Wednesday, August 18

உமா சங்கர் அவர்களுக்கு பதிவுலக அதரவு



                                                                    
பதிவர் திரு. தருமி அய்யா அவர்கள்,  திரு உமாசங்கர் இ.ஆ.ப அவர்களின் மேல் பழிவாங்கும் நோக்கில்,  
எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பதிவுலக நண்பர்களின் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.



இந்திய ஆட்சிப் பணியில் 1990ம் ஆண்டு சேர்ந்தவர் உமா சங்கர் இவர் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்ததாக அவர் மீது இருக்கும் குற்றச்சாட்டு. 


உமா சங்கர் விளக்கம் 
தான் ஐ ஏ எஸ் தேர்வு எழுதிய பிறகு மத்திய தேர்வாணையம் தான் அளித்த ஜாதி சான்றிதழை உறுதி செய்த பிறகே தனக்கு அரசால் பணியாணை வழங்கியதாகவும் உமா சங்கர் குறிப்பிட்டார்



14 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளார். அதிமுக ஆட்சியின் போது சுடுகாட்டு கூரை ஊழல் அம்பலபடுத்தியவர் இதற்காகவே அவர் பழிவாங்க பட்டார். பின் ஆட்சி மாறியதும் கலைஞர் தன் சொந்த ஊரான திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமித்தார்,  தனது அதிரடி நடவடிக்கையால் மக்களிடம் நல்ல பெயர் வாங்கினார்.   


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர், அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்தார். அப்போது, ஒரு சில சேனல்களுக்கு மட்டுமே ஏகபோக சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. அதை அனைத்துச் சேனல்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுத்தார்.  அப்போதே மாறன் குடும்பத்திற்கு கடுப்பை ஏற்படுத்தியது அதற்குப் பழிவாங்கும் விதத்தில் உமாசங்கர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.



எனவே தமிழக அரசை கண்டித்தும்.. உமா சங்கருக்கு ஆதரவாகவும் அனைவரும் இன்று ஒரு நாள் சிறப்பு இடுகை எழுத வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்








13 comments:

Unknown said...

அரசுக்கு எனது கண்டனங்களும்..

Jey said...

என் ஆதரவு உங்களுக்கு செளந்தர்.

ஜில்தண்ணி said...

நானும் இருக்கிறேன்

செல்வா said...

//தான் ஐ ஏ எஸ் தேர்வு எழுதிய பிறகு மத்திய தேர்வாணையம் தான் அளித்த ஜாதி சான்றிதழை உறுதி செய்த பிறகே தனக்கு அரசால் பணியாணை வழங்கியதாகவும் உமா சங்கர் குறிப்பிட்டார்
//
இதற்குப் பின்னர் எவ்வாறு அரசு தரப்பில் வழக்குத்தொடுத்தார்கள்.
உமா சங்கருக்கு எனது ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அருண் பிரசாத் said...

எனது கண்டனங்கள்

Anonymous said...

inda arasiyal vadigala ippadi taan soundar. me too against.......

tsekar said...

உமா சங்கருக்கு எனது ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கிறேன்

TSEKAR

ஜெயந்த் கிருஷ்ணா said...

இருக்கிறேன்...

அரசுக்கு எனது கண்டனங்களும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அரசின் செயல் கடும் கண்டனதிற்கு உரியது. உண்மை வெல்லும், வெல்ல வேண்டும், வெல்லச் செய்வோம்!

Jeyamaran said...

கொடுமையை எதிர்த்து குரல் கொடுக்கும் உங்கள் பணியை நாங்களும் பின் தொடருகிறோம்

அன்புடன் நான் said...

மிக்க நன்றிங்க செளந்தர்.

Anonymous said...

Me too

Unknown said...

நல்லவர்களை வாழவிடுமா நம் நாடு? (நாடு=அரசியல்வாதி)
இலவசத்துக்கு அலையும் நாம் எப்படி நல்லவர்களை வாழவைப்போம்?
கையில் 50 பைசா இல்லாமல் சென்னைக்கு வந்த ஒரு அரசியல் தலைவர் இன்று உலகில் பணக்காரர் வரிசையில் 300வது இடத்தில் உள்ளார்.ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றி கொண்டுதான் இருப்பார்கள்...
உமாசங்கர் அவர்களுக்கு பின்னால் நாங்கள் உண்டு...ஜாதி மத இன வேறுபாடு பார்க்காமல் ஒரு நல்லவருக்காக குரல் கொடுப்போமா?

 
;