Tuesday, April 26

"கோ GO படத்திற்கு GO"கனாக் கண்டேன், (கந்து வட்டி), அயன் (கள்ளக்கடத்தல்), என கதைகளத்தை அமைத்தவர் "கோ" படத்தில் பத்திரிக்கையை, அரசியலை கொண்டுவந்திருக்கிறார். ஆனந்த்-சுபா இவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் இதில் கூறப்பட்டு உள்ளது. இவர்கள் இணைந்தே திரைக்கதையும் எழுதியுள்ளார்கள். வசனம் சுபா எழுதிவுள்ளார் அயன் படம் பார்த்தவர்கள் நிச்சயம் இந்த படம் பார்க்க வேண்டும் என நினைத்து இருப்பீர்கள், அதில் நானும் ஒருவன். 
ஒரு தினசரி பத்திரிக்கையின் போட்டோகிராபர் ஜீவா, ஆளுங்க கட்சி (பிரகாஷ்ராஜ்), எதிர்க்கட்சி (கோட்டா சீனிவாச ராவ்), தேர்தல் வருகிறது. அரசியல்வாதிகளின் தில்லு முள்ளுகளை ஜீவா தோலுரித்து காட்டுகிறார், அந்த நேரத்தில் இளைஞர்களின் சிறகுகள் அமைப்பு தேர்தலில் போட்டியிடுகிறார்கள், அவர்களுக்கு ஜீவா உதவி செய்கிறார்..இளைஞர் அமைப்பு ஆட்சி அமைத்ததா.. இல்லையா..?? அரசியல் வாதிகளை எதிர்க்கும் ஜீவாவுக்கு என்ன நடந்தது என்பது மீதி கதை.முதல் காட்சியில் வங்கியில் கொள்ளை நடக்கிறது..அந்தக்காட்சி முதல் விறுவிறுப்பு தொடங்கி விடுகிறது, கொள்ளையடிக்கும் இடத்திற்கு ஜீவா வருகிறார், காப்பாற்ற போகிறார் என்று பார்த்தால், புகைப்படம் எடுக்கிறார், பைக் "வீலிங்" எல்லாம் செய்தது புகைப்படம் எடுக்கிறார் கொள்ளையர்களை பிடிக்க உதவியாக அவர் எடுக்கும் புகைப்படம் உதவுகிறது.ஜீவாவிற்கு இந்த கேரக்டர் சரியாக பொருந்துகிறது. இவர் கேமரா பிடிப்பதை பார்த்தால் படம் பிடிப்பதில் வல்லவர் போல் தெரிகிறது. பியாவிடம் சுட்டி தனமாகவும், கார்த்திகாவிடம் காதலோடு சுற்றி வருகிறார். இவரின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது. எப்படி ஒரு எழுத்தாளர் எப்போதும் பேனாவை பாக்கெட்டில் வைத்து கொண்டு இருப்பாரோ, அதே போல் ஜீவா எப்போதும் கேமராவை வைத்து கொண்டு சுற்றுகிறார். முதல் பாதியில் இவர் செய்யும் சுட்டித்தனம் ரசிக்க வைக்கிறது.கதாநாயகிகள் பியா, கார்த்திகா, பியா பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் நன்றாக நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு, காதலோடு ஜீவாவை சுற்றி வருகிறார், இயல்பான ஒரு நட்பு ஜீவாவிற்கும் பியாவிற்கும்...தனக்காக கார்த்திகாவை காதல் தூது அனுப்புகிறார் அங்கே ஜீவா, நான் (கார்த்திகாவை உன்னைத்தான் காதலிக்குறேன் என்று சொல்வார், இதை பின்னால் இருந்து கேட்டு கொண்டுயிருப்பார் பியா..அந்த இடத்தில் அவர் நடிப்பு ரசிக்கும் படியாக இருந்தது. கலகலப்பாக இருந்து விட்டு பாதியில் சென்று அனுதாபத்தை அள்ளுகிறார். கார்த்திகா (ராதாவின் மகள்) நடிப்பு சுமார் ரகம் இது தானே முதல் படம் போக போக பார்ப்போம்.. அஜ்மல் சிறகுகள் இளைஞர் அமைப்பின் தலைவர், நடிப்பு நன்றாக இருக்கிறது, ஒரு தலைவருக்கு உரிய பாடி லேங்குவேஜ் இல்லை, இவரின் பேச்சு நன்றாக இருக்கிறது இவரை தலைவராக ஏற்று கொள்ள நமக்கு நேரம் பிடிக்கிறது. இடைவேளைக்கு பிறகு இவரின் நடிப்பு இன்னும் நன்றாக இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு இவரை பற்றி தெரியவரும் பொழுது,அதிர்ச்சி அனைவருக்கும் தான்.கதை திரைக்கதை கே.வி.ஆனந்த்,சுபா அயன் படம் அளவிற்கு திரைக்கதை இல்லையென்றாலும், நன்றாகவே இருக்கிறது, ஒரு பத்திரிக்கையாளனின் வேலையை நுட்பமாக காண்பித்திருக்கிறார்கள்.  திடிர் என திரைக்கதையில் தொய்வு வருகிறது, அதை தவிர்த்து இருக்கலாம். மூன்றுபக்கம் திரைக்கதை ஓடு கிறது..நம் கண்களை கட்ட வைக்க பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாச ராவ், கதாபாத்திரத்தை பயன் படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது..

ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் வண்ணமயமாக இருக்கிறது இவரின் ஒளிப்பதிவு.  அமளி துமளி பாடலில் மலைகளை சுற்றும் கழுகு போல் இவரின் கேமரா சுற்றுகிறது. 

பாடல்கள் ஏற்கனவே ஹிட் அதை படமாக்கிய விதம் அழகு. முதல்பாதி கலகலப்பாக செல்கிறது இரண்டாம் பாதி விறு விறுப்பாக செல்கிறது, சில குறைகள் இருக்க தான் செய்கிறது, அரசியலுக்கு நடிகைகள் வருகிறார்கள், சரி தான் ஆனால் இதில் ஏன் நமீதாவை கிண்டல் செய்திருக்கிறார்கள் தெரியவில்லை. சினிமா துறையில் இருந்து கொண்டே, இன்னொரு சினிமா கலைஞரை கிண்டல் செய்வதா..???  வெண்பனியே.. பாடல் வருவது அந்த நேரத்தில் தேவையில்லாதது...அயன் படத்திலும் இப்படி தான் ஒருவர் இறந்தவுடன் ஒரு டுயட் பாடல் வரும். இந்த பாடல் வருவது படத்தின் தரத்தை கெடுக்கிறது.. அங்கொன்றும் இங்கொன்றும் உள்ள குறையை தவிர படம் நன்றாக இருக்கிறது எதிர்பாராத பல திருப்பங்கள் படத்தில் உள்ளன. படத்தின் முடிவு சரியானதே..எங்கே ஜீவா முதல்வராகிவிடுவாரோ என நினைத்தேன் நல்ல வேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை.. நல்ல பொழுது போக்கு திரைப்படம். "கோ GO படத்திற்கு GO"    

25 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அமளி துமளி பாடலில் மலைகளை சுற்றும் கழுகு போல் இவரின் கேமரா சுற்றுகிறது. //

கழுகு ப்ளாக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முதல்பாதி கலகப்பாக செல்கிறது//

என்ன கப்பு? வேர்ல்ட் கப்பு மாதிரி இது என்ன புதுசா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இருக்கிறது எதிர்பாராத பல திருப்பங்கள் படத்தில் உள்ளன//

அபாயகரமான வளைவா?

Anonymous said...

நைஸ் சௌந்தர் .............
நல்ல தெளிவான நீரோட்டம் போல படத்தின் விமர்சனம்,நல்ல கருத்துகள் புதைந்த படம் .. புதுவிதமான அணுகுமுறை ... தேர்தலுக்கு முன்னர் படம் வெளி வந்து இருந்தால் நிச்சயம் தமிழக தேர்தல் அதிக சூடு பிடித்து இருக்கும்
கதை கரு போலே கதாபத்திரங்களிலும் உயிரோட்டம் ..கார்த்திகாவின் முதல் படம் என்றாலும் தனக்கே உரித்தான பாவனைகளில் மனதை தொட்டாலும் "பியா " குறும்புதனத்தாலும் சிரிப்பாலும் மனதில் நிறைகிறார் ..
முதல் நாள் படம் திரையரங்கில் பார்த்த போது நான் மனதளவில் பாராட்டியது "" ரிச்சர்டு "" ன் கைவண்ணம் கண்டு ...'

மொத்தத்தில் சௌந்தர் உன் தலைப்பு போல கோ படத்தை நிச்சயம் இரு முறைக்கு மேல் பாக்கலாம் ......................

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
அமளி துமளி பாடலில் மலைகளை சுற்றும் கழுகு போல் இவரின் கேமரா சுற்றுகிறது. //

கழுகு ப்ளாக்கா?///

ஆமாங்க இல்லை ஆமா இல்லை

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
முதல்பாதி கலகப்பாக செல்கிறது//

என்ன கப்பு? வேர்ல்ட் கப்பு மாதிரி இது என்ன புதுசா?///

IPL கப் மாத்திட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்..... தமிழ் ஆசிரியர் ரமேஷ் வாழ்க...

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
இருக்கிறது எதிர்பாராத பல திருப்பங்கள் படத்தில் உள்ளன//

அபாயகரமான வளைவா?///

ஆமா ரொம்ப அபாயகரமான வளைவு

ரேவா said...

தெளிவான விமர்சனம் சகோ.

சௌந்தர் said...

கல்பனா சொன்னது…
நைஸ் சௌந்தர் .............
நல்ல தெளிவான நீரோட்டம் போல படத்தின் விமர்சனம்,நல்ல கருத்துகள் புதைந்த படம் .. புதுவிதமான அணுகுமுறை ... தேர்தலுக்கு முன்னர் படம் வெளி வந்து இருந்தால் நிச்சயம் தமிழக தேர்தல் அதிக சூடு பிடித்து இருக்கும்////

அதற்காக தானே அவர்கள் குடும்பம் இந்த படத்தை வாங்கி விட்டது

கதை கரு போலே கதாபத்திரங்களிலும் உயிரோட்டம் ..கார்த்திகாவின் முதல் படம் என்றாலும் தனக்கே உரித்தான பாவனைகளில் மனதை தொட்டாலும் "பியா " குறும்புதனத்தாலும் சிரிப்பாலும் மனதில் நிறைகிறார் ..////

உண்மைதான்
முதல் நாள் படம் திரையரங்கில் பார்த்த போது நான் மனதளவில் பாராட்டியது "" ரிச்சர்டு "" ன் கைவண்ணம் கண்டு ...'///

ஆமாம் அவரின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது..!!

மொத்தத்தில் சௌந்தர் உன் தலைப்பு போல கோ படத்தை நிச்சயம் இரு முறைக்கு மேல் பாக்கலாம் ......................////

பாருங்க பாருங்க...நல்லா பாருங்க

கோமாளி செல்வா said...

அயன் படம் எனக்குப் பிடிச்சிருந்தது .. இதையும் பார்க்கணும் .. உன்னோட விமர்சனமும் நல்லா இருக்கு :-))

ஷர்புதீன் said...

parthaachchu., parthaachchu
:)

MANO நாஞ்சில் மனோ said...

அடிபொளி விமர்சனம்....

Anonymous said...

சிறப்பான விமர்சனம்... அதற்குள் இணையத்தில் படம் வெளியிட்டுவிட்டார்களே

சி.பி.செந்தில்குமார் said...

>>எங்கே ஜீவா முதல்வராகிவிடுவாரோ என நினைத்தேன் நல்ல வேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை..

ha haa ஹா ஹா செம

விமர்சனம் நீட்

மாதேவி said...

நன்றி.

ரஹீம் கஸாலி said...

பார்த்திட்டா போச்சு

ராஜ நடராஜன் said...

//கார்த்திகா (ராதாவின் மகள்) //

பதிவுக்கு வந்ததற்கு இந்த தகவல் கிடைச்சது.

நேற்றுதான் திருட்டு வீடியோ கிடைச்சது.

நல்ல தருணத்தில் நல்ல கதை கிடைச்சும் தமிழ் பார்முலாவுல ஊத்திகிச்சு.

ஆனந்தி.. said...

விமர்சனம் சூப்பர்...எனக்கும் கார்த்திகாவை விட பியா ரொம்ப பிடிச்சது...ஏதோ சாங் தவிர வேற பாட்டு அவ்வளவு கேட்சியா இல்ல தானே சௌ...பட் சில காட்சிகள் பிளஸ் வசனங்கள் ரொம்ப cute ...பத்திரிகை ஆபிஸ் இல் சில..அப்புறம் அந்த சிறகுகள் பசங்க டீம் வசனங்கள்...பியா வின் வசனங்கள் எல்லாம் குட்டி குட்டி ஹைக்கூ...;)) சுபா ஸ்டைல் வசனங்கள் செம...:)) பிரகாஷ் ராஜ் கதாபாத்திர அமைப்பு செம ...:)))

ஆனந்தி.. said...

பட்...செகண்ட் ஹாப் இப்படி தான் இருக்கும்னு கொஞ்ச நேரத்திலேயே நான் கெஸ் பண்ணிட்டதாலே...;)) சுத்தமா உட்கார முடியல ..பட் திரைகதை நல்ல பாஸ்ட்..

பாலா said...

படம் பளிங்கு போல பளீர் என்று இருக்கிறது. நல்ல பொழுதுபோக்கு படம். ஆனால் கதை தெரிந்து விட்டால் சுவாரசியம் இருக்காது.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//"கோ GO படத்திற்கு GO" //

........சரிங்"GO" :-))


(விமர்சனம் நல்லா இருக்கு.. என்ன இருந்தாலும்... கார்த்திகா நடிப்பு சுமார்னு சொன்னத...நா வன்மையா கண்டிக்கிறேன்... )

அப்பாவி தங்கமணி said...

நல்ல விமர்சனம்... படம் நல்லா இருக்கும் போல இருக்கு... பாத்துட்டு சொல்றேன்...:)

தெய்வசுகந்தி said...

பாட்டு கேட்டதுலருந்தே பாக்கணும்னு நெனைச்ச படம். பாக்கலாம்னு சொல்லறீங்க!!

Jegan said...

இந்த படத்தில் அஜ்மலின் கேரக்டர் ஆந்திர முதல்வர் ராஜ சேகர ரெட்டியின் மகன் ஜெகன் ரெட்டியை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது கவனித்தீர்களா..
..அவரது முகம் மற்றும் உடைமைப்பு.

Jegan said...

இந்த படத்தில் அஜ்மலின் கேரக்டர் ஆந்திர முதல்வர் ராஜ சேகர ரெட்டியின் மகன் ஜெகன் ரெட்டியை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது கவனித்தீர்களா..
..அவரது முகம் மற்றும் உடைமைப்பு.

 
;