Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Monday, March 24 1 comments

2014 பாராளுமன்ற தேர்தல் என் பார்வை..



தமிழககட்சிகள் தேர்தல் என்றால் முதலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று தான் முடிவு செய்வார்கள். ஒரு கட்சி தமிழகத்தில் வளர்ந்து வருகிறதென்றால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து அவர்களை வளரவிடாமல் செய்வது தான் திமுக அதிமுகவின் வேலை ஒரு காலத்தில் திமுக அதிமுகவின் அடுத்த சக்தியாக இருந்த வைகோவுடன் மாற்றி மாற்றி கூட்டணி அமைத்து செல்வாக்கை அழித்தனர், அடுத்ததாக இதே வழியை பாமகவிற்கும் கையாண்டனர் அவர்கள் செல்வாக்கும் தற்போது சரிந்து கிடக்கிறது, 

சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக இம்முறை திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சு அடிபட்டது கூட்டு சேர்ந்திருந்தால் தேமுதிகவிற்கு அது சரிவையே தந்திருக்கும், அந்த வகையில் விஜயகாந்த் பாஜகவுடன் கூட்டணி வைத்து தப்பித்துகொண்டார் , கூட்டணி கட்சிகளுக்காக தொகுதிகளை விட்டு கொடுக்க முன்வருவது அவரின் தேசிய அரசியல் பார்வைகள் வளர்ந்திருக்கிறது என்றே நினைக்க தோன்றுகிறது.

பாஜக கூட்டணிக்கு இருக்கும் மிகப் பெரிய பலம் என்னவென்றால் இந்துக்கள் வாக்கு ஜாதிகட்சியின் வாக்குகள், திமுக அதிமுக எதிர்வாக்குகள் , மோடியின் பெயரால் கிடைக்கபோகும் வாக்குகள்  பலமாக கருதப்படுகிறது , சிறுபான்மையினர் வாக்குகள் இந்த கூட்டணிக்கு கிடைக்காதென்பது பலவீனமே..

எந்த தேர்தலில் இல்லாதது இந்த பாராளுமன்ற தேர்தலில் நடக்கப் போகிறது திமுகவும் அதிமுகவும் 35 தொகுதிகளில் நேரடியாய் போட்டியிடுகின்றன. யாருக்கு அதிக மக்கள் செல்வாக்கு இருகின்றதென இந்தத் தேர்தலில் நன்றாக தெரிந்துவிடும், திமுகவின் பலம் சிறுபான்மையினர் வாக்குகள், ஸ்டாலின் தலைமை, இளைஞர்களின் வருகை,   ஆனால் பெரிய அளவில் கூட்டணியில்லை சகோதர யுத்தம் கோஷ்டி பூசல் என பலவீனத்துடன் இந்தத் தேர்தலை சந்திக்கிறது. திமுகவை பொறுத்தவரை இந்தத் தேர்தலில் கட்சியை பலப்படுத்தவேண்டும். சட்டசபைத் தேர்தல் பாராளுமன்ற தேர்தல் என கூட்டணி வைத்து கூட்டணி வைத்து பல இடங்களில் உதயசூரியன் சின்னம் இல்லாமலே போகின்றன அதனாலே இந்த தேர்தலை திமுக சில 35 இடங்களில் நின்று கட்சியை பலப்படுத்தி 2016 சட்டசபை தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெறவேண்டுமென்பது தான் திமுகவின் தற்போதைய இலக்கு 

தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத காங்கிரஸ் தனிமைபடுத்த பட்டதற்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல்பாடுகளே காரணம். ஆந்திராவில் தெலுங்கான உதயம் என்றவுடன் ஆந்திர காங்கிரஸ் என்னனென்ன எதிர்ப்பு தெரிவித்தார்கள் பாராளுமன்றமே அதிர்ந்தது ஆனால் தமிழக காங்கிரஸார் இலங்கை தமிழர் பிரச்சனை மீனவர்கள் பிரச்சனையில் எந்த எதிர்ப்புதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர் இப்பொழுது அதன் பலனை அனுபவிக்க தொடங்கிவிட்டனர் கூட்டணியென்றால் போட்டி போட்டு சீட்கேட்க்கும் காங்கிரஸார் தற்போது சீட் என்றால் ஓடி ஒளியும் நிலையில் உள்ளனர்.காங்கிரஸ்க்கு போதாது இந்த தண்டனை போட்டியிடும் அணைத்து வேட்பாளரும் வைப்புதொகையை இழக்கவேண்டும் வாக்கு வங்கி இல்லாமல் செய்யவேண்டும் அப்பொழுது தான் வரும் தேர்தலில் யாரும் காங்கிரஸ்வுடன் கூட்டணி வைக்க தயங்குவார்கள்.காங்கிரஸ்க்கு ஒட்டு போடும் மனநிலமையில் நம் மக்களிடையே இல்லாமலிருப்பது மகிழ்ச்சியே..

சரி இப்போது அதிமுகவிற்கு வருவோம் இந்த மூன்று ஆண்டுகளில் ஜெயலலிதா சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லாவிட்டாலும் நன்றாகவே ஆட்சி செய்துவருகிறார் குறிப்பாக அவர் வழக்கமாக செய்யும் தவறுகள் ஏதும் செய்யாமல் இருப்பதே அவரின் பலம், பலவீனம் என்று பார்த்தால் கூட்டணி கட்சிகளை மதிக்காமலிருப்பது, சிகப்புசட்டைகாரர்களை வெளியேற்றியது, கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுவது இவரின் பலவீனம், மின்வெட்டு பிரச்னையால் தொழில்துறையினர் இன்னமும் அவதிப்படுகின்றனர். எங்கு பார்த்தாலும் கொள்ளை, என பலவீனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எப்போதும் இருக்கும் அதிமுகவின் ஒட்டு வங்கி அப்படியே சிதறாமல் இவருக்கே வரும் என்பது மிகப்பெரிய பலம்.

தமிழகத்தில் கூட்டணியில்லையென்றாலும் தேர்தலுக்கு பின் கூட்டணி வைத்து கொள்ளாமல் என்ற எண்ணத்துடன் தமிழக கட்சிகள் தேர்தலை சந்திக்கிறது, அதிமுக பாஜகவுடனும், திமுக காங்கிரஸ்வுடனும் கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது, அப்படி ஒருவேளை கூட்டணி வைத்தார்களே ஆனால் தமிழர்களை முட்டாளாக்கும் செயல் மீண்டும் மீண்டும் அப்படி தமிழர்களை இனி முட்டாள்களாக்க முடியாது இளைஞர்களின் சிந்தனையும் அரசியல் பார்வையும் தற்போது அபராமாக இருக்கிறது.. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அவர்கள் கையாண்டால் திமுக அதிமுகவிற்கு காங்கிரஸ் நிலையே ஏற்படும்

Friday, August 26 2 comments

இந்தியன் தாத்தா அன்னா ஹசாரே





அன்னா  11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற்பட்டு இருப்பது சந்தோசமான விஷயம். லஞ்சம் கொடுத்து கொடுத்து ஏங்கி போய் இருந்த மக்களுக்கு யாரவது இந்தியன் தாத்தா போல் வந்து தட்டி கேக்க மாட்டார்களா என எதிர்பார்த்து கொண்டுயிருந்த நமக்கு கிடைதவர்தான் அன்னா  ஹசாரே.


யார் இந்த அன்னா, இவர் என்ன தவறு செய்தார் இவர் நல்லவரா, கெட்டவரா, என்பதையெல்லாம் விட்டு விட்டு அரசாங்கத்தையே கேள்வி கேட்கும் அளவிற்கு, ஒருவர் வந்திருக்கிறார் என நாம் நினைக்க வேண்டும் இவர் கேட்கும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் சொல்ல திணறி கொண்டிருப்பதே அரசின் நிலைமையை எடுத்து காட்டிவிடுகிறது. 

இப்போது எங்கு சென்றாலும் ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்ற வேண்டுமென்ற போராட்டம் காட்டுத் தீயாய் பரவிகொண்டிருகிறது இந்தஅளவிற்கு போராட்டம் நடைபெற என்ன காரணம். எங்கும் லஞ்சம், எதிலும் ஊழல், என பார்த்து பார்த்து கொடுத்து கொடுத்து, மக்கள் பெரும் கோபத்துடன் இருப்பதையே இந்த எழுச்சி காட்டுகிறது. 

ஆனால் அரசோ இந்த விஷயத்தில் இருந்து எப்படியாவது தப்பி ஓட பார்த்தது, அன்னா மீது பழி போட பார்த்தது, பதுங்கப் பார்த்தது,  போராட்டங்களை ஒடுக்க பார்த்தது, இந்த முறையும் மக்களை ஏமாற்றி விடலாமென்று நினைத்து. ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இப்பொழுது அரசு நிற்கிறது, மக்கள் இப்பொழுது தனக்கு கிடைத்த ஆயுதத்தை இறுகப் பிடித்து கொண்டனர், அதுவே அரசுக்கு விழுந்த மிகப் பெரிய அடி.

வெளியில் எங்கு சென்றாலும் இளைஞர்களும், முதியவர்களுக்கும், உண்ணாவிரத போராட்டங்கள், ஊர்வலங்கள் என இந்த மசோத பற்றி பரப்புரை செய்து கொண்டுயிருகின்றனர், அடித்தட்டு மக்களும் இப்பொழுது இச் சட்டம் பற்றி பேச தொடங்கி விட்டனர், இனி ஊழல் செய்ய முடியாது, என்னென்றால் ஊழல்வாதிகளை கேள்வி கேட்கும் அதிகாரம் மக்களிடம் வர போகிறது.. இனி ஊழல் செய்து வழக்கை வாய்தா வாங்கி ஒட்டி விடலாமென்ற நிலை இருக்காது. ஊழல் செய்த பணத்தில் வாங்கிய அனைத்து சொத்துக்களும் பறிக்கப்படும், ஊழல் புகார் நிருபிக்கப்பட்டால் அந்த நபரை இரண்டு ஆண்டுக்குள் சிறைக்கு அனுப்ப முடியும், 


என்ன சொல்கிறது ஜன் லோக்பால்

ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அது பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் விசாரிக்க வகை செய்யும், தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிடுவதுதான் ஜன் லோக்பால். 

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும்,எடியூரப்பாவை கதறடித்த கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தகவல அறியும் உரிமை சட்ட ஆர்வலரான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரால் வரைவு செய்யப்பட்டதுதான் இந்த ஜன் லோக்பால் மசோதா. 

இதன் மூலம் ஊழல் செய்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், புகார் கூறப்பட்ட இரண்டாண்டு காலத்திற்குள் அந்த நபரை சிறைக்கு அனுப்ப முடிவதோடு, ஊழல் செய்து சேர்த்த அந்த நபரது சொத்துக்களையும் பறிமுதல் செய்யமுடியும்.மேலும் அரசிட முன் அனுமதி பெறாமல் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்வதற்கான அதிகாரம் ஜன் லோக்பாலுக்கு உள்ளது. 

எந்த ஒரு அரசியல் சாயமின்றி போராடுவதே இந்த எழுச்சிக்கு காரணம், மக்கள் அரசியல் வாதிகளை நம்பி நம்பி ஏமார்ந்து கொண்டிருந்தான் இப்பொழுது ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது, நம் இளஞ்ர்களால். அப்துல்கலாம் சொன்னதை போல் இளஞ்ர்கள் கையில் இந்தியா இருப்பது நம் கண் முன் தெரிகிறது.. இந்த போராட்டத்தை திரளாக கலந்து கொண்டு போராடும் இளஞர்களை பாராட்டுவோம். இன்னமும் இந்த அரசு தப்பித்து ஓடவே பார்க்கிறது... நம் விடாமல் போராடுவோம். 

ஊழல்லற்ற நாடாக மாற்றுமா இந்த ஜன் லோக்பால் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 


தகவல் உதவி : webdunia


Monday, May 9 24 comments

ஆசைக்கும் ஓர் அளவுண்டு (கனிமொழி)





இப்பொழுது அனைவரும் முனு முனுக்கும் வார்த்தை...ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு தொடர்பு இல்லை. ஆ.ராசாவே முழுப்பொறுப்பு" என்று கூறியது தான், பரபரப்பு செய்தி. தன் கட்சிக்காரரை காப்பாற்றினால் போதும் மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்று நினைத்து விட்டார் போல ராம் ஜெத்மலானி.

ஸ்பெக்டரம் விவகாரத்தில் முதல் காரணம் கனிமொழி தான் என ராம்ஜெத்மலானிக்கு தெரியாமலா இருக்கும்.... இப்பொழுது இந்த ராம் ஜெத்மலானி பற்றி பார்ப்போம் இவர் வாதாடிய பிரபல வழக்குகள்.

1. ஹர்சத் மேத்தா என்பவர் செய்த பங்குசந்தை மோசடிக்கு ஆதரவாக 


2. கேதான் ப்ரேக் என்பவர் செய்த பங்குசந்தை மோசடிக்கு ஆதரவாக 


3.நம் பாராளுமன்றத்தை தாக்கிய அப்சல் குரு என்பவருக்கு ஆதரவாக 


4. இந்தியாவையே உலுக்கிய ஜெசிக்கா என்ற பெண்ணை கொலை செய்த மனுஷர்மா என்பவனுக்கு ஆதரவாக

5. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல இந்திரா காந்தியை கொலைசெய்தவர்களுக்கு ஆதரவாக 



இந்த வழக்குகளில் எல்லாம் குற்றவாளி யார் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். இவர் எப்போதும் குற்றவாளிகளுக்கு மட்டும் தான் ஆஜர் ஆவாரா...?

கனிமொழிக்கு சில கேள்வி...

1.75 லட்சம் கோடி ஊழல் செய்தால்...மாட்டிக்கொள்வோம் என்பது தெரியாதா உங்களுக்கு...???

நீங்கள் சொல்லி தானே ராஜா..ஊழலுக்கு துணை நின்றார் இப்பொழுது அவரை தனியே விட்டு விட்டீர்களே..???


இப்பொழுது ராஜா தான் முழு காரணம் என்று உங்கள் வக்கீல் சொல்கிறாரே உங்களுக்கெல்லாம் பங்கு வந்து விட்டதால் தானே..???


கலைஞர் பொண்ணாக இருந்தும் எப்படி ஊழல் செய்ய வேண்டுமென்று உங்களுக்கு தெரியவில்லையே ஏன்..??

இப்பொழுது எதற்காக இவ்வளவு பணம் கொள்ளையடித்தீர்கள் உங்களுக்கு அடுத்த வேளை சோற்றுக்கா பஞ்சம்...???

ஏதோ மனதில் இருக்கும் கேள்விகள் இது இவையெல்லாம் அவர்கள் செவிக்கு எட்டாது என்பது எனக்கு தெரியும், இருந்தாலும் கேட்டு தான் பார்ப்போம் என்று ஒரு ஆசை தான்.

கனி மொழி மேடம் உங்கள் கட்சிகாரர்கள் தான் உங்களால் சிறை செல்கிறார்கள் என்றால் உங்கள் டிவியில் வேலை பார்ப்பவர்களும்...சிறை சென்று விடுவார்கள் போல, இனி உங்கள் தொலைக்காட்சிக்கு பணிபுரிய வந்தால் முன் பிணையுடன் தான் வேலைக்கு வரவேண்டும் போல.  

ஆசைக்கும் ஒரு அளவுண்டுஇப்படி பெருந்தொகையை கொள்ளை அடித்தால் சிறை செல்லாமல் எங்கு செல்வார்கள், பெண்ணின் ஆசை மிகப் பெரியது என்பதை நீங்கள் நிறுபித்து உள்ளீர்கள். ஜெயலலித்தாவையே மிஞ்சி விட்டீர்கள்...!!!

சிறை செல்லும் முன் உங்கள் தந்தையிடம் பயிற்சி பெற்றுகொள்ளுங்கள் சி பி ஐ விசாரணை முன்பு  எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பதில் அவர் அனுபவசாலி...





டிஸ்கி : இந்த ஸ்பெக்டரம் ஊழல் வெளிவர காரணமாய் இருந்த சன்டிவிக்கு ஏதாவது இருக்கிறதா..???



Friday, January 28 34 comments

மறைந்து இருக்கும் பொருளாதாரம்...!








கருப்பு பணம் என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது கள்ள நோட்டை தான் கருப்பு பணம் என்று நினைத்து கொண்டு இருந்தேன், பிறகு தான்...தனக்கு வரும் வருமானத்தில் அரசுக்கு கணக்கு காட்டாமல் வைத்து இருந்தால் அது தான் கருப்பு பணம் என தெரிந்தது இதே போல் சாமானிய மக்களுக்கு எத்தனை பேருக்கு கருப்பு பணம் என்றால் என்னவென்று தெரியும்....என தெரியவில்லை கருப்புப்பணம் என்றால் என்னவென்றே தெரியாத நமக்கு அதை பதுக்கி வைத்திருக்கும் அளவை கேட்டால் மயக்கமே வந்துவிடும் 70 லட்சம் கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்துள்ளனர். வங்கியே முன்வந்து எங்கள் வங்கிகளில் கணக்குவைத்திருப்போர் விபரங்களை அந்ததந்த நாடுகள் கேட்டால் கொடுக்கத்தயார் என அறிவித்து இருக்கிறது ஆனால் அது நம் இந்திய அரசியல் வாதியின் செவிகளில் விழவில்லை போல...செவிகளில் விழுந்தாலும் அதை கண்டுகொள்ளமாட்டார்கள்.

 அரசு இந்த பணத்தை மீண்டும் இந்தியா கொண்டு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.5 லட்சம் ரூபாய் கிடைப்பதோடு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட் போடலாம் என சொல்கிறார்கள்... இவ்வளவு பணம் நம் நாட்டை விட்டு எப்படி போகிறது...? 

இந்த பணம் எங்கு இருந்து இவர்களுக்கு வருகிறது...எல்லாம் இந்த அரசியல் வாதிகள் செய்யும் ஊழல்தான் இப்படி மலை போல் குவிந்து கிடக்கிறது, இன்னும் பல பெரும் தொழிலதிபர்கள் செய்யும் சேட்டை தான் அந்த மலைகள் குட்டி போடுகிறது சிலர் இப்படி வரிகட்டாமல் இருப்பதால் மக்களுக்கு தான் பெரும் துன்பம், அரசுக்கு வருவாய் இல்லை என்று சாமானிய மக்கள் வாங்கும் தீப்பெட்டி மீது வரி உயரும்

சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது, இந்த பணம் மீண்டும் இந்தியாவிற்கு கிடைத்தால், நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும். மேலும் இந்த பணத்தை வங்கியில் போட்டவர்களுடைய வாரிசுகளுக்கே அந்த வங்கியில் பணம் இருப்பது தெரியவில்லை, அந்த பணம் எல்லாம் முடங்கி போய் உள்ளது, இந்த பணம் மீண்டும் கிடைத்தால் அதை வைத்து நம் நாட்டின் கடனை அடைத்து விடலாம்....பல நாடுகளுக்கு இந்தியாவே கடன் தரலாம்...ஒரு குடும்பத்திற்கு 1 இலட்சம் என பிரித்து கொடுத்தால் நாட்டில் யாரும் ஏழையாகவே இருக்க மாட்டார்கள்.

சுவிஸ் வங்கிகளில் யார், யார் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்ற தகவலை மத்திய அரசிற்கு சுவிட்சர்லாந்து அரசு அளித்துள்ளது. ஆனால் அந்த விவரங்களை வெளியிடக்கூடாது என்ற உறுதிமொழியை அளித்தே விவரங்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார்.

இவர்கள் பெயர்கள் தான் முன்னிலையில் இருக்கும் அதனால் தான் கூற மறுகிறார்கள்...இவர்களுக்கு பணம் தரும் தொழில் அதிபர்கள் பெயரை வெளியிட்டால் அவர்கள், இவர்களுக்கு நிதி தரமாட்டார்கள், அந்த பட்டியலை வெளியிட்டால் இவர்களுக்கு என்ன லாபம், அதான் காரணம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுக்குழு பொது கணக்குக்குழு என கூச்சல் போடும் எதிர்கட்சிகள் இந்த விஷயத்தில் ஏன் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை ஏன் என்றால் அவர்கள் பணமும் அங்கே இருக்கிறது....சாமானிய மக்களின் வங்கியில் அவன் வைத்து இருக்கும் இருப்பு தொகை கூட இருக்காது ஆனால் இவர்களுக்கு இவ்வளவு பணம் அதை முடக்கி வேறு வைத்து உள்ளார்கள். 



பணத்தை வெளி நாடுகளுக்கு கொண்டு செல்வதையும் வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், அதற்கு என்று தனி சட்டம் போட வேண்டும். அதற்கும் மேல் நாம் திருந்த வேண்டும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சரியாக செலுத்த வேண்டும் அரசியல்வாதி ஊழல் செய்கிறான் என்பது எல்லாம் இரண்டாம் பிரச்சனை நம் கடமையை ஒழுங்காக செய்வோம் எத்தனை நாட்களுக்கு தான் இவர்களால் மறைத்து வைக்க முடியும்,என்றாவது ஒரு நாள் மறைந்து இருக்கும் பொருளாதாரம் வெளிவுலகிற்கு வந்தே தீரும்.




Friday, December 3 75 comments

பொது கணக்குகுழு....



எதிர்கட்சிகள் விரும்பும் கூட்டுகுழு பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ஆளும்கட்சி விரும்பும் பொது கணக்குகுழு என்பதை பற்றி பார்ப்போம்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மான்டேக்-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் விளைவாக, 1921-ம் ஆண்டில் முதன் முறையாக பொது கணக்கு குழு அமைக்கப்பட்டது. அப்போதெல்லாம், நிர்வாக சபையின் நிதி உறுப்பினர்தான், அக்குழுவின் தலைவராக இருந்தார். சுதந்திரம் பெற்ற பிறகு, மத்திய நிதி மந்திரியாக இருப்பவர் பொது கணக்கு குழுவின் தலைவராக செயல்படும் வழக்கம் ஏற்பட்டது.    

ஆனால் இந்தியா, குடியரசு நாடக மாறிய பிறகு பொதுகணக்கு குழுவில் தலைகிழ் மாற்றங்கள் ஏற்பட்டன. அக்குழு பாராளுமன்ற சபாநாயகரின் கட்டுப்பாட்டின் கிழ் கொண்டு வரப்பட்டது. அக்குழு, எம்.பி.களே உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் இருந்து ஒருவரை குழுவின் தலைவராக சபாநாயகர் நியமித்து வந்தார்.

நியமனம் 

தற்போது, பாராளுமன்ற சபைநடவடிக்கை விதிமுறைகளின்படி ,பொதுகணக்கு குழு ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆண்டு தோறும் மக்களவை எம். பி.களில் 15 பேரும்,  மேல் சபை எம்.பிகளில் 7 பேரும் இதன் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக் காலம், ஒரு வருடம் மட்டுமே. இவர்களில் ஒருவரை குழுவின் தலைவராக சபாநாயகர் நியமிப்பது வழக்கம்.

1967-ம் ஆண்டுக்கு முன்புவரை ஆளுங்ககட்சி எம்.பி.யே. பொது கணக்கு குழு தலைவராக நியமிக்கப்பட்டு வந்தார்.1967-ம் ஆண்டில் இருந்து தான் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் தலைவராக நியமிக்கும் வழக்கம் ஏற்பட்டது. தற்போது வரை, அந்த நடை முறை நீடித்து வருகிறது 

செயல்பாடுகள் 

பொது கணக்கு குழுவின் செயல்பாடுகள், மக்களவை அலுவல் நடை முறைகள் விதிமுறைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் செலவுகளுக்காக, பாராளுமன்றம் ஒப்புதல் அளித்த தொகை தொடர்பான கணக்குகளையும், மத்திய அரசின் ஆண்டு நிதி கணக்குகளையும்,  பாராளுமன்றத்தின் முன்பு சமர்ப்பிக்கப்படும். இதர கணக்குகளையும் ஆய்வு செய்வது பொது கணக்கு குழுவின் பணி ஆகும்.

மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை ஆய்வு செய்வதும், பொது கணக்கு குழுதான், மத்திய அரசின் ஆண்டு கணக்குகளை ஆய்வு செய்யும் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் தாக்கல் செய்வார். ஜனாதிபதி மூலமாக பாராளுமன்றத்துக்கு வரும் அந்த அறிக்கை, மிகவும் நுட்ப்பமனாதாகவும், சிக்கலானதாகவும் இருக்கும், அதை பாராளுமன்றம் விரிவாக ஆய்வு செய்வது கடினம். அதற்கு போதிய நேரமும் ஒதுக்க இயலாது, ஆகவே அந்த அறிக்கையை ஆய்வு செய்யும் பணியை பொது கணக்கு குழுவிடம் பாராளுமன்றம் ஒப்படைத்துவிடும்.

பணிகள் 

*  ஆகவே இத்தகைய ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் பொது கணக்கு குழு தனது ஆய்வில் கிழ் கண்ட அம்சங்களை சரிபார்க்க வேண்டும் அவை என்ன என்று பார்ப்போம் 

*  கணக்கில் காட்டப்பட்டுள்ள தொகை உரிய முறையில் செலவிடப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும் 

*  செலவு கணக்கு ஒத்துப் போகிறதா..? என்று பார்க்க வேண்டும். 

*  எல்லா மறு ஒதுக்கீடும் உரியவிதிமுறைப்படி செய்யப்பட்டுள்ளாதா? என்று பார்க்க வேண்டும் 

மேலும் அரசு பொதுத்துறை நிறுவங்கள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள். தன்னாட்சி பெற்ற அமைப்புகள் ஆகியவற்றின் வரவு செலவு கணக்குகள், லாப-நஷ்ட கணக்குகள் ஆகியவற்றையும் பொது கணக்கு குழுவே ஆய்வு செய்கிறது.

பாராளுமன்றம் ஒப்புதல் அளித்த தொகைக்கு அதிகமாக எந்தப் பணிக்காவது பணம் செலவழிக்கப்பட்டு இருந்தால் அதற்கான காரணங்களை பொது கணக்குகுழு ஆய்வு செய்யும்.அது தொடர்பாக, மத்திய அரசுக்கு தனது சிபாரிசை தெரிவிக்கும். அலட்சியம் காரணமாக,நஷ்டமோ ஆடம்பர செலவோ ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தால், அது பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சங்களிடமோ அல்லது துறைகளிடமோ பொது கணக்கு குழு விளக்கம் கேட்க்கும். மீண்டும் அத்தகைய தவறு ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டறியும் அத்தகைய சூழநிலையில், அந்த அமைச்சங்கள் அல்லது துறைகள் மீது பொதுகணக்கு குழு தனது கண்டனத்தை பதிவு செய்யலாம். அதிருப்தியையும் தெரிவிக்கலாம்.

இத்தகைய அதிகப்படியான செலவுகளை ஒழுங்குபடுத்தி கொள்வதற்காக, அதை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு கொண்டு வருவது மத்திய அரசின் வழக்கம்.அதற்கு விரைவாக வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பொது கணக்கு குழு முன் கூட்டியே ஒப்படைத்து விடும். 

பொதுவாக, மத்திய அரசின் கொள்கை முடிவுகள் குறித்து பொது கணக்கு குழு எந்த கருத்தும் தெரிவிப்பது இல்லை. ஆனால் அந்த கொள்கை முடிவுகளை செயல்படுத்துவதுவதில் நஷ்டமோ, ஆடம்பர செலவுகளோ ஏற்பட்டால், அதை சுட்டிக்காட்ட, குழுவுக்கு உரிமை உண்டு.

நடவடிக்கை அறிக்கை 

தணிக்கை அறிக்கையை பொது கணக்கு குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கும் போதே, மத்திய அரசு இன்னொரு காரியத்தையும் செய்கிறது. தணிக்கை அறிக்கை மீது, தான் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் எடுக்க திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை பொது கணக்கு குழுவுக்கு தெரிவிக்கிறது. தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 6 மதங்களுக்குள் இதை மத்திய அரசு செய்கிறது அந்த நடவடிக்கை அறிக்கையை பொது கணக்கு குழு பரிசீலித்து ஒழுங்கு படுத்துகிறது.

அதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில். நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது அதில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பாக, தான் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தனது இறுதி பதிலை பொது கணக்கு குழுவுக்கு தெரிவிக்கும், இவ்விதமாக ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசின் நடவடிக்கை விவரங்கள்,பாராளுமன்றத்தில் அறிக்கை வடிவத்தில் தாக்கல் ஆகின்றன. இத்துடன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொது கணக்கு குழுவின் ஆய்வுப்பணியும் முடிவடைகிறது. 
   


Monday, November 29 42 comments

கூட்டுக்குழு.....




கடந்த இரண்டு வாரங்களாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அமளி, அவை ஒத்தி வைப்பு, நடந்துகொண்டு இருக்கிறது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான பிரச்னையை பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் குரல் எழுப்புகின்றன.


பாராளுமன்ற கூட்டுக்குழு,  பாராளுமன்ற கூட்டுக்குழு என்று சொல்கிறார்கள், கூட்டு குழு என்றால் என்ன..? கூட்டு குழு அமைத்தால் என்ன ஊழல் செய்து இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க முடியுமா அல்லது இதற்க்கு முன்பு கண்டு பிடித்து இருக்கிறார்களா..? 


கூட்டுக்குழு அமைக்கப்படும் முறை 

பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் தான் கூட்டுக்குழு வின் தலைவராக செயல்படவேண்டும். பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரு சபைகளின் ஒப்புதலுடனோ அல்லது இருசபைகளின் தலைவர்கள் கலந்து பேசியோ பாராளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்கலாம். குறிப்பிட்ட ஒரு குழுவிற்கு எத்தனை பேர் உறுப்பினர்களாக நியமிக்கவேண்டும் என்ற வரையறை எதுவும் இல்லை பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.


பொதுவாக பாராளுமன்ற கூட்டுக்குழுவில், மக்களவை எம்.பி.க்கள் மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்கு இடம் பெறுவார்கள் உதாரணமாக, ஒரு கூட்டு குழுவில் 15 எம்.பி.க்கள் இடம் பெறுகிறார்கள் என்று வைத்துகொண்டால், அவர்களின் 10 பேர் மேல் சபையையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் இந்த குழு, தனது பணியை முடித்து அறிக்கை தாக்கல் செய்தபின், மேல் நடவடிக்கைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது குறிபிடத்தக்கது


கூட்டுக்குழு செயல்படுவது எப்படி..?

பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட அந்த பிரச்னை பற்றி விசாரணையை தொடங்கி விடும். முதலில் விசாரணை நடத்தப்படும் இரண்டாவதாக,  வருங்காலத்தில் இது போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரிந்துரைகளை இந்த குழு வழங்கும். இந்த விசாரணையின் போது சம்பத்தப்பட்ட துறையில் நிபுரணத்துவம் பெற்றவர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் இந்த பிரச்னையில் ஆர்வம் காட்டுகிறவர்களின் கருத்துக்கள், மற்றும் ஆலோசனைகளை குழு பெற்றுக் கொள்ளலாம். தொழில்நுட்ப பிரச்னைகளில் உரிய ஆலோசகர்களையும் நியமித்துக் கொள்ள முடியும். அத்துடன் பொதுமக்களிடம் இருந்தும் யோசனைகளை கேட்டு பெற்றுக் கொள்ளாலாம். கூட்டுகுழுவின் விசாரணை நடைமுறைகள் ரகசியமாக நடைபெற்று வந்தாலும், விசாரணையின் நிலவரம் குறித்து குழுவின் தலைவர் அவ்வப்போது பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கலாம்.

இது வரை அமைக்கப்பட்ட குழுக்களால் பயன் கிடைத்ததா..?

கடந்த 25 ஆண்டுகளில் 4 விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டன . ஆனால் இதில் ஒரு விவகாரத்தில் கூட குறிபிடத்தக்க பயன் கிடைக்க வில்லை என்ற கருத்து உள்ளது. 


முதலில் கடந்த 1987-ம் ஆண்டு 'போபர்ஸ் பீரங்கி ஊழல்' விவகாரத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய ஊழல் புகார் குறித்து குழு அமைக்கபட்டது இந்திய அரசியல்வாதிகளுக்கு ஸ்வீ டனின் "போபர்ஸ்" ஆயுதநிறுவனம் கொடுத்த லஞ்சப் பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது இந்த குழுவில் காங்கிரஸ் எம்.பிக்களே அதிகமாக இடம் பெற்று இருப்பதாக குற்றம் சாட்டிய எதிர்கட்சி உறுப்பினர்கள் விசாரணையை புறக்கணித்து விட்டனர். இதனால் அந்த குழுவின் அறிக்கை எதிர்க்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. 


இரண்டவதாக 1992-ம் ஆண்டில் ஹர்சத் மேத்தாவின் பங்கு சந்தை ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பணத்தை தவறாக பயன்படுத்தி பங்கு சந்தையில் முதலீடு செய்த குற்றச்சாட்டு குறித்து அந்த குழு விசாரணை நடத்தியது. விசாரணைக்குப்பின் குழுவின் அறிக்கை தாக்கல் செய்தபின் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக தனி நீதி மன்றம் அமைப்பதற்கு 5 ஆண்டு காலம் பிடித்து குறிபிடத்தக்கது. அத்துடன் அந்த குழுவின் பல பரிந்துரைகள் அமல் படுத்தப்படவே இல்லை.


3 வதாக அவ்வளவாக பிரபலம் இல்லாத கேதான் பரேக்கின் பங்கு ஊழல் புகார் குறித்து அமைக்கப்பட்ட குழுவாகும். கேதான்பரேக்கிற்கு வங்கிகள் மற்றும் "கார்பரேட்" நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு குறித்து இந்த குழு விசாரணைநடத்தியது. விசாரணைக்குப்பின் பங்கு மார்க்கெட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தாக்கல் செயயப்பட்ட அறிக்கை பின்னர் நீர்த்துப்போனது.

4 வதாக 2003-ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு, குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தாக புகார் குறித்து விசாரித்தது. 2004-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட அந்த குழுவின் அறிக்கையில் அந்த குழுவின் அறிக்கையில் குளிர்பானங்களில் பூச்சி மருந்து கலந்து இருந்த புகார் நிருபிக்கப்பட்டதுடன், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பரிந்துரைகளும் இடம் பெற்று இருந்தன.

இந்த வரிசையில் ஸ்பெக்ட்ரம் இடம் பெறுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க ஆளும்கட்சி தயங்குவதற்கு காரணம், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் தான் கூட்டுக்குழு வின் தலைவராக இருக்க வேண்டும் என்பதே...  

இதுவரை நடந்து ஊழலில் பெரிய ஊழல் போபர்ஸ்" ஆயுதஊழல் தான் அதற்கே இது வரை விடை கிடைக்கவில்லை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக நடந்த ஊழலிற்கா விடை கிடைக்கப்போகிறது..?



  
Thursday, September 9 35 comments

திமுக சாதனைகளும் வேதனைகளும் - part II



தேவையில்லாத ஒரு கருத்து கணிப்பை நடத்தி, இவர்கள் குடும்பத்தில் யார் பலம் மிக்கவர்கள் என்பதை காட்டுவதற்கு அப்பாவி மூன்று பேர் பலியாக காரணமாக இருந்தார்கள்.  

 தமிழ் நாடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டார்கள், படுகிறார்கள். கிராமத்து பக்கம் 6 மணிநேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தார்கள், இந்த திமுக ஆட்சி தொடங்கியது முதல் இன்று வரை இந்த மின்சார தட்டுபாடு தீர்ந்த பாடு இல்லை, மின்சாரம் இல்லாததை பற்றி (திமுக) அவர்கள் கவலைபட வில்லை.  

திமுகவை கேட்டால் சென்ற ஆட்சி தான் காரணம் என்று சொல்கிறார்கள்..அடுத்து வரும் ஆட்சியிலும் மின்சாரம் தட்டுபாடு தீரும் என்று தோன்றவில்லை, இவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்வார்கள், மின் பற்றா குறை இப்போது தீரும் அப்போது தீரும் என்று நமது அமைச்சர் AC அறையில் உட்கார்ந்து கொண்டு பேட்டி அளித்தார் ஆனால் இவர்கள் பாராட்டுவிழா, மாநாடு, கட்சி மீடிங், என்று செலவு செய்த மின்சாரத்தை சேமித்து இருந்தாலே பாதி தட்டுபாடு தீர்ந்து இருக்கும். 

அரிசி ஒரு ரூபாய்க்கு தருகிறார்கள் நல்ல விசயம் தான் ஆனால் அதை கடத்தி விற்பனை செய்பவர்களை அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது, எப்படி கண்டு கொள்வார்கள் திமுக கவுன்சிலர் முதல் அனைவரும் சேர்ந்து தான் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கிறார்கள். ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி கொண்டு போய் பக்கத்து மாநிலத்தில் 18 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது, இப்போது கடத்தலில் அதிகம் லாபம் பார்க்கும் கடத்தல் தொழில் இது தான் முதலிடம்.  இன்று ஒரு ரூபாய்க்கு ரேஷனில் அரசி தருகிறார்கள். சோற்றுக்கு செலவு ஒரு ரூபாயாக இருக்கலாம். ஆனால் ஒரு நாள் குழம்பு வைக்க சராசரியாக 50 ரூபாய்க்கு மேல் செலவாகிறது 


விலை வாசி உயர்வு சாமானிய மக்களால் சமாளிக்க முடியாத பிரச்சனையாக இருக்கிறது இந்த விலைவாசி உயர்வை கட்டுபடுத்த இந்த அரசு தவறி விட்டது, ஒரு நூல் அளவுக்கு கூட நடவடிக்கை எடுக்க வில்லை. விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல், டிசல் விலை உயர்வும் ஒரு காரணம், நான்கு, ஐந்து, முறை பெட்ரோல், டீசல், விலை உயர்த்தப் பட்டது திமுக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை இவர்கள் பதவி மட்டுமே முக்கியமாக இருந்தது, மக்கள் எப்படி கஷ்டப் பட்டாலும் இவர்கள் கவலை படவில்லை. 


ஈழ தமிழர்கள் பிரச்னையில் தமிழ் நாட்டில் கலைஞர் ஒருவரால் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நம்பி கொண்டு இருந்த தமிழ் நாட்டு மக்களுக்கு இவர் ஒன்றுமே செய்யாதது பெரும் ஏமாற்றத்தை தந்தது .அப்போதே மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெற்று கொண்டு இருந்தால், பல லட்சம் மக்கள் உயிர் இழந்ததை தடுத்து இருக்கலாம் இவர்கள் செய்த ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுகவை தடுத்து விட்டது. கண்துடைப்புக்கா மட்டுமே போராட்டம் நடத்தி வந்தார், மற்றும் புறாவுக்கு வேலை கொடுத்து கொண்டு இருந்தார்.    

     
பாராட்டு விழா: எத்தனை பாராட்டு விழா, எதற்கு இந்த பாராட்டு விழா. ஒரு அரசு அதன் கடமையை செய்கிறது அதற்க்கு எதற்கு பாராட்டு விழா நடத்த வேண்டும். பாராட்டு ஒரு மனிதனை ஊக்கப் படுத்தும் என்பது சரி தான் ஆனால் பாராட்டு விழாவுக்கே, ஒரு பாராட்டு விழா எடுத்தால் என்ன செய்வது, பாராட்டு விழாவில் ஒரு சலுகை வழங்குவார் அதற்க்கு ஒரு பாராட்டு விழா,


தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போதே அவர்கள் ஆட்சியின் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்று தெரிந்து விட்டது.. பணம் கொடுக்க வில்லை என்றால் அவர்களுக்கு ஓட்டு வரது என்று தெரிந்து கொண்டார்கள், அதனால் தான், சத்தியம் வாங்கி கொண்டு ஓட்டு போட சொன்னார்கள், அரசியல் வாதி பணம் கொடுத்து ஓட்டு வாங்கினால் கட்டாயம் ஆட்சிக்கு வந்து நல்லது செய்ய மாட்டார்கள் என்று  மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்






















Friday, September 3 47 comments

திமுக சாதனைகளும் வேதனைகளும் - part I




திமுக அரசு சாதனைகள் பல செய்தாலும் கொஞ்சம் வேதனைகளும் இருக்கிறது முதலில் சாதனைகள் பற்றி பார்போம். அடுத்து வரும் பதிவில் வேதனைகளை  பற்றி பார்ப்போம்.







முதல் அமைச்சராக பதவி ஏற்ற மேடையிலே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்குவதாக ஆணையிட்டார். இரண்டு ரூபாய்க்கு வழங்கிய அரிசியை ஒரு ரூபாய் என்று குறைத்தார். 

சென்ற ஆட்சியில் மக்கள் இப்படி பேசி கொண்டு இருந்தார்கள். ' விலைவாசி தான் ஏறிப்போச்சி. இந்த அரசாங்கம் ரேஷனில் போடும் அரிசி விலையை மட்டும் குறைத்து போட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும் ' என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்..ஆனால் இப்போ மக்கள் பேசிகொள்வது அரிசி  விலையை மட்டும் குறைத்து விட்டு மற்ற எல்லா பொருட்களின் விலையையும் ஏற்றி விட்டார்கள் . நமக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் நாம் குறை சொல்லி கொண்டு தான் இருப்போம்...அது தான் மனித இயல்பு .


அரிசியை குறை சொல்லும் மக்கள் அரிசியில் பூச்சி, புழு எல்லாம் இருக்கிறது. இதை எப்படி சாப்பிடுவது..? என்று கேட்கிறார்கள். ஒரு ரூபாய்க்கு எங்கு அரிசி கிடைக்கிறது. நல்ல தரமான அரிசி. ஊர் பக்கம் எல்லாம் இந்த அரிசி தான் உபயோக படுத்துகிறார்கள், இங்கு நகரத்து பக்கமும இந்த அரிசியை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

மக்கள் இந்த அரிசியை வாங்கி வெளியே விற்பனை செய்கிறார்கள் ஒரு ரூபாய்க்கு வாங்கி அதை ஐந்து ரூபாய்க்கு விற்று விடுகிறார்கள். அரசு தரும் எந்த பொருளையும் விற்பனை செய்ய கூடாது. நமக்கு அந்த அரிசி பிடிக்க வில்லை என்றால் அரிசி  வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட வேண்டும்   

ரேஷனில் துவரம் பருப்பு, முதல் அணைத்து பருப்பு வகைகள், தானியங்கள் எல்லாம் வெளி சந்தையில் விற்பனை செய்வதை விட பத்து ரூபாய் குறைந்த விலையில் கிடைகிறது....

திமுக. தேர்தல் அறிக்கையில் டிவி தருகிறோம் என்று சொன்னவுடன் எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.  ஆனால் அவர்கள் வந்து செய்து காட்டி விட்டார்கள்.  ஒரு சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து வெளியே விளையாடி கொண்டு இருந்தாள் அப்போது பக்கத்து ஒரு வீட்டின் ஜன்னலில் வழியாக டிவி பார்த்து கொண்டு இருந்தாள்...அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனே டிவி அணைத்து  விட்டார்கள்....ஆனால் இப்போ அந்த சிறுமி தன் வீட்டிலே டிவி பார்க்கிறாள் என்றால் அரசு கொடுத்த டிவி தான் காரணம்.

அடி தட்டு மக்கள் ஒரு டிவி வாங்குவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.  ஒருவர் வீட்டுக்கு சென்று டிவி பார்க்கும் பொழுது அந்த வீட்டில் இருப்பவர்கள் டிவியை அணைத்து விட்டால் நமக்கு கன்னத்தில் அறைவது போல இருக்கும்..எந்த பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் டிவி வழங்கபடுகிறது 


டிவியை குறை சொல்லும் மக்கள் : டிவி வெடித்து விடும் அங்கே வெடித்து விட்டது இங்கே வெடித்து விட்டது என்று சொல்வார்கள் எங்கும் வெடிக்க வில்லை. எங்கள் வீட்டில் அரசு வழங்கிய டிவி இருக்கிறது அது ஒன்றும் ஆகவில்லை நன்றாக தான் இருக்கிறது. எங்க சொந்தகாரங்க வீட்டிலும் அரசு வழங்கிய டிவி இருக்கிறது அவர்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை.

இந்த டிவியை வெளியே வாங்குவதற்கு போட்டியே நடைபெறுகிறது எங்க வீட்டில் இருக்கும் டிவியை எத்தனையோ பேர் விலைக்கு கேட்டார்கள் நாங்கள் அதை விற்பனை செய்யமாட்டோம் என்று சொல்லி விட்டோம் வெளியே ஒரு பொருள் அனைவராலும் விரும்ப படுகிறது என்றால் அது நல்ல தரமான பொருள் என்று தான் அர்த்தம்

விவசாய கடன் 3000 கோடிக்கு மேல் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது கிராமத்தில் எல்லாம் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த முடிய வில்லை என்றால் அது மானப் பிரச்னை ஆகிவிடும், கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிலர் தற்கொலை எல்லாம் செய்து இருக்கிறார்கள்.விவசாயி கடன் தள்ளுபடி என்று தேர்தல் அறிக்கையில் சொன்னது போல செய்தார்கள் பாராட்ட பட வேண்டிய விசயம்.



கலைஞர் காப்பீட்டு  திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் எத்தனையோ குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளார்கள். வீட்டில் ஒருவருக்கு இந்த கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டை வைத்து இருந்தால் போதும் நாம் குடும்பத்தில் உள்ள அணைவரும் பயன் பெறலாம். எல்லோரும் இப்போ கலைஞர் காப்பிட்டு திட்டத்தின் அடையாள அட்டை தேவை என்று காத்து இருக்கின்றனர்.  

இன்னும் கேஸ் அடுப்பு, குழந்தை பிறந்தால் 5000 ரூபாய் பணம், முதியோர் பணம் 200 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்த பட்டது மற்ற ஆட்சியில் எல்லாம் வெறும் வேதனைகள் மட்டும் தான் இருக்கும் ஆனால் இந்த ஆட்சியில் சாதனைகளும் இருக்கிறது 
    
வேதனைகள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்...




 
;