Friday, January 28 34 comments

மறைந்து இருக்கும் பொருளாதாரம்...!
கருப்பு பணம் என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது கள்ள நோட்டை தான் கருப்பு பணம் என்று நினைத்து கொண்டு இருந்தேன், பிறகு தான்...தனக்கு வரும் வருமானத்தில் அரசுக்கு கணக்கு காட்டாமல் வைத்து இருந்தால் அது தான் கருப்பு பணம் என தெரிந்தது இதே போல் சாமானிய மக்களுக்கு எத்தனை பேருக்கு கருப்பு பணம் என்றால் என்னவென்று தெரியும்....என தெரியவில்லை கருப்புப்பணம் என்றால் என்னவென்றே தெரியாத நமக்கு அதை பதுக்கி வைத்திருக்கும் அளவை கேட்டால் மயக்கமே வந்துவிடும் 70 லட்சம் கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்துள்ளனர். வங்கியே முன்வந்து எங்கள் வங்கிகளில் கணக்குவைத்திருப்போர் விபரங்களை அந்ததந்த நாடுகள் கேட்டால் கொடுக்கத்தயார் என அறிவித்து இருக்கிறது ஆனால் அது நம் இந்திய அரசியல் வாதியின் செவிகளில் விழவில்லை போல...செவிகளில் விழுந்தாலும் அதை கண்டுகொள்ளமாட்டார்கள்.

 அரசு இந்த பணத்தை மீண்டும் இந்தியா கொண்டு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.5 லட்சம் ரூபாய் கிடைப்பதோடு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட் போடலாம் என சொல்கிறார்கள்... இவ்வளவு பணம் நம் நாட்டை விட்டு எப்படி போகிறது...? 

இந்த பணம் எங்கு இருந்து இவர்களுக்கு வருகிறது...எல்லாம் இந்த அரசியல் வாதிகள் செய்யும் ஊழல்தான் இப்படி மலை போல் குவிந்து கிடக்கிறது, இன்னும் பல பெரும் தொழிலதிபர்கள் செய்யும் சேட்டை தான் அந்த மலைகள் குட்டி போடுகிறது சிலர் இப்படி வரிகட்டாமல் இருப்பதால் மக்களுக்கு தான் பெரும் துன்பம், அரசுக்கு வருவாய் இல்லை என்று சாமானிய மக்கள் வாங்கும் தீப்பெட்டி மீது வரி உயரும்

சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது, இந்த பணம் மீண்டும் இந்தியாவிற்கு கிடைத்தால், நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும். மேலும் இந்த பணத்தை வங்கியில் போட்டவர்களுடைய வாரிசுகளுக்கே அந்த வங்கியில் பணம் இருப்பது தெரியவில்லை, அந்த பணம் எல்லாம் முடங்கி போய் உள்ளது, இந்த பணம் மீண்டும் கிடைத்தால் அதை வைத்து நம் நாட்டின் கடனை அடைத்து விடலாம்....பல நாடுகளுக்கு இந்தியாவே கடன் தரலாம்...ஒரு குடும்பத்திற்கு 1 இலட்சம் என பிரித்து கொடுத்தால் நாட்டில் யாரும் ஏழையாகவே இருக்க மாட்டார்கள்.

சுவிஸ் வங்கிகளில் யார், யார் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்ற தகவலை மத்திய அரசிற்கு சுவிட்சர்லாந்து அரசு அளித்துள்ளது. ஆனால் அந்த விவரங்களை வெளியிடக்கூடாது என்ற உறுதிமொழியை அளித்தே விவரங்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார்.

இவர்கள் பெயர்கள் தான் முன்னிலையில் இருக்கும் அதனால் தான் கூற மறுகிறார்கள்...இவர்களுக்கு பணம் தரும் தொழில் அதிபர்கள் பெயரை வெளியிட்டால் அவர்கள், இவர்களுக்கு நிதி தரமாட்டார்கள், அந்த பட்டியலை வெளியிட்டால் இவர்களுக்கு என்ன லாபம், அதான் காரணம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுக்குழு பொது கணக்குக்குழு என கூச்சல் போடும் எதிர்கட்சிகள் இந்த விஷயத்தில் ஏன் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை ஏன் என்றால் அவர்கள் பணமும் அங்கே இருக்கிறது....சாமானிய மக்களின் வங்கியில் அவன் வைத்து இருக்கும் இருப்பு தொகை கூட இருக்காது ஆனால் இவர்களுக்கு இவ்வளவு பணம் அதை முடக்கி வேறு வைத்து உள்ளார்கள். பணத்தை வெளி நாடுகளுக்கு கொண்டு செல்வதையும் வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், அதற்கு என்று தனி சட்டம் போட வேண்டும். அதற்கும் மேல் நாம் திருந்த வேண்டும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சரியாக செலுத்த வேண்டும் அரசியல்வாதி ஊழல் செய்கிறான் என்பது எல்லாம் இரண்டாம் பிரச்சனை நம் கடமையை ஒழுங்காக செய்வோம் எத்தனை நாட்களுக்கு தான் இவர்களால் மறைத்து வைக்க முடியும்,என்றாவது ஒரு நாள் மறைந்து இருக்கும் பொருளாதாரம் வெளிவுலகிற்கு வந்தே தீரும்.
Saturday, January 22 60 comments

உன் கரம் பற்றி...
உன் கரம் பற்றி இருந்த என்னிடம்..
என் எதிர்காலம் சொல் என்றாய்....
எப்படி சொல்வேன் உன்
எதிர் காலமே நான்தான் என்று..!அடி முட்டாள் பெண்ணே..
உன் கைகள் சிவக்க
மருதாணி தேவையில்லையடி..!
நீ வெட்கப்பட்டு கைகளால்
முகம் மூடினால் போதும்...!நானோ ஒற்றை வழி பாதையில்.
நானும் வருகிறேன் என கைகோர்கிறாய் நீ..
தயக்கத்தோடு கை கோர்க்க....
இறுக பற்றி கொண்டு...
செல்கிறாய் நீ...உன் முகம் பார்த்து சிலையானேன்...
உன் விழியில் என்னை பார்க்க...
உயிர் பெற்றேன் மீண்டும்...!
கவர்ந்தேனா என்ற வார்த்தையை
நீ கேட்க.. வார்த்தைகள் எல்லாம்
இழந்து போக மெளனத்தில்
பரவ விடுகிறேன் என் காதலை!எப்போதும் உன் நினைவுகள்
ஏதேதோ உணர்வுகளில்
வெள்ளை காகிதத்தில்
என் பேனா வார்த்தைகளை விடுத்து
காதலை அல்லவா உமிழ்கிறது...!

Wednesday, January 19 46 comments

சிறுத்தை பயம் அறியாதவன் ...

ரவிதேஜா, அனுஷ்கா, நடித்த தெலுங்கில் வெளி வந்த விக்ரமார்குடு படத்தின் தமிழ் ரீமேக்தான் சிறுத்தை. நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த படத்தை தெலுங்கில் பார்த்து இருக்கிறேன்...அந்த படத்தை விட எனக்கு சிறுத்தை படமே ரொம்ப பிடித்து இருக்கு....

நாம ரொம்ப அறிவாளி நிறைய கேள்வி கேட்போம் என்று டைரக்டர்க்கு..தெரிந்து இருக்கும் போல! ஏன் ஆந்திராவில் தமிழ் பேசுகிறார்கள் என்பதற்கு அதைப் பற்றி டைட்டில் கார்டிலேயே போட்டு விடுறாங்க. ரத்தினவேல் பாண்டியன் உயிரோடு இருக்கிறான் என்று ஒருவன் தேவி பட்டினத்திற்கு போன் செய்து சொல்கிறான், அவனை ஒருவர் கொலை செய்து விடுகிறார், இப்படி சஸ்பென்ஸாக ஆரம்பிக்கிறது....


ஆந்திராவின் தேவி பட்டினத்தில் ஒரு ரவுடிக் குடும்பம் கொடுமைப்படுத்தி கொண்டிருக்கிறது. யாராவது வந்து நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்று மக்கள் ஏங்குகிறார்கள். முறுகிய மீசையோடு தேவிபட்டினத்திற்கு வந்து இறங்குகிறார் ரத்னவேல் பாண்டியன் (டிஎஸ்பி கார்த்தி). ரவுடிக் குடும்பத்தை ஒடுக்கி மக்கள் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வருகிறார். ஆனால் வில்லனுடைய தாக்குதலில் படுகாயம் அடைகிறார் டிஎஸ்பி கார்த்திக்...கார்த்திக் இறந்து விட்டதாக நினைத்து கொண்டு வில்லன் கும்பல் சென்று விட..அவரை சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வருகிறார்கள்..... 


இன்னொரு கார்த்திக்   திருடன். அவரும் சந்தானமும் திருடர்கள். சேட்டுவீட்டில் திருட செல்கிறார்கள் சந்தானமும் கார்த்திக்கும்...அங்கு கார்த்திக்கிற்கு தமன்னா மீது காதல் வருகின்றது...சந்தானம் அனைத்தையும் திருடி கொண்டு ஓடுகிறார்...சந்தனத்தை பிடித்து கொடுத்து...தமனாவிடம் நல்ல பெயர் வாங்குகிறார்....கார்த்திக் எதை சொன்னாலும் அதை நம்பி விடுகிறார் தமனா... பெரிய பொருளா திருடி விட்டு இனி திருட கூடாது என்று முடிவுக்கு வந்து கடைசியாக ஒரு பெட்டியை திருடுகிறார். அதில் ஒரு குழந்தை இருக்கிறது, அந்த குழந்தை கார்த்திக்கை அப்பா என்று சொல்கிறது...அது யார் குழந்தை என்று கண்டு பிடிக்கிறார் திருடன் கார்த்திக். அப்புறம் போலீஸ் கார்த்திக் என்ன ஆனார், அவர் மீண்டும் சென்று வில்லனை அழித்தாரா என்பதே மீதி கதை.


கார்த்திக் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்...இரட்டை வேடத்தில் நன்றாகவே நடித்து இருக்கிறார்...முதல் முறை இப்படி இரட்டை வேடங்களில் கலக்கி இருப்பது பாராட்டுக்குரியது....பருத்திவீரனுக்கு பிறகு வந்த படங்களில் அந்த சாயல் கொஞ்சம் இருந்தது, சிறுத்தையில் தான் அந்த சாயல் துளியும் இல்லை. போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்...திருடனாக வந்து சென்னை தமிழ் பேசுகிறார்...(திருடன் கார்த்திக் ராக்கெட் ராஜா)

படம் ஆரம்பம் முதல் சிறுத்தை வேகத்தில் பறந்து கொண்டு செல்கிறது... கார்த்திக்கும் சந்தானமும் சேர்ந்து காமெடியில் கலக்கி இருக்கிறார்கள், சந்தானம் பேசும் போது விழுந்து,விழுந்து சிரிக்கலாம். கார்த்திக்கிற்கு இணையாக சந்தானம் நடித்து இருக்கிறார்....


இரு விதமான பாடி லாங்குவேஜ் நன்றாக செய்து இருக்கிறார் கார்த்திக். போலீஸ் வேடத்தில் வரும் பொழுது அவர் மீது மரியாதையே வருகிறது...ஒரு காட்சியில் சீனியர் ஆபிசர் இவரிடம் ட்யூட்டியில் இருக்கும் போது பயம் இருக்கணும் பக்தி இருக்கணும் உனக்கு பயப்பட்டு பழக்கம் இல்ல போல" என்பார் 

 கார்த்திக் சொல்வார். "எனக்கும் பயம் இல்லைன்னு யார் சொன்னது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிசமும் ஒவ்வொரு நொடியும் நான் பயந்து கொண்டு தான் இருக்கேன்  ஏழு வருசத்திற்கு முன்னாடி ட்யூட்டில சேர்வதற்கு முன்னாடி கடமைக்காக தான் என் உயிரையும் தருவேன் சத்தியம் செய்தேன், ஏதோ ஒரு நாள் என் சாவு வந்தே தீரும் அந்த நாள் சாவை நேருக்கு நேரா பார்க்குற அந்த நிமிஷம் நாட்டுக்காக செய்து கொடுத்த சத்தியம் காப்பற்ற முடியாம போயிடுமோ பயந்து கொண்டு தான் இருக்கேன்" சொல்வார்....

படம் முழுவதும் கார்த்திக்கின் ஆதிக்கமே இருக்கிறது....திருடன் கார்த்திக், போலீஸாக வரும் கார்த்திக் நடிப்பு பிரமாதம் மீசையை முறிக்கி கொண்டு பேசும் வசனங்கள் "தீ" பறக்கிறது....பாடல்கள் அனைத்து அருமையாக இருக்கிறது....ஆராரோ ஆரிராரோ பாடல் அந்த குழந்தைக்கு தாயாகவே வருகிறது...அந்த பாடல் வரிகள் மிகவும் அற்புதம்...

மூச்சி பட்டா நோகும்ன்னு மூச்சி அடக்கி முத்தமிட்டேன் 
நிழலுபட்டால் நோகும்ன்னு நிலவு அடங்க முத்தமிட்டேன் 

ஒரு ஐந்து நிமிடம் கூட தொய்வு இல்லாமல் படம் செல்கிறது.....இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து கார்த்தி அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்கிறார்... தமனா கார்த்திக் ஜோடி இந்த படத்திலும் நன்றாக இருக்கிறது, எல்லா படத்தை போலவே ஹீரோயின்க்கு அதிக வேலை இல்லை கார்த்திக்கை தன் இடுப்பை கிள்ள சொல்கிறார். பாடல் காட்சிக்கு வருகிறார்..போலீஸ் கார்த்திக் பாதியில் விட்ட வேலையை திருடன் கார்த்திக் முடித்து வைக்கிறார்... சந்தானம் கார்த்திக் நகைச்சுவையில் வயிறுகுலுங்க சிரிக்கலாம் ....பொங்ககுக்கு  வெளிவந்த படங்களில் சிறுத்தை முன்னணியில் சென்று கொண்டு இருக்கிறது....
சிறுத்தை பயம் அறியாதவன் Monday, January 17 27 comments

இவள் போலே யாரும் இல்லை ll
ஆயிரம் கனவுகளுடன் இருந்தாள்.. திருமணத்திற்கு பிறகு வேலைக்கெல்லாம் போகாமல் குழந்தை பெற்று கொண்டு அதை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்தாள்....கனவு வெறும் கனவாகவே போக போகிறது என்று தெரியாமல் ...இதுவரை... 


ஜெயந்தியின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஓடியது ....கணவனும் மாமியாரும் அவள் மேல் அன்பாகவே இருந்தனர். ஆனால் அவளுக்கு இன்னும் குழந்தை உண்டாகவில்லையே என்ற வருத்தம் இருந்தது. சமீபத்தில் அம்மா, அப்பா ஃபோன் செய்தபோது கூட ஏதாவது விசேஷம் உண்டா என கேட்டார்கள்.

ஜெயந்தியின் மாமியார் வெளியே சென்று விட்டு கோபமாக வீட்டுக்கு வந்தார்..

"என்ன அத்தை என்ன ஆச்சு?" இல்லை ஜெயந்தி நான் கடைக்கு போயிட்டு வரும் பொழுது என்னை ஒருத்தி பார்த்து கேக்குறா... என்ன இன்னும் உன் மருமக உண்டாகலையா...?உன் பையனுக்கு பிறகு தான் என் பையனுக்கு கல்யாணம் ஆனது.. ஆனால் இப்பொழுது என் மருமக மாசமா இருக்கிறா என்று என்னை கேட்குறா...அதான் கோவம் வந்துடுச்சிம்மா...இதை கேட்ட உடன் மெளனமானாள். "ஜெயந்தி உனக்கு கல்யாணம் ஆகி ஐந்து மாதம் தானே ஆகுது அதுக்குள்ள ஏன் இவங்க எல்லாம் இப்படி பேசுறாங்கன்னு தெரியலை" ...இதுக்கு தான் கடைக்கு போனால் யாரிடமும்
பேச கூடாது.... சரி ஜெயந்தி நீ போய் சமையல் செய்.

தன் மாமியார் தன்னை எதுவும் குறை சொல்லவில்லை என்றாலும் தனக்கு குறை இருக்குமோ என்று நினைத்து கொண்டாள்...


நாட்கள் ஓடின ஒரு வருடம் ஆனது இன்னும் குழந்தை பிறக்கவில்லையா என்று கேட்பவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் ஜெயந்தி...தன் கணவர் வேலையை விட்டு வந்தவுடன் தன் ஏக்கத்தை கூறி அழுதாள் "ஏதாவது செய்ய வேண்டும் எனக்கு நல்ல மாமியார் கிடைத்து இருக்காங்க அவங்க ஆசையை நான் நிறைவேற்றவேண்டும் ஏதாவது நல்ல மருத்துமனைக்கு சென்று நாம் சோதனை செய்து கொள்ளுவோம் நீங்க என்ன சொல்றிங்க"...சிறிது தயக்கத்திற்கு பிறகே சரி என்றான்.


மறுநாள் ஒரு மருத்துவரை சந்தித்து இருவரும் சோதனை செய்து கொண்டனர். இரண்டுநாள் கழித்தே சோதனை முடிவு தருவோம் என்று கூறிவிட்டார்கள். ஜெயந்தி நாம் இரண்டு நாள் கழித்து வாங்கி கொள்வோம் என ஜெயந்தியும் விக்னேஷும் பேசிக்கொண்டு வந்தார்கள்...


இரண்டு நாட்கள் கழித்து ...

வேலைக்கு சென்றிருந்த விக்னேஷிற்கு போன் செய்தாள். "ஏங்க இன்று அங்கே போய் ரிசல்ட் வாங்கவேண்டுமே நீங்க வரவில்லையே....?". இல்லை ஜெயந்தி எனக்கு வேலை அதிகம் இருக்கிறது நீ போய் வாங்கிட்டு வா..

சரிங்க...நான் போயிட்டு வந்து சொல்றேன் 


சந்தோசமாக தன் அத்தையிடம் சொல்லி விட்டு கிளம்பிச் சென்றாள். மருத்துமனைக்கு உள்ளே நுழையும் இடத்தில் ஒரு சிறிய கோவில் இருந்தது அங்கே சாமி கும்பிட்டு விட்டு உள்ளே சென்றாள்...ரிசல்ட் கவரை ஜெயந்தியிடம் கொடுத்தார்கள் என்ன இருக்கிறது கொஞ்சம் படித்து சொல்லுங்க என்றாள். அவர்கள் படித்து விட்டு இந்த பெண்ணிற்கு இனி குழந்தை பிறக்காது அவர் கர்ப்பபையில் கட்டி இருக்கிறது அதை ஆபரேசன் செய்து எடுக்க வேண்டும்...என்கிறார்கள். ஜெயந்தி தலையில் இடி விழுந்ததை போல இருந்தது இந்த செய்தி...ஒரு நடை பிணமாய் நடந்து வந்துகொண்டு இருந்தாள்...மருத்துவமனை வாசலில் இருந்து சாமி இவளைப்பார்த்து சிரிப்பது போல இருந்தது....வீட்டிற்கு செல்ல சாலையை கடக்க முயற்சி செய்தாள் ...அப்போது தன்னிலை மறந்து சென்ற அவளை ஒரு லாரி தூக்கி எரிந்தது..அவள் உயிர் பிரிந்தது....அவளின் தொலைபேசி அடித்து கொண்டு இருந்தது அழைப்பவர் விக்னேஷ் என்ன ஆனது என்று கேட்பதற்காக காத்து கொண்டு இருந்தான்...யாரோ ஒருவர் அந்த போனை எடுத்து இங்க வந்தவருக்கு விபத்து நடந்து விட்டது என்கிறார் பதறி அடித்து ஓடி வருகிறான், விக்னேஷ்ற்கு அவளை அந்த நிலைமையில் பார்த்தவுடன் என்ன செய்வது என்றே தெரியவில்லை..அவளை கையில் இருந்த ரிசல்ட் கவரை பிரித்து படித்து பார்த்தான்..படித்ததும் தலையில் அடித்து கொண்டு அலறினான்...அதில் ஜெயந்தி என்ற பெயருக்கு பதில் ஜெயம் என்றிருந்தது. ரிசல்ட் மாறிவிட்டதை உணர்ந்து மேலும் கதறி அழுதான். ஒரு வேனில் அவளை எடுத்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் ..பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது ஜெயந்தி ஒரு மாத கரு அவள் வயிற்றில் வளர்ந்து இருப்பதாக கூறினார்கள்....குழந்தை வேண்டும் குழந்தை வேண்டும் என்றாய் இப்போது உன் வயிறில் குழந்தை உருவாகிவிட்டது இப்போது நீ இல்லையே .....என கதறினான் ....


Sunday, January 16 36 comments

விருதும் நன்றியும்...
தமிழ்மணம் விருது பற்றி முதலில் எனக்கு தெரியாமல் இருந்தது. நம் பதிவையெல்லாம் தமிழ் மணத்திற்கு அனுப்ப வேண்டும் என்றார்கள் ஆனால் எப்படி அனுப்ப வேண்டும் என்று தெரியவில்லை, பின்பு அவர்களே மின்னஞ்சல் அனுப்பினார்கள், அதில் மூன்று இடுகைகளை அனுப்பும் மாறு கேட்டு இருந்தார்கள், நான் எழுதியதில் எது நல்ல பதிவு எது என்று தேர்ந்தெடுத்தேன்உழவனின் எதிர் காலம் கேள்விக்குறியா?மண்டை ஓடு தான் மிச்சம்இதுதானா புனிதம்?, என்ற மூன்று பதிவுகளை அனுப்பி இருந்தேன்.இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்லை, சும்மாதான் அனுப்பிவைத்தேன். முதல் சுற்றில் தேர்வாகி இருந்தது. சரி முதல் சுற்று தானே, ரெண்டாவது வருகிறதா என்று பார்ப்போம் என்று இருந்தேன், இரண்டாம் சுற்றில் தேர்வாகி இருப்பதாக பிரியமுடன் ரமேஷ் சொன்னார். விருது வரவில்லை என்றாலும் பரவாயில்லை இறுதி சுற்று வரை தேர்வாகி விட்டோம், இது போதும் என்றிருந்தேன். ஏனென்றால் போட்டியில் இருந்தவர்கள் எல்லாம் பெரிய பதிவர்கள், நன்றாக எழுத கூடியவர்கள். அதனால் எனக்கு ஆரம்பம் முதல் சிறிது நம்பிக்கையின்மை இருந்தது. நேற்று தான் தமிழ்மணம் விருது அறிவிப்பு நாள் என்று எனக்கு தெரியாது 

 அடுத்ததாக பதிவுலகில் அண்ணா என்று அழைக்கப்படுபவர், நிச்சயம் பரிசு வாங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது என்றால், அதுதேவா அவர்கள் மீது தான். அவர் எழுதும் பதிவுகள் அனைத்து நன்றாக இருக்கும். அதிலும் அவர் எழுதும் பதிவுகள் அனைத்து நல்ல எழுத்துகள், நல்ல சிந்தனைகள், நல்ல கருத்துகள், என்று இருக்கும். இவர் எழுத்துக்களும் புதுமையாக இருக்கும், புது புது வார்த்தைகளாக இருக்கும், இவரால் நான் நிறைய வார்த்தைகள் தெரிந்து கொண்டேன். இவர் எழுதும் பதிவுகள் சும்மா விளையாட்டிற்கு புரியவில்லையென்று சொன்னாலும், அவருக்கு தெரியும் எங்களுக்கு எல்லாம் புரிகிறது என்று! தேவா எங்களுக்கு எல்லாம் நண்பராக கிடைத்தது எங்களுக்கு எல்லாம் பெருமை தான். 

 இவர் வெறும் பையன் என்றுசொல்வதை விட ஜோதி என்று சொன்னால் தான் இப்பொழுது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவருக்கு எல்லாம் தெரியும்...முன்பை விட இவர் இப்பொழுது மிகவும் நன்றாக எழுதுகிறார், கவிதையெல்லாம் எழுதுகிறார், இவர் எழுதுவதும் இப்பொழுது எல்லாம் புரியவில்லை அதனால் இவர் நல்ல பதிவர்...நாங்கள் பதிவு எழுத வந்து ஒரு வருடத்திற்குள் எங்களுக்கு இப்படி பெரிய திரட்டி முலம் விருது கிடைத்து இருப்பது எங்களுக்கு எல்லாம் பெருமை தான். இனி நான் என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை! இனி நல்ல பதிவுகளாக எழுத வேண்டும், என நினைத்து கொண்டு இருக்கேன்...கொஞ்சம் பயமாகவே இருக்கிறது.


நேற்று தான் தமிழ்மணம் விருது அறிவிப்பு நாள் என்று எனக்கு தெரியாது, நேற்று என் பதிவுக்கு.. ஒரு பின்னூட்டம் வந்தது. மண்டை ஓடு தான் மீச்ச்ம் பதிவு இரண்டாம் பரிசு பெற்று இருப்பதாக அந்த பின்னூட்டம் பார்த்தவுடன் தான் நினைவுக்கு வந்தது. அட என் பதிவுக்கும் விருது கிடைத்து இருக்கிறதா என்ற சந்தோஷப் பட்டு கொண்டேன். பிறகு நம் நண்பர்கள் யார் வெற்றி பெற்று இருகிறாக்கள் என்று பார்த்தேன். தேவா, ஜெயந்த இவர்களுக்கும் இரண்டாம் பரிசு பெற்று இருந்தார்கள்,   நண்பர்களுடன் முன்னேறுவது கூடுதல் பலமாக இருக்கிறது. 


                ==> அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவு - 7 

மண்டை ஓடு தான் மிச்சம்  - சௌந்தர்--இரண்டாம் பரிசு

               ==> சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவு 13

 எனது ஆன்மீகப் பயணம்....!  - தேவா--இரண்டாம் பரிசு
               
              ==> தமிழிசை, நடனம், தமிழ் கிராமியக் கலைகள் தொடர்பான கட்டுரைகள் என்ற பிரிவு -18


விருதுகள் என்பது பலருக்கு ஊக்கம் அளிப்பதாகவே இருக்கிறது, அதிலும் பெரிய இடத்தில் இருந்து விருது வரும் பொழுது மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. எங்களுக்கு  வாக்களித்த அனைவருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் சார்பிலும் என் நண்பர்கள் சார்பிலும் நன்றி தருவித்து கொள்கிறேன், எங்களை தேர்தெடுத்த நடுவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


தமிழ் மண விருதின் மூலம் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவே நினைக்கிறேன். அந்த அங்கீகாரம் எனக்கு மிகப்பெரிய பொறுப்பினை கொடுத்திருக்கிறது. நிறைய வாசிக்கவும் கற்றுக் கொண்டேன். என்னுடைய வாசிப்பு எனக்கு சிந்திக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறது. நிச்சயாமாய் நல்ல கருத்துள்ள கட்டுரைகளையும் கதைகளையும் தருவேன் என்ற நம்பிக்கை எனக்குத் துளிர்த்திருக்கிறது.
மீண்டும் தமிழ் மணத்திற்கும், என்னை வாசித்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.!
Thursday, January 13 38 comments

இவள் போலே யாரும் இல்லை...!

நன்றாக உறங்கி கொண்டுயிருந்தாள் ஜெயந்தி....நேரம் 8 மணி ஆகுது இன்னும் என்ன தூக்கம் என்று குரல் கொடுத்து கொண்டே வந்தார் ஜெயராம்...ஜெயந்தியின் அப்பா....

விடுங்க அவ தூங்கட்டும் இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் காலை 8 மணி வரை தூங்குறா இல்லையென்றால் பாவம் குழந்தை காலையே எழுந்து காலேஜ்க்கு போய்டுவா விடுங்க...என்றாள் ஜெயந்தியின் அம்மா...

இல்லை உமா நீ மட்டும் சமையல் வேலை எல்லாம் செய்து கொண்டு இருக்கே உனக்கு அவ வந்து உதவி செய்வா அதான் எழுப்பினேன்...

பரவாயில்லைங்க அவளே கொஞ்ச நாளைக்கு தான் நம்ம வீட்டில் இருப்பா ...பிறகு கல்யாணம் ஆனா அங்கே போய்டுவா எங்களுக்கு எல்லாம் பிறந்தவீட்டில் இருக்கும் வரை தான் சந்தோசம்....

உமாவை முறைத்துப் பார்த்தார் ஜெயராம்.... முகத்தை திருப்பி கொண்டு வேலையை தொடர்ந்தாள்...

திடீர் என்று பக்கத்து வீட்டில் இருந்து ஒரு குழந்தை அழுது கொண்டே ஜெயந்தி வீட்டிற்கு ஓடி வந்தது ஜெயந்தியின் அம்மா அழுகாதே அக்கா தூங்குறா....

"என்னம்மா சத்தம்" என்று கண்விழித்தாள் ஜெயந்தி 

"பார் உன்னால் அக்கா எழுந்து விட்டா"...

"விடுங்க அம்மா பரவாயில்லை" என அந்த குழந்தையை வாங்கி தன் அருகில் படுக்க வைத்து கொஞ்சி கொண்டு இருந்தாள்...ஜெயந்திக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் பக்கத்து வீட்டு குழந்தையுடன் விளையாடி கொண்டு இருப்பாள்.

************************

மறுநாள் அம்மா நான் காலேஜுக்கு போயிட்டு வரேன் அம்மா இன்று கல்லூரியில் நிறைய போட்டிகள் இருக்கிறது அதனால் நான் வருவதற்கு லேட் ஆகும் என சொல்லி விட்டு கல்லூரிக்கு சென்றாள்..கல்லூரியில் தோழிகள் காத்திருந்தனர்... வா ஜெயந்தி "ஏன் இவ்வளவு நேரம்" போட்டி ஆரம்பித்து விட்டார்கள்...."ஏய் ஜெயந்தி எப்போதும் நீ தானே முதலில் வருவாய்" இந்த முறை பார் நான் உன்னை விட அதிக பரிசு வாங்குகிறேன் என்றாள் ஒரு தோழி.

பேச்சு போட்டி ஓட்டபந்தயம், போட்டிகளில் இரண்டு பரிசு மட்டுமே வாங்கினாள்...ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததால் சில தோழிகள் கிண்டல் செய்ய அதை தாங்காமல் ஜெயந்தி கையை வெட்டி கொள்ள முயன்றாள் ஒரு தோழி வந்து என்ன பண்றே ஜெயந்தி இதுக்கு போய் கையை அறுத்து கொள்வார்களா...இந்த போட்டியில் வெற்றி பெற வில்லை என்றால் அடுத்த போட்டியில் நீ வெற்றி பெறுவாய் இப்படி நீ இருக்காதே...ஏமாற்றத்தை தாங்க கூடிய சக்தி உனக்கு இருக்கணும் இது போல இனி நீ செய்ய கூடாது சரியா என தோழிகள் கூறினார்கள்

**********************
சில நாட்களுக்கு பிறகு 

ஜெயந்தியின் அப்பா மதிய சாப்பாட்டிற்கு வேலையை முடித்து விட்டு வந்தார்... 
வாங்க சாப்பாடு எடுத்து வைக்கவா

எடுத்துவை உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும் 

சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு என்ன விஷயம் சொல்லுங்க...என்றாள்

நம்ம ஜெயந்திக்கு ஒரு நல்ல இடத்தில் வரன் வந்து இருக்கு, நல்ல இடம் பையன் நல்லா படித்து இருக்கார் வசதியான குடும்பம். நீ என்ன சொல்றே பேசி முடிக்கலாமா..?

அது சரிங்க...ஆனா ஜெயந்தி படிச்சிட்டு இருக்காளே 

அதான் இந்த வருடம் படிப்பு முடிய போகுதே கல்யாணம் செய்து முடிப்பதற்கும் படிப்பு முடிவடைவதற்கும் எல்லாம் சரியா இருக்கும் ....

சரிங்க ஜெயந்தி வந்தா நீங்களே சொல்லுங்க 

மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தாள்....சிறிது நேரத்திற்கு பிறகு தயங்கி கொண்டே ஜெயந்தியின் அப்பா பேசுவதற்கு தயங்கினார் என்ன அப்பா சொல்லுங்க 

உனக்கு ஒரு வரன் வந்து இருக்கு..நீ சம்மதம் சொன்னா மேற்கொண்டு பேசுவேன் அதான் கேக்குறேன் நீ என்னமா சொல்றே..?


சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் ஜெயந்தி....என்னப்பா சொல்றிங்க நான் இப்போது படித்து கொண்டு இருக்கிறேன்...நான் மேற்கொண்டு படிக்கவேண்டியது இருக்கு இப்போது எதற்கு அப்பா அவசரம்..?

இல்லமா நல்ல இடம் அதுமட்டும் இல்லாமல் அவங்க கல்யாணத்திற்கு பிறகு உன்னை படிக்க வைக்கிறேன் அப்படின்னு சொல்றாங்க...மாப்பிள்ளை வீட்டில் பேசி உன்னை மேல் படிப்பு கூட படிக்க வைக்க சொல்றேன்...சரின்னு சொல்லும்மா...

சரிங்கப்பா உங்களுக்கு எது விருப்பமோ அதையே செய்யுங்க என்று அரை மனதுடன் கூறினாள்...

அரைமனதுடன் திருமணம் சம்மதம் என்றாலும் மாப்பிள்ளையை பார்த்தவுடன் ஜெயந்திக்கு பிடித்து விட்டது...

ஆயிரம் கனவுகளுடன் இருந்தாள்.. திருமணத்திற்கு பிறகு வேலைக்கெல்லாம் போகாமல் குழந்தை பெற்று கொண்டு அதை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்தாள்....கனவு வெறும் கனவாகவே போக போகிறது என்று தெரியாமல் ...முடிவு அடுத்த பதிவில்.... 
Monday, January 10 59 comments

திரும்பி பார்க்கிறேன்...2010  நடந்த முக்கியமான விஷயத்தை பற்றி  திரும்பி பார்க்கிறேன் என்ற தலைப்பில் ஒரு தொடர் பதிவாக எழுத சொல்லி கௌசல்யா அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார். திரும்பி பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள் நானும் திரும்பி பார்த்தேன் ....அவங்க இல்லை! 

2010 பெரிய விஷயம் ஏதும் நடக்கவில்லை...இணையம் பற்றி தெரியும் ஆனால் வெப்சைட்கள் தான் இருக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தேன். ஒரு நாள் தமிழில் எதையோ தேடி கொண்டு இருக்கும் பொழுது தமிழிஷ் என் கண்ணில் பட்டது அதில் இருந்து சில சில ப்ளாக்குகளை பார்த்தேன். நான் எந்த ப்ளாக் சென்றாலும் ஒரு வலைப்பூவை உருவாக்கவும் என்று சொல்லியது, என்ன இது என்று தெரியாமல் வலைப்பக்கம் தொடங்கினேன். ஆனால் எப்படி தமிழிஷில் இணைக்க வேண்டும் என்று தெரியவில்லை. பிறகு நானே தெரிந்து கொண்டேன்.


நான் எழுத ஆரம்பித்து 30 பதிவுகளுக்கு அதிகம் பின்னூட்டம் கிடைக்கவில்லை எனக்கு சில பதிவுகளை மட்டும் மிகவும் பிடிக்கும் அதில் போலி சாமியார்கள் என்ற பதிவில் சில சாமியார்களை பற்றி சொல்லி இருந்தேன். அடுத்ததாக விவாசாயிகள் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். இப்பொழுது அந்த பதிவு தமிழ்மணத்திற்கு இறுதி சுற்றுக்கு சென்று இருக்கிறது... பொறுமை கடலினும் பெரிது ஒரு பதிவு போட்டு இருந்தேன் அந்த புகைப்படங்களை பார்க்கவே முடியவில்லை என்று நண்பர்கள் சொன்னார்கள். பிறகு கதைகள் எழுத ஆரம்பித்தேன் சில உண்மை கதைகளையும் எழுதி இருக்கிறேன் அதில்  மண்டை ஓடு தான் மிச்சம்என்ற பதிவு தமிழ்மணம் இறுதி சுற்றுக்கு சென்று இருக்கிறது. 

சில சர்ச்சைக்குரிய பதிவுகளையும் நான் எழுதி இருக்கிறேன் கடவுளும் நானும். என்ற ஒரு பதிவை எழுதினேன் அதில் சில கேள்விகள் கேட்டேன் அதில் விவாதம் எல்லாம் வந்தது. அந்த பதிவுக்கு எதிர்பதிவு போட்டாங்க இந்த தொடர அழைத்தவங்க. அடுத்த பதிவு  பெண்களின் புதிய கலாச்சாரம்என்ற பதிவு சில பெண்கள் குடிக்கிறார்கள் புகை பிடிக்குறாங்க என்று போட்டேன் அவ்வளவு தான் சில ஹீரோக்கள் வந்து ஏன் இப்படி புகைப்படம் எல்லாம் போட்டு இருக்கிறாய் என்று கேட்டார்கள் அந்த புகைப்படத்தை எல்லாம் எடுக்க சொன்னார்கள் என்னால் எடுக்க முடியாது என்று கூறிவிட்டேன் ...

நண்பர்கள் 


தினம் ஒரு பதிவு போட்டு கொண்டு இருந்தேன் .முதன் முதலில் எனக்கு நண்பர் ஆனவர் கே.ஆர்.பி செந்தில் தான். நான் முதலில் பார்த்தும் அவரை தான் .ஏன் தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைக்க வில்லை என்று கேட்டார்..எனக்கு எப்படி வைக்கவேண்டும் என தெரியாது என்றேன் உடனே வாயிஸ் சாட்ல வந்து எப்படி வைக்க வேண்டும் என்று சொன்னார். பிறகு எங்கு இருக்கின்றீர்கள் என்ன செய்யறீங்க...அப்படியே பேசினோம். நான் நாளை அடையாறு வருகிறேன் என்று சொன்னேன் எங்க வருகிறிர்கள் சொல்லுங்க நான் உங்களை பார்கிறேன் என்றார். மறுநாள் இருவரும் சந்தித்தோம், 30 நிமிடம் பேசிகொண்டோம் பதிவுலகை பற்றி எனக்கு சொன்னார். மீண்டும் சந்திப்போம் என்று சொன்னார் இன்னும் அந்த சந்தர்ப்பம் அமையவில்லை.இப்போதும் பேசினார் நான் வீட்டுக்கு அழைப்பேன் வருகிறேன் என்று சொல்வார். இன்னும் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை.

அதன் பிறகு தேவா நண்பர் ஆனார் முதலில் சாட்ல பேசி கொண்டு இருந்தோம் பின்பு போன் வாயிஸ் சாட் என்று பேசிக்கொண்டு இருக்கிறோம். ஒரு குடும்ப நபர் போல இதுவரை இருந்து வருகிறோம்.

அடுத்தாக அன்புடன் ஆனந்தி, இவங்க கூட தான் முகப்பு புத்தகத்தின் எங்க பார்த்தாலும் கும்மி அடிப்பேன், ரொம்ப அன்பானவங்க...

அடுத்தாக கௌசல்யா இவங்க பதிவை பார்த்தால் இவர் ரொம்ப சீரியஸ் ஆன ஆள் என்று தெரியும் ஆனால் மிகவும் நல்லவர் உண்மைய தான் சொல்றேன் நம்புங்க இப்போது குடும்ப நண்பராக ஆகிவிட்டார்..எங்க அம்மாவிடம் என்னை மாட்டி விடுபவரும் இவர் தான் அதான் சொன்னேன் இவங்க ரொம்ப நல்லவங்கன்னு. எங்க அம்மாவிடம் பேசும் ஒரே பதிவர் இவர் தான். 


இன்னும் பல நண்பர்கள் இருக்கிறார்கள் இம்சை அரசன் பாபு..இப்போது எல்லாம் இவரிடம் தான் அதிகம் பேசுகிறேன் ரொம்ப நல்லவர்...இவர் போடும் பின்னூட்டம் மட்டும் தான் அப்படி இருக்கும் மிகவும் அன்பானவர்...அப்பறம் டெரர் ,LK,ரமேஷ், விஜய் பிரசாத்,வெறும் பையன், அருண் பிரசாத், பாலாஜி,ராம்சாமி, பிரியமுடன் ரமேஷ், ஜீவன்,கணேஷ் மங்குனி அமைசர்,கார்த்திக் குமார், ஆனந்தி, சித்ரா,இந்திரா, வினோ,சி.பி.செந்தில்குமார், ஆர்.கே.சதீஷ்குமார், இவர்கள் எல்லாம் நல்ல நண்பர்கள்...


அடுத்ததாக என் வயது உடைய நண்பர்கள் மரியாதையை எல்லாம் கொடுத்துகொள்ளமாட்டோம். எஸ்கே செல்வா, கல்பனா, சுபத்ரா, இதில் செல்வா அனுப்பும் மொக்கை sms நான் தினம் படித்து தொலைக்கிறேன்..வரும் மெசேஜ் எல்லாம் டெலிட் பண்ணாலும் கண்ணுக்கு தெரியுது..இவங்க நான்கு பேரிடமும் அடிக்கடி போன்லே பேசுவேன்... ரொம்ப நல்ல best friends...

ரொம்ப நேரம் நண்பர்களை பற்றி சொல்லிவிட்டேன் இன்னும் நண்பர்கள் இருக்கிறார்கள் பதிவு அளவு அதிகமானதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் பதிவுலகில் இருக்கும் ஒவ்வொருவரும் என் நண்பர்கள் தான் 


 2011 இல் என்ன எதிர்பார்ப்பு 

நான் எப்போதும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை ஏனென்றால் என் பல எதிர்பார்ப்புகள் தோல்வியை தழுவி இருக்கிறது. அதனால் எனக்கு எதிர்பார்ப்பு என்பது பெரிதாக இல்லை. பதிவுலக எதிர்பார்ப்பு என்றால் தொடர்ந்து பதிவு எழுத வேண்டும் என்பது தான். எல்லோரும் பதிவு எழுத வந்த புதியதில் தினம் ஒரு பதிவு போடுவார்கள். அப்படியே சிறிது மாதம் தொடரும் பிறகு அந்த பதிவர் காணமல் போய் விடுவார் தொடர்ந்து மூன்று வருடங்கள் பதிவு எழுதுபவரை விரல் விட்டு எண்ணி விடலாம்...பதிவு எழுதுவதை தொடர வேண்டும் அவ்வளவு தான். 

திரும்பிப் பார்கிறேன் இந்த பதிவில் நண்பர்களை அதிகம் சொன்னதற்கு காரணம் ஏன் என்றால் திரும்பி பார்த்தால் நண்பர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்..எந்த தடங்கலும் இல்லாமல் நட்பு மேலும் வளரணும்...என்பதே பெரிய எதிர்பார்ப்பு. 

இந்த பதிவை தொடர அழைப்பதுFriday, January 7 114 comments

விஜய் அழைக்கிறார்....Thursday, January 6 70 comments

மாறுவார்களா இவர்கள்...?
இந்த சீரியல் ரொம்ப பாடாய் படுத்துகிறது... காலை 10.30 தொடங்கி இரவு 10.30 வரைக்கும் இந்த சீரியல் பெயர்கள், பாருங்கள் காலை 10.30.மகள் ,11.00 மெட்டிஒலி, 11.30 கஸ்தூரி, 12.00 உறவுகள் 12.30 அனுபல்லவி,1.00 வசந்தம்,1.30 இளவரசி, 2.00 அத்திப்பூக்கள் ,2.30 ஒரு மொக்க படம் போடுவார்கள் அதை யாரும் பார்க்க  கூடாது என்பதற்காக ,மொக்க படம் போடுகிறார்கள்,  நல்ல படம் பார்த்தால்  மக்கள் தூங்க மாட்டார்கள் அதனால் தான் மொக்க படம் போட்டு தூங்க வைத்தால்  தான் மாலை 5.30 மணிக்கு சீரியல் பார்க்க முடியும் அதனால் தான் இப்படி மொக்க படம் போடுகிறாக்கள்.

ஒரு வழியா  படம் முடிஞ்சி உடனே சீரியல், 5.30. பொண்டாட்டி தேவை 6.00 முந்தானை முடிச்சி, 6.30 மாதவி,  7.30 நாதஸ்வரம் 8.00 திருமதி செல்வம்,  8 .30 தங்கம், 9.00 தென்றல், 9.30 செல்லமே,  10.00௦ இதயம். அப்பாடா இதை சொல்வதற்க்குள் தலை சுற்றுகிறது...


இப்படி மக்கள் ஏன் சீரியல்  பைத்தியமாக இருக்கிறார்கள் தெரியவில்லை, ஒரு சிலர் காலை 10.30 டிவி முன் உட்கார்ந்தால் மதியம் 2.30  மணி வரை அவர்கள் டிவியை விட்டு அப்படி இப்படி என்று நகரமாட்டார்கள். எங்கள் வீட்டிலும் சீரியல் பார்பதற்கு என்று ஆட்கள் இருக்காங்க, அவர்கள் விளம்பரம் வரும் போது சேனல் மாற்ற  கூடாது என்பார்கள். ஏன் என்றால் ஒரு நிமிடம் தவறாமல் பார்க்கவேண்டும் என்பதற்காக ...?!!

இந்த நாடகத்தில் அப்படி என்ன தான் காட்டுகிறார்கள், 30 நிமிடம் இந்த நாடகம் நடக்கும் என்பார்கள். நான் ஒரு முறை 30  நிமிடங்களில் எத்தனை நிமிடங்கள்  நாடகம் நடக்கிறது என்று பார்த்தேன், அதில் 20 நிமிடம்தான் நாடகம். இந்த நாடகத்தில் மியூசிக் போடுவார்களே, அதற்கு  நம்ம பேரரசு படமே பரவாயில்லை அப்படி இருக்கும். நாடகம் முடிந்தாலும் மியூசிக் வந்து கொண்டு இருக்கும்...

நாடகத்தில் அனைத்து கிரிமினல் வேலையும் நடக்கும்.  கல்யாணத்தை நிறுத்துவது, கருவை கலைப்பது, பிறந்த குழந்தையை கடத்துவது, மயக்கம் கொடுத்து பெண்ணை கற்பழிப்பது, அடுத்தவரின் புருஷனை அடைவேன் என்று சபதம் எடுப்பது. இரண்டு பெண் ஒரு ஆணுக்கு சண்டை போடுவது, கொலை செய்வது, பல வகை கொலைகள் இருக்கிறது, சூனியம் வைப்பது, இப்படி பல மொள்ளமாரி தனம் இங்கு தான் நடக்கிறது, 

நீங்கள் கேட்கலாம் இது எல்லாம் சினிமாவில் வரவில்லையா..? என்று அதற்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன். சினிமா  என்பது கொலையை நாம் வெளியில் போய் பார்ப்பது,நாடகம் என்பது கொலையை நம்ம வீட்டுக்குள் வந்து செய்வதுபோல்.

எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் நாடகம் பார்த்து கொண்டு இருந்தார்கள். . நாடகம் பார்க்கிற சுவாரசியத்தில்  அடுப்பில் பால் இருப்பதை மறந்து விட்டார்கள். அவ்வளவுதான் பால் பொங்கி கேஸ் அடுப்பு அணைந்து கேஸ் லிக் ஆகிகொண்டு இருந்தது. அப்போது கூட அவருக்கு தெரியவில்லை. பக்கத்து வீட்டிலிருந்து வந்து, " என்ன உங்க வீட்டில் கேஸ் வாடை  வருகிறது" ,என்று கேட்டதும் தான்  சென்று பார்த்தார்கள், பால் வைத்ததை மறந்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது, அடடான்னு சொல்லிட்டு அடுப்பை அணைத்துவிட்டு வந்து மீண்டும் தொடர்ந்து சீரியல் பார்த்தார்கள்...?!!  ஒருவேளை விபரீதம் ஏதும் நடந்து இருந்தால் அந்த வீட்டில் இருந்தவர்களின் கதி...?? நினைக்கவே பயமாக இருக்கிறது. 

அட இப்படி பெண்கள் தான் நாடகம் பார்கிறார்கள்  என்றால் இந்த ஆண்களும் பார்கிறார்கள். எங்க மாமா ஒருவர் காலையில்  எங்காவது வெளியே செல்வார். அந்த வேலை முடியாமலே அவசரம் அவசரம் ஆக வீட்டுக்கு  நாடகம் பார்க்கவேண்டும் என்று வந்து விடுவார்.   8.00 மணிக்குள் விட்டுக்கு வந்து விடுவார் . வரும் வழியில் ஏதும் பார்க்க மாட்டார், யாராவது கூட போய் இருந்தால் அவர்களை விட்டு விட்டு போய் விடுவார், சாலை தாண்டும்  போது வண்டி வருவதையும்  பார்க்க மாட்டார். அப்படி கண்டிப்பாக நாடகம் பார்க்க வேண்டுமா என்ன..? 

பெண்கள் சீரியல் பார்ப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏதும் கற்றுக்கொள்ளும் விஷயமும் இருக்காது. அனைத்து சீரியல்களிலும் இந்த ரெண்டு பொண்டாட்டி இல்லாமல் சீரியல் இருக்கவே இருக்காது. கோலங்கள் சீரியல் விட்டா ஒரு ஜென்மம் போட்டு இருப்பாங்க அதையும் நம்ம மக்கள் பார்த்து இருப்பார்கள் கோலங்கள் சீரியலில் இந்த அபிசேக் நான்கு  கல்யாணம் செய்வார்.

இந்த அத்திப்பூக்கள் சீரியலில் வாடகை தாய் மூலம் பெறப்படும் குழந்தையை....வாடகை தாய் சொந்தம் கொண்டாடுவது போல காட்டுகிறார்கள்,  இப்படி தவறான தகவல்களை தருகிறார்கள். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளலாம்  என்று இருப்பவர்கள் இதை பார்த்தால் அவர்களுக்கு தயக்கம் வரலாம். 

இந்த சீரியல்களில் ஒருஒருவர் மட்டும் தான் நல்லவர் மற்றவர்கள் எல்லாம் கெட்டவனுங்க .....திருமதி செல்வம் ஒரு சீரியல் இருக்கு அதல ஒருத்தர் நடிப்பார் பாருங்க அட அட என்னாமா நடிக்கிறார் அவர் ரொம்ப நல்லவர் வடிவேல் சொல்வாங்களே இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குறான். அதே மாதிரி  இவரை எவ்வளவு மோசம் செய்தாலும் இவர் அவங்களை கோவப்பட்டு ஒரு எழுத்து கூட எதிர்த்து பேச மாட்டார்...இவங்க எல்லாம் சீரியலில் தான் நல்லவங்க உண்மையில் பக்கா பிராடு பசங்க... எனக்கு தெரிந்து நாடக நடிகர்களே சீரியல் பார்ப்பது இல்லை .ஒரு நடிகை சொன்னார்கள் நான் சீரியல் டப்பிங்க செய்யும் போது பார்ப்பது தான் அதற்கு பிறகு பார்க்க மாட்டேன் சொன்னார் டப்பிங் செய்யும் போதே என்னால் பார்க்க முடியாது....என்று சொல்கிறார்கள் இருந்தாலும் நம் மக்கள் பார்கிறார்கள் என்றால் எவ்வளவு தைரிய சாலியாக இருப்பார்கள்..... ஒரு ஆணுக்கு  ரெண்டு பெண்கள் சண்டை போடுவது, அனைத்து சீரியல்களிலும் வரும்  என்னகொடுமை இதை நம்ம மக்கள் பார்கிறார்கள். 
இவர்களை யார் தான் திருத்துவார்களோ...


 
;