ஒவ்வொரு உறவுகளும் அழிந்து விட்டன, யாரும் உறவுகளை மதிப்பதில்லை என்று கூறுகிறார்கள். ஆம் உறவுகள் பணத்திற்காக அழிந்து கொண்டு தான் இருக்கின்றன, ஒரு வன் எதன் மீது அதிகமாக நேசம் வைக்கின்றானோ அதுவே அவனுக்கு கிடைக்கும் என்பது நியதி. மனிதன் பணத்தின் மீது மோகம் கொள்கிறான் அதனால் அதுவே அவனுக்கு கிடைக்கிறது. முன்பு எல்லாம் உறவுகள் வேண்டுமென்று, அவர்கள் மீது பற் றுதலும் , பாசமும் இருந்தன, ஆனால் இப்பொழு து பற்றுதல் என்பது பொருளின் மீது வந்து வந்துவிட்டது. கார் வேண்டும்,A/c வேண்டும், fridge வேண்டும் என்ற காரணங்களால், அவ ன் பணம் தேடுகிறான்.இதன் காரணமாக வீட்டை மறக்கிறான் உறவுகளை மறக்கிறான். இதனால் உறவுகள் என்பது தானாகவே அழிந்து வருகிறது. பொருள் தேடுவதற்காக மனிதன் ஓடிகொண்டே இருக்கிறான். வாழ்க்கைக்கு தேவை பணம் ஆனால் இப்பொழுது பணமேவாழ்க்கை ஆகிவிட்டது..!!
கணவன் மனைவி வேலைக்கு செல்லும் ஒவ்வொரு வீட்டிலும், குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லாமல் தவிக்கிறார்கள். குழந்தைகள் பாசத்திற்காக ஏங்கி நிற்கும் காட்சிகளையும் நாம் காண முடிகிறது, (இருவர் வேலைக்கு செல்வது தவறு என்கிறீர்களா என்று கேட்காதீங் க ).பணம் தேடுவதற்காக குழந்தைகளை இளம் வயதிலேயே காப்பகங்களில் கொண்டு போய் விட்டு படிக்க வைக்கிறார்கள்.அவர்கள் படிப்பிற்காக தான் நாங்கள் பணம் தேடுகிறோம் என்று கூறுகிறார்கள் அதுவும் உண்மை தான். நான் மறுக்கவில்லை, ஆனால் குழந்தைகள் உங்கள் மீது பாசம் வைக்கிறதா இல்லையா ? யாருக்காக நீங்கள் பணம் சம்பாதிக்க இவ்வளவு கஷ்டப்பட் டீர்களோ அவர்கள் பின்நாளில் உங்களை தூக்கி எறிவார்கள் இது கண் கூடாக பார்த்த உண்மை.
இதற்கு என்ன தான் முடிவு ?வேலைக்கு போக வேண்டுமா வேண்டாமா..? என்பது கேள்வியல்ல.ஆண் வேலைக்கு போகவேண்டுமா?பெண் வேலைக்கு போகவேண்டுமா?என்பதும் கேள்வி அல்ல.உறவுகளுக்காக யார் விட்டு கொடுக்கிறார்கள் என்பதே என் கேள்வி?. குழந்தைகளின் சந்தோசத்திற்காக சிறிது நேரம் செலவு செய்தால் தான் என்ன..?
நம் வாழ்வில் கூட்டு குடும்பமே இல்லாமல் போய் விட்டது...முன்பு கூட்டு குடும்பம் என்பது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, என பல பேர் இருந்தார்கள், இன்று அப்படியில்லை தாத்தா, பாட்டி இருந்தாலே அது கூட்டு குடும்பம் என்று ஆகி விட்டது ...அந்த தாத்தா, பாட்டி கூட தேவையில்லை என்று சொல்கிறார்கள், அதற்கும் காரணம் என்னவென்று பார்த்தால் பணமாக தான் இருக்கிறது, தாய் தந்தையால் பென்சன் வந்தால் அவர்களை மதிக்கிறார்கள் இல்லையென்றால் அவர்களை கண்டுகொள்வதே இல்லை, வீட்டில் பெரியவர்கள் இருந்தால் நமக்கு என்று பொறுப்பு வரும் அவர்கள் மீதுமரியாதை கலந்த பயம் வரும். தாத்தா பாட்டி இருந்தால் குழந்தைகளுக்கு அவர்கள் பாசம் தெரியும். பின்னாளில் தன் தாய் தந்தையை எப்படி பார்த்து கொள்ளவேண்டும் என அவர்கள் தெரிந்து கொள்வார்கள், அம்மா அப்பா வேலைக்கு சென்று விட்டால் தாத்தா, பாட்டி பார்த்து கொள்வார்கள், நமது சின்ன வயதில் என்ன விஷயங்கள் நடக்கிறதோ அது அப்படியே மனதில் பதிந்து விடும்....நான் படித்த கதை ஒரு நினைவுக்கு வருகிறது....
ஒரு குடும்பத்தில் தன் அப்பா, அம்மா...அவர்களுக்கு வயதாகி விட்டது...அவர்களுக்கு என்று தனி பாய், சாப்பிடுவதற்கு தனி தட்டு, என வைத்து பார்த்து கொண்டார்கள். இதை தினமும் அந்த வீட்டு குழந்தைகள் கவனித்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் தாத்தா, பாட்டி இறந்து போய் விட்டார்கள். அவர்கள் பயன் படுத்திய பொருட்களை எல்லாம் தூக்கி எரிந்து விட்டார்கள் அதை பார்த்த குழந்தைகள், அந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு வந்து வைத்தார்கள், அதை ஏன் எடுத்து கொண்டு வருகிறாய் என்று குழந்தைகளின் அம்மா கேட்டதற்கு உங்களுக்கும் வயதாகும் அப்பொழுது நான் இதில் தான் உங்களுக்கு சாப்பாடு போடுவேன் என்று அந்த குழந்தை கூறும்...
உங்கள் குழந்தையிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அவ்வாறு தான் குழந்தகைளும் நம்மிடம் நடந்து கொள்வார்கள், சிறிய வயதிலே பணம், பிரிவினை பாகுபாடு என்று நீங்கள் நடந்து கொண்டாள் அதையே குழந்தை கற்று கொள்ளும். நாம் எப்போதும் முன் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் சின்ன சின்ன விஷயங்களை கூட அவர்கள் நம்மிடம் அறியாமலே கற்று கொள்கிறார்கள்
குழந்தைகளை தனியாக விடுவதால் வரும் விளைவு
* நண்பர்களுடன் இருக்கும்போது அவர்களின் கெட்ட பழக்க தொற்றிக் கொள்ளுதல்
* பெற்றோர் மீது அன்பு குறைகிறது அவர்கள் அன்பைத் தேடி தவறான வழிக்கு கூட செல்லலாம்...
* சின்ன வயதில் தடம் மாறி போவார்கள். உதாரனமாக சிறு வயது குற்றவாளிகள் பலர் உருவாக காரணம் பெற்றோர்கள் அவர்களை சரியாக கவனிப்பதில்லை..
* இதுவே ஒரு சின்ன பெண் அப்படி இருந்தால் அவள் மீது அன்பு செலுத்துவதாக இருக்கும் ஒருவர் மீது காதல் கொள்ளலாம்
* மேலும் எது சரி எது தவறு என வழிகாட்டவும் கண்டிக்கவும் ஆ ள் இல்லாததால் வாழ்க்கை தடம் மாறுகிறது.
* மேலும் எது சரி எது தவறு என வழிகாட்டவும் கண்டிக்கவும் ஆ
எனவே குழந்தைகளுடன் தினமும் நேரம் செலவிடுங்கள். அவர்களிடம் பள்ளியில் இருந்து வந்தவுடன் என்ன நடந்தது என மனம் விட்டு பேசுங்கள், பிரச்சினைகளை கேளுங்கள். மாலை நேரத்தில் ஏதாவது பூங்காவிற்கு அழைத்து செல்லுங்கள். இது நல்ல உறவு வளரவும் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமையவும் உதவும்...
Tweet | |||||