Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts
Monday, June 2 2 comments

காசு பார்க்கும் கோச்சடையான்..!



ஒரு பொருள் அசைவில் இருந்து மற்றொரு எந்த ஒரு பொருளுக்கும், அல்லது உருவத்திற்கும், மாற்ற பயன்படுத்தப்படும் ஒரு தொழில் நுட்பம் மோசன் கேப்சர்.

மோசன்  கேப்சர் தொழில்நுட்பங்கள் கொண்ட  திரைப்படங்களில் கண் விழி, விரல் நகம், முடி, ரேகைகள், எல்லாம் உண்மை தோற்றம் போல் காட்சியளிக்கும். ஆனால் கொச்சடையான் படத்தில் அவ்வாறு காட்சிகள் இல்லை. ரஜினியின்  கண்களை பார்க்க முடியவில்லை.

ரஜினியின் அறிமுக காட்சியை பார்த்து மிகவும் வெறுப்படைந்தேன். சாதாரண ரசிகன் கூட ரஜினியை அழகாக வரைந்து விடுவார். ஆனால் இந்த சௌந்தரியா ஏன் இப்படி கடித்து குதறி வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

ஏற்கனவே நாங்கள் படத்தை வரும் மனிதர்களை பார்த்து  போய் உள்ளோம். இதில் 3D காட்சியில்  ஓநாய் கூட்டம் வேறு அது ஓநாயா, அல்ல நரியா, என்பது சௌந்தரியாவுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.

ரஜினியும் தீபிகா படுகோனும் சண்டையிடும் போது. கும்கி பட யானையின் கிளைமேக்ஸ்   சண்டை காட்சிகள் கண்முன் வருவதை தவிர்க்க முடியவில்லை.

கதை, திரைக்கதை.  என்று பார்த்தால் அதில் கே எஸ் ரவிகுமாரின் பங்களிப்பு நன்றாக தெரிகிறது. படத்தில் வசனத்தை தவிர வேற ஒன்றுமில்லை. ஆனால் இனியும் அவர் பின்னால் நாடு இருக்கிறதென்று வசனம்  வைப்பது படு காமெடியாக  உள்ளது.

 50 ரூபாய் தியேட்டர் கட்டணத்தை 120 ரூபாயென  அதிகரித்து வாங்குவது கொடுமையிலும் கொடுமை.  நான் கண்களை மூடி கொண்டு தான் படத்தை பார்த்தேன். அதனால் எனக்கு பாதி காசை திருப்பி கொடுங்கள், என சண்டையிட்டேன்.அவர் என்னை பார்த்து என்னப்பா படம் பார்த்து இப்படி ஆக்கிட்டே பார்த்து வீட்டுக்கு  போ என்றார்.

கோச்சடையான் என்னும் இந்த மோசன் கேப்சர்  சோதனை தோல்வியை சந்தித்துள்ளது. அந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட எலிகள் தான் நாம். அதுவும் பணம் கொடுத்து நான் சோதனைக்கு வருகிறேன், நான் சோதனைக்கு வருகிறேன், என்று அடித்துபிடித்து  சென்றோம்.  

இந்த (................) படத்தை வைத்து கொண்டு காசு பார்க்கும் ரஜினி கூட்டம். என்ன சொல்வது வேண்டாம்  அந்த கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பி கொள்ளுங்கள்.

சௌந்தரியா அவர்களே இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் எங்க வேண்டுமானால்  வந்து பொய் சத்தியம் செய்கிறோம். ஆனால் இரண்டாம்பாகம் எடுத்துவிடாதீர்கள்.
Saturday, June 30 9 comments

சகுனி கார்த்திக்கு எதற்கு பவர் ஸ்டார் வேலை..??




ஒரு நல்ல படம் பார்க்கும் பொழுதே அந்த படத்தை பற்றி பதிவெழுத வேண்டுமென்று தோன்றும். அப்படி வழக்கு எண் பார்க்கும் பொழுது தோன்றியது ஆனால் அனைவரும் வழக்கு எண் பற்றி நிறைய எழுதிவிட்டார்கள் நாமும் ஏன் எழுத வேண்டுமென்று விட்டுவிட்டேன். 

ஆனால் சகுனி படம் பார்க்கும் பொழுது இந்த படத்திற்கெல்லாம் ஒரு விமர்சனமா என்ன தோன்றியது, படம் அந்த அளவிற்கு இருந்தது, படம் நன்றாக இல்லையென்றாலும் பொறுத்து கொள்ளலாம் ஆனால் இவர்கள் படத்திற்கு கொடுக்கும் பில்டப் பார்த்து பொறுக்கமுடியவில்லை

நல்ல படங்களை யெல்லாம்  மக்கள் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள் சகுனி படத்தில் ஒரு வசனம் சொல்வார் கார்த்திக்.. சிப்ஸ் பாக்கெட்டில் காற்று அடைத்து விற்பனை செய்வது போல் மார்கெட்டிங் செய்ய வேண்டுமென்று அது போல் தான் இந்த படத்திற்கும் மார்கெட்டிங் செய்து கொண்டிருகிறார்கள். 

சகுனி எந்திரன் வசூலை முந்திவிட்டதாக சொல்கிறார்கள், முன்பு ஏழாம் அறிவு எந்திரன் வசூலை முந்தியதாக கூறினார்கள் இப்போது சகுனி...அப்படியென்றால் ஏழாம் அறிவு படத்தின் சாதனையை முறியடித்தது என்று தானே சொல்ல வேண்டும்...

படத்திற்கு இப்படி பில்டப் கொடுத்து தற்போதைய படத்தை ஓட்டி விடலாம் ஆனால் அடுத்தடுத்து வரும் கார்த்திக்கின் படங்களை எப்படி ஓடும்... நல்ல படமாக இருந்தாலும் ஓடாதே...!!  சன் பிக்சர்ஸின் நல்ல  படங்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம் ஓடாதா படங்களுக்கு கொடுத்த அதிக பில்டப் தான். 

வழக்கு எண்   போன்ற நல்ல படங்கள் எல்லாம் திரையரங்கை விட்டு தூக்கப்படுவதற்கு காரணம் சினமாகாரர்கள் தான். அதிக திரையரங்கை வாடகைக்கு எடுத்துகொள்கிறார்கள், நல்ல படங்கள் ஒதுக்கப்படுகிறது... வழக்கு எண் படத்திற்கு பிறகு வந்த படங்களிலே தடையற தாக்க நன்றாக இருந்தது ஆனால் அந்த திரைப்படத்தை யாரும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை..    

மார்கெட்டிங் உலகத்திற்கு நாம் சென்று விட்டோம் அதனால் தான் எல்லாம் மார்கெட்டிங் என்ற பெயரில் நம்மை ஏமாற்றி கொண்டிருகிறார்கள்....    சரி சரி சகுனி படத்தை பற்றி ஒரு பத்தியாவது எழுதுவோம்..

சகுனியின் கதை அப்படி ஏதாவது இருக்கா...?? தன் வீட்டு அருகே சுரங்கப்பாதை அமைப்பதற்காக அரசு கார்த்திக்கின் வீட்டை கையகப்படுத்துகிறது அரசிடம் இருந்து எப்படி கார்த்திக் தன் வீட்டை மீட்கிறார் என்பதே படத்தின் கதை.  மணிரத்தினம் போல் மகாபாரதத்தை உல்ட்டா செய்து எடுத்திருந்தால் கூட பரவாயில்லை.. ஆனால்  சகுனின்னு சொல்லி கார்த்திக்கும் சந்தனமும் சேர்ந்து போடுற மொக்கை போடுறாங்க போடுறாங்க இடைவேளை வரை மொக்க போட்டுட்டே இருக்காங்க.. 

இடைவேளைக்கு அப்பறம் என்ன செய்வார் பார்த்தா. அப்படி ஒன்னும் பெரிதாக  செய்யவில்லை  கவுன்சிலர் தேர்தல் வருது அதில் ராதிகாவிற்கு ஐடியா கொடுத்து அவர் வெற்றி பெறுகிறார்..  இவர் ஐடியா கொடுக்க  எதிர்க்கட்சி தலைவர்  முதல் அமைச்சர் ஆகிறார் சாதாரண சாமியார்க்கு  ஐடியா கொடுத்து அவரை மிகப்பெரிய சாமியாரை  மாற்றுகிறார் (சத்குரு ஜக்கி வாசுதேவ் போல்) இப்படி பலருக்கும் யோசனைகளை சொல்லி சொல்லி அவர்களை வெற்றி பெற வைக்கிறார்.. இது தான் சகுனி தனமாம்..!!


அது எப்படி தேர்தல்கள் வந்து கொண்டே இருக்கிறது..?? பல லாஜிக் மீறல்கள் தூள் படத்திலும் இதே கதை தான் ஆனால் அதில் ஒரு அமைச்சரை எப்படி பழி வாங்க முடியும் என்பது ஏற்று கொள்ளும் வகையில் இருந்தது ஆனால் சகுனியில் சொல்லப்படும் காட்சிகள் ஏற்று கொள்ள கூடியதாகயில்லை..  
படத்தின் பாடல்களும் சொல்லும் விதமாய் இல்லை சிறுத்தையின் பாதிப்பு படத்தின் பாடலில் தெரிகிறது மனசெல்லாம் மழையே பாடல் மட்டும் மனதை நனைய வைக்கிறது 

சகுனியில் கார்த்திக் சற்று சறுக்கி இருக்கிறார் அவர்கள் உறவுகாரர்களே படத்திற்கு தயாரிப்பாளர்கள் என்பதால் அதிக பில்டப் கொடுத்து கொண்டிருகிறார்கள்... சகுனி தோல்வி அடைந்ததை யாரும் பெரிது படுத்தியிருக்க மாட்டார்கள் ஆனால் இவர்கள் கொடுத்த பில்டப் தான் தோல்வியை பற்றி இப்படி பேசி வைக்கிறது.  


படம் நன்றாகயிருந்தால் பார்க்கப்போகிறோம் இல்லையென்றால் எங்கள் வேலையை பார்த்து கொண்டு போக போகிறோம் அதை விட்டு விட்டு வசூல் சாதனை என்று சொல்லி ஏன் எங்களை வேதைனை படுத்த திரைக்கு அழைக்குறீர்கள்..??  கார்த்திக்கிற்கு எதற்கு பவர் ஸ்டார் வேலை..??  

Tuesday, January 3 2 comments

விமர்சனமா..?? மௌனகுரு



ஒரு திரைப்படம் பார்க்க வேண்டுமென்றால் விமர்சனம் பெரிதும் உதவியாய் இருக்கும். முன்பு சினிமா விமர்சனம் செய்யப்பட்டதை போல.. இப்பொழுது யாரும் சரியாக விமர்சனம் செய்வதில்லை. விமர்சனம் செய்பவர்களுக்கு பிடித்த நடிகரின் படம் என்றால் ஆஹா ஓஹோ என்றும், பிடிக்காதவர் என்றால் சரமாரியாக குறை சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது.  மக்கள் விமர்சனம் அதை விட மோசமாகிவிட்டது. தன் புத்திசாலி தனத்திற்கு படத்தை குறை சொல்ல தொடங்கிவிடுகிறார்கள்... படத்தை பார்த்து விட்டு சொன்னால் பரவாயில்லை, பார்காமலே படம் நன்றாக இல்லையென்று சொல்வார்கள் பலர். சில நண்பர்கள் என்னிடம் சொல்வார்கள் படம் நன்றாக இல்லையென்று.. படம் பார்த்து விட்டீர்களா என்றால் இல்ல பார்க்கல நண்பர்கள் படம் நல்லா இல்லை என்பார்கள்.. இப்படி தான் பலர் படத்தை பார்காமலே படத்தை பற்றி விமர்சனம் சொல்லி விடுகிறார்கள்.


பல நல்ல படங்கள் இப்படி தவறான விமர்சங்களால்,  வெற்றி பெற முடியாமல் போய் விடுகிறது விமர்சனம் செய்யும் பொழுது நாம் யோசித்தே செய்யவேண்டும்.. ஒரு படம் நன்றாக இல்லையென்று சொல்வது தான் இப்பொழுது பேஷன் ஆகிவிட்டது. ஒரு திரைப்படம் இரண்டு மணி நேரம் பொழுது போகிறதா அது தான் தேவை நமக்கு, அதை விட்டுவிட்டு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை அப்படி இப்படி குறை சொல்லி கொண்டு தான் இருக்கிறோம்.

பதிவுலகில் முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட்டு விமர்சனம் எழுதும் சிலர்.. படம் நன்றாக இல்லையென்று தான் பதிவு எழுதி இருக்கிறார்கள். படம் நன்றாக இல்லையென்று சொல்வது ஒரு பெருமையா.. ?? படங்களின் குறைகளை சொல்லலாம், டப்பா படம் என்று எல்லாம் விமர்சனம் செய்யலாமா..?? இப்படி பட்ட விமர்சங்களால் பலர் நல்ல படங்களை பார்க்க முடியாமல் போகிறது..!!   நல்ல படங்களை எந்த காழ்புணர்ச்சி இல்லாமல் விமர்சனம் செய்யுங்கள். என்ன தான் விமர்சனம் செய்பவர்கள் படம் நன்றாக இருக்கிறதென்று கூறினாலும் மக்கள் கண்டு கொள்ளாமல் விட்ட படங்களில் இந்த படமும் ஒன்று. 



படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுதே, படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தேன், எதிர்பார்த்தது வீண் போக வில்லை. படத்தின் கதை : அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறால் ஒரு சாதாரண கல்லூரி மாணவன் சிக்கி கொள்கிறார் அவர்களிடம் இருந்து மீண்டுவருகிறாரா இல்லையா என்பதே கதை. 

அருள் நிதியின் நடிப்பு பல மடங்கு மெருகேறி உள்ளது நன்றாகவே தெரிகிறது,சென்னையில் வளர்ந்த அவர் ஊர்காரரை போல் வட்டார மொழி பேசுவது சிறப்பாக உள்ளது. தனக்கு கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்து இருக்கிறார் அருள்நிதி.  அரசியல் காரணத்தால் இவர் படங்களை ஒதுக்காமல் இருந்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொள்வார். அந்த அளவிற்கு நடிப்பு திறமையை வைத்திருக்கிறார். 

இனியா முந்தய படத்தில் பார்த்த இனியா வா என கேட்க வைக்கிறார், நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார். 

வில்லன் ஜான் விஜய், நகைச்சுவையில் வந்தால், நகைச்சுவையில் கலக்கி விடுகிறார், வில்லன் கதாபாத்திரம் வந்தால்.. அதிலும் ஒரு கை பார்த்து விடுகிறார்.. ஒரு தவறு செய்து விட்டு, பயத்தில் தவறுக்கு மேல் தவறு செய்து.. கண்களில் பயத்துடன் நடித்து இருக்கிறார் ஜான் விஜய்.. இனி நிறைய படங்களில் இவரை வில்லனாக பார்க்கலாம். 


இயக்குனர் சாந்தகுமார் முதல் படத்திலே நல்ல பெயரை வாங்கிவிடுகிறார், நேர்த்தியான திரைகதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்தவிதம், அனைத்திலும் நல்ல அனுபவம் பெற்றவராக தெரிகிறார். குறிப்பாக போலீஸ் எஸ்.ஐ உமா ரியாஷை தேர்வு செய்தது, நிறைய படங்களில் நல்ல போலீஸாக வருபவர் ஆணாக தான் இருப்பார், இதை இயக்குனர் மாற்றி யோசித்து இருக்கிறார்.  திரைக்கதையின் வேகம்.. ஹிரோவின் டல் லூக்,  ஹீரோவின் வசன உச்சரிப்புகள் எல்லாம் இயக்குனரின் கைவண்ணம் என்று நன்றாக தெரிகிறது,  படம் பார்க்கும் பொழுது ஆங்கில படம் பார்த்த திருப்தி வருகிறது.  நல்ல படத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் பட்டியல்களில் சாந்தகுமார் படமும் இடம் பெரும். 

படத்தை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் இங்கு பகிராமல் விட்டு இருக்கிறேன், படம் பார்க்கும் பொழுது உங்களுக்கு சுவாரசியம் குறைந்து விடாமல் இருப்பதற்காக. நல்ல படங்களை எதிர்பார்பவர்கள் கட்டாயம் இந்த படத்தை பார்க்கலாம். இந்த மாதிரியான நல்ல படங்கள் திரையரங்குகளை விட்டு தூக்கப்படுவது வருத்தமான ஒன்று..



Wednesday, August 10 6 comments

பட்டைய கிளப்பும் மங்காத்தா பாடல்கள்...


மங்காத்தா அஜித்தின் 50 வது படம். அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள், படம் மே 1 அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்றார்கள் ஆனால், வெளிவரவில்லை, ரசிகர்களுக்காக விளையாடு மங்காத்தா..என்ற ஒரு பாடலைவெளியிட்டார்கள்.. அந்த பாடல் ஏற்கனவே பிரபலமாகிவிட்டது.. இன்று மங்காத்தா படத்தின் அணைத்து பாடல்களையும்..வெளியிட்டுயிருக்கிறார்கள்..


நேற்றே இணையத்தில் வெளியிட்டதால் நேற்று இரவே பாடல்களை கேட்டு விட்டேன்.. இப்போது ஒவ்வொரு பாடல்களையும் அறிமுகம் செய்கிறேன்..



முதல் பாடல் ஏற்கனவே வெளியிட்ட விளையாடு மங்காத்தா பாடல் தான்..
யுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித், சுசித்ரா , பிரேம் ஜி அமரன், அனிதா பாடியுள்ளார்கள்..

பாடல் வரி கங்கை அமரன் 

விளையாடு மங்காத்தா !
விட மாட்டா எங்காத்தா !!
வெளி வேஷம் போடாட்டா!
இந்த வெற்றி கிட்ட வாராதா !!

அஜித்தின் வாழ்கையை மனதில் வைத்து எழுதிய பாடல் போல் வரிகள் இருக்கிறது ஏற்கனவே இந்த பாடல்கள் வெற்றிபெற்று விட்டது.. இந்த வருடத்தின் அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக இது இருக்கும்... இந்த பாடலையே கிளப் மிக்ஸ் செய்து இருக்கிறார்கள்..

அடுத்த பாடல் மேலோடி பாடல் sp சரண் பவதாரணி குரலில்.. 

கண்ணாடி நீ.. கண்ஜாடை நான்..!! 
என் வீடு நீ உன் ஜன்னல் நான்..!! 
என் தேடல் நீ உன் தேவை நான்..!! 
என் பாடல் நீ உன் வார்த்தை நான்..!! 
என் பாதி நீ உன் பாதி நான்..!! 
என் ஜீவன் நீ உன் தேகம் நான்..!! 
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்..!! 
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்..!! 

நிரஞ்சன்  பாரதி வரிகள் கவிதையாக... மற்ற பாடல்களை விட இந்த பாடலே எனக்கு மிகவும் பிடித்தது.. மனதிற்குள் மெல்ல மெல்ல நுழைந்து மனதை ஆக்கிரமிக்கிறது...  மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் இது..!!!



வாடா பின்லேடா என்ற பாடலை கிரீஸ் சுசித்ரா.. பாடியுள்ளார்கள்...வாலி வரிகளில் 

வாடா பின்லேடா ஒளியாதே அச்சோ டா 

டிவின் டவர், ஜப்பானின் ஹைக்கூ , ரஷ்யா, என வாலியால் மட்டுமே பாடல் எழுத முடியும்.. இந்த பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது...  இந்த பாடல் சுமார்ரகம் தான்.


 மச்சி  ஓபன்  தி  பாட்டில்.. என்ற ஃபோக் சாங் . மனோ, பிரேம்ஜி அமரன், திப்பு ,ஹரிசரண், நவீன் பாடியுள்ளார்கள்.. வாலி வரிகளில்....

இது அம்பானி பரம்பரை 
ஐஞ்சாறு தலை முறை 
ஆனந்தவளர்பிறை தான் 
நாம கொட்டுன்னு ஒருமுறை 
சொன்னாக்க பல முறை 
கொட்டாதோ பண மழை தான் 
நாம முன்னேற படிக்கட்டு 
நாம் வாழ்வில் கிரிக்கெட்டு 

இந்த பாடல் நடுவில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்ற பாடல் வரி வருகிறது. இந்த பாடலில் அஜித் என்ட்ரியாக இருக்கும் என நினைக்குறேன்.. ஆட்டம் போடும் ரசிகர்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். 



 மதுஸ்ரீ, யுவன்ஷங்கர்ராஜா சோகமான மேலோடி பாடல்... வாலி வரிகளில்...

ஏன் நண்பனே என்னை ஏய்த்தாய் யோ..
என் பாவமாய் வந்து வாய்தாய் 
உன் போலவே நல்ல நடிகன் 
ஊரெங்கிலும்யில்லை ஒருவன் 

கேட்க கேட்க பிடிக்கும் பாடல் இது இனிமையாக இருக்கிறது.. அனைவரையும் கவரும் பாடலாக இப்பாடல் இருக்கும் யுவன் சங்கர் குரல் நன்றாக இருக்கிறது...



இது எங்க பல்லேலக்கா.. புது நாக்குமுக்கா.. கார்த்திக், விஜய் ஜேசுதாஸ், அனுஷா தயாநிதிகுரல்களில், கங்கை அமரன் வரிகளில்... 

இது எங்க பல்லேலக்கா 
நீ கேளு கொக்கமக்கா..
நியூடைப்பு நாக்கு முக்கா 

இந்த பாடல் சுமார் ரகம் தான் பாடல் கேட்பதற்கு போர் அடிக்கவில்லை... இப்பாடலில் தயாநிதி அழகிரி, மனைவி அனுஷாவும் பாடியுள்ளார். 


பில்லா படத்தில் வருவது போல் இதிலும் தீம் மியூசிக் ஒன்று நன்றாகயிருக்கிறது, இனி அணைத்து டிவிகளில் இந்த தீம் மியூசிக்கே ஆக்கிரமிப்பு செய்யும்.... 



படம் வருவதற்கு முன்பு பாடலை கேட்டு விட வேண்டும் அதில் ஒரு ஆர்வம், எப்படியிருந்தாலும் படத்தில் பாடல் வர தானே போகிறதென்று இருக்க முடியாது. ஒரு அஜித் ரசிகனுக்கு, பாடல் அணைத்து கலவையானதாக அனைவரையும் கவரும் விதத்தில் இருப்பது சிறப்பு, மொத்தத்தில் இந்த வருடமுழுவதும் மங்காத்தா பாடல்கள் தான் கேட்க போகிறது.... அடுத்து விநயாகர்சதுர்த்தி வேறு வரபோகிறது... தெருவெங்கும் மங்காத்தா பாடல் பட்டைய கிளப்ப போகிறது.... 


பாடல்களை தரவிறக்கம் செய்ய





பட்டைய கிளப்பும் ட்ரைலர்...









முந்தையப் பதிவு : அடைமழைக் காதல்.....



Thursday, July 28 7 comments

திகிலூட்டும் காஞ்சனா...!!!


தெய்வதிருமகள் படத்திற்கு பிறகு பார்க்க நினைத்த படம் காஞ்சனா. இப்படத்தை பார்க்க காரணம் முனி படம் தான், அந்த படத்தின் திகில் காட்சிகள் மிகவும் பிடித்து இருந்தது. இந்த படத்திலும் அதிக திகில் காட்சிகள் இருக்குமென்று நினைத்து பார்த்தேன் என் நினைப்பு வீண் போகவில்லை. 



பேய்களை கண்டாலே பயப்படும் லாரன்ஸ் மீது.. பேய் புகுந்து தன் சாவிற்கு காரணமாக இருந்தவர்களை பழி வாங்குகிறது.. முனி திரைப்படத்தில் இருந்த அதே ஒன் லைன் கதை தான் இதிலும். ஆனால் முனி திரைப்படத்தை விட இதில் திகில் காட்சிகள் அதிகம் இருக்கிறது. திரைக்கதையில் மெருகேறி இருக்கிறார் லாரன்ஸ்.

படத்தின் ஆரம்பகாட்சியே திகிலா இருக்கிறது ... சிகப்பு கலர் தாவாணி பக்கத்துக்கு மைதானத்தில் விழுந்து விட அதை எடுத்து சென்ற பெண் வீட்டில் பேய் வந்து மிரட்டுவது போல காட்சி தொடங்கியதும் பேய் பயம் நமக்கும் தொற்றி கொள்கிறது.  அடுத்ததாக ஹிரோ அறிமுகம் ஆகிறார் சண்டை காட்சி அறிமுக பாடல் எல்லாம் தெலுங்கு வாசம் வீசுகிறது.


லாரன்ஸ் கிரிக்கெட் விளையாடி கொண்டு வெட்டியாக ஊரை சுற்றுபவர், அறிமுக சண்டையும் கிரிக்கெட் வைத்தே வருகிறது, கிரிக்கெட் எல்லாம் விளையாடி விட்டு ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு போய் விடுவார், காரணம் பேய் பயம். எப்போதும் கிரிக்கெட் விளையாடும் இடத்தில் பில்டிங் வருதால், கிரிக்கெட் விளையாட வேறு இடம் தேடுகிறார்கள். கிரிக்கெட் விளையாட பேய் இருக்கும் இடத்தை தேர்வு செய்கிறார்கள், அப்போதே அங்கே என்ன நடக்கும் என்ற பயம் தொற்றி கொள்கிறது. விளையாடுவதற்காக ஸ்டம்ப் அடிக்கிறார்கள் ஸ்டம்ப் அடிக்கும் இடத்தில் தான் சடலங்கள் இருக்கிறது. ஸ்டம்ப் அடித்தவுடன் சூறாவளி, கருமேகம் சூழ்ந்தவுடன், பயந்து அங்கிருந்து சென்று விடுகின்றனர். ஸ்டம்பை எடுத்து கொண்டு லாரன்ஸ் செல்கிறார் அதில் இருக்கும் ரத்தகரை மூலம் பேய் லாரன்ஸ் வீட்டில் புகுந்து விடுகிறது. பேய் அவர்கள் வீட்டில் நுழைந்தவுடன். படத்தின் வேகம் மேலும் சூடு புடிக்கிறது. 



திடிரென்று திகில் காட்சியில் நாம் பயந்திருக்கும் பொழுது அந்த பயத்தை போகுவது கோவை சரளாவும், தேவதர்ஷினியும் தான் அவர்கள் படத்திற்கு பலம் சேர்கிறார்கள், வீட்டில் பேய் இருக்கிறதா இல்லையா என்று சோதனை செய்யும் இடத்தில் இருவரும் பயப்படும் காட்சியில் பயங்கர சிரிப்பை வரவைக்கிறது.. இது திகில் படமா நகைச்சுவை படமா என மனதில் எழுகிறது.  


லாரன்ஸ் நடிப்பு, நடனம், இயக்கம் என அனைத்திலும் சிறப்பாக செய்யல் பட்டுயிருகிறார், பேயை கண்டுபயப்படுவது, பின்பு பேய் தன் உடம்பில் புகுந்து கொண்ட பிறகு வரும் பெண் தன்மை கொண்ட உடல் மொழி ஆக்ரோசமான சண்டை காட்சிகள் என அனைத்தும் கலக்கி இருக்கிறார், லட்சுமிராய் வுடன் ஆங்கங்கே காதல் காட்சியில் வருகிறார். படத்தின் இறுதி பாடல் காட்சியில் மிகவும் பிரம்மிப்பாக நடித்திருக்கிறார்.  


திருநங்கையாக சரத்குமார் (காஞ்சனா) . இக் கதபாத்திரத்தை ஏற்றதற்காக பாராட்டியே ஆகவேண்டும். நல்லதொரு நடிப்பு திருநங்ககைகள் பற்றி மேடையில் பேசும் பொழுது நெகிழ வைக்கிறார். திருங்கனையாக இருந்தாலும் ஆக்ரோசமாக சண்டையிடும் காட்சியிலே அறிமுகம் ஆகிறார். திருநங்கைக்கு உதவி செய்ய நினைக்கிறார். அது முடியாமல் தன் உயிரை இழக்கிறார். சிறிது நேரம் வந்தாலும் மனதில் ஒட்டிக் கொள்கிறா(ள்)ர்

முனி திரைப்படத்தை விட இதில் அதிகம் பயப்பட வைக்கும் காட்சிகள் இருக்கிறது, நீங்கள் எந்த காட்சியில் பயப்படவில்லை யென்றாலும் இடைவேளைக்கு முன்பு வரும் காட்சியை பார்த்தல் பயம் வராதவர்களுக்கும் பயம் வரும்.  

குறை : படத்தின் குறையென்று பார்த்தல் சிறு சிறு குறைகள் தான், பாடல்களில் தெலுங்கு வாடை, தேவையில்லாத டூயட், லாரன்ஸ் வீட்டில் ஆளுக்கு ஒரு பாசை பேசுகிறார்கள், (தேவதர்ஷினி) லாரன்ஸின் அண்ணி ஐயர் பாசை பேசுகிறார், ஸ்ரீமன், கோவைசரளா கோவை தமிழ் பேசுறாங்க, லட்சுமிராய் போல உடை அணிந்தால் எப்படி இருக்கும் என கோவை சரளா நினைத்து பார்ப்பது,  இவ்வாறான குறைகள் மட்டுமே 


நிறை : லாரன்ஸ் சரத்குமார். படத்தின் திரைக்கதை, பின்னணி இசை, இறுதி பாடல் கட்சி,  நகைச்சுவை, திகில் இவை இரண்டும் இருப்பது மிகப் பெரியபலம்.   

முதல் பாதி நகைச்சுவையோடு செல்கிறது, இரண்டாம் பாதி அதிபயங்கரமாக செல்கிறது .பேய்க்கு பயப்படுவது போல் முனி படத்தின் வரும் சில காட்சிகள் இந்தப் படத்திலும் வருகிறது அதை தவிர்த்து இருக்கலாம். லாரன்ஸின் பெண்மை தனம் கொண்ட நடிப்பு நன்றாக இருந்தது, மேலும் முகபாவனையில் முன்னேற்றம் தேவை. இறுதி காட்சியில் மிரட்டி இருக்கிறார் லாரன்ஸ். லட்சுமிராய் இந்த படத்தில் மொத்தமே எட்டு காட்சியில் தான் வருகிறார். பின்னணி இசையில் அமர்களப்படுத்துகிறார் தமன். பாடலிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். அரவாணி கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு சரத்குமார். தனக்கு கொடுத்த வேலையை மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார்.. லாஜிக் பார்க்காதவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். ஒரு முறையல்ல இருமுறை இந்த படத்தை பார்க்கலாம்.  காஞ்சனாவாக சரத்குமார், லாரன்ஸ் இருவரும் களைகட்டுகிறார்கள்.  



Tuesday, April 26 25 comments

"கோ GO படத்திற்கு GO"



கனாக் கண்டேன், (கந்து வட்டி), அயன் (கள்ளக்கடத்தல்), என கதைகளத்தை அமைத்தவர் "கோ" படத்தில் பத்திரிக்கையை, அரசியலை கொண்டுவந்திருக்கிறார். ஆனந்த்-சுபா இவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் இதில் கூறப்பட்டு உள்ளது. இவர்கள் இணைந்தே திரைக்கதையும் எழுதியுள்ளார்கள். வசனம் சுபா எழுதிவுள்ளார் அயன் படம் பார்த்தவர்கள் நிச்சயம் இந்த படம் பார்க்க வேண்டும் என நினைத்து இருப்பீர்கள், அதில் நானும் ஒருவன். 




ஒரு தினசரி பத்திரிக்கையின் போட்டோகிராபர் ஜீவா, ஆளுங்க கட்சி (பிரகாஷ்ராஜ்), எதிர்க்கட்சி (கோட்டா சீனிவாச ராவ்), தேர்தல் வருகிறது. அரசியல்வாதிகளின் தில்லு முள்ளுகளை ஜீவா தோலுரித்து காட்டுகிறார், அந்த நேரத்தில் இளைஞர்களின் சிறகுகள் அமைப்பு தேர்தலில் போட்டியிடுகிறார்கள், அவர்களுக்கு ஜீவா உதவி செய்கிறார்..இளைஞர் அமைப்பு ஆட்சி அமைத்ததா.. இல்லையா..?? அரசியல் வாதிகளை எதிர்க்கும் ஜீவாவுக்கு என்ன நடந்தது என்பது மீதி கதை.



முதல் காட்சியில் வங்கியில் கொள்ளை நடக்கிறது..அந்தக்காட்சி முதல் விறுவிறுப்பு தொடங்கி விடுகிறது, கொள்ளையடிக்கும் இடத்திற்கு ஜீவா வருகிறார், காப்பாற்ற போகிறார் என்று பார்த்தால், புகைப்படம் எடுக்கிறார், பைக் "வீலிங்" எல்லாம் செய்தது புகைப்படம் எடுக்கிறார் கொள்ளையர்களை பிடிக்க உதவியாக அவர் எடுக்கும் புகைப்படம் உதவுகிறது.



ஜீவாவிற்கு இந்த கேரக்டர் சரியாக பொருந்துகிறது. இவர் கேமரா பிடிப்பதை பார்த்தால் படம் பிடிப்பதில் வல்லவர் போல் தெரிகிறது. பியாவிடம் சுட்டி தனமாகவும், கார்த்திகாவிடம் காதலோடு சுற்றி வருகிறார். இவரின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது. எப்படி ஒரு எழுத்தாளர் எப்போதும் பேனாவை பாக்கெட்டில் வைத்து கொண்டு இருப்பாரோ, அதே போல் ஜீவா எப்போதும் கேமராவை வைத்து கொண்டு சுற்றுகிறார். முதல் பாதியில் இவர் செய்யும் சுட்டித்தனம் ரசிக்க வைக்கிறது.



கதாநாயகிகள் பியா, கார்த்திகா, பியா பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் நன்றாக நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு, காதலோடு ஜீவாவை சுற்றி வருகிறார், இயல்பான ஒரு நட்பு ஜீவாவிற்கும் பியாவிற்கும்...தனக்காக கார்த்திகாவை காதல் தூது அனுப்புகிறார் அங்கே ஜீவா, நான் (கார்த்திகாவை உன்னைத்தான் காதலிக்குறேன் என்று சொல்வார், இதை பின்னால் இருந்து கேட்டு கொண்டுயிருப்பார் பியா..அந்த இடத்தில் அவர் நடிப்பு ரசிக்கும் படியாக இருந்தது. கலகலப்பாக இருந்து விட்டு பாதியில் சென்று அனுதாபத்தை அள்ளுகிறார். கார்த்திகா (ராதாவின் மகள்) நடிப்பு சுமார் ரகம் இது தானே முதல் படம் போக போக பார்ப்போம்.. 



அஜ்மல் சிறகுகள் இளைஞர் அமைப்பின் தலைவர், நடிப்பு நன்றாக இருக்கிறது, ஒரு தலைவருக்கு உரிய பாடி லேங்குவேஜ் இல்லை, இவரின் பேச்சு நன்றாக இருக்கிறது இவரை தலைவராக ஏற்று கொள்ள நமக்கு நேரம் பிடிக்கிறது. இடைவேளைக்கு பிறகு இவரின் நடிப்பு இன்னும் நன்றாக இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு இவரை பற்றி தெரியவரும் பொழுது,அதிர்ச்சி அனைவருக்கும் தான்.



கதை திரைக்கதை கே.வி.ஆனந்த்,சுபா அயன் படம் அளவிற்கு திரைக்கதை இல்லையென்றாலும், நன்றாகவே இருக்கிறது, ஒரு பத்திரிக்கையாளனின் வேலையை நுட்பமாக காண்பித்திருக்கிறார்கள்.  திடிர் என திரைக்கதையில் தொய்வு வருகிறது, அதை தவிர்த்து இருக்கலாம். மூன்றுபக்கம் திரைக்கதை ஓடு கிறது..நம் கண்களை கட்ட வைக்க பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாச ராவ், கதாபாத்திரத்தை பயன் படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது..

ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் வண்ணமயமாக இருக்கிறது இவரின் ஒளிப்பதிவு.  அமளி துமளி பாடலில் மலைகளை சுற்றும் கழுகு போல் இவரின் கேமரா சுற்றுகிறது. 

பாடல்கள் ஏற்கனவே ஹிட் அதை படமாக்கிய விதம் அழகு. முதல்பாதி கலகலப்பாக செல்கிறது இரண்டாம் பாதி விறு விறுப்பாக செல்கிறது, சில குறைகள் இருக்க தான் செய்கிறது, அரசியலுக்கு நடிகைகள் வருகிறார்கள், சரி தான் ஆனால் இதில் ஏன் நமீதாவை கிண்டல் செய்திருக்கிறார்கள் தெரியவில்லை. சினிமா துறையில் இருந்து கொண்டே, இன்னொரு சினிமா கலைஞரை கிண்டல் செய்வதா..???  வெண்பனியே.. பாடல் வருவது அந்த நேரத்தில் தேவையில்லாதது...அயன் படத்திலும் இப்படி தான் ஒருவர் இறந்தவுடன் ஒரு டுயட் பாடல் வரும். இந்த பாடல் வருவது படத்தின் தரத்தை கெடுக்கிறது.. அங்கொன்றும் இங்கொன்றும் உள்ள குறையை தவிர படம் நன்றாக இருக்கிறது எதிர்பாராத பல திருப்பங்கள் படத்தில் உள்ளன. படத்தின் முடிவு சரியானதே..எங்கே ஜீவா முதல்வராகிவிடுவாரோ என நினைத்தேன் நல்ல வேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை.. நல்ல பொழுது போக்கு திரைப்படம். "கோ GO படத்திற்கு GO"    

Monday, April 18 22 comments

கே. ஆர். பி. செந்திலின் பணம் விமர்சனம்...







புத்தகங்கள் பல வந்தாலும் அவைகளை நாம் வாங்கி படித்து கொண்டு தான் இருக்கிறோம்...ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவத்தை நமக்கு அளிக்கிறது...அதே போல் தான் இந்த பணம் புத்தகமும். ஏன் இதற்கு பணம் என்று தலைப்பு வைத்தார், வேறு ஏதாவது தலைப்பு வைத்திருக்க கூடாதா என நான் யோசித்து பார்த்தேன்...பணத்திற்காக தானே வெளிநாட்டிற்கு செல்கிறோம்...பணம் என்பதை விட சரியான தலைப்பு வேறில்லை என உணர்ந்தேன்.

நாம் பல புத்தகங்களை படித்திருப்போம் ஆனால் வெளிநாடு பற்றிய புத்தகங்களை அதிகம் படித்திருக்க மாட்டோம்..வெளிநாட்டிற்கு சென்ற அனுபவங்களை பற்றிய புத்தகங்கள் அதிகம்இதுவரை வந்ததில்லை...கே.ஆர்.பி செந்திலின் 18 வருட வெளிநாட்டு வாழ்க்கையின் அனுபவத்தை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்... வெளிநாட்டில் பல போராட்டங்கள் பல வேதனைகள் தான் கிடைத்திருக்கிறது. ஒரு சில வெற்றிகள் மட்டுமே...அவை எங்கோ ஒரு ஓரத்தில். இந்த புத்தகத்தில் வருபவை பல தன் நண்பர்களுக்கு உண்மையாக நடந்தவை...என்கிறார்...எனவே இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட சம்பவங்களில் வரும் நான் நானல்ல என்கிறார்.


நம் இளைஞர்களின் கனவு வெளிநாடு செல்வது தான், எப்படியாவது வெளிநாட்டிற்கு சென்றுவிட்டால் பணம் சாம்பாதித்து விடலாம்,  என நினைத்து கொண்டு இருக்கிறோம் வெளிநாட்டிற்கு சென்றால் தான் தெரியும், இந்த வேலைக்கு நமது நாட்டிலே இருந்து இருக்கலாம் என நினைப்போம். 

இந்த புத்தகத்தில் அதிகம் சிங்கபூர் பற்றி தான் இருக்கிறது ஒரு காலத்தில் தென் மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர் சிங்கப்பூர் சென்றார்கள், அப்படி சென்றவர்களில் சிலர் முறையான ஆவணங்கள் இல்லாமல் சென்று பல துன்பங்களை அடைந்து இருக்கிறார்கள், அல்லது இங்கே பல ஏஜென்ட்களால் ஏமாற்றுப் பட்டு உள்ளார்கள், ஆண்கள் என்றால் அடிமையாக வைத்து கொள்வது பெண்கள் என்றால் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது போன்ற செயலே அங்கு அதிகம்...எந்த முறையிலாவது பணம் சம்பாதிக்க வேண்டும் சட்டவிரோதமாக குடியேற வேண்டும் பிரம்படி தண்டனை, சிறை அனுபவம் என்று பல சித்திரவதைகள். வெளிநாட்டிற்கு சென்றால் இவ்வளவு துன்பங்கள்..கிடைக்குமா என எதிர்பார்த்திருக்க மாட்டோம் அவ்வளவு துன்பங்கள் வரலாம்.

வெளிநாட்டிற்கு செல்ல மூன்று நான்கு லட்சம் செலவு செய்து போகிறோம், அந்த பணத்தை வைத்து இங்கே ஒரு தொழில் தொடங்கலாம் அல்லவா..?? வெளிநாட்டிற்கு செல்கிறோம் என்றால் உடனே வட்டிக்கு பணம் கிடைக்கிறதாம்...நீங்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் சுற்றுலா சென்று விட்டு உடனே திரும்பி வந்து விடுங்கள்...அது சிறந்தது...அங்கு சென்று அந்நாட்டு சட்ட திட்டங்கள் நமக்கு ஒன்றுமே தெரியாது...சிறையில் இருந்தாலும் நம் சொந்தங்களை கூட பார்க்க முடியாது. வெளிநாட்டில் துன்பம் மட்டுமே இல்லை பலர் அங்கே தொழில் தொடங்கி இப்பொழுது நல்ல நிலைமையில் தான் இருக்கிறார்கள். ஆனால் அவை சிலருக்கு மட்டுமே நடந்துள்ளது.

ஒருவர் வெளிநாட்டிற்கு   செல்லும் பொழுது விமானத்தில் இந்த புத்தத்தை படித்துக் கொண்டு சென்றால், அவர் அடுத்த விமானத்திலே தன் ஊருக்கு கிளம்பி விடுவார், அப்படியொரு அனுபவத்தை இந்த புத்தகம் தந்துவிடும்..

பணம் சரியான தலைப்பு...மிக்க நேர்த்தியான அட்டைப்படம்..ஒவ்வொரு அத்தியாத்தில் வரும் பழமொழிகள் நன்று...சிங்கபூர் மலேசியா.மொரிசியஸ் என பல நாடுகளுக்கு நேரில் சென்று வந்தது போல் ஒரு உணர்வு..இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன்..வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் நிச்சயம் ஒரு வித பயம் வரும்.     

இந்த புத்தகத்தை நான் படித்து முடித்தவுடன் பக்கத்து வீட்டில் ஒருவரை படிக்கக் சொன்னேன் அவர் படித்து முடித்து விட்டு சொன்னார் ...வெளிநாடு என்றால் இவ்வளவு நடக்குமா..?? வெளிநாட்டிற்கு போக வேண்டும் என இருப்பவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு பாடம். என்றார்..சிங்கப்பூர்க்கு சென்று வந்தது போல இருக்கிறது என்றார்.


பணம் புத்தகம் பல பிரதிகள் வெளியிட்டு சாதனைபடைக்க கே.ஆர்.பி. செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்..இது...!!!     

   இந்நூலை வாங்க : இங்கே  
     
        விலை : ரூ.90

Monday, April 4 27 comments

குள்ள நரி கூட்டம்..தெளிந்த நீரோடை




குள்ள நரி கூட்டம் நேற்று தான் இந்த படத்தை பார்த்தேன்...இவ்வளவு சர்வசாதரணமாக ஒரு நல்ல படத்தை எடுக்க முடியுமா..? என மனதிற்கு தோன்றியது... நல்ல கருத்தோடு கூடிய நகைச்சுவை படம். 

ராணுவ கிராமம்...அங்கு ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று  ஒரு போலீஸ் ஆஃபீசராக இருக்கிறார்...அவரின் மகளை (ஹீரோயின் ரம்யா நம்பீசன்)  போலீஸ்அல்லது ஒரு ராணுவ வீரருக்கோ திருமணம் செய்து தருவேன் என்று    குறிக்கோளோடு இருக்கிறார்...தன் மகள் காதலிக்கும் விஷயம் தெரியவர. விஷ்ணுவை நீங்கள் போலீஸ் ஆகுங்கள் நான் என் மகளை திருமணம் செய்து தருகிறேன் என்பார்...விஷ்ணு போலீஸ் ஆனாரா இல்லையா என்பதே மீதி கதை 


ஹீரோ வெண்ணிலா கபடிக்குழு நாயகன் விஷ்ணு... முதல் காட்சி அப்பா வேலைக்கு போகும் அவசரத்தில் சாப்பாடு (டிபன் பாக்ஸ்) எடுத்து கொண்டு ஓடுகிறார்...விஷ்ணு..அப்பா மேலே அவ்வளவு பாசமா..பார்த்தா...அவர் தினம் பத்து ரூபாய் கோட்டா வாங்க தான் அவ்வளவு அவசரமா ஓடி வந்து இருக்கார். அப்போது 1,500 ரூபாய் அவங்க அப்பா தருகிறார்...அங்கே தான் கதை ஆரம்பிக்கிறது...1,500 ரூபாய்க்கு ரீ சார்ஜ்...செய்ய சொல்கிறார்..விஷ்ணு நம்பர் மாற்றி ரீ சார்ஜ் செய்தது விடுகிறார்....(அந்த இடத்தில் அம்பா சமுத்திரம் அம்பானி படம் நினைவு வருகிறது)

மாற்றி ரீ சார்ஜ். செய்த நம்பருக்கு போன் செய்கிறார்..அந்த பக்கம் ஹீரோயின் போன் எடுக்குறாங்க...போன் பேசுறாங்க நேரில் சந்திக்க்குறாங்க அப்படியே காதல் வளர்கிறது..படத்தில் நிறைய காட்சிகள் புதியதாக இருக்கிறது வசனங்களும் புதியதாக இருக்கிறது..  சாதாரணமாகவே தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷ்ணு..தமிழ் சினிமாவில் நிச்சயம் இவருக்கென்று தனி இடம் கிடைக்கும்.

ஹீரோயின் ரம்யா நம்பீசன்..எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அறிமுகம் ஆகிறார்..கதைக்கு என்ன தேவையோ அதை நிறைவாக நடித்துள்ளார்...!! விஷ்ணுவை பார்த்ததும் காதலில் விழுகிறார்...ரீ சார்ஜ்.. செய்த பணத்தை முழுவதும் திருப்பி தர மணம்யில்லாமல் சிறுக சிறுக தருகிறார். ஹீரோவை அடிக்கடி பார்க்க வேண்டுமாம்..!!! பாடலில் கூட கவர்ச்சிஇல்லாமல் வருவது பாராட்டுக்குரியது....இயக்குனர் ஹீரோயினை கையாண்டவிதம் அருமை 



இயக்குநர் ஸ்ரீ பாலாஜிக்கு இது முதல் படம் முதல் படத்திலே அருமையான திரைக்கதையை கொடுத்திருக்கிறார்...கதையோடு நகைச்சுவை கொண்டு வந்திருக்கிறார்...சின்ன சின்ன விஷயங்களை அருமையாக சொல்லி இருக்கிறார். அழகான ஒரு திரைகதை மதுரை மையமாக வைத்து வந்த திரைப்படங்களிலே...இவை தனிமையானது...மதுரை என்றாலே ரத்த காட்சிகள் இருக்கும் இதில் ஒரு துளி ரத்தம் கூட காண்பிக்க வில்லை...இதற்கே ஒரு சபாஸ் சொல்லாம். முதல் பாதி காதல் இரண்டாம் பாதி காவல் துறை தேர்வு..காட்சிகள்...காவல் துறை தேர்வில் என்னவெல்லாம் மோசடி செய்கிறார்கள் என்பதை தெளிவாக கூறியிருக்கிறார் இயக்குனர்....முதல் பாதியைவிட இரண்டாம் பாதி வேகம்.


இசை செல்வகணேஷ் பாடல்கள் சுமார் ரகம் தான் இரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் நிற்கிறது விழிகளிலே..விழிகளிலே..பாடல் அழகு...ஆடுகிற மாட்டை ஆடி கற டா ஆட்டம் போட வைக்கிறது பின்னி இசை கதைக்கு தேவையான அளவு கொடுத்திருக்கிறார்..

ஒப்பனிங் பாடல் இல்லை சண்டை காட்சிகள் இல்லை...காவல்துறை தேர்வை நேரடியாக நடத்த வேண்டும் என நல்ல கருத்தோடு முடித்திருக்கிறார். முதல் படத்திலே தன் திறமையை நிருபித்து இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ பாலாஜி..விஷ்ணு நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்...தெளிந்த நீரோடை போல ஒரு படம்....அழகாக அமைதியாக... 



Wednesday, January 19 46 comments

சிறுத்தை பயம் அறியாதவன் ...

ரவிதேஜா, அனுஷ்கா, நடித்த தெலுங்கில் வெளி வந்த விக்ரமார்குடு படத்தின் தமிழ் ரீமேக்தான் சிறுத்தை. நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த படத்தை தெலுங்கில் பார்த்து இருக்கிறேன்...அந்த படத்தை விட எனக்கு சிறுத்தை படமே ரொம்ப பிடித்து இருக்கு....

நாம ரொம்ப அறிவாளி நிறைய கேள்வி கேட்போம் என்று டைரக்டர்க்கு..தெரிந்து இருக்கும் போல! ஏன் ஆந்திராவில் தமிழ் பேசுகிறார்கள் என்பதற்கு அதைப் பற்றி டைட்டில் கார்டிலேயே போட்டு விடுறாங்க. ரத்தினவேல் பாண்டியன் உயிரோடு இருக்கிறான் என்று ஒருவன் தேவி பட்டினத்திற்கு போன் செய்து சொல்கிறான், அவனை ஒருவர் கொலை செய்து விடுகிறார், இப்படி சஸ்பென்ஸாக ஆரம்பிக்கிறது....


ஆந்திராவின் தேவி பட்டினத்தில் ஒரு ரவுடிக் குடும்பம் கொடுமைப்படுத்தி கொண்டிருக்கிறது. யாராவது வந்து நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்று மக்கள் ஏங்குகிறார்கள். முறுகிய மீசையோடு தேவிபட்டினத்திற்கு வந்து இறங்குகிறார் ரத்னவேல் பாண்டியன் (டிஎஸ்பி கார்த்தி). ரவுடிக் குடும்பத்தை ஒடுக்கி மக்கள் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வருகிறார். ஆனால் வில்லனுடைய தாக்குதலில் படுகாயம் அடைகிறார் டிஎஸ்பி கார்த்திக்...கார்த்திக் இறந்து விட்டதாக நினைத்து கொண்டு வில்லன் கும்பல் சென்று விட..அவரை சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வருகிறார்கள்..... 


இன்னொரு கார்த்திக்   திருடன். அவரும் சந்தானமும் திருடர்கள். சேட்டுவீட்டில் திருட செல்கிறார்கள் சந்தானமும் கார்த்திக்கும்...அங்கு கார்த்திக்கிற்கு தமன்னா மீது காதல் வருகின்றது...சந்தானம் அனைத்தையும் திருடி கொண்டு ஓடுகிறார்...சந்தனத்தை பிடித்து கொடுத்து...தமனாவிடம் நல்ல பெயர் வாங்குகிறார்....கார்த்திக் எதை சொன்னாலும் அதை நம்பி விடுகிறார் தமனா... பெரிய பொருளா திருடி விட்டு இனி திருட கூடாது என்று முடிவுக்கு வந்து கடைசியாக ஒரு பெட்டியை திருடுகிறார். அதில் ஒரு குழந்தை இருக்கிறது, அந்த குழந்தை கார்த்திக்கை அப்பா என்று சொல்கிறது...அது யார் குழந்தை என்று கண்டு பிடிக்கிறார் திருடன் கார்த்திக். அப்புறம் போலீஸ் கார்த்திக் என்ன ஆனார், அவர் மீண்டும் சென்று வில்லனை அழித்தாரா என்பதே மீதி கதை.


கார்த்திக் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்...இரட்டை வேடத்தில் நன்றாகவே நடித்து இருக்கிறார்...முதல் முறை இப்படி இரட்டை வேடங்களில் கலக்கி இருப்பது பாராட்டுக்குரியது....பருத்திவீரனுக்கு பிறகு வந்த படங்களில் அந்த சாயல் கொஞ்சம் இருந்தது, சிறுத்தையில் தான் அந்த சாயல் துளியும் இல்லை. போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்...திருடனாக வந்து சென்னை தமிழ் பேசுகிறார்...(திருடன் கார்த்திக் ராக்கெட் ராஜா)

படம் ஆரம்பம் முதல் சிறுத்தை வேகத்தில் பறந்து கொண்டு செல்கிறது... கார்த்திக்கும் சந்தானமும் சேர்ந்து காமெடியில் கலக்கி இருக்கிறார்கள், சந்தானம் பேசும் போது விழுந்து,விழுந்து சிரிக்கலாம். கார்த்திக்கிற்கு இணையாக சந்தானம் நடித்து இருக்கிறார்....


இரு விதமான பாடி லாங்குவேஜ் நன்றாக செய்து இருக்கிறார் கார்த்திக். போலீஸ் வேடத்தில் வரும் பொழுது அவர் மீது மரியாதையே வருகிறது...ஒரு காட்சியில் சீனியர் ஆபிசர் இவரிடம் ட்யூட்டியில் இருக்கும் போது பயம் இருக்கணும் பக்தி இருக்கணும் உனக்கு பயப்பட்டு பழக்கம் இல்ல போல" என்பார் 

 கார்த்திக் சொல்வார். "எனக்கும் பயம் இல்லைன்னு யார் சொன்னது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிசமும் ஒவ்வொரு நொடியும் நான் பயந்து கொண்டு தான் இருக்கேன்  ஏழு வருசத்திற்கு முன்னாடி ட்யூட்டில சேர்வதற்கு முன்னாடி கடமைக்காக தான் என் உயிரையும் தருவேன் சத்தியம் செய்தேன், ஏதோ ஒரு நாள் என் சாவு வந்தே தீரும் அந்த நாள் சாவை நேருக்கு நேரா பார்க்குற அந்த நிமிஷம் நாட்டுக்காக செய்து கொடுத்த சத்தியம் காப்பற்ற முடியாம போயிடுமோ பயந்து கொண்டு தான் இருக்கேன்" சொல்வார்....

படம் முழுவதும் கார்த்திக்கின் ஆதிக்கமே இருக்கிறது....திருடன் கார்த்திக், போலீஸாக வரும் கார்த்திக் நடிப்பு பிரமாதம் மீசையை முறிக்கி கொண்டு பேசும் வசனங்கள் "தீ" பறக்கிறது....பாடல்கள் அனைத்து அருமையாக இருக்கிறது....ஆராரோ ஆரிராரோ பாடல் அந்த குழந்தைக்கு தாயாகவே வருகிறது...அந்த பாடல் வரிகள் மிகவும் அற்புதம்...

மூச்சி பட்டா நோகும்ன்னு மூச்சி அடக்கி முத்தமிட்டேன் 
நிழலுபட்டால் நோகும்ன்னு நிலவு அடங்க முத்தமிட்டேன் 

ஒரு ஐந்து நிமிடம் கூட தொய்வு இல்லாமல் படம் செல்கிறது.....இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து கார்த்தி அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்கிறார்... தமனா கார்த்திக் ஜோடி இந்த படத்திலும் நன்றாக இருக்கிறது, எல்லா படத்தை போலவே ஹீரோயின்க்கு அதிக வேலை இல்லை கார்த்திக்கை தன் இடுப்பை கிள்ள சொல்கிறார். பாடல் காட்சிக்கு வருகிறார்..போலீஸ் கார்த்திக் பாதியில் விட்ட வேலையை திருடன் கார்த்திக் முடித்து வைக்கிறார்... சந்தானம் கார்த்திக் நகைச்சுவையில் வயிறுகுலுங்க சிரிக்கலாம் ....பொங்ககுக்கு  வெளிவந்த படங்களில் சிறுத்தை முன்னணியில் சென்று கொண்டு இருக்கிறது....




சிறுத்தை பயம் அறியாதவன் 



Wednesday, December 8 79 comments

காவலன் - பாடல் விமர்சனம்...



பாடல் வரிகள் எழுத வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் கேட்டேன் அட நல்லா தான் இருக்கு. இந்த பாடலை எழுதியவர் கபிலன் பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழ் மொழியிலே பாடலை எழுதி உள்ளார்.பாடியவர் கே,கே, ரீட்டா


பட்டாம் பூச்சி கூப்பிடும் போது பூ ஓடாதே...

காதல் தேனை சாப்பிடும் போது பேசகூடாதே... 
யானை தந்ததின் சிலை நீயே.... 
தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே...
காதல் வீசிய வலை நீயே 
என்னை கட்டியே இழுத்தாயே...


இந்த பாடலை பாடியவர் : கார்த்திக், பாடலை எழுதியவர் யுகபாரதி 
பெண் குரல் இல்லாமல் ஆண் குரல் மட்டுமே இந்த பாடலில் உள்ளது.
இந்த பாடல் அதிக சப்தம் இல்லாமல் பாடல் மட்டும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.  
சட சட என மழையென கொஞ்சம்...
தட தட என ரயில்யென கொஞ்சம்....
அடி கடி அடி கடி துடிக்குது நெஞ்சம்...
சுகம் கொஞ்சம் தான் கொஞ்சம்...

அவள் நேரத்தில் வருவாளா.... 
காக்கத்தான் விடுவாளா... 
பார்த்தாலே முறைப்பாளா... 
பால்போல சிரிப்பாளா... 

கேட்டாலே கொடுப்பாளா...  
கேட்காமல் அணைப்பாளா  ...?




"என்னடா இரண்டு பாடல்கள் நன்றாக இருகிறதே" என்று பார்த்தேன் 
இந்த பாடல் கேட்ட பிறகு முதலில் என்ன பாடல் கேட்டேன் என்றே மறந்து விட்டேன் 

பாடலை எழுதியவர் :விவேகா, பாடியவர்கள் : பென்னி, மேக்ஹா.   

ஸ்டெப் ஸ்டெப் இளமை அழைக்குது 
இதயம் பறக்குது ஸ்டெப் ஸ்டெப் 
உற்றுப்பார் உலகில் அழகின் நாட்டியம் 
உயிருக்குள் அதுவே தீயை மூடிடும் 

அவ்வளவு தாங்க மீதி எல்லாம் ஸ்டெப் ஸ்டெப்....ஒன்.. டூ... த்ரீ வருது 


இந்த பாடல் தான் படத்தில் முதல் பாடலாக வரும் என்று நினைக்கிறேன். எப்போதும் விஜய் படத்தில் அவர் முதல் பாடல் அதிரடியாக இருக்கும் இந்த பாடல் அதிரடியாக இல்லை. பாடலை எழுதியவர்: பா விஜய், பாடியவர்கள் திப்பு, ஸ்வேதா

விண்ணை காப்பான் ஒருவன்... 
மண்ணை காப்பான் ஒருவன்... 

உன்னை என்னை காக்கும்... 
அவனே அவனே இறைவன்...


எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமீ... 
வீண் ஜாதி இல்லை என்பவன் தான் நல்ல சாமீ... 
அம்மையப்பன் மட்டுமே ஆதி சாமீ...
ஆட்டம்னா என்னனு ஆடி காமீ...


இந்த பாடலை எழுதியவர் யுக பாரதி, பாடியவர்கள்: கார்த்திக், சுசித்ரா, இந்த பாடல் மெலோடி பாடல், கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.    

யாரது யாரது யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது 
மூடாமல் கண் ரெண்டை மூடி செல்வது யாரது...
நெருங்காமல் நெருங்கி வந்தது விலகாமல் விலகி நிற்பது
   

இசை வித்யாசாகர்,  இவர்கள் குருவி படத்தில் இணைத்தார்கள். அந்த படத்தின் பாடல்கள் பற்றி உங்களுக்கே தெரியும் குருவி படத்தை ஒப்பிட்டு பார்த்தால் இந்த படத்தின் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. எப்பொழுதும் விஜய் படத்தில் ஆறு பாடல்கள் இருக்கும். அதில் நிச்சயம் இரண்டு "குத்து" பாடல்கள் இருக்கும். ஆனால் இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் சுமாராகவே இருக்கிறது, "வேட்டைகாரன்" படத்தின் பாடல்கள் எல்லாம் அதிரடியாக இருந்தது, "சுறா" படத்திலும் பாடல்கள் நன்றாகவே இருந்தது, இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் கொஞ்சம் அதிரடி குறைவாகவே இருக்கிறது... மூன்று பாடல்கள் மட்டுமே நன்றாக இருக்கிறது, 

பட்டாம் பூச்சி  கூப்பிடும் போது, சட சட என மழையென கொஞ்சம்.. யாரது யாரது யாரது யார் யாரது, இந்த பாடல்கள் நன்றாக இருக்கிறது, இதில் பட்டாம் பூச்சி பாடல் மட்டுமே சிறந்ததாக உள்ளது.

விருதகிரியை பற்றி மட்டும் எழுதி கொண்டு இருக்கும் ரமேஷ் இந்த பதிவை தொடருவார் 




 
;