Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts
Tuesday, January 3 2 comments

விமர்சனமா..?? மௌனகுரு



ஒரு திரைப்படம் பார்க்க வேண்டுமென்றால் விமர்சனம் பெரிதும் உதவியாய் இருக்கும். முன்பு சினிமா விமர்சனம் செய்யப்பட்டதை போல.. இப்பொழுது யாரும் சரியாக விமர்சனம் செய்வதில்லை. விமர்சனம் செய்பவர்களுக்கு பிடித்த நடிகரின் படம் என்றால் ஆஹா ஓஹோ என்றும், பிடிக்காதவர் என்றால் சரமாரியாக குறை சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது.  மக்கள் விமர்சனம் அதை விட மோசமாகிவிட்டது. தன் புத்திசாலி தனத்திற்கு படத்தை குறை சொல்ல தொடங்கிவிடுகிறார்கள்... படத்தை பார்த்து விட்டு சொன்னால் பரவாயில்லை, பார்காமலே படம் நன்றாக இல்லையென்று சொல்வார்கள் பலர். சில நண்பர்கள் என்னிடம் சொல்வார்கள் படம் நன்றாக இல்லையென்று.. படம் பார்த்து விட்டீர்களா என்றால் இல்ல பார்க்கல நண்பர்கள் படம் நல்லா இல்லை என்பார்கள்.. இப்படி தான் பலர் படத்தை பார்காமலே படத்தை பற்றி விமர்சனம் சொல்லி விடுகிறார்கள்.


பல நல்ல படங்கள் இப்படி தவறான விமர்சங்களால்,  வெற்றி பெற முடியாமல் போய் விடுகிறது விமர்சனம் செய்யும் பொழுது நாம் யோசித்தே செய்யவேண்டும்.. ஒரு படம் நன்றாக இல்லையென்று சொல்வது தான் இப்பொழுது பேஷன் ஆகிவிட்டது. ஒரு திரைப்படம் இரண்டு மணி நேரம் பொழுது போகிறதா அது தான் தேவை நமக்கு, அதை விட்டுவிட்டு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை அப்படி இப்படி குறை சொல்லி கொண்டு தான் இருக்கிறோம்.

பதிவுலகில் முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட்டு விமர்சனம் எழுதும் சிலர்.. படம் நன்றாக இல்லையென்று தான் பதிவு எழுதி இருக்கிறார்கள். படம் நன்றாக இல்லையென்று சொல்வது ஒரு பெருமையா.. ?? படங்களின் குறைகளை சொல்லலாம், டப்பா படம் என்று எல்லாம் விமர்சனம் செய்யலாமா..?? இப்படி பட்ட விமர்சங்களால் பலர் நல்ல படங்களை பார்க்க முடியாமல் போகிறது..!!   நல்ல படங்களை எந்த காழ்புணர்ச்சி இல்லாமல் விமர்சனம் செய்யுங்கள். என்ன தான் விமர்சனம் செய்பவர்கள் படம் நன்றாக இருக்கிறதென்று கூறினாலும் மக்கள் கண்டு கொள்ளாமல் விட்ட படங்களில் இந்த படமும் ஒன்று. 



படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுதே, படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தேன், எதிர்பார்த்தது வீண் போக வில்லை. படத்தின் கதை : அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறால் ஒரு சாதாரண கல்லூரி மாணவன் சிக்கி கொள்கிறார் அவர்களிடம் இருந்து மீண்டுவருகிறாரா இல்லையா என்பதே கதை. 

அருள் நிதியின் நடிப்பு பல மடங்கு மெருகேறி உள்ளது நன்றாகவே தெரிகிறது,சென்னையில் வளர்ந்த அவர் ஊர்காரரை போல் வட்டார மொழி பேசுவது சிறப்பாக உள்ளது. தனக்கு கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்து இருக்கிறார் அருள்நிதி.  அரசியல் காரணத்தால் இவர் படங்களை ஒதுக்காமல் இருந்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொள்வார். அந்த அளவிற்கு நடிப்பு திறமையை வைத்திருக்கிறார். 

இனியா முந்தய படத்தில் பார்த்த இனியா வா என கேட்க வைக்கிறார், நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார். 

வில்லன் ஜான் விஜய், நகைச்சுவையில் வந்தால், நகைச்சுவையில் கலக்கி விடுகிறார், வில்லன் கதாபாத்திரம் வந்தால்.. அதிலும் ஒரு கை பார்த்து விடுகிறார்.. ஒரு தவறு செய்து விட்டு, பயத்தில் தவறுக்கு மேல் தவறு செய்து.. கண்களில் பயத்துடன் நடித்து இருக்கிறார் ஜான் விஜய்.. இனி நிறைய படங்களில் இவரை வில்லனாக பார்க்கலாம். 


இயக்குனர் சாந்தகுமார் முதல் படத்திலே நல்ல பெயரை வாங்கிவிடுகிறார், நேர்த்தியான திரைகதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்தவிதம், அனைத்திலும் நல்ல அனுபவம் பெற்றவராக தெரிகிறார். குறிப்பாக போலீஸ் எஸ்.ஐ உமா ரியாஷை தேர்வு செய்தது, நிறைய படங்களில் நல்ல போலீஸாக வருபவர் ஆணாக தான் இருப்பார், இதை இயக்குனர் மாற்றி யோசித்து இருக்கிறார்.  திரைக்கதையின் வேகம்.. ஹிரோவின் டல் லூக்,  ஹீரோவின் வசன உச்சரிப்புகள் எல்லாம் இயக்குனரின் கைவண்ணம் என்று நன்றாக தெரிகிறது,  படம் பார்க்கும் பொழுது ஆங்கில படம் பார்த்த திருப்தி வருகிறது.  நல்ல படத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் பட்டியல்களில் சாந்தகுமார் படமும் இடம் பெரும். 

படத்தை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் இங்கு பகிராமல் விட்டு இருக்கிறேன், படம் பார்க்கும் பொழுது உங்களுக்கு சுவாரசியம் குறைந்து விடாமல் இருப்பதற்காக. நல்ல படங்களை எதிர்பார்பவர்கள் கட்டாயம் இந்த படத்தை பார்க்கலாம். இந்த மாதிரியான நல்ல படங்கள் திரையரங்குகளை விட்டு தூக்கப்படுவது வருத்தமான ஒன்று..



Friday, February 25 42 comments

உங்கள் கேள்விக்கு என் பதில்...




சென்ற பதிவில் உங்களை கேள்வி கேட்க சொல்லியிருந்தேன் நிறைய கேள்விகள் வந்திருந்தது சில கேள்விகளை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கு பதில் கூறியிருக்கிறேன்.. பதில் எழுதுவது மிகவும் கடினமாக இருந்தது எனக்கு தெரிந்த பதிலை தெரிவித்து இருக்கிறேன் தவறு இருந்தால் மன்னித்து கொள்ளவும்.



மாணவன் 

பதிவுலகம் மூலம் கற்றுகொண்டது என்ன?
சுமாராக எழுத, நிறைய படிக்க, நிறைய (வீண் )அரட்டை அடிக்க கற்று கொண்டேன்.இங்கு இன்னும் கற்றுகொள்ள நிறைய இருக்கிறது.  


பதிவுலகம் மூலம் அடைந்த நன்மைகள்?

நல்ல நண்பர்கள்,  அதிகம் படிப்பது பலவகையான மனிதர்களின் எழுத்துக்களை தெரிந்து கொண்டது, நானும் ஏதோ நன்றாக எழுதுவதற்கு உதவுகிறது 


பதிவுலக நண்பர்களைபற்றி?

இங்கு கிடைக்கும் ஒரே நன்மை என்னவென்றால் அது நண்பர்கள் தான். அவர்கள் என் மீது அன்பு வைப்பதும், நான் அவர்கள் மீது அன்பு வைப்பதும் , எனக்கு ஒரு நிகழ்வு வரும் பொழுது போன் செய்து பாராட்டுவதும், நண்பர்கள் தான். என் பிறந்தநாள் அன்று சித்ரா அக்கா எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார், என் பிறந்தநாள் என்று எப்படி தெரியும்...? அவரை நான் கேட்டேன், நான் பேஸ்புக்கில் பார்க்கும் போதே குறித்து வைத்து கொண்டேன் என்றார், ஒரு நண்பரின் பிறந்தநாளை கூடதெரிந்து வைத்திருக்க வில்லையென்றால் எப்படி என்றார் அப்போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நல்ல நட்பு கிடைத்து இருக்கிறது என்று பிறகு தேவாஅண்ணன் அவங்க மனைவி (அண்ணி) அவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் காலையில் வந்தவுடன் பாபு அண்ணன் போன் செய்து எனக்கு வாழ்த்து தெரிவித்தார், ரமேஷ் எனக்கு போன் செய்து வாழ்த்து சொன்னார் , கார்த்திக் எனக்காக பதிவு எழுதி வாழ்த்து சொன்னார், பலர் எனக்கு மின்னஞ்சல் செய்து வாழ்த்து கூறினார்கள். இவர்கள் எல்லாம் என்னை பார்த்ததும் கிடையாது நானும் அவர்களை பார்த்தது இல்லை, இந்த பதிவுலகம் தான் எங்களை சேர்த்து வைத்திருக்கிறது, இந்த விஷயத்தை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் எனக்கு ஒரு நிகழ்வு வரும் பொழுது மனதார பாராட்டும் பொழுது...அது தனி ஒரு சந்தோசமாகவும் ஊக்கமும் அளிக்கிறது. எனக்கு தமிழ்மணம் விருது கிடைத்தது, என்றால் அதற்கும் காரணம் நண்பர்கள், இங்கு எனக்கு என்னவெல்லாம் நன்மை கிடைக்கிறதோ அவை எல்லாம் என் நண்பர்களுக்கு சொந்தமானது....நான் எப்போதும் தொடர்பில் இருக்கும் ஒரே நண்பர் எஸ்.கே தான் அவரிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்று வருகிறேன், எனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் இவரிடம் தான் கேட்பேன். எனக்கு மட்டும் இவர் உதவவில்லை அனைவருக்கும் உதவி செய்கிறார், நண்பர்கள் பற்றி எழுதினால் எழுதி கொண்டே போகலாம்.


வளர்ந்துவரும் பதிவுலகம் பற்றி உங்கள் பார்வையில்??

நாளுக்கு நாள் பதிவர்கள் தான், அதிகரித்து வருகிறார்கள். புதிய பதிவர்கள் நன்றாக விழிப்புணர்வுடன் எழுத வேண்டும் என ஆர்வமாக இருக்கிறார்கள், பதிவுலகில் அனைத்து விஷயங்களையும் படித்து தெரிந்து கொள்ளலாம், பல பதிவர்கள் புத்தகம் வெளியிடுகிறார்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது, நன்மைகள் பல இருந்தாலும் போட்டி பொறாமை இருப்பது வேதனைக்குரியது.


பிரபல பதிவர் - விளக்குக?? 

உங்களை பற்றி என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்...!!!



மச்சி உனக்கு பதில் தெரியாத கேள்வி எது? 

எனக்கு மட்டும் அல்ல அனைவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி என்றால் அது மரணம் , எப்போது மரணம் என்று யாராலும் சொல்லமுடியாது.  
                                                                           
                                                                             
வேடந்தாங்கல் - கருன்
பிரபல பதிவர்கள் என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு ஏன் கருத்துரை இடுவதில்லை??

நீங்கள் பிரபலம் என்று யாரை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. பிரபல பதிவர்களும் பின்னூட்டம் போடுகிறார்கள்,  சித்ரா பின்னூட்டம் போடுகிறார், கே,ஆர்,பி செந்தில் பின்னூட்டம் போடுகிறாரே, நான் பதிவு எழுத வந்த புதியதில் இவர்கள் வந்து பின்னூட்டம் போட்டு ஊக்கம் அளித்தார்கள். உண்மை தமிழன் பின்னூட்டம் போடுகிறார். அவர் அவருக்கு நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பின்னூட்டம் போடுகிறார்கள், சிலருக்கு நேரம் கிடைக்காமல் இருப்பதால் பின்னூட்டம் போடமால் இருப்பார்கள். சிலர் தாங்கள் பிரபல பதிவர் என்று நினைத்து கொண்டு பின்னூட்டம் போடாமல் இருக்கிறார்கள், ஒரு சிலர் பின்னூட்டம் போடாமல் இருப்பதற்கு காரணம் இருக்கிறது. அவர்களுக்கும் வந்த புதியதில் அனைவருக்கும் பின்னூட்டம் போட்டு இருப்பார்கள், அப்போது விவாதம், சர்ச்சை என்று வந்ததால் சிலர் பின்னூட்டம் போடுவதையே நிறுத்தி விடுகிறார்கள். என்னை பொறுத்த வரை நான் யார் பின்னூட்டதையும் எதிர்பார்த்து பதிவு எழுதுவதில்லை, எனக்கு தெரிந்த சில விஷயங்களை நான் மற்றவர்களுக்கு சொல்கிறேன், பின்னூட்டம் போடாதவர்களை பற்றி நான் என்றுமே சிந்திப்பதில்லை. எனது வேலை நல்ல கருத்தை சொல்வது அவ்வளவு தான், யாரும் பின்னூட்டம் போடவில்லையென்றாலும், நான் பதிவு எழுதி கொண்டு தான் இருப்பேன். நமது பதிவை யாரும் படிக்கவில்லையென்றால் வருத்தப்படலாம் ஆனால் நமது பதிவை அனைவரும் படிக்கிறார்கள் நீங்கள் சொல்லும் பிரபல பதிவர்களுக்கும்...அது போதுமே நமக்கு.



Chitra 
பதிவுகள் எழுதுவதால், இப்பொழுது இந்த அளவுக்கு maturity - அறிவு முதிர்ச்சி வந்ததா? இல்லை, அந்த முதிர்ச்சி வந்தததால், பதிவு எழுத வந்தீர்களா?

விளையாட்டாக தான் எழுத தொடங்கினேன் உங்களை போன்ற பதிவரின் எழுத்துக்களை படித்து தான் முதிர்ச்சி வந்தது. பதிவு எழுத எழுத அந்த முதிர்ச்சி மெருகேறியது .



எஸ்.கே 
ரசிகன் என்ற பெயரை வலைப்பூவுக்கு வைக்க காரணம்? 

வலையுலகம் பற்றி எனக்கு முன்பே தெரியாது, அதனால் இந்த பெயர் தான் வைக்க வேண்டும் என்று முன்பே தீர்மானிக்க வில்லை. நான் அஜித் ரசிகன் என்பதால், ரசிகன் வைத்தேன். ஆனால் இப்பொழுது உங்கள் அனைவரின் ரசிகன்.


வலைப்பூவுக்கு முன் பின் உங்கள் வாழ்க்கை பற்றி???

வலைப்பூவுக்கு முன் தனிமை, பேப்பர் படிப்பது ..வலைப்பூவுக்கு பின் நிறைய படிப்பது நிறைய நண்பர்கள்


Sriakila 
பதிவுலகம் மூலம் நீ அடைந்த நன்மைகள் என்ன? இதனால் ஏற்பட்ட சங்கடங்கள் என்ன?

நன்மை என்றால் நண்பர்கள் ஒரே குடும்பம் போல் இருப்பது,  பல விஷயங்கள் பற்றி படிப்பது. சங்கடம் என்றால், நான் மற்றும் எனது இரு நண்பர்கள், அந்த இரண்டு நண்பர்களுக்குள் சண்டை வந்தால் நடுவில் நான் தான் மாட்டிகொள்வேன் இந்த நண்பரிடம் பேசினால் அந்த நண்பர் கோபித்து கொள்வார்,அவரிடம் பேசினால் இவர் கோபித்து கொள்வார். இது போல் சங்கடங்கள் தான் வரும் 

karthikkumar 
பதிவுலகம் வந்த பிறகு இணையத்திற்கு அடிமை ஆகிவிட்டேன் என்று உணர்ந்தது உண்டா?.

நான் இன்னும் இணையத்திற்கு அடிமையாகவில்லை எப்போது அடிமையாகமாட்டேன். இணையம் இல்லையென்றால் இரண்டு நாட்களுக்கு சிரமமாக இருக்கும் பின்பு சரியாகிவிடும் 

ஆனந்தி 
அந்த பட்டாம்பூச்சி ,ரோஜாபூ னு கவிதையா ஊடு கட்டினியே...சொல்லு...யாருப்பா தம்பி அந்த பொண்ணு..??

நான் இப்படி கவிதை எழுதுவதற்கு காரணம் நண்பர்கள் சிலர் என்னை கவிதை எழுத தெரியாதா..?என்றார்கள் நான் முயற்சி செய்ததில்லை என்றேன்.முயற்சிசெய்யென்றார்கள் அதனால் தான் எழுதுகிறேன். பெண் என்று யாருமில்லை....நான் எழுதும் கவிதை எல்லாம் கற்பனை தான். (எப்படி கேட்டாலும் உண்மையை சொல்ல மாட்டேனே) 


பன்னிக்குட்டி ராம்சாமி 

இதுவரை யாருக்குமே தெரியாமல் நீங்கள் காத்து வரும் ஒர் ரகசியம், (எங்களிடம் வெளியிட முடிந்தால்).. என்னவென்று சொல்ல முடியுமா...?

ராம சாமி உங்களை பற்றி ஒரு ரகசியம் இருக்கிறது அதை சொல்லவா..?எனக்கு அப்போது 13 வயது எங்கள் வீட்டு பக்கத்தில் நிறைய கல்யாணமண்டபம் இருக்கும் ஒரு நாள் யாரோ ஒருவர் கல்யாண வீட்டிற்கு சென்று...அங்கே நன்றாக சாப்பிட்டு விட்டு அங்கே வைத்த ஐஸ்கிரீம்மை எங்க அம்மாவிற்கு எடுத்து வந்து கொடுத்தேன் ஏது இந்த ஐஸ்கிரீம் என்றார், கடையில் வாங்கி வந்தேன் என்றேன் இது தான் என் ரகசியம். 

உங்கள் பதிவில் பிடிக்காத விஷயங்கள், பிடிக்காத பதிவுகள், &காரணம்?

என் பிடிக்காத விஷயம் எழுத்து பிழை தான். நான் முன்பு எழுதிய பதிவில் இன்னும் எழுத்து பிழைகள் இருக்கும், இப்பொழுதும் எனக்கு எழுத்து பிழைகள் நிறைய வருகிறது, பிடிக்காத பதிவுகள் என்றால் நான் தொடக்கத்தில் பதிவு செய்த ஐந்து பதிவுகள் பிடிக்காது காரணம் அது காபி பேஸ்ட் செய்தது....

எனக்கு ஒரு அறிவுரை சொல்ல வேண்டும் என்றால், உங்கள் அறிவுரை என்ன?

முதலில் உங்கள் பெயரை மாற்ற சொல்வேன், ஏனென்றால் உங்களை பற்றி எனக்கு தெரியும் நீங்கள் செய்யும் வேலை...முதல் ஆனால் நீங்கள் இப்படி பெயர் வைத்திருப்பது ஆச்சரியாமாக இருக்கிறது, நீங்கள் கழுகிற்காக ஸ்பெக்ட்ரம் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தீர்கள். அதே போல உங்கள் பதிவில் ராமர்பிள்ளை பற்றி எழுதியது. இதை போல நல்ல விழிப்புணர்வு கட்டுரைகளை நீங்கள் பதிவிட வேண்டும் 


ப்ரியமுடன் வசந்த் 
ஒரு இளம்பெண் உங்களை பார்த்த முதல் நாளிலே காதல் கொண்டு உங்களிடம் காதலை சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? இல்லையென்றால் அதற்கு விளக்கம் ஆமாம் என்றால் அதற்கும் விளக்கம் தேவை...??

(ஒரு முடிவோட தான் இருக்கீங்க.) நிச்சயமாக மாட்டேன் கடைசிவரை கூட வருபவர் என்பதால் நன்கு அவரை பற்றி தெரியவேண்டும், ஒருவரை பற்றி தெரியாமல் எப்படி காதலை ஏற்றுகொள்வது...அவரிடம் நன்கு பழகி அவர் குணங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொண்ட பிறகு தான் முடிவு எடுப்பேன்.




உங்களை ஏண்டா கேள்வி கேட்க சொன்னோம் என்று இந்த கேள்விகளை பார்த்தவுடன் முழித்து கொண்டிருந்தேன், ஏன் என்றால் கேள்விகள் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை..கேள்விகள் அனைத்து நன்றாக இருந்தது சிலர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது அதனால் மன்னித்து கொள்ளவும்....கேள்வி கேட்ட அனைத்து நண்பர்களும் நன்றி


Monday, January 3 89 comments

ஹிட்ஸ்............சீரழிவின் தொடக்கம்!


இப்போதைய பதிவுலக பேச்சு இது தான், தமிழ்மணத்தில் பதிவர்களை வரிசைப்படுத்துதல். எந்த பதிவர்களை பார்த்தாலும் இது தான் முதல் கேள்வி : தமிழ்மணத்தில் எத்தனையாவது ரேங்க்? . நான் நேற்று ஒரு பதிவரை சந்தித்தேன் அவர் என்னை கேட்ட கேள்விகள்  

"சௌந்தர் தமிழ்மணத்தில் நான் 5ஆம் இடம் நீ எந்த இடம்..?" 

"நான் 20 இடங்களில் வரவில்லை." 

"என்னப்பா எத்தனை நாட்களாய் பதிவு எழுதுகிறாய், இப்படி வரவில்லை என்று சொல்கிறாயே..?" 

"20 இடங்களில் வரவேண்டும் என்றால் தினமும் பதிவு போடவேண்டும். தெரியுமா.?" 

"நாங்களே சும்மா டைம் பாஸ்க்கு வந்து ஏதோ எழுதிட்டு போறோம் முடிந்தால் பதிவு எழுதுவோம் இல்லை எங்கயாவது கும்மி அடிச்சிட்டு போய்டுவோம். தமிழ்மனதில் top 20 யில் வரவேண்டும் என்பதற்காக எழுதவில்லை" என்றேன். உடனே அவர் "சும்மா சொல்லாதே நீ வரவில்லை. அதனால் இந்த பழம் புளிக்கும் என சொல்கிறாய்" என்றார்....சரி அதை விடு என்று வேறு பேச்சை எடுத்தார். மீண்டும் தமிழ்மணம் எங்கள் பேச்சுக்குள் நுழைந்தது. "இந்த வருடத்தில் தமிழ்மணம் 100 பதிவர்களை வரிசைப்படுத்தியுள்ளார்கள் தெரியுமா...?" என்றார் நானும் தெரியும் பார்த்தேன் என்றேன் நான் 10வது இடம் என்றார். நான் 79 வது இடம் என்றேன்...ஓஹ அப்படியா பரவாயில்லை...  

"தமிழ்மணம் traffic rank என்று ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்...அதுவும் நன்றாக இருக்கிறது சௌந்தர் நீ எத்தனையாவது இடம்...?" என்றார்  

"அதை நான் இன்னும் பார்க்க வில்லையே" என்றேன்.  

"சரி சௌந்தர் ஏன் இப்படி தமிழ்மணம் விருது, வரிசை படுத்துதல் எல்லாம் செய்கிறார்கள்." என்று கேட்டார் அவர்.  

"அதையெல்லாம் பின்பு சொல்கிறேன் நீங்கள் ஏன் தினம் ஒரு பதிவு ரெண்டு பதிவு என்று போடுறீங்க" என்றேன்/ அதற்கு அவர் "நான் தமிழ்மணத்தில் வர வேண்டும் என்பதற்காக தான் அப்படி எழுதுகிறேன்." என்றார்.  

"தினம் பதிவு எழுதுவதற்கு என்ன செய்றீங்க" என்றேன்.  

"நிறைய வாரமலர் படிப்பேன் நிறைய படம் பார்ப்பேன்"   

"பதிவு எங்கே எழுதுவீங்க" 

"ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு சென்றதும் கம்ப்யூட்டர் ஆன் பண்ணுவேன் நாளை என்ன பதிவு போட வேண்டும் என்று எழுதி வைத்து விடுவேன் ஞாயிற்று கிழமைகளில் இரண்டு முன்று பதிவு எழுதி வைத்து கொள்வேன் அதை பதிவிடுவேன்." 

"ஞாயிற்று கிழமை எல்லாம் வெளியே போக மாட்டிர்களா..? குடும்பத்தை அன்று ஒரு நாளாவது அழைத்து கொண்டு போனால் தானே அவர்களுக்கு சந்தோசம்." 

"ஆமாம் சௌந்தர் இப்போது எல்லாம் வெளிய போக முடியலை என் மனைவியும் என்னை திட்டி கொண்டே இருகிறா என்னால் இந்த பதிவுலக போதையில் இருந்து வெளிய வரமுடியவில்லை" என்றார். 

அப்போது தான் எஸ்கே வந்தார் அவரை பார்த்து இதோ எஸ்கே வந்து விட்டான் அவனை கேட்போம் இதனால் மன அழுத்தம் ஏற்படுமா என்று... 
எஸ்கே இந்த ரேங்க் பட்டியல் ஹிட்ஸ் என்று எப்போதும் சிந்தித்து கொண்டிருப்பதால் ஏதாவது மன அழுத்தம் ஏற்படுமா? 

இணையம், கணிப்பொறி இதெல்லாம் முதலில் வேலைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் இவையே பொழுதுபோக்குகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வலைப்பூக்களில் எழுதுபவர்களில் பெரும்பாலோனர் ஒரு relief, diversion-காகதான் எழுதுகிறார்கள். அஃப்கோர்ஸ் எல்லோருக்குமே தாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உண்டு ஆனால் அது அதிகமானால் பிரச்சினைதான். மன அழுத்தம் மிக அதிகமாகிறது. தாங்கள் முன்னணியில் இருக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து மனரீதியான பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

1. எந்நேரமும் அதைப் பற்றிய சிந்தித்து கொண்டிருப்பதால் மற்ற செயல்களில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போகிறது. செய்யும் செயல்களிலும் முழுமையான பங்களிப்பை அளிக்க முடியாமல் போகும்.

2. வேலை, குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் பழகும் நேரம் குறைகிறது. இதனால் அவர்களுடன் மனக்கசப்பும் ஏற்படலாம்.

3. மேலும் கோபம், மன அழுத்தம்,  fantasy(எந்நேரமும் கற்பனை உலகில் சஞ்சரித்தல்), கவலை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது. 

4. இதைத் தவிர தலைவலி, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற உடல்ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மேலும் நம் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படுகின்றது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவதால் முதுகு/இடுப்பு வலி போன்ற பிரச்சினையும், உடல் உழைப்பு குறைவதால்(அதாவது உடற்பயிற்சி இல்லாததால்) உடல் பருமன் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. 

ஒரு மாணவன் பள்ளியில் ரேங்க் எடுக்கச் சொல்லி அவனை கட்டாயப்படுத்தினால் எந்த அளவு பிரச்சினைக்குள்ளாவானோ அதைப் போலவே/அதைவிட அதிகமாகவே இங்கே தங்களைத்தானே பிரச்சினையில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். 

மன அமைதிக்காகவும் சந்தோசத்திற்காகவும் கணிப்பொறியை பயன்படுத்த ஆரம்பித்து அதுவே பெரிய பிரச்சினையாகி விடுகிறது.

எஸ்கே விற்கு இது எல்லாம் எப்படி தெரியும் என்று கேட்டார் அவர். எஸ்கே மனோதத்துவம் தான் படித்து இருக்கிறார் அதனால் இவருக்கு அதை பற்றி நன்றாக தெரியும்..

என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என நினைக்கின்றேன்!

எல்லாம் சரி யார் அந்த பதிவர் என்றா கேட்க்குறீங்களா அட வேற யாரும் இல்லை நம்ம மங்குனி அமைச்சர் தான் 

மதியம் சாப்பாட்டை எங்கள் வீட்டில் முடித்து கொண்டு, இரவு சாப்பாட்டிற்கு எஸ்கே வீட்டிற்கு கிளம்பி சென்றார் மங்குனி...



 
;