Monday, April 4

குள்ள நரி கூட்டம்..தெளிந்த நீரோடை
குள்ள நரி கூட்டம் நேற்று தான் இந்த படத்தை பார்த்தேன்...இவ்வளவு சர்வசாதரணமாக ஒரு நல்ல படத்தை எடுக்க முடியுமா..? என மனதிற்கு தோன்றியது... நல்ல கருத்தோடு கூடிய நகைச்சுவை படம். 

ராணுவ கிராமம்...அங்கு ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று  ஒரு போலீஸ் ஆஃபீசராக இருக்கிறார்...அவரின் மகளை (ஹீரோயின் ரம்யா நம்பீசன்)  போலீஸ்அல்லது ஒரு ராணுவ வீரருக்கோ திருமணம் செய்து தருவேன் என்று    குறிக்கோளோடு இருக்கிறார்...தன் மகள் காதலிக்கும் விஷயம் தெரியவர. விஷ்ணுவை நீங்கள் போலீஸ் ஆகுங்கள் நான் என் மகளை திருமணம் செய்து தருகிறேன் என்பார்...விஷ்ணு போலீஸ் ஆனாரா இல்லையா என்பதே மீதி கதை 


ஹீரோ வெண்ணிலா கபடிக்குழு நாயகன் விஷ்ணு... முதல் காட்சி அப்பா வேலைக்கு போகும் அவசரத்தில் சாப்பாடு (டிபன் பாக்ஸ்) எடுத்து கொண்டு ஓடுகிறார்...விஷ்ணு..அப்பா மேலே அவ்வளவு பாசமா..பார்த்தா...அவர் தினம் பத்து ரூபாய் கோட்டா வாங்க தான் அவ்வளவு அவசரமா ஓடி வந்து இருக்கார். அப்போது 1,500 ரூபாய் அவங்க அப்பா தருகிறார்...அங்கே தான் கதை ஆரம்பிக்கிறது...1,500 ரூபாய்க்கு ரீ சார்ஜ்...செய்ய சொல்கிறார்..விஷ்ணு நம்பர் மாற்றி ரீ சார்ஜ் செய்தது விடுகிறார்....(அந்த இடத்தில் அம்பா சமுத்திரம் அம்பானி படம் நினைவு வருகிறது)

மாற்றி ரீ சார்ஜ். செய்த நம்பருக்கு போன் செய்கிறார்..அந்த பக்கம் ஹீரோயின் போன் எடுக்குறாங்க...போன் பேசுறாங்க நேரில் சந்திக்க்குறாங்க அப்படியே காதல் வளர்கிறது..படத்தில் நிறைய காட்சிகள் புதியதாக இருக்கிறது வசனங்களும் புதியதாக இருக்கிறது..  சாதாரணமாகவே தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷ்ணு..தமிழ் சினிமாவில் நிச்சயம் இவருக்கென்று தனி இடம் கிடைக்கும்.

ஹீரோயின் ரம்யா நம்பீசன்..எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அறிமுகம் ஆகிறார்..கதைக்கு என்ன தேவையோ அதை நிறைவாக நடித்துள்ளார்...!! விஷ்ணுவை பார்த்ததும் காதலில் விழுகிறார்...ரீ சார்ஜ்.. செய்த பணத்தை முழுவதும் திருப்பி தர மணம்யில்லாமல் சிறுக சிறுக தருகிறார். ஹீரோவை அடிக்கடி பார்க்க வேண்டுமாம்..!!! பாடலில் கூட கவர்ச்சிஇல்லாமல் வருவது பாராட்டுக்குரியது....இயக்குனர் ஹீரோயினை கையாண்டவிதம் அருமை இயக்குநர் ஸ்ரீ பாலாஜிக்கு இது முதல் படம் முதல் படத்திலே அருமையான திரைக்கதையை கொடுத்திருக்கிறார்...கதையோடு நகைச்சுவை கொண்டு வந்திருக்கிறார்...சின்ன சின்ன விஷயங்களை அருமையாக சொல்லி இருக்கிறார். அழகான ஒரு திரைகதை மதுரை மையமாக வைத்து வந்த திரைப்படங்களிலே...இவை தனிமையானது...மதுரை என்றாலே ரத்த காட்சிகள் இருக்கும் இதில் ஒரு துளி ரத்தம் கூட காண்பிக்க வில்லை...இதற்கே ஒரு சபாஸ் சொல்லாம். முதல் பாதி காதல் இரண்டாம் பாதி காவல் துறை தேர்வு..காட்சிகள்...காவல் துறை தேர்வில் என்னவெல்லாம் மோசடி செய்கிறார்கள் என்பதை தெளிவாக கூறியிருக்கிறார் இயக்குனர்....முதல் பாதியைவிட இரண்டாம் பாதி வேகம்.


இசை செல்வகணேஷ் பாடல்கள் சுமார் ரகம் தான் இரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் நிற்கிறது விழிகளிலே..விழிகளிலே..பாடல் அழகு...ஆடுகிற மாட்டை ஆடி கற டா ஆட்டம் போட வைக்கிறது பின்னி இசை கதைக்கு தேவையான அளவு கொடுத்திருக்கிறார்..

ஒப்பனிங் பாடல் இல்லை சண்டை காட்சிகள் இல்லை...காவல்துறை தேர்வை நேரடியாக நடத்த வேண்டும் என நல்ல கருத்தோடு முடித்திருக்கிறார். முதல் படத்திலே தன் திறமையை நிருபித்து இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ பாலாஜி..விஷ்ணு நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்...தெளிந்த நீரோடை போல ஒரு படம்....அழகாக அமைதியாக... 29 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹீரோயின் ரம்யா நம்பீசன்..எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அறிமுகம் ஆகிறார்..கதைக்கு என்ன தேவையோ அதை நிறைவாக நடித்துள்ளார்...!!///

ஆமா கதைக்கு என்ன தேவை?

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல விமர்சனம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இயக்குனர் ஹீரோயினை கையாண்டவிதம் அருமை //

ம் விளங்கிடுச்சு !!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முதல் பாதியைவிட இரண்டாம் பாதி வேகம்.//

எவ்ளோ வேகம்?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சி.பி.செந்தில்குமார் கூறியது...

நல்ல விமர்சனம் --அதை யாரு சொல்ராங்க பாருன்னா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தமிழ் சினிமாவில் நிச்சயம் இவருக்கென்று தனி இடம் கிடைக்கும்.//

எத்தன கிரவுண்டு கிடைக்கும்?

தம்பி கூர்மதியன் said...

நல்லா செஞ்சிருக்கீங்க விமர்சனம்..

ஹி ஹி..

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல விமர்சனம் ..காபி செய்யலப்பா நானே டைப் செய்து போடுகிறேன்

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Well written!

MANO நாஞ்சில் மனோ said...

படம் பார்க்க கிளம்பு மக்கா...

கோமாளி செல்வா said...

ஐ ,, சண்டை ரத்தம் இல்லாத படமா ? அதுவும் நகைச்சுவைப் படம்னு வேற சொல்லிட்ட .. கண்டிப்பா பாக்கணும் .. ஏன்ன எனக்கு காமெடி படம்தான் பிடிக்கும்ம் .. ஹி ஹி

Anonymous said...

வெகு நாட்களுக்கு பிறகு பார்த்த நல்ல படம்

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
இயக்குனர் ஹீரோயினை கையாண்டவிதம் அருமை //

ம் விளங்கிடுச்சு !!////

உங்களுக்கு விளங்காம வேற யாருக்கு விளங்கும் ..ஹி ஹி ..:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இயக்குனர் ஹீரோயினை கையாண்டவிதம் அருமை //////

படத்துலேயா இல்ல அதுக்கப்புறமான்னு தெளிவா சொல்லி இருக்கலாம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ஹீரோயின் ரம்யா நம்பீசன்..எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அறிமுகம் ஆகிறார்..கதைக்கு என்ன தேவையோ அதை நிறைவாக நடித்துள்ளார்...!!///

ஆமா கதைக்கு என்ன தேவை?
///////

கேட்டுட்டாருய்யா பெரிய கெவர்னரு... படுவா கதைக்கு கதைதான் தேவை..வேறென்ன எதிர்பாக்குறே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஒப்பனிங் பாடல் இல்லை சண்டை காட்சிகள் இல்லை...காவல்துறை தேர்வை நேரடியாக நடத்த வேண்டும் என நல்ல கருத்தோடு முடித்திருக்கிறார். முதல் படத்திலே தன் திறமையை நிருபித்து இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ பாலாஜி../////

முதல் படமா.... அப்போ பாராட்ட வேண்டியதுதான்......!

Anonymous said...

இயக்கம் சபாபதி என்று படித்த ஞாபகம்.

சௌந்தர் said...

பெயரில்லா சொன்னது…
இயக்கம் சபாபதி என்று படித்த ஞாபகம்.///

ஓஹ அப்படியா எனக்கு தெரியவில்லை படத்தில் ஸ்ரீ பாலாஜி என்று தான் இருந்தது..!!! நன்றி உங்கள் வருகைக்கு

ஆனந்தி.. said...

எங்க ஊர் ல தான் படத்தின் கதை களம் போலே..அப்போ சூப்பர் தான்...:))

sakthi said...

அப்போ பார்க்கலாம்ங்கறீங்க ரைட்::))

வைகை said...

இந்த வாரம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தேன்... ஆனால் படம் செம!

Jey said...

விமர்சனம் நல்ல(கையாண்டிருக்க) இருக்குப்பா.

தியேட்டர்ல படம் பார்த்து அஞ்சாறு வருச மாச்சி...எங்காவது திருட்டு டிவிடி கிடைக்குதா?, ஏன்னா நீ படம் நல்லாருக்குனு சொல்லிருக்கே அதான் பாக்கலாம்னு...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

விமர்சனம் படிச்சா..படம் பார்க்கலாம்னு தோணுது.. பாக்குறேன்.. :)

தேங்க்ஸ்

Chitra said...

good review..... :-)

தோழி பிரஷா said...

நல்ல விமர்சனம்

படம் பார்க்கனும்

Jaleela Kamal said...

நல்ல விமர்சனம்

அருண் பிரசாத் said...

//குள்ள நரி கூட்டம்..தெளிந்த நீரோடை//

இந்த தலைப்ப பார்த்துட்டு நீ ஏதோ இலக்கியமோ அரசியலோ பேசப்போறீயோனு பார்த்தேன்.... சினிமா விமர்சன்மா?

நல்லா இருக்கும் போல... பார்கிறேன் தம்பி

சாமக்கோடங்கி said...

அமைதியான அழகான விமர்சனம்.. கட்டாயம் பார்க்கத் தூண்டும் வரிகள்.. நன்றிகள் பல...

பிரவின்குமார் said...

நண்பா நீ விமர்சனம் எழுதிய மறுநாளே நானும் இத்திரைப்படத்தை பார்த்தேன். நான் திரைவிமர்சனம் எழுதலாம் என எண்ணியிருந்தேன். நான் சொல்ல கருத்து முழுவதையுமே.. உன் விமர்சனம் தெளிவாக விளக்கிவிட்டது. உன்னுடைய விமர்சனம் சுவாரஸ்யமாக இருக்கு நண்பா..!! சூப்பர்.

 
;