Saturday, June 19

ரீமிக்ஸ் ராமாயணம்

ராமாயண கதாபாத்திரங்களை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து எடுத்து இருக்கிறார் மணிரத்னம், விக்ரம் தங்கை பிரியாமணியை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று போலீஸ் கெடுத்து விடுகிறார்கள் அதற்க்கு பலிவாங்க பிருத்வி ராஜ் மனைவி ஐஸ்வர்யாராய்யை இராவணன் (விக்ரம்) கடத்தி காட்டுக்குள் கொண்டு போய் சிறை வைக்கிறார்.
சீதாவை மீட்க ராமர் குரங்கு படையுடன் சாரி..... போலீஸ் படையுடன் பாலம் கட்டாமலேயே காட்டுக்குள் செல்கிறார். அவருக்கும் விக்ரம்க்கும் இடையே நடைபெறும் யுத்ததில் வெற்றி யாருக்கு? என்ற கேள்வி வேறயா அதுதான் தெரியும் யாருக்கு வெற்றி. 

ஐஸ்வர்யாராய்யை அவர் படகில் கடத்துவதும் காட்டுக்குள் கொண்டு வந்து சிறை வைப்பதும் அவரிடம் இருந்து ஐஸ்வர்யாராய் தப்ப முயற்சிப்பதுமாக படம் ரொம்ப மெதுவா நகர்கிறது, ஐஸ்வர்யாராயின் அழகு காதலை தூண்டியதும், படத்தில் வேகம் வருகிறது இடைவேளை பின் ஐஸ்வர்யாராய்யை கடத்தி வந்தது ஏன்?@@@@@@@ பிரியாமணியின் காதல் கல்யாணம், அந்த கல்யாணத்தில் போலீஸ் பிருத்வி ராஜ் புகுந்து விக்ரமை சுடுவது, பிரியாமணியை கற்பழிப்பது என காட்சிகள் உட்கார வைக்கிறது.

விக்ரமுக்கு அடுத்தபடியாக படம் முழுக்க கடினமாக உழைத்து இருக்கிறார் ஐஸ்வர்யாராய் மனிதநேயமில்லாத இளம் போலீஸ் அதிகாரியாக பிருத்வி ராஜ் விக்ரமின் அண்ணனாக பிரபு தம்பியாக சிலந்திபடம் ஹீரோ  முன்னா, தங்கையாக பிரியாமணி காட்டிலாகா ஊழியராக கார்த்திக் ராசாத்தி என்ற அரவாணியாக வையாபுரி படம் முழுக்க நட்சத்திர கூட்டம் நித்யானந்தா புகழ் ரஞ்சிதா மூன்று தலை காட்டுகிறார் சந்தோஷ் சிவன், வி மணிகண்டன் ஆகியோரின் ஒளிபதிவும் A,R ரகுமான் இசையில் கவிஞர் வைரமுத்துவின் பாடல்கள் சிறப்பு அம்சம்.

ராமாயாணத்தை கருவாக கொண்டு கதை என்பதால் படத்தின் முடிவு இப்படி தான் இருக்கும் என்பதை எளிதாக யூகித்து விட முடிகிறது.

மொக்க க்ளைமாக்ஸ்
ரயிலில் கணவனோடு போகிறாள் மனைவி... கணவனுக்கு அவள் நடத்தை மீது சந்தேகம். உடனே ரயில் சங்கிலியைப் பிடித்து நிறுத்துகிறாள். இறங்கி நேராக தன்னைக் கடத்தியவனிடம் போய், 'என்னைப் பற்றி என் புருஷன்கிட்ட என்ன சொன்னாய்?' என்று கேட்பதாகக் காட்சி...... 
விக்ரம் சுடப்பட்டதும் ஐஸ்வர்யாராய் வீரா....... என்று கதறுகிறார் 

இராவணன்:விக்ரம் 
ராமர் : பிருத்வி ராஜ் 
சீதா: ஐஸ்வர்யாராய் 
சூர்ப்பனகை :பிரியாமணி 
ஆஞ்சநேயார்:கார்த்திக்   

8 comments:

vijay said...

நல்ல பதிவு, நேர்மையான விமர்சனம்.....வாழ்த்துக்கள் சௌந்தர்

ப.செல்வக்குமார் said...

nalla vela sonnenka...!!

kameshbujjee said...

நல்ல வீமர்சனம் நன்றி

கே.ஆர்.பி.செந்தில் said...

மொக்க க்ளைமாக்ஸ்....

சி. கருணாகரசு said...

பாக்கலாமா வேண்டாமா செளந்தர்?

சி. கருணாகரசு said...

பொறுமையா ஒளிவட்டுல பாத்துக்கலாம்தானே?

soundar said...

சி. கருணாகரசு சொன்னது…
பொறுமையா ஒளிவட்டுல பாத்துக்கலாம்தானே//

அப்படியே பார்க்கலாம்,

தமிழ் மதுரம் said...

வித்தியாசமான கோணத்தில் விமர்சித்துள்ளீர்கள். அருமை. படம் பார்க்கவில்லை. பார்த்த பின்னர் சொல்லுறன்.

 
;