Tuesday, April 26 25 comments

"கோ GO படத்திற்கு GO"கனாக் கண்டேன், (கந்து வட்டி), அயன் (கள்ளக்கடத்தல்), என கதைகளத்தை அமைத்தவர் "கோ" படத்தில் பத்திரிக்கையை, அரசியலை கொண்டுவந்திருக்கிறார். ஆனந்த்-சுபா இவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் இதில் கூறப்பட்டு உள்ளது. இவர்கள் இணைந்தே திரைக்கதையும் எழுதியுள்ளார்கள். வசனம் சுபா எழுதிவுள்ளார் அயன் படம் பார்த்தவர்கள் நிச்சயம் இந்த படம் பார்க்க வேண்டும் என நினைத்து இருப்பீர்கள், அதில் நானும் ஒருவன். 
ஒரு தினசரி பத்திரிக்கையின் போட்டோகிராபர் ஜீவா, ஆளுங்க கட்சி (பிரகாஷ்ராஜ்), எதிர்க்கட்சி (கோட்டா சீனிவாச ராவ்), தேர்தல் வருகிறது. அரசியல்வாதிகளின் தில்லு முள்ளுகளை ஜீவா தோலுரித்து காட்டுகிறார், அந்த நேரத்தில் இளைஞர்களின் சிறகுகள் அமைப்பு தேர்தலில் போட்டியிடுகிறார்கள், அவர்களுக்கு ஜீவா உதவி செய்கிறார்..இளைஞர் அமைப்பு ஆட்சி அமைத்ததா.. இல்லையா..?? அரசியல் வாதிகளை எதிர்க்கும் ஜீவாவுக்கு என்ன நடந்தது என்பது மீதி கதை.முதல் காட்சியில் வங்கியில் கொள்ளை நடக்கிறது..அந்தக்காட்சி முதல் விறுவிறுப்பு தொடங்கி விடுகிறது, கொள்ளையடிக்கும் இடத்திற்கு ஜீவா வருகிறார், காப்பாற்ற போகிறார் என்று பார்த்தால், புகைப்படம் எடுக்கிறார், பைக் "வீலிங்" எல்லாம் செய்தது புகைப்படம் எடுக்கிறார் கொள்ளையர்களை பிடிக்க உதவியாக அவர் எடுக்கும் புகைப்படம் உதவுகிறது.ஜீவாவிற்கு இந்த கேரக்டர் சரியாக பொருந்துகிறது. இவர் கேமரா பிடிப்பதை பார்த்தால் படம் பிடிப்பதில் வல்லவர் போல் தெரிகிறது. பியாவிடம் சுட்டி தனமாகவும், கார்த்திகாவிடம் காதலோடு சுற்றி வருகிறார். இவரின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது. எப்படி ஒரு எழுத்தாளர் எப்போதும் பேனாவை பாக்கெட்டில் வைத்து கொண்டு இருப்பாரோ, அதே போல் ஜீவா எப்போதும் கேமராவை வைத்து கொண்டு சுற்றுகிறார். முதல் பாதியில் இவர் செய்யும் சுட்டித்தனம் ரசிக்க வைக்கிறது.கதாநாயகிகள் பியா, கார்த்திகா, பியா பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் நன்றாக நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு, காதலோடு ஜீவாவை சுற்றி வருகிறார், இயல்பான ஒரு நட்பு ஜீவாவிற்கும் பியாவிற்கும்...தனக்காக கார்த்திகாவை காதல் தூது அனுப்புகிறார் அங்கே ஜீவா, நான் (கார்த்திகாவை உன்னைத்தான் காதலிக்குறேன் என்று சொல்வார், இதை பின்னால் இருந்து கேட்டு கொண்டுயிருப்பார் பியா..அந்த இடத்தில் அவர் நடிப்பு ரசிக்கும் படியாக இருந்தது. கலகலப்பாக இருந்து விட்டு பாதியில் சென்று அனுதாபத்தை அள்ளுகிறார். கார்த்திகா (ராதாவின் மகள்) நடிப்பு சுமார் ரகம் இது தானே முதல் படம் போக போக பார்ப்போம்.. அஜ்மல் சிறகுகள் இளைஞர் அமைப்பின் தலைவர், நடிப்பு நன்றாக இருக்கிறது, ஒரு தலைவருக்கு உரிய பாடி லேங்குவேஜ் இல்லை, இவரின் பேச்சு நன்றாக இருக்கிறது இவரை தலைவராக ஏற்று கொள்ள நமக்கு நேரம் பிடிக்கிறது. இடைவேளைக்கு பிறகு இவரின் நடிப்பு இன்னும் நன்றாக இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு இவரை பற்றி தெரியவரும் பொழுது,அதிர்ச்சி அனைவருக்கும் தான்.கதை திரைக்கதை கே.வி.ஆனந்த்,சுபா அயன் படம் அளவிற்கு திரைக்கதை இல்லையென்றாலும், நன்றாகவே இருக்கிறது, ஒரு பத்திரிக்கையாளனின் வேலையை நுட்பமாக காண்பித்திருக்கிறார்கள்.  திடிர் என திரைக்கதையில் தொய்வு வருகிறது, அதை தவிர்த்து இருக்கலாம். மூன்றுபக்கம் திரைக்கதை ஓடு கிறது..நம் கண்களை கட்ட வைக்க பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாச ராவ், கதாபாத்திரத்தை பயன் படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது..

ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் வண்ணமயமாக இருக்கிறது இவரின் ஒளிப்பதிவு.  அமளி துமளி பாடலில் மலைகளை சுற்றும் கழுகு போல் இவரின் கேமரா சுற்றுகிறது. 

பாடல்கள் ஏற்கனவே ஹிட் அதை படமாக்கிய விதம் அழகு. முதல்பாதி கலகலப்பாக செல்கிறது இரண்டாம் பாதி விறு விறுப்பாக செல்கிறது, சில குறைகள் இருக்க தான் செய்கிறது, அரசியலுக்கு நடிகைகள் வருகிறார்கள், சரி தான் ஆனால் இதில் ஏன் நமீதாவை கிண்டல் செய்திருக்கிறார்கள் தெரியவில்லை. சினிமா துறையில் இருந்து கொண்டே, இன்னொரு சினிமா கலைஞரை கிண்டல் செய்வதா..???  வெண்பனியே.. பாடல் வருவது அந்த நேரத்தில் தேவையில்லாதது...அயன் படத்திலும் இப்படி தான் ஒருவர் இறந்தவுடன் ஒரு டுயட் பாடல் வரும். இந்த பாடல் வருவது படத்தின் தரத்தை கெடுக்கிறது.. அங்கொன்றும் இங்கொன்றும் உள்ள குறையை தவிர படம் நன்றாக இருக்கிறது எதிர்பாராத பல திருப்பங்கள் படத்தில் உள்ளன. படத்தின் முடிவு சரியானதே..எங்கே ஜீவா முதல்வராகிவிடுவாரோ என நினைத்தேன் நல்ல வேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை.. நல்ல பொழுது போக்கு திரைப்படம். "கோ GO படத்திற்கு GO"    

Thursday, April 21 18 comments

நண்பேண்டா....! (முகிலன்)

விடியற் காலை மணி 5 இருக்கும் மாரிமுத்து எழுந்து..காமாட்சியை கூப்பிட்டு ஆத்தங்கரைக்கு போனாருங்க....போய் காமாட்சியை நல்லா குளிக்க வைச்சு...நெத்தியில் மஞ்சள் குங்குமம் எல்லாம் வைச்சு...அழகு பாத்தாருங்க... ஏன்னா அந்த காட்சியால தான் அவர் பொழப்பே ஓடுது. காமாட்சி தர்ற பாலை வைத்து தான் மாரிமுத்து பொழப்பு நடத்துறார்.

அட இருங்க இருங்க இது மாரிமுத்து கதையில்லை, காமாட்சி யோட கதை.   ஆமாங்க முதலில் காமாட்சி எங்க இருந்தது..என்ன செய்தது அதப்பத்தின கதை.

மாரிமுத்து..காமாட்சிக்கு அலங்காரம் செய்து முடிச்சி ஏய்..என அதட்டினார்...காமாட்சி ஏதோ நினைவில் நின்று கொண்டு இருந்தது. காமாட்சி முதுகில் ரெண்டு போட்டு மீண்டும் ஏய் என்றார்.. மாரிமுத்து..உடனே தன் நினைவை உணர்ந்து கொண்டு நடந்து சென்றது.. வீட்டிற்கு வந்ததும்..மாரிமுத்து தன் வேலையை தொடர்ந்தார்...இந்த காமாட்சி ரெண்டு வேளை இருபது லிட்டர் பால் தருது என சந்தோசமாக சொல்லி கொண்டே பால் கறந்து கொண்டு இருந்தார்...

காமாட்சி நினைவெல்லாம் தன் பழைய வாழ்க்கையில் இருந்தது. நான் எப்படி எல்லாம் இருந்தேன் என நினைத்து பார்த்து கொண்டு இருந்தது . காட்டில் தன் நண்பர்களோடு ஜாலியா காட்டை எப்படி எல்லாம் சுற்றி கொண்டுயிருந்தேன் இப்போது...ஒரு அடிமை போல் ஆகிவிட்டேன்...இந்த நிலைமைக்கு காரணம் அந்த மணி தான் ....


அந்த காட்டில் சிங்கம் புலி எல்லாம் கிடையாது அனைத்தும் அழிந்து போய் விட்டது மாடுகளின் ராஜ்ஜியம் தான் அந்த காட்டில் நான்கு மாடுகள் அவைகள் இணைபிரியாத நண்பர்களாக சுற்றி கொண்டு இருக்கும். ராஜன் கோபி முகில், சந்துரு, என நான்கு நண்பர்கள்..இவர்களை பார்த்தால் அந்த காட்டில் அனைவருக்கும் சிறிது பயம் ஏற்படும் அது இவர்களின் வீரமும் ஒற்றுமையும், அதில் ராஜன் எப்போதும் எதிர்காலம் பற்றி சிந்தித்து கொண்டு இருக்கும், முகில்க்கு எப்போதும் எந்த கவலையும் இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கும், கோபி எங்காவது சாப்பாடு கிடைக்குமா என பார்த்து தன் நண்பர்களை கூப்பிட்டு செல்லும், அதை தவிர கோபிக்கு ஒன்றும் தெரியாது, இவை அனைத்தையும் இப்போது தான் சந்துரு கற்று வருகிறான்.

ஒரு நாள் கோபி ஊர் சுற்றி விட்டு வந்து கொண்டு இருந்தது "ஒரு மூன்று கிலோ மீட்டர் அந்த பக்கம் நல்ல உணவு இருக்கிறது அங்கு சென்றால் நல்லா சாப்பிட்டு வரலாம்" என்றது கோபி, அதற்கு முகிலன், "மூன்று கிலோ மீட்டர் எல்லாம் என்னால் வர முடியாது இங்கே நல்ல பழம் காய்கறி கிடைக்கிறது நான் வரவில்லை" என்றது,  ஒரு வழியாக ராஜனும் சந்துருவும் சமாதானப் படுத்த வருவதற்கு சம்மதம் சொன்னது, முகில்..நான்கு மாடுகளும் நன்றாக சாப்பிட்டு வந்து கொண்டு இருந்தது, கோபி யோசித்து கொண்டே வந்தது "நாம் மட்டும் போய் தனியா சாப்பிட்டு வந்து இருக்காலம்" முகில் உடனே சொன்னது "நீ என்ன யோசிக்கிறாய் எனக்கு புரிகிறது...தனியா வந்து இருந்தா அடிமாடா போய் இருப்பே..ஒழுங்கா வா போகலாம்" என்றது ...

அவ்வழியே சென்று கொண்டு இருக்கும் போது தான் மணி ஒன்று கிடைத்தது..அதை சந்துரு எடுத்து பார்த்து கொண்டு இருந்தது..அப்போது எழுந்த மணியின் ஓசை கேட்டு பறவைகள் பறந்தன, மான்கள் துள்ளி குதித்து ஓடியது, நரிகள் பயந்து நின்று கொண்டு இருந்தது...இதை பார்த்த கோபி முகில் ஓடி வந்து பார்த்தது, முகில் ராஜனை கூப்பிட்டு இங்கே வந்து பார் என்ன இது என்றது, ராஜனுக்கு தான் அனைத்து தெரியுமே ...உடனே அதை பற்றி விளக்கியது..உடனே சந்துருவுக்கு ஒரு யோசனை தோன்றியது, அதை ராஜனிடம் சொன்னது" இந்த மணியின் ஓசை கேட்டு அனைத்து விலங்குகளும் பயப்படுகிறது" "இதை நீ கழுத்தில் அணிந்து கொண்டால் இந்த காட்டுக்கே நீ தான் ராஜா"..!!! ராஜனுக்கு அதில் விருப்பமேயில்லை ..

சந்துரு சொன்னது கோபியிடம். நீயும் சொல் அப்போது தான் ராஜன் ஏற்றுக் கொள்ளும், கோபி, முகிலன் சந்துரு ,என மூவரும் சொல்வதால் ராஜன் ஏற்றுகொண்டது ,அந்த மணியை சந்துரு கட்டி விட்டது.


அந்த மணி கட்டிய பிறகு ராஜனுக்கு தனி மரியாதை. அதை பார்த்த முகிலனுக்கு கொஞ்சம் ஆசை வர ஆரம்பித்தது, நாம் சென்றால் நமக்கு யாரும் மரியாதை தருவதில்லை ஆனால் இந்த ராஜனுக்கு மட்டும் இப்படி மரியாதையா? என்றது, கோபியிடம் சென்று "இந்த ராஜனிடமிருந்து இந்த மணியை பறிக்க வேண்டும். அந்த மணியை நான் அணிந்திருந்தால் இந்த காட்டையே மாற்றி காண்பித்து இருப்பேன்" கோபி உடனே "காட்டில் என்னடா மாற்றம் செய்ய போறே"? ராஜன் உன்னை என்ன செய்தான்...??"அந்த மணி வந்தது முதல் நீ சரியில்லை" என்றது கோபி, அந்த மணியை எப்படியாவது பறிக்க வேண்டும் என திட்டம் தீட்டியது...அப்போது பேசிக்கொண்டு இருந்த போது சந்துருவும், ராஜனும் வந்து கொண்டுயிருப்பதை பார்த்து பேச்சை நிறுத்தியது முகிலன் ...

இரவு முழுவதும் உறங்காமல் முகிலன் ஏதேதோ திட்டம் திட்டி கொண்டு இருந்தது. ராஜனிடம் சில நரிகள் சதித்திட்டம் தீட்டி கொண்டு இருப்பதாக சொன்னால் போதும் வந்துவிடும்..அதை எங்காவது பள்ளத்தில் தள்ளி விட்டு விடலாம் என்று முடிவு செய்தது. மறுநாள் காலை விடிந்தவுடன் முகிலன் ராஜனிடம் நரி கதையை சொல்லி கொண்டுயிருந்தது, "வா ராஜன் நாம் போய் அந்த நரிகளை என்னவென்று கேட்டு வருவோம்" என்றது, அப்போது சந்துருவுக்கு சந்தேகம் வர..ஏன் ராஜனை மட்டும் தனியாக அழைத்து செல்கிறாய்..?? நானும் வருகிறேன் என்றது சந்துரு. 

நீ வேண்டாம் நாங்கள் போகும் இடம் பிரச்சனையானது ஏதாவது ஆபத்து என்றால் நாம் எல்லாம் ஒன்றாக மாட்டி கொள்வோம் நீ இங்கேயே இரு நாங்கள் சென்று வருகிறோம் என சொல்லி ராஜனை அழைத்து சென்றது முகிலன்.


மிக தொலை தூரத்துக்கு அழைத்து சென்றது...இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று ராஜன் கேட்டது? .."இதோ வந்து விட்டது இந்த மலையை தாண்டினால்...வந்துவிடும்" என்றது மலையை தாண்டி கொண்டுயிருக்கும் பொழுது பின்னால் இருந்து ராஜனை தள்ளி விட்டது முகிலன். இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ராஜனை தள்ளி விட்டு கழுத்தில் இருந்த மணியை பறித்தது...!!!

முகிலன் மட்டும் தனியே வருவதை பார்த்து சந்துரு ஓடி சென்று ராஜன் எங்க...? என்றது .."ராஜன் பக்கத்து காட்டிற்கு சென்றுள்ளது அது வர ஐந்து நாட்கள் ஆகும்" என்றது. "ஓஓ  அப்டியா நான் அந்த பக்கத்து காட்டிற்கு சென்று பார்த்து விட்டு வருகிறேன்" என்றது முகிலன்,  தடுத்து "ராஜன் உன்னை வரவேண்டாம் என்று சொன்னார் இங்கே இருந்து பாத்துக்க சொன்னார்" என்று முகிலன் சொன்னது. சரி என சந்துரு அமைதி காத்தது.

கோபி வரும் பொழுது மணியை எடுத்து வந்து ராஜன் மணி போல் அங்கு ஒன்று கிடைத்தது..."நீ தான் ராஜன் மணிக்கு ஆசை பட்டாயே  இப்பொழுது இதை நீ வைத்து கொள்" என்றது கோபி, "என்ன ராஜன் மணிக்கு ஆசை பட்டாயா"..?? எங்கே அந்த மணியை காட்டு என்று சந்துரு ...இது ராஜனின் மணி ...!!

"முகிலா ஒழுங்கா உண்மையை சொல்" ராஜன் எங்கே..?? கோபியும் ராஜன் எங்க என்றது..??  முகிலனின் கோவத்தில் அனைத்து உண்மையும் வெளியில் வந்தது...இங்கே இருக்கும் அனைவரும் ராஜனுக்கு தான் மரியாதை தருகிறார்கள்..என்னை நீங்கள் கூட மதிப்பதில்லை எல்லாவற்றிக்கும் அந்த மணி தான் காரணம்...அந்த மணி இருந்தால் நீங்க எல்லாம் எனக்கும் மரியாதை தருவீர்கள் அல்லவா அதனால் தான் அப்படி செய்தேன். "அதற்காக ஒரு நண்பனையா இப்படி செய்வாய்" "அப்போது ராஜனை என்ன தான் செய்தாய்"?? ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டுவிட்டேன் என்றது.... !!!

மரியாதைக்காக நண்பனையே இழக்கும் அளவுக்கு துணிந்தவன் நாளை நீ என்ன வேண்டும் என்றாலும் செய்வாய்...உங்கள் நடப்பே எனக்கு தேவையில்லை..!!! என சந்துரு கூறியது...நான் தனியாக போகிறேன்... கோபி நீ என்னுடன் வருகிறாயா...?? என்றது சந்துரு, கோபி தயக்கத்தோடு நின்று கொண்டு இருந்துதது... சிறிது நேரத்திற்கு பிறகு சந்துரு தனியே சென்றது...ஊர் ஓரத்தில் உள்ள காட்டில் சிறிது நாட்கள் இருந்தது..

அதை பார்த்த மாரிமுத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார் பின்பு சந்துரு காமட்சியாக பெயர் மாறியது ...ஒரு மணியால் தன் நட்பு வட்டம் பிரிந்ததை எண்ணி தினமும் வேதனை பட்டு கொண்டு இருந்தது சந்துரு. ....

மதியவேளையில் உணவு அருந்தி கொண்டு இருந்த சந்துரு தனக்கு நன்கு தெரிந்த மாட்டின் குரலை கேட்டு திரும்பி பார்த்தது..... 
     

Monday, April 18 23 comments

கே. ஆர். பி. செந்திலின் பணம் விமர்சனம்...புத்தகங்கள் பல வந்தாலும் அவைகளை நாம் வாங்கி படித்து கொண்டு தான் இருக்கிறோம்...ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவத்தை நமக்கு அளிக்கிறது...அதே போல் தான் இந்த பணம் புத்தகமும். ஏன் இதற்கு பணம் என்று தலைப்பு வைத்தார், வேறு ஏதாவது தலைப்பு வைத்திருக்க கூடாதா என நான் யோசித்து பார்த்தேன்...பணத்திற்காக தானே வெளிநாட்டிற்கு செல்கிறோம்...பணம் என்பதை விட சரியான தலைப்பு வேறில்லை என உணர்ந்தேன்.

நாம் பல புத்தகங்களை படித்திருப்போம் ஆனால் வெளிநாடு பற்றிய புத்தகங்களை அதிகம் படித்திருக்க மாட்டோம்..வெளிநாட்டிற்கு சென்ற அனுபவங்களை பற்றிய புத்தகங்கள் அதிகம்இதுவரை வந்ததில்லை...கே.ஆர்.பி செந்திலின் 18 வருட வெளிநாட்டு வாழ்க்கையின் அனுபவத்தை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்... வெளிநாட்டில் பல போராட்டங்கள் பல வேதனைகள் தான் கிடைத்திருக்கிறது. ஒரு சில வெற்றிகள் மட்டுமே...அவை எங்கோ ஒரு ஓரத்தில். இந்த புத்தகத்தில் வருபவை பல தன் நண்பர்களுக்கு உண்மையாக நடந்தவை...என்கிறார்...எனவே இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட சம்பவங்களில் வரும் நான் நானல்ல என்கிறார்.


நம் இளைஞர்களின் கனவு வெளிநாடு செல்வது தான், எப்படியாவது வெளிநாட்டிற்கு சென்றுவிட்டால் பணம் சாம்பாதித்து விடலாம்,  என நினைத்து கொண்டு இருக்கிறோம் வெளிநாட்டிற்கு சென்றால் தான் தெரியும், இந்த வேலைக்கு நமது நாட்டிலே இருந்து இருக்கலாம் என நினைப்போம். 

இந்த புத்தகத்தில் அதிகம் சிங்கபூர் பற்றி தான் இருக்கிறது ஒரு காலத்தில் தென் மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர் சிங்கப்பூர் சென்றார்கள், அப்படி சென்றவர்களில் சிலர் முறையான ஆவணங்கள் இல்லாமல் சென்று பல துன்பங்களை அடைந்து இருக்கிறார்கள், அல்லது இங்கே பல ஏஜென்ட்களால் ஏமாற்றுப் பட்டு உள்ளார்கள், ஆண்கள் என்றால் அடிமையாக வைத்து கொள்வது பெண்கள் என்றால் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது போன்ற செயலே அங்கு அதிகம்...எந்த முறையிலாவது பணம் சம்பாதிக்க வேண்டும் சட்டவிரோதமாக குடியேற வேண்டும் பிரம்படி தண்டனை, சிறை அனுபவம் என்று பல சித்திரவதைகள். வெளிநாட்டிற்கு சென்றால் இவ்வளவு துன்பங்கள்..கிடைக்குமா என எதிர்பார்த்திருக்க மாட்டோம் அவ்வளவு துன்பங்கள் வரலாம்.

வெளிநாட்டிற்கு செல்ல மூன்று நான்கு லட்சம் செலவு செய்து போகிறோம், அந்த பணத்தை வைத்து இங்கே ஒரு தொழில் தொடங்கலாம் அல்லவா..?? வெளிநாட்டிற்கு செல்கிறோம் என்றால் உடனே வட்டிக்கு பணம் கிடைக்கிறதாம்...நீங்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் சுற்றுலா சென்று விட்டு உடனே திரும்பி வந்து விடுங்கள்...அது சிறந்தது...அங்கு சென்று அந்நாட்டு சட்ட திட்டங்கள் நமக்கு ஒன்றுமே தெரியாது...சிறையில் இருந்தாலும் நம் சொந்தங்களை கூட பார்க்க முடியாது. வெளிநாட்டில் துன்பம் மட்டுமே இல்லை பலர் அங்கே தொழில் தொடங்கி இப்பொழுது நல்ல நிலைமையில் தான் இருக்கிறார்கள். ஆனால் அவை சிலருக்கு மட்டுமே நடந்துள்ளது.

ஒருவர் வெளிநாட்டிற்கு   செல்லும் பொழுது விமானத்தில் இந்த புத்தத்தை படித்துக் கொண்டு சென்றால், அவர் அடுத்த விமானத்திலே தன் ஊருக்கு கிளம்பி விடுவார், அப்படியொரு அனுபவத்தை இந்த புத்தகம் தந்துவிடும்..

பணம் சரியான தலைப்பு...மிக்க நேர்த்தியான அட்டைப்படம்..ஒவ்வொரு அத்தியாத்தில் வரும் பழமொழிகள் நன்று...சிங்கபூர் மலேசியா.மொரிசியஸ் என பல நாடுகளுக்கு நேரில் சென்று வந்தது போல் ஒரு உணர்வு..இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன்..வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் நிச்சயம் ஒரு வித பயம் வரும்.     

இந்த புத்தகத்தை நான் படித்து முடித்தவுடன் பக்கத்து வீட்டில் ஒருவரை படிக்கக் சொன்னேன் அவர் படித்து முடித்து விட்டு சொன்னார் ...வெளிநாடு என்றால் இவ்வளவு நடக்குமா..?? வெளிநாட்டிற்கு போக வேண்டும் என இருப்பவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு பாடம். என்றார்..சிங்கப்பூர்க்கு சென்று வந்தது போல இருக்கிறது என்றார்.


பணம் புத்தகம் பல பிரதிகள் வெளியிட்டு சாதனைபடைக்க கே.ஆர்.பி. செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்..இது...!!!     

   இந்நூலை வாங்க : இங்கே  
     
        விலை : ரூ.90

Tuesday, April 12 31 comments

உனக்காக நான்...!!

நீ நினைக்கும் படியெல்லாம் 
மாற்றி கொண்டு 
உன்னை மட்டுமே நிஜமாக நினைத்து 
வந்தேன்....!!! 

உறவுகள் மறந்து உன்னை மட்டுமே 
உண்மையாய் நினைத்து...
உன் உள்ளங்கை பிடித்து வந்தேன்..!!

பார்க்கும் பார்வையெல்லாம் 
உன் உருவமாகவும்..!

கேட்கும் ஒலியெல்லாம் 
உன் குரலாகவும்..!!

உன்னை துணையாய் மட்டுமின்றி 
நேசத்தையும் முத்திரையிட்டு 
வந்த எனக்கு...

நீ கொடுத்த பரிசோ 
கவலை என்பதின் அர்த்தமும்..
கண்ணீரின் அர்த்தமும்..


சோகத்தில் உன் தோள் சாயும் போதெல்லாம் 
என்னை சோதித்து பார்க்கின்றாய்..? 

உன்னை உயிராக நினைத்த 
என் உயிரையும் எடுக்க 
முயற்சிக்கிறாய்...!!!  


Monday, April 4 29 comments

குள்ள நரி கூட்டம்..தெளிந்த நீரோடை
குள்ள நரி கூட்டம் நேற்று தான் இந்த படத்தை பார்த்தேன்...இவ்வளவு சர்வசாதரணமாக ஒரு நல்ல படத்தை எடுக்க முடியுமா..? என மனதிற்கு தோன்றியது... நல்ல கருத்தோடு கூடிய நகைச்சுவை படம். 

ராணுவ கிராமம்...அங்கு ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று  ஒரு போலீஸ் ஆஃபீசராக இருக்கிறார்...அவரின் மகளை (ஹீரோயின் ரம்யா நம்பீசன்)  போலீஸ்அல்லது ஒரு ராணுவ வீரருக்கோ திருமணம் செய்து தருவேன் என்று    குறிக்கோளோடு இருக்கிறார்...தன் மகள் காதலிக்கும் விஷயம் தெரியவர. விஷ்ணுவை நீங்கள் போலீஸ் ஆகுங்கள் நான் என் மகளை திருமணம் செய்து தருகிறேன் என்பார்...விஷ்ணு போலீஸ் ஆனாரா இல்லையா என்பதே மீதி கதை 


ஹீரோ வெண்ணிலா கபடிக்குழு நாயகன் விஷ்ணு... முதல் காட்சி அப்பா வேலைக்கு போகும் அவசரத்தில் சாப்பாடு (டிபன் பாக்ஸ்) எடுத்து கொண்டு ஓடுகிறார்...விஷ்ணு..அப்பா மேலே அவ்வளவு பாசமா..பார்த்தா...அவர் தினம் பத்து ரூபாய் கோட்டா வாங்க தான் அவ்வளவு அவசரமா ஓடி வந்து இருக்கார். அப்போது 1,500 ரூபாய் அவங்க அப்பா தருகிறார்...அங்கே தான் கதை ஆரம்பிக்கிறது...1,500 ரூபாய்க்கு ரீ சார்ஜ்...செய்ய சொல்கிறார்..விஷ்ணு நம்பர் மாற்றி ரீ சார்ஜ் செய்தது விடுகிறார்....(அந்த இடத்தில் அம்பா சமுத்திரம் அம்பானி படம் நினைவு வருகிறது)

மாற்றி ரீ சார்ஜ். செய்த நம்பருக்கு போன் செய்கிறார்..அந்த பக்கம் ஹீரோயின் போன் எடுக்குறாங்க...போன் பேசுறாங்க நேரில் சந்திக்க்குறாங்க அப்படியே காதல் வளர்கிறது..படத்தில் நிறைய காட்சிகள் புதியதாக இருக்கிறது வசனங்களும் புதியதாக இருக்கிறது..  சாதாரணமாகவே தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷ்ணு..தமிழ் சினிமாவில் நிச்சயம் இவருக்கென்று தனி இடம் கிடைக்கும்.

ஹீரோயின் ரம்யா நம்பீசன்..எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அறிமுகம் ஆகிறார்..கதைக்கு என்ன தேவையோ அதை நிறைவாக நடித்துள்ளார்...!! விஷ்ணுவை பார்த்ததும் காதலில் விழுகிறார்...ரீ சார்ஜ்.. செய்த பணத்தை முழுவதும் திருப்பி தர மணம்யில்லாமல் சிறுக சிறுக தருகிறார். ஹீரோவை அடிக்கடி பார்க்க வேண்டுமாம்..!!! பாடலில் கூட கவர்ச்சிஇல்லாமல் வருவது பாராட்டுக்குரியது....இயக்குனர் ஹீரோயினை கையாண்டவிதம் அருமை இயக்குநர் ஸ்ரீ பாலாஜிக்கு இது முதல் படம் முதல் படத்திலே அருமையான திரைக்கதையை கொடுத்திருக்கிறார்...கதையோடு நகைச்சுவை கொண்டு வந்திருக்கிறார்...சின்ன சின்ன விஷயங்களை அருமையாக சொல்லி இருக்கிறார். அழகான ஒரு திரைகதை மதுரை மையமாக வைத்து வந்த திரைப்படங்களிலே...இவை தனிமையானது...மதுரை என்றாலே ரத்த காட்சிகள் இருக்கும் இதில் ஒரு துளி ரத்தம் கூட காண்பிக்க வில்லை...இதற்கே ஒரு சபாஸ் சொல்லாம். முதல் பாதி காதல் இரண்டாம் பாதி காவல் துறை தேர்வு..காட்சிகள்...காவல் துறை தேர்வில் என்னவெல்லாம் மோசடி செய்கிறார்கள் என்பதை தெளிவாக கூறியிருக்கிறார் இயக்குனர்....முதல் பாதியைவிட இரண்டாம் பாதி வேகம்.


இசை செல்வகணேஷ் பாடல்கள் சுமார் ரகம் தான் இரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் நிற்கிறது விழிகளிலே..விழிகளிலே..பாடல் அழகு...ஆடுகிற மாட்டை ஆடி கற டா ஆட்டம் போட வைக்கிறது பின்னி இசை கதைக்கு தேவையான அளவு கொடுத்திருக்கிறார்..

ஒப்பனிங் பாடல் இல்லை சண்டை காட்சிகள் இல்லை...காவல்துறை தேர்வை நேரடியாக நடத்த வேண்டும் என நல்ல கருத்தோடு முடித்திருக்கிறார். முதல் படத்திலே தன் திறமையை நிருபித்து இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ பாலாஜி..விஷ்ணு நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்...தெளிந்த நீரோடை போல ஒரு படம்....அழகாக அமைதியாக...  
;