இப்போதெல்லாம், டூவீலரை ‘ஸ்டார்ட்’ செய்து விட்டாலே, பலருக்கு ராக்கெட்டில் பறக்கும் நினைப்பு வந்து விடுகிறது. முன்னே செல்லும் டூவீலரை முந்த நினைப்பது, வேகமாக சென்றால் மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்று இப்படி வேகமாக ஓட்டுகின்றனர். ஹீரோவாக நினைக்க வேண்டும், பெண்கள் நம்மை பார்க்க வேண்டும், இப்படி வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுகிறது.
வேகமாக செல்வதால் எதிரில் வரும் வண்டிக்கும் ஆபத்து ஏற்படுகிறது ஒரு ஐந்து நிமிடம் நின்று பொறுமையா சென்றால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள், உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது, என்று நினைக்க வேண்டும். ஹெல்மட் போடுங்கள் என்றால் கேட்பதும் இல்லை ஹெல்மெட் நமக்கு பாதுகாப்பு. ஹெல்மெட் போடு பவர்களை கேலி செய்வது ஹெல்மட் போட்ட இவன் மொக்க பையன் என்று சொல்லுவது. ஹெல்மட் போடவும் மாட்டங்க, போட்டாலும் கிண்டல் செய்வாங்க.
ஆட்டோ அல்லது கார் , வேன் , லாரி , மோட்டார் சைக்கிள் என வீதி எங்கும் வாகனங்கள் ஓட்டிக்கொண்டு போகின்றன . அவற்றை ஓட்டும் வாகன ஓட்டுனர்கள் சிலர் அவசரமாகவும், மது போதைகளிலும் வாகனத்தை ஓட்டுகிறார்கள். இதனாலும் விபத்துகள் இடம்பெறுகின்றன.
பொறுமை கடலினும் பெரிது
Tweet | |||||
17 comments:
மிக்க அவசியமான பதிவு சௌந்தர் அவர்களே....சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் தோழரே..
ஒரு விழிப்புணர்வு யாருக்கும் இல்லப்பா...! ஒரு ஹெல்மெட் போட்டுட்டு போனா என்ன குறைஞ்சா போய்டுவீங்க.....! அருமையான ....எல்லோருக்கும் விழிப்புணர்வு தரக்கூடிய கட்டுரை தம்பி..!
வாழ்த்துக்கள்!
தற்போது வண்டி ஓட்டுபவர்கள் செய்யும் அடாவடித்தனம் மாறவேண்டும்.
படித்தவர்கள் இப்படி நடந்து கொள்வது சரியா?
நல்ல பதிப்பு.
தேவையான அறிவுறுத்தல்..
கொடிய விவத்துக்களை தினமும் செய்திகளில் பார்த்தாலும் இவர்களுக்குப் புரிவதில்லை.
ஒரு முறை நேரில் பார்த்தால் தான் உணர்வார்கள்..
படங்கள் கண்களில் ரத்தம் வரவைக்கிறது..
அவசியம்மான பதிவு.. பாராட்டுக்கள்
நல்ல முயற்சி தொடருங்கள்
மிக முக்கியமான விழிப்புணர்வு பதிவு
நன்றி சௌந்தர்..
சாலைப்பயணங்களில் அவசியம் கடைபிடிக்கவேண்டியது நிதானமும் பொறுமையும்.. உங்களின் இடுகை அதை வலியுறுத்துகிறது... வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி படங்கள் போடுவதற்கு முன்பு 'இளகிய மனமுடையவர்கள்" பார்க்க வேண்டாம் என்று போஸ்ட் டைட்டிலில் முதலில் போடவேண்டும்.. ஓகே..
பின்னால் கொண்டு வந்து சாத்துகிற நாலு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகன ஓட்டிகளை ஓரளவிற்கேனும் மதிக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பான இடத்தில் :((
:(
அவசியாமான இடுகை பிரதர்...
Ooops. So Shocking Pic. But at-least it will remind the people to drive sensibly.
படங்கள பாக்க முடியல சாமி.
பயங்கரமான படங்கள் பதற வைத்தன.
அவசியமான பதிவு. நன்றிகள்.
நண்பா! வேகமும், விவேகமும் இருந்தால் தான் இலகுவாக வாகனம் ஓட்டலாம் என்பார்கள். படங்கள் மயிர்க் கூச்செறிய வைக்கின்றன. பதிவு இன்றைய இளைஞர்களிற்கு இறக்கையால் தடவி ஆலோசனை கூறுவது போல அமைந்துள்ளது. தொடர்ந்தும் நிறையப் பதிவுகள் தருக.
Post a Comment