நானும் மதுரை ஆனந்தியும் சேர்ந்து சித்ரா பிறந்தநாள் அன்னைக்கு அவங்களை கலாய்க்கலாம் என நினைத்தோம், (சித்ராவிற்கு பிறந்தநாள் கவிதை எழுதி கொடுத்த ரேவாவுக்கு இன்னும் 10 ரூபாய் பாக்கி தரனும்) அன்று பார்த்து ப்ளாக் எல்லாம் வேலை நிறுத்தம் செய்து விட்டது, அன்று அவர்களை கலாய்க்க முடியவில்லை ஆனால் இன்று மதுரைகாரிக்கு பிறந்தநாள், அவரை அன்புடன் கலாய்த்து இருக்கிறோம் மேலும் கவிதை எனப்படும் கிழ் வரும் சேமியா, நவாப்பழம் போன்ற வரிகளில் சந்தேகம் இருப்பினும் விளக்கம் கேட்பவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
அனா சொன்னா நீ ஆவனா சொல்வே
ஆனாவுனா தாத்தா பத்தி பேசி
கண்ணீர் விடுவ..!!!
நீ கற்றுக்கொடுத்தும்
பள்ளியில் முதல் மாணவன்
உன் மகன்..!!!
அடடா ஆச்சரிய குறி...
மாமியார் இல்லாததால
சேமியாவை கொடுமை செய்யும்
அழகிய தமிழ் மகள் நீ...!!
உன்னை தேவதை என நம்பி வந்து
ஒரு ஜீவனை ஏமாற்றி
நேசத்தை கொட்டும்
ராட்சசி நீ..!!!
குட்டி இதயத்துடன் வந்தவனிடம்
குட்டி குட்டி ஊடல்கள் செய்து...
குட்டி குட்டி பாசாங்கு செய்கிறாய்..
நீ பிறந்த தினத்திலாவது ...
நேசத்தை காண்பித்து
அவனை கொல்லாமல் இரு... !!
அவனுக்கும் நேசத்தின் அளவை
காண்பிக்க கிடைத்தது ஒரு நாள்
அது உன் திருநாள்...!!
அத் திருநாளே போதும்
ஒரு நாள் என்றான்..!!!
நவாப் பழம் தின்னும்
கிளியே..!!!
அத பச்சை குழந்தையிடம்
பிடிங்கி தின்னும் கிளியே..!!
குழந்தையிடம் சண்டையிடும்
குழந்தை நீ...!!!
பூக்கும் மலரெல்லாம் உனக்காக
முழு நிலவுவும் உன் வாசலில்
காத்திருக்கிறது உனக்காக..
மின்னல்கள் கண் சிமிட்டுவதும் உனக்காக ..
பாட்டாம் பூச்சி வலம்வருவதும் உனக்காக..
இப்படியெல்லாம் பொய்
சொல்கிறேன் உனக்காக..!!!
உன் பாசத்தில் வளர்ந்த எனக்கு
உன்னை வாழ்த்த கிடைத்த ஒரு நாள்
அது உன் பிறந்த நாள்...
இன்று பூத்த மலராய்..
என்றும் வாடா மலராய்
இருக்க உன்னை வாழ்த்துகிறோம்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்
ஆனந்தி கொடுத்த ஐம்பது ரூபாய்க்கு பதிவு போட்டுவிட்டேன், மொக்கையா இருந்தாலும் நல்லா இருந்தாலும் அது ஆனந்தியையே போய் சேரும்..