Thursday, June 24

முதியோர் இல்லத்தில் அம்மா. முடிவு...

                                                                         
                                                                              
சற்றுநேரம் மவுனமாகப் பார்த்த நிர்வாகி உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லே.. உடனே வாங்கன்னு போன் பண்ணியும் நீங்க  வரவே இல்லையே..ஏன்இதுவரைஉடம்பு சரியில்லாத சமயத்திலே கூடவே இருந்து கவனிக்காமே ஒரு மூணாவது மனுஷன் போல வந்து பாத்துட்டு எப்படி போறதுன்னுதான்... என்னைப்  பார்த்து எங்க அம்மா அழுவாங்க. எனக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையா இருக்கும். அதான்... அதுக்காக வராம இருந்துடறதா? இப்போ எதுக்கு வந்தீங்க?

பணம் கட்டத்தான் இனிமே உங்களுக்கு அந்த கஷ்டமுமில்லே" என்ன ஸார் சொல்லுறிங்க பதறினார் அவங்களுக்கு உடம்பு சரியில்லாமே போன ரெண்டு நாள்லேயே இறந்துட்டாங்க அவரின் பதில் முகத்தில் ஓங்கிப் பளீரென்று அடித்தது போல் இருந்தது. இறந்துட்டாங்களா அதிர்ந்தார். ஏன் எனக்கு சொல்லே? கோபமும், வேதனையும் கலந்த குரலில் கேட்டார். உடம்பு சரியில்லாமே இருக்காங்கன்னு சொல்லியும் நீங்க வந்து பார்க்காததாலே உங்க அம்மா ரொம்ப மனவேதனைப்பட்டு நான் இறந்தா சொல்லவேண்டாம். நீங்களே என்னோட கடைசி காரியத்தைப் பார்த்துடுங்க' ன்னு சொல்லி அழுதாங்க அவங்களோட கடைசி ஆசையை நிறைவேத்த வேண்டியது எங்களோட கடமை.

என்ன ஸார் இப்படி பண்ணிட்டிங்க? உறவவுகாரங்களுக்கு எல்லாம் தெரிவிக்காமே இப்படி ஆயிடுச்சே. அவுங்கல்லாம் என்ன சொல்லுவாங்க? வயசான அம்மாவை நீங்க முதியோர் இல்லத்திலே சேர்த்ததுக்கே எதுவும் சொல்லாத அவுங்க இதுக்கு மட்டும் என்ன சொல்ல போறாங்க? மகன் நான் இருந்தும் கடைசி காரியங்களைச் செய்ய முடியாமே போயிடுச்சே...அழ ஆரம்பித்தார்.

அவங்களோட கடைசி காலத்துலே நல்லபடியா கவனிக்காமே விட்டுவிட்டு கடைசி காரியத்தை செய்ய முடியலேன்னு வருத்தபடுறீங்களே? என்மேல வருத்தத்தோட இறந்திருப்பாங்க? அம்மா இறந்த தேதி நேரத்தையும் கொஞ்சம் சொல்லுங்க ஸார் வருஷா வருஷம் திதி அன்னைக்கு தெவசம் கொடுக்கணுமே தெவசம் ஏன் கொடுக்கணும்? என்னங்க ஸார்...தெரியாத மாதரி கேட்குறீங்களே? ஒருத்தர் எந்த திதியிலே இறக்கிறாங்களோ...வருஷம் அந்தத் திதியிலே அவுங்க ஆன்மா பூமிக்கு வரும். அப்போ நாம அவுங்களுக்குப் பிண்டம் செஞ்சு வெச்சு...காய் கறி, அரசி, எல்லாம் வெச்சு தெவசம் பண்ணி தானம் கொடுத்தா அந்த ஆத்மா அதை பார்த்து சந்தோசப்பட்டு... ஆசீர்வாதம் பண்ணிட்டு திரும்பிப் போய்டும்.

உயிரோட இருக்கும் போது வெச்சு பார்த்து...சாப்பாடு போடாமே விட்டுட்ட உங்களை அந்த ஆத்மா, திதி அன்னைக்கு வந்து நீங்க படைக்கிறதைப் பார்த்துட்டு திருப்தியாகி சந்தோசப்பட்டு உங்களை வாழ்த்தும்னு நினைகிறீங்களா? பதில் சொல்லாமல் தேம்பித்தேம்பி அழுதார் ராஜன்.
இப்போ அழுது என்ன பண்றது ராஜன்? விட்லே வெச்சுக் கொண்டாட வேண்டிய குலதெய்வத்தைக் குப்பை தொட்டியிலே வீசி எறிஞ்சிட்டு கோவில் கோவிலா போனாலோ இல்லே தெவசம் கொடுத்தாலோ புண்ணியம் கிடைக்குமா சொல்லுங்க? இங்கே கொண்டுவந்து விட்டோமேன்னு நான் நினைச்சு நினைச்சு வறுத்தப்படாத நாளே இல்லே. அம்மாவுக்கும் என் மனைவிக்கும் ஒத்துப் போகாத சூழ்நிலையிலே அங்கே அவமானப்பட்டு மனக் கஷ்டத்தோட இருக்கிறதுக்குப் பதிலா இங்கே நிம்மதியா இருக்கட்டுமேன்னு தான் கொண்டு வந்து சேர்த்தேன். இந்த பாவத்துக்கு கடவுள் எனக்கு என்ன தண்டனை தரப்போறரோ?

ஆம்பளைப்பிள்ளை நான் இருந்தும் நான் கொள்ளி போடத் தேவையிலேன்னு மனசு வெறுத்து அவுங்க எனக்கு சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எவ்வளவு தூரம் மனம் வெதும்பிப் போயிருந்தா இப்படி சொல்லியிருப்பாங்க பெத்த மனசை நோகடிச்ச நான் எப்படி நல்ல இருக்க முடியும்? எனக்கு இதே தண்டனையை ஆண்டவன் கொடுத்தாலும் கொடுக்கலாம் முகத்தில் அறைந்து கொண்டு அழுதார் ராஜன்.  உங்க தப்பை நீங்க இப்போ நல்லா உணருறீங்கல்லே இப்போ உணர்ந்து என்னப் பண்றதுங்க ஸார்? பாவ மூட்டையைச் சுமந்துட்டேனே.

உங்க அம்மா இறக்கலே உயிரோடதான் இருக்காங்க. உங்களை உணரவைக்கிறதுக்காக பொய் சொன்னேன். உடம்பு சரியில்லேன்னா உடனே ஒடி வந்து பார்த்து ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுங்க ஸார் அந்த ஆத்மா குளிர்ந்துவிடும். வாரம் ஒரு தடவையாவது வந்து பார்த்து பேசிட்டுப் போங்க அம்மா உயிரோடதான் இருக்காங்களா? அப்பாடா! இப்போது தான் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு அம்மா இறந்துட்டாங்கன்னு நீங்க சொன்ன உடனே எனக்குத் தெரியமே இறந்துட்டாங்களே கடைசியா அவுங்க முகத்தைக்கூடப் பார்க்க முடியாமே போச்சேன்னு நினச்சு ரொம்ப துடிச்சுப் போயிட்டேன். என்னோட தவறை உணர்ந்துட்டேன் எங்க அம்மாவை நான் வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயிடுறேன். இப்போ நான் ரிட்டயர்டாகி வீட்லேதான் இருக்கேன். அம்மாவை நல்லபடியா கவனிச்சுக்குவேன். அவுங்க நிம்மதியாவும் சந்தோசமாவும் இருக்கட்டும். நான் அழைச்சுக்கிட்டுப் போயிடறேன் ஸார். நிம்மதி பெருமூச்சு அவரிடமிருந்து வந்தது. ரொம்ப சந்தோசம் நான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இப்படியொரு நல்ல முடிவைக் கொடுத்ததை நினைச்சு ரொம்ப சந்தோசப்படுகிறேன் என்றார் நிர்வாகி. அம்மாவை அழைத்துக்கொண்டு நிம்மதியாக ஆட்டோவில் ஏறினார் ராஜன்.  
                          
.          

19 comments:

rk guru said...

அருமையான பதிவு வாழ்த்துகள்..!

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html

மங்களூர் சிவா said...

nice

விஜய் said...

மிக்க அருமையானா , நெகிழ்ச்சியான பதிவு சௌந்தர் ....மக்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்து தவறை புரிய வைப்பதை போன்று எழுத்துக்கள்....இன்னும் தொடுருங்கள்

Thomas Ruban said...

நல்ல பதிவு நண்பரே...

Jeyamaran said...

அருமையான முடிவு சில வினாடிகளின் கண்ணீர் தோன்றி மறைந்தது முடிவில் மனம் குளிந்தது தாய் தான் தெய்வம் கோவிலில் இருபது வெறும் கல்..................

ப.செல்வக்குமார் said...

////உங்க தப்பை நீங்க இப்போ நல்லா உணருறீங்கல்லே இப்போ உணர்ந்து என்னப் பண்றதுங்க ஸார்///

arumayana pathivu... vazhthukkal...

கே.ஆர்.பி.செந்தில் said...

நல்ல முடிவு .. ராஜேசுக்கு பாராட்டுக்கள் ..

Maria Mcclain said...

interesting blog, i will visit ur blog very often, hope u go for this website to increase visitor.Happy Blogging!!!

ஹேமா said...

மனம் கனக்க இரண்டு பகுதிகளையும் வாசித்து முடித்தேன் சௌந்தர்.தாங்களும் பெற்றோர்கள் எங்களுக்கும் இப்படி ஒரு வயோதிபமும் காலமும் வரும் என்று யோசித்தால் இப்படியான கதையே எழுத வராது.மிகவும் கஸ்டமாயிருக்கு.

அழகாய் முடித்திருக்கிறீர்கள்.

Kousalya said...

இரண்டு பதிவையும் சேர்த்து இப்பதான் படித்தேன். மிக அருமையாக உணர்வுபூர்வமாக இருக்கு friend.

தமிழ் மதுரம் said...

இன்றைய பெற்றோர்களின் நிஜ வாழ்க்கையினைக் கதாசிரியர் தத்ரூபமாகப் பதிந்துள்ளார். வாழ்த்துக்கள் கதாசிரியருக்கு. பகிர்வுக்கு நன்றி நண்பா

முனைவர்.இரா.குணசீலன் said...

விட்லே வெச்சுக் கொண்டாட வேண்டிய குலதெய்வத்தைக் குப்பை தொட்டியிலே வீசி எறிஞ்சிட்டு கோவில் கோவிலா போனாலோ இல்லே தெவசம் கொடுத்தாலோ புண்ணியம் கிடைக்குமா சொல்லுங்க?//

சவுக்கடி.

நிலாமதி said...

எதிர்பாராத முடிவு. அதிர்ச்சி வைத்தியம் என்று கூட சொல்லலாம். புரியாதவர்களுக்கு புரியவைத்து விடீர்கள்.பாராடுக்கள். மேலும் உங்கள் படைப்புக்கள் வரவேண்டும்.

நீச்சல்காரன் said...

ஆஹா நல்லாயிருக்கு

seemangani said...

//உயிரோட இருக்கும் போது வெச்சு பார்த்து...சாப்பாடு போடாமே விட்டுட்ட உங்களை அந்த ஆத்மா, திதி அன்னைக்கு வந்து நீங்க படைக்கிறதைப் பார்த்துட்டு திருப்தியாகி சந்தோசப்பட்டு உங்களை வாழ்த்தும்னு நினைகிறீங்களா?//


சபாஷ் வரிகள்...எல்லாம் முடிந்ததும் முட்டி மோதி என்ன பயன்...முதியோர் இல்லங்களில் சேர்த்து விட ஆயிரம் காரணம் பார்த்தவர் சேர்க்காமல் இருக்க ஒரு காரணம் கூடவா தெரியவில்லை...கோபம்தான் வருது...பகிர்வுக்கு நன்றி சௌந்தர்...வாழ்த்துகள்...

KANA VARO said...

இப்படிக்கலக்குகிரீர்களே! வாழ்த்துக்கள்

ஜெயந்தி said...

நல்ல பதிவு.

sri said...

I Like it very much.....Good work.No words 2 say.

சி. கருணாகரசு said...

ஆரம்பம் அதிர்வா இருந்தது.... முடிவு அமர்க்களம்.
வாழ்த்துக்கள்.

 
;