Thursday, July 28

திகிலூட்டும் காஞ்சனா...!!!


தெய்வதிருமகள் படத்திற்கு பிறகு பார்க்க நினைத்த படம் காஞ்சனா. இப்படத்தை பார்க்க காரணம் முனி படம் தான், அந்த படத்தின் திகில் காட்சிகள் மிகவும் பிடித்து இருந்தது. இந்த படத்திலும் அதிக திகில் காட்சிகள் இருக்குமென்று நினைத்து பார்த்தேன் என் நினைப்பு வீண் போகவில்லை. 



பேய்களை கண்டாலே பயப்படும் லாரன்ஸ் மீது.. பேய் புகுந்து தன் சாவிற்கு காரணமாக இருந்தவர்களை பழி வாங்குகிறது.. முனி திரைப்படத்தில் இருந்த அதே ஒன் லைன் கதை தான் இதிலும். ஆனால் முனி திரைப்படத்தை விட இதில் திகில் காட்சிகள் அதிகம் இருக்கிறது. திரைக்கதையில் மெருகேறி இருக்கிறார் லாரன்ஸ்.

படத்தின் ஆரம்பகாட்சியே திகிலா இருக்கிறது ... சிகப்பு கலர் தாவாணி பக்கத்துக்கு மைதானத்தில் விழுந்து விட அதை எடுத்து சென்ற பெண் வீட்டில் பேய் வந்து மிரட்டுவது போல காட்சி தொடங்கியதும் பேய் பயம் நமக்கும் தொற்றி கொள்கிறது.  அடுத்ததாக ஹிரோ அறிமுகம் ஆகிறார் சண்டை காட்சி அறிமுக பாடல் எல்லாம் தெலுங்கு வாசம் வீசுகிறது.


லாரன்ஸ் கிரிக்கெட் விளையாடி கொண்டு வெட்டியாக ஊரை சுற்றுபவர், அறிமுக சண்டையும் கிரிக்கெட் வைத்தே வருகிறது, கிரிக்கெட் எல்லாம் விளையாடி விட்டு ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு போய் விடுவார், காரணம் பேய் பயம். எப்போதும் கிரிக்கெட் விளையாடும் இடத்தில் பில்டிங் வருதால், கிரிக்கெட் விளையாட வேறு இடம் தேடுகிறார்கள். கிரிக்கெட் விளையாட பேய் இருக்கும் இடத்தை தேர்வு செய்கிறார்கள், அப்போதே அங்கே என்ன நடக்கும் என்ற பயம் தொற்றி கொள்கிறது. விளையாடுவதற்காக ஸ்டம்ப் அடிக்கிறார்கள் ஸ்டம்ப் அடிக்கும் இடத்தில் தான் சடலங்கள் இருக்கிறது. ஸ்டம்ப் அடித்தவுடன் சூறாவளி, கருமேகம் சூழ்ந்தவுடன், பயந்து அங்கிருந்து சென்று விடுகின்றனர். ஸ்டம்பை எடுத்து கொண்டு லாரன்ஸ் செல்கிறார் அதில் இருக்கும் ரத்தகரை மூலம் பேய் லாரன்ஸ் வீட்டில் புகுந்து விடுகிறது. பேய் அவர்கள் வீட்டில் நுழைந்தவுடன். படத்தின் வேகம் மேலும் சூடு புடிக்கிறது. 



திடிரென்று திகில் காட்சியில் நாம் பயந்திருக்கும் பொழுது அந்த பயத்தை போகுவது கோவை சரளாவும், தேவதர்ஷினியும் தான் அவர்கள் படத்திற்கு பலம் சேர்கிறார்கள், வீட்டில் பேய் இருக்கிறதா இல்லையா என்று சோதனை செய்யும் இடத்தில் இருவரும் பயப்படும் காட்சியில் பயங்கர சிரிப்பை வரவைக்கிறது.. இது திகில் படமா நகைச்சுவை படமா என மனதில் எழுகிறது.  


லாரன்ஸ் நடிப்பு, நடனம், இயக்கம் என அனைத்திலும் சிறப்பாக செய்யல் பட்டுயிருகிறார், பேயை கண்டுபயப்படுவது, பின்பு பேய் தன் உடம்பில் புகுந்து கொண்ட பிறகு வரும் பெண் தன்மை கொண்ட உடல் மொழி ஆக்ரோசமான சண்டை காட்சிகள் என அனைத்தும் கலக்கி இருக்கிறார், லட்சுமிராய் வுடன் ஆங்கங்கே காதல் காட்சியில் வருகிறார். படத்தின் இறுதி பாடல் காட்சியில் மிகவும் பிரம்மிப்பாக நடித்திருக்கிறார்.  


திருநங்கையாக சரத்குமார் (காஞ்சனா) . இக் கதபாத்திரத்தை ஏற்றதற்காக பாராட்டியே ஆகவேண்டும். நல்லதொரு நடிப்பு திருநங்ககைகள் பற்றி மேடையில் பேசும் பொழுது நெகிழ வைக்கிறார். திருங்கனையாக இருந்தாலும் ஆக்ரோசமாக சண்டையிடும் காட்சியிலே அறிமுகம் ஆகிறார். திருநங்கைக்கு உதவி செய்ய நினைக்கிறார். அது முடியாமல் தன் உயிரை இழக்கிறார். சிறிது நேரம் வந்தாலும் மனதில் ஒட்டிக் கொள்கிறா(ள்)ர்

முனி திரைப்படத்தை விட இதில் அதிகம் பயப்பட வைக்கும் காட்சிகள் இருக்கிறது, நீங்கள் எந்த காட்சியில் பயப்படவில்லை யென்றாலும் இடைவேளைக்கு முன்பு வரும் காட்சியை பார்த்தல் பயம் வராதவர்களுக்கும் பயம் வரும்.  

குறை : படத்தின் குறையென்று பார்த்தல் சிறு சிறு குறைகள் தான், பாடல்களில் தெலுங்கு வாடை, தேவையில்லாத டூயட், லாரன்ஸ் வீட்டில் ஆளுக்கு ஒரு பாசை பேசுகிறார்கள், (தேவதர்ஷினி) லாரன்ஸின் அண்ணி ஐயர் பாசை பேசுகிறார், ஸ்ரீமன், கோவைசரளா கோவை தமிழ் பேசுறாங்க, லட்சுமிராய் போல உடை அணிந்தால் எப்படி இருக்கும் என கோவை சரளா நினைத்து பார்ப்பது,  இவ்வாறான குறைகள் மட்டுமே 


நிறை : லாரன்ஸ் சரத்குமார். படத்தின் திரைக்கதை, பின்னணி இசை, இறுதி பாடல் கட்சி,  நகைச்சுவை, திகில் இவை இரண்டும் இருப்பது மிகப் பெரியபலம்.   

முதல் பாதி நகைச்சுவையோடு செல்கிறது, இரண்டாம் பாதி அதிபயங்கரமாக செல்கிறது .பேய்க்கு பயப்படுவது போல் முனி படத்தின் வரும் சில காட்சிகள் இந்தப் படத்திலும் வருகிறது அதை தவிர்த்து இருக்கலாம். லாரன்ஸின் பெண்மை தனம் கொண்ட நடிப்பு நன்றாக இருந்தது, மேலும் முகபாவனையில் முன்னேற்றம் தேவை. இறுதி காட்சியில் மிரட்டி இருக்கிறார் லாரன்ஸ். லட்சுமிராய் இந்த படத்தில் மொத்தமே எட்டு காட்சியில் தான் வருகிறார். பின்னணி இசையில் அமர்களப்படுத்துகிறார் தமன். பாடலிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். அரவாணி கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு சரத்குமார். தனக்கு கொடுத்த வேலையை மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார்.. லாஜிக் பார்க்காதவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். ஒரு முறையல்ல இருமுறை இந்த படத்தை பார்க்கலாம்.  காஞ்சனாவாக சரத்குமார், லாரன்ஸ் இருவரும் களைகட்டுகிறார்கள்.  



7 comments:

Praveenkumar said...

வாவ்... சூப்பர் விமர்சனம் மக்கா. நடுநிலையாக எடுத்து சொல்லியிருக்கீங்க... கலக்குங்க.

Praveenkumar said...

விமர்சனத்தை படிக்கும் போதே நிச்சயம் அனைவரும் படத்தை பார்க்கனும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துற மாதிரி சொல்லியிருப்பது சுவாரஸ்யம்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

இம்புட்டு சொல்லிட்டீங்க... கண்டிப்பா படம் பாத்துட்டு வரேன்...! :))

MANO நாஞ்சில் மனோ said...

படம் பார்க்க ஆவலாக இருக்குது....!!!

N.H. Narasimma Prasad said...

படம் உண்மையிலேயே நல்லா இருக்கு.

தமிழ் மகள் said...

படம் பார்த்தா பிறகு நித்திரை வரும் தானே?

ஜெய்லானி said...

டப்பிங் படம் மாதிரியோ தெரியுது :-)

 
;