி நடக்கிறது. நா.முத்துக்குமாரா? தாமரையா? என்பது விரைவில் தெரிந்துவிடும். பாடகர் பாடகியில் பெரிய போட்டிகள் இன்றி கார்த்திக், ஸ்ரேயா கோஷல் முன்னணியில் ஆதிக்கம் செலுத்தும் நாயகர்கள் இதுவரை அதிக வாக்குகள் பெற்ற ஒரு வகை ஆரம்பத்தில் சூர்யா முன்னணியில் இருந்து பின்னர் விஜய் முந்த அதன் பின் இப்போது எட்டிப்பிடிக்க முடியாத வித்தியாசத்தில் அஜித் முன்னணியில் உள்ளார். படங்களில் அங்காடித்தெரு விண்ணை தாண்டிவருவாயா இரண்டும் முட்டி மோதினாலும் தற்போது விண்ணை தாண்டி வருவாயா முன்னணியில் இருக்கின்றது. இதே கதை தான் சிறந்த இயக்குனரிலும் இருக்கின்றது. எனவே உங்கள் அபிமாணியை திறமையானவரை வெற்றி பெற வைப்பது நீங்கள் தான்

இன்னும் இருக்கும் ஒரு சில நாட்களை தவற விடாது உடனடியாய் வாக்களியுங்கள். இந்த முயற்ச்சியில் நீங்களும் ஒரு பங்குதாரர் ஆகுங்கள். உங்கள் நட்சத்திரம் வெற்றியாளரை ஜொலிப்பது உங்கள் கையில். என்ன தோற்க விட்டு விடுவீர்களா? 


வாக்களிக்க இங்கே சுட்டுங்கள்.Monday, June 14 10 comments

மூட நம்பிக்கையும் முட்டாள் ஜனங்களும்

கரூர் அருகே மேட்டு மகாதானபுரத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. மகாலட்சுமி தனியாக கோவில் கொண்டுள்ளது இங்கு தான். இந்த அம்மனை 24 மனை தெலுங்கு செட்டியார்கள், குரும்ப கவுண்டர் ஆகிய இரு சமூகத்தினரும் குலதெய்வமாக வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் கோவிலில் ஆடி 18ல் துவங்கி இரண்டு நாட்கள் நடக்கும் ஆடிப்பெருக்கு விழாவில், பக்தர்கள் 18 நாள் விரதம் இருந்து தலையில் தேங்காய் உடைத்துக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவர்கள்.
                                                           
தலையில் தேங்காய் உடைத்ததில் 96 பேருக்கு மண்டை உடைந்தது. 26 பேருக்கு கோவிலில் அமைத்த மருத்துவ முகாமில், தையலிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுக்கு பெயர் தான் கபால  மோட்சம் சொல்லுவாங்க...


ஆலயங்களில் உயிர் பலி கொடுப்பது எவ்வளவு மூட நம்பிக்கையோ அது போல் காட்டுமிராண்டித்தனம் என்பது உண்மை. இந்த நவ நாகரீக உலகத்தில் இன்னமும் நாம் இப்படி நடந்துக்கொள்வது ஏற்புடையகாது. நமது புராணமும் இதை வரவேற்கவில்லை. ஆகவே இந்துக்களாகிய நாம் இந்து ஆலயங்களில் இனிமேல் பலி கொடுப்பதை நிறுந்த வேண்டும்.

சூரிய கிரகண மூட நம்பிக்கை;
சூரியனை பாம்பு விழுங்குவதாக ,நமது புராணங்களில் சொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது சூரிய கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது என்பதும் மூட நம்பிக்கைதான். சூரிய கிரகணத்தின் போது கர்பிணிப் பொண்கள் வெளியே சென்றால் பிறக்கப் போகும் குழந்தை குருடாக பிறக்கும் அல்லது கிழிந்த உதடுடன் பிறக்கும் என நம்பப்பட்டது. சூரிய கிரகணம் பற்றிய மூட நம்பிக்கைநமது நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளிலும் உள்ளது.                         சிறுமிக்கும் தவளைக்கும் வினோத திருமணம் 

தமிழ்நாட்டில் கிராம நன்மைக்காக கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் சிறுமிக்கும் தவளைக்கும் வினோத திருமணம் நடந்தது.  பழங்காலத்தில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகில் உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் காலரா நோய் பரவியபோது தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடத்தியதால் காலரா நோய் குணமடைந்தது என்கிற நம்பிக்கையின் படி, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம் நடந்து வருகிறது.


            
கழுதைக்கு கல்யாணம்…மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் மக்கள்.மழை பெய்ய வேண்டி இரு கழுதைகளை பிடித்து, கோவிலில் வைத்து கல்யாணம் செய்துள்ளனர், கோவில்பட்டியில் இருக்கும் ஒரு பகுதி மக்கள். கழுதைகளுக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் மழை பெய்துவிடுமா என்ன?


முடிந்தால் புலிக்கும் புலிக்கும் கல்யாணம் செய்து வையுங்கள்


இன்றைய காலத்தில் இது போன்று சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பது நமக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இன்னும் நம் மக்கள் அறியாமையிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிப் போயுள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது.


மூட நம்பிக்கை பதிவு தொடரும்.... 
;