Friday, August 20

கொசு கவிதை...


இது நான் எழுதிய கவிதை இல்லை என் நண்பர் எழுதிய கவிதை. தொடர்ந்து அவர் கவிதை வரும் 

கொசு கவிதை

நான் நன்றாக இருக்கும் போது வந்து கடித்தாய், 

என் ரத்தத்தை குடிப்பதற்கு 

இன்றோ நலம் குன்றி இருக்கின்றேன், 

இன்றும் வந்து கடிக்கின்றாய் 

எடுத்த ரத்தத்தை கொடுப்பதற்கா ?

குடிசை 

மழைக்காலம் வந்தாலே...

எனக்கு ஒரே சந்தேகம் தான்..

நான் வீட்டுக்குள் இருக்கின்றேனா.. ?

இல்லையா... ? 

     
எழுதியது 
 வெற்றி


32 comments:

dheva said...

கொசு....@ அதானே.....ரெண்டு பக்கமும் டபுள் சர்வீசா....


ரத்தம் எடுத்தாலும்...கொடுத்தாலும் கவிதைக்குப் பின்னே ஏழையின் இயலாமை மெலிதாய் இருக்கிறது.

குடிசை..@ சராசரி... இந்திய குடிமகனின் சந்தேகம்...!

Kousalya said...

ரசிகனில் கவிதை...!! அருமை...கவிதை கூட வித்தியாசமாக நச் என்று இருக்கு...தொடரட்டும் கவிதைகள்...

dheva said...

ரத்ததை எடுத்த கொசுவே..மறுபடியும் வந்துச்சா...இல்ல வேற கொசுவ அது சார்பா அனுப்பி வச்சுச்சா......?

தம்பி ஜில்தணி...மேடைக்கு வரவும்...!

dheva said...

கெளசல்யா...@ கொசு கூட நச்சுன்னு தான் கடிச்சு இருக்காம்...!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

// ரத்ததை எடுத்த கொசுவே..மறுபடியும் வந்துச்சா...இல்ல வேற கொசுவ அது சார்பா அனுப்பி வச்சுச்சா......? ///

இப்ப மேட்டர் என்னான்னா ரத்தம் எடுத்த கொசுவுக்கே அந்த ரத்தத்தின் மூலமா நோய் வந்து படுத்த படுக்கை ஆகிவிட்டதாம்

அதனால் தான் ஆள விடுப்பா நீயும் உன் ரத்தமும் நீயே வச்சுக்க என்று கொடுத்துவிட்டு ஓடிவிட்டதாம்

dheva said...

கெளசல்யா...@ எது தொடாரட்டும்...? கொசுக்கடியா?

Kousalya said...

//dheva சொன்னது…
கெளசல்யா...@ எது தொடாரட்டும்...? கொசுக்கடியா?//

நல்லா பாருங்க... //தொடரட்டும் கவிதைகள்...//

:)

அருண் பிரசாத் said...

செளந்தர் வீட்டுக்கு 1 லாரி கொசு பார்சல்

dheva said...

கெளசல்யா..@ ஓ கொசுக்கடி கவிதைகளா...

" மலர்ந்தும் மலராதா பாதி மலர் போல... பாசமலர்கள் வாழ்க!

dheva said...

அருண்..@ கொசு பார்சலா....

உன் வீட்டுக்கு ஒரு லாரி அருவா பார்சல்...!

Balaji saravana said...

குடிசை ஒகே!
பட் கொசு, கடி தாங்க முடில சௌந்தர்! :)

கே.ஆர்.பி.செந்தில் said...

ம் ....

என்னது நானு யாரா? said...

பயபுள்ளங்க என்ன அருமையா எழுதறாங்க, சின்ன சின்ன வரியில் மனச அள்ளுற மாதிரி! சூப்பருங்கோ!

vengaates said...

கொசுக்கடியா?

ப.செல்வக்குமார் said...

அந்த குடிசை கவிதை டாப்பு ..
கொசுவும் நல்லாத்தான் கடிக்குது ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தம்பி இது சுட்ட கவிதையா சுடாத கவிதையா?

TERROR-PANDIYAN(VAS) said...

நீங்கள் ஒரு நல்ல பதிவர்... அதனால் தொடர், சிறுகதை இப்படி முயர்ச்சி செய்யலாமே??

(இப்பவது கவிதை எழுதரத நிறுத்துதா பார்ப்போம்..)

சௌந்தர் said...

@@ரமேஷ் அண்ணா இது சுடாத கவிதை நம்ம நண்பர் எழுதினார்... உங்க திருவிளையாடல் தொடரட்டும்

சௌந்தர் said...

சௌந்தர் சொன்னது…
@@@terror நான் ஏற்கனவே சிறு கதை எழுதி உள்ளேன் அடுத்த பதிவு சிறு கதை தா

வால்பையன் said...

உடல் வெப்பத்தை வைத்து கொது பாலூட்டிகளை அடையாளம் காண்கிறது, உடம்பு சரியில்லாத ஆட்கள் தான் முதலில் கடிபடுவார்கள்

Anonymous said...

//இது நான் எழுதிய கவிதை இல்லை என் நண்பர் எழுதிய கவிதை. //

அந்த பயம் இருக்கட்டும்..

ஜெய்லானி said...

கொசுவுக்கு நாங்க பாட்டே எழுதுவோமே..அந்த அளவுக்கு கடி ஹி..ஹி..

//இது நான் எழுதிய கவிதை இல்லை என் நண்பர் எழுதிய கவிதை. //

ஏன் இத்தனை பயம்

Ananthi said...

சரி சரி.. விடுங்க.. ரொம்ப பீல் பண்ணாதீங்க..
ஏதோ, வந்து குடுக்குதே.... அது வர சந்தோசம்...
உங்க நண்பர் கவிதை நல்லா இருக்குங்கோ..

நீங்க எப்போ கொசு கவிதை எழுதுவீங்க...
ஒருவேளை, உங்கள இன்னும் கடிக்கலையா??

Jeyamaran said...

கொசுவுக்கு கவிதையா பெரிய அக்கபோரக அல்லவே இருக்கிறது சிரிங்கப்பா மாட்டேனு சொல்றிங்களா
OK ...................ரொம்ப நல்லா இருக்கு இப்ப என்ன சிரிப்பு சௌந்தர்...................

Riyas said...

GOOOD SOUNDER.. KEEPM IT UP

அருண் said...

ரெண்டு கவிதையுமே சூப்பர்,அடுத்த சிறுகதைய சீக்கிரமே ரெடி பண்ணுங்க.

ஹேமா said...

சௌந்தர்....நண்பருக்குப் பாராட்டுக்கள்.
இரண்டுமே நல்லாயிருக்கு.

LOSHAN said...

கொசுக் கவிதை அருமை..

சீமான்கனி said...

இரண்டுமே அருமை சௌந்தர்...கொசுவிடம் ரத்தம் கேட்க்கும் நிலமையா??

Anonymous said...

ரெண்டு கவிதையும் சூப்பர் ..பகிர்வுக்கு நன்றி

ஜீவன்பென்னி said...

குடிசைக் கவிதை நல்லாயிருக்கு.

புஷ்பா said...

குடிசைக் கவிதை super soundar...

 
;