கடவுளும் நானும் என்ற தலைப்பை கொடுத்து அப்பாவி தங்க மணி அக்கா ஓரு தொடர் பதிவை எழுத அழைத்தார் நானும் அதை தொடர்கிறேன்....
நான் ஏழாம் வகுப்பு படித்த பொழுது...என் பள்ளி அருகில் ஓரு ஆஞ்சநேயர் கோவில் இருந்தது அங்கு சென்று விட்டு பள்ளிக்கு செல்வோம்...சாமியை வணங்குவதற்கு இல்லை செந்தூரம் நெற்றியில் வைப்பார்கள் ஆரஞ் நிறத்தில் மிகவும் அழகாக இருக்கும்.... அதற்கு தான்.
கார்த்திகை மாதம் வந்து முருகனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்வோம் மாலை போட்டால் ஓரு மரியாதை பள்ளியில் ஆசிரியை அடிக்க மாட்டார்....அது சின்ன வயசு கடவுள் இருக்கிறரா இல்லையா தெரியாது.... ராயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாலை போட்டு விரதம் தொடங்கும்...பச்சை நிற உடை அணிந்து இருக்க வேண்டும்..
முப்பது நாள் கழித்து இடும்பனுக்கு பூஜை செய்து விட்டு அவர்கள் ஓரு எலும்மிச்சை பழம் ஒன்று தருவார்கள் அதை இடுப்பில் கட்டி கொள்ளவேண்டும் எதற்கு என்றால் பேய் வந்து நம்மளை அடித்து விட கூடாது என்பதற்காக..காப்பு கட்டி விடுவார்கள் அப்போது முதல் எந்த வாகனத்தையும் தொட்டு கூட பார்க்க கூடாது...
பாதயாத்திரை புறப்படுவோம் மாலை அணிந்த அதே கோவிலில் இருந்து....
ராயபுரம் முதல் கந்த சாமி கோவில் வரை நமது சொந்தகாரர்கள் வந்து வழி அனுப்பி விடுவார்கள்...மாலை மூன்று மணி வந்துவிடும்..ஐந்து மணி வரை ஓய்வு எடுத்து விட்டு புறப்படுவோம் 13 நாட்கள் தொடர்ந்து நடந்து பழனிக்கு செல்வோம்.... அது எனக்கு முதல் வருடம் மற்ற சாமிகள் எனக்கு பேய் கதைகளை சொல்வார்கள்...பேய் வந்து நம்மளை அப்படியே எங்காவது அழைத்து சென்று விட்டு விடுமாம்...
அப்படி பேய் பிடித்தால் குரு சாமி ஓரு பிரம்பு வைத்து இருப்பார்....அதை வைத்து அடிப்பார் என்று சொல்வார்கள்....அப்போ சாமி வந்து நம்ளை காப்பாற்றாதா.....இருந்தால் தானே வருவதற்கு....
13 நாட்கள் நடந்து செல்வது ஜாலியாக தான் இருக்கும்...ஓரு நாளைக்கு 40 கிலோ மிட்டர் நடந்து செல்ல வேண்டும் காலை நான்கு மணிக்கே எழுந்து நடந்து செல்வோம் ஜனவரி மாதம் பனி பொலிவு இருக்கும்
எங்கள் மூச்சு காற்று வெளிவருவது எங்களுக்கு அப்படியே தெரியும் அளவுக்கு பனி பொலிவு இருக்கும்..அரட்டை அடித்து கொண்டே செல்வோம்...நான் கையில் நான்கு அடி நீளத்திற்கு வேல் வைத்து இருப்பேன்..என்னை பார்த்து என் காலில் விழுந்து அவர்களே பணம் தருவார்கள்...இப்படி தான் சாமியார்களை மக்கள் உருவாக்குகின்றனர் .....
பழனி சென்று அடைந்தோம் நான் சிறுவனாக இருந்து 480 கிலோ மிட்டர் நடந்து வந்துவிட்டேன் என்று ஆச்சரியம் பட்டார்கள்...ஓரு நாள் ஓய்வு எடுத்து விட்டு மருநாள் காலை எழுந்து சண்முக நதிக்கு சென்று மொட்டை அடித்து குளித்து விட்டு சண்முக நதியிலே வேல் குத்துவார்கள்... எனக்கும் வேல் குத்த பட்டது சிறிது அளவு கூட வலி கிடையாது...அதற்க்கு ஓரு ஹார்மோன் தான் காரணம் என்று சமீபத்தில் ஓரு tv நிகழ்ச்சி பார்த்து தெரிந்து கொண்டேன்..
சிலர் சாமீ வந்தது போல சீன் போடுவார்கள் அவர்களுக்கும் வேல் குத்துவார்கள் அப்படியும் அவர்கள் இன்னும் பயங்கரமாக ஆட...இன்னொரு வேல் எடுத்து குத்துவார்கள் அதற்க்கு பிறகு தான் அடங்குவார்கள்...எனக்கு ஒன்றும் சாமீ வரவில்லை சும்மா சாமீ வருவது போல ஆட எனக்கு தெரியாது ....அடுத்த வருடம் இதே போல் வேல் குத்தும் இடத்தில் சென்ற வருடம் சாமி வந்து வந்தவர்களுக்கு அந்த இடத்தில் மட்டும் சாமி வரவில்லை அந்த இடத்தை விட்டு கொஞ்சம் சென்ற உடன் அவர்களுக்கு சாமி வரும்...இதில் இருந்தது தெரிந்து கொண்டேன் சாமி வருவது எல்லாம் பொய் என்று தெரிந்து கொண்டேன்....
கடவுள்... பயம் கொண்டவர்களால் உருவாக்க பட்டவர் தான் இந்த கடவுள்... கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு எதுவும் கிடைக்காதா ஏன் அவர்கள் தினமும் உணவு உண்பது இல்லையா, உங்களுக்கு எதாவது தேவை என்றால் கடவுளிடம் சென்று எனக்கு இதை தா அதை தா என்று சொல்வது...
ஓரு கதை சொல்கிறேன் நாரதரும், நாராயணனும், பேசி கொள்கிறார்கள்...நாராயணன் கேட்கிறார் நாரதரே.. என்னை யார் எப்போதும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.... தெரியுமா...நாரதர்:நான் தான் சாமி உங்களை எப்போதும் உங்கள் பெயரை உச்சரித்து கொண்டு இருக்கிறேன்... நான் தான் சாமி என்று நாரதர் சொல்கிறார்....உடனே நாராயணன்.. பூமியை காண்பித்து...ஓரு உழவன காலை எழுந்தவுடன் நாராயண என்று சொல்லி தன் வேலையை பார்க்க செல்வார்...இரவு..தூங்கும் போது நாராயணா என்று சொல்லி தூங்க செல்வார் ..இவர்தான் என்னை உண்மையாக நினைத்து கொண்டு இருப்பவர்...அது எப்படி என்று நாரதர் கேட்கிறார்...அந்த உழவன மனதில் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் என்னை வணங்குகிறார்... இப்படி இந்த கதை செல்லும்
கடவுள் எதாவது செய்வார் என்பதற்காக அவரை நினைத்து கொண்டு இருப்பது கடவுள் பக்தி கிடையாது.....
பிரதோஷம் இருக்கும் அன்று மட்டும் தான் சாமிக்கு சக்தி அதிகம் இருக்குமா ஏன் மற்றநாள் எல்லாம் அவருக்கு சக்தி இருக்காதா..அன்று விரதம் இருந்தால் வாழ்கை கஷ்டம் என்பது இருக்காது என்று சொல்வார்கள்...ஓரு ஏழை குடும்பம் வறுமை காரணத்தால் குடும்பமே உணவு உண்ணாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த கடவுள் வரம் தர மாட்டார...
எப்போதும் கடவுள்.... கடவுள்.....அனைத்தும் கடவுள் என்று சொல்பவர்களை முட்டாள் என்றுதான் சொல்வேன்...பயம் இருப்பவர் மட்டும் தான் கடவுளை வணங்குவார்கள்...எதாவது பாவம் செய்து விட்டு காசிக்கு செல்வார்கள்.....ஏன் இந்த கடவுள் கணபதி முருகன் ஜப்பன் இவர்களுக்கு பிறகு எந்த கடவுளுக்கும் குழந்தேயே பிறக்க வில்லையா....
விந்தைமனிதன் , தொடர்வார்கள்...
Tweet | |||||
136 comments:
சாமி மேட்டரா அப்ப கண்டிப்பா அனானி வந்துவிடுவார் எங்கிருந்தாலும்.....??!!
welcome Mr. Anany sir.
sila pala vishyangalil ungal karuthugalukum enakum muranpaadu undu..
ஏன் இந்த கடவுள் கணபதி முருகன் ஜப்பன் இவர்களுக்கு பிறகு எந்த கடவுளுக்கும் குழந்தேயே பிறக்க வில்லையா....
///
நியாயமான கேள்வி...
நொம்ப நாளாக மனதில் உறுத்திக் கொண்டிருக்கிற விசயங்களில் ஓன்று...
யாருக்காவது இதற்கு விடை தெரியுமா ?
நல்ல கருத்துகள் தம்பி, நான் ஏற்கனவே இத்தலைப்பில் எழுதி இருக்கிறேன், அதன் நீட்சியை சேர்த்து நாளை மறுநாள் பதிவிடுகிறேன்...
. எனது தாய்க்கு இரண்டு முறை சாமி வந்துள்ளது. முதலில் எனது கல்யாணத்திக்கு அடுத்த நாள்,. பாலிகை கரைப்பது என்று ஒரு பழக்கம் எங்களிடம் உண்டு, அந்த சமயம் பெண்கள் கும்மி அடிப்பார். அப்பொழுது முதன் முறை வந்தது. இராண்டாவது ,அதற்கு இரு நாட்கள் கழித்து குல தெய்வம் கோவிலுக்கு சென்ற பொழுது., அதற்கு முன்பும் அவருக்கு வந்தது இல்லை பின்பும் வந்தது இல்லை. அவர் எந்த வித குறியும் சொல்லவில்லை. இது மனம் சம்பந்தப் பட்ட விஷயம்.
//எதாவது பாவம் செய்து விட்டு காசிக்கு செல்வார்க//
இது உங்கள் நினைப்பு. இதற்கும் அடுத்த வரிக்கும் தொடர்பு இல்லையே ??? எதாவது விட்டுவிட்டீர்களா??
//.பயம் இருப்பவர் மட்டும் தான் கடவுளை வணங்குவார்கள்..//
எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் நான் கடவுளை தினமும் வழிபடுபவன் .. ஒரு நண்பனாகத்தான் நான் கடவுளை பார்கிறேன்.
//கடவுள் எதாவது செய்வார் என்பதற்காக அவரை நினைத்து கொண்டு இருப்பது கடவுள் பக்தி கிடையாது....//
உடன்படுகிறேன் ... பிரதி பலன் பாராமல் செய்வதுதான் பக்தி. இதே தலைப்பில் என்னையும் எழுத சொல்லி இருக்கிறார். அப்பொழுது இந்த பக்தியை பற்றி விரிவாக எழுதுகிறேன் .
@@@LK அந்த கடைசி பத்தியில் இருப்பவை என் மனதில் இருக்கும் எண்ணங்கள். அதை தான் நான் கொடுத்திருக்கிறேன்.
என்னுடைய அம்மாவிற்கு கூடத்தான் சாமி வரும். வந்திருக்கிறது. அதற்காக என்னால் அதை நம்ப முடியாது.
//இது மனம் சம்பந்தப் பட்ட விஷயம்.
///
ithai gavanikka villaya thambi
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மானிலம் பயனுற வாழ்வதற்கே
தம்பி.. உன் கட்டுரைக்கான கருத்தும் பதிலும் எனது பதிவாக வெளிவரும்...காத்திருங்கள் தம்பி!
@@@LK இது உங்கள் நினைப்பு. இதற்கும் அடுத்த வரிக்கும் தொடர்பு இல்லையே ??? எதாவது விட்டுவிட்டீர்களா??//
..ஏன் இந்த கடவுள் கணபதி முருகன் ஜப்பன் இவர்களுக்கு பிறகு எந்த கடவுளுக்கும் குழந்தேயே பிறக்க வில்லையா....
நீண்ட நாட்களாக என் மனதில் இருக்கும் கேள்வி அது ..இதற்க்கு பதில் தேடி கொண்டு இருக்கிறேன்
கடவுள் இருக்கா இல்லையா என்று ஆராய்வதை விட எத்தனை பேரிடம் மனிதம் இருக்கிறது என்று ஆராய்வது நல்லது.... மனிதம் இருக்கும் இடத்தில் தான் கடவுள் என்று நாம் தேடுகிற மெய்ஞானத்தை உணரமுடியும்.
என்னை பொறுத்தவரை என் கடவுள் எனக்கு பிடித்த மாதிரி இருக்கிறார்....என் பலமாக இருக்கிறார்....மனம் சோர்வுறும் நேரம் தூக்கி நிறுத்துகிறார்.....தவறான வார்த்தைகள் என் வாயில் இருந்து வருவதை தடுக்கிறார்....பிறருக்கு உதவ சொல்லி எனக்குள் சொல்லி கொண்டே இருக்கிறார்....அனைவரிடமும் அன்பாக இருக்க சொல்ல்கிறார்....இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்...
ஆனால் மந்திரம் எல்லாம் பண்ண தெரியாத நல்லவராக இருக்கிறார்...??!
இன்று கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் எல்லோருமே ஒரு காலத்தில் தீவிர ஆன்மீகவாதிகளாக தான் இருந்திருப்பார்கள். ஏன் என்றால் ஒன்றை தேடி அதை தெரிந்து கொள்ள முடியவில்லை என்ற பின்னர்தானே அதை இல்லை என்று மறுக்க முடியும். இதை நான் 'சீ சீ இந்த பழம் புளிக்கும்' என்ற கதை என்று சொல்ல மாட்டேன்....
:-)
manamathu semmaiyanal manthiram jebikka vendam
Sidhar.
KADAVUL = UYIR -> Manam
என்ன சொல்வதென்று தெரியல. சௌந்தர் .. கடவுள் என்பது நாமே உணரவேண்டிய விஷயம்..
//பயம் இருப்பவர் மட்டும் தான் கடவுளை வணங்குவார்கள்...//
பயமா அப்டின்னா என்ன தல?
//இந்த கடவுள் கணபதி முருகன் ஜப்பன் இவர்களுக்கு பிறகு எந்த கடவுளுக்கும் குழந்தேயே பிறக்க வில்லையா....//
ஒருவேளை family planning பண்ணியிருப்பாங்களோ??!!!
கடவுள் இருக்குன்னு அடிச்சு சொல்ற எல்லாருக்கும் ஒரு கேள்வி
கடவுள நீங்க பாத்திருக்கீங்களா..இல்ல நேரா பாத்தவங்க சொல்லியிருக்காங்களா...
உணர்ந்திருக்கிறேன்னு கப்ஸா விட கூடாது இருந்தா வரணும்ல....எப்போ வந்தாரு...?
கடவுள் இருக்காருன்னா? அவரு ஒரு ஆளா...இல்ல பல பேரா?
பதிலச் சொல்லுங்கப்பா?
அண்ணா " பெயரில்லா " இருக்கீங்களா? கொஞ்ச நேரம் ஜாலியா விவாதம் பண்ணலாம்...
கடவுள் என்ற ஒன்று இருக்கிற்தோ இல்லையோ. அவரை ஆத்திகர்களை விட நாத்திகர்கள் கஷ்டப்பட்டு தேடுகிறார்கள்.
அவர் அவர் விருப்பம் அது. தம்பி செளந்தருக்கு பிடிக்கவில்லை என்றால் பிடிக்க தேவையில்லை.
எனக்கு பிடிக்கிறது, நான் உணர்கிறேன்.
@ பெயரில்லா...
முக்காடிலிருந்து வெளிய வாப்பா. அப்புறம் கடவுள பத்தி பேசலாம்
@அருண்
//முக்காடிலிருந்து வெளிய வாப்பா. அப்புறம் கடவுள பத்தி பேசலாம் //
அட புள்ளைய மிரட்டதிங்க அருண்... நீ முக்காடு போட்டேவாப்ப.. நம்ப பேசலாம்.
//நான் கையில் நான்கு அடி நீளத்திற்கு வேல் வைத்து இருப்பேன்..என்னை பார்த்து என் காலில் விழுந்து அவர்களே பணம் தருவார்கள்...இப்படி தான் சாமியார்களை மக்கள் உருவாக்குகின்றனர் .....//
தம்பி, நீங்க சும்மா நடந்து போனா யாராவது காசு தருவானா? அந்த பணம், கடவுள் மேல் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை. அதை நீங்கள் மூடநம்பிக்கை என சொன்னாலும் கவலை இல்லை.
அந்த நம்பிக்கையை சிலர் தவறாக உபயோகிப்பது வருத்தமே.
பேர் எதுக்குண்ணே? பதில் தெரியலன்ன தெரியலேன்னு சொல்லுங்க! போய்கிட்டே இருக்கேன்
@பெயரில்லா சொன்னது…
//பேர் எதுக்குண்ணே? பதில் தெரியலன்ன தெரியலேன்னு சொல்லுங்க! போய்கிட்டே இருக்கேன்//
ஐ!!! பெயரில்லா வந்துட்டாங்க... போய்டடிங்க ப்ளீஸ்.. ஒரு நிமிடம்..சின்ன சந்தேகம்..
//இதில் இருந்தது தெரிந்து கொண்டேன் சாமி வருவது எல்லாம் பொய் என்று தெரிந்து கொண்டேன்....//
புரியலையே. ஒரு இடத்துல வ்ரலை வேற இடத்துல வ்ருது இதவெச்சி எப்படி சாமி வருவது பொய்னு தெரிஞ்சிது
//என்னை பார்த்து என் காலில் விழுந்து அவர்களே பணம் தருவார்கள்...இப்படி தான் சாமியார்களை மக்கள் உருவாக்குகின்றனர் .....
///
ரொம்ப சரியாக சொன்னீங்க ..!!
//இதில் இருந்தது தெரிந்து கொண்டேன் சாமீ வருவது எல்லாம் பொய் என்று தெரிந்து கொண்டேன்....///
இந்த கெடாய் வெட்டி ரத்தத்த குடிக்கிறாங்களே அவங்களுக்கு கூடவா ...???
//அனைத்தும் கடவுள் என்று சொல்பவர்களை முட்டாள் என்றுதான் சொல்வேன்///
அட நானும் முட்டாள் தாங்க ..!!
//இந்த கடவுள் கணபதி முருகன் ஜப்பன் இவர்களுக்கு பிறகு எந்த கடவுளுக்கும் குழந்தேயே பிறக்க வில்லையா.///
குடும்பக் கட்டுப்பாடு பண்ணிட்டாங்களோ...??
//பெயரில்லா சொன்னது…
கடவுள் இருக்குன்னு அடிச்சு சொல்ற எல்லாருக்கும் ஒரு கேள்வி///
நான் பார்த்திருக்கேங்க ..!!
//அதற்க்கு ஓரு ஹார்மோன் தான் காரணம் என்று சமீபத்தில் ஓரு tv நிகழ்ச்சி பார்த்து தெரிந்து கொண்டேன்.. //
குத்தினா வலிக்கும். எந்த ஹார்மோன்பா அது? அட்லீஸ்ட் டீ வி நிகழ்ச்சியையாவது சொல்லு
@பெயரில்லா சொன்னது
//கடவுள நீங்க பாத்திருக்கீங்களா..இல்ல நேரா பாத்தவங்க சொல்லியிருக்காங்களா...
உணர்ந்திருக்கிறேன்னு கப்ஸா விட கூடாது //
கடவுள் இருக்கற இல்லையா எனக்கும் தெரியல... but இருக்கு சொல்றவங்க உங்க கேள்விக்கு ரொம்ப நாள் முன்னாடி கேட்ட எதிர் கேள்வி... கற்று இருக்கு நம்பரிங்கள? அப்படின காட்டுங்க.... சும்மா உணர்கிறேன் எல்லாம் சொல்ல கூடாது...
@ செல்வா
அப்படி போடு!
கடவுள் இருக்காறானு கேட்ட தலைவரே,
http://thabaal.blogspot.com/2010/05/blog-post.html
இங்க போய் படிச்சிட்டு வாங்க.
குத்தினா வலிக்கும். எந்த ஹார்மோன்பா அது? அட்லீஸ்ட் டீ வி நிகழ்ச்சியையாவது சொல்லு///
நீங்க நடந்தது என்ன நிகழ்ச்சி பார்ப்பதே இல்லையா...
@ Terror
ஆட்டை விட்டுடாத நான் சாப்பிட்டுட்டு தெம்பா வரேன். பிடிச்சி வை. தக்காளி, இன்னி குருமா தான்
செல்வகுமாரு @ எந்த சாமிய பாத்தீக? காட்டுவீகளா எல்லாருக்கும்
/// கடவுள் இருக்கற இல்லையா எனக்கும் தெரியல... but இருக்கு சொல்றவங்க உங்க கேள்விக்கு ரொம்ப நாள் முன்னாடி கேட்ட எதிர் கேள்வி... கற்று இருக்கு நம்பரிங்கள? அப்படின காட்டுங்க.... சும்மா உணர்கிறேன் எல்லாம் சொல்ல கூடாது... //
நாங்களும் கேப்போம்ல எதிர் கேள்வி ...??
//நீங்க நடந்தது என்ன நிகழ்ச்சி பார்ப்பதே இல்லையா... //
அதே நிகழ்ச்சிலதானப்பா ரஜினி இமயமலைக்கு போறார், ஒரு சக்தியை உணர்ரானு சொல்லுறாங்க. அதையும் பாத்தியா?
நான் என்னவோ நீ, Discovery, National Geographicனு சொல்லப்போறனு பாத்தா... சே... போங்கு நிகழ்ச்சிய சொல்லுற
@அருண்
//ஆட்டை விட்டுடாத நான் சாப்பிட்டுட்டு தெம்பா வரேன். பிடிச்சி வை. தக்காளி, இன்னி குருமா தான் //
போ அருண்!! நீ சொன்னத கேட்டு ஆடு ஓடி போச்சி... சத்தமே இல்ல... மைக் டெஸ்டிங் ரெடி 1, 2, 3... பெயரில்லா சந்தேகம் தீர்த்து வைப்ப...
//பெயரில்லா சொன்னது…
செல்வகுமாரு @ எந்த சாமிய பாத்தீக? காட்டுவீகளா எல்லாருக்கும்
///
எல்லோருக்கும் காட்டுறது என்னோட வேலை இல்லீங்கோ ..
நானென்ன பொருட்காட்சியா நடத்துறேன் .. வந்து பாத்துட்டு போங்க அப்படின்னு சொல்லுறதுக்கு ..!!
@ பெயரில்லா
http://thabaal.blogspot.com/2010/05/blog-post.html
அங்க போய் படிக்க கஷ்டம்னு இங்க குடுத்திருக்கேன் பாரு.
இன்றைய அறிவியல் ரீதியாக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை நிரூபிக்க முடியாதுதான். ஆனால் இந்தக் குறைபாடு கடவுள் இல்லாமல் இருப்பதால் அல்ல. அறிவியலுக்கு கடவுளைக் காணும் திறன் இன்னும் ஏற்படவில்லை என்பதனால்தான். மைக்ரோஸ்கோப்புகள் கண்டுபிடிக்கப்படும் வரையில் நுண்ணுயிர்களின் இருப்பு உணரப்பட்டதே ஒழிய காணப்படவில்லை. எக்ஸ்ரே க்றிஸ்டலோக்ராஃபி கண்டுபிடிக்கப்படும் வரையில் டி.என்.ஏ.வின் இருப்பு உணரப்பட்டதே ஒழிய காணப்படவில்லை. கடவுளைக் காணும் கருவிகளையும் முறைகளையும் எப்போது அறிவியல் கண்டுபிடிக்கிறதோ, அப்போதே கடவுளைக் காண முடியும்.
பெயரில்லா சொன்னது…
செல்வகுமாரு @ எந்த சாமிய பாத்தீக? காட்டுவீகளா எல்லாருக்கும்///
@@@@@ப.செல்வக்குமார் இவரு வடிவேல் போல கடவுளை காட்டுவார்....
@ Terror
இப்படி அனானியா யாரு வர்றாங்கனு ஏற்க்குறைய கண்டு பிடிச்சிட்டேன். சீக்கிரம் அதுக்கு ஒரு விழா எடுத்து பலி போட்டுறேன்.
@ பெயரில்லா..
எழுத்து நடையையும், சில வழக்கு மொழியையும் மாத்துங்க. செளந்த்ர் நீங்க என்ன சொல்லுறீங்க, அனானி பத்தி
@அருண்
//கடவுளைக் காணும் கருவிகளையும் முறைகளையும் எப்போது அறிவியல் கண்டுபிடிக்கிறதோ, அப்போதே கடவுளைக் காண முடியும். //
அடிச்சான் பாருய அருண்!!! தல பெயரில்லா!! இங்கதான் நான் உன்ன இழுத்து போக நினச்சேன்... நீங்க மட்டும் காற்று
இருக்கு அறிவியல் நிருபிச்சி இருக்கு சொல்லி இருந்த இதன் என் பதில்...
செல்வகுமாரு @ கந்தசாமி படம் பாத்து இருப்பீயலோ....!
கடவுள் இருக்கிறார் என்றே வைத்து கொள்வோம்.
அது எந்த கடவுள்.? எந்த மதத்தை சேர்ந்தவர்.?
உடனே கடவுளுக்கு மதம் கிடையாது, மனிதனுக்குத்தான் என்று சொல்லாதீர்கள்.
நீங்க என்ன சொல்லுறீங்க, அனானி பத்தி//
@@@@அருண் பிரசாத் அனானி தான் கடவுள்....
//பெயரில்லா சொன்னது…
செல்வகுமாரு @ கந்தசாமி படம் பாத்து இருப்பீயலோ....!
//
பாக்கவே இல்லீங்க ..!! நேரம் இல்ல .. இப்ப கூட இந்த மதராசப்பட்டினம் அப்புறம் களவானி பாக்கலாம்னு நினைக்கிறேன் .. நேரம் இல்லை .. சரி விடுங்க நாம இத பத்தி பேசுவோம் .. அவிங்க கெடக்குறாங்க ..!!
@jay
//கடவுள் இருக்கிறார் என்றே வைத்து கொள்வோம்.
அது எந்த கடவுள்.? எந்த மதத்தை சேர்ந்தவர்.?//
தல பதில நீங்களே சொல்லிட்டு கேள்வி கேட்ட எப்படி? கடவுள் மனதால் உணரபடர விஷயம். அதுக்கு போய் ஜாதி , மதம் எல்லாம் கேட்ட எப்படி அண்ணா?
இன்னும் ஒரு வாதம்.... Jesus christian , அல்லா முஸ்லிம், முருகர் ஹிந்து... அந்த அந்த கடவுள் அந்த அந்த மதம்னே....
50...
//இன்னும் ஒரு வாதம்.... Jesus christian , அல்லா முஸ்லிம், முருகர் ஹிந்து... அந்த அந்த கடவுள் அந்த அந்த மதம்னே.... //
அப்படியென்றால் பல கடவுள்கள் இருக்கிறார்களா?
மேலும் ஒரு கேள்வி :)
காவல் தெய்வங்களின் கோவில் உண்டியலை பூட்டி வைப்பதேன்?
ஜெய் அண்ணே! அப்படி போடுங்க அரிவாள ஏய் இப்ப சொல்லு ஏய் இப்ப சொல்லு?
கடவுள் இருக்கருன்னு சொல்லுர எல்லாரும் வா சாமி! எந்த எந்த கடவுல எந்த லக்குல பாத்தீய?
சும்ம பொய்யாட்டிக்கும் சொல்லப்புடாது சாமிய பாத்தேன்னு! ஏன் புறனி பேசுதிய மக்கா!
@jay
//அப்படியென்றால் பல கடவுள்கள் இருக்கிறார்களா?//
Hydrogen, Oxygen, Nitrogen, Helium... இப்படி கண்ணுக்கு தெரியாத பல வாயு இருக்க சமயத்துல... பல கடவுள் இருந்த தப்ப அண்ணே?
//நான் ஏழாம் வகுப்பு படித்த பொழுது...///
ஏழாப்பு படிச்ச பெரியாலா நீரு... இருங்க மீதி படிச்சிட்டு போடுரேன் பின்னூட்டம்...:)
@பெயரில்லா
//சும்ம பொய்யாட்டிக்கும் சொல்லப்புடாது சாமிய பாத்தேன்னு//
அண்ணே அவரு சாமிய பாக்கள உங்களால நிரூபிக்க முடியுமா அண்ணே?
/// சும்ம பொய்யாட்டிக்கும் சொல்லப்புடாது சாமிய பாத்தேன்னு! ஏன் புறனி பேசுதிய மக்கா! ///
நான் பார்த்தது உண்மைங்க ..!! நான் எதுக்கு உங்க கிட்ட பொய் சொல்லணும் ..
நீங்க எங்க பாட்டிய பார்த்திருக்கீங்களா .? பார்த்ததில்லை .. அதுக்காக நான் பொய் சொல்லுறேன் , பாட்டியே கிடையாது அப்படின்னு ஆய்டுமா ..??
செல்வகுமார்@ பொய்யா சொல்லியிருக்கருப்பா சாமிய பாத்தேன்னு இஃகி இஃகி இஃகி நிசமாவே சாமி இல்ல போலருக்கு
செல்வகுமாரு@ காமடி பண்ணாதிய ஏன் செத்துப் போன பாட்டிய இழுக்குதீய சாமிய பாத்தேன்னு சொன்ன்னியல எந்த சாமிய பாத்திய!
//செல்வகுமாரு@ காமடி பண்ணாதிய ஏன் செத்துப் போன பாட்டிய இழுக்குதீய சாமிய பாத்தேன்னு சொன்ன்னியல எந்த சாமிய பாத்திய!//
அதான் உங்களுக்கு தெரியாதே ..!! உங்ககிட்ட நான் எதுக்கு சொல்லணும் ..!!
ஏய் டெரரு தம்பி நான் என்னத்த நிருவீக்க?
சாமிய காட்டுதேனு ஒரு பக்கி சொல்லுதா? ஏய் கேட்டு சொல்லு
@jay
//காவல் தெய்வங்களின் கோவில் உண்டியலை பூட்டி வைப்பதேன்?//
கோவில் சாமிய கட்டுச்சி? உண்டியல் சாமிய பூட்டுச்சி? காசு சாமிய போட்டுச்சி? நம்பள காசு போட்டோம் நம்பள அதை திருடறோம்... அதுக்காக காசு திருடறவன சாமி என் தண்டிக்கல கேக்க கூடாது... ஸ்கூல் ல சின்னபிள்ள சக்பீஸ் திருடுது சொல்லி தூக்குல போடா முடியுமா... God is loveee.... அது கண்ணா எல்லாம் குத்தது.....
செல்வகுமாரு சாமி இல்லேன்னு தெரிஞ்சுகிட்டே எப்படி டபாய்க்கான் பாரு
டெரரு /// அப்போ காதல்தேன் கடவுளா? என்னப்பா கிளு கிளுப்பா பேசுதிய
சிவனை அழைத்து வருவதாக தீக்குள் குதித்த இரண்டு பக்தர்கள் ...பார்க்க
http://www.youtube.com/watch?v=d2BopE9ZclM&feature=related
கண்ணனுக்கு தெரியாதவர் கடவுள் என்றால் சிலை எதற்கு. எங்கும் இருக்கும் கடவுளை காண எதற்கு கோவில்களில் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
50,200,300,500,1000,10000 இன்னும் அதிகமாக எதற்காக கேட்கிறார்கள்.?
என்னுடைய முந்தைய கேள்விக்கு இன்னும் விடை வரவில்லையே...
செல்வகுமாரு /// பாட்டியுமில்ல கடவுளுமில்ல என்ன சரியா?
@பெயரில்லா
//சாமிய காட்டுதேனு ஒரு பக்கி சொல்லுதா? ஏய் கேட்டு சொல்லு//
போங்க அண்ணாச்சி... நீங்க கமெண்ட்ஸ் சரியாய் படிக்க மாட்டரிங்க... சும்மா செல்வா கிட்ட மட்டும் சண்டை போடறிங்க...
இன்றைய அறிவியல் ரீதியாக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை நிரூபிக்க முடியாதுதான். ஆனால் இந்தக் குறைபாடு கடவுள் இல்லாமல் இருப்பதால் அல்ல. அறிவியலுக்கு கடவுளைக் காணும் திறன் இன்னும் ஏற்படவில்லை என்பதனால்தான். மைக்ரோஸ்கோப்புகள் கண்டுபிடிக்கப்படும் வரையில் நுண்ணுயிர்களின் இருப்பு உணரப்பட்டதே ஒழிய காணப்படவில்லை. எக்ஸ்ரே க்றிஸ்டலோக்ராஃபி கண்டுபிடிக்கப்படும் வரையில் டி.என்.ஏ.வின் இருப்பு உணரப்பட்டதே ஒழிய காணப்படவில்லை. கடவுளைக் காணும் கருவிகளையும் முறைகளையும் எப்போது அறிவியல் கண்டுபிடிக்கிறதோ, அப்போதே கடவுளைக் காண முடியும்
இதுக்கு நீங்க ஒண்ணுமே சொல்லல...
ஏய் ஜெய்யு////ஏன் இம்புட்டு கேக்குறீரு பயலுவ குலம்பிர போரானுவ
காவல் தெய்வங்களின் கோவில் உண்டியலை பூட்டி வைப்பதேன்?
இதுக்கு பதில் சொலுங்க, TERROR-PANDIYAN(VAS), அருண் பிரசாத், ப.செல்வக்குமார்...
//கோவில் சாமிய கட்டுச்சி? உண்டியல் சாமிய பூட்டுச்சி? காசு சாமிய போட்டுச்சி? நம்பள காசு போட்டோம் நம்பள அதை திருடறோம்...//
அதைத்தான் நானும் சொல்கிறேன். எதையுமே செய்யாத கடவுள் எதற்கு.
நாமே கோவில் கட்டுகிறோம், நாமே உண்டியல் வைக்கிறோம்.
பின் கடவுள் எதற்கு?
@ பெயரில்லா
சொன்ன மாதிரியே எழுத்து வழக்கை மாத்திட்டீங்க. பயமா? சரி விடு
நம்ம பதிலை பார்க்காத மாதிரியே மறுபடி மறுபடி ஒரே கேள்வி கேக்குற
டெரரு///
ஏய் இங்க பாருங்கப்பா அறிவியல்ல கண்டு பிடிக்க முடியாதத டெரரு கண்டு பிடிச்சு இருக்கு?
இத்தன சாமி இருக்கேன்னு கேட்டா? நிசமாவே இருக்கானு கேட்டா டெரர் டெலச் கோப்பு காட்டுது
அம்பூட்டு சாமியும் இருக்காப்பா..ஏய் விளக்கமாதா சொல்லு...! பட்டிக்காட்டாந்தேன் நம்மளு
Jay அண்ணா எந்த கேள்விக்கு பதில் வரல? சௌந்தர் தம்பி மேல இருக்க கமெண்ட்ஸ் செக் பண்ணு...
அருணு// நீங்க பாத்க்டு இருக்கிலா சாமிய?
///சௌந்தர் சொன்னது…
காவல் தெய்வங்களின் கோவில் உண்டியலை பூட்டி வைப்பதேன்?
இதுக்கு பதில் சொலுங்க, TERROR-PANDIYAN(VAS), அருண் பிரசாத், ப.செல்வக்குமார்... ///
அங்க போய் கும்பிடறது நாம தான.. அதனாலதான் ..!!
காவல் தெய்வங்களின் கோவில் உண்டியலை பூட்டி வைப்பதேன்?
@@@TERROR-PANDIYAN(VAS)இந்த கேள்வி தான் அது
ஏய் மக்கா....
எந்த சாமிய பாத்தீய சொல்லுங்க....அப்புறம் அழுதுறுவேன்...யாருமே பாக்காமா எப்படி பேசுறங்கே பாருங்க மக்கா...படிச்ச புத்திய எல்லாம் இதுக்கே யூசு பண்ணாதிய மக்கா!
@பெயரில்லா
//டெரரு /// அப்போ காதல்தேன் கடவுளா? என்னப்பா கிளு கிளுப்பா பேசுதிய //
அண்ணே!!! என்ன இப்படி பொசுக்குனு கவுந்துட்ட... Love அப்படின காதல் மட்டும் அப்படின்னு யாருனே சொன்னது?? அன்பு கொஞ்சம் இங்கிலிபிஷ்ல சொல்லுனே... நான் கொஞ்சம் மக்கு...
செளந்தரு//
இவிங்ஙேளுக்கே தெரியும் களாவாணி வந்தா சாமி வுட்டுடும்னு அதேன் பூட்டியிருக்கு! அட வுண்டியல விடுங்கப்பா சாமியே பூட்டு போட்டுதானெ பூட்டி இருக்கு
@ செளந்தர்
அப்படியே அந்த ஹார்மோனுக்கும் ஒரு லிங்க் கொடுக்குறது
டெரர்//
அப்போ அன்புதேன் கடவுளு எல்லாருகிட்டயும் சொல்லிடுப்பா டெரரு கண்ட சிலைய வச்சு கும்புடாதிய மக்கா (செல்வ குமாரு உங்கலுக்கும்தேன்) டெரர் சொல்லிட்டாரு
அன்புதேன் கடவுளாம் (அப்பன்ன பூட்டு போட்டு பூட்லாம்ல செளந்தரு...ஏய் கேளு)
//அப்போ காதல்தேன் கடவுளா? என்னப்பா கிளு கிளுப்பா பேசுதிய //
உங்களுக்கு தெரியாதா அனானி! தந்த்ரான்னு ஒரு கிளுகிளுப்பான விஷயம் ஓஷோ சொல்லியிருப்பாரே! அதான் கடவுள்! கிக்கிக்கீ!
@பெயரில்லா
//ஏய் இங்க பாருங்கப்பா அறிவியல்ல கண்டு பிடிக்க முடியாதத டெரரு கண்டு பிடிச்சு இருக்கு//
போனே உனக்கு சொல்ல வர விஷயமே புரிய மாட்டுது... சரினே உன் வழிக்கு வரேன். நிலவுல மண்ணு இருக்கு நம்பறிய? நீ போய் பத்திய?
என்ன டெர்ரரு! அனானிய போட்டு இந்த கும்மு கும்முறிய! அப்ப சாமி இருக்குதுன்றிய! அப்டின்னா அதுக்கு நிற்குணன், சற்குணன்னு ஏகப்பட்ட பேரு சொல்லி பம்மாத்துறாவுளே! அதப் பத்தி பேசலாமா?
//Jay அண்ணா எந்த கேள்விக்கு பதில் வரல?
பதிலை பார்த்தேன். இந்த பெயரில்லா மனிதரின் சொல்களுக்குள் அது மறைந்து கொண்டு இருந்தது. :)
/// அட வுண்டியல விடுங்கப்பா சாமியே பூட்டு போட்டுதானெ பூட்டி இருக்கு//
சாமியவே சுட்டுட்டு போய்டராங்களே ..!! (இங்கே சொல்வது கடவுள் சிலையை ) நாம இந்த டியூப்ல காத்த அடச்சு வச்சிருப்போம்ல. அப்ப அரு நாள் அது அறுந்து போகும். அப்புறம் அத தூக்கி எரிஞ்சிடுவோம். அதைய ஒரு ஆள் தூக்கிட்டு போறத பார்த்துட்டு காத்த தூக்கிட்டு போறான் அப்படின்னு நினைச்சா என்ன செய்யுறது..?
@பெயரில்லா
//அப்போ அன்புதேன் கடவுளு எல்லாருகிட்டயும் சொல்லிடுப்பா டெரரு கண்ட சிலைய வச்சு கும்புடாதிய மக்கா (செல்வ குமாரு உங்கலுக்கும்தேன்) டெரர் சொல்லிட்டாரு //
அண்ணே அது அப்படி இல்ல.... கடவுள் அன்பானவர்.... இப்படி....
@விந்தைமனிதன்
//என்ன டெர்ரரு! அனானிய போட்டு இந்த கும்மு கும்முறிய! அப்ப சாமி இருக்குதுன்றிய! அப்டின்னா அதுக்கு நிற்குணன், சற்குணன்னு ஏகப்பட்ட பேரு சொல்லி பம்மாத்துறாவுளே! அதப் பத்தி பேசலாமா? //
தலைவா நீங்க நேர கேக்கரதல் நேர பதில் சொல்றேன்... கடவுள் பெயர சொல்லி நடக்கற மூட நம்பிகைய மிதி... ஆனா கடவுள் இருக்கு சொல்றவங்க மனசா அவங்க உணர்வுகள நாம என் புண்படுத்தனும்? நமக்கு பிடிக்கலைன நாம ஒதுங்கிகலம்..
//அண்ணே அது அப்படி இல்ல.... கடவுள் அன்பானவர்.... இப்படி....
அவர்/ள் கையில் ஆயுதங்கள் எதற்கு?
நண்பர்களே நீங்க கூட்டமா கேள்வி கேக்கறிங்க... so நான் ஒரு ஒரு கம்மெண்ட படிச்சி பதில் போடணும்... தாமதம் இருந்தால் மன்னிக்க...
//தலைவா நீங்க நேர கேக்கரதல் நேர பதில் சொல்றேன்... கடவுள் பெயர சொல்லி நடக்கற மூட நம்பிகைய மிதி... ஆனா கடவுள் இருக்கு சொல்றவங்க மனசா அவங்க உணர்வுகள நாம என் புண்படுத்தனும்? நமக்கு பிடிக்கலைன நாம ஒதுங்கிகலம்.//
கரெக்ட், கடவுள் பெயரால் நடக்கும் தவறுகளை சாடு. ஆனால், செளந்த்ர் போல கடவுளை கும்பிடுபவன் முட்டாள்னு சொல்லாதே
ஜெய், உங்களுக்கு பிரச்சினை கடவுளா? இல்லை, அவர் இருக்கும் கோவில், வைதிருக்கும் ஆயுதம், உண்டியல், கைகள் இதில்லா?
@jay
//அவர்/ள் கையில் ஆயுதங்கள் எதற்கு?//
அவர்/அவள் கைல ஆயுதம் கொடுத்தது நமதன்... சிலை வடித்தவர்... உருவம் கொடுத்தவர்... Jesus கைல ஆயுதம் பாத்து இருக்கீங்களா? மசுதில (அல்லா கோயில்) அங்க ஆயுதம் பாத்து இருக்கீங்களா? எல்லாம் நாம செஞ்சதுதான்...
@@@ அருண் பிரசாத்
கடவுளுக்கா விரலை வெட்டி கொள்வது நாக்கை வெட்டி கொள்வது கண்ணை எடுத்து கடவுளுக்கு காணிக்கை தருவது என்று இருந்தால் நாங்கள் முட்டாள் என்று தான் சொல்வோம்
@@@ அருண் பிரசாத் இதை தனிப்பட்ட விதத்தில் எடுத்துகொள்ளாதீர்கள் .
நான் எந்த ஒரு தனி மனிதரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை
@பெயரில்லா..
அண்ணே எதாவது பதில் சொல்லாம இருந்தன கோச்சிகாம கொஞ்சம் திருப்பி கேளுனே... (அதுக்கு முன்னாடி bathroom போய்ட்டு வரேன்... ஓடிட்டேன் புரளி கிளப்பிடத..)
@அருண்.
//ஜெய், உங்களுக்கு பிரச்சினை கடவுளா? இல்லை, அவர் இருக்கும் கோவில், வைதிருக்கும் ஆயுதம், உண்டியல், கைகள் இதில்லா? //
எனக்கு கடவுள் பிரச்சினையல்ல. ஏன் என்றால் அவர் எதுவும் செய்வதில்லை. இல்லாத ஒன்றை நான் பிரச்சினையாக நினைப்பதில்லை.
இங்கே கோவில்களின் பெயர்களில் பல தவறுகள் நடக்கின்றன.
இதை கண்டுகொள்ளாத கடவுள் எதற்காக இருக்க வேண்டும்.
@ செளந்தர்
அந்த வழ்க்கங்களை செய்பவர்களை முட்டாள் என்றோ எப்படி வேணுமானாலும் சொல்லுங்கள். ஆனால், மற்றவருக்கு எந்த தீங்கும் வராமல் கடவுளை கும்பிடுபவர்களை சொல்லாதீர்கள். அது அவர்களின் உரிமை, உணர்வு. ம்திப்பு கொடுங்கள்
@சௌந்தர்
//அருண் பிரசாத் இதை தனிப்பட்ட விதத்தில் எடுத்துகொள்ளாதீர்கள் .
நான் எந்த ஒரு தனி மனிதரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை //
சௌந்தர் நீங்க தப்ப நினைக்காதிங்க...
தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது… என்ன சொல்வதென்று தெரியல. சௌந்தர் .. கடவுள் என்பது நாமே உணரவேண்டிய விஷயம்..
இதை மாதிரி மென்மையா கடவுள மதிக்கற நிறைய மக்கள் இருக்காங்க... அவங்களுக்காக வாதடறேன்... ஆட்ட வெட்டி ரத்தம் குடிக்கரவங்களுக்கு இல்ல...
@பெயரில்லா
அண்ணா வந்துட்டேன்...
யோவ்... நாந்தான் 100 போட்டேனா. கவனிக்கலையே. இப்படிதான் பலர் கவனிக்காமல், கடவுளை சாடுறேன்னு அதை கும்பிடும் மக்களை சாடுகிறார்கள்
/// அண்ணே எதாவது பதில் சொல்லாம இருந்தன கோச்சிகாம கொஞ்சம் திருப்பி கேளுனே... (அதுக்கு முன்னாடி bathroom போய்ட்டு வரேன்... ஓடிட்டேன் புரளி கிளப்பிடத..) //
நானும்தான் ..!! எனக்கு கொஞ்சம் ஆணி இருக்கு ..!!
பல இன்னல்களுக்கு இடையில் 100 அடித்த எங்கள் சிங்கம் அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... சரி அருண்... நான் போய் சாப்டு... கொஞ்சம் ஆணி இருக்கு அதா பாக்கறேன்... நீங்களும் போய் ஆணி புடுங்குங்க... அண்ணன் பெயரில்லா வந்து எதாவது கேள்வி கேட்ட வீட்டுக்கு
போய் பதில்போடலாம்...
கடவுளும் சுவாரசியம், அதன் சர்ச்சைகளும் சுவாரசியமே. இன்றைக்கு மத்த பதிவர்களை படிக்க முடியவில்லை, இந்த விவாதத்தால். பிறகு வருகிறேன்
சவுந்தர் இப்படி ஒரு பதிவ உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. அனுபவமும் அதன்பின்னான நீங்கள் புரிந்து கொண்டதும் அருமை. ரொம்ப நன்றாக வந்திருக்கிறது.
மக்கா....
ஒரு பக்கியும் சாமிய பாத்தது இல்லா ஆன கொடுகுற பில்டப்ப பாரு....! பொய் பேசாம கோவப்படாம தில்லு இருந்தா நான் கேக்குற கேள்விக்கு ஒவ்வொரு ஆளா பதிலச்சொல்லு....
செல்வகுமாரு என்னமோ நேர சாமிகிட்ட கைய குலுக்கின மாறியே பேசுறாரு...
ஊருல அனியாம் அட்டூலியம் நடக்குதுல்ல எங்கய்யா உங்க சாமி? போச்சு
பசியாவும் பட்டினியாவும் ஏன் மனுசங்கள உங்க சாமி அலையவிடுது
அயோக்கினக்கு எல்லாம் ஏன் காச கொடுக்குது
நொண்டியும் நொடமுமா ஏன் மனுசஙக்ள படைக்கிது....
சொல்லு... நீங்க எல்லாம் ஏசி ரூம்லயும் காசு பனம்னு இருக்கம்னு பேசுதியலா?
theruvula paduththirukkaanee avan kidda keeLu een saami engha irukkunnu
sinnavayasula ya purusana saaha koduththuddu nikkaraale poNNu avakidda keeLu saambi enghannu
vayasaana kaalththula peththanvanghala viduRaanee...avan kitta keeLu saambi enghannu
kaiyilayum kaallayum vizunthu ooddu vaanghi makkala eemaththuraane...avankidda keelU saami ennanu
appeey...saami irkkanumnutheen aasa padureen naanghaLum
irunththa koduma paNRavan kuththi kizikkanum...summa peesaathiiya saamikku niinghatheen poruppu maathiro
தெருவுல படுத்திருக்கானே அவன் கிட்ட கேளு ஏன் சாமி எங்க இருக்குன்னு
சின்னவயசுல ய புருசன சாக கொடுத்துட்டு நிக்கராலெ பொண்ணு அவகிட்ட கேளு சாம்பி எங்கன்னு
வயசான கால்த்துல பெத்தன்வங்கல விடுறானே...அவன் கிட்ட கேளு சாம்பி எங்கன்னு
கையிலயும் கால்லயும் விழுந்து ஓட்டு வாங்கி மக்கல ஏமத்துரானெ...அவன்கிட்ட கேலூ சாமி என்னனு
அப்பேய்...சாமி இர்க்கனும்னுதேன் ஆச படுரேன் நாங்களும்
இருந்த கொடும பண்றவன் குத்தி கிழிக்கனும்...சும்ம பேசாதீய சாமிக்கு நீங்கதேன் பொருப்பு மாதிரொ
நான் அனானி இல்ல மக்கா...
அன்னியன்....! தப்பா பேசுறவன் கும்மியடிக்கிறவன், பொய் சொல்றவன் பொம்பள பின்னால போறவன் மூட நம்பிக்கைய நம்புறவன் எல்லா பிளாக்குகும் வருவாய்யா இந்த அன்னியன்
அனானி இல்ல அன்னியன்!
anybody is there
எல்லா பேரும் பயந்து போய் போய்ட்டதால
பிளாக் ஓனரு சவுந்தரு கப்ப என்கிட்ட கொடுத்துரு மக்கா
ஏய் நான் செயிச்சுடேன் செயிச்சுடேன் செயிச்சுட்டேன்
அனானி வந்தாலே அதிரடி
எல்லாரும் ஆணின்னு ஓடிட்டாங்க
கடவுள் இல்லைன்னு சொல்றவனை நம்பலாம். கடவுள் இருக்கான்னு சொல்றவனையும் கூட நம்பலாம்... ஆனா நன் தான் கடவுள்னு சொல்றவன மட்டும் நம்பவே கூடாது ... அன்பே சிவம் படத்துல கமல் மாதவன் கிட்ட சொல்லும் காட்சி இதற்கு பொருந்தும்.
நான் இருக்கேன் ராசா கேளு...
உனக்கு என்ன தோணுதோ கேளு....
கடவுள் எங்க இருக்காரு காமிங்க மக்கா?
STS
ஏனுங்க கடவுளு இருக்கார இல்லியான்னு பஞ்சாயாத்துங்கண்ணா! ஆற நம்புறதுன்னு யாருங்கண்ண உங்க கிட்ட கேட்டா
கட்ரைய நல்ல படிங்கண்ணா
வெறும்பய //
எங்க கண்ணு சவுண்ட காணோம்?
இரு மக்கா வரேன்...
என்னச்சு கண்ணு வெறும்பய கேட்ட கேள்விக்கு பதில காணோமே கண்ணு
கடவுள் இருக்காரே...
நீங்க பாத்ததில்லையா....
கடவுளும் நானும் நல்ல தலைப்பு. எனக்கு கடவுள பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்குப்பா. அதனால கடவுள பத்தி கருத்துச்சொல்லுற அளவுக்கு விவரம் பத்தாது.
கட(வுள் ) இருக்கிறார் என்பதை கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் தேடிகொண்டிருக்கிரர்கள்,,,,கடவுள் இல்லை என்பவர்களும் இல்லை என்று உறுதியாக்க ஆராய்சியை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள் ,,,இருவருமே எதோ தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ? இதுதான் இன்றைய உண்மை !
இது இன்று நேற்று அல்ல காலம் காலமாக நடக்கும் ஒருதேடல் ?
நாராயணன் நாரதர் கதை நானும் கேட்டு இருக்கேங்க... அருமையான கருத்து... நன்றி
இந்த தலைப்பில் உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி... என்னோட அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியமைக்கு மிக்க நன்றிங்க சௌந்தர்
என்னைப் பொறுத்த வரையில்... எதுவுமே அளவோடு இருப்பது நல்லது..
பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்.
பெயரில்லா
//ஒரு பக்கியும் சாமிய பாத்தது இல்லா ஆன கொடுகுற பில்டப்ப பாரு....! பொய் பேசாம கோவப்படாம தில்லு இருந்தா நான் கேக்குற கேள்விக்கு ஒவ்வொரு ஆளா பதிலச்சொல்லு....//
அண்ணே இது அநியாயம்... எல்லரும் போனதும் வந்து சவுண்டு விட்டு போய் இருக்கா....
@பெயரில்லா
அண்ணே நிரைய கேள்வி கேட்டு இருக்கிய... அதுக்கு எல்லம் பதில் சொன்ன கர்மா, பாவம், புன்ணியம் இப்படி போகும். அது எல்லம் இரண்டாம் கட்டம். நீங்க கடவுள் இருக்காரு ஒத்துகோங்க அப்புரம் அந்த தலைப்பு பேசலாம்.
(அண்ணே இப்பவும் சொல்ரேன் நான் கடவுள் கட்சி இல்ல... உனக்கு நம்பிக்கை இல்லனு.... கடவுள நம்பரவன் மனச கயப்படுத்தாதே... அப்படினு சொல்ர மனுசன் கட்சி)
@பெயரில்லா
// சொல்லு... நீங்க எல்லாம் ஏசி ரூம்லயும் காசு பனம்னு இருக்கம்னு பேசுதியலா?
இருந்த கொடும பண்றவன் குத்தி கிழிக்கனும்...சும்ம பேசாதீய சாமிக்கு நீங்கதேன் பொருப்பு மாதிரொ //
ஆனா ஒரு விஷயம்னெ.... உனக்கு கோவம் கடவுள் மேல இல்ல. இந்த சமுதாயத்து மேல ஒரு தார்மிக கோவம்... அந்த வகைல நீ நல்லவந்தான்.. எனக்கு என்னவோ நீங்க ஒரு பதிவரா இருப்பியலோ சந்தேகமா இருக்கு...
@பெயரில்லா
//அனானி இல்ல அன்னியன்! //
ஐயயோ!!!! என்ன நீங்க ஸேம் ஸைட் கோல் போட்டிங்க? அன்னியன் யாரு? நரகத்துல கொடுக்கர தண்டனை பூமில கொடுக்கரவன்... நரகம் இருக்கு நம்பர பய... அப்பொ கடவுள் இருக்கு அகிடாத? போங்க அண்னே அடுத்தவன் பாக்கரதுக்கு முந்தி அந்த கம்மண்ட் அழி.
@பெயரில்லா
//பிளாக் ஓனரு சவுந்தரு கப்ப என்கிட்ட கொடுத்துரு மக்கா//
என்னது கப்பா??? இதுக்குதான் இந்த சவுண்டா? ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா..... ப்ளிஸ் அந்த கப்ப கொடுத்துடுபா....
@பெயரில்லா
//அனானி வந்தாலே அதிரடி
எல்லாரும் ஆணின்னு ஓடிட்டாங்க //
போங்க அண்ணே போய் ரெஸ்ட் எடுங்க.... அண்ணனுக்கு ஒரு சோடா......
கலக்கி இருக்கீங்க சௌந்தர்..
நியாமான கேள்விகள், பதிலற்ற கேள்விகள், நன்றாய் கேட்டு இருக்கிறீர்கள் நன்றாய் உரைக்கும்படி ....
எனக்கு சாமிய தெரியும் .....
ஒரு -ச்சாமி , ஈரு-ச்சாமி, முனு -ச்சாமி, நாலு -ச்சாமி, அஞ்சு -ச்சாமி அப்புறம் ..... ஆசாமி .....
Post a Comment