Tuesday, November 29 15 comments

சரிந்து கிடந்தேன்...

விதை போட்டவன்
சென்றுவிட
சிலரால் மிதி பட 
சிலர் மேய்ந்து விட 

அவளின் கண்ணீர் பட 
எதோ துளிர்த்து விட்டேன்..!!!

என் நிழலில் பலரிருந்தும்
நான் வெயிலில் நிற்பதை 
காணமல் சென்றனர்..!!!

இளைப்பாறும் பறவைகளும் 
எச்சமிட்டே செல்கின்றன...!!

நேசம் கொண்டு 
பலர் கல்லெறிய..
கண்ணீருடன் கனி 
அமுதை கொடுக்க...

கனியை உண்டு 
என் மீதே தூக்கி
எறிகிறான் விதையை..!

தாக்குபிடிக்க முடியா
காற்று தாக்கி 
சரிந்து கிடந்த என்னை 
தூக்கி சென்று...  

சிலர் மிதித்து கொண்டிருக்க 
சிலரோ தீ மூட்டிய 
பசியாறினர்..!!

Monday, November 21 9 comments

ஓர் நட்பு..!!!

வாழ்க்கை பாதையில் 
கை கோர்த்து நடந்து 
கவலைகளை 
மறந்தோம்..
நமக்கு நாம் என்றோம்..!!

ஆனந்தமாய் சுற்றி 
திரிந்த நாட்களை 
எண்ணி மகிழ்ந்தோம்,
நட்பில் பிழை கண்டு 
ஒதுங்கி நின்றோம் 
கண்ணீருடன்..!!

கவலைகள் போக்க 
எவ்விடம் என்று அலைந்த 
 நமக்கு..
மேலும் கவலைகளே 
பரிசாக வந்தன..!!

காயப்பட்ட மனதிற்கு 
ஆறுதல் கூறினாலும் 
வடுக்கள் மறைவதில்லை..!!

காயப்பட்ட மனமிது 
மேலும் காயங்களை
தாங்காதென்று..
விலகி நின்று விலகி நின்று
காயப்படுத்துகிறது..!!

மாறிய வார்த்தைகள்..
மாற்றத்தை உணர்த்துகிறது 
நமக்கு நாம் வார்த்தை 
பொய்யாகி போனதின்று!..!!

நடப்பாய் கைகோர்த்து 
சென்ற பாதையில்..
அமைதியை தேடி 
தனிமையில் செல்ல 
நினைத்த நட்பை 

தோள் தட்டி 
கண்ணீருடன் 
வழியனுப்பியது
ஓர் நட்பு..!!!

Thursday, November 17 8 comments

யார் இந்த ராங் நம்பர்..???

போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த அனுபவங்கள் நிறைய இருக்கும், ரொம்ப தொல்லையாக மாறி சிலர் நம்பரை கூட மாற்றியிருப்பார்கள் அந்த அளவிற்கு தொல்லையாக இருக்கும் ...அப்படியென்ன தொல்லைன்னு கேக்குறீங்களா ராங் கால்ஸ் தான். 

நாமும் சில நேரங்களில் ராங் கால் பண்றதுண்டு ஏதோ ஒரு நம்பர் மாற்றி போடுவதால் ராங் நம்பராக மாறிவிடும் ஆனால் மீண்டும் மீண்டும் ஒரே எண்ணுக்கு தொடர்பு கொண்டு, இவர் இருக்கிறாரா என்று கேட்பது கிடையாது. எங்களுக்கு வரும் ராங்நம்பர் அழைப்புகள் எல்லாம் ஒரே நபரை கேட்டு தான் வருகிறது 

லேன்ட் லைன் தொலைபேசி இணைப்பு கொடுத்தது முதல் உதயகுமார் இருக்கிறாரா..?? என்ன கேட்டு வரும் அப்படி யாரும் இல்லையென்று சொல்லியும் இன்று வரை அந்த ராங் கால் வந்து கொண்டே தான் இருக்கிறது, சில நேரங்களில் பொறுமையுடன் அப்படியாரும் இல்லையென்று சொல்லுவோம். சில நேரம்...

பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருக்கும் பொழுது தொலைபேசி அடிக்கும் யாரோ என அவசர அவசரமாய் எடுத்து கேட்டால் அது ராங் நம்பராக இருக்கும்.. அந்த நேரத்தில் வார்த்தைகள் தடித்து விடும் அப்போதும் அவர்கள் விடுவதாயில்லை இன்று வரை அப்படி ராங் கால்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது..

வீட்டு தொலைபேசியில் தான் அப்படி வருகிறதென்று பார்த்தால்ஒரு பத்து நாட்களாய் என் செல் போனிற்கும் ராங் கால்கள் வந்து கொண்டிருக்கிறது நீலிமா ராணி இருக்குறாங்களா..?? அப்படியாரும் இல்லையென்று சொன்னால் யே நீலு உனக்கு ஏதாவது பிரச்னையா என கேட்டு மெசேஜ் அனுப்புறாங்க...?? மாத்தி மாத்தி வேற நம்பர்ல இருந்து கேக்குறாங்க.. நாங்க என்ன நீலிமா ராணிய பூட்டி வைச்சா இருக்கோம்..?? எங்களையே கேக்குறீங்களே..

எங்க அண்ணன் நம்பருக்கு வெளிநாட்ல இருந்து போன் வரும், மெசேஜ் வரும் ஹாய் டியர், அப்படி இப்படின்னு முதல் அந்த நம்பரை நான் தான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன்..  போன் வரும் எடுத்தா ஏதோ ஒரு பொண்ணு எடுத்துட்டு ஹலோ சொல்லிடு வைச்சிடும் இப்படி எனக்கு மட்டும் தான் ராங் நம்பர் வருதா இல்லை உங்களுக்கு வருதா..??

லேன்ட் லைன்க்கு வருதுன்னா எங்க வீட்டுல முதலில் இருந்த யாரோ பேங்க் லோன் வாங்கிவிட்டு போய் இருப்பாங்க..வெப்சைட்ல அட்ரஸ் பார்த்து எங்களுக்கு போன் பண்ணலாம், ஆனா வீட்டில் குடியிருக்கும் அணைவருக்கும் வர வேண்டும் அப்படி வருவதில்லை  எங்களுக்கு மட்டும் தான் வருகிறது.. நாங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் நம்பரை இதற்கு முன்பு வேறு யாரவது பயன் படுத்திருப்பார்கள் போல. அப்படி ஒருவர் பயன்படுத்திய நம்பரை மற்றவர் பயன்படுத்த முடியுமா..??     

லேன்ட் லைன்க்கு தான் நெட்ல இருந்து நம்பர் எடுத்து போன் பண்றாங்க ஆனா எப்படி செல் போன் நம்பருக்கு போன் பண்றாங்க தெரியல. ராங் நம்பர் சொல்லியும் மறுபடி ஏன் தான் அழைக்கிறார்களோ.. 

Monday, November 7 9 comments

காதல் மழை...


ஆயிரம் மழை துளிகள் 
உன்னை சூழ்ந்திருக்க
ஒரு துளியாய் என்றும்
உன் நெற்றியில் நான்..!!

     ****
கோபித்து கொள்கிறாள் 
அவள் வாசனையை 
ரசிக்காமல்..
மண் வாசனையை 
ரசிப்பதால்..!!!


     ****
அவளுடன் பேசுகையில் 
இடியாய் இடித்து..
தொந்தரவு செய்கிறது 
மழை..!!!


     ****
காத்திருந்த காதலர்களை 
மேலும் காக்க வைக்கிறது 
மழை..!!


    *****
ரசித்து ரசித்து காதல் 
மழையில் நனைந்தாலும்
காதல ஜுரம் விடுவதாயில்லை..!!


       ****
வேண்டுமென்றே குடையை 
விட்டு செல்கிறான் 
அவள் முந்தானையில்
ஒளிந்து கொள்ள...


      *****
காதலர்களின் சாபத்தை 
பெறுகிறது 
மழை...
காதலனின் தாமதத்தால்..


    ****
 பனித்துளி போல்
உன் மேல் மழைத்துளி..


மழைவிட்டாலும்
கூந்தல் சாரலின்
மழை விடுவதில்லை.


  ***** 
ஒவ்வொரு மழையிலும்
ஒரு காதல் துளிர்விடுகிறது..
ஒரு காதல் கண்ணீரில் 
கரைகிறது..!!

 
;