Showing posts with label ஸ்டார் ஒரு பார்வை. Show all posts
Showing posts with label ஸ்டார் ஒரு பார்வை. Show all posts
Monday, September 27 59 comments

ஸ்டார் ஒரு பார்வை part I



சௌந்தர் இவர் பதிவுலகில் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று தெரியாது. (யார் சொன்னது இப்படி தான் பல பேர் சொல்கிறார்கள்) பெரிய நடிகர்( பதிவர்) இவர் நடித்த முதல் திரைப்படம்(பதிவு) அது copy paste பதிவு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க இவருக்கு பப்புவை போல தினம் ஒரு பதிவு போட புடிக்காது பிரபல நடிகர் அஜித்குமார் சொன்னதை போல இப்படி தினம் ஒருமொக்க போஸ்ட் போடுவதற்கு பதில் சும்மா இருக்கலாம் என்று இருக்கிறார் சௌந்தர் இவருடைய தற்போதைய படம் (பதிவு) ஸ்டார் ஒரு பார்வை என்ற படத்தில் நடித்து உள்ளார் இவர் சிறப்பு அம்சம் ப மு க என ஒரு கட்சி நடத்தி வருகிறார். அடுத்த ஆண்டு இவர் ஆட்சி தான்.



சினிமா உலகம் ஒரு பெரிய உலகம் , இதில் பலர் வந்து காணாமல் போய் இருகிறார்கள் நிலைத்து நின்றவர்கள் சிலர் மட்டுமே அடுத்து வரும் பதிவுகளில் மேலும் பல நடிகர்களை பற்றியும் அவர்கள் நடித்த முதல் மற்றும் கடைசி படம் பற்றி பார்ப்போம் 




தமிழ் பட உலகில் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர். இவர் பாடிய பாடல்கள் இப்போதும் மிகவும் பிரபலமானவை இவர் நடித்த முதல் படம் பவளக்கொடி 1949 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் சுமார் 15 திரைப்படத்தில் நடித்து உள்ளார். இவரும் ஒரு கொலை வழக்கில் சிறை சென்று வந்தார் பின்னர் குற்றவாளி இல்லை என்று இரண்டு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யபட்டார்.ஹரிதாஸ் திரைப்படம் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கில்) ஓடி சாதனை படைத்தது. இவர் கடைசியாக சிவகாமி என்றதிரைப்படத்தில் நடித்தார். சிவகாமி 1960 ஆம் ஆண்டு வெளிவந்தது, சிவகாமி படத்தின் படபிடிப்பின் போதே சற்று உடல்நலம் குன்றி இருந்தார்,மருத்துவமனையில் சிகிச்சை பலன்அளிக்காமல் நவம்பர் 1, 1959, இயற்கை எய்தினார்..






                                           
                    
                                                                      
காதல் மன்னன்.
இவரது இயற் பெயர் கணேசன். ஜெமினி நிறுவனத்தில் பணிபுரிந்ததால் பின்னாளில் அவருக்கு ஜெமினி கணேசன் என்று வைக்கப்பட்டது. சிறுது காலம் ஆசிரியராக பணிபுரிந்தார் என்பது குறிபிடதக்கது .முதல் படம் :1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். ஜெமினி கணேசன் கதாநாயகன் வேடம் தரித்த முதல் படம் 1953ஆம் ஆண்டு வெளியான "பெண்". இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார்.






கடைசி படம்: அவ்வை சண்முகி 1996 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்தது இந்த படத்தில் ஜெமினி கணேசன் நடித்த வேடத்தில் முதலில்  சிவாஜி நடிப்பதாக இருந்தது பின் வேறு சில காரணங்களால் ஜெமினி கணேசன் நடித்தார், அந்த வயதிலும் காதல் காட்சியில் நடித்து தான் ஒரு காதல் மன்னன என்று நிருபித்தார். ஜெமினி திரைபடத்தில் நடிகராகவே ஒரு ஐந்து நிமிடம் நடித்து இருந்தார்.

சிறு நீரகக் கோளாறு காரணமாக 2005ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் செய்யப்பட்ட்டது. ஜெமினி கணேசனுக்கு தபால் தலை வெளியிட்டு இந்திய அரசு கவுரவப்படுத்தியது



ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி
யாருன்னு கேட்காதீங்க M.R. ராதா நடித்த முதல் படம் 1937 ஆம் ஆண்டு வெளிவந்து. M.R. ராதாவும் நாடக துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தான், இவர் நாடகங்கள் வெற்றி பெற்ற அளவுக்கு, சினிமா கை கொடுக்க வில்லை. இவர் நடித்த முதல் சில படங்கள் வெற்றி பெறவில்லை பின்பு நாடகத்துறைக்கே திரும்பினார் 


ரத்தக்கண்ணீர் என்ற நாடகம் பிரமாண்ட வெற்றி பெற்றதை அடுத்து, திரைத்துறைக்கு மீண்டும் காலடி எடுத்து வைத்தார் ரத்தக்கண்ணீர் மாபெரும் வெற்றியை பெற்றது அதற்கு பிறகு இவர் குணசித்திர வேடத்தில் நடித்தார். மு.க முத்து நடித்த சமையல்காரன் என்ற படத்தில் நடித்தார் பின் சில படங்களில் நடித்தார் தனக்கென்று ஒரு கொள்கையுடன் வாழ்ந்து வந்தார் ராதா மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு காரணமாக 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இயற்கை எய்தினார்.அரசுமரியாதையை ஏற்க குடுபத்தினர் மறுத்துவிட்டனர். இன்னும் இவரை போல ஒரு நடிகர் தமிழ் சினிமாவிற்கு கிடைக்க வில்லை 


     
 
;