Tuesday, August 17

பெண்களின் புதிய கலாச்சாரம்...

பண்ணை வீட்டில் நள்ளிரவில்  நடனத்துடன் நடந்த மது விருந்தில் பங்கு கொண்ட 20 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர். இப்படி செய்திகள் தினம் தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது..

ஆண்களே குடிக்க கூடாது என்று சொல்லி கொண்டு வந்தோம் இப்போது பெண்கள் குடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..இன்றைய இளைய தலை முறை பெண்களுக்கு. மது குடிப்பதும் புகை பிடிப்பதும் ஒரு தவறு என்று தோன்றுவதே இல்லை..

வெளி நாட்டில் தானே பெண்கள் குடிக்கிறார்கள் என்று நாம் அதை கண்டு கொள்ளாமல் இருந்தோம், அது மெல்ல நகர்ந்து வட இந்தியாவிற்கு வந்தது,,அப்படியே நகர்ந்து இப்போது நம் தமிழ் நாட்டிலும் இந்த கலாச்சாரம் வந்துள்ளது..இந்த கலாச்சாரத்தால் நாட்டிற்க்கு மட்டும் கெடுதல் இல்லை வீட்டிற்கும் கெடுதல் .. அந்த பெண்ணின் உடல்நலத்திற்கும் கெடுதல் ....இந்த கலாச்சாரம் நாளை உங்கள் வீட்டிலும் நடக்கலாம்...சில பெண்கள் குடிப்பதால் அனைத்து பெண்களுக்கும் அது கெட்ட பெயர் வாங்கி தருகிறது... 


வீட்டில் குழந்தைகள் முன்னாடி குடிக்கும் ஆண்கள் முதலில் இதை நிறுத்த வேண்டும். குழந்தைகள் முன்னாடி குடித்தால் அவர்களுக்கு குடிப்பது தவறு என்று தெரியமாலே போய் விடும்..


சீரியல் பார்க்கும் பெண்களே, அதை தட்டி கேட்க்க முடியாத ஆண்களே  செல்லமே சீரியலில் பெண் குடிக்கும் காட்சி தினம் தோறும் வருகிறது அதை உங்கள் குழந்தைகளும் உங்கள் வீட்டு அம்மணியும் பார்த்தால் ஒரு நாள் அவர்களும் அதை செய்வார்கள்..இந்த மாதிரி காட்சி வரும் போது குறைந்த பட்சம் அந்த சேனலை மாற்ற வேண்டும்..      

                                                                      
மது குடிக்கும் பெண்களுக்கு முகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதற்கு முக்கிய காரணம் கல்லீரலில் ஏற்படும் பிரச்சினைகள். ஆண்களை விட பெண்களின் கல்லீரல் ஆல்கஹால் தாக்கத்தின் காரணமாக விரைவில் கெட்டுவிடும். ஆல்கஹாலின் தாக்கத்தால் கல்லீரல் சுருங்கி, கொழுப்பு அதிகமாகி விடுவதால், என்சைம்களில் அதிக சிக்கல் உண்டாகும். ஆண்களைவிட பெண்களுக்கு கொழுப்பு அதிகம் என்பதால், வெகுவிரைவில் கல்லீரல் கெட்டு, ரத்தத்திலும் மதுவின் தன்மை அதிகம் கலந்து விடும். சில நேரங்களில் மரணம் ஏற்படும் அபாயமும் உண்டு


                                                                         

மதுவின் தாக்கம், பெண்களுக்கு கல்லீரலோடு, இதயத்தையும் சேர்த்து தாக்கும். பெண்களுக்கு மன அழுத்தமும், மதுவின் தாக்கமும் ஒன்றுசேர, இதயநோய் அழையா விருந்தாளியாக வந்து பாடாய் படுத்தும். மது குடிப்பதால் ரத்த அழுத்தம் அதிகமாகி, இதயத்தை பலவீனபடுத்தும். இதனால் ரத்த அழுத்தத்தை தாங்காமல் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் வீங்கும்.
சிலருக்கு அழுத்தம் அதிகமாகும்போது வெடித்து விடும் அபாயமும் உண்டு. இல்லாவிட்டால் இதயத்தில் அழுத்தம் தாங்காமல் ஓட்டை விழும். தேவையில்லாமல் இதயம் அதிகமாக துடிப்பதும், இல்லாவிட்டால் மெதுவாக துடிப்பதும் இதயநோய்க்கான அறிகுறிகள். மேலும் உடல் எடை அதிகரித்து, அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிப்படையும்.


                                                                     
                                                                         


விளையாட்டாக ஆரம்பிக்கும் இந்த பழக்கம் நாளடைவில் விட முடியமால் தவிக்கிறார்கள் பெண்கள்..இப்போது சில பெண்கள் நாளை?????
  

68 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தம்பி நீ டாஸ்மாக் வந்துடு. நாம தண்ணி அடிச்சிக்கிட்டே இத பத்தி பேசலாம்...

கே.ஆர்.பி.செந்தில் said...

நானும் குடிப்பவன் என்பதால்
இதைப்பற்றி என்னால் கருத்து கூற முடியாது..

விந்தைமனிதன் said...

நல்லாவே இருக்கு... உறைச்சா சரி

ஒருவேளை இவங்கதான் புதும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மைப் பொண்ணுங்களோ என்னவோ?

jokes aparts,

குடிப்பது என்ற கலாச்சாரம் தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கம்தான்

"சிறியகட் பெறினே, எமக்கு ஈயுமன்னே!
பெரியகட் பெறினே,
யாம்பாடத், தான்மகிழ்ந்து உண்ணும், மன்னே!"

என்ற அவ்வையின் பாடலின் பொருளை சற்று ஆராய்ந்து பாருங்களேன்! மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்

விஜய் said...

நீங்கள் சொல்வது சரி தான் சௌந்தர், பெண்கள் தன்னை ஆண்களுக்கு இணையானவர்கள் என்பதை காட்டிக்கொள்ள இப்படி கண்மூடித்தனமான தவறுகளை செய்து வருவது உண்மை தான், இவைகள் ஏதோ ஒரு சில இடங்களில் தான் நடக்கிறது சௌந்தர், அதாலால் அதிகபட்சம் என்று கூறிவிட முடியாது ,

ஜீவன்பென்னி said...

நல்ல விசயம்.

Anonymous said...

kallam kalikalam aagi poochu da. Quater kadavulaga aagi poochu da. dad sona varthai yiellam malai yari poochu da.

வால்பையன் said...

மது உணவின் ஒரு அங்கம், அளவுக்கு அதிகமான சாப்பிடுற பொருள் கூட தான் உடம்பை கெடுக்கும்! நீங்க இருமலுக்கு சாப்பிடுற டானிக்குல ஆல்கஹால் இருக்கு! பழைய சோத்துல ஆல்கஹால் இருக்கு! அளவா வச்சிகிட்டா தப்பில்லை தல!

அருண் பிரசாத் said...

பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் மது குடிப்பது உடல்நலத்திற்கு தீங்கானது

dheva said...

அதிகமாக குடித்து தன்னிலை மறந்து பேசுவது இழிவாக நடப்பது தவறு...

குடிப்பது.... தவறா??????

யார் சொன்னது தவறென்று....!

ஆட்டம் ஆரம்பிச்சு வைக்கிறேன்...வர்றவங்க.. வாங்க..!

விந்தைமனிதன் said...

தொல்குடிக் கலாச்சாரங்களிலெல்லாம் குடி ஒரு கொண்டாட்டமாகவே இருந்து வந்திருக்கிறது... ஆண்பெண் பேதமின்றி.... எனவே இது மிக விரிவாய்ப் பேசப்பட வேண்டிய விஷயம் நண்பரே!

dheva said...

குடிப்பது தவறு என்று சொல்லும் ஆண்களில் எத்தனை பேர் மது அருந்துவதில்லை....!

ப.செல்வக்குமார் said...

ஆண் என்றால் என்ன , பெண் என்றால் என்ன ..?
மது அருந்துவது தவறு தான் ..!! ஆனன பெண்களிடம் இவ்வளவு தீங்கினை ஏற்படுத்தும் என்று சொன்னது எனக்குப் புதிய தகவல்.

ப.செல்வக்குமார் said...

// குடிப்பது தவறு என்று சொல்லும் ஆண்களில் எத்தனை பேர் மது அருந்துவதில்லை....!//
நான் அருந்துவதில்லை. அதைவிட மது அருந்தாதவர்கள் தான் மது அருந்துவது தவறு என்று கூற வேனிய அவசியம் இல்லை அண்ணா ..

dheva said...

மது அருந்துவது தவறா? இல்லை அதிகமாக அருந்துவது தவறா?

இந்தியாவில் தடுக்கப்பட்டது வேறு நாட்டில் சட்டம். இந்தியாவில் சட்டமாக்கப்ப்ட்டது வேறு நாட்டில் தடை.

நமது சித்தாந்தங்கள் ஏற்படுத்திய மூளையினால் பார்ப்பது சரியா? இல்லை பொதுவில் நின்று பார்பது சரியா?

குடிப்பவர்கள் கெட்டவர்களா? குடிக்காதவர்கள் நல்லவர்களா...

thambi.. selvu....... pls...!

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்
//பெண்களுக்கு கொழுப்பு அதிகம் என்பதால்//

அட பாவி...இப்படி பப்ளிக்கா பேசற... பாத்துய மகளிர் அணி கும்மிட போகுது...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

என்னை பொறுத்தவரை மதுவை அளவோடு அருந்துவது தவறில்லை என்றுதான் படுகிறது

ஆனாலும் சுயமாக சம்பாதித்த காசில் குடித்தால் என்ன எக்கேடு கெட்டால் என்ன?? அது அவரவர்களின் மனநிலை

வீட்டில் பையனோ/பொன்ணோ படிக்க பணம் கேக்குறாங்கன்னு கொடுக்குறாங்க,அதுல் போய் சரக்கடிக்கிற பசங்கள என்னத்த சொல்ல ???????

dheva said...

தம்பி...ஜில்தண்ணியை... ..ஆமோதித்து வரவேற்கிறேன்....!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// குடிப்பவர்கள் கெட்டவர்களா? குடிக்காதவர்கள் நல்லவர்களா... ///

கெட்டவர் என்று ஒருத்தரை எதை வைத்து சொல்கிறீர்கள் அண்ணா

ஜில்தண்ணி - யோகேஷ் said...

இந்த பழக்கம் மேல் தட்டு பெண்களிடம் தான் பெருகி வருகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று

பணம் இருக்கு குடிக்கிறாங்க,அவ்வளவுதான்

dheva said...

தம்பி ஜில்தண்ணி...@

அதைதான் நான் கேட்கிறேன்....குடிப்பது தப்பு என்று சொல்பர்களிடம்...! கொஞ்சம் கேட்டு சொல்லுப்பா...!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

//// குடிப்பவர்கள் கெட்டவர்களா? குடிக்காதவர்கள் நல்லவர்களா... ////

குடிப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்களும் அல்ல , குடிக்காதவர்கள் எல்லொரும் ஒழுங்கும் அல்ல

exeptions are not examples

virutcham said...

இந்த பெண்களின் புகைப்படங்களை ( குறிப்பா கல்லூரி மாணவிகள் ) தவிர்த்து இருக்கலாம். எதோ ஒரு நாள் ரெண்டு நாள் விளையாட்டா செய்துட்டு விட்டுட வாய்ப்பு இருக்கு. இப்படி பொது வெளியில் வெளியிட்டு அவங்களுக்கு அதனால் பின்னால் பிரச்னை வரலாம்.

மது, புகை பிடித்தல் தீமைகள் குறித்த awareness ஆண் பெண் இருபாலருக்கும் பள்ளியிலேயே கொடுக்க வேண்டும்.

வெறும்பய said...

குடிப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்களும் அல்ல , குடிக்காதவர்கள் எல்லொரும் ஒழுங்கும் அல்ல..
//

சரியா சொன்னடா என் மவராசா..

வினோ said...

/ இந்த பழக்கம் மேல் தட்டு பெண்களிடம் தான் பெருகி வருகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று

பணம் இருக்கு குடிக்கிறாங்க,அவ்வளவுதான் /

ஜில்லு, அப்படி சொல்ல முடியாது.. அவுங்க வோட்கா குடிக்கிறாங்க... இல்லாதவங்க டாஸ்மாக்கில் 60 ரூபாய் சரக்கு குடிக்கிறாங்க..

வெறும்பய said...

virutcham சொன்னது…

இந்த பெண்களின் புகைப்படங்களை ( குறிப்பா கல்லூரி மாணவிகள் ) தவிர்த்து இருக்கலாம். எதோ ஒரு நாள் ரெண்டு நாள் விளையாட்டா செய்துட்டு விட்டுட வாய்ப்பு இருக்கு. இப்படி பொது வெளியில் வெளியிட்டு அவங்களுக்கு அதனால் பின்னால் பிரச்னை வரலாம்.

//

நண்பரே அந்த கல்லூரி மாணவிகளின் புகைப்படத்தை நீங்கள் இங்கே தான் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்... அது ரொம்ப பழையது... ஏறக்குறைய எல்லோர் இன்பாக்ஸ்லும் இருக்கும்...

வினோ said...

// குடிப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்களும் அல்ல , குடிக்காதவர்கள் எல்லொரும் ஒழுங்கும் அல்ல..//


ஆமோதிக்கிறேன்!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// ஜில்லு, அப்படி சொல்ல முடியாது.. அவுங்க வோட்கா குடிக்கிறாங்க... இல்லாதவங்க டாஸ்மாக்கில் 60 ரூபாய் சரக்கு குடிக்கிறாங்க.. ///

எனக்கு தெரிந்தவரை எந்த பெண்ணும் டாஸ்மாக் சரக்கு அடித்ததாக கேள்விப் படவில்லை

அப்பரம் நம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கிறது,அதனால் அவர்கள் இதை செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன்

வெறும்பய said...

ப.செல்வக்குமார் சொன்னது…
நான் அருந்துவதில்லை.

///

தம்பி ஒரு பானை சோற்றிக்கு ஒரு சோறு பதம் ஆகாது...

dheva said...

1) அவர் அவர் விழிப்புணர்வு நிலைக்கு ஏற்ப குடித்தல் அவரின் சொந்த பிரச்சினை....

2) பெண்கள் என்று மட்டுப்படுத்தி பார்த்தல் நீக்கல் வேண்டும்

3) நல்லவர் கெட்டவர் என்பதற்கும் மது அருந்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ப.செல்வக்குமார் said...

//குடிப்பவர்கள் கெட்டவர்களா? குடிக்காதவர்கள் நல்லவர்களா...///
அண்ணா நான் இங்கே நல்லவர்கள் கேட்டவர்கள் பற்றி கூற வில்லை ...
குடிப்பழக்கம் பற்றி கூறிக்கொண்டிருக்கிறேன்..

dheva said...

சரி கேள்வியை மாற்றுவோம்...

அவரவர் விழிப்புணர்வு நிலையில், குடிப்பது தவறா ? சரியா?

again.. thambi.. .selve pls.........!

Balaji saravana said...

//அவர் அவர் விழிப்புணர்வு நிலைக்கு ஏற்ப குடித்தல் அவரின் சொந்த பிரச்சினை....//
ரிப்பீட்டு.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// அவரவர் விழிப்புணர்வு நிலையில், குடிப்பது தவறா ? சரியா? ///

குடித்துவிட்டு வீடு போய் சேர விழிப்பு இருந்தால் சரி,அதை தாண்டி இஷ்டத்துக்கு குடித்துவிட்டு கார் / பைக் ஓட்டினால் அவருக்கு மட்டுமல்ல ரோட்டில் போகும் மக்களுக்கும் ஆபத்துதானே

ப.செல்வக்குமார் said...

என்னைப் பொறுத்த வரையில் அது தவறுதான். அவர் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் கேடு விளைவிக்கும் குடிப்பழக்கத்தினை வைத்திருப்பது தவறான பழக்கமே. மருத்துவரின் ஆலோசனைப்படி குடிப்பது இதில் அடங்காது. என்னைப் பொறுத்தவரையில் குடிப்பழக்கத்தின் மூலம் சந்தோசமாக இருக்கிறேன் என்பது பற்றி எனக்குத் தெரியாது. சந்தோசம் என்பது அவரவரின் விருப்பபடி. ஏன்னா எனக்கு மொக்கை போடுறது பிடிக்கும் .. மத்தவங்களுக்குப் பிடிக்காதுல்ல அது மாதிரி ..

வால்பையன் said...

//குடித்துவிட்டு வீடு போய் சேர விழிப்பு இருந்தால் சரி,அதை தாண்டி இஷ்டத்துக்கு குடித்துவிட்டு கார் / பைக் ஓட்டினால் அவருக்கு மட்டுமல்ல ரோட்டில் போகும் மக்களுக்கும் ஆபத்துதானே //


குடித்து வண்டி ஓட்டினால் விபத்து நடக்கும்னு எல்லாருக்கும் தெரியும், அப்படியும் ஓட்டுவது அவனது மடத்தனம், என்னை போல் வீட்டில் மனைவியை ஆம்லெட் போடசொல்லி ஜாலியாக சரக்கடிப்பவர்கள் ஏன் அதற்காக க்குடிக்காமல் இருக்கனும்!

ப.செல்வக்குமார் said...

/// என்னை போல் வீட்டில் மனைவியை ஆம்லெட் போடசொல்லி ஜாலியாக சரக்கடிப்பவர்கள் ஏன் அதற்காக க்குடிக்காமல் இருக்கனும்! ///
தாராளமா ..? அது உங்கள் விருப்பம்...

வால்பையன் said...

பின்னூட்டம் மாறி வந்துருச்சு ஸாரி

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@ செல்வா

ரைட்டுதான் மச்சி

நாம குடிக்கமாட்டோம்,எப்போதும் அப்படியே இருப்போம்

குடிப்பவர்கள் அதாவது சொந்த சம்பாதியத்தில் அளவறிந்து குடிப்பவர்களை நான் ஒன்றும் சொல்லவில்லை

மாணவர்கள் குடிப்பது ரொம்ப ரொம்ப கவலைக்குரிய விடயம்,அதுவும் இப்ப எட்டாவதுல தம்மடிக்குது,பத்தாவதுல தண்ணியடிக்குது,பனிரெண்டாவது போகும் போது சொல்லவா வேண்டும் ???

இவர்களை கட்டிப் போட்டு அடிக்கனும்

வால்பையன் said...

//மாணவர்கள் குடிப்பது ரொம்ப ரொம்ப கவலைக்குரிய விடயம்,அதுவும் இப்ப எட்டாவதுல தம்மடிக்குது,பத்தாவதுல தண்ணியடிக்குது,பனிரெண்டாவது போகும் போது சொல்லவா வேண்டும் ??? //


நீங்கெல்லாம் எந்த ஊர்ல இருக்கிங்க, நான் தம் அடிக்கும் போது 9 வயசு, தண்ணியடிக்கும் போது 13 வயசு!

காலம் ரொம்ப வேகமா போகுது அண்ணன்களா, சீக்கிரம் வந்து சேர்ந்து கோங்க, இல்லைனா அடுத்த தலைமுறை உங்களை முந்தி செல்லும்!

dheva said...

என் தம்பி ஜில்தண்ணி நான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக எடுத்து சென்று கொண்டிருப்பதால்...தம்பி பாத்துக்கொள்வான் இனி.....!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// குடித்து வண்டி ஓட்டினால் விபத்து நடக்கும்னு எல்லாருக்கும் தெரியும், அப்படியும் ஓட்டுவது அவனது மடத்தனம், என்னை போல் வீட்டில் மனைவியை ஆம்லெட் போடசொல்லி ஜாலியாக சரக்கடிப்பவர்கள் ஏன் அதற்காக குடிக்காமல் இருக்கனும்! ////

ஜாலியாகவா :) ரைட்டு அது உங்கள் விருப்பம்

வீட்டில் குடிப்பதற்கும் ஒரு அளவு வைத்திருக்கிறீர்கள் அல்லவா ??

வால்பையன் said...

//வீட்டில் குடிப்பதற்கும் ஒரு அளவு வைத்திருக்கிறீர்கள் அல்லவா ?? //


அதற்கு மேல் குடித்தால் மண்டையில் பூரிக்கட்டை முத்தம் கொடுக்கும் என்பது தெரியாதா அண்ணே!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// நீங்கெல்லாம் எந்த ஊர்ல இருக்கிங்க, நான் தம் அடிக்கும் போது 9 வயசு, தண்ணியடிக்கும் போது 13 வயசு!//

தம்மடிக்கிறதுனால உங்களுக்கு அப்படியென்ன சுகம் கிடைக்கிறது

வால்பையன் said...

//தம்மடிக்கிறதுனால உங்களுக்கு அப்படியென்ன சுகம் கிடைக்கிறது //


நான் காபி டீ சாப்பிட மாட்டேன்!

நல்ல துக்கத்தில் கையில் சூடு வச்சா அதன் பிறகு தூக்கம் வருமா உங்களுக்கு, சுறுசுறுப்பா ஆகிற மாட்டிங்க, அது மாதிரி எனக்கு தம்மு!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// காலம் ரொம்ப வேகமா போகுது அண்ணன்களா, சீக்கிரம் வந்து சேர்ந்து கோங்க, இல்லைனா அடுத்த தலைமுறை உங்களை முந்தி செல்லும்! ///

முந்திச் சென்றால் செல்லட்டும்,இந்த விஷயத்தில் நான் என்னை மாற்றிக் கொள்ள முடியாது

ப.செல்வக்குமார் said...

/// தம்மடிக்கிறதுனால உங்களுக்கு அப்படியென்ன சுகம் கிடைக்கிறது ///
அதுதான் எனக்கும் தெரிய மாட்டேங்குது .. எல்லாமே பெரியவர்களைப் பார்த்து சிறியவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். சின்ன பசங்களுக்கு அதனால என்ன தீங்கு வரும் அப்படின்னு தெரியாது .. ஆனா பெரியவங்க புகை விடுரதப் பார்த்து நாமளும் சுருள் சுருளா பொகை விடனும் அப்படிங்கிற ஆசை வருது .. இதத்தான் நாங்களும் தப்புன்னு சொல்லுறோம்.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

///நான் காபி டீ சாப்பிட மாட்டேன்!

நல்ல துக்கத்தில் கையில் சூடு வச்சா அதன் பிறகு தூக்கம் வருமா உங்களுக்கு, சுறுசுறுப்பா ஆகிற மாட்டிங்க, அது மாதிரி எனக்கு தம்மு! ///

ஆக தம்மில் கெடுதல் இருக்குன்னும் தெரிஞ்சும் சுறுசுறுப்புக்கு தேவைப்படுது,அப்ப ஒரு நாளைக்கு இதுக்காக எவ்வளவு செலவு பண்றீங்க :)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// அதற்கு மேல் குடித்தால் மண்டையில் பூரிக்கட்டை முத்தம் கொடுக்கும் என்பது தெரியாதா அண்ணே! ///

நான் சின்னப் பையன் தானே ,அதான் இதெல்லாம் தெரியல வால் :)

வால்பையன் said...

//பெரியவங்க புகை விடுரதப் பார்த்து நாமளும் சுருள் சுருளா பொகை விடனும் அப்படிங்கிற ஆசை வருது .. இதத்தான் நாங்களும் தப்புன்னு சொல்லுறோம். //


அதுக்கு தான் பொது இடத்தில் புகை பிடிக்கக்கூடாதுன்னு சட்டம், உங்களுக்கு பிடிக்கலைனா அழுத்தமா நிராகரிங்க, குடிச்சா போலிஸ் கூப்பிடுவேன்னு சொல்லுங்க, ஒரு வயசு குழந்தைக்கும் இந்த பூமியில் ரைட்ஸ் இருக்கு! நம்ம மொக்கை மன்னனுக்கு இல்லாம போயிருமா!

வால்பையன் said...

//தம்மில் கெடுதல் இருக்குன்னும் தெரிஞ்சும் சுறுசுறுப்புக்கு தேவைப்படுது,அப்ப ஒரு நாளைக்கு இதுக்காக எவ்வளவு செலவு பண்றீங்க :)
//


மனசை விட இந்த உலகில் கெட்ட சமாச்சாரம் எதுவுமில்லை, உலகை விட அதிகமான குப்பைகள் உள்ளே கிடக்கு! அதை முதலில் சுத்தம் பண்ணுவோம்! தம்மை பிறகு கவனிப்போம்!

ப.செல்வக்குமார் said...

///அதுக்கு தான் பொது இடத்தில் புகை பிடிக்கக்கூடாதுன்னு சட்டம், உங்களுக்கு பிடிக்கலைனா அழுத்தமா நிராகரிங்க, குடிச்சா போலிஸ் கூப்பிடுவேன்னு சொல்லுங்க///
நாங்க சொல்லுறது வீட்டுக்குள்ள கூட .. குழந்தைகள் அங்கிருந்தானே பழகுறாங்க ..??

Jey said...

என்னப்பா தம்பி, யாரும் சரக்கு வாங்கித்தரலையா, இந்த குமுறு குமிரியிருக்கே....:).

மேல போட்ட கமென்ஸ் சும்மா தமாசு நோ டென்ஷன் நோ பிபி.

எனக்குமிந்த பழக்கம் உண்டு, இங்க சொன்ன காரணங்கள் தாண்டி இன்னும் அதிகமாக இதனால் ஏற்படும் கிடுதல்கள் தெரிந்தே செய்து கொண்டு இருக்கிறேன், விளையாட்டாக, ஜாலிக்காக நண்பர்களுடன் ஆரம்பித்தது... இப்போது அலுவலக வேலை நிமித்தமாகவோ, தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் டென்ஷனின் போதோ ஒரு தம் அடித்தால் , மனசு கொஞ்சம் ரெலாக்ஸாக இருப்பதுபோல் ஒரு உணர்வு..., ஓவ்வொருவரும் அதை சமாளிக்க ஒவ்வொரு உபாயத்தை மேற்கொள்கிறார்கள்.

மற்றபடி புகை மற்றும், குடிப்பழக்கம் அதிகக்கேடுகளையே தருகிரது என்ற கருத்து முற்றிலும் உண்மையானதே..., இது அந்த பழக்கம் இல்லாதவர்களை விட, பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகம் தெரியும் என்பது என் கருத்து..

ப.செல்வக்குமார் said...

//இது அந்த பழக்கம் இல்லாதவர்களை விட, பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகம் தெரியும் என்பது என் கருத்து..
//
உண்மைதான் அண்ணா ..!!

ponraj said...

அருமையான பதிவு!!!

பிரவின்குமார் said...

சரியான நெத்தியடி பதிவு நண்பரே..! இதை படித்தாலாவது ஒரு சிலர் விழிப்புணர்வு பெற்றால் அதுவே இப்பதிவின் வெற்றி..! இது போல் இன்னும் நிறைய எழுதுங்க...
பாராட்டுகள் நண்பா..!

virutcham said...

என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தா இல்லையாநு தெரியலை. ஆனா நான் குறிப்பிட்ட படத்தை நீக்கி இருப்பதற்கு பாராட்டுக்கள்.

Jeyamaran said...

அருமையான பதிவு.............

குத்தாலத்தான் said...

அட என்னப்பா தம் அடிக்கிறதுல இவ்ளோ பிரச்சனையா? இரு போய் ஒரு தம் அடிச்சுட்டு வரேன் !!:)

குத்தாலத்தான் said...

அட என்னப்பா தம் அடிக்கிறதுல இவ்ளோ பிரச்சனையா? இரு போய் ஒரு தம் அடிச்சுட்டு வரேன் !!:)

Jey said...

பெரும்பாலும் 5 டூ 10% மேல்தட்டு பெண்கள் என்று சொல்லப்படுகிற/தறிகெட்டு அலைகிற பெண்கள் தான் ஆணுக்கு சமம் என்ற ரீதியிலோ, மேல்தட்டு நாகரீகம் என்ற பேரிலோ இதை செய்கிறார்கள். 90% க்கு மேல் பெண்கள் இந்த செய்வதில்ல மாறாக வெறுக்கவே செய்கிறார்கள் என்பது என் கருத்து.

Jey said...

புகை/குடி தவறான பழக்கங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காதென்றீ நினைக்கிறேன். ஆனால் தறான பழக்கத்திற்கும்(habits), தறான பண்பு/நடத்தை( character) கொண்டவர்களுக்கும், வேறுபாடு இருக்கிறது.

தவRaaன பழக்கம், மற்றவர்களைவிட அவரையோ அவர் குடும்பத்தையோதான் அதிகம் பாதிக்கும், ஆனால் தறான நடத்தை உள்ளவர்களால்தான் அடுத்தவர்களும், இந்த சமுதாயமும் அதிகம் பாதிக்கப்படுகிறது என்பது என் கருத்து.

குடிக்கும் ஒரு பழக்கத்தை தவிற, வேரொன்றும் குறை சொல்ல முடியாத நல்ல மனிதர்களும்/நண்பர்களும் இருக்கிறார்கள், அதே மாதிரி, ஒரு கெட்டப்ப பழக்கமும் கிடையாது என்று சொல்லிக் கொண்டு மனுசத்தன்மையே இல்லாமல் இந்த சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.

imax said...

Al Quran 5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்

imax said...

Al Quran 5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்

வால்பையன் said...

//Al Quran 5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள் //


இதுல சிகரெட் பத்தி ஒன்னும் வரல, அதுனால அது தப்பில்லையா?
அம்புகள் எறிந்து குறி கேட்பது தான் தப்புன்னு இருக்கு, அப்ப கைரேகை ஜோசியம், கால் ரேகை ஜோசியம்லாம் பார்க்கலாமா? அந்த காலத்துல உளரிட்டு போனதையே இன்னும் சொல்லிகிட்டு இருக்கிங்க!

இருக்குறதுலயே பெரிய போதை பொம்பளை போதை, அது இருக்கே உங்ககிட்ட, அதுக்கு இது பரவாயில்லை போலயே!

என்னது நானு யாரா? said...

தல! அருமையா எழுதி இருக்கீங்க! குடி, சிகரெட், மற்ற போதை வஸ்துக்கள் எல்லாம் நம் மூளை திறனை மழுங்கடிக்கின்றன. மனிதன் பரிணாமத்தில் உயர்ந்து, நல்ல நிலை அடைய வேண்டுமானால் அவன் இந்த போதை விஷயங்களிலிருந்து மீண்டு வரவேண்டும்.

மது வகைகள் எல்லாம் Acid வகையை சேர்ந்தது. ஆசிட் சிறிய அளவு குடித்தாலும் குடல் பாழாகி, கல்லீரள் பாழாகி, கடைசியில் உடல் கெட்டு போகும். நண்பர்களே! சிந்தியுங்கள்!

என் வலைபதிவில் இயற்கை மருத்துவம் பற்றி எழுதுகிறேன். படித்து பார்க்க உங்களை அழைக்கிறேன். நாம் ஆரோகியமாக இருக்க, வேண்டியது கொள்ள வேண்டும், வேண்டாததை தள்ள வேண்டும்.

நன்றி!

Aruna said...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர்
டாஸ்மாக் என உரைத்து வாழ்வோம் - ????????????

Anonymous said...

ஆண்களும் பெண்களும் மது அருந்த கூடாதுன்னு தான் என் கருத்து.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////வெளி நாட்டில் தானே பெண்கள் குடிக்கிறார்கள் என்று நாம் அதை கண்டு கொள்ளாமல் இருந்தோம், அது மெல்ல நகர்ந்து வட இந்தியாவிற்கு வந்தது,,அப்படியே நகர்ந்து இப்போது நம் தமிழ் நாட்டிலும் இந்த கலாச்சாரம் வந்துள்ளது..////////

வெளி நாட்டுக்காரன் விட்டு சென்றதுதான் இன்னும் புகைகிறது என்று நினைக்கிறேன் . பொது இடத்தில் புகைப் பிடித்தால் தவறு என்கிறோம் அதையே அரசு அனுமதியுடன் குளிருட்டப் பட்ட அறைகளில் உள்ள விடுதிகளில் புகைப் பிடித்தால் அதைப் பார்த்து ரசிக்கிறோம் . இப்பொழுது இடத்தினால் மனிதனுக்கு பிரச்சனையா ? இல்லை அவர்கள் பயன் படுத்தும் போதைப் பொருட்களினால் பிரச்சனையா ? என்பது மிகப்பெரிய கேள்வியாக்கிப்போனது .
நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுதான் . பகிர்வுக்கு நன்றி .

 
;