Monday, March 28 45 comments

ப .மு.க.கூட்டணி முடிவு + தேர்தல் அறிக்கை...
நேற்று திடீர் என்று எனக்கு ஒரு போன் வந்தது யார் நம்பர் என்றே தெரியவில்லை ...நானும் போனை எடுக்கவில்லை போன் வருவதும் நிற்க வில்லை மணி தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தது...யார் தான் அது என்று போனை ஆன் செய்தேன். பேச்சு குரல் கேட்டவே இல்லை...அழுகுரல் மட்டும் வந்தது...நானோ யார் நீங்க ஏன் அழுகுறீங்க என்றேன்....சிறிது மெளனத்திற்கு பிறகு நான் தான் தம்பி T.R பேசுறேன் சொல்லுங்க சார் ஏன் அழுவுறீங்க...தேர்தல்வந்தும் என்னை எவனும் கண்டுக்க மாட்டுறான். அதான் தம்பி எங்க கட்சி தேர்தலை புறக்கணிக்கிறோம். 


நான் : சார் சும்மா காமெடி பண்ணாதீங்க சார்...உங்களுக்கு ஏது கட்சி. நீங்க தேர்தலை புறக்கணிக்கிறேன் சொல்லுங்க நான் நம்புறேன்.  உங்களுக்கு கட்சி இருக்கான்னு யாருக்கும் தெரியாது அப்பறம் எப்படி கூட்டணி பேசவருவாங்க...சார் நீங்க ஏன் தேர்தலில் நிக்கல உங்களுக்கு உங்க பையன் கூட ஓட்டு போட மாட்டான் அதானே காரணம்.

TR : என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க ஏய் டண்டனக்கா... ஏய் டனக்கணக்கா நான் பாட்டு பாடினா போதும் ஓட்டு எல்லாம் எனக்கு தான்...விழும் 

நான் : பின்ன ஓட்டு போடலேன்னா பாடியே கொன்னுடுவீங்க அதுக்கு ஓட்டே போட்டு தொலைச்சிடலாம்.....

TR : தம்பி இங்க பாருங்க நான் எப்படி வாயிலே மியூசிக் போடுறேன் பாருங்க...

நான் : சார் சார் நிறுத்துங்க போதும் அப்பறம் கொலை கேஸ்லே உள்ளே போயிடுவீங்க  

சரி சரி எதுக்கு போன் பண்ணீங்க அதை சொல்லுங்க முதல் 

TR : என்னை யாரும் கூட்டணி சேர்க்கல நீங்க உங்க கட்சியில் கூட்டணி சேர்த்து கொள்ளுங்க.....

நான் : இல்லைங்க முடியவே முடியாது நாங்க ஆண்டவனிடம் மட்டும் தான் கூட்டணி வைச்சுக்குவோம் போங்க சார் வேற கட்சி பாருங்க.

இப்படியே ஒரு ரெண்டு மணிநேரம் போனில் மொக்க போட்டார் TR அப்படியே அதை கட் பண்ணி போனை வைச்சா மறுபடி போன் வந்தது அட இது யார் 

நான் : ஹலோ 

ஹாய் ஹ லோ வ ந்து...நான் தான் ஹி ஹி 

 நான் : ஹலோ சார் நீங்க பேசுறது சரியா கேக்கலை நல்லா பேசுங்க 

ஏய் என்ன...என்ன... தெரியலையா...

நான் : யார் சார் நீங்க...????

ஏய் கூல் கூல் நான் தான் கார்த்திக் பேசுறேன் 

நான் : சார் சொல்லுங்க சார் என்ன வேண்டும் உங்க மாமா சந்திர மெளலி எப்படி இருக்கார்..??

கார்த்தி : இஸ் பைன் சௌந்தர்...ரொம்ப முக்கியமான விஷயம் நீங்க எங்க கட்சிக்கு அதரவு தெரிவிக்கணும் அப்படி செய்தால் எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கும். 


நான் : கார்த்திக் எப்போ கட்சி ஆரம்பித்தீங்க சொல்லவேயில்லை...சரி உங்களுக்கும் அந்த கூட்டணிக்கும் என்ன பிரச்னை...???

கார்த்தி : அது வந்து...வந்து...வடிவேல் சொன்னாரே ஒரு பேச்சு வார்த்தை அதில் எங்களை உள்ளே சேர்க்கவில்லை...நாங்க எல்லாம் சின்னப்பங்கச சொல்லி வெளிய நிக்க வைச்சுடாங்க...எங்களை மதிக்கவேயில்ல அதனால நாங்க வெளிய வந்துட்டோம்...உங்க பமுக கட்சி எங்களை ஆதரிக்கணும்....

நான் : சரி சரி கார்த்திக் இதை பற்றி நம்ம நெக்ஸ்ட் மந்த பேசுவோம் 

கார்த்தி : சௌந்தர் நெக்ஸ்ட் மந்த தேர்தல் முடிஞ்சுடும் எங்க கட்சியை விட உங்க கட்சி ரொம்ப தூங்கும் போல

நான் : சரி சரி நாளைக்கே பேசுவோம் ...

சரி கூட்டணி குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்னனு அம்மாவை பார்க்க போன தலைவரை போன் செய்து பேசினேன் 

நான் : வணக்கம் தலைவரே என்ன ஆச்சி உங்க தோழி கூட்டணி 

தலைவர் : நான்  வருத்தப்படத வாலிபர்  சங்க  தலைவர்  கைப்புள்ள  பேசுறேன் , யார்  பேசுறது?

நான் : இப்பொழுது நீங்க தனியா தேர்தலில் நின்னா நீங்க தான் அடுத்த முதல்வர் ..

தலைவர் : இப்படி உசுப்பு எத்தி ஏத்தி ஒடம்ப ரணகளமா ஆக்குறீங்க தம்பி முடியல என்ன விட்டுங்க தம்பி...

நான் : என்ன தலைவரே நீங்க தேர்தலில் நிற்க கூடாது என்பதற்காக 1000 கோடி லஞ்சம் கொடுத்ததா சொல்றீங்க இது ஓவரா தெரியல 100 கோடி கொடுத்தா நீங்களே தேர்தலில் நிக்க மாட்டிங்க...!!!


தலைவர் : தம்பி உண்மையெல்லாம் இப்படி வெளிய சொல்ல கூடாது..எனக்கு சுயமரியாதையை தான் முக்கியம்...(சூனா பானா இப்படியே மைட்டேன் பண்ணு... போ போ போ.)...

நான் : சரிங்க தலைவரே உங்ககிட்ட நான் அப்பறம் பேசுறேன்...!!!

தற்போதைய நிலைமையை பார்த்து செயற்குழு ஒரு முடிவு எடுத்து உள்ளது நாங்கள் யாருடனும் கூட்டணியில்லை தனித்து களம் காண உள்ளோம்...என்பதை தெரிவித்து கொள்கிறோம்  

ப.மு.க தேர்தல் அறிக்கை 

*  அனைவருக்கும் தினம் இலவசமாக பின்னூட்டம் போடப்படும்....

*  வலைதளத்தை யாரும் ஹக் செய்யாமல் இருக்க பாதுகாப்பு படை அமைக்கப் படும் 


*  கணினி பழுது ஆனால் வீட்டிற்கே வந்து சர்விஸ் செய்து தரப்படும் 

*  தங்கள் பதிவுகளை புத்தகமா வெளியிடும் செலவை அரசே ஏற்று கொள்ளும் 

*  இணையம் இணைப்பு இலவசமாக வழங்கப்படும்...

*  மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படும் 

*  58 வயதிற்கு மேற்பட்டோர் எந்த ப்ரோசின் சென்டர் சென்றாலும் இலவசம்   

*  பதிவுலக சண்டைகள் அடிக்கடி நீர்த்துப் போவதால் மாதம் இரண்டு புதிய சண்டைகள் கட்சியின் சார்பில் அமலாக்கப்படும். அதில் சேர்ந்து சண்டையிட்டுப் பிறவிப்பயனடையலாம்

எந்த எந்த தொகுதியில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பின்னர் வெளியிடுவோம்....ஆகவே பதிவர்களே மன்னிக்க மக்களே உங்களது பொன்னான வாக்குகளை ப .மு.க கட்சிக்கு அளித்து நாடு வளம்பெற உதவுங்கள்


Thursday, March 24 23 comments

எப்பவும் தண்ணியில் மிதப்பவர் பெயர் கேப்டன் இல்லை...!!!


நேற்று தான் தன் சொந்த தொகுதியான திருவாரூரில் கலைஞர் பிரச்சாரத்தை தொடங்கினார்..வடிவேல் முதல் முறையாக பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். அவர் எப்போது பேசுவார் என்று காத்திருந்தேன் அவர் பேச தொடங்கியதும் சிரிக்க தொடங்கியது தான் கடைசிவரை சிரித்துகொண்டே இருந்தோம்...விஜயகாந்த்தை போட்டு தாக்கு தாக்கு என தாக்கினார்...ரொம்ப கோவமா இருக்கார் போல இந்த பூமிக்குள் வரும்போது இந்த மண்ணை எடுத்து என் நெற்றியில் பூசிவிட்டுதான் வந்தேன். அப்படி ஒரு மண். இந்த மண். நான் திரையில் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைக்கிறேன். ஆனால் என்ன செய்தாலும் ஒரு மனிதனுக்கு எது தேவைப்படுகிறது. 

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவை கண்டிப்பாக தேவைப்படுகிறது. நான் மக்களில் ஒருவனாக பேசுகிறேன். கலைஞர் போட்ட திட்டங்களை கேட்டபோது, கண்ண கட்டுது. எதிர் அணி மிரண்டு கிடக்கிறது. எல்லா பக்கமும் அணைகட்டி வைத்துவிட்டார் கலைஞர்.

கர்ப்பிணி பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். கருவில் உள்ள குழந்தையும் பயன் அடைகிறது. நான் 25 வயதுக்கு மேல்தான் சம்பாதிக்க ஆரம்பித்தேன். ஆனால் கருவில் உள்ள குழந்தை மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறது. 

நேற்று ஒருவர் கட்சியை ஆரம்பித்துவிட்டு, நாளைக்கு முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். என்னவென்றால் அவர் கல்யாண மண்டபத்தின் இடையில் இரண்டு தூண் வந்துவிட்டதாம். அதற்கு ஒரு கட்சியை ஆரம்பித்து, நான் அடுத்த முதல் அமைச்சர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். நான் கேட்கிறேன் முதல் அமைச்சர் பதவி என்ன மியூசிக்கல் சேரா. அந்த பதவி என்ன சாதாரண பதவியா. 

கல்யாண மண்டபத்தில் இரண்டு தூண் வந்ததற்கு, உடனே கட்சியை ஆரம்பித்து முதல் அமைச்சர் என்று சொல்லிக் கொள்கிறீர்களே, நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர். நீங்கள் பிரதமர் என்றால் நான் ஜனாதிபதி, நீங்கள் ஜனாதிபதி என்றால் நான் ஒபாமா. . 


ஒருத்தர் என்னிடம் கேட்டார். ஏங்க அவர (விஜயகாந்த்) எதிர்த்து நிற்க போறேன் என்று சொன்னீர்களே, நிற்க போறீங்களா என்றார். அவரை எதிர்த்து நின்றால் எனக்குத்தான் கேவலம். மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு 41 சீட் வாங்க போனீர்களே. அங்க என்ன முதல் அமைச்சர் பதவி கொடுப்பார்களா. மிகப்பெரிய வீராப்பா பேசினீங்க.


அந்த கட்சி பெயர் கூட வாயில் வரமாட்டேங்குது. நாக்கு மூக்காவா, மூக்கு முக்காவா, தேக்கு மூக்கா ஏதோ சொல்றாங்க. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொள்வதோடு அல்லாமல், 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதேபோல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார். கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கருப்பு எம்ஜிஆர் என்றால் நான் கருப்பு நேரு. நான் சோனியாகாந்தியிடம் சென்று நான் கருப்பு நேரு சீட் கொடுங்கனா அந்த அம்மா என்ன அடிக்க வராது?.....இந்த அம்மா சீட் கொடுத்து இருக்கு.


வடிவேல் பேசியதில் சிறப்புக்குரியது 

நிருபர் :என்னங்க பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா 

தொண்டர்கள் : முதல் ரவுண்ட் போயிட்டு இருக்கு

நிருபர் : என்னங்க எந்த எந்த தொகுதி முடிவு ஆகிடுச்சா...

தொண்டர்கள் : மூனாவது ரவுண்ட் போயிட்டு இருக்கு 
இப்படியே ஒன்பது ரவுண்ட் பத்து ரவுண்ட் போச்சு தொண்டர் வெளிய வந்தார் 

நிருபர் :என்னங்க இப்போ எத்தனையாவது ரவுண்ட்  

தொண்டர்கள் : என்னாது எத்தனையாவது ரவுண்ட்டா ஏழு எட்டு ஃபுல் ஓட்டிட்டு இருக்கு 
இப்போ வந்து ரவுண்ட் சொல்லிட்டு 

இப்படி பேசும் போது ஸ்டாலின்உள் பட அனைவரும் சிரித்தனர்... 

தண்ணியில் மிதக்கும் கப்பல்ல இருப்பவர் பெயர் தான் கேப்டன்


எப்பவும் தண்ணியில் மிதப்பவர் பெயர் கேப்டன் இல்லை
 


அந்த கட்சி பெயர் கூட வாயில் வரமாட்டேங்குது. நாக்கு மூக்காவா, மூக்கு முக்காவா, தேக்கு மூக்கா ஏதோ சொல்றாங்க.
 நான் கேட்கிறேன் முதல் அமைச்சர் பதவி என்ன மியூசிக்கல் சேரா. 

அவரை எதிர்த்து நின்றால் எனக்குத்தான் கேவலம். மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை. Friday, March 11 42 comments

பேர் சொல்லும் பிள்ளை....!!

ஸ்ரீஅகிலா அக்கா பெயர் மீது காதல் என்ற தலைப்பில் தொடர்பதிவு எழுத சொல்லி அழைத்திருந்தார்கள். பெயர் மீது காதல் நீ வேற எதையாவது எழுதி மானத்தை வாங்கிடாதே என்றார்கள்...

என் முழு பெயர் சௌந்தரபாண்டியன்....நாங்கள் பாண்டி சாமி கும்பிடுவோம், அதனால் குடும்பத்தில் ஒருவருக்கு பாண்டி என வருவது போல பெயர் வைக்க வேண்டுமாம் அதனால் எனக்கு சௌந்தரபாண்டியன் வைத்தார்கள். எங்க பாட்டி தான் இந்த பெயரை தேர்வு செய்ததாக எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க. அனைவரும் என்னை சௌந்தர் என அழைப்பார்கள்.

இந்த ஏன் வைத்தார்கள் மாற்றி வைத்திருக்கலாமே என தோன்றியதில்லை, எனக்கு வேறு என்ன பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்து பார்த்ததும் இல்லை .நான் எங்கு சென்றாலும் என் பெயரில் ஒருவர் இருப்பார். நான் படிக்கும் போதும் அப்படி தான் என் வகுப்பில் இரண்டு பேர் இருந்தார்கள், ஒருவன் சௌந்தர்ராஜன், இன்னொருவன் சௌந்தரபாண்டியன் இப்பொழுது பதிவுலகிலும் ஒருவர் வந்து விட்டார்.

இப்படி பெயர் மாற்றம் இருப்பதால் பள்ளியில் பல குழப்பங்கள் வரும் அவனுடைய விடைத்தாளை என்னிடம் கொடுத்து விடுவார்கள் என் விடைத்தாள் வேற ஒருவரிடம் போய்விடும்.....பள்ளியில் யாரவது சௌந்தரபாண்டியன் தேடி வந்தால் போதும் நாங்கள் இருவரும் எழுந்து நிற்போம், யாராவது எங்கள் பெயரை சொல்லி தேடி வந்தால் இருவரும் வெளியே சென்று சுத்தி விட்டு வருவோம்....டீச்சர் அடிக்கும் பொழுது பெயர் சொல்லி கூப்பிடுவாங்க அப்பொழுது நாங்கள் உஷாராகி யார் டீச்சர் என கேட்டு உறுதி செய்து கொள்வோம் அவ்வளவு உஷார் நாங்க!என்பெயரை அனைவரும் மாற்றி மாற்றி கூப்பிடுவார்கள் மாற்றி மாற்றி எழுதுவார்கள் சுந்தர்,சவுந்தர், சவுந்தர்ராஜா..கூப்பிடுவாங்க அட டா என்பெயரை சரியா சொல்லுங்க என்பேன் மீண்டும் அப்படி தான் கூப்பிடுவாங்க..என்னிடம் நன்கு பழகியவர்கள் என்னை சௌந்தர் என்றே அழைப்பார்கள் புதியதாக பார்ப்பவர்கள் சௌந்தரபாண்டியன் என்று அழைப்பார்கள்...எனக்கும் சௌந்தர் என்று அழைப்பது தான் பிடிக்கும்...சௌந்தரபாண்டியன் என்றால் அர்த்தம் என்ன பார்த்தேன் அதில் சௌந்தர் என்றால் அழகு பாண்டியன் என்றால் பண்டைய என அர்த்தம் வருகிறது....எனக்கு ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறார்கள்...

என்பெயருக்கு என்ன பலன் என்று பார்த்தேன் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் 

சௌந்தரபாண்டியன்
பெயர் விளக்கம்: பழமையான அழகு
விளக்கம்: இப்பெயரை உடையவர்கள் கலகலப்பாக பழகுபவர்களாகவும் நன்கு பேசுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் பிடிக்கும். இவர்கள் கற்பனைத்திறன் உடையவர்களாகவும் பல விசயங்களை செய்து பார்க்க முயற்சிப்பார்கள். எதையும் ஆர்வத்துடனும் அறிவுபூர்வமாகவும் அணுகுவார்கள். இவர்கள் நேர்மறையான மனோபாவத்துடனும் பலவித விசயங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள். எதையும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்ய முயற்சிப்பார்கள். சுதந்திரத்துடனும் புது இடங்களில் தயக்கமில்லாமலும் பழகுவார்கள். வேலையில் ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டார்கள். இவர்களுக்கு தலைமைப் பண்புகள் இருக்கும். அதே சமயம் இவர்களுக்கு அடக்கியாள்வது மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் வீண் செலவு செய்பவர்களாகவும் நடிப்பவர்களாகவும் நடந்து கொள்ளலாம். சில சமயங்களில் பொறுமையில்லாதவர்களாகவும் மற்றவர்களை டாமினேட் செய்யலாம். சில சமயங்களில் முரட்டுத்தனமாக கூட நடந்துகொள்ளலாம்.....

இந்த பலனில் வருவது 75 சதவிகிதம் உண்மை...என் பெயரை பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை சொல்லிவிட்டேன்.....தொடர் பதிவு யாராவது கூப்பிட வேண்டும் என அகிலா சொன்னாங்க அதனால் நான் நாலுபேரை மாட்டிவிடுகிறேன். நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்லை..!!!

 பெயர் விளக்கம் மற்றும் பலன் தேடிதந்த எஸ்.கே அவர்களுக்கு நன்றி...


இம்சை அரசன் பாபு (இதெல்லாம் ஒரு பேரு) 

அருண்பிரசாத் (என்னை எத்தனை தொடர் பதிவுக்கு மாட்டி விட்டிங்க) 

அன்புடன் ஆனந்தி (சீக்கிரம் எழுதிடுவாங்க ரொம்ப சுறு சுறுப்பு)

கல்பனா ( பதிவே எழுதுறது இல்லை இதுல தொடர் பதிவு வேற)

Wednesday, March 9 24 comments

ஹார்ட் டிஸ்க்...


இன்றைய உலகில் கணிப்பொறி என்பது அவசியமாக தெரிந்து கொள்ள கூடிய ஒன்றாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட கணிப்பொறிக்கு மூளை போல் இருக்கும் விசயம் தான் ஹார்ட் டிஸ்க். அந்த ஹார்ட் டிஸ்க்கின் வளர்ச்சியை பற்றி காண்போம்!


முதல் ஹார்ட் டிஸ்க் 1956-ல் IBM என்கிற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் IBM 305 RAMAC ஆகும். இதில் 5 எம்பிக்கள் வரை சேமிக்க கூடிய வசதி இருந்தது. இது ஐம்பது 24 அங்குலம் விட்ட தட்டுக்களை கொண்டிருந்தது! 


ஹார்ட் டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், டிரம் போன்ற இயக்கிகள் இருந்தன. 1950ல் மின்னோபாலிஸ் பொறியியல் ஆய்வு நிறுவனம் அமெரிக்க கடற்படைக்காக, முதல் வணிகரீதியான காந்த டிரம் சேமிப்பு பகுதியை கட்டுமானம் செய்தது. இதில் ஒரு மில்லியன் பிட்கள் தகவலை சேமிக்க முடியும்.


1980ல்தான் முதல் ஜிபி அளவுள்ள ஹார்ட் டிஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கிட்டதட்ட ஒரு ரெஃப்ரிஜெரேட்டர் அளவில் 250 கிலோ எடையுடன் இருந்தது. அதன் விலை 40000 டாலர்களாக இருந்ததாம்!!! எண்பதுகளில் பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகமானபோது இண்டர்னல் ஹார்ட் டிரைவின் பயன்பாடும் அதிகமானது.

ஹார்ட் டிஸ்க் உற்பத்தியை பொறுத்த வரை Seagate, Western Digital, Hitachi, Samsung, Toshiba ஆகிய ஐந்து நிறுவனங்கள் பெருமளவில் ஹார்ட் டிஸ்க் இருக்கின்றன.


இத்தனை வருடங்களில் இது 5 எம்பி (5,000,000 பைட்கள்) அளவுள்ள 52 அடி விட்டமுள்ள பூதாகரமான வன் தட்டிலிருந்து இன்றைய 400 ஜிபி (400,000,000,000 பைட்கள்/குறியீடுகள்) கொண்ட 3 /12 அங்குல அகலமுள்ள இயக்கிகள் வரை பெரிதளவில் மாற்றமடையுள்ளது. அதேசமயம் 87.9 கன அடி இருந்த ஹார்ட் டிஸ்க் இன்று 2 ½ அங்குலம் வரை கூட குறைந்துள்ளது.

இன்று பெருமளவில் இண்டர்னல் ஹார்ட் டிஸ்க்குகள் பயன்படுத்தப்பட்ட போதும் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்கை பயன்படுத்துவதும் உள்ளது. இதனால் பெருமளவில் தகவல்களை சேர்த்து விருப்பப்பட்டவாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடிகின்றது.
ஹார்ட் டிஸ்க் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்கள்:

  1. உங்கள் கணிணி ஆன் செய்யப்பட்ட நிலையில் இருக்கும்போது அதை நகர்த்தாதீர்கள்
  2. கணிணிக்கு அருகே சூடான எதையும் (எலக்ட்ரானிக் பொருட்கள்/அயர்ன் பாக்ஸ் போன்றவை) கொண்டு வராதீர்கள். 
  3. கணிணியில் ஈரம் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அறையில் நல்ல காற்று வசதி உள்ளதா என கவனிக்கவும். உணவுப் பொருட்களை அருகே கொண்டு செல்லாதீர்கள். தூசி அதிகம் படியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  4. கூடியவரை யுபிஎஸ் இல்லாமல் கணிணியை பயன்படுத்தாதீர்கள்.
  5. ArgusMonitor மற்றும் Disk Utility போன்ற S.M.A.R.T. டூல்களை பயன்படுத்தலாம். இவை கணிணியில் ஹார்ட் டிஸ்க்குகளை தானாக கண்காணித்து அதில் ஏற்படும் பிழைகளை சுட்டிகாட்டும் செய்யும்.
  6. பெரும்பாலான விண்டோக்கள்/மேக் சிஸ்டங்கள் ஹார்ட் டிஸ்க் பிழைகளை சரி செய்யக் கூடிய வசதிகள் உள்ளன. அதற்கான செட்டிங்களை செய்வது நல்லது.
  7. டிஸ்க் ஃபிராக்மெண்டேசன், டிஸ்க் கிளினீங் போன்றவற்றை 3-4 வாரங்களுக்கு ஒரு முறை செய்வது நல்லது. 
  8. நீண்ட நேரம் கணிணியை எதுவும் செய்யாமல் வைத்திருப்பதை விட அதனை ஷட் டவுன் செய்யுங்கள். சிலர் கணிணியை அப்படியே ஆன் செய்த நிலையிலேயே விட்டு விடுவார்கள்.
  9. கூடிய வரை யுபிஎஸ் இல்லாமல் கணிணியை பயன்படுத்துவதை தவிர்க்கவும். திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டு கணிணி ஆஃப் ஆகும்போது ஹார்ட் டிஸ்க்கில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. 
  10. எப்போது உங்கள் கணிணியில் உள்ள தகவல்களை பேக்கப் செய்து கொள்ளுங்கள்.

Tuesday, March 8 48 comments

நீ மட்டும்...

காலை குளிர் நிலா பிரிந்திடலாம் 
மாலை வெண்சூரியன் மறைந்திடலாம்
நம் ஆன்ம ஜீவன் கூட கரைந்திடலாம்
என் நிழலுக்கு துணையாய்
என்னோடு நீ மட்டும் என்றென்றும்....!


மெழுகுவர்த்தியாய் நானிருக்க...
தீக்குச்சியாய் தேடி வந்தாய்...!
உருகிக் கொண்டிருக்கிறேன்
உன் கரிசனத்தால்....!!
பாசம் காட்டி கொல்பவள் நீ மட்டும் தான்!!!


மாலை நேர பூவாய் 
மலர்ந்தாய் என் 
மனதில்...!
பிரிகிறேன் என்றவுடன் 
மீண்டும் மலர்ந்தாய் 
ஆழமாக...!!!!
வாடாமல் பூத்து
மலர்கிறாய்
மனதில்....
தினம்..தினம்...!!! 
குட்டிகுட்டி சண்டையிடும் 
ராட்சஷியும் நீயே! 
நித்தம் கொஞ்சும் 
குழந்தையும் நீயே! 
அன்பை வாரிதருவதில் 
அன்னையும் நீயே!
மொத்தத்தில் என் அகத்தில்....
உனக்கு நிகர் நீயே...!தனிமை
என்னையும் காதலிக்கிறது??
நீ தனிமையை 
நேசிப்பதால்...

சூரியனை சுற்றும் 
கோள்கள் போலே 
என்னை சுற்றும் உன் நினைவுகளுக்கும் 
என்றும் குறைவு இல்லை என் தோழியே !!


கரம் நீட்டுகிறேன் 
வா என்னோடு... 
வாழ்க்கை இருக்கும் 
வரை கைகோர்த்து நடக்கலாம் 
நட்போடு !!!


 
;