Thursday, October 20 6 comments

என்னங்க சொல்றீங்க இது விஜய் படம் தானே..??!!


வேலாயுதம் படத்தின் பாடல் முதலில் கேட்பதற்கு பிடிக்காமல் போனாலும், கேட்க கேட்க பாடல்கள் நன்றாகயிருந்தது ரத்தத்தின் ரத்தத்தை தவிர.... பாடல் கேட்டுகொண்டிருக்கும் பொழுது திடீர் என தோன்றிய கற்பனை.. இது... முளைச்சு மூணு இலையும் விடல பாடல் எப்படி தோன்றி இருக்கும்...?? ஜெயம் ராஜா : விவேகா சார்... ஒரு பாட்டு எழுதணும் 

விவேகா : யாருக்கு சார்..

ராஜா : விஜய் சார்க்கு தான்

விவேகா : அப்போ பாட்டு வரியே தேவை இல்லை டர்ர்ணா சால்னா மோர் எழுதினா போதும்..

ராஜா : ஐயோ சார் அப்படி எல்லாம் இல்லை இந்த பாட்டுக்கு சுச்சுவேசன் இருக்கு..

விவேகா : என்னங்க சொல்றீங்க இது விஜய் படம் தானே..??!!

ராஜா : ஆமா ஆமா விஜய் படம் தான் ஆனா சுச்சுவேசன் இருக்கு 


விவேகா : என்னால  நம்பவே முடியல சரி சுச்சுவேசன் என்ன சொல்லுங்க..??

ராஜா : ஹீரோ... அவரோட அத்தை பொண்ணு கூட மார்கெட் போய் மளிகை சாமான், காய் கறி, எல்லாம் வாங்க போறார்... என்ன பொருள் வாங்க போறோம் மறக்காம இருக்க... பாட்டு பாட்டிடே போறார்....அத்தை பொண்ணு பத்தியும் (ஹீரோயின்) பாடல் வரி இருக்கணும் 

விவேகா : இவர் என்ன குழந்தையா..?? கால் கிலோ கருப்பு புளி, மஞ்சா தூள் பாடிட்டு போக..??

ராஜா : அப்போ தான் குழந்தைகளுக்கு பிடிக்கும்..

விவேகா : அப்போ பெரியவங்க அவர் படத்தை பார்க்குறதே இல்லையா..?? சரி சரி நமக்கு என்ன பாட்டு எழுதி கொடுப்போம்..

முதல் வரி பாருங்க சார் 


மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல

ராஜா : இது ஓகே சார் ஆனா காய்கறி பத்தி வரலையே 

விவேகா : இருங்க சார் அவசரப்படாதீங்க...அடுத்த லைன் கேளுங்க 

வெரலு வெண்டக்கா உன் காது அவரக்கா
மூக்கு மௌகாய், மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

ராஜா : சூப்பர் சூப்பர் சார் ... சூப்பர் மார்கெட் ல வேலை செஞ்சு இருப்பீங்க போல பின்றீங்க..

விவேகா : ரொம்ப புகழாதீங்க இப்போ ஹீரோயின் பத்தி சொல்றேன் கேளுங்க..!!

வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு

ராஜா : பின்னிடீங்க சார்... இதோ ஒரு நிமிஷம் சார் போன்..

ராஜா : (போனில்...) சரிங்க சார் அப்படியே வைச்சிடுவோம்.. சரிங்க சரிங்க ... அப்போ வைச்சிடுறேன்.

விவேகா : என்ன சார் ஆச்சு... எனி சீரியஸ்..???

ராஜா : அதெல்லாம் ஒன்னும் இல்லை சார் விஜய் சார் பேசினார் 

விவேகா : என்ன சார் அவர் இங்க வர போறாரா அப்போ பாட்டு எழுத முடியாதா..??

ராஜா : அது ஒன்னும் இல்லை சார் இந்த பாட்டுல அவர் ஹிட் படம் பேர் ஒன்னு வரணுமாம்..

விவேகா : ஹிட் படமா அது இருந்தா தானே சார் நான் சொல்லுவேன்..சரி என்ன பண்றது என் தலையெழுத்து சொல்றேன்..

பார்வை திருப்பாச்சி உன் தீண்டல் நெருப்பாச்சு
உன்ன பார்த்தாலே என் பகலும் இரவாச்சு..!!!

ராஜா : உங்கள மாதரி ஆளுங்க இருக்குற வரை எங்களுக்கு கவலையே இல்லை சார்...இதுக்கு அப்பறம் நீங்க கண்ணா பின்னான்னு எழுதினா கூட பரவாயில்லை..!!

விவேகா : ஓஹ இப்படி சொல்லிட்டீங்களா இப்போ பாருங்க...!!

கன்னாபின்னான்னு நீ அழகா இருக்குறியே
கண்கள் என்னும் மாடவெயிலில் என்ன பொரிக்கிறியே


விவேகா : நடுவுல நடுவுல கல்கண்டு முந்திரி போட்டா பாட்டு முடிஞ்சுது.. சார்.... 


ராஜா : சார் நீங்க என் தெய்வம் சார் இப்படி ... ஒரு பாட்டு எழுதி தந்ததுக்கு இந்த வருஷம் இது தான் டாப் சாங்க வரும்... 

விவேகா : உங்க நம்பிக்கைக்கு என் பாராட்டு சார் வாழ்த்துக்கள்.... இந்த பாட்டு நான் எழுதினேன் வெளியே சொல்லாம கூட இருக்கலாம் ஆனா எனக்கு பணம் மட்டும் கொடுத்திடுங்க..


                                            ******************************************************************************

ஆனா இந்த பாடல் கேட்பதற்கு ரொம்ப நல்லா இருக்கு நல்ல மொலேடி..... இந்த வருட சிறந்த மேலோடில இந்த பாடலும் ஒண்ணா இருக்கும்.... 

கற்பனை சொல்லி ரொம்ப ஓவரா போய் இருந்தா.... கண்டுக்காதீங்க.... இது வெறும் கற்பனை தான்  Monday, October 10 17 comments

உன் நினைவுகள்...
உன் நினைவால் 
சிரமப்பட்டு 
கண்ணயர்ந்தால்
கனவுகளில் வந்து 
எழுப்பி விடுவதே
உன் வாடிக்கை..!!!
*


உன்னுடன் செல்லும் 
போதெல்லாம்..
மழை வர வேண்டி 
கொள்கிறேன்..
குடையுடன் சேர்த்து 
உன் விரலையும் பிடிக்க... !!
*

என்ன பற்றி கவிதை 
சொல் என்கிறாய்..
உன் இரு வரி இமைகள் 
சொல்லும் கவிதையவிடவா 
நான் சொல்லி விட போகிறேன்...!!
*

எழுதிய கவிதை 

எல்லாம் எனக்கா 
என்பாய்..
இல்லையென்பேன்..
உன் கோவத்தில் 
மீண்டும் பிறக்கிறது 
உனக்கான கவிதைகள்..!!


உன் நினைவுகள் 
உறக்கமற்ற விழியை 
தந்தாலும்..
நடுஇரவில்..
விழிகள் உறக்கத்தை 
நோக்கி செல்ல.. 
மனதை எட்டி 
உதைத்து 
எழுப்புகிறது 
உன் நினைவுகள்..!!Friday, October 7 11 comments

எங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..!!

நேற்று சந்தித்த
உறவு ஒன்று 
இரண்டாண்டில் வந்து நிற்க
ஓடிவிட்ட காலத்தை
நினைவுகளால் ஓட்டிப் பார்க்க
அன்று பழகியது போல 
இன்னும் அப்படியே ..
பழகிகொண்டிருப்பது 
தான் உன் சிறப்பு ..

ஒவ்வொருவரையும் 
நீ உறவை சொல்லி 
அழைக்கும் பொழுது 
உன்... அன்பின் ஆழம் 
தெரிகிறது....!! 
உன் மனதில் இருப்பவர்களை 
மட்டுமே நீ உறவுமுறையில்
அழைப்பாய்..!!

வாழ்த்து கவிதை எழுதி 
கொடுக்கும் உனக்கு..
ஒரு வாழ்த்து கவிதை..
இக் கவிதையை கண்டு 
கோபம் கொள்ளாமல் 
பொறுத்து கொள்ள 
சொல் உன் கவிதையை..!! 
  

என்னை ஒவ்வொரு முறையும் 
உறவுமுறை சொல்லி 
அழைக்கும் பொழுதெல்லாம்..
மரத்தில் நீர் ஊற்றியது போல் 
இறுகி கொள்கிறது...
நமக்கான.. 
பந்தம்..!!

வார்த்தைகள் வளர்கின்றன 
உன்னை பற்றி எழுதும் பொழுது..
உன் அன்பின் நீளம் 
அப்படி...!!


உன்னை வாழ்த்த வார்த்தைகள் 
தேடி கொண்டிருக்கும்..
பொழுது... 
வேறு வார்த்தைகள் 
கிடைக்கவில்லை..


எபோதும் போல் 
அண்ணா..!!
என்றே முடித்து கொள்கிறேன்..


இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா...


 
;