Tuesday, November 29 15 comments

சரிந்து கிடந்தேன்...

விதை போட்டவன்
சென்றுவிட
சிலரால் மிதி பட 
சிலர் மேய்ந்து விட 

அவளின் கண்ணீர் பட 
எதோ துளிர்த்து விட்டேன்..!!!

என் நிழலில் பலரிருந்தும்
நான் வெயிலில் நிற்பதை 
காணமல் சென்றனர்..!!!

இளைப்பாறும் பறவைகளும் 
எச்சமிட்டே செல்கின்றன...!!

நேசம் கொண்டு 
பலர் கல்லெறிய..
கண்ணீருடன் கனி 
அமுதை கொடுக்க...

கனியை உண்டு 
என் மீதே தூக்கி
எறிகிறான் விதையை..!

தாக்குபிடிக்க முடியா
காற்று தாக்கி 
சரிந்து கிடந்த என்னை 
தூக்கி சென்று...  

சிலர் மிதித்து கொண்டிருக்க 
சிலரோ தீ மூட்டிய 
பசியாறினர்..!!

Monday, November 21 9 comments

ஓர் நட்பு..!!!

வாழ்க்கை பாதையில் 
கை கோர்த்து நடந்து 
கவலைகளை 
மறந்தோம்..
நமக்கு நாம் என்றோம்..!!

ஆனந்தமாய் சுற்றி 
திரிந்த நாட்களை 
எண்ணி மகிழ்ந்தோம்,
நட்பில் பிழை கண்டு 
ஒதுங்கி நின்றோம் 
கண்ணீருடன்..!!

கவலைகள் போக்க 
எவ்விடம் என்று அலைந்த 
 நமக்கு..
மேலும் கவலைகளே 
பரிசாக வந்தன..!!

காயப்பட்ட மனதிற்கு 
ஆறுதல் கூறினாலும் 
வடுக்கள் மறைவதில்லை..!!

காயப்பட்ட மனமிது 
மேலும் காயங்களை
தாங்காதென்று..
விலகி நின்று விலகி நின்று
காயப்படுத்துகிறது..!!

மாறிய வார்த்தைகள்..
மாற்றத்தை உணர்த்துகிறது 
நமக்கு நாம் வார்த்தை 
பொய்யாகி போனதின்று!..!!

நடப்பாய் கைகோர்த்து 
சென்ற பாதையில்..
அமைதியை தேடி 
தனிமையில் செல்ல 
நினைத்த நட்பை 

தோள் தட்டி 
கண்ணீருடன் 
வழியனுப்பியது
ஓர் நட்பு..!!!

Thursday, November 17 8 comments

யார் இந்த ராங் நம்பர்..???

போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த அனுபவங்கள் நிறைய இருக்கும், ரொம்ப தொல்லையாக மாறி சிலர் நம்பரை கூட மாற்றியிருப்பார்கள் அந்த அளவிற்கு தொல்லையாக இருக்கும் ...அப்படியென்ன தொல்லைன்னு கேக்குறீங்களா ராங் கால்ஸ் தான். 

நாமும் சில நேரங்களில் ராங் கால் பண்றதுண்டு ஏதோ ஒரு நம்பர் மாற்றி போடுவதால் ராங் நம்பராக மாறிவிடும் ஆனால் மீண்டும் மீண்டும் ஒரே எண்ணுக்கு தொடர்பு கொண்டு, இவர் இருக்கிறாரா என்று கேட்பது கிடையாது. எங்களுக்கு வரும் ராங்நம்பர் அழைப்புகள் எல்லாம் ஒரே நபரை கேட்டு தான் வருகிறது 

லேன்ட் லைன் தொலைபேசி இணைப்பு கொடுத்தது முதல் உதயகுமார் இருக்கிறாரா..?? என்ன கேட்டு வரும் அப்படி யாரும் இல்லையென்று சொல்லியும் இன்று வரை அந்த ராங் கால் வந்து கொண்டே தான் இருக்கிறது, சில நேரங்களில் பொறுமையுடன் அப்படியாரும் இல்லையென்று சொல்லுவோம். சில நேரம்...

பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருக்கும் பொழுது தொலைபேசி அடிக்கும் யாரோ என அவசர அவசரமாய் எடுத்து கேட்டால் அது ராங் நம்பராக இருக்கும்.. அந்த நேரத்தில் வார்த்தைகள் தடித்து விடும் அப்போதும் அவர்கள் விடுவதாயில்லை இன்று வரை அப்படி ராங் கால்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது..

வீட்டு தொலைபேசியில் தான் அப்படி வருகிறதென்று பார்த்தால்ஒரு பத்து நாட்களாய் என் செல் போனிற்கும் ராங் கால்கள் வந்து கொண்டிருக்கிறது நீலிமா ராணி இருக்குறாங்களா..?? அப்படியாரும் இல்லையென்று சொன்னால் யே நீலு உனக்கு ஏதாவது பிரச்னையா என கேட்டு மெசேஜ் அனுப்புறாங்க...?? மாத்தி மாத்தி வேற நம்பர்ல இருந்து கேக்குறாங்க.. நாங்க என்ன நீலிமா ராணிய பூட்டி வைச்சா இருக்கோம்..?? எங்களையே கேக்குறீங்களே..

எங்க அண்ணன் நம்பருக்கு வெளிநாட்ல இருந்து போன் வரும், மெசேஜ் வரும் ஹாய் டியர், அப்படி இப்படின்னு முதல் அந்த நம்பரை நான் தான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன்..  போன் வரும் எடுத்தா ஏதோ ஒரு பொண்ணு எடுத்துட்டு ஹலோ சொல்லிடு வைச்சிடும் இப்படி எனக்கு மட்டும் தான் ராங் நம்பர் வருதா இல்லை உங்களுக்கு வருதா..??

லேன்ட் லைன்க்கு வருதுன்னா எங்க வீட்டுல முதலில் இருந்த யாரோ பேங்க் லோன் வாங்கிவிட்டு போய் இருப்பாங்க..வெப்சைட்ல அட்ரஸ் பார்த்து எங்களுக்கு போன் பண்ணலாம், ஆனா வீட்டில் குடியிருக்கும் அணைவருக்கும் வர வேண்டும் அப்படி வருவதில்லை  எங்களுக்கு மட்டும் தான் வருகிறது.. நாங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் நம்பரை இதற்கு முன்பு வேறு யாரவது பயன் படுத்திருப்பார்கள் போல. அப்படி ஒருவர் பயன்படுத்திய நம்பரை மற்றவர் பயன்படுத்த முடியுமா..??     

லேன்ட் லைன்க்கு தான் நெட்ல இருந்து நம்பர் எடுத்து போன் பண்றாங்க ஆனா எப்படி செல் போன் நம்பருக்கு போன் பண்றாங்க தெரியல. ராங் நம்பர் சொல்லியும் மறுபடி ஏன் தான் அழைக்கிறார்களோ.. 

Monday, November 7 9 comments

காதல் மழை...


ஆயிரம் மழை துளிகள் 
உன்னை சூழ்ந்திருக்க
ஒரு துளியாய் என்றும்
உன் நெற்றியில் நான்..!!

     ****
கோபித்து கொள்கிறாள் 
அவள் வாசனையை 
ரசிக்காமல்..
மண் வாசனையை 
ரசிப்பதால்..!!!


     ****
அவளுடன் பேசுகையில் 
இடியாய் இடித்து..
தொந்தரவு செய்கிறது 
மழை..!!!


     ****
காத்திருந்த காதலர்களை 
மேலும் காக்க வைக்கிறது 
மழை..!!


    *****
ரசித்து ரசித்து காதல் 
மழையில் நனைந்தாலும்
காதல ஜுரம் விடுவதாயில்லை..!!


       ****
வேண்டுமென்றே குடையை 
விட்டு செல்கிறான் 
அவள் முந்தானையில்
ஒளிந்து கொள்ள...


      *****
காதலர்களின் சாபத்தை 
பெறுகிறது 
மழை...
காதலனின் தாமதத்தால்..


    ****
 பனித்துளி போல்
உன் மேல் மழைத்துளி..


மழைவிட்டாலும்
கூந்தல் சாரலின்
மழை விடுவதில்லை.


  ***** 
ஒவ்வொரு மழையிலும்
ஒரு காதல் துளிர்விடுகிறது..
ஒரு காதல் கண்ணீரில் 
கரைகிறது..!!

Thursday, October 20 6 comments

என்னங்க சொல்றீங்க இது விஜய் படம் தானே..??!!


வேலாயுதம் படத்தின் பாடல் முதலில் கேட்பதற்கு பிடிக்காமல் போனாலும், கேட்க கேட்க பாடல்கள் நன்றாகயிருந்தது ரத்தத்தின் ரத்தத்தை தவிர.... பாடல் கேட்டுகொண்டிருக்கும் பொழுது திடீர் என தோன்றிய கற்பனை.. இது... முளைச்சு மூணு இலையும் விடல பாடல் எப்படி தோன்றி இருக்கும்...?? ஜெயம் ராஜா : விவேகா சார்... ஒரு பாட்டு எழுதணும் 

விவேகா : யாருக்கு சார்..

ராஜா : விஜய் சார்க்கு தான்

விவேகா : அப்போ பாட்டு வரியே தேவை இல்லை டர்ர்ணா சால்னா மோர் எழுதினா போதும்..

ராஜா : ஐயோ சார் அப்படி எல்லாம் இல்லை இந்த பாட்டுக்கு சுச்சுவேசன் இருக்கு..

விவேகா : என்னங்க சொல்றீங்க இது விஜய் படம் தானே..??!!

ராஜா : ஆமா ஆமா விஜய் படம் தான் ஆனா சுச்சுவேசன் இருக்கு 


விவேகா : என்னால  நம்பவே முடியல சரி சுச்சுவேசன் என்ன சொல்லுங்க..??

ராஜா : ஹீரோ... அவரோட அத்தை பொண்ணு கூட மார்கெட் போய் மளிகை சாமான், காய் கறி, எல்லாம் வாங்க போறார்... என்ன பொருள் வாங்க போறோம் மறக்காம இருக்க... பாட்டு பாட்டிடே போறார்....அத்தை பொண்ணு பத்தியும் (ஹீரோயின்) பாடல் வரி இருக்கணும் 

விவேகா : இவர் என்ன குழந்தையா..?? கால் கிலோ கருப்பு புளி, மஞ்சா தூள் பாடிட்டு போக..??

ராஜா : அப்போ தான் குழந்தைகளுக்கு பிடிக்கும்..

விவேகா : அப்போ பெரியவங்க அவர் படத்தை பார்க்குறதே இல்லையா..?? சரி சரி நமக்கு என்ன பாட்டு எழுதி கொடுப்போம்..

முதல் வரி பாருங்க சார் 


மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல

ராஜா : இது ஓகே சார் ஆனா காய்கறி பத்தி வரலையே 

விவேகா : இருங்க சார் அவசரப்படாதீங்க...அடுத்த லைன் கேளுங்க 

வெரலு வெண்டக்கா உன் காது அவரக்கா
மூக்கு மௌகாய், மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

ராஜா : சூப்பர் சூப்பர் சார் ... சூப்பர் மார்கெட் ல வேலை செஞ்சு இருப்பீங்க போல பின்றீங்க..

விவேகா : ரொம்ப புகழாதீங்க இப்போ ஹீரோயின் பத்தி சொல்றேன் கேளுங்க..!!

வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு

ராஜா : பின்னிடீங்க சார்... இதோ ஒரு நிமிஷம் சார் போன்..

ராஜா : (போனில்...) சரிங்க சார் அப்படியே வைச்சிடுவோம்.. சரிங்க சரிங்க ... அப்போ வைச்சிடுறேன்.

விவேகா : என்ன சார் ஆச்சு... எனி சீரியஸ்..???

ராஜா : அதெல்லாம் ஒன்னும் இல்லை சார் விஜய் சார் பேசினார் 

விவேகா : என்ன சார் அவர் இங்க வர போறாரா அப்போ பாட்டு எழுத முடியாதா..??

ராஜா : அது ஒன்னும் இல்லை சார் இந்த பாட்டுல அவர் ஹிட் படம் பேர் ஒன்னு வரணுமாம்..

விவேகா : ஹிட் படமா அது இருந்தா தானே சார் நான் சொல்லுவேன்..சரி என்ன பண்றது என் தலையெழுத்து சொல்றேன்..

பார்வை திருப்பாச்சி உன் தீண்டல் நெருப்பாச்சு
உன்ன பார்த்தாலே என் பகலும் இரவாச்சு..!!!

ராஜா : உங்கள மாதரி ஆளுங்க இருக்குற வரை எங்களுக்கு கவலையே இல்லை சார்...இதுக்கு அப்பறம் நீங்க கண்ணா பின்னான்னு எழுதினா கூட பரவாயில்லை..!!

விவேகா : ஓஹ இப்படி சொல்லிட்டீங்களா இப்போ பாருங்க...!!

கன்னாபின்னான்னு நீ அழகா இருக்குறியே
கண்கள் என்னும் மாடவெயிலில் என்ன பொரிக்கிறியே


விவேகா : நடுவுல நடுவுல கல்கண்டு முந்திரி போட்டா பாட்டு முடிஞ்சுது.. சார்.... 


ராஜா : சார் நீங்க என் தெய்வம் சார் இப்படி ... ஒரு பாட்டு எழுதி தந்ததுக்கு இந்த வருஷம் இது தான் டாப் சாங்க வரும்... 

விவேகா : உங்க நம்பிக்கைக்கு என் பாராட்டு சார் வாழ்த்துக்கள்.... இந்த பாட்டு நான் எழுதினேன் வெளியே சொல்லாம கூட இருக்கலாம் ஆனா எனக்கு பணம் மட்டும் கொடுத்திடுங்க..


                                            ******************************************************************************

ஆனா இந்த பாடல் கேட்பதற்கு ரொம்ப நல்லா இருக்கு நல்ல மொலேடி..... இந்த வருட சிறந்த மேலோடில இந்த பாடலும் ஒண்ணா இருக்கும்.... 

கற்பனை சொல்லி ரொம்ப ஓவரா போய் இருந்தா.... கண்டுக்காதீங்க.... இது வெறும் கற்பனை தான்  Monday, October 10 17 comments

உன் நினைவுகள்...
உன் நினைவால் 
சிரமப்பட்டு 
கண்ணயர்ந்தால்
கனவுகளில் வந்து 
எழுப்பி விடுவதே
உன் வாடிக்கை..!!!
*


உன்னுடன் செல்லும் 
போதெல்லாம்..
மழை வர வேண்டி 
கொள்கிறேன்..
குடையுடன் சேர்த்து 
உன் விரலையும் பிடிக்க... !!
*

என்ன பற்றி கவிதை 
சொல் என்கிறாய்..
உன் இரு வரி இமைகள் 
சொல்லும் கவிதையவிடவா 
நான் சொல்லி விட போகிறேன்...!!
*

எழுதிய கவிதை 

எல்லாம் எனக்கா 
என்பாய்..
இல்லையென்பேன்..
உன் கோவத்தில் 
மீண்டும் பிறக்கிறது 
உனக்கான கவிதைகள்..!!


உன் நினைவுகள் 
உறக்கமற்ற விழியை 
தந்தாலும்..
நடுஇரவில்..
விழிகள் உறக்கத்தை 
நோக்கி செல்ல.. 
மனதை எட்டி 
உதைத்து 
எழுப்புகிறது 
உன் நினைவுகள்..!!Friday, October 7 11 comments

எங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..!!

நேற்று சந்தித்த
உறவு ஒன்று 
இரண்டாண்டில் வந்து நிற்க
ஓடிவிட்ட காலத்தை
நினைவுகளால் ஓட்டிப் பார்க்க
அன்று பழகியது போல 
இன்னும் அப்படியே ..
பழகிகொண்டிருப்பது 
தான் உன் சிறப்பு ..

ஒவ்வொருவரையும் 
நீ உறவை சொல்லி 
அழைக்கும் பொழுது 
உன்... அன்பின் ஆழம் 
தெரிகிறது....!! 
உன் மனதில் இருப்பவர்களை 
மட்டுமே நீ உறவுமுறையில்
அழைப்பாய்..!!

வாழ்த்து கவிதை எழுதி 
கொடுக்கும் உனக்கு..
ஒரு வாழ்த்து கவிதை..
இக் கவிதையை கண்டு 
கோபம் கொள்ளாமல் 
பொறுத்து கொள்ள 
சொல் உன் கவிதையை..!! 
  

என்னை ஒவ்வொரு முறையும் 
உறவுமுறை சொல்லி 
அழைக்கும் பொழுதெல்லாம்..
மரத்தில் நீர் ஊற்றியது போல் 
இறுகி கொள்கிறது...
நமக்கான.. 
பந்தம்..!!

வார்த்தைகள் வளர்கின்றன 
உன்னை பற்றி எழுதும் பொழுது..
உன் அன்பின் நீளம் 
அப்படி...!!


உன்னை வாழ்த்த வார்த்தைகள் 
தேடி கொண்டிருக்கும்..
பொழுது... 
வேறு வார்த்தைகள் 
கிடைக்கவில்லை..


எபோதும் போல் 
அண்ணா..!!
என்றே முடித்து கொள்கிறேன்..


இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா...


Tuesday, August 30 14 comments

குட்டிக்கு ஒரு வாழ்த்து..

அன்பில் விளைந்த 
செல்ல மகனுக்கு
ஆயிரம் ஆயிரம்...
அன்பு முத்தங்கள்...

எத்தனை நிமிடங்கள்
உன்னுடன் இன்பமாய்
கழித்து இருக்கிறேன்..
என்னுடனே எப்போதும்
இருந்து கொண்டு..
எத்தனை சேட்டைகள் 
அத்தனையும் எனக்கு
உன் அன்பின் அர்த்தங்கள்!

முத்தங்கள் ஆயிரம் கொடுக்க 
உன் செல்ல கடிகளே..
ஆயிர ஆயிர ஆண்டுக்கு 
அன்பை சொல்லும்...!

மலர்கள் பூத்து குலுங்கும்
உன் புன்னகையை பார்த்தது !
உன் குறும்பை பார்க்க 
நேரத்திற்கே நேரம் 
போதவில்லையாம்!!!!

கத்திக் கொண்டே 
ஓடி வந்து என் கழுத்தைக்
கட்டிப்பிடித்து ஊஞ்சாலடும்
என் உற்சாக ஊற்றே...
என் சுவாசத்தின் காற்றே!

முன்னிரண்டு பற்களையும்
காட்டி நீ சிரிக்கையில்
எழுதிய என் எல்லா கவிதைகளும்
காகிதங்களை விட்டு
உன்னிடம் ஓடோடி வரும்
விளையாடிக் களிக்க...!

என் இரண்டு வயது குறும்பே
ஆயுள் முழுதும் எனக்கு
இனிக்கப் போகும் கரும்பே...
(சித்)அப்பா என்று நீ 
சொல்லும் போதெல்லாம்
நான் மீண்டும் மீண்டும் 
பிறக்கிறேனடா.

வண்ணத்துப் பூச்சியின் 
சிறகடிப்பினை யாரேனும் 
வாழ்த்த முடியுமா என்ன?
உன் துறு துறு அன்பில்
திளைத்துக் கிடக்கிறேன்...
வாழ்த்துக்களை எப்போதும்
என்னுள் இறைத்தபடி...!


Friday, August 26 2 comments

இந்தியன் தாத்தா அன்னா ஹசாரே

அன்னா  11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற்பட்டு இருப்பது சந்தோசமான விஷயம். லஞ்சம் கொடுத்து கொடுத்து ஏங்கி போய் இருந்த மக்களுக்கு யாரவது இந்தியன் தாத்தா போல் வந்து தட்டி கேக்க மாட்டார்களா என எதிர்பார்த்து கொண்டுயிருந்த நமக்கு கிடைதவர்தான் அன்னா  ஹசாரே.


யார் இந்த அன்னா, இவர் என்ன தவறு செய்தார் இவர் நல்லவரா, கெட்டவரா, என்பதையெல்லாம் விட்டு விட்டு அரசாங்கத்தையே கேள்வி கேட்கும் அளவிற்கு, ஒருவர் வந்திருக்கிறார் என நாம் நினைக்க வேண்டும் இவர் கேட்கும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் சொல்ல திணறி கொண்டிருப்பதே அரசின் நிலைமையை எடுத்து காட்டிவிடுகிறது. 

இப்போது எங்கு சென்றாலும் ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்ற வேண்டுமென்ற போராட்டம் காட்டுத் தீயாய் பரவிகொண்டிருகிறது இந்தஅளவிற்கு போராட்டம் நடைபெற என்ன காரணம். எங்கும் லஞ்சம், எதிலும் ஊழல், என பார்த்து பார்த்து கொடுத்து கொடுத்து, மக்கள் பெரும் கோபத்துடன் இருப்பதையே இந்த எழுச்சி காட்டுகிறது. 

ஆனால் அரசோ இந்த விஷயத்தில் இருந்து எப்படியாவது தப்பி ஓட பார்த்தது, அன்னா மீது பழி போட பார்த்தது, பதுங்கப் பார்த்தது,  போராட்டங்களை ஒடுக்க பார்த்தது, இந்த முறையும் மக்களை ஏமாற்றி விடலாமென்று நினைத்து. ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இப்பொழுது அரசு நிற்கிறது, மக்கள் இப்பொழுது தனக்கு கிடைத்த ஆயுதத்தை இறுகப் பிடித்து கொண்டனர், அதுவே அரசுக்கு விழுந்த மிகப் பெரிய அடி.

வெளியில் எங்கு சென்றாலும் இளைஞர்களும், முதியவர்களுக்கும், உண்ணாவிரத போராட்டங்கள், ஊர்வலங்கள் என இந்த மசோத பற்றி பரப்புரை செய்து கொண்டுயிருகின்றனர், அடித்தட்டு மக்களும் இப்பொழுது இச் சட்டம் பற்றி பேச தொடங்கி விட்டனர், இனி ஊழல் செய்ய முடியாது, என்னென்றால் ஊழல்வாதிகளை கேள்வி கேட்கும் அதிகாரம் மக்களிடம் வர போகிறது.. இனி ஊழல் செய்து வழக்கை வாய்தா வாங்கி ஒட்டி விடலாமென்ற நிலை இருக்காது. ஊழல் செய்த பணத்தில் வாங்கிய அனைத்து சொத்துக்களும் பறிக்கப்படும், ஊழல் புகார் நிருபிக்கப்பட்டால் அந்த நபரை இரண்டு ஆண்டுக்குள் சிறைக்கு அனுப்ப முடியும், 


என்ன சொல்கிறது ஜன் லோக்பால்

ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அது பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் விசாரிக்க வகை செய்யும், தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிடுவதுதான் ஜன் லோக்பால். 

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும்,எடியூரப்பாவை கதறடித்த கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தகவல அறியும் உரிமை சட்ட ஆர்வலரான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரால் வரைவு செய்யப்பட்டதுதான் இந்த ஜன் லோக்பால் மசோதா. 

இதன் மூலம் ஊழல் செய்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், புகார் கூறப்பட்ட இரண்டாண்டு காலத்திற்குள் அந்த நபரை சிறைக்கு அனுப்ப முடிவதோடு, ஊழல் செய்து சேர்த்த அந்த நபரது சொத்துக்களையும் பறிமுதல் செய்யமுடியும்.மேலும் அரசிட முன் அனுமதி பெறாமல் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்வதற்கான அதிகாரம் ஜன் லோக்பாலுக்கு உள்ளது. 

எந்த ஒரு அரசியல் சாயமின்றி போராடுவதே இந்த எழுச்சிக்கு காரணம், மக்கள் அரசியல் வாதிகளை நம்பி நம்பி ஏமார்ந்து கொண்டிருந்தான் இப்பொழுது ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது, நம் இளஞ்ர்களால். அப்துல்கலாம் சொன்னதை போல் இளஞ்ர்கள் கையில் இந்தியா இருப்பது நம் கண் முன் தெரிகிறது.. இந்த போராட்டத்தை திரளாக கலந்து கொண்டு போராடும் இளஞர்களை பாராட்டுவோம். இன்னமும் இந்த அரசு தப்பித்து ஓடவே பார்க்கிறது... நம் விடாமல் போராடுவோம். 

ஊழல்லற்ற நாடாக மாற்றுமா இந்த ஜன் லோக்பால் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 


தகவல் உதவி : webdunia


Saturday, August 13 5 comments

சகோதர சகோதரிகளே..


சகோதர பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ரக்ஷாபந்தன் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கையில் ராக்கி என்ற கயிறைக் கட்டுவது இந்நாளில் சிறப்பு. ரக்ஷா என்றால் பாதுகாப்பு, பந்தன் என்றால் உறவு என்று பொருள். 

உறவினர்களாக இல்லாத இருவர் ஒரு கயிறின் மூலம் சகோதர சகோதரிகளாக மாறுவது இந்த கயிற்றின் சிறப்பு. இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டுமே கொண்டாடிவந்த இந்த விழா இப்போது தென்மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. ரக்ஷாபந்தன் விழா புராண காலத்தில் இருந்தே தொடர்கிறது. 

ரக்ஷாபந்தன் கயிற்றை தன் சகோதரன் கையில் சகோதரி கட்டுவதன் மூலம் அவளைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்த சகோதரனுக்கு கிடைத்து விடுகிறது. ராக்கி கயிறு கட்டப்பட்ட பிறகு எந்த காரணத்தைக் கொண்டும் அந்த புதிய சகோதரியை ஆயுள் முழுக்க காப்பாற்றுவது என்று கட்டுப்பாட்டிற்குள் சகோதரர் வந்து விடுகிறார். ஆடி மாதத்தை சிரவன மாதம் என்றழைக்கும் வட மாநிலத்தவர்கள், அந்த மாதத்தின் பௌர்ணமி நாளில் இந்த விழாவை கொண்டாடுகின்றனர். ராக்கி கயிறு கட்டும் சந்தோஷ நிகழ்வின் பொழுது இருவரும் இனிப்பை பரிமாறி கொள்வார்கள்.

மகாபாரத காலம் தொடங்கி இப்போது வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது. சகோதரர்கள் கையின் மணிக்கட்டில் ரக்ஷாபந்தன் கயிறுகட்டும் பழக்கம் மகாபாரத காலத்திலேயே இருந்துள்ளதென்றும் கூறப்படுகிறது. போரின் போது கையின் மணிக்கட்டில் கிருஷ்ணருக்கு காயம் ஏற்பட்டுள்ளதைப் பார்த்ததும் திரெளபதி, தன் பட்டுச்சேலையின் முந்தானையைக் கிழித்து அந்த துண்டுதுணியை கிருஷ்ணர் மணிக்கட்டில் விடுகிறாள். இந்த அன்பான செயலை பார்த்து வியந்த கிருஷ்ணர், திரளபதியை தன் சகோதரியாக பாவிக்கிறார். அவளுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்குகிறார். அதனால் தான், துரியோதனன் சபையில் துயில் உறியப்படும்போது தன்னைக் காப்பாற்றுமாறு திரெளபதி வேண்டவே கிருஷ்ண பகவான் சேலையை வழங்கி மானத்தை காப்பாற்றுகிறார். 

சாதாரண கயிறு இவ்வளவு பெரிய பந்தத்தை, உறவை ஏற்படுத்துவதால், புராண கால சம்பவங்களைப் பின்பற்றும் மக்களும் இந்த பழக்கத்தை இப்போதும் பின்பற்றுகிறார்கள் இதற்கு பல வரலாற்று சம்பவங்கள் உதாரணமாக உள்ளன. இந்த விழாவிற்கு பாலிவா என்ற பெயரும் உண்டு. வாலி மன்னனை போற்றும் விதமாக பாலிவா என்று அழைக்கப்படுகிறது வைகுண்டத்தைக் காப்பற்றச் சென்று விட்ட கணவர் விஷ்ணு பகவானைக் காணாத லட்சுமி தேவி அவருக்கு எந்த தீங்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மாமன்னர் வாலியின் கையில் ராக்கி கயிற்றை கட்டுகிறாள். அதற்கு பிறகு, சகோதரியின் கணவர் விஷ்ணுவை காப்பாற்றும் பொறுப்பு மன்னன வாலிக்கு வந்து விடுகிறது. அதை நினைவு கூரும் விதமாகவே பாலிவா என்று இந்த விழா அழைக்கப்படுகிறது.

எம ராஜனின் சகோதரியான யமுனா நதி, தன் சகோதரன் கையில் ராக்கி கயிற்றைக் கட்டுவதன் மூலம் யமனுக்கு மரணமில்லா பெருவாழ்வை பெற்று தருகிறாள் அதற்கு பிராயசித் தமாக, கையில் ராக்கி கட்டி இருப்பவர்களை எமன் எதுவும் செய்வதில்லை என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்த போது புருஷோத்தமன் மன்னருக்கும் அலெக்சாண்டருக்கு சண்டை நடந்தது அலெக்சாண்டரின் மனைவி ரோக்சனா, மன்னர் புரோஷோத்தமனுக்கு ராக்கி கயிற்றை கட்டிவிடுகிறாள். போர்க்களத்தில் அலேக்சாண்டரைக் கொல்வதற்கு வாளை உருவிய புருஷோத் ராஜா, தற்செயலாக தன் கையில் கட்டப்பட்டிருந்த ராக்கியைப் பார்த்ததும் மனம் மாறி அலேக்சாண்டரை கொல்லாமல் விட்டுவிடுகிறார். அவ்வளவு பெரிய விமோசனத்தை இந்தச் சிறு கயிறு அலேக்சாண்டருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. சித்தூர் ராணி கர்னவதி, முகலாய மன்னர் ஹிமயூனுக்கு கயிற்றை அனுப்பி கட்டச் செய்கிறாள் அந்த சகோதர பாசத்திற்காக கர்ணவதியைக் காப்பாற்றும் பொறுப்பு ஹிமாயூனுக்கு வந்து விடுகிறது குஜராத் மன்னர் பகதூர் ஷா, சித்தூர் மீது படையெடுத்து அந்த நாட்டைக் கைபர்ர்ரியதும், போர் தொடுத்துச் சென்ற ஹிமாயூன் நாட்டை மீட்டு, இறந்த சகோதரி கர்ணவதியின் மகன் விக்ரம்ஜித்சிங்கிடம் ஒப்படைத்தாக வரலாறுகள் கூறுகிறது. 


இப்படி ஏரளாமான புராண, வரலாற்று காலசம்வங்களை உதாரணமக கொண்ட ரக்ஷாபந்தன் நாளில், தென்மாநிலங்களில் வாழும் வட மாநிலத்தவர்களும் ராக்கி கயிறைக் கட்டிக் கொள்கின்றனர். ராக்கி கயிறு வெறும் கயிறு தான் ஆனால் ஒரு புதிய சொந்ததையே தருகிறது..என்பது தான் மிக சிறப்பு, ராக்கி கயிறு ஆண் பெண் இருவருக்குமே நல்ல பாதுகாப்பை தருகிறது..வருடா வருடம் ரக்ஷாபந்தன் விழாவை கொண்டாடி உறவை மேம்படுத்தி வருகிறோம்... 

பதிவுலகம் கொடுத்த உறவு கௌசல்யா, ஆனந்தி, மகேஸ்வரி, ரேவதி அக்காக்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். புடவை சுடிதார், பணம் எல்லாம் கேட்க கூடாது..!!


அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்


Wednesday, August 10 8 comments

பட்டைய கிளப்பும் மங்காத்தா பாடல்கள்...


மங்காத்தா அஜித்தின் 50 வது படம். அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள், படம் மே 1 அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்றார்கள் ஆனால், வெளிவரவில்லை, ரசிகர்களுக்காக விளையாடு மங்காத்தா..என்ற ஒரு பாடலைவெளியிட்டார்கள்.. அந்த பாடல் ஏற்கனவே பிரபலமாகிவிட்டது.. இன்று மங்காத்தா படத்தின் அணைத்து பாடல்களையும்..வெளியிட்டுயிருக்கிறார்கள்..


நேற்றே இணையத்தில் வெளியிட்டதால் நேற்று இரவே பாடல்களை கேட்டு விட்டேன்.. இப்போது ஒவ்வொரு பாடல்களையும் அறிமுகம் செய்கிறேன்..முதல் பாடல் ஏற்கனவே வெளியிட்ட விளையாடு மங்காத்தா பாடல் தான்..
யுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித், சுசித்ரா , பிரேம் ஜி அமரன், அனிதா பாடியுள்ளார்கள்..

பாடல் வரி கங்கை அமரன் 

விளையாடு மங்காத்தா !
விட மாட்டா எங்காத்தா !!
வெளி வேஷம் போடாட்டா!
இந்த வெற்றி கிட்ட வாராதா !!

அஜித்தின் வாழ்கையை மனதில் வைத்து எழுதிய பாடல் போல் வரிகள் இருக்கிறது ஏற்கனவே இந்த பாடல்கள் வெற்றிபெற்று விட்டது.. இந்த வருடத்தின் அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக இது இருக்கும்... இந்த பாடலையே கிளப் மிக்ஸ் செய்து இருக்கிறார்கள்..

அடுத்த பாடல் மேலோடி பாடல் sp சரண் பவதாரணி குரலில்.. 

கண்ணாடி நீ.. கண்ஜாடை நான்..!! 
என் வீடு நீ உன் ஜன்னல் நான்..!! 
என் தேடல் நீ உன் தேவை நான்..!! 
என் பாடல் நீ உன் வார்த்தை நான்..!! 
என் பாதி நீ உன் பாதி நான்..!! 
என் ஜீவன் நீ உன் தேகம் நான்..!! 
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்..!! 
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்..!! 

நிரஞ்சன்  பாரதி வரிகள் கவிதையாக... மற்ற பாடல்களை விட இந்த பாடலே எனக்கு மிகவும் பிடித்தது.. மனதிற்குள் மெல்ல மெல்ல நுழைந்து மனதை ஆக்கிரமிக்கிறது...  மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் இது..!!!வாடா பின்லேடா என்ற பாடலை கிரீஸ் சுசித்ரா.. பாடியுள்ளார்கள்...வாலி வரிகளில் 

வாடா பின்லேடா ஒளியாதே அச்சோ டா 

டிவின் டவர், ஜப்பானின் ஹைக்கூ , ரஷ்யா, என வாலியால் மட்டுமே பாடல் எழுத முடியும்.. இந்த பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது...  இந்த பாடல் சுமார்ரகம் தான்.


 மச்சி  ஓபன்  தி  பாட்டில்.. என்ற ஃபோக் சாங் . மனோ, பிரேம்ஜி அமரன், திப்பு ,ஹரிசரண், நவீன் பாடியுள்ளார்கள்.. வாலி வரிகளில்....

இது அம்பானி பரம்பரை 
ஐஞ்சாறு தலை முறை 
ஆனந்தவளர்பிறை தான் 
நாம கொட்டுன்னு ஒருமுறை 
சொன்னாக்க பல முறை 
கொட்டாதோ பண மழை தான் 
நாம முன்னேற படிக்கட்டு 
நாம் வாழ்வில் கிரிக்கெட்டு 

இந்த பாடல் நடுவில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்ற பாடல் வரி வருகிறது. இந்த பாடலில் அஜித் என்ட்ரியாக இருக்கும் என நினைக்குறேன்.. ஆட்டம் போடும் ரசிகர்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.  மதுஸ்ரீ, யுவன்ஷங்கர்ராஜா சோகமான மேலோடி பாடல்... வாலி வரிகளில்...

ஏன் நண்பனே என்னை ஏய்த்தாய் யோ..
என் பாவமாய் வந்து வாய்தாய் 
உன் போலவே நல்ல நடிகன் 
ஊரெங்கிலும்யில்லை ஒருவன் 

கேட்க கேட்க பிடிக்கும் பாடல் இது இனிமையாக இருக்கிறது.. அனைவரையும் கவரும் பாடலாக இப்பாடல் இருக்கும் யுவன் சங்கர் குரல் நன்றாக இருக்கிறது...இது எங்க பல்லேலக்கா.. புது நாக்குமுக்கா.. கார்த்திக், விஜய் ஜேசுதாஸ், அனுஷா தயாநிதிகுரல்களில், கங்கை அமரன் வரிகளில்... 

இது எங்க பல்லேலக்கா 
நீ கேளு கொக்கமக்கா..
நியூடைப்பு நாக்கு முக்கா 

இந்த பாடல் சுமார் ரகம் தான் பாடல் கேட்பதற்கு போர் அடிக்கவில்லை... இப்பாடலில் தயாநிதி அழகிரி, மனைவி அனுஷாவும் பாடியுள்ளார். 


பில்லா படத்தில் வருவது போல் இதிலும் தீம் மியூசிக் ஒன்று நன்றாகயிருக்கிறது, இனி அணைத்து டிவிகளில் இந்த தீம் மியூசிக்கே ஆக்கிரமிப்பு செய்யும்.... படம் வருவதற்கு முன்பு பாடலை கேட்டு விட வேண்டும் அதில் ஒரு ஆர்வம், எப்படியிருந்தாலும் படத்தில் பாடல் வர தானே போகிறதென்று இருக்க முடியாது. ஒரு அஜித் ரசிகனுக்கு, பாடல் அணைத்து கலவையானதாக அனைவரையும் கவரும் விதத்தில் இருப்பது சிறப்பு, மொத்தத்தில் இந்த வருடமுழுவதும் மங்காத்தா பாடல்கள் தான் கேட்க போகிறது.... அடுத்து விநயாகர்சதுர்த்தி வேறு வரபோகிறது... தெருவெங்கும் மங்காத்தா பாடல் பட்டைய கிளப்ப போகிறது.... 


பாடல்களை தரவிறக்கம் செய்ய

பட்டைய கிளப்பும் ட்ரைலர்...

முந்தையப் பதிவு : அடைமழைக் காதல்..... 
;