நன்றி யூத்ஃபுல் விகடன்
இரண்டவது முறையாக என் ஐம்பதாவது பதிவு யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக் தெர்ந்தெடுத்து உள்ளார்கள். என் ஐம்பதாவது பதிவிற்கு உங்கள் ஆதரவுக்கும் உங்கள் வாழ்த்துக்கும் நன்றி நன்றி..
இரண்டவது முறையாக என் ஐம்பதாவது பதிவு யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக் தெர்ந்தெடுத்து உள்ளார்கள். என் ஐம்பதாவது பதிவிற்கு உங்கள் ஆதரவுக்கும் உங்கள் வாழ்த்துக்கும் நன்றி நன்றி..
எங்க அம்மா அடிக்கடி இந்த கதையை சொல்லுவாங்க. கோடம்பாக்கம் அங்கு ஒரு வீட்டில் நாங்க இருந்தோம். அப்ப நான்பிறக்கவில்லை, எங்க பெரிய அண்ணன் பிறந்து 3 மாசம் இருக்கும், எங்க அம்மா இங்கு ராயபுரம். அதனால் அந்த இடம் பழக்கம் இல்லை. இரவு நேரம் பாத்ரூம் போக வெளியே தான் செல்ல வேண்டிய கட்டாயம்.
அப்போது அங்குள்ள கிணற்றில் உன் குழந்தைய போடு என்று ஒரு குரல். குழந்தைய போடாதே.... என்று இனொரு குரல். இதேபோல் இரண்டு மூன்று நாள் நடந்து உள்ளது, பக்கத்து விட்டில் உள்ளவர்கள் போல குரல் இருக்குமாம், காலை எழுந்து கேட்டால் நாங்க யாரும் கூப்பிடலை என்று சொல்ல, எங்க அம்மா நடந்ததை சொல்ல, பக்கத்தில் இருபவர்கள் அந்த கிணற்றில் இரண்டு முனி இருப்பதாகவும் ஒன்று நல்ல முனி. இன்னொரு முனி கெட்டமுனி என்று சொல்லி மேலும் . கிணற்றில் போடு என்று சொன்னது கெட்டமுனி, உன்னை அந்த நல்ல முனி தான் காப்பாற்றி இருக்கு என்று கூறினார்களாம். இந்த கதையை கேட்காத நாளில்லை. ஆனால் இதை நாங்க நம்ப மாட்டோம் கிண்டல் செய்வோம், ஆனால் அந்த இடத்தில் நாம இருந்தா தான் அந்த பயம் நமக்கு தெரியும்.
என் அனுபவம் நானும் பேய் பார்த்து பயந்து இருக்கிறேன், பேய் என்று சொல்ல முடியாது நான் ஐந்தாவது படிக்கும்போது, நானும் இன்னும் ரெண்டு பேரும் கண்ணாமூச்சு விளையாடிட்டு இருந்தோம் நான் போய் ஓடி ஒளிந்தேன், ஜன்னல் வெளியே யாரோ பார்த்து கொண்டுயிருந்தார்கள் பார்பதற்கு பயங்கரமா இருந்தது, நான் அலறி அடித்து கொண்டு வெளிய ஒடி வந்தேன் அவ்வளவு தான் மறுநாள் எனக்கு ஜுரம் என்னை கூப்பிட்டு போய் மந்திரிச்சுட்டு வந்தாங்க
மீண்டும் எனக்கு ஒரு அனுபவம் நான் தூங்கி கொண்டிருந்த போது பேய் வந்து அமுக்கியது போல், அப்போது என்னால் கை கால்களை அசைக்க முடியவில்லை பேச முடியவில்லை பேசினாலும் சத்தம் வரவில்லை, எனக்கு இதுவரை இது கனவா அல்லது உண்மையா நடந்ததா என்று தெரியவில்லை.
Tweet | |||||
23 comments:
nallaarukku.
கோடம்பாக்கம் சென்னைலதான இருக்கு????
நல்ல பகிர்வு சௌந்தர்.. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமா சொல்லி இருக்கலாம்,
யாருச்சும் இதுக்கு விளக்கம் கொடுங்க.
என்ன சௌந்தர் ஆரம்பிச்ச உடனே முடிச்சுடீங்க, இன்னும் நிறையா எழுதி என்னை பயப்படுத்தி இருக்க வேண்டாமா?...எழுதியவரை நன்றாக இருந்தது , முடிந்தால் அடுத்த பதிவில் தொடரும், காத்திருக்கிறேன் சௌந்தர் .
யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக் தெர்ந்தெடுத்து இருப்பதற்கு எனது வாழ்த்துக்கள் சௌந்தர்...இன்னும் நிறையா எழுதுங்க ..
/// எனக்கு ஒரு அனுபவம் நான் தூங்கி கொண்டிருந்த போது பேய் வந்து அமுக்கியது போல், அப்போது என்னால் கை கால்களை அசைக்க முடியவில்லை பேச முடியவில்லை பேசினாலும் சத்தம் வரவில்லை, எனக்கு இதுவரை இது கனவா அல்லது உண்மையா நடந்ததா என்று தெரியவில்லை.///
ஒரு சில வினாடிகள் மட்டும் நீடிக்கும் இந்த நிகழ்வு
எனக்கும் ஏற்பட்டது உண்டு.! இன்னும் சிலரும் இந்த அனுபவத்தை சொல்ல கேட்டு இருக்கிறேன். அமுக்கு பிசாசு என கிராமங்களில் சொல்லுவார்கள். ஆனால் இதற்கு விஞ்ஞான ரீதியான விளக்கம் உண்டு..!
நாம் ஒருக்களித்து படுக்கும் போது தலைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடை படுவதால் இவ்வாறு ஏற்படுவதாக எங்கேயோ படித்த நியாபகம்..1
அமுக்கான் என்றும் அமுக்கு பிசாசு என்றும் கிராமத்தில் இதை சொல்வார்கள்..நாம் அசந்து தூங்கும்போது மூளையும் சில நேரங்களில் ஓய்வெடுக்கும் அப்போது தண்டுவடம் மூளை செய்யக்கூடிய அப்போதைக்கு தேவையான வேலைகளை செய்யும்.. சடாரென மூளை விழிக்கும்போது அதற்கும் தண்டுவடத்துக்க்கும் இடையேயான தொடர்பு சில நொடிகள் தாமதமாக சவம்போல் கிடக்கும் நம் உடம்பை அசைக்க முடியாது போக இப்படி ஒரு உணர்வு ஏற்படுகிறது என படித்திருக்கிறேன்.. எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை மருத்துவர் யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.. இணையத்தில் தேடினேன் சரியான விளக்கம் கிடைக்கவில்லை..
senthil u are right! already sujatha wrote about this!!
keep it up yogesh
:)
ஆஹா.. பயமுறுத்துறீங்களே!
முதலில் வாழ்த்துக்கள் தோழா! உங்களின் பதிவுகள் ஏனைய பத்திரிகைகளாலும் இனங்காணப்படுகின்றன. தொடர்ந்தும் எழுதுங்கோ! நிறைய எழுதுங்கோ.
பேய் என்ற ஒன்றை நான் இன்னும் நேர பார்க்கவில்லை. நம்பமும் முடியலை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. எல்லாமே மர்மம் தான்.
இளமை விகடன் - வாழ்த்துக்கள்.
பேய் பற்றிய பதிவு மேலோட்டமாக இருக்கு. இன்னும் நிறைய அனுபவங்கள் கேட்டு எழுதுங்க. சுவாரஸ் யமாக இருக்கும். (நீங்கள் சொன்னது 'அமுக்குவான்' என்று சொல்வார்கள். சாதாரணமாக தூக்கத்திலிருந்து விழிப்பு வரும்போது மூளையும் உணர்வும் ஒரே சமயத்தில் விழிக்காமல் சற்றே தாமதம் வரும்போது இது மாதிரி ஏற்படலாம் என்பார்கள்)
Nice
பேய்கதை பயங்கரம் அந்த பேய் விஜய்னு நினைக்கிறன்...........
யூத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள்!
அனுபவ பகிர்வு நல்லா இருக்கு சௌந்தர் வாழ்த்துகள்...
//மீண்டும் எனக்கு ஒரு அனுபவம் நான் தூங்கி கொண்டிருந்த போது பேய் வந்து அமுக்கியது போல், அப்போது என்னால் கை கால்களை அசைக்க முடியவில்லை பேச முடியவில்லை பேசினாலும் சத்தம் வரவில்லை, எனக்கு இதுவரை இது கனவா அல்லது உண்மையா நடந்ததா என்று தெரியவில்லை.//
இது அதிகம் , இரவில் மரத்தடியில் உறங்கும் பலருக்கும் வரும் . ஆக்ஸிஜன் பற்றாக்குறை. மூளைக்கு சரியான அளவு கிடைக்காததால் . ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரம் .கைக்கால் அசைக்க முடியாமல் , பேச்சும் வராது விழித்துருக்கும் உணர்வு மட்டுமே இருக்கும்.
இதனாலேயே பெரியோர்கள் மரத்தடியில் உறங்குவதை தடுத்தார்கள் மரம் இரவில் ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பனை விடுவதால் இந்த தொந்திரவு. காற்றோட்டம் இல்லாத ரூமிலும் இது நடக்கும்
யூத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் விகடனில் பதிவுக்கு.
என்ன...பேய்க்கதையெல்லாம் சொல்லிப் பயப்படுத்துறீங்க சௌந்தர்.
konjam indha blog'aium padinga. nan 10th padikirappa nadandha visayam. sonna yarum namba matikiranga. elam en neram
http://kathira-syed.blogspot.com
ENAKKUM IDHU NADANDHU IRUKU...
2 TIMES IN MY LIFE..
BUT STILL I AM SEARCHING MORE EXPLANATION ABOUT
AMUKKUVAN PEI
எண்ட அம்மாக்கும் இப்பிடி ஒரு அனுபவம் இருக்கு..............அப்பேக்க எனக்கு பத்து வயசு.....எண்ட சின்ன தங்கச்சி பிறந்த நேரம்.......நாங்கள் இருந்த வீட்டின் கிணத்துக்கு பக்கத்தில ஒரு பெரிய காணி......நாங்கள் ஈரமான உடுப்பெல்லாத்தையும் இரவில வெளியில விரிச்சிட்டு தான் நித்திர கொள்ளுவம்.......இப்பிடி இருக்கேக்க ஒரு நாள் காலமை அம்மா வெளியில வந்து பார்க்கேக்க........ரெண்டு மூண்டு உடுப்பு விரித்த இடத்தில் இல்லாமல்.......கிணத்துக்கும் அந்த பெரிய காணிக்கும் இடையில் உள்ள மதில் ஒன்றில் விரித்த படி இருக்கும்..........இப்பிடி இருக்க......அம்மா ஒரு நாள் இரவு தண்ணி எடுக்கிறதுக்கு வெளியில போயிட்டு திரும்பி வர காலடி எடுத்து வைக்கவும்.......போகாதே போகாதே எண்டு யாரோ சாக போற மாதிரி சொல்லுறது கேட்டதாம்..........அதோட யாரோ இழுக்கிற மாதிரியும் இருந்ததாம்..........எப்பிடியோ அம்மா வீட்டுக்குள்ள ஓடி வந்திட்டாங்க..........ஒரு நாள் இரவு காத்து வரட்டும் எண்டு சொல்லி எங்கட வீட்டு பின் கதவை திறந்து விட்டுட்டு சன் டிவி ல நாடகம் பார்த்துக்கொண்டிருந்தம்.........அம்மா சின்ன தங்கச்சிய காலில போட்டு நித்திரயாக்கி கொண்டு இருக்கேக்க......எதார்த்தமா திரும்பினாங்க.......அப்பேக்க மதிலுக்கு கிட்ட ஒரு ஆள் நிக்கிறத பார்த்திட்டு மெல்லமா எண்ட அண்ணாக்கும் பாட்டிக்கும் சொன்னாங்க........எண்ட லூசு அண்ணன் அடிட புடிடா யாரடா அவன் எண்டு கத்திக்கொண்டு ஒரு கொட்டன் ஒண்டு எடுத்திட்டு மதிலுக்கு கிட்ட போனா........ஒண்டுமே இல்லை..........எனக்கு இப்பவும் கண்ணுக்குள்ள நிக்கிது அந்த ஆளிண்ட தலையின் மேல்புறத்தை மட்டும் பார்த்தது...........பிறகு அம்மா எண்ட அம்மம்மாட்ட இத பத்தி சொன்னாங்க................அம்மம்மா சரி எண்டு பக்கத்தில இருக்கிற ஒரு கோயிலுக்கு போனாங்க.........அங்க ஒரு ஆள் இருந்தார்..........அவருக்கு பேய்களை பத்தி நல்லா தெரியும்.........எண்ட அம்மம்மாக்கு உரு வாறது (சாமி வாறது) ஒரு வழக்கம் ஏன் எண்டா அவங்கட அப்பாக்கு ஒரு கோயில் இருக்கு (வைரவத்திரர் கோயில்) அவருக்கு பக்தி அதிகம்.......அதன் காரணமாக அவருக்கு உரு வருமாம்........நீங்கள் நம்புறிங்களோ இல்லையோ எண்டு எனக்கு தெரியாது....ஆனால் இது உண்மை......உரு வந்தவுடன் அவர் என்ன சொல்கிறாரோ அதெல்லாம் நடந்திருக்கிறது............அதே போல் எண்ட அம்மம்மாக்கும் உரு வரும்......சில நேரங்களில் உரு வந்தவுடன் நடு இரவில் கோயிலுக்கு போவார்...........சோ அம்மம்மா பக்கத்து கோயிலுக்கு போய் அந்த ஆளை பார்த்தார்.......அவர் அம்மம்மாக்கு மேல திருநீறு போட்டார்.......(எனக்கு பத்து வயசில நடந்தபடியா நடந்தது முழுவதும் ஞாபகம் இல்லை......ஞாபகம் இருக்கிற அளவுக்கு சொல்லுறன்)...............அம்மம்மாக்கு அந்த கோயில்ல இருந்து எங்கட வீட்ட வரேக்க அவங்களுக்கு உரு வந்திட்டு.......வீட்ட வந்து என்னமோ எல்லாம் சொன்னாங்க......எங்கட வீட்டின் கிணத்துக்கு பக்கத்தில இருக்கிற பெரிய காணியில் ஒரு பாழடைந்த கிணறு இருந்தது..............அம்மம்மா சொன்னாங்க அந்த கிணற்றில யாரோ விழுந்து செத்திருப்பதாகவும் அத்துடன் அந்த கிணற்றுக்கு அருகில் ஒரு தகர பெட்டகம் இருப்பதாகவும்..........பயத்தில் நாங்கள் ஒருவரும் அந்த காணிக்குள் போவதில்லை..............இப்ப அது என்ன மாதிரி இருக்கெண்டு தெரியாது.........அந்த சம்பவத்துக்கு பிறகு நாங்கள் ஆஸ்திரேலியா வந்திட்டம்.............பிறகு அந்த வீட்டில யாரோ இருக்கிறதாகவும் அங்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்பாதாகவும் சொன்னார்கள்............(பெரிய ஆக்கள் சொல்லுவாங்கள் இலந்த பழ காணிக்க பேய் நிக்கும் அங்க எல்லாம் போககூடாது எண்டு......ஆனா நானும்........எண்ட சிஸ்டரும்........நண்பிகளும் சின்ன வயதில் இலந்த பழ காணிக்கு ஒருத்தருக்கும் தெரியாமல் அடிக்கடி போவது வழக்கம்........நாங்கள் சின்ன வயசில செய்த குறும்புகளில் திருட்டுத்தனமா இலந்த பழ காணி........நெல்லிக்காய் காணி.......புளியமரம் காணி........விளாங்காய் காணிக்கு எல்லாம் போனது தான் பெரிய குறும்பு..........பழம் பொறுக்கும் ஆர்வத்தில் பேய்களை பத்தின சிந்தனையே இருக்காது ஆனால் ஏதாவது சத்தம் கேட்டால் அங்க இருந்து ஓட்டம் பிடிச்சா மெயின் றோட்டுக்கு வந்து நிக்கும் வரை ஓடுவோம்)
பேய்களில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஆனால் குறைவு.........பேய நேர்ல பார்த்த தான் முழு நம்பிக்கை வரும் :))))))))))))
:-) சரியான பயந்தாங்கொள்ளி சௌந்தர்.
இன்னும் மேக்கப் போட்டு, நீ..ளமா எழுதி இருக்கலாம்.
ரொம்ப காலமா ப்ளாக் வைச்சிருக்கீங்க. இமா லேட்டா வந்திருக்கேன். வாழ்த்துக்கள்.
Post a Comment