Monday, March 28

ப .மு.க.கூட்டணி முடிவு + தேர்தல் அறிக்கை...
நேற்று திடீர் என்று எனக்கு ஒரு போன் வந்தது யார் நம்பர் என்றே தெரியவில்லை ...நானும் போனை எடுக்கவில்லை போன் வருவதும் நிற்க வில்லை மணி தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தது...யார் தான் அது என்று போனை ஆன் செய்தேன். பேச்சு குரல் கேட்டவே இல்லை...அழுகுரல் மட்டும் வந்தது...நானோ யார் நீங்க ஏன் அழுகுறீங்க என்றேன்....சிறிது மெளனத்திற்கு பிறகு நான் தான் தம்பி T.R பேசுறேன் சொல்லுங்க சார் ஏன் அழுவுறீங்க...தேர்தல்வந்தும் என்னை எவனும் கண்டுக்க மாட்டுறான். அதான் தம்பி எங்க கட்சி தேர்தலை புறக்கணிக்கிறோம். 


நான் : சார் சும்மா காமெடி பண்ணாதீங்க சார்...உங்களுக்கு ஏது கட்சி. நீங்க தேர்தலை புறக்கணிக்கிறேன் சொல்லுங்க நான் நம்புறேன்.  உங்களுக்கு கட்சி இருக்கான்னு யாருக்கும் தெரியாது அப்பறம் எப்படி கூட்டணி பேசவருவாங்க...சார் நீங்க ஏன் தேர்தலில் நிக்கல உங்களுக்கு உங்க பையன் கூட ஓட்டு போட மாட்டான் அதானே காரணம்.

TR : என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க ஏய் டண்டனக்கா... ஏய் டனக்கணக்கா நான் பாட்டு பாடினா போதும் ஓட்டு எல்லாம் எனக்கு தான்...விழும் 

நான் : பின்ன ஓட்டு போடலேன்னா பாடியே கொன்னுடுவீங்க அதுக்கு ஓட்டே போட்டு தொலைச்சிடலாம்.....

TR : தம்பி இங்க பாருங்க நான் எப்படி வாயிலே மியூசிக் போடுறேன் பாருங்க...

நான் : சார் சார் நிறுத்துங்க போதும் அப்பறம் கொலை கேஸ்லே உள்ளே போயிடுவீங்க  

சரி சரி எதுக்கு போன் பண்ணீங்க அதை சொல்லுங்க முதல் 

TR : என்னை யாரும் கூட்டணி சேர்க்கல நீங்க உங்க கட்சியில் கூட்டணி சேர்த்து கொள்ளுங்க.....

நான் : இல்லைங்க முடியவே முடியாது நாங்க ஆண்டவனிடம் மட்டும் தான் கூட்டணி வைச்சுக்குவோம் போங்க சார் வேற கட்சி பாருங்க.

இப்படியே ஒரு ரெண்டு மணிநேரம் போனில் மொக்க போட்டார் TR அப்படியே அதை கட் பண்ணி போனை வைச்சா மறுபடி போன் வந்தது அட இது யார் 

நான் : ஹலோ 

ஹாய் ஹ லோ வ ந்து...நான் தான் ஹி ஹி 

 நான் : ஹலோ சார் நீங்க பேசுறது சரியா கேக்கலை நல்லா பேசுங்க 

ஏய் என்ன...என்ன... தெரியலையா...

நான் : யார் சார் நீங்க...????

ஏய் கூல் கூல் நான் தான் கார்த்திக் பேசுறேன் 

நான் : சார் சொல்லுங்க சார் என்ன வேண்டும் உங்க மாமா சந்திர மெளலி எப்படி இருக்கார்..??

கார்த்தி : இஸ் பைன் சௌந்தர்...ரொம்ப முக்கியமான விஷயம் நீங்க எங்க கட்சிக்கு அதரவு தெரிவிக்கணும் அப்படி செய்தால் எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கும். 


நான் : கார்த்திக் எப்போ கட்சி ஆரம்பித்தீங்க சொல்லவேயில்லை...சரி உங்களுக்கும் அந்த கூட்டணிக்கும் என்ன பிரச்னை...???

கார்த்தி : அது வந்து...வந்து...வடிவேல் சொன்னாரே ஒரு பேச்சு வார்த்தை அதில் எங்களை உள்ளே சேர்க்கவில்லை...நாங்க எல்லாம் சின்னப்பங்கச சொல்லி வெளிய நிக்க வைச்சுடாங்க...எங்களை மதிக்கவேயில்ல அதனால நாங்க வெளிய வந்துட்டோம்...உங்க பமுக கட்சி எங்களை ஆதரிக்கணும்....

நான் : சரி சரி கார்த்திக் இதை பற்றி நம்ம நெக்ஸ்ட் மந்த பேசுவோம் 

கார்த்தி : சௌந்தர் நெக்ஸ்ட் மந்த தேர்தல் முடிஞ்சுடும் எங்க கட்சியை விட உங்க கட்சி ரொம்ப தூங்கும் போல

நான் : சரி சரி நாளைக்கே பேசுவோம் ...

சரி கூட்டணி குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்னனு அம்மாவை பார்க்க போன தலைவரை போன் செய்து பேசினேன் 

நான் : வணக்கம் தலைவரே என்ன ஆச்சி உங்க தோழி கூட்டணி 

தலைவர் : நான்  வருத்தப்படத வாலிபர்  சங்க  தலைவர்  கைப்புள்ள  பேசுறேன் , யார்  பேசுறது?

நான் : இப்பொழுது நீங்க தனியா தேர்தலில் நின்னா நீங்க தான் அடுத்த முதல்வர் ..

தலைவர் : இப்படி உசுப்பு எத்தி ஏத்தி ஒடம்ப ரணகளமா ஆக்குறீங்க தம்பி முடியல என்ன விட்டுங்க தம்பி...

நான் : என்ன தலைவரே நீங்க தேர்தலில் நிற்க கூடாது என்பதற்காக 1000 கோடி லஞ்சம் கொடுத்ததா சொல்றீங்க இது ஓவரா தெரியல 100 கோடி கொடுத்தா நீங்களே தேர்தலில் நிக்க மாட்டிங்க...!!!


தலைவர் : தம்பி உண்மையெல்லாம் இப்படி வெளிய சொல்ல கூடாது..எனக்கு சுயமரியாதையை தான் முக்கியம்...(சூனா பானா இப்படியே மைட்டேன் பண்ணு... போ போ போ.)...

நான் : சரிங்க தலைவரே உங்ககிட்ட நான் அப்பறம் பேசுறேன்...!!!

தற்போதைய நிலைமையை பார்த்து செயற்குழு ஒரு முடிவு எடுத்து உள்ளது நாங்கள் யாருடனும் கூட்டணியில்லை தனித்து களம் காண உள்ளோம்...என்பதை தெரிவித்து கொள்கிறோம்  

ப.மு.க தேர்தல் அறிக்கை 

*  அனைவருக்கும் தினம் இலவசமாக பின்னூட்டம் போடப்படும்....

*  வலைதளத்தை யாரும் ஹக் செய்யாமல் இருக்க பாதுகாப்பு படை அமைக்கப் படும் 


*  கணினி பழுது ஆனால் வீட்டிற்கே வந்து சர்விஸ் செய்து தரப்படும் 

*  தங்கள் பதிவுகளை புத்தகமா வெளியிடும் செலவை அரசே ஏற்று கொள்ளும் 

*  இணையம் இணைப்பு இலவசமாக வழங்கப்படும்...

*  மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படும் 

*  58 வயதிற்கு மேற்பட்டோர் எந்த ப்ரோசின் சென்டர் சென்றாலும் இலவசம்   

*  பதிவுலக சண்டைகள் அடிக்கடி நீர்த்துப் போவதால் மாதம் இரண்டு புதிய சண்டைகள் கட்சியின் சார்பில் அமலாக்கப்படும். அதில் சேர்ந்து சண்டையிட்டுப் பிறவிப்பயனடையலாம்

எந்த எந்த தொகுதியில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பின்னர் வெளியிடுவோம்....ஆகவே பதிவர்களே மன்னிக்க மக்களே உங்களது பொன்னான வாக்குகளை ப .மு.க கட்சிக்கு அளித்து நாடு வளம்பெற உதவுங்கள்


45 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை....

சௌந்தர் said...

MANO நாஞ்சில் மனோ கூறியது...
வடை...////


உங்களுக்கு தான் வடை ....வாங்கிக்கோங்க

MANO நாஞ்சில் மனோ said...

//வலைதளத்தை யாரும் ஹக் செய்யாமல் இருக்க பாதுகாப்பு படை அமைக்கப் படும் //

டக்கால்டி கவனத்திற்கு....

MANO நாஞ்சில் மனோ said...

//தலைவர் : இப்படி உசுப்பு எத்தி ஏத்தி ஒடம்ப ரணகளமா ஆக்குறீங்க தம்பி முடியல என்ன விட்டுங்க தம்பி...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

//தற்போதைய நிலைமையை பார்த்து செயற்குழு ஒரு முடிவு எடுத்து உள்ளது நாங்கள் யாருடனும் கூட்டணியில்லை தனித்து களம்காண உள்ளோம்...என்பதை தெரிவித்து கொள்கிறோம் //

நாசமா போச்சி போங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//கணினி பழுது ஆனால் வீட்டிற்கே வந்து சர்விஸ் செய்து தரப்படும் //

பழுது பார்க்க அழகிகள்'தான் வரணும் முடியுமா....

சௌந்தர் said...

MANO நாஞ்சில் மனோ கூறியது...
//தற்போதைய நிலைமையை பார்த்து செயற்குழு ஒரு முடிவு எடுத்து உள்ளது நாங்கள் யாருடனும் கூட்டணியில்லை தனித்து களம்காண உள்ளோம்...என்பதை தெரிவித்து கொள்கிறோம் //

நாசமா போச்சி போங்க...////

கட்சியை பற்றி அவதுறு தெரிவிக்க கூடாது....அது தப்பு

MANO நாஞ்சில் மனோ said...

//தங்கள் பதிவுகளை புத்தகமா வெளியிடும் செலவை அரசே ஏற்று கொள்ளும்//

எலேய் ரெண்டு செந்திலும் ஓடி வாங்கலேய்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது இது, பெரிய பெரிய தலைவர்கள்லாம் போன் பேசி இருக்காங்க, சௌந்தர் நெஜமாவோ பெரிய இடமோ?

சௌந்தர் said...

MANO நாஞ்சில் மனோ கூறியது...
//கணினி பழுது ஆனால் வீட்டிற்கே வந்து சர்விஸ் செய்து தரப்படும் //

பழுது பார்க்க அழகிகள்'தான் வரணும் முடியுமா../////

அழகன் தான் வருவார்....

MANO நாஞ்சில் மனோ said...

//இணையம் இணைப்பு இலவசமாக வழங்கப்படும்...//


அப்பிடியே வடையும் கொடுக்கொனும் சரியா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ கூறியது...
//கணினி பழுது ஆனால் வீட்டிற்கே வந்து சர்விஸ் செய்து தரப்படும் //

பழுது பார்க்க அழகிகள்'தான் வரணும் முடியுமா....////////

யோவ் தினத்தந்தில வேல பாத்திட்டு இருந்தியா?

சௌந்தர் said...

MANO நாஞ்சில் மனோ கூறியது...
//தங்கள் பதிவுகளை புத்தகமா வெளியிடும் செலவை அரசே ஏற்று கொள்ளும்//

எலேய் ரெண்டு செந்திலும் ஓடி வாங்கலேய்...///

ரெண்டு பேரும் புக் ரீலீஸ் போய் இருக்காங்க..!!

MANO நாஞ்சில் மனோ said...

//சௌந்தர் கூறியது...
MANO நாஞ்சில் மனோ கூறியது...
//கணினி பழுது ஆனால் வீட்டிற்கே வந்து சர்விஸ் செய்து தரப்படும் //

பழுது பார்க்க அழகிகள்'தான் வரணும் முடியுமா../////

அழகன் தான் வருவார்....//

அப்போ நான் ஒட்டு போட மாட்டேன் போ.....

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
என்னது இது, பெரிய பெரிய தலைவர்கள்லாம் போன் பேசி இருக்காங்க, சௌந்தர் நெஜமாவோ பெரிய இடமோ?////

ஆமா ஆமா எங்க வீட்டு பின்னாடி பெரிய இடம் காலியா இருக்கு...!!! :)

Madhavan Srinivasagopalan said...

// நேற்று திடீர் என்று எனக்கு ஒரு போன் வந்தது யார் நம்பர் என்றே தெரியவில்லை ...நானும் போனை எடுக்கவில்லை //

உங்க போன் சர்விஸ் ப்ரோவைடர் இன்கமிங் கூட சாசு கட் பண்ணுறாங்களா ?
இல்லை நீங்க ரோமிங்க்ல இருக்குறீங்களா ?

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///////MANO நாஞ்சில் மனோ கூறியது...
//கணினி பழுது ஆனால் வீட்டிற்கே வந்து சர்விஸ் செய்து தரப்படும் //

பழுது பார்க்க அழகிகள்'தான் வரணும் முடியுமா....////////

யோவ் தினத்தந்தில வேல பாத்திட்டு இருந்தியா?//

அப்போ தினத்தந்தியில வேலை பார்த்தா அழகிகள் வருவாங்களா...

சௌந்தர் said...

MANO நாஞ்சில் மனோ கூறியது...
//சௌந்தர் கூறியது...
MANO நாஞ்சில் மனோ கூறியது...
//கணினி பழுது ஆனால் வீட்டிற்கே வந்து சர்விஸ் செய்து தரப்படும் //

பழுது பார்க்க அழகிகள்'தான் வரணும் முடியுமா../////

அழகன் தான் வருவார்....//

அப்போ நான் ஒட்டு போட மாட்டேன் போ....////

நிவேதா கிட்ட சொல்றேன் அப்போ ஓட்டு போடுவீங்க

ரஹீம் கஸாலி said...

இதை நான் ஒத்துக்க மாட்டேன் பதிவர்களுக்கு நெட் பில் இலவசம்னு உங்க தேர்தல் அறிக்கையில நீங்க சொல்லவே இல்லையே

MANO நாஞ்சில் மனோ said...

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
என்னது இது, பெரிய பெரிய தலைவர்கள்லாம் போன் பேசி இருக்காங்க, சௌந்தர் நெஜமாவோ பெரிய இடமோ?//

ஆமா பெ........ரி........ய.......இடம்...

MANO நாஞ்சில் மனோ said...

//ரஹீம் கஸாலி கூறியது...
இதை நான் ஒத்துக்க மாட்டேன் பதிவர்களுக்கு நெட் பில் இலவசம்னு உங்க தேர்தல் அறிக்கையில நீங்க சொல்லவே இல்லையே//

யோவ் மெதுவா பேசும் ஒய்....
அதை ரகசிய டார்கேட்டில் வச்சிருக்காங்க....

சௌந்தர் said...

Madhavan Srinivasagopalan சொன்னது…
// நேற்று திடீர் என்று எனக்கு ஒரு போன் வந்தது யார் நம்பர் என்றே தெரியவில்லை ...நானும் போனை எடுக்கவில்லை //

உங்க போன் சர்விஸ் ப்ரோவைடர் இன்கமிங் கூட சாசு கட் பண்ணுறாங்களா ?
இல்லை நீங்க ரோமிங்க்ல இருக்குறீங்களா ?////

நாங்க அரசியல் வாதி பல எங்க வேணா இருப்போம் அந்த போன் வரும் போது நான் டெல்லில இருந்தேன்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இங்க என்னங்க நடந்துக்கிட்டு இருக்கு..

ரஹீம் கஸாலி said...

இணையம் இணைப்பு இலவசமாக வழங்கப்படும்...
லிமிட்டடா? அன் லிமிட்டடா அத சொல்லுங்க முதல்ல....

# கவிதை வீதி # சௌந்தர் said...

நான் உள்ளே வரலாமா..

ரஹீம் கஸாலி said...

அய்யா...கும்மியடிக்கிற கணவன்களே சே..சே...கனவான்களே....இங்கேயே டேரா போட்டுதாம நம்ம பக்கமும் கொஞ்சம் வந்துட்டு போங்க....உங்கள நம்பித்தான் நானும் இதை கவிதையென்று சொல்வதோ...ட்வீட்டென்று சொல்வதோ உங்க இஷ்டம். ன்னு ஒரு பதிவ போட்டுட்டு ஈ ஓட்டிக்கு இருக்கேன்

கோமாளி செல்வா said...

உன் கட்சில எனக்கு சீட் கிடைக்குமா ? ஹி ஹி

pattikattaan said...

//அனைவருக்கும் தினம் இலவசமாக பின்னூட்டம் போடப்படும்....//

ங்கொய்யாலே, புதுசா பதிவு எழுதலைனா, பழைய பதிவுகளுக்கு பின்னூட்டம் போடப்படுமா?.

சௌந்தர் said...

ரஹீம் கஸாலி கூறியது...
இதை நான் ஒத்துக்க மாட்டேன் பதிவர்களுக்கு நெட் பில் இலவசம்னு உங்க தேர்தல் அறிக்கையில நீங்க சொல்லவே இல்லையே///

இதுக்குதான் தேர்தல் அறிக்கையை நல்ல படிக்கணும்

* இணையம் இணைப்பு இலவசமாக வழங்கப்படும்...

சௌந்தர் said...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
இங்க என்னங்க நடந்துக்கிட்டு இருக்கு..

நான் உள்ளே வரலாமா..///

ஒன்னும் இல்லைங்கோ தேர்தல் அறிக்கை வாசிக்குறோம் வாங்க வாங்க உள்ளே வாங்க

சௌந்தர் said...

pattikattaan சொன்னது…
//அனைவருக்கும் தினம் இலவசமாக பின்னூட்டம் போடப்படும்....//

ங்கொய்யாலே, புதுசா பதிவு எழுதலைனா, பழைய பதிவுகளுக்கு பின்னூட்டம் போடப்படுமா?./////

அரசு தன் கடமையை செய்யும் பதிவு போட்டாலும் சரி போடலைனாலும் சரி பின்னூட்டம் போடுவோம்

சௌந்தர் said...

கோமாளி செல்வா சொன்னது…
உன் கட்சில எனக்கு சீட் கிடைக்குமா ? ஹி ஹி////

கிடைக்கும் கிடைக்கும் நேர்காணல் அப்போ கூப்பிடுவோம் அப்போ வாங்க....

Jey said...

//கோமாளி செல்வா கூறியது...
உன் கட்சில எனக்கு சீட் கிடைக்குமா ? ஹி //

கிடைக்கும் கிடைக்கும்...வரும் போது கோனிச் சாக்க மறக்காம எடுத்துட்டு வந்துரு செல்வா..

சௌந்தர் said...

Jey கூறியது...
//கோமாளி செல்வா கூறியது...
உன் கட்சில எனக்கு சீட் கிடைக்குமா ? ஹி //

கிடைக்கும் கிடைக்கும்...வரும் போது கோனிச் சாக்க மறக்காம எடுத்துட்டு வந்துரு செல்வா.///

ஆமா ஆமா அது ரொம்ப முக்கியம்

ரஹீம் கஸாலி said...

சௌந்தர் சொன்னது…

கோமாளி செல்வா சொன்னது…
உன் கட்சில எனக்கு சீட் கிடைக்குமா ? ஹி ஹி////

கிடைக்கும் கிடைக்கும் நேர்காணல் அப்போ கூப்பிடுவோம் அப்போ வாங்க.... ///
யோவ்...வேட்புமனு தாக்கலே முடிஞ்சிருச்சு.....இனி என்னய்யா நேர்காணல்? ஓ....அடுத்து வர்ற உள்ளாட்சி தேர்தலுக்கா? நடக்கட்டும் நடக்கட்டும்

சௌந்தர் said...

ரஹீம் கஸாலி கூறியது...
சௌந்தர் சொன்னது…

கோமாளி செல்வா சொன்னது…
உன் கட்சில எனக்கு சீட் கிடைக்குமா ? ஹி ஹி////

கிடைக்கும் கிடைக்கும் நேர்காணல் அப்போ கூப்பிடுவோம் அப்போ வாங்க.... ///
யோவ்...வேட்புமனு தாக்கலே முடிஞ்சிருச்சு.....இனி என்னய்யா நேர்காணல்? ஓ....அடுத்து வர்ற உள்ளாட்சி தேர்தலுக்கா? நடக்கட்டும் நடக்கட்டும்/////

யோவ் இது வேற தேர்தல்

ரஹீம் கஸாலி said...

இன்னொரு முக்கியமான விஷயம் இந்த தேர்தல் அறிக்கைக்கு காப்பி ரைட் வாங்கிக்கங்க....இல்லாட்டி எதிர்கட்சி காரங்க காப்பி அடிச்சிட போறாங்க...

வைகை said...

58 வயதிற்கு மேற்பட்டோர் எந்த ப்ரோசின் சென்டர் சென்றாலும் இலவசம் ///

இது ஒருதலைப்பட்ச்சமானது.. இதனால் ரமேசுக்கு மட்டுமே பயன்.. எனைப்போல யூத்துக்கு என்ன திட்டம் உள்ளது?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
என்னது இது, பெரிய பெரிய தலைவர்கள்லாம் போன் பேசி இருக்காங்க, சௌந்தர் நெஜமாவோ பெரிய இடமோ?////


ஆமா..தங்கபாலு தலைமேல... வேண்டாம் விடுங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை சொன்னது… 58 வயதிற்கு மேற்பட்டோர் எந்த ப்ரோசின் சென்டர் சென்றாலும் இலவசம் ///

இது ஒருதலைப்பட்ச்சமானது.. இதனால் ரமேசுக்கு மட்டுமே பயன்.. எனைப்போல யூத்துக்கு என்ன திட்டம் உள்ளது?///

60-வயசானா உங்க ஊர்ல யூத் தா?

சுசி said...

:))

Chitra said...

கல...கல....கல...கல.... பதிவு !

அப்பாவி தங்கமணி said...

//நாங்க ஆண்டவனிடம் மட்டும் தான் கூட்டணி வைச்சுக்குவோம்//
அவங்களா நீங்க? சொல்லவே இல்ல..:)

//உங்க பமுக கட்சி எங்களை ஆதரிக்கணும்//
கண்டிப்பா பமுக ஆதரவு கிடைச்சா ஜெய்ச்சுடலாம்... செம மீடியாவாச்சே...:))

//ப.மு.க தேர்தல் அறிக்கை//
ஹா ஹா ஹா...செம டீல்...ஆனா வோட்டு போட்டப்புறம் நீங்களும் இதை எல்லாம் டீல்ல விட்டுட மாட்டீங்களே...:))

Nice round up and write up :))

malgudi said...

சும்மா சொல்லக்கூடாது,சும்மா சுத்திச் சுத்தி அடிச்சீங்க.
செம கலக்கல்.
enjoy............

# கவிதை வீதி # சௌந்தர் said...

கவிதை வீதியில் இன்றைய பதிவு...

கோமாளி செல்வாவும் விண்டோசும்...!

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_29.html

 
;