Friday, December 31 53 comments

என் தேவதை...!

ஏனடி வந்தாய் இன்று !?
உன்னை பார்த்து
என் பேனாவும் சென்றுவிட்டது
கவிதை எழுத !
தூரிகையும் ஓடி விட்டது
ஓவியம் வரைய !
நான் மட்டும் நிற்கிறேன் செயலற்று !

 நீ சிறகை விரித்தது
என்னை சிறை எடுக்கவா ?
கண்களை திறக்காதே துடிப்பை
நிறுத்திவிடும் என் இதயம் !
கலைந்த உன் கூந்தலில்
கலங்கி போய் கிடக்கிறது மனசு !


உனக்கு நிற்க வேறு இடமா
கிடைக்கவில்லை ?!
சரி சரி கொஞ்சம் நகர்ந்து கொள்
நிமிட முள் நகரட்டும் !
புது வருடம் பிறக்கவேண்டும்
உலகம் காத்து கிடக்கிறது 
வரவேற்று கொண்டாட !!
உங்கள் அனைவருக்கும்  இந்த தேவதையின் சார்பிலும் 
என் சார்பிலும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!Wednesday, December 29 52 comments

எனக்கு பிடித்த பாடல் 20102010 எனக்கு பிடித்த பத்து பாடல்கள் என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு எழுத  மதி அழைத்ததால்...இந்த பதிவை நான் தொடர்கிறேன்....அனனத்து பாடல்களும் பிடிக்கும் அதில் இருந்து குறிப்பிட்ட சில பாடல்களை தேர்ந்தெடுப்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்....ரொம்ப கஷ்டப்பட்டு உங்களுக்காக பத்து பாடல்களை தேர்வு செய்து இருக்கிறேன்.   

10) தமிழ்ப்படம்... இந்த படம் முழுவது ஒரே காமெடி தான்..அதுவும் இந்த பாடலில் விஜய். ரஜினி, தனுஷ், சிம்பு அனைவரையும் கிண்டல் செய்து இருப்பார்கள்...விஜய்யை போல நடனம் ஆடுவது எல்லாம் சூப்பர் இப்போதும் இந்த பாடலை பார்த்தால் கூட நன்றாக சிரிப்பு வரும்....பாடல் வரிகள் எல்லாம்...நன்றாக இருக்கும்.

பச்ச, மஞ்ச, கருப்பு தமிழன் நான் 
உலகத்தை ரட்சிக்க வந்த கடவுளும் நான்தான் 
என்ன மிஞ்ச எவனும் இங்குயில்லை
நம்ம தாய் குலத்திற்க்கும் நான்தான் செல்ல பிள்ள

2011 நம்ம கையில 

சந்திப்போம் தோழ நம்ம சட்ட சபையில 
எவனுக்கும் என்ன கண்டா
உள்ளுக்குள்ள நடுங்கும் 
என் பார்வை பட்டால் சிங்கமும் பதுங்கும்

பாடியவர் : முகேஷ்9 கோவா படத்திலே உருப்படியான...பாடல் என்றால் இது தான் ஜெய் மட்டும் தனியாக உட்கார்ந்து கேட்பார் அவர் மட்டும் இல்லை நாமும் தனியாக உட்கார்ந்து கேட்டால், கேட்டு கொண்டே இருக்கலாம்...  

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ

பாடல் பாடியவர் அஜீஸ் & ஆண்ட்ரியா 


8 ) வம்சம் இந்த படத்தில் இது தான் ஓபன் சாங் இந்த பாடலுக்கு முன்பு அந்த ஊரை பற்றி ஒரு பில்டப் கொடுப்பார்கள்...அதற்கு ஏற்றார் போல் அந்த பாடலும் இருக்கும் ...இந்த பாடலில் இசையும் பாடல் வரிகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும்  

மன்னாதி மன்னரு மானமுள்ள மறவரு
சொன்னாரு அப்போதே சங்கக்கால புலவரு
ஏ கூட்டங்கூட்டி வாராரு
கோயில் மாலை வாங்கத்தான்
கும்மிக்கொட்டும் குமரிங்க குலவ சத்தம் ஓங்கத்தான்

பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : மாணிக்கவிநாயகம், வேலுமுருகன், பாண்டிராஜ்


7) அங்காடிதெரு இந்த படம் ஒரே கவலையா இருக்கும்...பாடல்களே நன்றாக இருக்கும் அதிலும் உன் பேரை சொல்லும் போது வருகிற பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாடல் அவர்கள் வேலை செய்யும் கடையில் மட்டும் எடுத்து இருப்பார்கள் எடுத்தவிதமும் நன்றாக இருந்தது. பாடல்வரிகளும் நன்றாக இருக்கும் 

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல், ஹரி சரண்6) பாணா காத்தாடி...இந்த படம் இன்னும் பார்க்கவில்லை ஆனால் இந்த படத்தில் வரும் தாக்குதே கண் தாக்குதே என்ற பாடல் பிடிக்கும்...அந்த பாடலின் இசை அதை படமாக்கிய விதம் எனக்கு பிடிக்கும்


பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே
பூங்காத்ததை கை கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏர்த்ததே5 )மதராசபட்டினம்..இந்த படத்தில் பழைய சென்னையை காண்பித்து இருப்பார்கள்...இந்த பாடல்வரிகள் எல்லாம் மிகவும் பிடிக்கும்


வாம்மா துரையம்மா இது வங்கக் கரையம்மா
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
ஹ ஹ ஹ அதே தான்
கட்டைவண்டியில் போவோம்
டராமல் ஏரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஓதிட பாம்பு ஆடுதே எம்மா
வரிகள்: நா. முத்துக்குமார்
பாடியவர்: உதித் நாராயண், 

4) மைனா...இந்த பாடல் முன்பே பிடித்து இருந்தது...வரிகள் எல்லாம் பிடிக்கும் பாடல் மலையில் படமாக்கிய விதம் நன்றாக இருந்தது


கையை புடி கண்ணு பாரு...
உள் மூச்சை வாங்கு...நெஞ்சோடு நீ..
கொஞ்சம் சிரி... எட்டுவையி..

தோல்சாய்ந்து தூங்கு இப்போது நீ...
மொதுவா பாடு.... எதையாவது
பனிபோல் நீங்கும் சுமையானது...
சாதனா சர்கம், நரேஷ் ஐயர்

3) நான்  மகான்  அல்ல.  இந்த படத்தில் இறகை போல...இந்த பாடலில் கார்த்திக் செய்யும் ரீயாக்சன் ரொம்ப நல்லா இருக்கும்...பாடல் வரிகள் அதை விட சூப்பர்..யுவன் குரலில்......   

இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போல தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைத்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு காற்று பட்டதும்
அநியாய காதல் வந்ததே
அடங்காதே ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு2) எந்திரன் படத்தில் அனைத்து பாடலும் எனக்கு பிடிக்கும் குறிப்பாக இந்த பாடல்..ரொம்ப பிடிக்கும். பாடல் ஆரம்பிக்கும் பொழுது ரோபோ உடம்பில் இருதயம் துடிப்பது போல காண்பித்து இருப்பார்கள்..அது எனக்கு ரொம்ப பிடிக்கும் ரஜினி ரொம்ப சூப்பரா நடனம் ஆடி இருப்பார்...ஐஸ்வரியா அதை விட நன்றாக நடனம் ஆடி இருப்பார் .

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
 முதல் முறை காதல் அழைக்குதோ
பூச்சியம் ஒன்றோடு
பூ வாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
google'லால் காணாத தேடல்கள் என்னோடு
காலங்கள் காண காதல், பெண் பூவே உன்னோடு

பாடகர்: ரகுமான், Kash n Krissy1) மன்மத அம்பு இப்போது அனைவருடைய செல் போனிலும் இந்த பாடல் தான் கேட்கிறது. நீல வானம் ..இந்த பாடலை கமல் விஜய் டிவியில் பாடினர் அடடா என்ன சூப்பரா பாடுகிறார் அதை பார்த்து கொண்டே இருக்கலாம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மெலோடி பாடலிலே இது தான் சிறப்பு. கமலே எழுதி அவரே பாடிஇருப்பார். 

நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாயுந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..

இன்னும் பாடல்கள் நிறைய இருக்கிறது ஆனால் பத்து பாடல் தான் எழுதணும் கூறியதால் இத்துடன் முடித்து கொள்கிறேன் இந்த தொடரை தொடர அன்புடன் ஆனந்தி அவர்களை அழைக்கிறேன்

Monday, December 27 46 comments

சொல்லுவிங்களா...?அப்பாவின் கையில் தலைவைத்து படுத்துக்கொண்டு  கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்த மீனுவை....

"சீக்கிரம் தூங்கு நாளைக்கு காலையில் கோயிலுக்கு போகவேண்டாமா?"

"போகணும்..போகணும்" என்றாள்

" தூங்கு இல்லையென்றால் எப்படி போவது" என்று சொன்னபடியே கையை எடுத்துவிட்டு அந்த இடத்தில் தலையணையை வைத்து அவளின் நெஞ்சில் தட்டினார்..

"அப்பா"

"என்ன....உன்னை துங்கசொன்னேன்?"

"நீங்களும் சின்ன பிள்ளையில் இருந்து என்னை கோயிலுக்கு போகச்சொல்றீங்க....... நானும் போகிறேன் பின்பு ஏன் அப்பா கடவுள் நமக்கு உதவிசெய்வதில்லையே?"

"உனக்கு என்னம்மா உதவிசெய்யவில்லை?"

"நான் பிறந்தவுடனே அம்மாவை என்னிடம் இருந்து பிரித்துவிட்டார் ...நம்மளிடம் பணம் இல்லை..சென்றமுறையே எனக்கு பள்ளி கட்டணத்தை அத்தையிடம் இருந்துதான் வாங்கினோம்...நாம என்ன தவறு செய்தோம் அப்பா...?"


"நாம ஒரு தவறும் செய்யவில்லையம்மா அது கடவுளின் விருப்பம்....."


"அப்படியென்றால் எதுக்கு அப்பா என்கூட படிக்கும் சிலர்மட்டும் பணக்காரர்களா இருக்கிறார்கள் அவர்களுக்கு மட்டும் கடவுள் எப்படி நல்லது மட்டுமே செய்கிறார்" 

"நம்மை கடவுள் ஒருவிதத்தில் சோதிக்கின்றார்"

"அவருதானே நம்மளை படைத்தார் பின்பு ஏன் சோதிக்கனும்...அவர்க்கு சரியா ஒரே முறையில் செய்ய தெரியாத என்ன?"

"நீ பேசமா தூங்கு.."என்று அதட்ட அதற்குமேல் அவள் பேசவில்லை...

  இந்த கேள்விகள் ஒன்றும் அவள் இன்று கேட்கவில்லை...அடிக்கடி மீனு தன் அப்பாவிடம் கேட்கப்படும் கேள்விகள்தான்... எல்லா முறையும் ஒரு அதட்டலுடந்தன் அவளது கேள்விகள் முடிந்து இருக்கின்றன...அந்த குடிசைப்பகுதியில் மீனுவின் குடிசையும் ஒன்று...சின்ன பெண்..இரண்டாவது படிக்கிறாள்..அப்பா தினக்கூளி...நன்றாக படிப்பவள்..மீனு...!


மறுநாள் காலையில் அவளின் அப்பா உணவு தயாரிக்க...அவள் கோயிலுக்கு பயணித்தாள்....வாரத்தில் இரண்டு நாட்கள் செல்வாள்..அதே குடிசைப்பகுதியில் ஒரு தேவாலயமும் இருந்தது..அங்கும் போவாள்..


"இன்னைக்கு சாமியிடம் என்ன வேண்டினே?"

"எங்களுக்கு எப்ப உதவி செய்வேன்னு கேட்டேன்பா"

" என்ன சொன்னாரு?"

" என்னைக்கு எனக்கு பதில் சொன்னாரு?"

"சரி நீ சாப்பிட்டு..பள்ளிக்கு போ.".என்று சாப்பிட வைத்து வேலைக்கு போகும்போது அவளை பள்ளியில் விட்டு செல்வது அப்பாவின் வழக்கம்.


எப்போதும் மாலையில் அன்று பள்ளியில் என்னென்ன நடந்தது என்பதை ஒன்றுவிடாமல் அப்பாவிடம் சொல்லுவாள்...அவர் சமைத்துகொண்டு இருக்க...


"அப்பா..இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?"

"என்னமா நடந்தது சொல்லு?"

"எங்க வகுப்பில் ஒருத்தன் வீட்டுபாடம் செய்யவில்லை..ஆசிரியர் அவனை வலிக்குமாறு கொட்டிவிட்டார்..அவன் அழுதுகொண்டே இருந்தானா....ஆசிரியர் அவனிடம்...பாரு நான் உன்னை அடித்தது எதுக்கு...நீ இப்பொழுது நன்றாக படித்தால் பிற்காலத்தில் பெரிய ஆளாய் வரலாம்...நிறையா சம்பாதிக்கலாம்..கார் வாங்கலாம்..நீ இப்படி படிக்காமல் இருந்தாய் என்றால் ரெம்ப கஷ்டப்படுவாய் அதான் உன்னை அடித்தேன் அப்படின்னு சொன்னார்"

"அதற்கு அந்த பையன் என்ன சொன்னான்?" கேட்டார் மீனுவின் அப்பா 

"அவன் இன்னும் வேகமா அழுக ஆரம்பிச்சுட்டான் ..நாங்க எல்லாம் சிரிச்சோம்..."

"நீயும் நன்றாக படிக்கவேண்டும் சரியா ?" என்றார்

  "'நீங்களும் நன்றாக படித்து இருந்தால் இப்பொழுது உங்களிடமும் காசு நிறையா இருந்து இருக்கும் ...நம்ம அத்தையிடம் கேட்கவேண்டிய அவசியம் இருக்காது ...காரு இருக்கும்...பெரிய வீடும் இருக்கும்..நமக்கு உதவி செய்ய கடவுள் வேண்டாம்..சந்தோசம இருக்கலாம்..."

"ஆமாம் மீனு நான்தான் சரியாக படிக்கவில்லையே"

"கவலைபடாதீங்கப்பா...நான் படிக்கின்றேன்...காரு வாங்குகிறேன்..".


மறுநாள் மாலையில் பள்ளியில் இருந்து திரும்பும்போது ஒரு சிறிய நாய்க்குட்டியை கழுத்தில் கயிறு கட்டிய நிலையில் வலுக்கட்டாயமாக இழுத்து வந்தாள்....மீனு 

"இதை எங்கே இருந்து இழுத்துட்டு வரே?"

 "தெருவிலே இருந்தது ..பாவம் அப்பா...இதுக்கு நிறைய பசிக்கிறது போல...என்னைமதிரியே அம்மா இல்லை ..அதான் சாப்பாடு போடலாம்னு இழுத்துட்டு வந்தேன்..."

"சரி சாப்பாடு போடலாம்."என்றார்..

"இதுவும் நம்மளும் ஒண்ணுதான் இதையும் கடவுள் சோதிக்கிறார்...பாவம்..எங்கே போகும்...பால் இல்லை..கத்துது....இங்கேயே இருக்கட்டுமே"

"நீ பள்ளிக்கு போன பிறகு யாரு பார்த்துக்குவா?"

"இதோ இந்த கயிறால் கட்டி போட்ருவோம்"

"சரி ஏதாவது செய்"

அந்த சிறிய நாய்குட்டி அவளோடு ஒன்றிப்போனது...தனிமையில் அதோடு பேசினாள்..விளையாடினாள் ..குளிப்பட்டினாள்..அதை அலங்காரித்தாள்...நாய்க்குட்டியும் மீனு பள்ளி விட்டு வருவதை பார்த்தால் அவளை நோக்கி ஓடிபோகும்...எடுத்து நெற்றியில் முத்தம் கொடுப்பாள்..கிழே இறக்கிவிடாமல்..வீடு வரை கொண்டு வருவாள்...அந்த நாய் வந்த பிறகு தனது அப்பாவுடன் பேசுவது குறைந்தது...அவளுக்கு அன்பு செலுத்த ஒரு ஜீவன்........பதிலுக்கு அது காட்டும் அன்பை அவளால் உணரமுடிந்தது...பள்ளி செல்லாத நேரத்தில் அதை ஒரு நிமிடம்கூட பிரிந்தது இல்லை... 


மீனு அந்த நாய் மீது உனக்கு அவ்வளவு பாசமா? அப்பா கேட்டார்

"ஆமாம்பா..பாவம் ....அது என்கூட இருக்கும்பொழுது எவ்வளவு சந்தோசம இருக்கிறது பாருங்க...இதே மாதிரி நம்ம மேலயும் யாரவது அன்பு காட்டினால் எவ்வளவு சந்தோசமா இருக்கும்..."அதற்குள் நாய் வெளியில் ஓட அதை விரட்டி கொண்டே பின் ஓடினாள்


மாலையில் பள்ளியில் இருந்து வந்து பார்க்கும்போது அது தூங்கிகொண்டு இருக்க அதை எழுப்ப மனமில்லாமல்..அது முழிக்கும் வரை அருகில் உடகார்ந்து இருந்தாள்...அப்போதுதான் அருகில் இருந்த தேவாலயத்தில் பிரசங்கம் போய்கொண்டு இருந்தது..அதை கேட்டு கொண்டு இருந்தாள்அன்றைய பிரசங்கத்தின் சாராம்சம்..யருக்கும் கெடுதல் செய்யாமல்,பொய்,ஏமாற்றம்.தீங்கு செய்யாமல்..கடவுளை பின்பற்றினால்..சொர்க்கம் கிடைக்கும் என்றும்...அப்படி செய்யாதவர்கள் நியாதீர்ப்பு நாளில் கடவுளின் கோபத்துக்கு ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு நரகம் கிடைக்கும் என்று இருந்தது...பிரசங்கம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்க ..அதற்கு நாய் முழித்து கொள்ள அதோடு விளையாட தொடங்கினாள்...


பிரசங்கம் முடிந்து அந்த வழியாக வந்த பாதிரியார்...மீனுவை பார்த்து

"ஏன் இன்று ஆலயம் வரவில்லை?"

"நாய்கூட விளையாடிகொண்டுயிருந்தேன்" 

"சரி நாளைக்கு வா" என்றார்

"அய்யா ...நான்,என் அப்பா, இந்த நாய் யாரும் யாருக்கும் எந்த ஒரு தீங்கும் செய்யவில்லை.
நாங்க நல்லவங்க...கடவுளிடம் சொல்லுங்கள்..எனக்கு பெருசா.சொர்க்கம் எல்லாம் ஒன்றும் வேண்டாம்... நன்றாக படிப்பதற்கு காசு வேண்டும்.எனக்கும் இந்த நாய்குட்டிக்கும் நல்ல சாப்பாடு கிடைக்கவேண்டும் இப்போதைக்கு அது போதும்....  


சொல்லுவிங்களா...?
Friday, December 24 89 comments

உன் குரல் ..!


காலையில் மலர்ந்த 
பூவாய் நீ...! 
உன்னை தேடி வரும் 
வண்ணத்துப் பூச்சியாய் நான்..

நான் உயிருடன் இருக்கிறேன்!
உன் குரல் கேட்டபின்பே 
அதை உணர்கிறேன்..!என் இதயத்தின் 
ஓசை கேட்பதே இல்லை 
நீ களவாடி சென்றதால்...! நிலவை ரசிக்க ஆயிரம் பேர் 
இருக்கட்டுமே 
உன்னை ரசிக்க 
நான் மட்டும் தான்...!  எனக்காக நீ
உனக்காக நான்
என்பது பொய்
......
......
நமக்காக மட்டுமே நாம்!காற்றிலே கலந்திருக்கும்
 உன் சுவாசத்தை 
என்னை தவிர 
வேறு யார் அறிய முடியும்..?! இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..!


Tuesday, December 21 86 comments

போடா வெங்காயம்...
இனி மேல் என்னை யாராவது "போடா வெங்காயம்" சொல்லி திட்டினா நான் சந்தோசமா கேட்டுகொள்வேன் ..எவ்வளவு விலை உயர்ந்த பொருள்..அந்த அளவுக்கு எனக்கு மதிப்பு இருக்கு என நான் நினைத்து கொள்வேன்..ஏன்னா வெங்காயம் விலை அந்த அளவுக்கு உயர்ந்துவுள்ளது


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 50 லாரிகளில் வெங்காயம் வந்திறங்கும். ஆனால் இப்போது 15 லாரிகளில்தான் வெங்காயம் வருகிறது. இதனால் வெங்காயம் விலை கிடுகிடு என உயர்ந்து விட்டது. 


வெங்காயம் விளையும் பகுதிகளில் அதிக மழை பெய்ததால் நிறைய வெங்காயம் அழுகி விட்டது. அதனால் விலை உயர்ந்துள்ளது. மார்க்கெட்டில் இருந்து 50 கிலோ மூட்டை வெங்காயம் ரூ.3 ஆயிரத்துக்கு மொத்த வியாபாரிகள் விற்கிறார்கள். (கிலோ 60 ரூபாய்) இதை சில்லறை வியாபாரிகள் வாங்கி 80 ரூபாய்க்கும் மற்ற பகுதி மளிகை கடைகாரர்கள் கிலோ ரூ.100-க்கும் வெங்காயத்தை விற்பனை செய்கிறார்கள்.

எந்த ஒரு குழம்பு வைக்க வேண்டும் என்றாலும் அதற்கு வெங்காயம் தேவைப்படும். வெங்காயம் இல்லாமல் சமையலே செய்ய முடியாது. இந்த விலை ஏற்றத்திற்கு பெட்ரோல் விலை உயர்வு தான் காரணம் என்கிறார்கள், டீசல் தானே லாரிகளுக்கு பயன் படுத்துகின்றனர்...ஏன் விலை உயர்கின்றது. எல்லாம் சில்லைறை வியாபாரி செய்கின்ற வேலை தான். இந்த விலைவுயர்வால் விவசாயிக்கு எந்த லாபமும் இல்லை..தரகர்களுக்கும், சிறு கடை நடத்தி வருபவர்கள் இந்த விலை உயர்வுக்கு காரணம்.

எங்கள் வீட்டு எதிரில் இருக்கும் கடையில் வெங்காயம் விலை கிலே 100 ரூபாய், அனால் ஐந்து தெரு தள்ளி இருக்கும் மார்கெட் சென்று வெங்காயம் விலை எவ்ளவு என்று கேட்டால் அங்கு கிலோ 60 ரூபாய் தான், இங்கு பக்கத்தில் இருக்கும் மார்கெட் விலை 60 ரூபாய் என்றால் கோயம்பேடு மார்க்கெட்டில் என்ன விலை இருக்கும். குறைந்தது 50 ரூபாய் இருக்கும். வெங்காயத்திற்கு தரம் இருக்கும் முதல் தரம், இரண்டாம் தரம், ஒவ்வொரு தரத்திற்கு ஏற்றார் போல் விலை இருக்கும்...முதல் தரம் வெங்காயம் என்ன விலையோ அதன் விலையையே அனைவரும் கூறுகிறார்கள்...அந்த விலையை செய்திகளில் கூறுகிறார்கள், அதை பார்க்கும் சிறுவியாபாரிகள் முதல் தரத்தின் விலை என்னவோ அதையே அவர்கள் வைத்து இருக்கும் வெங்காயத்திற்கு விலை மதிப்பிடு செய்கிறார்கள். இப்படி செய்வதால் தான் வெங்காயம் விலை உயர்கிறது...

சீரியல் பார்க்க வேண்டும் என்று பக்கத்து கடையில் வெங்காயம் வாங்கினால் அவன் என்ன விலைக்கு தருகிறானோ அதை தான் வாங்க வேண்டும் மார்கெட் சென்று வாங்கினால் கொஞ்சம் விலை குறைந்து கிடைக்கும் 

அடுத்த வாரம் சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் உயர்த்த போறாங்க டீசல் விலை உயர்த்த போறாங்க..மீண்டும் அனைத்து பொருட்களின் விலை விலை உயரும்....இதையெல்லாம் அரசு கட்டுபடுத்த தவறிவிட்டது, விலை உயர்ந்த பிறகு ஏற்றுமதிக்கு தடை விதித்து என்ன செய்வது இப்போது இங்கே வெங்காயமே இல்லை.... விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது... இனி பசி பஞ்சம் பட்னி....பஞ்ச புரட்சி எல்லாம் வருவதற்கு வெகுநாட்கள் இல்லை...  

Friday, December 17 82 comments

பெண் குரல்....!அருண் பெண் குரல் பாடல்கள் பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்..பெண் குரல் மட்டும் இருக்கும் பாடல்களை தேடி தேடி பார்த்தேன் எல்லாம் பூவை வைத்தே பாடல்கள் இருக்கிறது என்னடா பத்து பாடல்கள் சொல்லனுமே என்று தேடி தேடி பார்த்து உங்களுக்காகச் சொல்கிறேன்...1 இந்த பாடலை இப்போதும் டிவியில் போட்டால் சவுண்ட் அதிகம் வைத்து இந்த பாடலை கேட்ப்பேன் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இன்னும் இந்த பாடலை கேட்கும் போது இப்போது வந்த புதிய பாடல் போல இருக்கும் நீங்க கொஞ்சம் இந்த பாடலை கேட்டு பாருங்க பணம் எல்லாம் தர வேண்டாம் சும்மா தான் கேளுங்க.கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்


கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் கண்கள்


கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் நெஞ்சம்


பாடியவர்கள் : அனுபமா தேஷ்பாண்டே


2 நமக்கு எல்லாம் நிறைய ஆசை இருக்கும் சில ஆசைகள் நிறைவேறும் சில ஆசைகள் நிறைவேறாத ஆசையாக இருக்கும். ஆசைகளை வைத்தே எழுதி இருப்பார் வைரமுத்து, ஏ.ஆர் ரஹ்மானின் முதல் படம் இது, முதல் படத்திலே தேசிய விருது வாங்கினார் என்பது குறிப்பிடதக்கது

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை


3 மார்கழி மாதம் வந்ததால் இந்த பாட்டு இன்று காலை டிவியில் போட்டார்கள் நன்றாக இருக்கிறதே இதையும் பட்டியலில் சேர்த்து கொண்டேன் இதுவும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடியவர் : ஷோபா, எழுதியவர் வைரமுத்து

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்


மார்கழி மாதம் இவங்களுக்கு என்ன ஆசை உங்களுக்கு இந்த மாதிரி ஆசை இருக்கிறதா..?

4 நேருக்கு நேர் படத்திலே எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தேவா இசையில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும்

மனம் விரும்புதே உன்னை உன்னை 
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடி நெஞ்சில் உன் முகம்தானடி
அய்யய்யோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி...
5 இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அனைத்தும் எனக்கு பிடிக்கும் ஆனா அது என்ன பாடல் என்று உங்களுக்கு சொல்ல மாட்டேன். இந்த பாடல் படமாகிய விதம் நன்றாக இருக்கும்...வரிகள் எல்லாம் மிகவும் அருமையா 
இருக்கும் நான் ஜெயா மேக்ஸில் அதிகம் பார்த்த பாடல் இது. பாடியவர் :சித்ரா
பாடியவர் :சுஜாதா எழுதியவர் : வைரமுத்து. 


கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே

6  இந்த பதிவை நான் எழுதி கொண்டு இருக்கும் பொழுது பக்கத்துக்கு வீட்டில் யாரோ இந்த பாடலை பாடினார்கள் (அது யார் என்று கேட்க கூடாது ) உடனே இந்த பாடல் நன்றாக இருக்குமே என்று பாடலை பார்த்தேன்...ஒரு ஐந்து,ஆறு தடவை பார்த்தேன் கேமரா என்னமா விளையாடி இருக்கு...நீங்களும் ஒரு தடவை பாருங்க 
பாடியவர் :சுஜாதா எழுதியவர் : வைரமுத்து. 


காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..

கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை....
7 ஒரு காதலி காதலனிடம் எப்படி இருக்கவேண்டும் என காதலி கேட்பது போலே இருக்கும் தாமரையின் வரிகள் அழகா இருக்கும் ஹரிஸ் ஜெயராஜ் இசை மயில் இறகு போல இருக்கும் 

ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
8 இதில் நிறைய பூக்கள் பெயரைகளை சொல்லி இருப்பார்கள்.பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் பாடல் முழுவது பூ தான் வரும். பாடியவர் : நித்யஸ்ரீ

 என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ?
 பூவ பூவ பூவ பூவ பூவே
 பூவ பூவ பூவே
 ஒவ்வொரு நாளும் ஒரு அழகில் பூத்து நீ குலிங்கினாய்
வண்ண வண்ண இதழ்களை எல்லாம் எங்கே நீ வாங்கினாய்?9 இந்த படத்தில் எங்க அஜீத் வருவார் அந்த காரணத்திற்காகவே இந்த பாடல் பிடிக்கும் 

கண்ணாமூச்சி ஏனடா...என் கண்ணா
நான் கண்ணாடி பொருள் போலடா
அந்த நதியின் கரையை கேட்டேன் 10 குரு படத்தில் வரும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. என்னதான் இருந்தாலும் ஏ ஆர் ரஹ்மான்...போல எவராலும் இசை அமைக்க முடியாது .  பாடல் ஒளிபதிவு செய்த விதம் மிகவும் எனக்கு பிடித்தது...நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
நான் தினமும் தோற்பவள்..
அந்த ஆடை சண்டையில்
நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்..


இந்த பதிவை தொடர நான் அழைப்பது

Monday, December 13 86 comments

அரசியல் கட்சியில் சேரும் பதிவர்கள்...!
தேர்தல் வர போகிறது அரசியல்கட்சிகள் எல்லாம் மும்முரமாக தேர்தல் வேலைகள்  பார்த்து கொண்டு இருக்கிறார்கள்......நடிகர்கள் எல்லாம் அய்யாவையும்,அம்மாவையும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் நடிகர்கள் எல்லாம் கட்சியில் சேர்வதை பார்த்து நமது பதிவர்களுக்கும் ஆசை வந்து அதில் சிலர்  கட்சியில் சேர்வதற்காக  கட்சி ஆபீஸ் வாசலில் நிற்கிறார்கள். அவர்களுக்கு  நேர்முக தேர்வு ஒன்றை வைத்து ஆட்களை தேர்ந்து எடுத்தார்கள்......... அவை எப்படி என்று பார்ப்போம்.

முதலில் அம்மா கட்சி வாசலில் போய் நின்றவர் நம்ம தலைவர் பன்னிக்குட்டி ராமசாமி
தொண்டகள் : உன் பெயர் என்ன..? 

ராம் : பன்னிக்குட்டி ராமசாமி 

அருகில் உட்கார்ந்து இருந்த அம்மா என்னய்யா பேரு இது பன்னிகுட்டி, நாய் குட்டின்னு...இவரை கட்சியில் சேர்க்கலாமா  வேண்டாமா என்று பார்த்து சொல்லுங்கப்பா...

தொண்டர்கள் : இவரை கட்சியில் சேர்த்தால் நாம் இவரை அழைத்து கொண்டு பிரசாரத்திற்கு போக முடியாது..

அம்மா : ஏன் 

தொண்டர்கள்:  இவரால் பன்றி காய்ச்சல் வந்து விடும் என்று மக்கள் பயப்படுவார்கள்...அதனால் இவர் நம் கட்சிக்கு வேண்டாம்...

சோகத்துடன் அய்யா வீட்டிற்கு  கிளம்பி சென்றார்....ராம்.

அதே தொண்டர்கள் இல்லை இவர்கள் வேறு 

தொண்டர்கள் : உன் பெயர் என்ன...?

ராம் : பன்னிக்குட்டி ராமசாமி 

தொண்டர்கள் : சமீபத்தில் செய்த சாதனை என்ன..?

ராம் : வலைசரத்தில் 1000 கமெண்ட்ஸ் தாண்டியது அதனால் பதிவுலகில் என்னை தலைவனாக ஏற்றுகொண்ட ரெண்டு பொடியன்கள் இருக்கிறார்கள் (அந்த பொடியன்கள் சௌந்தர், செல்வா) 

அய்யா : உன் பெயரே சரி இல்லையே...  அய்யா பேசி கொண்டு இருக்கும் போதே அவர் காதில் ஒருத்தர் வந்து இவரை 'அந்த கட்சியில் இருந்து துரத்தி அடித்து விட்டார்கள் அதான் இங்கே வந்து இருக்கிறார்' என்றார்.

சரி உன் தனித்திறமை என்ன....?

 ராம் : எவனாவது வந்து என்னை கிண்டல் பண்ணி கருத்து சொன்னா  அவனை துரத்தி துரத்தி அடிப்பேன். 

தொண்டரும் தலைவரும் பேசி கொண்டனர், தலைவரே இவரை கட்சியில் சேர்த்து மக்களுக்கு பணம் தராமலே ஓட்டு போட வைக்கலாம்,

தலைவர் : எப்படி சொல்கிறாய் ? 

தொண்டர்கள் : ஆம் தலைவரே இவரை மக்களிடம் காண்பித்து எங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால் இவரை உங்கள் வீட்டில் தங்க வைத்து விடுவோம், பிறகு உங்களுக்கு பன்றிகாய்ச்சல் வந்துவிடும் என்று சொன்னால் போதும் நமக்கு பணம் செலவு இல்லாமல் ஓட்டு போட்டு விடுவார்கள்...
                                                            ================

அடுத்ததாக அம்மாவை பார்க்க சென்றவர் தேவா... 

தொண்டர்கள் : நீ யார் உன் பெயர் என்ன ? 

தேவா : தேவா என்கிற போராளி 
தொண்டர்கள் : எங்க அம்மாவிற்கு போராளி எல்லாம் பிடிக்காது...
சரி உன் தனி திறமை என்ன , உனக்கு எத்தனை பேர் ஆதரவாக இருக்கிறார்கள்..

தேவா : எனக்கு நிறைய பெண்கள் ஆதரவு  இருக்கிறது. அதைவிட முக்கியமாக சொந்தகாரர்கள் ஆதரவு வேற இருக்கிறது. கவிதை எழுத தெரியும்...

தொண்டர்கள் : அப்படியா உனக்கு கவிதை எழுத தெரியுமா இந்த ஒரு காரணத்திற்காகவே நீ இந்த கட்சிக்கு வேண்டாம்.  
தேவா : என்னங்க இது நியாயமா....?? நான் எழுதுவது கவிதையே இல்லை சொன்னா நம்புங்க....!!

கோபத்துடன் ஒரு கவிதை எழுதி கொண்டு அய்யாவை பார்க்க சென்றார்... 

அய்யா இந்த போராளி 
ஒரு போராளியை 
சந்திக்க வருகிறான் 
சாதிக்க வருகிறான்...!.
என்று கவிதை இருந்தது 


தேவா : வணக்கம் அய்யா 

தலைவர் : வா தம்பி வா...நதியாக வந்து இந்த நிதியை சந்திக்க வந்தவனே...

தொண்டர்கள் : சொல் உன் தனி திறமையை என்னவென்று தயங்காமல் சொல்

தேவா : எது எழுதினாலும் நான்கு தடவை படித்தால் தான் கொஞ்சம் புரியும். 

தொண்டர் தலைவரிடம், "தலைவா இவரை வைத்து தேர்தல் அறிக்கை எழுத வைத்தால், அதை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக புரியாது....அது புரிவதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிடும்"....!! அதனால் இவரை கட்சியில் சேர்த்துகொள்ளலாம்...மக்களிடம் இருந்து தப்பித்து விடலாம்...!

தலைவர் : சரி... நல்ல யோசனை.
                                                     ===================

அடுத்ததாக வந்தார் டெரர் பாண்டியன். நேராக அம்மாவின் வீட்டுக்கே சென்றார்

தொண்டர் : உன் பெயர் என்ன..?

டெரர் : டெரர் பாண்டியன்

தொண்டர் : இது வரைக்கும் நீ எத்தனை பேரை அடித்து இருக்கே...?

டெரர் : என்னது போற இடம் எல்லாம் நான் தான் அடி வாங்குறேன் என்று தான் உங்க கட்சியில் சேரவே வந்தேன்...(என் பொண்டாட்டியே என்னை போட்டு அடிப்பா)

தொண்டர் : நீ பொண்டாட்டி கிட்ட அடி வாங்கிறதா  சொன்னதால உன்னை கட்சியில் சேர்க்கிறேன்.

டெரர் : ரொம்ப நன்றிங்க. எங்க என் மாப்ஸ் ?? 

யார் தேவாவா ?  அவர் இங்கே  இல்லை. 
அவர் அந்த கட்சியில் இருக்கார்...

அப்போ நானும் அங்கேயே  போறேன்....  
                                                     =====================


அடுத்ததாக அம்மாவின் வீட்டிற்கு சென்றவர் இம்சை அரசன் பாபு 

தொண்டர்கள் : உன் பெயர் என்ன..?
பாபு : இம்சை அரசன் பாபு 

தொண்டர்கள் : எப்படி உனக்கு இந்த பெயர் வந்தது 

பாபு : நான் காக்காவை வைத்து ஆராய்ச்சி செய்தேன். எந்த காக்கா ஆண், எந்த காக்கா பெண் என்று ஆராய்ச்சி செய்து காக்காவை எல்லாம் இம்சை செய்தேன். அதனால் வந்தது இப்போ என்னை காக்கா கூட்டம் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும்...காக்காவை இம்சை செய்ததால் எனக்கு இம்சை அரசன் என்று பெயர் வந்தது.

தொண்டர்கள்: எதற்கு இந்த கட்சியில் சேர வந்தாய் 

பாபு : எனக்கு அம்மா கட்சி தான் மிகவும் பிடிக்கும். நீங்களே அடித்து விரட்டினாலும் 
இந்த கட்சியை விட்டு போக மாட்டேன்.  

தொண்டர்கள் அம்மாவிடம்....அம்மா இவரை நம் கட்சியில் வைத்து கொள்வோம். நாம் ஹெலிகாப்ட்டரில் பறக்கும் போது காக்கா வந்து மோதாமல் பார்த்து கொள்வார்...மேலும் இந்த வருடம் நீங்கள் காக்காவை பார்க்க கூடாது என்று ஜோசியர் சொல்லி இருக்கிறார். அதனால் இவர் தேவைப்படுவர்.

அம்மா: தம்பி உன்னை என் கட்சியில் சேர்த்து கொண்டேன் போ போய் காக்கா விரட்டு..    

இன்னும் பதிவர்கள் கட்சியில் சேர்வதற்கு வரிசையில் காத்து கொண்டு இருக்கின்றனர்...அவர்கள் எந்த கட்சியில் சேர்ந்தார்கள் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்....

 
;