இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் தான் இந்த காமன்வெல்த் கூட்டமைப்பு, இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்ததை நினைவு படுத்தும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறுகிறது என்று நினைக்கிறேன், இங்கிலாந்து ராணி தான் எப்போதும் காமன்வெல்த் போட்டிகளை தொடங்கி வைப்பார், இந்த முறை நீங்கள் இந்தியாவிற்கு சென்றால் அது தான் கடைசி பயணம் என்று ஏதோ ஒரு ஜோசியகாரன் கூறியதால் அவர் வர வில்லை, அவருக்கு பதில் அவரது மகன் சார்லஸ் வருகிறார்
70,000 ஆயிரம் கோடி ரூபாயில் செலவில் உருவாகப்பட்டு இருக்கிறது காமன்வெல்த் போட்டிகள், 72 நாடுகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த வாய்ப்பை பெற்றது இந்தியா, அரசே லஞ்சம் கொடுக்கும் பொழுது மக்களை குறைசொல்லி என்ன பயன். மூன்று வருடமாக இவர்கள் மைதானம் அமைக்கும் பணியை செய்துவருகிறார்கள் எப்போது தான் மைதானத்தை தயார் செய்வார்களோ, இது வரை முழுமையாக தயார் ஆகவில்லை என்பது தான் உண்மை. நமது நாட்டு அரசியல்வாதிகள் எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்று தான் கணக்கு போடுவார்கள், தவிர அந்த பணியை எத்தனை நாளில் முடிக்கலாம் என்று எப்போதும் கணக்கு போடமாட்டார்கள்
வரும் அக்டோபர் மூன்றாம் தேதி காமன்வெல்த் போட்டிகள் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. சென்ற வாரம் வரை எதையும் உறுதியாக கூறமுடியவில்லை, ஆனால் இப்போது எப்படியோ போட்டி நடைபெற போகிறது என்ன இருந்தாலும் இந்தியாவால் இந்த போட்டியை நல்ல முறையில் செய்ய முடியவில்லை என்ற பெயர் தான் இருக்கும். எப்படியோ தட்டுதடுமாறி போட்டியை முடித்தது என்ற பெயர் வரும். யாருக்கு தெரியும் போட்டி நடைபெறும் போது யார் தலையில் என்ன விழ போகிறதோ என்ற பயத்துடன் தான் வீரர்கள் விளையாட வேண்டும்
அமெரிக்கா நாட்டு உளவு அமைப்புகளும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது அல்கொய்தா, லஷ்கர் -இ- தொய்பா இயக்கம் வெளிநாட்டு வீரர்களை தாக்கபோகிறார்கள் என்று இவர்கள் வேறு எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுகிறார்கள் அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் தாக்கினர் அப்போ இவர்கள் உளவுதுறை என்ன செய்து கொண்டு இருந்தது, அமெரிக்காவிற்கு வேறு வேலை, இல்லை நான் சொல்வது தான் இந்த உலகத்தில் நடக்கிறது என்று எண்ணம்
சீனா ஒலிம்பிக் போட்டியை சர்வசாதாரணமாய் நடத்தி விட்டது உலக நாடுகள் பாராட்டையும் பெற்றது , இந்தியாவில் ஒரு காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாட்டை ஒழுங்காக செய்ய முடியவில்லை, போட்டி தொடங்கும் நாளை எண்ணி இப்பவே மக்களுக்கு கண்ணை கட்டுது. அரசியல்வாதிகளின் சுயநலம் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவிற்கே கெட்டபெயர்.
Tweet | |||||