Friday, January 28

மறைந்து இருக்கும் பொருளாதாரம்...!
கருப்பு பணம் என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது கள்ள நோட்டை தான் கருப்பு பணம் என்று நினைத்து கொண்டு இருந்தேன், பிறகு தான்...தனக்கு வரும் வருமானத்தில் அரசுக்கு கணக்கு காட்டாமல் வைத்து இருந்தால் அது தான் கருப்பு பணம் என தெரிந்தது இதே போல் சாமானிய மக்களுக்கு எத்தனை பேருக்கு கருப்பு பணம் என்றால் என்னவென்று தெரியும்....என தெரியவில்லை கருப்புப்பணம் என்றால் என்னவென்றே தெரியாத நமக்கு அதை பதுக்கி வைத்திருக்கும் அளவை கேட்டால் மயக்கமே வந்துவிடும் 70 லட்சம் கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்துள்ளனர். வங்கியே முன்வந்து எங்கள் வங்கிகளில் கணக்குவைத்திருப்போர் விபரங்களை அந்ததந்த நாடுகள் கேட்டால் கொடுக்கத்தயார் என அறிவித்து இருக்கிறது ஆனால் அது நம் இந்திய அரசியல் வாதியின் செவிகளில் விழவில்லை போல...செவிகளில் விழுந்தாலும் அதை கண்டுகொள்ளமாட்டார்கள்.

 அரசு இந்த பணத்தை மீண்டும் இந்தியா கொண்டு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.5 லட்சம் ரூபாய் கிடைப்பதோடு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட் போடலாம் என சொல்கிறார்கள்... இவ்வளவு பணம் நம் நாட்டை விட்டு எப்படி போகிறது...? 

இந்த பணம் எங்கு இருந்து இவர்களுக்கு வருகிறது...எல்லாம் இந்த அரசியல் வாதிகள் செய்யும் ஊழல்தான் இப்படி மலை போல் குவிந்து கிடக்கிறது, இன்னும் பல பெரும் தொழிலதிபர்கள் செய்யும் சேட்டை தான் அந்த மலைகள் குட்டி போடுகிறது சிலர் இப்படி வரிகட்டாமல் இருப்பதால் மக்களுக்கு தான் பெரும் துன்பம், அரசுக்கு வருவாய் இல்லை என்று சாமானிய மக்கள் வாங்கும் தீப்பெட்டி மீது வரி உயரும்

சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது, இந்த பணம் மீண்டும் இந்தியாவிற்கு கிடைத்தால், நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும். மேலும் இந்த பணத்தை வங்கியில் போட்டவர்களுடைய வாரிசுகளுக்கே அந்த வங்கியில் பணம் இருப்பது தெரியவில்லை, அந்த பணம் எல்லாம் முடங்கி போய் உள்ளது, இந்த பணம் மீண்டும் கிடைத்தால் அதை வைத்து நம் நாட்டின் கடனை அடைத்து விடலாம்....பல நாடுகளுக்கு இந்தியாவே கடன் தரலாம்...ஒரு குடும்பத்திற்கு 1 இலட்சம் என பிரித்து கொடுத்தால் நாட்டில் யாரும் ஏழையாகவே இருக்க மாட்டார்கள்.

சுவிஸ் வங்கிகளில் யார், யார் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்ற தகவலை மத்திய அரசிற்கு சுவிட்சர்லாந்து அரசு அளித்துள்ளது. ஆனால் அந்த விவரங்களை வெளியிடக்கூடாது என்ற உறுதிமொழியை அளித்தே விவரங்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார்.

இவர்கள் பெயர்கள் தான் முன்னிலையில் இருக்கும் அதனால் தான் கூற மறுகிறார்கள்...இவர்களுக்கு பணம் தரும் தொழில் அதிபர்கள் பெயரை வெளியிட்டால் அவர்கள், இவர்களுக்கு நிதி தரமாட்டார்கள், அந்த பட்டியலை வெளியிட்டால் இவர்களுக்கு என்ன லாபம், அதான் காரணம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுக்குழு பொது கணக்குக்குழு என கூச்சல் போடும் எதிர்கட்சிகள் இந்த விஷயத்தில் ஏன் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை ஏன் என்றால் அவர்கள் பணமும் அங்கே இருக்கிறது....சாமானிய மக்களின் வங்கியில் அவன் வைத்து இருக்கும் இருப்பு தொகை கூட இருக்காது ஆனால் இவர்களுக்கு இவ்வளவு பணம் அதை முடக்கி வேறு வைத்து உள்ளார்கள். பணத்தை வெளி நாடுகளுக்கு கொண்டு செல்வதையும் வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், அதற்கு என்று தனி சட்டம் போட வேண்டும். அதற்கும் மேல் நாம் திருந்த வேண்டும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சரியாக செலுத்த வேண்டும் அரசியல்வாதி ஊழல் செய்கிறான் என்பது எல்லாம் இரண்டாம் பிரச்சனை நம் கடமையை ஒழுங்காக செய்வோம் எத்தனை நாட்களுக்கு தான் இவர்களால் மறைத்து வைக்க முடியும்,என்றாவது ஒரு நாள் மறைந்து இருக்கும் பொருளாதாரம் வெளிவுலகிற்கு வந்தே தீரும்.
34 comments:

Arun Prasath said...

ai vadai

Balaji saravana said...

//என்றாவது ஒரு நாள் மறைந்து இருக்கும் பொருளாதாரம் வெளிவுலகிற்கு வந்தே தீரும் //
ஏக்கப் பெரு மூச்சு விடும் ஒரு சாதரண இந்தியன்! :(

Arun Prasath said...

எல்லாம் செவிடன் காதுல சங்கு ஊதற கதை தான்

ஷர்புதீன் said...

இன்னுமா நம்புறீங்க..?!!!

எஸ்.கே said...

அட்லீஸ்ட் இனிமேலாவது நம் நாட்டின் பொருளாதாரம் வெளிநாட்டில் பதுக்கப்படுவது தடுக்கப்பட்டால் போதும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கருப்பு பணம் என்றால் கருப்பு கலரில் இருக்கும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படிச்ச பய என்னமோ சொல்ற

MANO நாஞ்சில் மனோ said...

காங்கிரஸ்காரனுவ பணம்தான் கூடுதலா இருக்கு..........!!

இம்சைஅரசன் பாபு.. said...

இதில் தொழில் அதிபர் என்று கூறுவது பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் பெரிய பண முதலைகள் தான் இந்த மாதிரி வரி எய்ப்பு செய்வது என்று எண்ணுகிறேன் ....பொத்தாம் பொதுவாக எல்லோரையும் கூறுவது சரி ஆகாது .....அரசு சிறி தொழில் செய்பவர்களை தான் நசுக்குகிறது ....இந்த மாதிரி வரி எய்ப்பு செய்பவர்கள் சினிமா நடிகர்கள் ,அரசியல் வாதிகள் மற்றும் பினாமிகளாக இருப்பவர்கள் பங்கு வர்த்தகத்தில் இருக்கும் தொழிலதிபர்கள் தான் வரி எய்ப்பு செய்கிறார்கள் ......
மற்றபடி ஓரளவு உள்ள தொழில்களுக்கு income tax காரன் வந்து கரெக்ட் அ நோட்டீஸ் கொடுத்துருவாங்க .....நாமலும் பயந்து போய் கட்டிருவோம் ......

sakthistudycentre-கருன் said...

எல்லாம் செவிடன் காதுல சங்கு ஊதற கதை தான்,,,,,
See,
http://sakthistudycentre.blogspot.com/

சங்கர் குருசாமி said...

I think there is much more Black money is Hidden within India.. :-(

To divert this they are trying to bring such money from foreign countries...

This is really sad that such a situation is there in our country...

http://anubhudhi.blogspot.com/

Harini Nathan said...

சரியான விளக்கம் மற்றும் ஆதங்கம் தான் சகோ இருந்தாலும் யாரு கேட்பது ?? இந்தியாவில் மட்டும் இல்லை இலங்கையிலும் இந்த நிலைதான்

//பணத்தை வெளி நாடுகளுக்கு கொண்டு செல்வதையும் வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், அதற்கு என்று தனி சட்டம் போட வேண்டும். அதற்கும் மேல் நாம் திருந்த வேண்டும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சரியாக செலுத்த வேண்டும் //

இந்த சட்டம் இயற்ற்றல், அமுலாக்கல் பின் ரத்து செய்தல் எல்லாமே அரசியல் பலம் தான் :(

மாணவன் said...

தெளிவான பார்வையுடன்... நல்லா சொல்லியிருக்கீங்கண்ணே

//எத்தனை நாட்களுக்கு தான் இவர்களால் மறைத்து வைக்க முடியும்,என்றாவது ஒரு நாள் மறைந்து இருக்கும் பொருளாதாரம் வெளிவுலகிற்கு வந்தே தீரும்.//

பொறுத்திருந்து பார்க்கலாம்....

Sriakila said...

"வருருருருரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், ஆனானானா...வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராராராது" இந்த டயலாக் கருப்புப் பணத்த வெளியில கொண்டுவருவோம்னு சொல்றவங்களுக்கு நல்லாவே பொருந்தும்.

மக்கள் நமக்கு ஆ...இவ்வளவு பெரியத் தொகையா? வாய் பிளப்பதைத் தவிர வேறு வழியில்லை.

நல்ல பதிவு செளந்தர்.

dheva said...

வருத்தமான உண்மைதான். அரசு எப்டிப்பா நடவடிக்கை எடுக்கும்....அவங்க பணத்துல பாதி பணம் அங்கதானே இருக்கு......

அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் அதிகாரம் சி.பி.ஐக்கோ அல்லது புதிதாக இதற்கென்று தனிப்பிரிவோ செயல்பட்டு பிடித்தால்தான் உண்டு....

ஆனால் அப்படி எல்லாம் நடக்க சாத்திய கூறுகள் இல்லை என்றாலும்.....வோட்டு போடும்போது யோசிச்சு போடுங்க மக்கா..........!

dheva said...

வருத்தமான உண்மைதான். அரசு எப்டிப்பா நடவடிக்கை எடுக்கும்....அவங்க பணத்துல பாதி பணம் அங்கதானே இருக்கு......

அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் அதிகாரம் சி.பி.ஐக்கோ அல்லது புதிதாக இதற்கென்று தனிப்பிரிவோ செயல்பட்டு பிடித்தால்தான் உண்டு....

ஆனால் அப்படி எல்லாம் நடக்க சாத்திய கூறுகள் இல்லை என்றாலும்.....வோட்டு போடும்போது யோசிச்சு போடுங்க மக்கா..........!

Madhavan Srinivasagopalan said...

வெளங்கிரிச்சு.. .. ஆனா.. என்ன செய்யணும் ஒவ்வொரு பிரஜையும்.. ?வெளங்கிரிச்சு.. .. ஆனா.. என்ன செய்யணும் ஒவ்வொரு பிரஜையும்.. ?

பிரியமுடன் ரமேஷ் said...

உண்மைதான் நண்பா.. இது பத்தி.. நாம எவ்லோ விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தினாலும்.. அவங்களுக்கு கவலை இல்ல.. ஏன்னா. நம்ம பணமா இருக்குன்னு நினைக்கிறாங்க.. அது நம்ம பணம்தான்னு யாருக்கும் புரிய மாட்டேங்குது... But We cant do anything. so.. மொக்க போடுவோம்.. என்ஜாய் பன்னுவோம்...

மங்குனி அமைச்சர் said...

சவுந்தர்............. இது இன்னைக்கு நேத்து நடக்கிற கதை இல்லை ............ இதுவும் கடந்து போகும் ......... ரொம்ப தூரத்திற்கு

மாத்தி யோசி said...

சுவிஸ் வங்கிகளில் யார், யார் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்ற தகவலை மத்திய அரசிற்கு சுவிட்சர்லாந்து அரசு அளித்துள்ளது. ஆனால் அந்த விவரங்களை வெளியிடக்கூடாது என்ற உறுதிமொழியை அளித்தே விவரங்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார்."


இதை நம்பலாமா?முதல் முறையாக வருகிறேன்! ட்ரீட் கிடையாதா பாஸ்?

சௌந்தர் said...

முதல் முறையாக வருகிறேன்! ட்ரீட் கிடையாதா பாஸ்?////

ட்ரீட் தானே கொடுத்துட்டா போச்சி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

கருப்பு பணம்...

ஹ்ம்ம்ம்...அதனால தான் பில்டிங் கருப்பா இருக்கா??

சும்மா ஒரு டவுட்டு...! :-))

(இதுக்கெல்லாம் அடிக்க வர பிடாது)

கலாநேசன் said...

நல்ல பதிவு

Chitra said...

டென்மார்க்ல இருக்கிற மாதிரி ஒரு சிஸ்டம் கொண்டு வர வேண்டியதுதான்.. ரொம்ப நல்ல பதிவுங்க... பாராட்டுக்கள்!

Sathik Ali said...

அது வெளிச்சத்துக்க்கு வராம இருட்டுல இருக்கிறாதால தான் கருப்பு பணமா? வந்துடுமில்ல?

ஆனந்தி.. said...

ம்ம்...புலம்ப மட்டும் தானே நம்மாலே முடியும்...வேற விதி...நல்ல பதிவு சௌந்தர்...

asiya omar said...

நல்ல பதிவு.
வடை எல்லாம் காலியாகி சட்னி தான் எனக்கு போல.

சி.பி.செந்தில்குமார் said...

kaadhal காதல் கவிதையும் காமெடி பதிவையும் மட்டும் எழுதுவீங்கன்னு நினைச்சேன் . சீரியஸா கட்டுரை எல்லாம் எழுதி கலக்கறீங்களே..

யாதவன் said...

முழுக்க வாசித்தேன் அருமை அருமை அருமை

வினோ said...

இது தொடரும் சௌந்தர்.. மாறுவது கடினம்....

கோமாளி செல்வா said...

//தனக்கு வரும் வருமானத்தில் அரசுக்கு கணக்கு காட்டாமல் வைத்து இருந்தால் அது தான் கருப்பு பணம் என தெரிந்தது இதே போல் சாமானிய மக்களுக்கு எத்தனை பேருக்கு கருப்பு பணம் என்றால் என்னவென்று தெரியும்...//

நான் கருப்பு பெயிண்ட் அடிச்சு வச்சிருப்பாங்கலோனு நினைச்சேன் மச்சி ..

கோமாளி செல்வா said...

//சுவிஸ் வங்கிகளில் யார், யார் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்ற தகவலை மத்திய அரசிற்கு சுவிட்சர்லாந்து அரசு அளித்துள்ளது. ஆனால் அந்த விவரங்களை வெளியிடக்கூடாது என்ற உறுதிமொழியை அளித்தே விவரங்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார்.
//

அவுங்க பேரும் இருந்தாலும் இருக்கும் .. இது ரொம்ப கொடுமைதான் . அரசியல் தலையிடாத ஒரு அமைப்பு இருந்தால் நிச்சயமாக இது போன்ற விசயங்களை வெளியில் கொடுண்டுவரலாம் .. ஆனா என்ன பண்ணுறது ?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எத்தனை நாட்களுக்கு தான் இவர்களால் மறைத்து வைக்க முடியும்,என்றாவது ஒரு நாள் மறைந்து இருக்கும் பொருளாதாரம் வெளிவுலகிற்கு வந்தே தீரும்.//
எல்லா கட்சிகாரன் பணமும் இருக்கு எவன் கொண்டு வரப்போறான்?

NANBAN said...

its true

nothing happen

because we are living in india

 
;