Friday, July 30 34 comments

டாக்டர் விஜயின் சாகசகாட்சி!

டாக்டர் விஜயின் அடுத்த படம். 
  
இதில் அவர் ஒரு பைக் ரேஸர். 
  
குருவி படத்தில் கார் ரேஸில் எப்படி ஆக்சிலேட்டர் 
கட்  ஆனதும் அதன் வயரை பல்லால் பிடித்து இழுத்து
முதல் பரிசு பெறுகிறாரோ,  


அதுமாதிரியான சாகசகாட்சிகள் நிறைந்த படம். 
  
ஒரு காட்சி மட்டும் சாம்பிளுக்காக... 
  
.... 
...
 
....
 
...
 
...
 
...
 
...
 
....
 
டாக்டர் 
விஜய் பைக் ரேஸில் கலந்துக்கொள்கிறார்... 
... 
.... 
... 
... 
... 
... 
... 
... 
.... 
... 
வில்லனின் 
சதியால் பாதியில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது... 
... 
... 
... 
... 
... 
... 
... 
... 
... 
... 
ஆனாலும் 
முதல் பரிசு வென்றுவிடுகிறார்..
...
 
...
 
...
 
...
 
....
 
...
 
...
 
...
 
....
 
.....
 
.. 
.. 
.. 
.. 
.. 
.. 
.. 
எப்படி????? 
... 
...
 
...
 
...
 
....
 
...
 
...
 
...
 
...
 
....
...
 
...
 
...
 
....
 
...
 
....
 
...
 
...
 
...
 
....
 
என்ன யூகிக்க முடியலயா? அப்ப இன்னும் கீழ போங்க....... 
... 
...
 
...
 
.....
 
....
 
...
 
...
 
...
 
...
 
....
 
...
 
....
 
...
 
...
 
....
 
...
 
...
 
...
 
...
 
....
 
...
 
...
 
...
 
...
 
அய்யா வாங்க அம்மா எல்லோரும் ஜோரா ஓரு தடவை கை தட்டுங்கள்
...                                  
எப்பூடிடிடிடிடிடிடிடிடிடிடி??????? குருவியா?? கொக்கா??வரட்டாங்கனா!!!


Thursday, July 29 20 comments

ஆயுதம் செய்......

 துப்பாக்கிகளில் பல வகைகள் உள்ளன. பிஸ்டல்  ரிவோல்வர் ஆகியன முக்கிய  கைத்துப்பாக்கி வகைகளாகும். பிஸ்டலில் துப்பாக்கிக் குண்டுகள் துப்பாக்கியினுள் இருக்கும். ரிவோல்வரின் சுழலும் சிலிண்டரின் துளைகளுள் குண்டுகள் இடப்படும்.

ஆரம்பத்தில் ஒரே ஒரு தடவை சுடக்கூடிய கைத்துப்பாக்கிகளே உருவாக்கப்பட்டன. அடுத்தடுத்துச் சுடுவதனை சாத்தியப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தன. ஆரம்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சுடுகுழல்கள் பயபடுத்தப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரிவோல்வர் கண்டுபிடிக்கப்பட்டமை ஒரே சுடுகுழலுடன் அடுத்தடுத்துச் சுடுவதைச் சாத்தியமாக்கியது.

துப்பாக்கிகள் சுழல் குளாய்களைக் கொண்டுள்ளன. இது தோட்டா அல்லது எறிபொருளில் சுழற்சியை ஊட்டுவதால், எறிபொருள் (பறந்து) செல்லும் பொழுது மேம்பட்ட நிலைப்பாட்டோடு பறந்து செல்கின்றது. கைத்துப்பாக்கிகள் பொதுவாக தற்பாதுகாப்பு ஆயுதங்களாகவே கருதப்படுகின்றன. தேர்ந்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை மிக நெருங்கிச் சென்று தாக்கவும் பயன்படுகின்றன.

இயந்திரத் துப்பாக்கி சர். ஹிராம் மக்சிம் என்பவரால் 1884 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.


(Ak-47, 1947 இன் கலாசுனிக்கோவ் தானியங்கி துப்பாக்கி) 7.62 மிமீ தாக்குதல் துப்பாக்கி சோவியத் ஒன்றியத்தில் மிக்கைல் கலாசுனிக்கோவ் என்பவரால் இரு வகையாக உருவாக்கப்பட்டது.நம்ம ஊர் போலீஸ் வைத்து இருக்கும் சுழல் துப்பாக்கி
                                                            
Tuesday, July 27 25 comments

கோபத்தின் வலி..


                                                                      


பள்ளிப்படிப்பு என்பது இப்போது அத்தியாவசியமான ஒன்று. வீட்டருகில் பள்ளி என்றால் குழந்தைகள் சென்று வர வசதியாய் இருக்கும் தூரம் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படித்தான் தன் பிள்ளைகள் படும் பாட்டைக் கண்டு தம் தம்பிசெல்வம் இருக்கும் கொருக்குப்பேட்டைக்கே வீட்டை மாற்றிட முடிவு செய்தான் டி.வி. மெக்கானிக் கார்த்திக். ஆமாம்...கூப்பிடு தூரத்தில் பள்ளி மேலும் தம்பி வேறு பக்கத்தில்...என்று எண்ணியதின் விளைவு இதோ ....புது வீட்டைல் பால் காய்ச்சி குடித்து சந்தோசமக இருக்கிறார்கள் கார்திக் குடும்பத்தினர்.  அதே சந்தோசமான வீட்டில் மறைந்திருந்த அவர்களின் வாழ்க்கையின் திருப்புமுனையை அறியாமல்.....மறுநாள் காலை கார்த்திக் அவன் பையனை பள்ளியில் விட்டு விட்டு அப்படியே வேலைக்கு  போய்விட்டான்..மாலை கார்த்திக் மனைவி, மகன் அகிலனை பள்ளியில் இருந்து கூப்பிட்டு கொண்டு வந்தாள்.. அகிலன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டு இருந்தான் அப்போது பக்கத்துக்கு வீட்டில் அகிலன் நுழைந்தான், அங்கு ஓரு பெண்மணி அகிலனை சிறுவன் என்றும் பார்க்காமல் அடித்து விட அகிலனின் கதறல் சப்தம் கேட்டு அவன் அம்மா வந்து ஏன் என் பையனை இப்படியா போட்டு அடிப்பது... என்று கேட்க்க... பக்கத்து வீட்டு பெண் அவள் வாய்க்கு வந்த படி பேச, இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது...அவர்கள் சண்டை போடும் சப்தம் வெளியே தெரு முனை வரை கேட்கிறது... அப்போது, செல்வம் வந்து கொண்டு இருந்தார், அவர் காதில் இந்த சப்தம் கேட்கிறது என்ன என்று வேகமாய் சென்று பார்க்கிறார் மனதிற்குள் இந்த பொம்பளைக்கு வேறவேலையே இல்லை என்று சொல்லி கொண்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்து, அவன் அண்ணியை கூப்பிட்டு சென்றான், செல்வம். 


செல்வம் அண்ணியிடம் அந்த பக்கத்து வீட்டு பெண் பற்றி சொல்லிகொண்டு இருந்தான், அந்த பெண் எப்போதும் யாரிடமாவது சண்டை போட்டு கொண்டே இருப்பார், எங்களிடமே அடி கடி சண்டை போடுவாள்...இதை பற்றி பேசி கொண்டு இருக்கும் போதே கார்த்திக் வீட்டுக்குள் நுழைந்தான்.. அவனிடம் நடந்ததை சொன்னாள், அதை அமைதியாக கேட்டுகொண்டே இருந்தான், சரி விடு இனிமேல் பையனை வெளியே அனுப்பாதே என்று சொல்லிவிட்டு சாப்பிட்டு தூங்கிவிட்டார்கள்.

மறுநாள் காலை, கார்த்திக் வெளியே பல் துலக்கி கொண்டு இருந்தான், அப்போது அந்த பக்கத்து வீட்டு பெண்ணின் கணவர். கார்த்திக்கை முறைத்து பார்த்து கொண்டே சென்றார். கார்த்திக்கும் மனதில் சிரித்து கொண்டே அவரை பார்த்தான், கார்த்திக் எப்போதும் அமைதியாகவே இருப்பார்.

சில நாட்கள் அமைதியாகவே சென்றது... ஓரு நாள் ஞாயிற்று கிழமை மாலை பொழுது மகிழ்ச்சியாக அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர், பக்கத்து வீட்டு பெண்ணின் கணவர் குடித்து விட்டு தள்ளாடி கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்... அவர் மனைவி வெளியே சென்றதால் வீட்டில் பூட்டு தொங்கியது.

கார்த்திக் வீட்டு வாசலில் போதையில் விழுந்தார், அங்கேயே வாந்தி எடுத்து கொண்டும் படுத்து புரண்டு கொண்டும் இருந்தார். கார்த்திக் தம்பிக்கு கோபம் தலைக்கு ஏறியது, அவரிடம் சென்று யோவ் எந்திரிச்சு உங்க வீட்டுக்குள் போய் படு என்று செல்வம் சொல்ல, அவனுக்கு போதையில் என்ன பேசுவது என்று தெரியாமல் கெட்ட வார்த்தைகள் பேச பதிலுக்கு செல்வமும் பேச வார்தைகள் வளர்ந்து கொண்டே சென்றது, அந்த பக்கத்து வீட்டுக்காரன் அங்கு வேண்டும்மென்று சிறுநீர் கழிக்க அதை பார்த்த கார்த்திக் கோவத்தை அடக்க முடியாமல் அவனை தாக்க, செல்வம் பக்கத்தில் இருந்த இரும்பு கம்பியால் அவனை தாக்கினான், அவ்வளவு தான் பக்கத்து வீட்டுக்காரனின் உயிர் அந்த இடத்திலே போனது...

கார்த்திக்கிற்கு பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரிய வில்லை. தப்பு செய்து விட்டோமே என்று மனம் சொல்கிறது...சிறது நேரத்தில் அங்கு கூட்டம் கூடி விட்டது ஒரே சப்த்தம் அவன் காதை குடைகிறது.. போலீஸிடம் இருவரும் சரண் அடைந்தார்கள். மறு நாள் அவனை நீதி மன்றம் அழைத்து செல்கிறார்கள்..

நீதி மன்றம் செல்லும் போது அவனுடைய உள் மனம் பேசிக்கொண்டு செல்கிறது, எப்போதும் கோபம் படாத நான் ஓரு ஐந்து நிமிடம் கோபத்தால் என் குடும்பமும், என் தம்பி குடும்பமும் இப்போது நடு தெருவில் நிற்கிறது. இப்படி கோபத்தில் சில வார்தைகள் தொடங்கும் அந்த கோபம் முடியும் இடம் சிறை சாலையாக தான் இருக்கும். சிறைக்கு நுழைந்தார்கள் கார்த்திக்கும், செல்வமும் அவர்களக்கு தெரியும் இனி இங்கு தான் 20 வருடம் இருக்கே வேண்டும். குடும்ப கவலையுடன் உள்ளே சென்றார்கள். 

டிஸ்கி: இங்கு சிறையில் இருப்பவர்கள் 90 சதவிகிதம் பேர் கோபத்தில் கொலை செய்கிறார்களே தவிர யாரும் தெரிந்து செய்வது இல்லை, தெரியாமல் கொலை செய்தவர்கள், வெளியே வந்து திருந்தி வாழ்வார்கள், ஆனால் கொலை செய்வதையே தொழிலாக வைத்து இருப்பவர்கள் ஜாமீன் வாங்கி கொண்டு வெளியே வந்து மீண்டும் கொலை செய்வார்கள். 
Friday, July 23 44 comments

தட்டான் பூச்சி.....
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்து இருந்தான் அருண். பொறியியல் படிப்பில் சேருவதுதான் அவனின் அடுத்த இலக்கு. இது அவன் நண்பர்களுக்கும் நன்றாகவே தெரியும், நண்பர்களும் அவனை ஊக்கபடுத்துவார்கள். நீ தான் நம் வகுப்பிலே முதல் மாணவன் உனக்கு என்ன கவலை சுலபமாக சீட் கிடைத்து விடும் என்று அடிக்கடி கூறுவார்கள்.
ஆனால் அருணுக்கு ஒரே கவலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு நிறைய செலவு ஆகும் இவர்கள் வீட்டில் அவ்வளவு வசதி கிடையாது, அருணின் அப்பா நெல் மண்டியில் மூட்டை தூக்கும் தொழிலாளி ஓரு நாள் வேலை செய்தால் 150 ரூபாய் கிடைக்கும், பள்ளி படிப்பை அங்கும் இங்கும் கடன் வாங்கி தான் படிக்க வைத்தார்.


கல்லுரி படிப்பு குறித்து என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை, அருணனை கூப்பிட்டு நீ என்னப்பா படிக்க போகிறாய் என்று கேட்டார்...  அப்பா நான் தகவல் தொழில் நுட்பம் ( IT) படிக்க போறேன்..அப்பா...அதுக்கு எவ்வளவு செலவு ஆகும் தம்பி என்றார். இலவச இடம் கிடைத்தால் முதல் ஆண்டு மட்டும் 40 ஆயிரம் ஆகும், மொத்தம் 2 லட்சம் வரை செலவு ஆகும்... நம்மளிடம்  அவ்வளவு பணம் இல்லையேப்பா...சொத்தை விற்று படிக்க வைக்கலாம் என்றால் நம்மளிடம் எந்த சொத்தும் கிடையாது என்று புலம்பி கொண்டு இருந்தார். இந்த கலை கல்லூரியில் படிக்க என்ன செலவு ஆகும் தம்பி? அருணை கேட்க்க அவனுக்கு வார்த்தை வரவில்லை அதற்க்கு அதிகபட்சம் 5000 இருந்தால் போதும் அப்பா. நீ ஏன் அந்த படிப்பில் சேர்ந்து படிக்க கூடாது. இல்லை எனக்கு அதில் விருப்பம் கிடையாது (IT) படிக்க தான் எனக்கு விருப்பம்,கவலையுடன் வேலைக்கு சென்றார் அருணின் அப்பா. வேலை செய்யும் நண்பர் உடன் பேசிக்கொண்டு இருந்த போது பையன் படித்து முடித்து விட்டால் உங்களுக்கு கவலை இல்லை, வேலைக்கு வந்து இப்படி மூட்டை சுமக்க வேண்டிய அவசியம் கிடையாது, அருணின் அப்பா, அப்படி நடந்தால் எனக்கும் சந்தோசம் தான், எங்கு நடக்க போகுது அவன் ஆசை படும் படிப்பை படிக்க வைக்க லட்ச கணக்கில் ஆகும், என்று சொல்கிறான், என்ன செய்வது என்று புரியவில்லை நண்பர்: அவன் சின்ன பையன் அவனுக்கு குடும்ப கஷ்டம் தெரியாது நீ தான் சொல்லி புரிய வைக்கணும். இருப்பது ஒரே பையன் அவனுடைய ஆசையை நிறைவேற்ற முடிய வில்லையே,என்ன செய்வது என் வீட்டில் வந்து பிறந்து விட்டான், வேறு எங்காவது பிறந்து இருந்தால் அவன் இன்னும் நல்லா இருந்து இருப்பான். என்ன செய்வது தேர்வு முடிவு வரட்டும் என்று சொல்லி கொண்டு வீட்டுக்கு போனார் அருணின் அப்பா.
மறு நாள் காலை தேர்வு முடிவு பார்ப்பதற்கு பள்ளிக்கு சென்றான் அருண், அவனை நண்பர்கள் தூக்கி கொண்டு ஓடினார்கள், எதிபார்ததை போல அவனே பள்ளியில் அதிகம் மதிப்பெண் பெற்றிருந்தான்.  பாராட்டுகள் குவிகிறது, அதே மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றான். அப்பா அம்மா விற்கும் ஒரே மகிழ்ச்சி, அருண் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் வாங்க சென்றான், அருணின் அப்பா கலை கல்லூரிக்கு விண்ணப்பம் வாங்க சென்றார்.

இருவருமே ஒரே நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தனர், அருண் ஆசையாக அந்த விண்ணப்பத்தை காட்டுவதற்குள் அருணின் அப்பா கலை கல்லூரி விண்ணப்பத்தை கொடுத்து இதில் கையொப்பம் போடு என்று சொல்ல அருணுக்கு முகம் வாடியது, இல்லை என்னால் கலை மற்றும் அறிவியல் படிக்க முடியாது என விவாதம் செய்தான். அருணின் அப்பா எனக்கு அவ்வளவு பணம் யாரும் கடன் தர மாட்டாங்க நான் என்ன செய்வேன், நான் தான் மூட்டை தூக்கி குடும்பம் நடத்துறேன், உன்னைய எப்படியாவது, பொறியியல் படிப்பில் சேர்த்து விட. முயற்சி செய்தேன், என்னால் ஒன்னும் செய்ய முடியலை, சொல்லி கண்ணீர் விட்டார் அருணின் அப்பா. அழுவாதீங்க அப்பா நான் கலைகல்லூரியில் சேர்ந்து படிக்கிறேன். என்று சொன்னான் அருண்.


சிறிது நேரம் அமைதியாக கழிந்தது. நானும் அம்மாவும் பணம் விசயமா ஒருவரை பார்க்க போறோம் நீ இங்கேய இரு நாங்கள் போய்விட்டு சீக்கிரம் வந்து விடுகிறோம், என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்பினார்கள், என்ன இருந்தாலும் அப்பாவை சமாதானம் செய்யவே அப்படி கூறினான் அருண். அவனுக்கு அதில் விருப்பம் இல்லை. யாரும் இல்லாத அறை அவன் மனதை குழப்புகிறது. நம்ம இருந்து அப்பாவுக்கு கஷ்டம் கொடுப்பதை விட தற்கொலை செய்து கொள்ளாம் என்று தவறான முடிவுக்கு வருகிறான்.

கயிறை எடுத்து மின்விசிறி மீது போட்டான், நாற்காலிய எடுத்து போட்டு நிற்க அந்த கயிறை எடுத்து கழுத்தில் மாட்டினான், அப்போது எங்கு இருந்தோ ஓரு தட்டான் பூச்சி வந்து அவனை வட்டம் அடித்தது அவன் மேல் உட்கார்ந்தது, அவனும் பார்த்தான், தட்டான் பூச்சி பற்றி படித்தது நினைவில் வந்தது. சில நாள் வாழும் தட்டான் பூச்சியே சந்தோஷமாக சுற்றி திரியும் பொழுது நான் மட்டும் ஏன் தற்கொலை செய்ய வேண்டும் நினைத்து இறங்கி விட்டான், கலை கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம், அந்த படிப்பு கூட இல்லாமல் எத்தனையோ மாணவர்கள் இருக்கிறார்கள், என்ன ஓரு முட்டாள் தனம் செய்ய பார்த்தேன், என்று மனதிற்குள் சொல்லி கொண்டே மின்விசிறியின் பொத்தானை அழுத்தினான், அந்த தட்டான் பூச்சி மின்விசிறியில் அடி பட்டு இறந்தது தன் கடமையை செய்து விட்ட ஆனந்தத்தில்..


அருணின் அப்பா பணம் வாங்கி கொண்டு வந்தார். அருணை கூப்பிட்டு நாளை உங்க பள்ளிக்கு நம்மளை வர சொல்லி இருக்காங்க காலை போகணும் சீக்கிரம் எழுந்து கிளம்பனும். என்று சொல்லி தூங்க சென்றனர். காலை பள்ளியில் பள்ளி உரிமையாளர் வந்து உங்க பையனால் இந்த பள்ளிக்கு பெருமை, அடுத்து என்ன படிக்க வைக்க போறிங்க? சிறிது நிமிட அமைதிக்கு பின், (bsc) படிக்க போவதாக அருண் சொல்ல,ஏன் பொறியியல் படிக்க வேண்டியது தானே, என்று கேட்டார்.

அருணின் அப்பா எங்களுக்கு அவ்வளவு வசதி கிடையாது என்று சொன்னார், படிப்பதற்கு வசதி தேவை இல்லை நான் கல்வி கடன் வாங்கி தருகிறேன் அதை அவன் படித்து முடித்து வேலைக்கு போகும் போது திருப்பி செலுத்தினால் போதும், அதுக்கு யாராவது ஜாமீன் இருக்கனும் சொல்லுவாங்க, நான் போடுறேன் ஜாமீன் கையெழுத்து நான் போடுறேன் என்ன படிக்க வையுங்கள், விழா ஏற்பாடு செய்து உங்க மகனுக்கு சான்றிதழ் தருவோம் என்று சொல்லத்தான் உங்களை அழைத்தோம். அருண் பெருமிதத்துடன் பொறியியல் கவுன்சிலிங் சென்றான், ஓரு தட்டாம் பூச்சி அவன் மேல் வந்து உட்கார்ந்தது...
Tuesday, July 20 33 comments

வாடகை வீடு....


                                                                                
நாங்கள் இப்போ இருக்கும் வீட்டுக்கு குடி வந்து 20 மாதம் ஆகிவிட்டது. நாங்கள் வீட்டுக்கு குடிவந்த மறு நாள் மின்குழல் விளக்கு (ட்யூப்லைட் -எப்புடி?) மாட்ட ஆணி அடித்தோம் உடனே வீட்டு முதலாளி வந்து ஆணி அடிக்க வேண்டும் என்றால் என்னை கூப்பிடுங்கள் நான் அடித்து தருகிறேன் நீங்கள் ஆணி அடிக்க கூடாது என்று சொன்னார் இதுவரை நாங்கள் சாமீ படம் வைக்க கூட ஆணி அடிக்க வில்லை..
ஓரு நாள் எங்கள் வீட்டில் ஓரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தோம் அன்று வேண்டும் என்றே தண்ணீர் தொட்டி கழுவ வேண்டும் என்று சொல்லி தண்ணீர் விட வில்லை.

வீட்டிற்கு சொந்தகாரர்கள் யாரும் வர கூடாது என்று சொல்கிறார்கள். அப்படியே யாரவது வந்தால் கிழே வரும் போதே யார் வீட்டுக்கு போறிங்கள் என்று கேட்பார்கள், எங்கள் அம்மா வந்தவர்களை வழி அனுப்ப போவார்கள் அபோது வந்து என்ன உங்கள் வீட்டுக்கு அடி கடி யாரவது வந்து வந்து போகிறார்கள், இது கூட பரவாயில்லை.


எங்க அண்ணன் குழந்தை பிறந்து 11 மாதம் தான் ஆகிறது அந்த குழந்தை வந்தாலும் அவர்களுக்கு பிடிக்க வில்லை, எங்கள் அண்ணன் வந்தாலும் இவர்கள் இங்கதான் இருக்கிறர்களா எப்போ அவர்கள் போவார்கள் என்று கேட்பார்கள்,

நாங்கள் கேட்டோம் யாரவது சொந்தகாரர்கள் வந்தால் நாங்கள் தான் அவர்களுக்கு சாப்பாடு போடபோறோம் அவர்களுக்கு தனி வீடு இருக்கிறது வந்து கொஞ்சநேரம் இருந்து பேசிவிட்டு போய்விடுவார்கள் இதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை.

நாங்கள் ஏற்கனவே வீடு பார்த்து கொண்டு தான் இருந்தோம். சரியான வீடு கிடைத்த உடன் இந்த வீட்டை காலி செய்து விடலாம் என்று புது வீடு பார்க்க சென்றோம்....அவர்கள் போட்ட கண்டிசன்

வீட்டில் கோழிகறி மீன் செய்ய கூடாது, ஆனால் ஆட்டுக்கறி செய்யலாம் என்று கூறினார்கள். இது என்ன கூத்து என்று கேட்டால், ஆட்டுக்கறி மட்டும் தான் முதலாளி அம்மாவுக்கு பிடிக்குமாம். குளியல் அறையில் பித்தளை பாத்திரம் உபயோக படுத்து கூடாது என்று சொன்னர்கள் அங்கும் சொந்தகாரர்கள் வர கூடாது என்று சொல்ல சரி என்று வேறு வீட்டை பாத்தோம்.

இங்கு 4000 வாடகை என்றால் 40000 முன் தொகை தரவேண்டும், ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள். 

எபோதோ 20 வருடத்திற்கு முன்பு ஏதோ சில ஆயிரம் கொடுத்து நிலம் வாங்கி விட்டு இப்போது அது கோடி கணக்கில் மதிப்பு இருக்கிறது, உங்கள் வீடுதான் நாங்கள் ஒன்றும் எங்களை எதுவும் கேட்ட கூடாது, என்று சொல்லவில்லை வாடகை சரியாக தரவில்லையா கேளுங்கள், உங்களுக்கு எதாவது தொல்லை தருகிறோம கேளுங்கள், உங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள் என்பதால் அவர்களை அடிமை போல் பார்க்க கூடாது.  


யாரும் எடுத்த எடுப்பிலே சொந்த வீடு வைத்து இருக்க வில்லை அவர்களும் வாடகை வீட்டில் இருந்து தான் சொந்த வீடு வாங்கி இருப்பார்கள் வாடகை வீட்டில் இருப்பவர்கள் இவர்களுக்கு அடிமையா என்ன.. இருப்பவனுக்கு ஓரு வீடு என்றால் இல்லாதவனுக்கு ஆயிரம் வீடு.....


 
;